03-10-2025
ரபீஉல் ஆகிர் -10 بسم الله الرحمن الرحيم
இறைநேசர்களின் வாழ்வில்
படிப்பினைக்குரிய நிகழ்வுகள்
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
இறை நல்லடியார்கள் அல்லாஹ்வை அதிகம் அஞ்சியதால் அல்லாஹ் அவர்ளின் வாழ்வில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியுள்ளான். அந்த வகையில் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் வாழ்வில் நடந்த படிப்பினைக்குரிய சில நிகழ்வுகளையும் மற்றும் சில நல்லடியார்களின் வாழ்வில் நடைபெற்ற நிகழ்வுகளையும் அறிந்து கொள்வது நம்முடைய ஈமானை அதிகப் படுத்தும்.
கண்ணிமைக்கும் நேரத்தில் யமன் நாட்டின் சபா அரசியின் சிம்மாசனத்தை சுலைமான் அலை அவர்களிடம் கொண்டு வந்த இறைநேசரின் சம்பவமும், அதற்கு சுலைமான் அலைஹிஸ்ஸலாம் நன்றி செலுத்திய விதமும்
قَالَ يَا أَيُّهَا الْمَلَأُ أَيُّكُمْ يَأْتِينِي بِعَرْشِهَا قَبْلَ أَنْ يَأْتُونِي مُسْلِمِينَ (38) قَالَ عِفْرِيتٌ مِنَ الْجِنِّ أَنَا آتِيكَ بِهِ قَبْلَ أَنْ تَقُومَ مِنْ مَقَامِكَ وَإِنِّي عَلَيْهِ لَقَوِيٌّ أَمِينٌ (39) قَالَ الَّذِي عِنْدَهُ عِلْمٌ مِنَ الْكِتَابِ أَنَا آتِيكَ بِهِ قَبْلَ أَنْ يَرْتَدَّ إِلَيْكَ طَرْفُكَ فَلَمَّا رَآهُ مُسْتَقِرًّا عِنْدَهُ قَالَ هَذَا مِنْ فَضْلِ رَبِّي لِيَبْلُوَنِي أَأَشْكُرُ أَمْ أَكْفُرُ...... النمل40 قَالَ اِبْن عَبَّاس رضي الله عنه وَهُوَ آصَف كَاتِب سُلَيْمَان عَنْ يَزِيد بْن رُومَان أَنَّهُ آصَف بْن بَرْخِيَاء وَكَانَ صِدِّيقًا يَعْلَم الِاسْم الْأَعْظَم (تفسير ابن كثير)
படிப்பினை- யமனுக்கும், பைத்துல் முகத்தஸுக்கும் ஆயிரக்கணக்கான மைல்கள் தூரம் உள்ளது. அவ்வளவு தூரத்தில் உள்ள சிம்மாசனத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் கொண்டு வர இறை நேசரால் முடிந்தது என்றால் இன்றைக்கு விஞ்ஞானம் வளர்ந்த காலத்திலும் செய்ய முடியாத சாதனையை அல்லாஹ்வின் அளப்பரிய கருணையால் மெஞ்ஞானம் செய்து காட்டும்
தன்னை தாக்க வந்த சிங்கத்திடம் ஒரு நபித்தோழர் நான் நபி ஸல் அவர்களுக்கு பணிவிடை செய்பவன் என்று கூற, அந்த சிங்கம் அடங்கியதோடு, வனப்பகுதியின் எல்லை வரை அவரைப் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றது
عَنِ ابْنِ الْمُنْكَدِرِ أَنَّ سَفِينَةَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْطَأَ الْجَيْشَ بِأَرْضِ الرُّومِ أَوْ أُسِرَ فِي أَرْضِ الرُّومِ فَانْطَلَقَ هَارِبًا يَلْتَمِسُ الْجَيْشَ فَإِذَا هُوَ بِالأَسَدِ فَقَالَ لَهُ : أَبَا الْحَارِثِ ، إِنِّي مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ مِنْ أَمْرِي كَيْتَ وَكَيْتَ فَأَقْبَلَ الأَسَدُ لَهُ بَصْبَصَةٌ حَتَّى قَامَ إِلَى جَنْبِهِ كُلَّمَا سَمِعَ صَوْتًا أَهْوَى إِلَيْهِ ثُمَّ أَقْبَلَ يَمْشِي إِلَى جَنْبِهِ فَلَمْ يَزَلْ كَذَلِكَ حَتَّى بَلَغَ الْجَيْشَ ، ثُمَّ رَجَعَ الأَسَدُ "(مشكاة-شرح السنة)صحيح
நபித் தோழர்களில் ஒருவர் போருக்குச் சென்று திரும்பும்போதோ அல்லது எதிரிகளிடமிரிந்து தப்பிய போதோ பாதை மாறி வன விலங்குகள் நடமாடும் பகுதிக்கு சென்று விட்டார். அப்போது ஒரு சிங்கம் எதிரில் வர, நபி ஸல் அவர்களுடன் தமது நெருக்கத்தையும், தாம் வழி மாறி வந்து விட்டதையும் கூற அந்த சிங்கம் அவரது வலது புறத்தில் வந்து அவருடன் சேர்ந்து நடந்த து. வழியில் ஏதேனும் வேறு மிருகத்தைக் கண்டால் இந்த சிங்கம் கர்ஜிக்கும். உடனே அந்த மிருகம் ஓடி விடும். இவ்வாறு காட்டுப் பகுதியை கடந்து படையினர் தங்கியிருக்கும் இடம் வரை கூடவே வந்து அவரை வழியனுப்பி விட்டுச் சென்றது
நபி ஸல் அவர்களிடம் இரவில் நீண்ட நேரம் பேசி விட்டு வந்த நபித்தோழர்கள் இருவரின் கைகளில் இருந்த குச்சி இருள் நீக்கும் டார்ச் லைட் ஆக மாறிய சம்பவம். இருவிதமான அறிவிப்புகள்
عن أَنَس رض أَنَّ رَجُلَيْنِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ صلى الله عليه وسلم خَرَجَا مِنْ عِنْدِ النَّبِىِّ صلى الله عليه وسلم فِى لَيْلَةٍ مُظْلِمَةٍ وَمَعَهُمَا مِثْلُ الْمِصْبَاحَيْنِ يُضِيآنِ بَيْنَ أَيْدِيهِمَا فَلَمَّا افْتَرَقَا صَارَ مَعَ كُلِّ وَاحِدٍ مِنْهُمَا وَاحِدٌ حَتَّى أَتَى أَهْلَهُ- عَنْ أَنَسٍ كَانَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ وَعَبَّادُ بْنُ بِشْرٍ عِنْدَ النَّبِىِّ صلى الله عليه وسلم (بخاري)465 كتاب الصلاة
قضة1: عَنْ أَنَسٍ رضي الله عنه أَنَّ أُسَيْدَ بْنَ حُضَيْرٍ وَرَجُلًا آخَرَ مِنْ الْأَنْصَارِ تَحَدَّثَا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً فِي حَاجَةٍ لَهُمَا حَتَّى ذَهَبَ مِنْ اللَّيْلِ سَاعَةٌ وَلَيْلَةٌ شَدِيدَةُ الظُّلْمَةِ ثُمَّ خَرَجَا مِنْ عِنْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْقَلِبَانِ وَبِيَدِ كُلِّ وَاحِدٍ مِنْهُمَا عُصَيَّةٌ فَأَضَاءَتْ عَصَا أَحَدِهِمَا لَهُمَا حَتَّى مَشَيَا فِي ضَوْئِهَا حَتَّى إِذَا افْتَرَقَ بِهِمَا الطَّرِيقُ أَضَاءَتْ لِلْآخَرِ عَصَاهُ فَمَشَى كُلُّ وَاحِدٍ مِنْهُمَا فِي ضَوْءِ عَصَاهُ حَتَّى بَلَغَ إِلَى أَهْلِهِ (مسند أحمد) مُسْنَدُ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ (مشكاة-باب الكرامات
இரு சஹாபிகள் நபி ஸல் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு வீடு திரும்பும்போது கடும் இருட்டாக இருந்தது அப்போது ஒருவர் கையில் வைத்திருந்த குச்சி பிரகாசித்தது. அதன் வெளிச்சத்தில் நடந்தனர். பிறகு அவ்விருவரும் அவரவர் வீட்டுக்குச் செல்ல பிரிந்த போது இருவரின் கையிலும் இருந்த குச்சிகள் தனியே பிரகாசித்தன. அந்த வெளிச்சத்தில் வீடு போய் சேர்ந்தனர்.
நபி ஸல் அவர்களை குளிப்பாட்டிய போது நபித் தோழர்கள் காதில் கேட்ட அசரீரியான சப்தம். நபி ஸல் அவர்களின் கண்ணியம் கருதி மற்ற ஜனாஸாக்களைப்போல் ஆடையைக் கழற்றி குளிப்பாட்டப்படவில்லை
عن عَائِشَةَ رض لَمَّا أَرَادُوا غَسْلَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا وَاللَّهِ مَا نَدْرِي أَنُجَرِّدُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ثِيَابِهِ كَمَا نُجَرِّدُ مَوْتَانَا أَمْ نَغْسِلُهُ وَعَلَيْهِ ثِيَابُهُ فَلَمَّا اخْتَلَفُوا أَلْقَى اللَّهُ عَلَيْهِمْ النَّوْمَ حَتَّى مَا مِنْهُمْ رَجُلٌ إِلَّا وَذَقْنُهُ فِي صَدْرِهِ ثُمَّ كَلَّمَهُمْ مُكَلِّمٌ مِنْ نَاحِيَةِ الْبَيْتِ لَا يَدْرُونَ مَنْ هُوَ أَنْ اغْسِلُوا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ ثِيَابُهُ فَقَامُوا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَغَسَلُوهُ وَعَلَيْهِ قَمِيصُهُ يَصُبُّونَ الْمَاءَ فَوْقَ الْقَمِيصِ وَيُدَلِّكُونَهُ بِالْقَمِيصِ دُونَ أَيْدِيهِمْ.(ابوداود) - كتاب الجنائز
உஹது மலையில் நபி ஸல் அவர்களும், கீழ்கானும் தோழர்களும் நின்றிருக்க உஹது மலை குலுங்கியபோது நபி ஸல் மலையை காலால் அழுத்தி உன் மீது நபி, சித்தீக், இரு ஷஹீதுகள் இருக்க குலுங்குகிறாயா என்று கூற உடனே அமைதியானது
عَنْ قَتَادَةَ أَنَّ أَنَسًا رَضِيَ اللَّهُ عَنْهُ حَدَّثَهُمْ قَالَ صَعِدَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُحُدًا وَمَعَهُ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ فَرَجَفَ وَقَالَ اسْكُنْ أُحُدُ أَظُنُّهُ ضَرَبَهُ بِرِجْلِهِ فَلَيْسَ عَلَيْكَ إِلَّا نَبِيٌّ وَصِدِّيقٌ وَشَهِيدَانِ (بخاري) باب مَنَاقِبُ عُثْمَانَ بْنِ عَفَّانَ - فضائل الصحابة
இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் அவர்கள் பயணம் செய்த கப்பல் கடும் புயலில் சிக்கியும் அவர்களின் துஆவால் தப்பியது
عن يحيى بن عثمان بقية بن الوليد قال :(كنا في البحر فهبت الرياح وهاجت الأمواج فبكى الناس وصاحوا فقيل لمعيوف - أو ابن معيوف - هذا ابراهيم بن أدهم لو سألته أن يدعو الله عز و جل ؟ وإذا هو نائم في ناحية السفينة ملفوف رأسه في كساء فدنا منه فقال:
يا أباإسحاق أما ترى ما الناس فيه ؟ فقال :اللهم قد أريتنا قدرتك فأرنا رحمتك فهدأت السفينة (مجابوا الدعوة)
இறைநேசரின் துஆவால் முடியே வளராத வழுக்கைத் தலை கொண்ட 12 வயது சிறுவனின் தலையில் முடி வளர்ந்த அதிசயம்
عن محمد بن الحسين حدثني العباس بن الفضل بن الأزرق : حدثني مجاشع الديري قال : ( ولدت امرأة من جيران حبيب غلاما جميلا أقرع الرأس قال : فجاء به أبوه إلى حبيب بعدما كبر الغلام وأتت عليه إثنتا عشرة سنة فقال : يا أبا محمد ألا ترى إلى ابني هذا وإلى جماله وقد بقي أقرع الرأس كما ترى ؟ فادْعُ الله له فجعل حبيب يبكي ويدعو للغلام ويمسح بالدموع رأسه قال : فو الله ما قام بين يديه حتى اسود رأسه من أصول الشعر فلم يزل بعد ذلك الشعر ينبت حتى صار كأحسن الناس شعرا (مجابوا الدعوة)
அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களை ஒருவன் திட்டினான். அவனை ஸஃது ரழி தடுத்தும் கேட்கவில்லை. உனக்கு எதிராக துஆ செய்வேன் என்று எச்சரித்தும் அவன் கேட்கவில்லை. இறுதியில் அவனுக்கு எதிராக ஸஃது ரழி அவர்கள் துஆ செய்ய, அவனை ஒட்டகம் மிதித்துக் கொன்றது. இனிமேல் யாருக்கும் எதிராக நான் துஆ செய்ய மாட்டேன் என ஸஃது ரழி கூறினார்கள்.
عن سعد رضي الله عنه أن : رجلا نال من علي رضي الله عنه (وفي رواية فنهاه سعد فلم ينته فقال سعد : أدعو عليك فلم ينته) فدعا عليه سعد بن مالك فجاءته ناقة أو جمل فقتله فأعتق سعد نسمة و حلف أن لا يدعو على أحد (مستدرك الحاكم) (مجابوا الدعوة)
இறை நேசர்கள் செல்வச் செழிப்பை விரும்ப மாட்டார்கள்
عن خالد بن الفزر قال : ( كان حيوة بن شريح دعاء من البكائين وكان ضَيِّقَ الحال جِدا فجلستُ إليه ذات يوم وهو مختل وحده يدعو فقلتُ : رحمك الله لو دعوتَ اللهَ فوَسَّعَ عليك في معيشتك قال : فالتفت يمينا وشمالا فلم ير أحدا فأَخَذَ حصاة من الأرض فقال : ( اللهم إِجْعَلْها ذهبا ) قال : فإذا هي والله تبرة في كفه ما رأيت أحسن منها قال : فرمى بها إلَيَّ وقال : ما خَيْرَ في الدنيا إلا الآخرة ثم التفت إليَّ فقال : هو أعلم بما يَصلح عباده فقلتُ : ما أصنع بهذه ؟ قال : اِسْتَنْفِقْها فهَبَتُّهُ والله إِنْ أَراَدَهُ ) (مجابوا الدعوة)
ஹாலித் என்பவர் கூறுகிறார்கள்-ஹயாத் இப்னு ஷூரைஹ் ரஹ் எப்போதும் அழுது துஆ செய்பவர். மிகவும் ஏழையாக இருந்தார். ஒருநாள் அவர் துஆ செய்து கொண்டிருக்கும்போது அருகில் அமர்ந்தேன். பின்பு அவரிடம் நீங்கள் அல்லாஹ்விடம் துஆ செய்தால் உங்களுக்கு செல்வத்தை வழங்குவான் அல்லவா ? என்று கேட்டேன். உடனே அவர் சுற்று முற்றும் திரும்பிப் பார்த்து வேறு யாரும் தம்மை கவனிக்காததை அறிந்தவுடன் அருகில் இருந்த சிறிய கல்லை எடுத்து யாஅல்லாஹ் இதை தங்கமாக மாற்று என்று துஆ செய்தார். உடனே அது அழகான தங்கமாக மாறியது. அதை என்னை நோக்கி எறிந்து இது போன்ற துன்யாவின் அலங்காரங்களில் எந்த நன்மையும் இல்லை. மறுமையின் காரியங்களில் மட்டுமே நன்மை உண்டு. யாருக்கு எது நல்லது என்பதை அல்லாஹ் நன்கு அறிவான் (எனக்கு இந்த ஏழ்மை தான் நல்லது என்பது அல்லாஹ்வின் நாட்டமாக இருக்கலாம்) என்றார்கள். பிறகு நான் அவர்களிடம் இதை வைத்து நான் என்ன செய்யட்டும் என்று கேட்க, இதை உனக்கு அன்பளிப்பாக தந்து விட்டேன். அதை நீ செலவு செய்து கொள். என்று கூறினார். அவருக்கு அந்த தங்கத்தின் மீது எந்த நாட்டமும் இல்லை.
படிப்பினை – எத்தனையோ நல்லோர்கள் தம் மனதில் நாம் ஐவேளை தொழுகிறோம். அமல் செய்கிறோம். வியர்வை சிந்தி உழைக்கிறோம் அவ்வாறிருந்தும் அல்லாஹ் நம்மை ஏழ்மையில் வைத்துள்ளானே என்ற எண்ணம் சில நேரம் வரும். இந்த எண்ணம் வராமல் இருக்க ஒரு குட்டிக் கதை- ஒரு தாய்க்கு மூன்று ஆண் மக்கள். மூவரும் வேலைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் ஒரு உறவினர் அப்பெண்ணின் வீட்டுக்கு வருகிறார். வந்தவரை உபசரித்து அவருக்காக பிரியாணி தயார் செய்கிறார். இந்நிலையில் மூத்த மகன் மதிய உணவுக்காக வீட்டுக்கு வருகிறான். விருந்தாளியுடன் சேர்த்து அவனுக்கும் பிரியாணியை அப்பெண் பரிமாறுகிறார். சற்று நேரத்தில் இன்னொரு மகனும் வருகிறான். அவன் எனக்கும் பிரியாணி வேண்டும். என்கிறான். ஆனால் அந்த தாய் “உனக்கு ரசம் சோறு தான்” என்று கூறி அவனுக்காக தனியாக சமைத்து வைத்த ரசம், சோற்றைப் பரிமாறுகிறார். சற்று நேரத்தில் மூன்றாவது மகன் வருகிறான். அவனும் வந்து பிரியாணி கேட்க, உனக்கு பிரியாணி கிடையாது என்கிறார். ரசம் சோறாவது தரும்படி கேட்க, அதுவும் உனக்கு இல்லை என்று கூறி வெறும் கஞ்சியை கொடுத்து அனுப்புகிறார். மூவரும் சென்ற பின் விருந்தாளி அப்பெண்ணிடம் கேட்டார். மூவரும் உன்னுடைய பிள்ளைகள் தானே. அவ்வாறிருக்க மூத்த மகனுக்கு மட்டும் பிரியாணி தந்தாய். இரண்டாது மகனுக்கு வெறும் ரசம் சோறு தந்தாய். மூன்றாவது மகனுக்கு அது கூட இல்லை. வெறும் கஞ்சியைக் கொடுத்து அனுப்பி விட்டாய். ஏன் இந்த பாரபட்சம் என்று கேட்க அந்த தாய் கூறினார். என் மூத்த மகன் உடல் நலத்தோடு இருக்கிறான். அதனால் அவனுக்கு பிரியாணி தந்தேன். இரண்டாம் மகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு இன்னும் முழுமையாக குணமாகவில்லை. அதனால் அவனுக்கு ரசம் சோறு தந்தேன். என்றார். உடனே விருந்தாளி சரி... அது போகட்டும். மூன்றாம் மகனுக்கு ஏன் வெறும் கஞ்சி..? என்று கேட்க, அந்த தாய் சொன்னார். அவனுக்கு பேதி ஏற்பட்டு இன்று தான் இனிமா கொடுக்கப்பட்டது. கெட்டியான உணவு அவனுக்கு ஆகாது. அதனால் அவனுக்கு கஞ்சியைக் கொடுத்தேன் என்றார். அந்த தாயின் பாசத்தைக் கண்டு அவர் நெகிழ்ந்து போனார். இதேபோல் தான் அல்லாஹ் தன்னுடைய நல்லடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான். யாரை எப்படி வாழ வைத்தால் அவர்களுக்கு நல்லது என்றிருக்குமோ அப்படி வைப்பான்
தம்மை வழி கெடுக்க முயன்ற ஷைத்தானின் சதியிலிருந்து முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் தப்பித்த சம்பவம்
مما اشتهر عن الشيخ عبد القادر رحمه الله مما يدل على فقهه وثبات قدمه في العلم ما حكاه عنه ابنه موسى كما قال ابن رجب الحنبلي رحمه الله: (سمعتُ والدي يقول: خرجتُ في بعض سياحاتي إلى البرية9، ومكثْتُ أياماً لا أجدُ ماءً، فاشتد بي العطش، فأَظَلَّتْنِي سحابةٌ نزلَ عليَّ منها شيء يشبه الندى10 فترويتُ منه، ثم رأيتُ نوراً أضاء به الأفق، وبَدَتْ لي صورة، ونوديتُ منها: يا عبد القادر أنا ربُّك، وقد أحللتُ لك المحرمات، أوقال: ما حرمتُ على غيرك فقلت: أعوذُ بالله من الشيطان الرجيم اِخْسَأْ11 يا لَعِيْنْ؛ فإذا ذلك النور ظلامٌ، وتلك الصورة دخانٌ، ثم خاطبني وقال: يا عبد القادر نجوتَ مِنِّي بعلمك بحكم ربك وفِقْهِك في أحوال منازلاتك، ولقد أضللتُ بمثل هذه الواقعة سبعين من أهل الطريق فقلتُ: لربي الفضل والمنة؛ قال: فقيل له: كيف علمتَ أنه شيطان؟ قال: بقوله: وقد أحللتُ لك المحرمات) (من كتب ابن تَيْمِيَّة) (من اعتقد أن شيخاً يحلُّ له ما حرَّم الله، أويرفع عنه ما أوجبه على خلقه كالصلاة مثلاً فقد كفر.) موسوعة الرد على الصوفية
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் வாழ்வில் நடைபெற்ற பிரபலமான சம்பவங்களில் ஒன்றை அவர்களே சொல்லிக் காட்டினார்கள். நான் என்னுடைய பயணங்களில் ஒரு பயணத்தில் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டேன். அதே நிலையில் கடற்கரையில் நான் இறை தியானத்தில் இருந்த போது எனக்கு முன்னால் மழை மேகம் போன்ற ஒரு காட்சி தோன்றியது. அதிலிருந்து இதமான காற்றை உணர்ந்தேன். பின்பு ஆகாயத்தையே நிரப்பும் அளவுக்கு பெரும் ஒளியை நான் பார்த்தேன். அதிலிருந்து ஒரு உருவம் தோன்றி அப்துல் காதிரே! நான்தான் உன்னுடைய ரப்பு. மற்றவர்களுக்கு ஹராமாக்கப்பட்ட விஷயங்களையெல்லாம் உமக்கு நான் ஹலாலாக்கி விட்டேன். என்று கூறியது. உடனே நான் இது ஷைத்தானின் வேலை என்று எண்ணி சுதாரித்துக் கொண்டு அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் சாபத்திற்குரியவனே! இழிவடைந்து விடு! என்றேன். ஆகாயத்தையே நிரப்பும் அளவுக்கு இருந்த அந்த ஒளி உடனே மறைந்து இருளாகி விட்டது. அந்த உருவமும் புகையாக மாறி விட்டது. பின்பு அவன் என்னை நோக்கி அப்துல் காதிரே! உம்முடைய கல்வி ஞானத்தாலும் உம்முடைய உயர்வான பல்வேறு அந்தஸ்துகளைக் கொண்டும் என்னிடமிருந்து தப்பித்துக் கொண்டீர். நான் இது போன்ற யுக்தியை பயன்படுத்தி எழுபது தரீகத் வாதிகளை நான் கெடுத்துள்ளேன். (ஆனால் நீர் உன்னுடைய திறமையால் தப்பித்துக் கொண்டீர்)என்று பெருமையை உண்டாக்கும் வகையில் அடுத்த சூழ்ச்சியை ஆரம்பித்தான். அப்போதும் நான் சுதாரித்துக் கொண்டு (என்னிடம் எவ்வித பெருமையும் இல்லை. எவ்வித திறமையும் இல்லை) என்னுடைய ரப்புக்கே அனைத்துப் பெருமையும் உண்டு. என்று கூறினேன்.
இவ்வாறு அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் கூறிய போது அவர்களிடம் நீங்கள் எப்படி அவனை ஷைத்தான் என்று அடையாளம் கண்டு கொண்டீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள். எப்போது அவன் மற்றவர்களுக்கு ஹராமாக்கப்பட்ட விஷயங்களை உமக்கு நான் ஹலாலாக்கி விட்டேன் என்று கூறினானோ உடனே நான் சுதாரித்துக் கொண்டேன் என்றார்கள். (இப்படி ஒரு விஷயம் அல்லாஹ்விடமிருந்து ஏற்படுவதாக இருந்தால் முதலில் நபி ஸல் அவர்களுக்கு அந்த சலுகை வழங்கப்பட்டிருக்கும் என்பது ஆலிம்களுக்கு மட்டுமே தெரியும்.)
படிப்பினை- மார்க்கத்தில் ஹராம் என்று கூறப்பட்டதை இன்றைக்கு யாரும் ஹலாலாக்க முடியாது என்றிருக்க சிலர் ஹராமை ஹலால் என்று ஃபத்வா கொடுக்கின்றனர். அவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.
மற்றொரு படிப்பினை- மார்க்க ஞானம் உள்ளவராகவும் அதேநேரத்தில் பணிவை மேற்கொள்பவராகவும் இருக்கும் மார்க்க அறிஞரை ஷைத்தான் அவ்வளவு சீக்கிரத்தில் வழி கெடுக்க முடியாது. எழுபது பேரை அவன் வழி கெடுத்ததாக அவனே கூறினான் என்றால் ஒன்று அவர்களிடம் பணிவு இல்லாமல் இருந்திருக்க வேண்டும். அல்லது மார்க்க ஞானம் இல்லாமல் இருந்திருக்க வேண்டும்.
عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقِيهٌ وَاحِدٌ أَشَدُّ عَلَى الشَّيْطَانِ مِنْ أَلْفِ عَابِدٍ (سنن ابن ماجة
துஆ ஏற்றுக் கொள்ளப்படும் புனிதராக முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ் அவர்கள் ஆயிருந்தார்கள்.
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ் அவர்களின் காலத்தில் அபுல் முழஃப்பர் என்பவர் இருந்தார், அவர் எப்போது வியாபார விஷ.மாக வெளியூர் சென்றாலும் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ் அவர்களிடம் சொல்லிச் செல்வது வழக்கம். ஒருமுறை அவ்வாறு அவர் செல்லும்போது முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ் அவர்களிடம் சொல்லி விட்டுச் செல்வதற்காக வந்தார், அப்போது முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ் அவர்கள் நீங்கள் இப்போது செல்ல வேண்டாம் இப்பயணம் முடித்து விட்டு நீங்கள் திரும்பும்போது உங்களுக்கு ஆபத்து வரலாம் என எச்சரித்தர்கள் அவர் கவலையுடன் திரும்பிய போது வழிய.ல் ஹம்மாத் ரஹ அவர்களை சந்தித்தார்கள் கவலைக்கு காரணம் கேட்ட போது அபுல்முழஃஃப்பர் அவர்கள் காரணத்தைக் கூற, அதற்கு ஹம்மாத் ரஹ் அவர்கள் நீங்கள் சென்று வாருங்கள். அல்லாஹ்வின் விதி அப்படி இருந்தாலும் அவன் உங்களைப் பாதுகாப்பான் என்று கூறி அனுப்பினார்கள், அவர் சென்று சரக்குகளை விற்பனை செய்து விட்டு பணப்பையுடன் திரும்பும்போது வழி.யில் சிறுநீர் கழிக்கச் செல்லும்போது ஒரு இடத்தில் பையை வைத்தார் ஆனால் அதை எடுக்க மறந்து விட்டார். அதை தாண்டி சற்று தூரம் வந்து ஓரிடத்தில் ஓய்வெடுத்த போது அயர்ந்து தூங்கினார். அதில் ஒரு கனவு கண்டார் தன்னோடு பல வியாபாரிகள் பணப்பைகளுடன் இருப்பது போலவும் அவற்றைப் பறிக்க கொள்ளைக் கூட்டம் ஆயதங்களுடன் வருவது போலவும் கனவு கண்டார். அதில் ஒரு கொள்ளையன் இவருக்கு அருகில் வந்து இவரைக் கழுத்தில் தாக்கி இவரிடமிருந்து பணப்பையைப் பறித்தான். அத்துடன் கனவு கலைந்தது. ஆனால் அருகில் யாரும் இல்லை. ஆனால் கழுத்தில் மட்டும் காயத்தின் தழும்பு இருந்த து. அப்போது தான் மறந்த பணப்பையின் நினைவு வந்தது, உடனே அந்த இடத்திற்குச் சென்றபோது அது வைத்த இடத்தில் அப்படியே இருந்தது. அவர் ஊர் திரும்பியவுடன் வழியில் ஹம்மாத் ரஹ் அவர்களைச் சந்தித்து நடந்த விஷயத்தைக் கூறியவுடன் ஹம்மாத் ரஹ் அவர்கள் கறினார்கள் நீங்கள் கனவில் பார்த்த அத்தனை விஷயங்களும் நிஜத்தில் நடைபெற வேண்டியவை ஆனால் அவையனைத்தும் அல்லாஹ் கனவில் நிகழ்த்தி அல்லாஹ் உங்களைப் பாதுகாத்துள்ளான் இதற்குக் காரணம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ் அவர்கள் தான். அவர்கள் நீங்கள் சென்றதை அறிந்த தில் இருந்து உங்களுக்காக எழுபது தடவை துஆ செய்தார்கள். அதனால் நீங்கள் காப்பாற்றப்பட்டீர்கள் என்றார்கள்
இறையச்சம், பேணுதல், பித்அத், துஆ பற்றி முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானீ (ரஹ்) அவர்களின் உபதேசம்
மார்க்கத்தில் பித்அத்களை உருவாக்காதே ! துஆ ஏற்கப்படுவது தாமதாகுவதைப் பற்றி அவன் மீது குறை கூறாதே நீ துஆ செய்வதில் சோர்வடையாதே. இதனால் உனக்கு லாபம் இல்லா விட்டாலும் கூட நஷ்டம் இல்லை. உன் துஆவை அல்லாஹ் உடனடியாக இவ்வுலகில் ஏற்கா விட்டாலும் மறுமையில் அதற்குரிய வெகுமதியை உனக்கு தரவே செய்வான். மாக்க்கத்தில் விலக்கப்பட்டவைகளை விட்டும் ஒதுங்க வேண்டியது உன்னுடைய கடமையாகும். இல்லையேல் அழிவுக்கயிறு உன்னை சுற்றிக் கொள்ளும் பாவத்தில் அகப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆகுமானவற்றைக் கூட பத்தில் ஒன்பது பங்கை விட்டு நாங்கள் விலகிக் கொள்வதுண்டு என்று நபித்தோழர்களான உமர் ரழி, அபூபக்ர் ரழி ஆகியோர் கூறியுள்ளார்கள்.
துஆ ஏற்கப்படாதது ஏன் என்று வினவியவருக்கு இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் அவர்கள் கூறிய அற்புத பதில்
حُكي إنّ إبراهيم بن أدهم قيل له ما بالنا ندعوا الله فلا يستجيب لنا؟ قال لأنّكم عرفتم الله فلم تطيعوه وعرفتم الرسول فلم تتبعوا سنّته وعرفتم القرآن فلم تعملوا بما فيه وأكلتم نعمة الله فلم تؤدّوا شكرها وعرفتم الجنّة فلم تطلبوها وعرفتم النّار فلم تهربوا منها وعرفتم الشيطان فلم تحاربوه ووافقتموه وعرفتم الموت فلم تستعدّوا له ودفنتم الأموات فلم تعتبروا بهم وتركتم عيوبكم واشتغلتم بعيوب الناس (قرطبي
عن مشرف بن أبان : حدثني صالح بن سليمان أ وغيره قال : ( احتاج إبراهيم بن أدهم إلى دينار وكان على شاطىء البحر فدعا الله عز و جل فتشرعت السمك في فم كل واحدة منهن دينار واحد فأخذ دينارا واحدا )
عن عصام بن زيد - رجل من مزينة - قال : ( كان رجل من الخوارج يغشى مجلس الحسن فيؤذيهم فقيل للحسن : يا أبا سعيد ألا تكلم الأمير حتى يصرفه عنا ؟ قال : فسكت عنهم قال : فأقبل ذات يوم و الحسن جالس مع أصحابه فلما رآه قال : ( اللهم قد علمت أذاه لنا فاكفناه بماشئت ) قال : فخر الرجل والله من قامته فما حل إلى أهله إلا ميتا على سرير فكان الحسن إذا ذكره بكى
ஹஸன் பஸரீ ரஹ் அவர்களின் மஜ்லிஸுக்கு வந்து ஒருவர் எப்போதும் தொந்தரவு தந்து கொண்டிருந்தார். ஹஸன் பஸரீ ரஹ் அவர்களைத் திட்டுவார் அப்போது ஹஸன் பஸரீ ரஹ் அவர்களிடம் மற்றவர் இந்த அளவுக்கு உங்களை திட்டுகிறார். அவரைப் பற்றி நீங்கள் அரசரிடம் புகார் கூறக் கூடாதா என்று கேட்க இமாம் அவர்கள் அமைதியாக இருந்து விட்டனர். மற்றொரு முறை அந்த மனிதர் சபைக்கு வந்து மிகவும் நோவினைப் படுத்திய போது இமாம் அவர்கள் அவரை விட்டும் பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் துஆ செய்ய உடனே அந்த மனிதர் கீழே விழுந்தார். அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்குள் அவர் இறந்து விட்டார். நல்லோர்களின் சாபம் உடனே பலிக்கும்
عن الحكم بن هشام الثقفي قال : ( أخبرت أن رجلا أخذ أسيرا فألقي في جب ووضع على رأس الجب صخرة فكتب فيها : ( سبحان الملك الحق القدوس سبحان الله وبحمده ) فأخرج من الجب من غير أن يكون أخرجه إنسان
கொடிய அரசனிடமிருந்து காப்பாற்றும்படி துஆ செய்த இளைஞர்கள் நுழைந்த குகை பிறரின் கண்களுக்கு மாயமானதையும், அக்குகைக்குள் 300 வருடங்கள் அவர்களை தூங்க வைத்த சம்பவத்தையும் குர்ஆனில் கஹ்ஃப் சூராவில் பார்க்கலாம்
ஹஜ்ஜாஜுக்கு எதிராக ஸயீத் ரழி அவர்கள் செய்த துஆவை அல்லாஹ் உடனே ஏற்றுக் கொண்டான்
ثم دعا الحجاج بآلات اللهو، فضربت بين يدي سعيد فبكى سعيد. فقال الحجاج: ويلك يا سعيد. فقال سعيد: الويل لمن زحزح عن الجنة، وأدخل النار. فقال: يا سعيد أي قتلة تريد أن أقتلك بها؟ قال: اختر لنفسك يا حجاج، فوالله لا تقتلني قتلة إلا قتلك الله مثلها في الآخرة. قال: فتريد أن أعفو عنك؟ قال: إن كان العفو من الله فنعم، وأما منك أنت فلا. فقال: اذهبوا به فاقتلوه. فلما أخرج من الباب ضحك، فأخبر الحجاج بذلك، فأمر برده فقال: ما أضحكك وقد بلغني أن لك أربعين سنة لم تضحك؟ قال: ضحكت عجباً من جراءتك على الله، ومن حلم الله عليك، فأمر بالنطع فبسط بين يديه، وقال: اقتلوه. فقال سعيد: " كل نفس ذائقة الموت " . ثم قال: " وجهت وجهي للذي فطر السموات والأرض حنيفاً مسلماً وما أنا من المشركين " . قال: وجهوه لغير القبلة. فقال سعيد: " فأيما تولوا فثم وجه الله " فقال: كبوه لوجهه. فقال: " منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى " فقال الحجاج: اذبحوه. فقال سعيد: أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمداً عبده ورسوله. ثم قال: اللهم لا تسلطه على أحد يقتله بعدي. فذبح على النطع رحمة الله تعالى عليه، فكان رأسه يقول بعد قطعه: لا إله إلا الله مراراً. وذلك في شعبان سنة خمس وتسعين. وكان عمر سعيد تسعاً وأربعين سنة،(حياة الحيوان– البداية والنهاية
قال عون ابن أبي شداد العبدي ... وبلغنا أن الحجاج عاش بعده خمسة عشر ليلة ووقع الاكلة في بطنه فدعا بالطبيب لينظر اليه فنظر اليه ثم دعا بلحم منتن فعلقه في خيط ثم أرسله في حلقه فتركها ساعة ثم استخرجها وقد لزق به من الدم فعلم أنه ليس بناج وبلغنا أنه كان ينادي بقية حياته مالي ولسعيد بن جبير كلما أردت النوم أخذ برجلي (حلية الاولياء)
ஹஜ்ஜாஜ் கடைசியாக கொலை செய்த து ஸயீத் இப்னு ஜுபைர் ரழி அவர்களைத் தான். உன்னை எப்படிக் கொல்லட்டும் என ஸயீத் ரழி அவர்களிடமே அவன் கேட்க, அது உன் இஷ்டம். ஆனால் அல்லாஹ் மீது சத்தியமாக நீ என்னை எப்படிக் கொன்றாலும் அல்லாஹ் பதிலுக்கு உன்னை மறுமையில் கொல்லுவான். என்று கூறியபோது, நான் உன்னை மன்னிப்பதை விரும்புகிறாயா என்று கேட்க, மன்னிப்பு அல்லாஹ்விடமிருந்து என்றால் அது எனக்கு சந்தோஷம். உன் மன்னிப்பு எனக்குத் தேவையில்லை என்றார்கள். பிறகு ஹஜ்ஜாஜ் ஸயீத் ரழி அவர்களைக் கொல்ல உத்தரவிட்டான். ஸயீத் ரழி சிரித்தார்கள். உடனே ஹஜ்ஜாஜ் 40 வருடங்களாக சிரித்த தில்லை என்று உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். எதற்காக நீ இப்போது சிரித்தாய் என்று கேட்க, அல்லாஹ்வுக்கு எதிராக உனது திமிரையும், அல்லாஹ் உன்னை இன்னும் விட்டு வைத்திருப்பதையும் எண்ணி ஆச்சரியத்தால் சிரிக்கிறேன். என்றார்கள். பிறகு அவர்களைக் கொல்வதற்காக படுக்க வைக்கப்பட்ட போது ஒவ்வொரு ஆத்மாவும் மவ்த்தை அனுபவித்தே தீரும் என்றார்கள். அப்போது கிப்லாவின் பக்கம் முகம் இருந்தது. அந்த சந்தோஷத்தில் ஸயீத் ரழி வஜ்ஜஹ்து ஓதினார்கள். உடனே ஹஜ்ஜாஜ் அவரின் முகத்தை கிப்லாவை விட்டும் திருப்புங்கள் என்றான். அவ்வாறு திருப்ப ப்பட்ட போது என்ற ஆயத்தை ஓதினார்கள். அவரைக் குப்புறப் படுக்க வையுங்கள் என்றான் ஹஜ்ஜாஜ். அப்போது فأيما تولوا فثم وجه الله
என்ற ஆயத்தை ஸயீத் ரழி அவர்கள் ஓதினார்கள். பின்பு ஸயீத் ரழி அவர்கள் منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى "
ஷஹீதாக்கப்பட்டார்கள். அவர்களின் நாவு கடைசி நேரத்தில் கலிமாவை உச்சரித்த து மட்டுமன்றி, அவர்களின் தலையைத் துண்டாக்கிய பின்பும் அவர்களின் தலை மட்டும் கலிமாவை மொழிந்து கொண்டே இருந்தது. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் ஸயீத் ரழி அவர்கள் கடைசி நேரத்தில் யாஅல்லாஹ் எனக்குப் பின் வேறு யார் மீதும் இவனை நீ சாட்டி விடாதே என்று துஆ செய்தார்கள். அதை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். இதற்குப் பின் 15 இரவுகள் மட்டுமே ஹஜ்ஜாஜ் வாழ்ந்தான். இந்த 15 நாட்களும் தூங்கவே இல்லை. படுத்தால் என் காலைப் பிடித்து ஸயீத் இழுப்பது போன்றிருக்கிறது என்பான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக