26-09-2025
ரபீஉல் ஆகிர் 3 بسم الله الرحمن الرحيم
குநூத்தே நாஜிலா
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
காஸா மக்கள் மீது கடந்த 22 மாதங்களாக இஸ்ரேல் நடத்தி வரும் ஈவு இரக்கமற்ற மனிதப் படுகொலைகள் உலகம் முழுவதும் உள்ள முஃமின்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அல்லாஹ் தஆலா வெகு விரைவில் இஸ்ரேலுக்கு பாடம் கற்பித்து காஸா மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இன்று முதல் ஒரு மாதம் வரை நாடு முழுவதும் அனைத்து மஸ்ஜித்களிலும் ஃபஜ்ரு தொழுகையில் குனூத் ஓதி துஆச் செய்ய வேண்டும் என மாநில ஜமாஅத்துல் உலமா சபை கேட்டுக் கொண்டுள்ளது.
சோதனைகளின் போது அல்லாஹ்விடம் முறையிடுவதும் அவனையே நம்புவதும் நபிமார்களின் குணம்
கடைசி நிமிடம் வரை பயப்படாமல் இறைவனின் உதவி எப்படியும் வரும் என்று நம்பிய இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்.
عَنْ ابْنِ عَبَّاسٍ {حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ} قَالَهَا إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلَام حِينَ أُلْقِيَ فِي النَّارِ وَقَالَهَا مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ قَالُوا {إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ} (بخاري) 4563
சோதனைகளின் போது துவண்டு விடாமல் அல்லாஹ்வின் மீதான ஈமான் இன்னும் அதிகரிக்க வேண்டும்.
இன்று பாலஸ்தீன முஸ்லிம்களின் ஈமானும் கிட்டத்தட்ட அவ்வாறு தான் உறுதியாக இருக்கிறது.
பல சோதனைகளை சந்தித்த போதும் மனம் தளராமல் போராடுகிறார்கள்
مُعَاوِيَةَ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَزَالُ مِنْ أُمَّتِي أُمَّةٌ قَائِمَةٌ بِأَمْرِ اللَّهِ مَا يَضُرُّهُمْ مَنْ كَذَّبَهُمْ وَلَا مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ وَهُمْ عَلَى ذَلِكَ فَقَالَ مَالِكُ بْنُ يُخَامِرَ سَمِعْتُ مُعَاذًا يَقُولُ وَهُمْ بِالشَّأْمِ فَقَالَ مُعَاوِيَةُ هَذَا مَالِكٌ يَزْعُمُ أَنَّهُ سَمِعَ مُعَاذًا يَقُولُ وَهُمْ بِالشَّأْمِ
சோதனைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் இறுதி வெற்றி அம்மக்களுக்கு நிச்சயம் உண்டு
அகழ்ப் போரில் மாதக்கணக்கில் சண்டை நடந்து இறுதியில் தான் வெற்றி கிட்டியது
الَّذِينَ قَالَ لَهُمُ النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ (173)ال عمران
أَيْ الَّذِينَ تَوَعَّدَهُمْ النَّاس بِالْجُمُوعِ وَخَوَّفُوهُمْ بِكَثْرَةِ الْأَعْدَاء فَمَا اِكْتَرَثُوا لِذَلِكَ بَلْ تَوَكَّلُوا عَلَى اللَّه وَاسْتَعَانُوا بِهِ "(تفسير ابن كثير
சுமார் பத்தாயிரம் எதிரிகள் திரண்டு வருகிறார்கள் அவர்களை அஞ்சிக் கொள்ளுங்கள் என முனாஃபிக்கீன்கள் பயத்தை ஏற்படுத்திய போது நபி ஸல் அவர்களும் முஃமின்களும் சற்றும் பயப்படாமல் ஹஸ்புனல்லாஹு வநிஃமல் வகீல் என்று கூறி அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்து மதீனாவைச் சுற்றி அகழ் தோண்ட ஆரம்பித்தார்கள். முனாஃபிக்கீன்கள் காட்டிய பயம் முஃமின்களின் உள்ளத்தில் ஈமானை அதிகமாக்கியது
விளக்கம்- ஒப்பந்தத்தை மீறியதால் நபி ஸல் அவர்கள் எந்த யூதர்களை நாடு கடத்தினார்களோ அப்படிப்பட்ட யூதர்களில் சிலர் மக்கா சென்று அங்குள்ள குறைஷிகளுடன் சேர்ந்து சுமார் பத்தாயிரம் நபர்கள் இணைந்து கொண்டனர். அவர்களை வழி நடத்தி வந்தவர் அபூ சுஃப்யான். இந்நிலையில் சுமார் பத்தாயிரம் நபர்கள் படை திரண்டு நம்மை எதிர்க்க வருகிறார்கள் என்ற தகவல் நபி ஸல் அவர்களுக்கு தாமதமாக கிடைத்த து. உடனே ஆலோசனை செய்தார்கள் சல்மான் ஃபார்ஸீ ரழி அவர்களின் ஆலோசனைப் படி மதீனாவைச் சுற்றி அகழ் தோண்டப்பட்டது. நபி ஸல் அவர்களும் நபித் தோழர்களும் பள்ளம் தோண்டுவதில் இரவு பகலாக ஈடு பட்டார்கள். இதனால் ஒரு சில தொழுகைகளும் களாவானது. இறுதியில் எதிரிகள் வந்தார்கள். அவர்களால் பள்ளங்களைத் தாண்டி வர முடியிவில்லை. ஆனாலும் அவர்கள் அங்கிருந்த படி அம்பெறிய முஸ்லிம்கள் இங்கிருந்த படி அம்பெறிய இப்படியே ஒரு மாத காலம் நீடித்தது. முஸ்லிம்கள் அந்த இடத்தை விட்டும் செல்ல முடியாமல் முற்றுகையிடப்பட்டதைப் போல ஆகி விட்டனர். இறுதியில் ஒரு மாதம் கழித்து அல்லாஹ் சபா என்ற புயல் காற்றை அனுப்பினான். அந்தக் காற்று எதிரிகள் உள்ள பகுதியில் மட்டும் வீசியது. எதிரிகள் விரண்டோடினர். அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தந்தான். இதைப் பற்றி நபி ஸல் அவர்கள் கூறும்போது சபா என்ற காற்றைக் கொண்டு நான் உதவி செய்யப்பட்டேன். தபூர் என்ற காற்றைக் கொண்டு ஆது கூட்டம் அழிக்கப்பட்டது என்றார்கள். படிப்பினை. இப்போரில் முஸ்லிம்களின் எண்ணிக்கை ஒரு அறிவிப்பில் 3000 என்றும் மற்றொரு அறிவிப்பில் 700 என்றும் கூறப்பட்டுள்ளது. எப்படி இருந்தாலும் எதிரிகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதி கூட என்பது உறுதியான விஷயம். அவ்வாறு இருந்தும் அல்லாஹ் இறுதியில் வெற்றியைத் தந்தான். ஆனால் அந்த வெற்றி மிகவும் தாமதம் ஆனது. என்ன தான் சத்தியத்தில் முஸ்லிம்கள் இருந்தாலும் உடனே வெற்றியைத் தருவது அல்லாஹ் மீது கடமையில்லை.
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَاءَتْكُمْ جُنُودٌ فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا وَجُنُودًا لَمْ تَرَوْهَا (9)الاحزاب
ஹிஜ்ரி 5-ம் ஆண்டு நடந்த அகழ்ப்போரைப் பற்றி இந்த வசனம் குறிப்பிடுகிறது
பாலஸ்தீன மக்களை தொடர்ந்து வஞ்சித்துக் கொண்டிருக்கும் யூதர்கள் நிச்சயம் தண்டிக்கப் படுவார்கள்
ضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ أَيْنَمَا ثُقِفُوا إِلَّا بِحَبْلٍ مِنَ اللَّهِ وَحَبْلٍ مِنَ النَّاسِ وَبَاءُوا بِغَضَبٍ مِنَ اللَّهِ وَضُرِبَتْ عَلَيْهِمُ الْمَسْكَنَةُ ذَلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ الْأَنْبِيَاءَ بِغَيْرِ حَقٍّ ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ (112) البقرة
عن عَبْد اللَّهِ بْنُ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « تَقْتَتِلُونَ أَنْتُمْ وَيَهُودُ حَتَّى يَقُولَ الْحَجَرُ يَا مُسْلِمُ هَذَا يَهُودِىٌّ وَرَائِى تَعَالَ فَاقْتُلْهُ ».(مسلم
முற்காலத்தில் இருந்தே யூதர்கள் துரோகிகளாகவும் தேச விரோதிகளாகவும் இருந்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்ததும் யூதர்கள் தான்
عَنْ عَائِشَةَ قَالَتْ سَحَرَ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَهُودِىٌّ مِنْ يَهُودِ بَنِى زُرَيْقٍ يُقَالُ لَهُ لَبِيدُ بْنُ الأَعْصَمِ - قَالَتْ - حَتَّى كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَفْعَلُ الشَّىْءَ وَمَا يَفْعَلُهُ حَتَّى إِذَا كَانَ ذَاتَ يَوْمٍ أَوْ ذَاتَ لَيْلَةٍ دَعَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- ثُمَّ دَعَا ثُمَّ دَعَا ثُمَّ قَالَ « يَا عَائِشَةُ أَشَعَرْتِ أَنَّ اللَّهَ أَفْتَانِى فِيمَا اسْتَفْتَيْتُهُ فِيهِ جَاءَنِى رَجُلاَنِ فَقَعَدَ أَحَدُهُمَا عِنْدَ رَأْسِى وَالآخَرُ عِنْدَ رِجْلَىَّ. فَقَالَ الَّذِى عِنْدَ رَأْسِى لِلَّذِى عِنْدَ رِجْلَىَّ أَوِ الَّذِى عِنْدَ رِجْلَىَّ لِلَّذِى عِنْدَ رَأْسِى مَا وَجَعُ الرَّجُلِ قَالَ مَطْبُوبٌ. قَالَ مَنْ طَبَّهُ قَالَ لَبِيدُ بْنُ الأَعْصَمِ. قَالَ فِى أَىِّ شَىْءٍ قَالَ فِى مُشْطٍ وَمُشَاطَةٍ. قَالَ وَجُبِّ طَلْعَةِ ذَكَرٍ. قَالَ فَأَيْنَ هُوَ قَالَ فِى بِئْرِ ذِى أَرْوَانَ ».قَالَتْ فَأَتَاهَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فِى أُنَاسٍ مِنْ أَصْحَابِهِ ثُمَّ قَالَ « يَا عَائِشَةُ وَاللَّهِ لَكَأَنَّ مَاءَهَا نُقَاعَةُ الْحِنَّاءِ وَلَكَأَنَّ نَخْلَهَا رُءُوسُ الشَّيَاطِينِ ». قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَفَلاَ أَحْرَقْتَهُ قَالَ « لاَ أَمَّا أَنَا فَقَدْ عَافَانِى اللَّهُ وَكَرِهْتُ أَنْ أُثِيرَ عَلَى النَّاسِ شَرًّا فَأَمَرْتُ بِهَا فَدُفِنَتْ ».(بخاري)
நபி(ஸல்)அவர்களுக்கு பனூஸுரைக் குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அஃஸம் என்பவன் சூனியம் செய்தான். இதன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் செய்யாத ஒன்றை செய்ததாக பிரமையூட்டப்பட்டார்கள். (உதாரணமாக மனைவியுடன் சேர்ந்திருக்க மாட்டார்கள். ஆனால் சேர்ந்ததாக எண்ணுவார்கள்) இறுதியில், அவர்கள் ஒருநாள் (அ) ஓரிரவு என்னிடம் வந்தார்கள். ஆயினும், அவர்கள் (என் மீது கவனம் செலுத்தாமல்) தொடர்ந்து துஆச் செய்து கொண்டேயிருந்தார்கள். பிறகு (என்னிடம் கூறினார்கள்:) ஆயிஷாவே! (விஷயம்) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவைத் தரும்படி இறைவனிடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்து விட்டான். (கனவில்) என்னிடம் (வானவர்கள்) இரண்டு பேர் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், இந்த மனிதரின் நோய் என்ன? என்று கேட்டார். அத்தோழர், இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று சொல்ல, முதலாமவர் இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்? என்று கேட்டார். தோழர், லபீத் பின் அஃஸம் (எனும் யூதன்) என்று பதிலளித்தார். அவர், எதில் வைத்திருக்கிறான்? என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், ஆண் பேரீச்சம் பாளையின் உறையிலும் என்று பதிலளித்தார். அவர், அது எங்கே இருக்கிறது? என்று கேட்க, மற்றவர், (பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) தர்வான்’ எனும் கிணற்றில் என்று பதிலளித்தார். இதைச் சொல்லி முடித்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று (பாளை உறையை வெளியே எடுத்துவிட்டுத் திரும்பி) வந்து, ஆயிஷா! அதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போல் உள்ளது; அதன் பேரீச்ச மரங்களின் தலைகள் ஷைத்தானின் தலைகளைப் போன்று உள்ளன என்று சொன்னார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! அ(ந்தப் பாளை உறைக்குள் இருப்ப)தைத் தாங்கள் வெளியே எடுக்கவில்லையா?என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ் எனக்கு (அதன் பாதிப்பிலிருந்து) குணமளித்துக் காப்பாற்றி விட்டான். அதை வெளியே எடுப்பதன் மூலம் மக்களிடையே குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் என்று சொன்னார்கள். பிறகு அந்தக் கிணற்றைத் தூர்த்துவிடும்படி அவர்கள் கட்டளையிட அவ்வாறே அது தூர்க்கப் பட்டது. - புகாரி -5763
இச்சம்பத்தைத் தொடர்ந்து தான் நபி ஸல் அவர்களுக்கு சூரத்துன் னாஸ் சூரத்துல் ஃபலக் ஆகியஇரு வசனங்கள் இறக்கப்பட்டன அவற்றை ஓத ஓத நபி அவர்களின் சூனியம் நீங்கியது
மதீனா வந்த புதிதில் இவர்களோடு நட்பு ஒப்பந்தம் வைத்திருந்த நபி ஸல் அவர்கள் இவர்களின் நடவடிக்கைகளால் அந்த ஒப்பந்த த்தை முறித்தார்கள்
கைபர் போரில் நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் வைத்ததும் யூதர்கள் தான்
عَنْ يَحْيَى بْنِ عَبْدِ الرَّحْمَنِ ابْنِ أَبِى لَبِيبَةَ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَوْمَ خَيْبَرَ أُتِىَ بِشَاةٍ مَسْمُومَةٍ مَصْلِيَّةٍ أَهْدَتْهَا لَهُ امْرَأَةٌ يَهُودِيَّةٌ فَأَكَلَ مِنْهَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- هُوَ وَبِشْرُ بْنُ الْبَرَاءِ فَمَرِضَا مَرَضًا شَدِيدًا عَنْهَا. ثُمَّ إِنَّ بِشْرًا تُوُفِّىَ فَلَمَّا تُوُفِّىَ بَعَثَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِلَى الْيَهُودِيَّةِ فَأُتِىَ بِهَا فَقَالَ « وَيْحَكِ مَاذَا أَطْعَمْتِنَا » قَالَتْ أَطْعَمْتُكَ السَّمَّ عَرَفْتُ إِنْ كُنْتَ نَبِيًّا أَنَّ ذَلِكَ لاَ يَضُرُّكَ فَإِنَّ اللَّهَ تَعَالَى سَيَبْلُغُ فِيكَ أَمْرَهُ وَإِنْ كُنْتَ عَلَى غَيْرِ ذَلِكَ فَأَحْبَبْتُ أَنْ أُرِيحَ النَّاسَ مِنْكَ فَأَمَرَ بِهَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَصُلِبَتْ .(دار قطني
கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது யூதப் பெண்ணொருத்தி (நபிகளாருக்கு விருந்தளிக்க விரும்புவதாக அழைப்பு விடுத்திருந்தாள். அதை நபி ஸல் அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அந்தப்பெண்) பொறிக்கப்பட்ட விஷம் கலந்து ஆட்டிறைச்சியைப் பரிமாறினாள். அதில் சிறிதளவு நபி ஸல் சாப்பிட்டார்கள். பிஷ்ர் என்ற நபித் தோழரும் சாப்பிட்டார்.ஆனால் அவர் கடுமையாக நோயால் பாதிக்கப்பட்டு இறந்த போது அவளை அழைத்து வரப்பட்டது. அவளிடம் உனக்கு என்ன கேடு. என்ன கலந்து கொடுத்தாய் என்று கேட்க, அதற்கு அவள் நான் அதில் விஷம் கலந்தேன். நீங்கள் உண்மையில் நபியாக இருந்தால் உங்களுக்கு அது இடையூறு தராது. நீங்கள் நபியாக இல்லா விட்டால் இந்த விஷத்தால் நீங்கள் இறந்து உங்களிடமிருந்து மக்களை நிம்மதி பெற வைக்க விரும்பினேன் என்றாள். ஒருவரை விஷம் வைத்துக் கொன்ற காரணத்தால் அவளுக்கு மரணதண்டனை கொடுக்கப் பட்டது.
நபி ஸல் அவர்களின் முஃஜிஸா காரணமாக அந்த விஷம் அப்போது எந்த வேலையும் செய்யவில்லை. ஆனால் அடுத்து இரண்டு வருடங்கள் கழித்து நபி ஸல் அவர்களின் சகராத் வேளையில் மிகவும் சிரமப்பட்ட போது ஆயிஷாவே கைபரில் நான் உண்ட உணவின் விஷம் இப்போது என் தொண்டையை அறுக்கிறது என்றார்கள்.
அனைத்துப் பதவிகளையும் அண்ணல் நபிக்குத் தந்த அல்லாஹ் ஷஹாதத் என்ற பதவியையும் தருவதற்காக இவ்வாறு ஏற்படுத்தியிருக்கலாம் என மார்க்க அறிஞர்கள் விளக்கம் கூறியுள்ளார்கள்.
قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ يَا عَائِشَةُ مَا أَزَالُ أَجِدُ أَلَمَ الطَّعَامِ الَّذِي أَكَلْتُ بِخَيْبَرَ فَهَذَا أَوَانُ وَجَدْتُ انْقِطَاعَ أَبْهَرِي مِنْ ذَلِكَ السُّمِّ (بخاري
நபி ஈஸா அலை அவர்களைக் கொல்ல முயற்சி செய்ததும் இந்த யூதர்கள் தான்.
இவர்களிடமிருந்து ஈஸா அலை அவர்களைப் பாதுகாக்கவே அல்லாஹ் விண்ணுக்கு உயர்த்தினான்.
وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَكِنْ شُبِّهَ لَهُمْ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِنْهُ مَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينًا (157) بَلْ رَفَعَهُ اللَّهُ إِلَيْهِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا (158)النساء
وَرُفِعَ عِيسَى مِنْ رَوْزَنَة فِي الْبَيْت إِلَى السَّمَاء قَالَ : وَجَاءَ الطَّلَب مِنْ الْيَهُود فَأَخَذُوا الشَّبَه فَقَتَلُوهُ ثُمَّ صَلَبُوهُ (تفسير ابن كثير
யூதர்கள் ஈஸா அலை அவர்களைக் கொல்ல வந்தார்கள். அல்லாஹ் ஈஸா அலை அவர்களை விண்ணுக்கு உயர்த்தினான். அவர்களின் உருவம் மற்றொருவருக்கு தரப்பட்டது. அவரை யூதர்கள் சிலுவையில் அறைந்தார்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் ஈஸா அலை அவர்களை யூதர்கள் கொன்று விட்டதாகவே இன்றும் நம்புகிறார்கள்.
கிறிஸ்தவர்களின் நம்பிக்கை அடிப்படையில் அவர்களின் கடவுளைக் கொன்றவர்கள் யூதர்கள். ஆனாலும் அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து கொன்று இன்றைக்கு முஸ்லிம்களைக் கொல்லுகிறார்கள். அதாவது கிறிஸ்தவ நாடான அமெரிக்கா இன்று இஸ்ரேலுடன் கைகோர்த்துள்ளது
وَقَالَتِ الْيَهُودُ لَيْسَتِ النَّصَارَى عَلَى شَيْءٍ وَقَالَتِ النَّصَارَى لَيْسَتِ الْيَهُودُ عَلَى شَيْءٍ وَهُمْ يَتْلُونَ الْكِتَابَ 113) البقرة
முஸ்லிம்களுக்கு சோதனைகள் அதிகரிப்பது அழிவு நாளின் அறிகுறியாகும்
عن الزبير بن عدي قال : أتينا أنس بن مالك فشكونا إليه الحجاج فقال : اصبروا ( فإنه لا يأتي عليكم يوم أو زمان إلا والذي بعده شر منه حتى تلقوا ربكم ) سمعته من نبيكم صلى الله عليه و سلم (صحيح ابن حبان
ஜுபைர் இப்னு அதீ ரஹ் அவர்கள் கூறினார்கள் நாங்கள் அனஸ் ரழி அவர்களிடம் வருகை தந்து ஹஜ்ஜாஜ் செய்யும் கொடுமைகளைப் பற்றி முறையிட்டோம். அப்போது அவர்களிடம் நீங்கள் பொறுமை கொள்ளுங்கள். காலங்கள் செல்லச் செல்ல சோதனைகள் பெருகும்.அந்த சோதனைகள் மவ்த் வரையிலும் கூட நீடிக்கலாம் என்றார்கள்
காலங்கள் செல்லச் செல்ல சோதனைகள் அதிகரிக்கலாம்.
தஜ்ஜால் வரும் முன்பு ஏற்படும் பட்டினியின் போது முஃமின்களுக்கு தஸ்பீஹ் தான் உணவு
عَنْ أَبِى أُمَامَةَ الْبَاهِلِىِّ قَالَ خَطَبَنَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَكَانَ أَكْثَرُ خُطْبَتِهِ حَدِيثًا حَدَّثَنَاهُ عَنِ الدَّجَّالِ وَحَذَّرَنَاهُ فَكَانَ مِنْ قَوْلِهِ أَنْ قَالَ « إِنَّهُ لَمْ تَكُنْ فِتْنَةٌ فِى الأَرْضِ مُنْذُ ذَرَأَ اللَّهُ ذُرِّيَّةَ آدَمَ أَعْظَمَ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ وَإِنَّ اللَّهَ لَمْ يَبْعَثْ نَبِيًّا إِلاَّ حَذَّرَ أُمَّتَهُ الدَّجَّالَ...... وَإِنَّ قَبْلَ خُرُوجِ الدَّجَّالِ ثَلاَثَ سَنَوَاتٍ شِدَادٍ يُصِيبُ النَّاسَ فِيهَا جُوعٌ شَدِيدٌ يَأْمُرُ اللَّهُ السَّمَاءَ فِى السَّنَةِ الأُولَى أَنْ تَحْبِسَ ثُلُثَ مَطَرِهَا وَيَأْمُرُ الأَرْضَ فَتَحْبِسُ ثُلُثَ نَبَاتِهَا ثُمَّ يَأْمُرُ السَّمَاءَ فِى السَّنَةِ الثَّانِيَةِ فَتَحْبِسُ ثُلُثَىْ مَطَرِهَا وَيَأْمُرُ الأَرْضَ فَتَحْبِسُ ثُلُثَىْ نَبَاتِهَا ثُمَّ يَأْمُرُ اللَّهُ السَّمَاءَ فِى السَّنَةِ الثَّالِثَةِ فَتَحْبِسُ مَطَرَهَا كُلَّهُ فَلاَ تَقْطُرُ قَطْرَةٌ وَيَأْمُرُ الأَرْضَ فَتَحْبِسُ نَبَاتَهَا كُلَّهُ فَلاَ تُنْبِتُ خَضْرَاءَ فَلاَ تَبْقَى ذَاتُ ظِلْفٍ إِلاَّ هَلَكَتْ إِلاَّ مَا شَاءَ اللَّهُ ». قِيلَ فَمَا يُعِيشُ النَّاسَ فِى ذَلِكَ الزَّمَانِ قَالَ « التَّهْلِيلُ وَالتَّكْبِيرُ وَالتَّسْبِيحُ وَالتَّحْمِيدُ وَيُجْرَى ذَلِكَ عَلَيْهِمْ مَجْرَى الطَّعَامِ ». قَالَ أَبُو عَبْدِ اللَّهِ سَمِعْتُ أَبَا الْحَسَنِ الطَّنَافِسِىَّ يَقُولُ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ الْمُحَارِبِىَّ يَقُولُ يَنْبَغِى أَنْ يُدْفَعَ هَذَا الْحَدِيثُ إِلَى الْمُؤَدِّبِ حَتَّى يُعَلِّمَهُ الصِّبْيَانَ فِى الْكُتَّابِ. (ابن ماجة)
அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள். நபி ஸல் அவர்கள் ஒருமுறை தஜ்ஜாலின் சோதனையைப் பற்றி எங்களுக்கு உபதேசம் செய்தார்கள். அப்போது கூறினார்கள். மனிதன் படைக்கப்பட்டது முதல் கடைசி வரை ஏற்படும் சோதனைகளில் தஜ்ஜாலை விட மிகப் பெரும் சோதனை எதுவும் இல்லை. இதனால் தான் எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தம் சமூக மக்களுக்கு எச்சரிக்கை செய்யாமல் இருந்ததில்லை. ....
தஜ்ஜால் வருவதற்கு முன்பு மூன்று வருடங்கள் மிகவும் சிரமமாக வருடங்களாக இருக்கும். இந்த மூன்று வருடங்களில் முதல் வருடம் அல்லாஹ் வானத்திற்கு உத்தரவிட்டு பெய்ய வேண்டிய மழையில் மூன்றில் ஒரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான். அதேபோல் பூமிக்கு உத்தரவிட்டு அது விளைவிக்க வேண்டிய விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான். இரண்டாம் வருடம் அல்லாஹ் வானத்திற்கு உத்தரவிட்டு பெய்ய வேண்டிய மழையில் மூன்றில் இரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான். அதேபோல் பூமிக்கு உத்தரவிட்டு அது விளைவிக்க வேண்டிய விளைச்சலில் மூன்றில் இரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான்.
மூன்றாம் வருடம் அல்லாஹ் வானத்திற்கு உத்தரவிட்டு பெய்ய வேண்டிய மழையை முற்றிலுமாக நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான். அதேபோல் பூமிக்கு உத்தரவிட்டு அது விளைவிக்க வேண்டிய விளைச்சலை முற்றிலுமாக நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான். புற்பூண்டுகள் விளையாது. கால்நடைகள் இறந்து விடும். என்றெல்லாம் நபி ஸல் அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே அந்த நேரத்தில் உணவுக்கு என்ன வழி என்று தோழர்கள் கேட்க, அதற்கு நபி ஸல் தஹ்லீல் அதாவது லாயிலாஹ இல்ல ல்லாஹ், அல்லாஹு அக்பர், தஸ்பீஹ், தஹ்மீத் ஆகியவை தான் உணவாக இருக்கும் என்றார்கள். (அதாவது முஃமின்கள் உணவு கிடைக்காத சூழலில் இவற்றை ஓதுவார்கள். அவ்வாறு ஓதுவதால் அவர்களின் பசி அடங்கும்.)
தஜ்ஜால் இருக்கும் போதும் முஃமின்களுக்கு தஸ்பீஹ் தான் உணவு
عن ابن عمر رضي الله عنهما : أن رسول الله صلى الله عليه وسلم سئل عن طعام المؤمنين في زمن الدجال ؟ قال : طعام الملائكة قالوا : و ما طعام الملائكة ؟ قال : طعامهم منطقهم بالتسبيح و التقديس فمن كان منطقة يومئذ التسبيح و التقديس أذهب الله عنه الجوع فلم يخش جوعا (حاكم
தஜ்ஜால் வெளிப்படும் நேரத்தில் முஃமின்களின் சொத்துக்கள் அவனால் அழிக்கப்படும்போது முஃமின்களின் உணவுக்கு என்ன வழி என்று நபித்தோழர்கள் கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் மலக்குகளின் உணவு தான் முஃமின்களின் உணவு என நபி ஸல் கூறினார்கள். மலக்குகளின் உணவு எது என நபித்தோழர்கள் கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் தஸ்பீஹ் தான் அவர்களின் உணவாகும். யார் தஜ்ஜால் வெளிப்படும் நேரத்தில் உணவுக்கு வழியில்லாத போது இந்த தஸ்பீஹை ஓதுவாரோ அவரின் பசி அதனால் நீக்கப்படும். அவர் பசியை அஞ்ச வேண்டியதில்லை என்றார்கள்.
முஸ்லிம்கள் அனைவரும் தங்களைத் திருத்திக் கொண்டு வாழ்ந்து அல்லாஹ்விடம் துஆச் செய்தால் நிச்சயம் சோதனைகளை நீக்குவான்
இனிமேலாவது தஹஜ்ஜத் தொழுகையை விடாமல் தொழுவதுடன் மறவாமல் நாட்டுக்காக துஆ செய்ய வேண்டும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا مَضَى شَطْرُ اللَّيْلِ أَوْ ثُلُثَاهُ يَنْزِلُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَقُولُ هَلْ مِنْ سَائِلٍ يُعْطَى هَلْ مِنْ دَاعٍ يُسْتَجَابُ لَهُ هَلْ مِنْ مُسْتَغْفِرٍ يُغْفَرُ لَهُ حَتَّى يَنْفَجِرَ الصُّبْحُ (مسلم)1263
கருத்து- அல்லாஹ் தானாக முன்வந்து மன்னிக்கிறான், கோரிக்கைகளை ஏற்கிறான்.
நபி யஃகூப் அலை அவர்களின் பிள்ளைகள் தம் சகோதரருக்கு எதிராக சூழ்ச்சிகள் செய்ததால் பல்வேறு சோதனைகளுக்கு ஆளான போது இறுதியில் அவர்களுக்காக மன்னிப்புக் கேட்க தந்தை யஃகூப் அலை தேர்ந்தெடுத்த நேரம் சஹர் நேரம்
قَالُوا يَا أَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوبَنَا إِنَّا كُنَّا خَاطِئِينَ (97) قَالَ سَوْفَ أَسْتَغْفِرُ لَكُمْ رَبِّي إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ (98)يوسف - وَقَدْ قِيلَ : إِنَّ يَعْقُوب عَلَيْهِ السَّلَام لَمَّا قَالَ لِبَنِيهِ " سَوْفَ أَسْتَغْفِر لَكُمْ رَبِّي" أَنَّهُ أَخَّرَهُمْ إِلَى وَقْت السَّحَر .- وَكَانَ عَبْد اللَّه بْن عُمَر يُصَلِّي مِنْ اللَّيْل ثُمَّ يَقُول : يَا نَافِع هَلْ جَاءَ السَّحَر ؟ فَإِذَا قَالَ : نَعَمْ أَقْبَلَ عَلَى الدُّعَاء وَالِاسْتِغْفَار حَتَّى يُصْبِح- عَنْ أَنَس بْن مَالِك قَالَ : كُنَّا نُؤْمَر إِذَا صَلَّيْنَا مِنْ اللَّيْل أَنْ نَسْتَغْفِر فِي آخِر السَّحَر سَبْعِينَ مَرَّة . (تفسير ابن كثير)
சிறுவருக்கும் தஹஜ்ஜத் தொழுகையை ஆர்வமூட்டிய நபி ஸல்
عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ الرَّجُلُ فِي حَيَاةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَأَى رُؤْيَا قَصَّهَا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَمَنَّيْتُ أَنْ أَرَى رُؤْيَا أَقُصُّهَا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكُنْتُ غُلَامًا شَابًّا أَعْزَبَ وَكُنْتُ أَنَامُ فِي الْمَسْجِدِ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَيْتُ فِي الْمَنَامِ كَأَنَّ مَلَكَيْنِ أَخَذَانِي فَذَهَبَا بِي إِلَى النَّارِ فَإِذَا هِيَ مَطْوِيَّةٌ كَطَيِّ الْبِئْرِ وَإِذَا لَهَا قَرْنَانِ كَقَرْنَيْ الْبِئْرِ وَإِذَا فِيهَا نَاسٌ قَدْ عَرَفْتُهُمْ فَجَعَلْتُ أَقُولُ أَعُوذُ بِاللَّهِ مِنْ النَّارِ أَعُوذُ بِاللَّهِ مِنْ النَّارِ فَلَقِيَهُمَا مَلَكٌ آخَرُ فَقَالَ لِي لَنْ تُرَاعَ فَقَصَصْتُهَا عَلَى حَفْصَة (بخاري) 3738
நம்முடைய சோதனைகள் நீங்குவதற்கு நோன்பும் ஒரு கேடயம். நமது குடும்பப் பெண்களையும் நாட்டின் சூழ்நிலையை விளக்கிச் சொல்லி வாரம் ஒருமுறையேனும் திங்கட்கிழமை நோன்பு வைக்கச் சொல்ல வேண்டும்.
தனக்கு ஒரு வேதம் வேண்டும் என்று மூஸா அலை கேட்ட போது நோன்பு வைக்கும்படி அல்லாஹ் ஏவினான். அந்த வேதத்தை வாங்கிக் கொண்டு வந்தபோது மக்கள் இணை வைப்பதைக் கண்டு, கடும் கோபத்தில் தவ்ராத்தை வீசினார்கள். பல துண்டுகளாக வேதம் சிதறியது. எத்தனை துண்டுகளாகச் சிதறியதோ அத்தனைக்கும் பகரமாக அல்லாஹ் நோன்பு வைக்கச் சொன்னான்.
ஒவ்வொரு நோன்பு முடியும் போது ஒவ்வொரு துண்டுகளும் ஒட்டின. இறுதியில் எல்லாம் ஒன்று சேர்ந்தன.
وَوَاعَدْنَا مُوسَى ثَلَاثِينَ لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ أَرْبَعِينَ لَيْلَةً (142)........ وَلَمَّا رَجَعَ مُوسَى إِلَى قَوْمِهِ غَضْبَانَ أَسِفًا قَالَ بِئْسَمَا خَلَفْتُمُونِي مِنْ بَعْدِي أَعَجِلْتُمْ أَمْرَ رَبِّكُمْ وَأَلْقَى الْأَلْوَاحَ وَأَخَذَ بِرَأْسِ أَخِيهِ يَجُرُّهُ إِلَيْهِ (150) الاعراف
قال ابن عباس : لما ألقى موسى عليه السلام الألواح تكسرت فصام أربعين يوماً ، فأعاد الله تعالى الألواح (قرطبي – تفسير الرازي)
காஸா மக்களின் நெருக்கடியான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு குனூத்தே நாஜிலா ஓத வேண்டும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرَّكْعَةِ الْآخِرَةِ يَقُولُ اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنْ الْمُؤْمِنِينَ اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ اللَّهُمَّ اجْعَلْهَا سِنِينَ كَسِنِي يُوسُفَ (بخاري) باب دُعَاءِ النَّبِىِّ صلى الله عليه وسلم اِجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِى يُوسُفَ- كتاب الاستسقاء - عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَاهُ رِعْلٌ وَذَكْوَانُ وَعُصَيَّةُ وَبَنُو لَحْيَانَ فَزَعَمُوا أَنَّهُمْ قَدْ أَسْلَمُوا وَاسْتَمَدُّوهُ عَلَى قَوْمِهِمْ فَأَمَدَّهُمْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَبْعِينَ مِنْ الْأَنْصَارِ قَالَ أَنَسٌ كُنَّا نُسَمِّيهِمْ الْقُرَّاءَ يَحْطِبُونَ بِالنَّهَارِ وَيُصَلُّونَ بِاللَّيْلِ فَانْطَلَقُوا بِهِمْ حَتَّى بَلَغُوا بِئْرَ مَعُونَةَ غَدَرُوا بِهِمْ وَقَتَلُوهُمْ فَقَنَتَ شَهْرًا يَدْعُو عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَبَنِي لَحْيَانَ (بخاري) بَاب الْعَوْنِ بِالْمَدَدِ-كتاب الجهاد
மேற்கூறப்பட்ட நான்கு பிரிவினர் இஸ்லாத்தை ஏற்றது போல நடித்து தங்களுக்கு மார்க்கத்தை சொல்லித் தர நபித் தோழர்களை தங்கள் ஊருக்கு அனுப்புமாறு கூறினர். அதன்படி நபி ஸல் எழுபது ஹாஃபிழ்களை அனுப்பி வைத்த போது அவர்களை திட்டமிட்டு கொன்றனர். இதனால் பெரும் கவலை அடைந்த நபி ஸல் கொலை செய்தவர்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காகவும் சுமார் ஒரு மாதம் ஃபஜ்ரில் இரண்டாவது ரக்அத்தின் ருகூவிலிருந்து எழுந்து துஆ செய்தார்கள். சில அறிவிப்புகளில் ஐந்து நேரத் தொழுகையிலும் இவ்வாறு செய்தார்கள் என உள்ளது. அதேபோல் முந்திய ஹதீஸில் மக்காவில் இருந்து மதீனாவுக்கு வர விடாமல் தடுக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட முஸ்லிம்களுக்காக அவர்களை விடுதலை செய்யப்படும் வரை இவ்வாறு துஆ செய்தார்கள் காஸா முஸ்லிம்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள மிக நெருக்கடியான சூழலில் ஒவ்வொரு தொழுகையிலும் நாம் ஓதா விட்டாலும் குறைந்த பட்சம் ஃபஜ்ர் தொழுகையில் இரண்டாவது ரக்அத்தில் ருகூவுக்குப் பின் ஒரு மாதம் ஓதலாம். முதலில் இது பற்றிய சட்டங்களை மக்களுக்குத் தெளிவு படுத்தி விட்டு நடைமுறைப் படுத்தலாம்.
குனூத் நாஜிலா பற்றிய ஹனஃபீ சட்டம்.
. குனூத்தே நாஜிலா என்பது விரோதிகளின் சூழ்ச்சிகளிலிருந்தும், தீங்கிலிருந்தும், அவர்கள் மூலம் இஸ்லாமிய உம்மத்திற்கு ஏற்படும் ஆபத்துகளிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்பை, உதவியை வேண்டும் அற்புதமான துஆ.
,நபி(ஸல்)அவர்கள் ஒரு மாத காலம் ஃபஜ்ருடைய தொழுகையில் ஓதியுள்ளார்கள். 2,சோதனைகள் நீங்கி சாதகமான சூழல் ஏற்படுகிற வரை ஓதலாம் என்பது அனைத்து இமாம்களின் கூற்று. 3,ஃபஜ்ருடைய தொழுகையில் இரண்டாவது ரக்அத்தில் ருகூவிற்கு பின்பு நின்ற நிலையில் ஓத வேண்டும். 4,குனூத்தே நாஜிலாவிற்காக தக்பீர் சொல்வதோ,கைகளை உயர்த்துவதோ கூடாது. 5,இமாம் சப்தமிட்டு ஓத வேண்டும். பின்பற்றி தொழும் மக்கள் மெதுவாக ஆமீன் சொல்ல வேண்டும். 6,தனியாக தொழுபவரும் குனூத்தே நாஜிலாவை ஓதலாம். 7,பெண்களும் குனூத்தே நாஜிலாவை தொழுகையில் ஓதலாம். சப்தமின்றி மெதுவாக ஓதவேண்டும்
ஷாஃபீ மத்ஹபில் வழக்கமாகவே ஃபஜ்ரின் இரண்டாவது ரக்அத்தில் குனூத் ஓதப்படுவதால் அதில் இதை ஓதலாம்
குனூத்
عَنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ ، قَالَ : عَلَّمَنِي رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَلِمَاتٍ أَقُولُهُنَّ فِي قُنُوتِ الْوِتْرِ : اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ ، فَإِنَّكَ تَقْضِي وَلاَ يُقْضَى عَلَيْكَ ، وَإِنَّهُ لاَ يَذِلُّ مَنْ وَالَيْتَ ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ (صحيح ابن خزيمة
يَا حَيُّ يَا قـيُّوْمُ بِرَحْمَتِكَ نَسْتَغِيْثُ - رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِلْقَوْمِ الظَّالِمِيْنَ وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِريْنَ - اَللَّهُمَّ إنَّا نَجْعَلُكَ فِيْ نُحُوْرِهِمْ وَنَعُوْذُ بِكَ مِنْ شُرُوْرِهِمْ - اَللَّهُمَّ إنَّا نَعُوْذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلاَءِ وَدَرَكِ الشَّـقَاءِ وَسُـوْءِ الْقَضَاءِ وَشَـمَاتَةِ الْأَعْـدَاءِ - .اَللَّهُمَّ اكْفِنَا شَرَّ الظَّالِمِيْنَ وَاكْفِنَاهُمْ بِمَا شِئْتَ.
اَللَّهُمَّ انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم
اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ والمسلمين في مشارق الارض ومغاربِها –خصوصا في غزة - واجعل لهم فرَجًا ومَخْرَجًا –انصُرِ المجاهدين في سبيلك – واَلِّف بين قلوبهم – ووَحِّدْ صُفوفهم , ووفقهم لاتباع كتابك وسنة نبيك ويسر لهم اسباب النصر يا ارحم الراحمين
துஆ யூனுஸை ஒரு இலட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம் முறை ஓதினால் மாபெரும் மாற்றங்கள் நிகழலாம் என பல ஷைகுமார்கள் கூறியிருப்பதால் ஜும்ஆ முடிந்தவுடன் ஒவ்வொருவரும் சுமார் 313 முறை ஓதினால் அந்த எண்ணிக்கை வர வாய்ப்பு உண்டு.
குனூத் உடைய வாசகங்கள் விஷயத்தில் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் வழி காட்டுதலைப் பின்பற்றுவது நல்லது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக