17-12-2021 11-05-1443 |
|
بسم
الله الرحمن الرحيم நல்லோர்களைப் பின்பற்றுதல் (கடந்த வாரத் தொடர்) |
|
https://chennaijamaathululama.blogspot.com
என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம் |
ஆட்டு மந்தைக் கோட்பாடு என்ற தலைப்பில் கடந்த வாரத்
தலைப்பைப் பார்த்தோம். அடிப்படையில்லாத விஷயங்களில் கண்ட கண்ட கலாச்சாரங்களை கண்மூடித்தனமான
பின்பற்றுதல் தான் ஆட்டு மந்தைக் கோட்பாடு என்று அறியப்படும். ஆனால் அடிப்படையுள்ள
விஷயங்களில் நல்லோர்களைப் பின்பற்றுவது இதில் கட்டுப்படாது.
அடிப்படையில்லாமல்
பின்பற்றியவர்கள் தான் நாளை மறுமையில் உன்னால் நான் கெட்டுப் போனேன் என
ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வர்.
وَلَوْ تَرَى إِذِ
الظَّالِمُونَ مَوْقُوفُونَ عِنْدَ رَبِّهِمْ يَرْجِعُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ
الْقَوْلَ يَقُولُ الَّذِينَ اسْتُضْعِفُوا لِلَّذِينَ اسْتَكْبَرُوا لَوْلَا
أَنْتُمْ لَكُنَّا مُؤْمِنِينَ (31) قَالَ الَّذِينَ اسْتَكْبَرُوا لِلَّذِينَ
اسْتُضْعِفُوا أَنَحْنُ
صَدَدْنَاكُمْ عَنِ الْهُدَى بَعْدَ إِذْ جَاءَكُمْ بَلْ كُنْتُمْ مُجْرِمِينَ
(32) سبا
ஸஹாபாக்களைப் பின்பற்றுவது, மேலும் நபி ஸல் அவர்களால் சிறந்த காலம் என்று
வர்ணிக்கப்பட்ட பொற்காலத்தைச் சார்ந்தவர்களான
நான்கு இமாம்களைப் பின்பற்றுவது, இறைநேசர்களைப் பின்பற்றுவது,
ஷைகுமார்களைப் பின்பற்றுவது, தொழுகையில் இமாமைப் பின்பற்றுவது ஆகியவை
அடிப்படையுடன் கூடிய பின்பற்றுதலாகும்.
وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ
مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ
رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي
تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
(100) التوبة - أَمْ كُنْتُمْ شُهَدَاءَ
إِذْ حَضَرَ يَعْقُوبَ الْمَوْتُ إِذْ قَالَ لِبَنِيهِ مَا تَعْبُدُونَ مِنْ
بَعْدِي قَالُوا نَعْبُدُ إِلَهَكَ وَإِلَهَ آبَائِكَ إِبْرَاهِيمَ
وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ إِلَهًا وَاحِدًا وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ (133)البقرة - وَالَّذِينَ آمَنُوا وَاتَّبَعَتْهُمْ
ذُرِّيَّتُهُمْ بِإِيمَانٍ أَلْحَقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَا أَلَتْنَاهُمْ
مِنْ عَمَلِهِمْ مِنْ شَيْءٍ كُلُّ امْرِئٍ بِمَا كَسَبَ رَهِينٌ (21)الطور
பிரயாணம்
என்றால் கூட நமக்குள் ஒருவரை அமீராக ஆக்கி அவரின் ஆலோசனையைப் பின்பற்ற மார்க்கம்
வலியுறுத்துகிறது.
عَنْ
نَافِعٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنهم أَنَّ رَسُولَ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا كَانَ ثَلَاثَةٌ فِي
سَفَرٍ فَلْيُؤَمِّرُوا أَحَدَهُمْ قَالَ نَافِعٌ فَقُلْنَا لِأَبِي سَلَمَةَ
فَأَنْتَ أَمِيرُنَا (ابوداود
வேறு
எந்த மதத்திலும் இல்லாத வகையில் ஒரு இமாமைப் பின்பற்றி ஒரே சீராக தொழுவது
நம்முடைய சிறப்பம்சம்
عَنْ أَبِي هُرَيْرَةَ
قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا جُعِلَ
الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا وَإِذَا قَرَأَ
فَأَنْصِتُوا وَإِذَا قَالَ{ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ }
فَقُولُوا آمِينَ وَإِذَا رَكَعَ فَارْكَعُوا وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ
حَمِدَهُ فَقُولُوا اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ وَإِذَا سَجَدَ
فَاسْجُدُوا وَإِذَا صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا أَجْمَعِينَ (ابن ماجة
நல்லோர்களைப்
பின் தொடர்ந்து சென்ற நாய்க்குக் கூட நற்பாக்கியம் கிடைத்தது.
سَيَقُولُونَ ثَلَاثَةٌ
رَابِعُهُمْ كَلْبُهُمْ وَيَقُولُونَ خَمْسَةٌ سَادِسُهُمْ كَلْبُهُمْ رَجْمًا
بِالْغَيْبِ وَيَقُولُونَ سَبْعَةٌ وَثَامِنُهُمْ كَلْبُهُمْ قُلْ رَبِّي أَعْلَمُ
بِعِدَّتِهِمْ (22)الكهف
وقال
كعب: مروا بكلب فنبح لهم فطردوه فعاد فطردوه مرارا، فقام الكلب على رجليه ورفع
يديه إلى السماء كهيئة الداعي، فنطق فقال: لا تخافوا مني أنا أحب أحباء الله تعالى..
(قرطبي
குகைவாசிகளான இளைஞர்கள் ஓடியபோது கூடவே சேர்ந்து நாயும் ஓடி வந்தது. அதனை
விரட்டினார்கள்.ஆனால் அது மீண்டும் பின் தொடர்ந்து வந்த து. இறுதியில் அது தன்
கைகளை வானத்தின் பால் உயர்த்தி துஆக் கேட்ட நிலையில் அவர்களிடம் நான் அல்லாஹ்வின்
நேசர்களை நேசிக்கிறேன் எனவே உங்களைப் பின் தொடர்கிறேன் என்று பேசியது. அவர்கள்
அந்த நாயையும் தங்களுடன் இணைத்துக் கொண்டார்கள்.அவர்கள் தூங்கிய 300 வருடங்கள்
அந்த நாயும் தூங்கியது. அவர்கள் விழித்த போது அந்த நாயும் விழித்தது.
முஸ்லிம்களுக்கென ஒழுங்கான ஒரு தலைமை அமைந்து
விட்டால் அதைப் பின்பற்றியே தீர வேண்டும். இல்லா விட்டால் கடும் விளைவை
முஸ்லிம்கள் சந்திப்பார்கள்.
عن
حُذَيْفَةَ بْنَ الْيَمَانِ يَقُولُ كَانَ النَّاسُ يَسْأَلُونَ رَسُولَ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْخَيْرِ وَكُنْتُ أَسْأَلُهُ عَنْ
الشَّرِّ مَخَافَةَ أَنْ يُدْرِكَنِي فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا كُنَّا
فِي جَاهِلِيَّةٍ وَشَرٍّ فَجَاءَنَا اللَّهُ بِهَذَا الْخَيْرِ فَهَلْ بَعْدَ
هَذَا الْخَيْرِ مِنْ شَرٍّ قَالَ نَعَمْ قُلْتُ وَهَلْ بَعْدَ ذَلِكَ الشَّرِّ
مِنْ خَيْرٍ قَالَ نَعَمْ وَفِيهِ دَخَنٌ قُلْتُ وَمَا دَخَنُهُ قَالَ قَوْمٌ
يَهْدُونَ بِغَيْرِ هَدْيِي تَعْرِفُ مِنْهُمْ وَتُنْكِرُ قُلْتُ فَهَلْ بَعْدَ
ذَلِكَ الْخَيْرِ مِنْ شَرٍّ قَالَ نَعَمْ دُعَاةٌ إِلَى أَبْوَابِ جَهَنَّمَ مَنْ
أَجَابَهُمْ إِلَيْهَا قَذَفُوهُ فِيهَا قُلْتُ يَا رَسُولَ اللَّهِ صِفْهُمْ
لَنَا فَقَالَ هُمْ مِنْ جِلْدَتِنَا وَيَتَكَلَّمُونَ بِأَلْسِنَتِنَا قُلْتُ فَمَا
تَأْمُرُنِي إِنْ أَدْرَكَنِي ذَلِكَ قَالَ تَلْزَمُ جَمَاعَةَ الْمُسْلِمِينَ
وَإِمَامَهُمْ قُلْتُ فَإِنْ لَمْ يَكُنْ لَهُمْ جَمَاعَةٌ وَلَا إِمَامٌ قَالَ
فَاعْتَزِلْ تِلْكَ الْفِرَقَ كُلَّهَا وَلَوْ أَنْ تَعَضَّ بِأَصْلِ شَجَرَةٍ
حَتَّى يُدْرِكَكَ الْمَوْتُ وَأَنْتَ عَلَى ذَلِكَ (بخاري
எல்லோரும் நடைபெறப்போகும் நன்மையைப்
பற்றி நபி ஸல் அவர்களிடம் கேட்டார்கள். ஆனால் நான் நடைபெறப்போகும் தீமையைப் பற்றி
நபி ஸல் அவர்களிடம் கேட்டேன். அது என்னை அடைந்து விடக்கூடாது என்பதற்காக அவ்வாறு
கேட்டேன். அப்போது நபி ஸல் ஆம் எனக்குப்
பின்னால் மக்களை நரகத்துடைய வாசல்களின்
பக்கம் அழைக்கக்கூடிய ஒரு கூட்டம் தோன்றும். அவர்களுக்கு பதில் அளிப்பவர்களை அவர்கள் நரகின்
படுகுழியில் தள்ளி விடுவார்கள். என்று கூறினார்கள்.. பின்பு நான் அவர்களை
வர்ணித்துக் காட்டுங்கள் என்றேன். அதற்கு நபி ஸல் அவர்கள் அது நம்முடைய இனம்
தான். நம்முடைய பாஷை பேசுபவர்கள்
தான். என்றார்கள். பின்பு நான் நபி ஸல்
அவர்களிடம் அந்த நிலையை நான் அடைந்தால் நான் என்ன செய்யட்டும் என்று கேட்க, அதற்கு
நபி ஸல் அவர்கள் முஸ்லிம்களின்
ஜமாஅத்தையும் அதன் தலைமையையும் நீ பற்றிப் பிடித்துக் கொள். (கூட்டமைப்பை விட்டும் இமாமுக்குக் கட்டுப்படுவதை விட்டும் நீ விலகி விடாதே.). அந்த நேரத்தில் ஒழுங்கான தலைமையே இல்லா விட்டால் நீ எந்தக் கூட்டத்துடனும்
சேராமல் ஒதுங்கி விடு. மலை உச்சியில் ஒரு
மரத்தின் கிளையை பற்களால் கடித்துத் தொங்கிய படி வாழ்க்கையை கழித்தாலும் சரி (கீழே விழுந்து குழப்பங்களின்
கூடாரத்தில் சிக்கி விடாதே.. )
நான்கு இமாம்களில்
ஒருவரை தக்லீத் செய்வதின் (பின்பற்றுவதின்) அவசியம் பற்றி...
சிறந்த
காலம் என்று போற்றப்பட்ட காலங்களில்
வாழ்ந்தவர்கள் தான் இமாம்கள் அவர்கள் செய்த ஆய்வுகள் சரியாகத்தான் இருக்கும் என
நம்பி ஆதாரங்களைத் தேடாமல் அவர்களைப் பின்பற்றுவதே தக்லீத்..
عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ
اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَيْرُ
النَّاسِ قَرْنِي ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ (بخاري
குர்ஆன் ஹதீஸ் போதும்
மத்ஹபுகள் வேண்டாம் என்று சொல்பவர்கள் தங்களை அறியாமலேயே ஒரு மத்ஹபைப்
பின்பற்றுகின்றனர். என்ன சந்தேகம்
என்றாலும் தங்களின் தலைவரிடம் சென்று சந்தேகத்தைக் கேட்கின்றனர். அவர் சொல்லும்
விளக்கத்தை அப்படியே ஏற்று அண்ணன் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்று
நம்புகின்றனர். அதையே நாம் கூறும்போது இதே நம்பிக்கையை நபி ஸல் அவர்களால் சிறந்த
காலம் என்று போற்றப்பட்ட காலங்களில்
வாழ்ந்த இமாம்கள் மீது வையுங்கள்
என்கிறோம்.
சஹாபாக்கள்
காலத்தில் இருந்ததா என்று கேட்பவர்களுக்கு
பதில்- புகாரீ
ஷரீஃபில் பின்வரும் ஹதீஸ் இடம்பெற்றுள்ளது. நபி ஸல் அவர்கள் கூறியதை இரண்டு விதமாக
புரிந்து நபித்தோழர்கள் செயல்பட்டபோது இரண்டையும் ஆமோதித்தார்கள்
عَنْ
ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْأَحْزَابِ لَا يُصَلِّيَنَّ أَحَدٌ الْعَصْرَ إِلَّا
فِي بَنِي قُرَيْظَةَ فَأَدْرَكَ بَعْضُهُمْ الْعَصْرَ فِي الطَّرِيقِ فَقَالَ
بَعْضُهُمْ لَا نُصَلِّي حَتَّى نَأْتِيَهَا وَقَالَ بَعْضُهُمْ بَلْ نُصَلِّي
لَمْ يُرِدْ مِنَّا ذَلِكَ فَذُكِرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ فَلَمْ يُعَنِّفْ وَاحِدًا مِنْهُمْ (بخاري) باب صَلاَةِ الطَّالِبِ وَالْمَطْلُوبِ رَاكِبًا
وَإِيمَاءً – كتاب صلاة الخوف
அஹ்ஜாப் போரில் நபி ஸல் அவர்கள் படையை அனுப்பும்போது உங்களில்
எவரும் பனூ குரைழா கோத்திரத்தார் வசிக்கும் இடத்திற்குச் சென்றே தவிர அசர் தொழ
வேண்டாம் என்று கூறி அனுப்பினார்கள். செல்லும் வழியிலேயே அசர் நேரம் வந்து விட்டதால்
(அங்கு
செல்வதற்குள் அசர் முடிந்து விடுமோ என்று சிலர் அஞ்சினர். நபி ஸல் அவர்கள் கூறியது
நாம் சீக்கிரமாக அந்த இடத்தை அடைய வேண்டும் என்பதற்காக இருக்கலாம் என்று எண்ணி)
வழியிலேயே அசர் தொழுது விட்டார்கள். வேறு சிலர் அங்கு சென்ற பின்பே அசர் தொழுதனர்.
நபி ஸல் அவர்கள் அந்த இரு சாராரில் எவரையும்
கண்டிக்கவில்லை. (இரண்டும் சரி தான் என்பது அதற்கு
அர்த்தம்.)
மத்ஹபுகள் உருவானது குர்ஆனில் இருந்து
தான்...
குர்ஆனில் சில இடங்களில் ஒரு அரபி வார்த்தைக்கு இரு விதமான அர்த்தங்கள் இருக்கும். அந்த இரு அர்த்தங்களும்
முரண்பாடானதாகவும் இருக்கும். அத்தகைய
அரபி வார்த்தைகளை அல்லாஹ் பல இடங்களில் கூறியிருப்பது ஏன் என்று சிந்தித்தாலே
போதும். சட்டங்களில் கருத்து வேறுபாடுகள் தவிரக்க முடியாதவை என்பது புரிந்து
விடும்.
وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ ثَلاَثَةَ قُرُوءٍ (البقرة
(228) أي ثلاث حيض وقال بعضهم ثلاثة أطهار
மேற்படி வசனத்தில் குரூஉ என்ற அரபி வார்த்தைக்கு முரண்பாடான
இரு அர்த்தங்கள் உண்டு. இதில் ஒன்று ஹனஃபீ மத்ஹப், மற்றொன்று ஷாஃபிஈ மத்ஹப். இது
எப்படி குர்ஆனுக்கு மாற்றமாக இருக்க முடியும்
எந்த பிரச்சனைகளுக்கான தீர்வை குர்ஆனிலும், ஹதீஸிலும்
நேரடியாக பெற்றுக் கொள்ள முடியவில்லையோ
அத்தகைய பிரச்சினைகளில் குர்ஆனையும், ஹதீஸையும், அடிப்படையாக வைத்து ஆய்வு செய்யும் போது
கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பு. இன்னும் சொல்லப் போனால் இந்த வேலையை மத்ஹப்
மறுப்பாளர்களும் இன்று செய்து கொண்டிருக்கிறார்கள். நவீன பிரச்சினைகளுக்கு அவர்கள்
வெளியிட்ட ஃபத்வா நூல்களில் ஆயிரக்கணக்கான சட்டங்கள் குர்ஆன், ஹதீஸிலிருந்து
நேரடியாக எடுக்கப்பட்டதல்ல. கியாஸ் அடிப்படையில் எடுக்கப்பட்டவை. அப்படியானால்
அதைத் தானே இமாம்களும் செய்தார்கள். அதை ஏன் குறை கூற வேண்டும்.
இமாம் அபூஹனீஃபா ரஹ்
அவர்களிடம் பேணுதல், கொடைத்தன்மை, ஆகியவற்றைப் பற்றி ஷாஃபிஈ இமாம் கூறுவது
நான்கு இமாம்களில் ஒவ்வொருவரும்
ஒருவர் மற்றவர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள்.
وفي تهذيب الكمال عن الإمام
الشافعي الناس عيال على أبي حنيفة في الفقه وعن ابن مبارك ما رأيت أورع من أبي
حنيفة وعن مكي بن إبراهيم كان أعلم أهل زمانه. لما مات صلي عليه ست مرات كثرة
الزحام وعن وكيع قال: كان أبو حنيفة عظيم الأمانة، وكان يؤثر رضا الله تعالى على
كل شىء،- وعن ابن المبارك، قال: قلت لسفيان
الثورى: ما أبعد أبا حنيفة من الغيبة، ما سمعته يغتاب عدوًا له قط، قال: هو والله
أعقل من أن يسلط على حسناته ما يذهب بها. وعن على بن عاصم، قال: لو وزن عقل أبى
حنيفة بعقل نصف أهل الأرض لرجح بهم.
وعن قيس بن الربيع، قال: كان أبو
حنيفة ورعًا، فقيهًا، كثير البر والصلة لكل من لجأ إليه، كثير الأفضال على إخوانه،
وكان يبعث البضائع إلى بغداد فيشترى بها الأمتعة، ويجلب إلى الكوفة، ويجمع الأرباح
من سنة إلى سنة، فيشترى بها حوائج الأشياخ المحدثين وأثوابهم وكسوتهم، وما يحتجون
إليه، ثم يعطيهم باقى الدنانير من الأرباح، ويقول: أنفقوها فى حوائجكم، ولا تحمدوا
إلا الله تعالى، فإنه والله ما يجريه الله لكم على يدى، فما فى رزق الله حول لغيره. (تهذيب الأسماء واللغات
للعلامة أبى زكريا محيي الدين بن شرف النووي)
ஃபிக்ஹ் விஷயத்தில் மக்கள் அனைவரும்
இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்களின் பிள்ளைகள் என இமாம் ஷாஃபிஈ ரஹ் கூறினார்கள்.
இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்களைப் போன்ற
பேணுதலான ஒருவரை நான் கண்டதில்லை என இப்னுல் முபாரக் ரஹ் கூறினார்கள்
அவர்கள் வஃபாத்தான போது இட
நெருக்கடியால் ஆறு தடவை ஜனாஸா தொழுகை நடைபெற்றது.
அவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டுமே குறிக்கோளாக
வைத்திருந்தார்கள். என வகீஃ ரஹ் அவர்கள்
கூறினார்கள்
அவர்கள் வாழ்வில் யாரைப் பற்றியும்
புறம் பேசியதில்லை. என இப்னுல் முபாரக்
ரஹ் கூறினார்கள்
இமாம் அவர்களின் அறிவுத்திறனையும் உலக
மக்களில் பாதிப்பேருடைய அறிவுத் திறனையும்
ஒப்பிட்டால் இமாம் அவர்களின் அறிவுத் திறன் தான் மிஞ்சி நிற்கும் என அலி இப்னு
ஆசிம் ரஹ் அவர்கள் கூறினார்கள்
இமாம் அவர்கள் மிகவும் பேணுதல்
உடையவர்களாக, தன்னை நாடி வருபவர்களுக்கு அதிகம் உதவி செய்பவர்களாக இருந்தார்கள்.
வியாபாரத்தின் மூலமாக கிடைக்கும் இலாபங்களை முஹத்திஸீன்களில் வறியவர்களுக்காக
செலவு செய்வார்கள் என கைஸ் ரஹ் அவர்கள் கூறினார்கள்.
இமாம் அவர்களின் பேணுதலுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு
قال يزيد بن هارون رايته (أي ابا حنيفة رح) جالسا يوما في الشمس عند باب
انسان فقلت له يا ابا حنيفة لو تحولت الي الظل فقال لي علي صاحب هذه الدار دراهم
ولا احب ان اجلس في ظل فناء داره (الابداع)
மேற்படி ஹதீஸின் பொருள் - ஒரு நான் இமாமுல்
அஃழம் ரஹ் அவர்கள் வெயிலில் ஒரு வீட்டின் நிழலருகே அமர்ந்திருந்தார்கள். நான்
அவர்களிடம் (அந்த
வீட்டின்)
நிழலுக்குச் சென்று நீங்கள் அமரலாமே என்றேன். அதற்கு இமாமுல் அஃழம் ரஹ் அவர்கள்
கூறியதாவது அந்த வீட்டுடையவர் என்னிடம் கடனாக வாங்கிய சில திர்ஹங்கள் மீதமுள்ளது.
அதனால் அவரின் வீற்றின் முற்றத்தில் நான் அமர விரும்பவில்லை. (ஏனெனில் அது கூட வட்டியாகி விடுமே என்ற அச்சம்
தான்) என்று பதில் கூறினார்கள் மற்றொரு நேரத்தில் இமாமுல் அஃழம் ரஹ் அவர்களுக்கு கடன்
பாக்கி வைத்திருந்த ஒரு யூதரின் வீட்டை இமாம் அவர்கள் கடந்து செல்லும்போது
அவர்களின் செருப்பில் நஜீஸ் ஆகி விட்டது அதை உதறும்போது அதனுடைய ஒரு துளி அந்த
யூதரின் வீட்டுச் சுவற்றின் மீது பட்டு விட்டது. உடனே இமாம் அவர்கள் மிகவும்
கவலைப்பட்டவராக இப்போது நான் என்ன செய்ய செய்வேன். அந்த நஜீஸை நான் சுரண்டினால்
அந்த வீட்டின் சுண்ணாம்பு மற்றும் காரையின் சில பகுதிகளை நான் பெயர்த்தவனாக ஆகி
விடுவேன். (அந்தக்
காலத்து வீடுகள் அந்த அமைப்பில் தான் இருக்கும்) அதே
வேளையில் அதை நான் அப்படியே விட்டு விட்டால் அடுத்தவரின் வீட்டை அசிங்கப்படுத்திய
குற்றம் என் மீது வந்து விடுமே நான் என்ன செய்யட்டும் என்று புலம்பிய நிலையில்
அவருடைய வீட்டுக் கதவை தட்டுகிறார்கள். அவரோ இமாம் அவர்கள் கடனை வசூல் செய்யத்
தான் வந்துள்ளார் என்று எண்ணி வேகமாக வந்து கதவைத் திறந்து நீங்கள்
சொல்லியிருந்தால் நான் வந்திருக்க மாட்டேனா? என்றார் ஆனால் இமாம் அவர்கள் நான் அதற்கு
வரவில்லை உங்கள் வீட்டுச் சுவற்றை நான் இப்படி அசிங்கம் செய்து விட்டேன் அதை
சுத்தம் செய்யும் வழியை எனக்குக் கூறுங்கள் என்று கூற, அவர் ஆச்சரியமடைந்தவராக “கொஞ்சம் இருங்கள். என் வீட்டை நீங்கள் சுத்தம்
செய்யும் முன்பு நான் என் உள்ளத்தை சுத்தம் செய்ய வேண்டியுள்ளது” என்று கூறி இஸ்லாத்தை ஏற்றார்
இமாம்கள்
ஆய்வு செய்த எதுவும் குர்ஆன் ஹதீஸுக்கு
முரணாக இருந்ததில்லை
ماتتْ
امرأة لبعض أهل العلم، قال: فجاء يحيى بن معين والدورقي. قال: فلم يجدوا امرأة
تغسلها إلا امرأة حائض. قال: فجَاء أحمد بن حنبل، وهم جلوس، فقال: ما شأنكم؟ فقال
أهل المرأة: ليس نجد غاسلة إلا امرأة حَائض، قال: فقال أحمد بن حنبل: أليس تروون
عن النبي صلى الله عليه وسلم " يا عائشة، ناوِليني الْخُمْرَةَ. قَالَتْ: إني
حَائِضٌ، فَقَال: إن حَيْضَتَكِ لَيْسَتْ في يَدَكِ " يجوزُ أن تغسلها. قال:
فخجلوا وبقوا. (: ذيل
طبقات الحنابلة
ஒரு பெண் இறந்து
விட்டார். அந்தப் பெண்ணைக் குளிப்பாட்டுவதற்கு மாதவிடாய் உள்ள ஒரு பெண்ணைத் தவிர
அங்கு யாரும் இல்லை. அப்போது அந்தப் பெண் சம்பந்தப்பட்ட உறவினர்கள் இமாம் அஹ்மத்
இப்னு ஹம்பல் ரஹ் அவர்களிடம் வருகை தந்து மாதவிடாய்ப் பெண் ஜனாஸாவைக் குளிப்பாட்டலாமா என்று கேட்டார். அப்போது
இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹ் அவர்கள் நபி ஸல் அவர்களுடைய ஹதீஸை சுட்டிக்காட்டினார்கள். ஆயிஷா ரழி அவர்கள் மாதவிடாய் நிலையில் இருந்த
போது அவர்களிடம் நபி ஸல் அவர்கள் தொழுகை
விரிப்பை எடுக்கும்படி கூறியபோது நான்
மாதவிடாய் நிலையில் இருக்கிறேன் என அன்னை அவர்கள்
கூற மாதவிடாய் என்பது உன் கையில்
இல்லையே என்று நபி ஸல் கூறினார்கள். அந்த
ஹதீஸை அடிப்படையாக வைத்தே நான் இச்சட்டத்தைக் கூறினேன் என்றார்கள்.
ஒரு குழந்தை தாய் வயிற்றில் அதிக பட்சம் இரண்டு வருடங்கள்
வரை இருக்கலாம் என்ற ஃபிக்ஹ் சட்டத்திற்கு ஆதாரம்
أَنَّ رَجُلًا غَابَ
عَنْ امْرَأَتِهِ سَنَتَيْنِ ثُمَّ قَدِمَ وَهِيَ حَامِلٌ فَهَمَّ عُمَرُ رَضِيَ
اللَّهُ عَنْهُ بِرَجْمِهَا فَقَالَ مُعَاذٌ رَضِيَ اللَّهُ عَنْهُ إنْ يَكُ لَك
عَلَيْهَا سَبِيلٌ فَلَا سَبِيلَ لَك عَلَى مَا فِي بَطْنِهَا فَتَرَكَهَا حَتَّى
وَلَدَتْ وَلَدًا قَدْ نَبَتَتْ ثَنِيَّتَاهُ يُشْبِهُ أَبَاهُ فَلَمَّا رَآهُ
الرَّجُلُ قَالَ ابْنِي وَرَبِّ الْكَعْبَةِ فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَتَعْجَزُ النِّسَاءُ أَنْ يَلِدْنَ مِثْلَ مُعَاذٍ لَوْلَا
مُعَاذٌ لَهَلَكَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ فَقَدْ
وَضَعَتْ هَذَا الْوَلَدَ لِأَكْثَرَ مِنْ سَنَتَيْنِ ثُمَّ أَثْبَتَ نَسَبَهُ
مِنْ الزَّوْجِ (المبسوط
ஒருவர் தன் மனைவியை விட்டும் பிரிந்திருந்து இரண்டு வருடங்கள் கழித்து
திரும்பி வந்தார் அப்போது அந்த மனைவி நிறை
மாத கர்ப்பமாக இருந்தார். உடனே சந்தேகப்பட்ட அவர் உமர் ரழி அவர்களிடம் கூற, கலீபா
உமர் ரழி அவர்கள் அப்பெண்ணை ரஜ்ம் செய்யச் சொன்னார்கள். அப்போது முஆத் ரழி அவர்கள் சற்று பொறுங்கள்
குழந்தை பிறக்கட்டும் பிறகு பார்க்கலாம் என்று கூற, அதை உமர் ரழி ஏற்றார்கள். பிறகு அக்குழந்தை பிறந்த போது
அக்குழந்தை தந்தையின் ஜாடையில் அதாவது இரண்டு வருடங்கள் கழித்து திரும்பி வந்த
கணவரின் ஜாடையில் அப்படியே
இருந்தது. அதைக கண்ட இது சத்தியமாக என்
குழந்தை தான் என்றார். அதன் பின்பு உமர்
ரழி அவர்கள் நிச்சயமாக முஆத் இல்லா
விட்டால் இந்த உமர் நாசமாகி இருப்பார் என்றார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக