வியாழன், 23 டிசம்பர், 2021

நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்

 

24-12-2021

ஜமாதுல் அவ்வல்-19

 

بسم الله الرحمن الرحيم

நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் பற்றிய

இஸ்லாமியக் கண்ணோட்டம்

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

முன்னுரை- ஈஸா அலைஹிஸ்ஸலாம் பிறந்த நாளை கிறிஸ்துமஸ் என்ற பெயரில் அம்மதத்தவர்கள் கொண்டாடும் வேளையில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் பற்றிய உண்மை தகவல் முஸ்லிம்களில் பலருக்கு தெரிவதில்லை. அதனால் கிறிஸ்தவர்களிடம் இது பற்றி தஃவா செய்ய பலருக்கு துணிவு இருப்பதில்லை. இதை கருத்தில் கொண்டு இத்தலைப்பு எடுக்கப்பட்டுள்ளது.            

நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறந்த விதம் பற்றி குர்ஆன் கூறுவது

وَاذْكُرْ فِي الْكِتَابِ مَرْيَمَ إِذِ انْتَبَذَتْ مِنْ أَهْلِهَا مَكَانًا شَرْقِيًّا (16) فَاتَّخَذَتْ مِنْ دُونِهِمْ حِجَابًا فَأَرْسَلْنَا إِلَيْهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا (17) قَالَتْ إِنِّي أَعُوذُ بِالرَّحْمَنِ مِنْكَ إِنْ كُنْتَ تَقِيًّا (18) قَالَ إِنَّمَا أَنَا رَسُولُ رَبِّكِ لِأَهَبَ لَكِ غُلَامًا زَكِيًّا (19) قَالَتْ أَنَّى يَكُونُ لِي غُلَامٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌوَلَمْ أَكُ بَغِيًّا (20) قَالَ كَذَلِكِ قَالَ رَبُّكِ هُوَ عَلَيَّ هَيِّنٌ وَلِنَجْعَلَهُ آيَةً لِلنَّاسِ وَرَحْمَةً مِنَّا وَكَانَ أَمْرًا مَقْضِيًّا (21) فَحَمَلَتْهُ فَانْتَبَذَتْ بِهِ مَكَانًا قَصِيًّا (22) فَأَجَاءَهَا الْمَخَاضُ إِلَى جِذْعِ النَّخْلَةِقَالَتْ يَا لَيْتَنِي مِتُّ قَبْلَ هَذَا وَكُنْتُ نَسْيًا مَنْسِيًّا (23) فَنَادَاهَا مِنْ تَحْتِهَا أَلَّا تَحْزَنِي قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيًّا (24) وَهُزِّي إِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسَاقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا (25) فَكُلِي وَاشْرَبِي وَقَرِّي عَيْنًا فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنْسِيًّا (26) فَأَتَتْ بِهِ قَوْمَهَا تَحْمِلُهُ قَالُوا يَا مَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْئًا فَرِيًّا (27) يَا أُخْتَ هَارُونَ مَا كَانَ أَبُوكِ امْرَأَ سَوْءٍ وَمَا كَانَتْ أُمُّكِ بَغِيًّا (28) فَأَشَارَتْ إِلَيْهِ قَالُوا كَيْفَ نُكَلِّمُ مَنْ كَانَ فِي الْمَهْدِ صَبِيًّا (29) قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ آتَانِيَ الْكِتَابَ وَجَعَلَنِي نَبِيًّا (30) وَجَعَلَنِي مُبَارَكًا أَيْنَمَا كُنْتُ وَأَوْصَانِي بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا (31) وَبَرًّا بِوَالِدَتِي وَلَمْ يَجْعَلْنِي جَبَّارًا شَقِيًّا (32سورة مريم)

மேற்காணும் வசனத்தின் படி ஈஸா அலைஹிஸ்ஸலாம் மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததாக கிறிஸ்தவர்கள் நம்புவது உண்மையல்ல

வயிற்றில் இருக்கும்போதே தவ்ராத்தை கற்றுக் கொண்ட அதிசயம் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு நிகழ்ந்தது

عن أنس رض قال: كان عيسى بن مريم قد درس التوارة وأحكمها وهو في بطن أمه, فذلك قوله: {إِنِّي عَبْدُ اللَّهِ آتَانِيَ الْكِتَابَ وَجَعَلَنِي نَبِيّاً}  قال عكرمة: {آتَانِيَ الْكِتَابَ }أي: قضى أنه  يؤتيني الكتاب فيما قضى (تفسير ابن كثبر ) فقيل هذا الوحي نزل عليه وهو في بطن أمه وقيل لما انفصل من الأم آتاه الله الكتاب والنبوة وأنه تكلم مع أمه وأخبرها بحاله وأخبرها بأنه يكلمهم بما يدل على براءة حالها فلهذا أشارت إليه بالكلام. (تفسير الرازي)

வயிற்றில் இருக்கும்போதே வஹீ இறங்கியது என்று ஒரு அறிவிப்பிலும் மற்றொரு அறிவிப்பில் பிறந்த பின்பு வஹீ இறங்கியது அதைக் கொண்டு தான் அவர்கள் பேசினார்கள் தாயின் பத்தினித்தனத்தை நிரூபித்துக் காட்டினார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.  

தொட்டில் குழந்தையாக இருக்கும் போது பேசியது ஈஸா அலைஹிஸ்ஸலாம் பேசியது அவர்களுக்கு அல்லாஹ் தந்த முஃஜிஸா

மேற்படி வசனத்தில் தொட்டில் குழந்தையாக இருக்கும்போதே நான் அல்லாஹ்வின் அடிமை என ஈஸா நபியை அல்லாஹ் பேச வைத்த காரணம் பிற்காலத்தில் அவரை கடவுளாக்கி விடுவார்கள் என்பதால்..

عَنْ أَبِي هُرَيْرَةَ رضعَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَمْ يَتَكَلَّمْ فِي الْمَهْدِ إِلَّا ثَلَاثَةٌ عِيسَى وَكَانَ فِي بَنِي إِسْرَائِيلَ رَجُلٌ يُقَالُ لَهُ جُرَيْجٌ كَانَ يُصَلِّي جَاءَتْهُ أُمُّهُ فَدَعَتْهُ فَقَالَ أُجِيبُهَا أَوْ أُصَلِّي فَقَالَتْ اللَّهُمَّ لَا تُمِتْهُ حَتَّى تُرِيَهُ وُجُوهَ الْمُومِسَاتِ وَكَانَ جُرَيْجٌ فِي صَوْمَعَتِهِ فَتَعَرَّضَتْ لَهُ امْرَأَةٌ وَكَلَّمَتْهُ فَأَبَى فَأَتَتْ رَاعِيًا فَأَمْكَنَتْهُ مِنْ نَفْسِهَا فَوَلَدَتْ غُلَامًا فَقَالَتْ مِنْ جُرَيْجٍ فَأَتَوْهُ فَكَسَرُوا صَوْمَعَتَهُ وَأَنْزَلُوهُ وَسَبُّوهُ فَتَوَضَّأَ وَصَلَّى ثُمَّ أَتَى الْغُلَامَ فَقَالَ مَنْ أَبُوكَ يَا غُلَامُ قَالَ الرَّاعِي قَالُوا نَبْنِي صَوْمَعَتَكَ مِنْ ذَهَبٍقَالَ لَا إِلَّا مِنْ طِينٍ وَكَانَتْ امْرَأَةٌ تُرْضِعُ ابْنًا لَهَا مِنْ بَنِي إِسْرَائِيلَ فَمَرَّ بِهَا رَجُلٌ رَاكِبٌ ذُو شَارَةٍ فَقَالَتْ اللَّهُمَّ اجْعَلْ ابْنِي مِثْلَهُ فَتَرَكَ ثَدْيَهَا وَأَقْبَلَ عَلَى الرَّاكِبِ فَقَالَ اللَّهُمَّ لَا تَجْعَلْنِي مِثْلَهُ ثُمَّ أَقْبَلَ عَلَى ثَدْيِهَا يَمَصُّهُ قَالَ أَبُو هُرَيْرَةَ كَأَنِّي أَنْظُرُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمَصُّ إِصْبَعَهُ ثُمَّمُرَّ بِأَمَةٍ فَقَالَتْ اللَّهُمَّ لَا تَجْعَلْ ابْنِي مِثْلَ هَذِهِ فَتَرَكَ ثَدْيَهَا فَقَالَ اللَّهُمَّ اجْعَلْنِي مِثْلَهَا فَقَالَتْ لِمَ ذَاكَ فَقَالَ الرَّاكِبُ جَبَّارٌ مِنْ الْجَبَابِرَةِ وَهَذِهِ الْأَمَةُ يَقُولُونَ سَرَقْتِ زَنَيْتِ وَلَمْ تَفْعَلْ (بخاري)باب (وَاذْكُرْ فِى الْكِتَابِ مَرْيَمَ)كتاب أحاديث الأنبياء

ஈஸா அலைஹிஸ்ஸலாம் செய்து காட்டிய அற்புதங்களில் இன்னும் சில.....

وَرَسُولًا إِلَى بَنِي إِسْرَائِيلَ أَنِّي قَدْ جِئْتُكُمْ بِآيَةٍ مِنْ رَبِّكُمْ أَنِّي أَخْلُقُ لَكُمْ مِنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ فَأَنْفُخُ فِيهِ فَيَكُونُ طَيْرًا بِإِذْنِ اللَّهِ (ال عمران

قال وهب: كان يطير ما دام الناس ينظرون إليه فإذا غاب عن أعينهم سقط ميتا ليتميز فعل الخلق من فعل الله تعالى. وقيل: لم يخلق غير الخفاش لأنه أكمل الطير خلقا ليكون أبلغ في القدرة لأن لها ثديا وأسنانا وأذنا، وهي تحيض وتطهر وتلد. ويقال: إنما طلبوا خلق خفاش لأنه أعجب من سائر الخلق؛ ومن عجائبه أنه لحم ودم يطير بغير ريش ويلد كما يلد الحيوان ولا يبيض كما يبيض سائر الطيور، فيكون له الضرع يخرج منه اللبن، ولا يبصر في ضوء النهار ولا في ظلمة الليل، وإنما يرى في ساعتين: بعد غروب الشمس ساعة وبعد طلوع الفجر ساعة قبل أن يُسفر جدا، ويضحك كما يضحك الإنسان، ويحيض كما تحيض المرأة. (قرطبي

நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் களிமண்ணால் பறவை உருவம் செய்து அல்லாஹ்வின் அனுமதி கொண்டு உயிர் பெறு என்பார்கள் அதற்கு உயிர் வந்து பறந்து செல்லும். ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மட்டுமே பறந்து செல்லும். பிறகு கீழே விழுந்து மீண்டும் களி மண்ணாக மாறி விடும். மனிதர் மூலமாக அல்லாஹ் உருவாக்கும் அமைப்புக்கும் அல்லாஹ் நேரடியாக உருவாக்கும் படைப்புக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதற்காக..                                                                                                       

மேலும் நபி ஈஸா உருவாக்கிய பறவை என்பது வவ்வால் என்று கூறப்பட்டுள்ளது. ஏன் அதை தேர்வு செய்தார்கள் என்பதற்கு பல காரணங்கள் கூறப்பட்டுள்ளன. மக்கள் அதைத்தான் உருவாக்கும்படி ஈஸா அலை அவர்களிடம் கேட்டார்கள். காரணம் வவ்வால் ஒரு ஆச்சரியமான படைப்பு. மனிதனைப் போன்று அதற்கு ஒப்புவமை நிறைய உண்டு. பாலூட்டி இனமாக இருப்பதுடன் பற்கள், மார்பு ஆகியவை உண்டு. மனிதனைப் போன்ற சிரிக்கும். மனிதப் பிறவியைப் போன்று மாத விடாய் அதற்கு ஏற்படும்.                      

இறந்தவர்களை அல்லாஹ்வின் அனுமதி கொண்டு உயிர்ப்பித்துக் காட்டுவார்கள்.

{وَأُحْيِي الْمَوْتَى بِإِذْنِ اللَّهِ} قيل: أحيا أربعة أنفس: العاذر: وكان صديقا له، وابن العجوز وابنة العاشر وسام بن نوح؛ فالله أعلم. فأما العاذر فإنه كان قد توفى قبل ذلك بأيام فدعا الله فقام بإذن الله وودكه يقطر فعاش وولد له، وأما ابن العجوز فإنه مر به يُحمل على سريره فدعا الله فقام ولبس ثيابه وحمل السرير على عنقه ورجع إلى أهله. وأما بنت العاشر فكان أتى عليها ليلة فدعا الله فعاشت بعد ذلك وولد لها؛ فلما رأوا ذلك قالوا: إنك تحيي من كان موته قريبا فلعلهم لم يموتوا فأصابتهم سكتة فأحيي لنا سام بن نوح. فقال لهم: دلوني على قبره، فخرج وخرج القوم معه، حتى انتهى إلى قبره فدعا الله فخرج من قبره وقد شاب رأسه. فقال له عيسى: كيف شاب رأسك ولم يكن في زمانكم شيب؟ فقال: يا روح الله، إنك دعوتني فسمعت صوتا يقول: أجب روح الله، فظننت أن القيامة قد قامت، فمن هول ذلك شاب رأسي. فسأله عن النزع فقال: يا روح الله إن مرارة النزع لم تذهب عن حنجرتي؛ وقد كان من وقت موته أكثر من أربعة آلاف سنة، فقال للقوم: صدقوه فإنه نبي؛ فآمن به بعضهم وكذبه بعضهم وقالوا: هذا سحر. (قرطبي)

நான்கு பேரை நபி ஈஸா அலை உயிர்ப்பித்துள்ளார்கள். 1. நபி ஈஸா அலஅவர்களின் நண்பரான ஆதிர். இவர் இறந்து சில கழிந்த நிலையில் அவரை உயிராக்கினார்கள். அவர் சில காலம் வாழ்ந்தார்.அவருக்கு குழந்தையும் பிறந்தது.  2. ஒரு மூதாட்டியின் மகன் அவரை பிணமாக ஒரு பலகை மீது வைத்துக் கொண்டு செல்லப்பட்டு அடக்கப்பட்டது. அடக்கியவர்கள் திரும்பி வந்த பின் அல்லாஹ்விடம் ஈஸா அலை துஆ செய்தபோது அவர் கப்ரில் இருந்து எழுந்து தனது ஆடையை அணிந்து கொண்டு அந்த பலகையையும் அவரே தூக்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார். இவரும் சில காலம் இருந்தார்  3. ஒரு பெண். இவரையும் நபி ஈஸா அலை உயிராக்கினார்கள் இவருக்கு குழந்தையும் பிறந்தது 4. நபி நூஹ் அலை அவர்களின் மகன் ஸாம். மக்கள் அனைவரும் நபி ஈஸா அலை அவர்களிடம் நீங்கள் சமீபத்தில் இறந்தவர்களை மட்டும்தான் உயிராக்குகிறீர்கள் உங்களால் நீண்ட காலத்திற்கு முன்பு வாழ்ந்தவர்களை உயிராக்க முடியுமா..  குறிப்பாக நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நபி நூஹ் அலை அவர்களின் மகன் ஸாமை  உயிராக்க முடியுமா என்று கேட்க,அவரது கபரை காட்டுங்கள் என்றார்கள் அவ்வாறே அவரது கப்ரு காட்டப்பட்டது.  அனைவரும் உடன் இருக்க நபி    ஈஸா அலை அவர்கள் அல்லாஹ்விடம் துஆச் செய்து ஸாமை உயிராக்கினார்கள். அவர் கபரில் இருந்து எழுந்தார். அவர இறக்கும்போது அவர் காலத்தில்  நரை இல்லை. ஆனால் இப்போது எழுப்பும்போது அவருக்கு நரை இருந்த து. அவரிடம் அது  பற்றி  ஈஸா அலை அவர்கள் காரணம் கேட்க, கியாமத் வந்து விட்டதோ என்ற பயத்தில் நரைத்து விட்டது என்றார். அவரிடம் ஈஸா அலை அவர்கள் அவர் இறக்கும்போது அவரது சகராத் வேதனை எவ்வாறு இருந்த து என்று கேட்டார்கள் அதற்கு அவர் இன்னும் என் கழுத்தை விட்டும் அதன் தாக்கம் நீங்கவில்லை என்றார். வேறு சில அறிவிப்புகளில் அவர் ஈஸா அலை அவர்களிடம் நான் ஏற்கெனவே சகராதை அனுபவித்து விட்டதால் என்னை மீண்டும் மவ்த்தாக்கும்போது இன்னொரு சகராத் வேதனை எனக்கு வரக்கூடாது என்று வேண்டினார். அவ்வாறே நபி ஈஸா அலை மீண்டும் அவரை கப்ருக்குள் செல்ல வைத்தார்கள். இவர் மட்டும் உலகில் மீண்டும் வாழவில்லை

நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் ஒரு போதும் தன்னை கடவுள் என்று கூறவில்லை

وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى بْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَهَيْنِ مِنْ دُونِ اللَّهِ قَالَ سُبْحَانَكَ مَا يَكُونُ لِي أَنْ أَقُولَ مَا لَيْسَ لِي بِحَقٍّ إِنْ كُنْتُ قُلْتُهُ فَقَدْ عَلِمْتَهُ تَعْلَمُ مَا فِي نَفْسِي وَلَا أَعْلَمُ مَا فِي نَفْسِكَ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ (116) مَا قُلْتُ لَهُمْ إِلَّا مَا أَمَرْتَنِي بِهِ أَنِ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنْتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ (117المائدة)

உங்களைப் போல் சாப்பிடுபவர், சுய தேவைகளை நிறைவேற்றுபவர் எப்படி கடவுளாக முடியும் என்று அறிவுரை கூறும் குர்ஆன்

لقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ هُوَ الْمَسِيحُ بْنُ مَرْيَمَ وَقَالَ الْمَسِيحُ يَا بَنِي إِسْرَائِيلَ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ (72) لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ ثَالِثُ ثَلَاثَةٍ وَمَا مِنْ إِلَهٍ إِلَّا إِلَهٌ وَاحِدٌ وَإِنْ لَمْ يَنْتَهُوا عَمَّا يَقُولُونَ لَيَمَسَّنَّ الَذِينَ كَفَرُوا مِنْهُمْعَذَابٌ أَلِيمٌ (73) أَفَلَا يَتُوبُونَ إِلَى اللَّهِ وَيَسْتَغْفِرُونَهُ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ (74) مَا الْمَسِيحُ بْنُ مَرْيَمَ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ وَأُمُّهُ صِدِّيقَةٌ كَانَا يَأْكُلَانِ الطَّعَامَ انْظُرْ كَيْفَ نُبَيِّنُ لَهُمُ الْآيَاتِ ثُمَّ انْظُرْ أَنَّى يُؤْفَكُونَ (75المائدة)

ஈஸா அலைஹிஸ்ஸலாம் எவ்வாறு கடவுளாக ஆக்கப்பட்டார்கள் என்ற பின்னணி

பைபிளின் பல வசனங்களில் இறை நல்லடியார்களை குறிப்பாக நபிமார்களை இறை மகன்கள் என்று கூறப்பட்டுள்ளது. விரிவாக கூற நேரமில்லை இஸ்ராயீல் (அதாவது யஃகூப் அலைஹிஸ்ஸலாம்)தாவீது (தாவூது அலைஹிஸ்ஸலாம்),சாலமன் (சுலைமான் அலைஹிஸ்ஸலாம்), ஆகியோரை கர்த்தரின் பிள்ளைகள் என்று கூறும் பல வசனங்கள் பைபிளில் இடம் பெற்றுள்ளன. மக்கள் அனைவரையும் கூட இவ்வாறு கூறும் வசனங்கள் பைபிளில் உள்ளன. நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள் (உபாகமம் 14:1)அதனால் அனைவரும் கடவுளின் வாரிசுகளாகி விட முடியாது. ஈஸா அலைஹிஸ்ஸலாம் விஷயத்தில் அன்றியும்வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: 'இவர் என்னுடைய நேச குமாரன்; இவரில் பிரியமாயிருக்கிறேன்' என்று உரைத்தது.(மத்தேயு 3:17) பைபிளில் உள்ள இது போன்ற பல வசனங்கள் அனைத்தும் இறை நேசர் என்ற அர்த்தத்தில் கூறப்பட்டுள்ளதே தவிர இறை மகன் என்ற அர்த்தத்தில் கூறப்படவில்லை. இதை தவறாக புரிந்து தான் கிறிஸ்தவர்கள் இயேசுவை கடவுள் என்கிறார்கள்

தான் கடவுள் இல்லை என்பதை நிரூபிக்க ஈஸா அலை பூமிக்கு வருவார்கள். அச்சமயம் வேதக்காரர்கள் இஸ்லாத்தை ஏற்பர்

وَإِنْ مِنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا (159النساء) عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَيُوشِكَنَّ أَنْ يَنْزِلَ فِيكُمْ ابْنُ مَرْيَمَ حَكَمًا عَدْلًا فَيَكْسِرَ الصَّلِيبَ وَيَقْتُلَ الْخِنْزِيرَ وَيَضَعَ الْجِزْيَةَ وَيَفِيضَ الْمَالُ حَتَّى لَا يَقْبَلَهُ أَحَدٌ حَتَّى تَكُونَ السَّجْدَةُ الْوَاحِدَةُ خَيْرًا مِنْ الدُّنْيَا وَمَا فِيهَا ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ {وَإِنْ مِنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا} (بخاري) باب نُزُولُ عِيسَى ابْنِ مَرْيَمَ عليهما السلام-كتاب أحاديث الأنبياء

கிறிஸ்தவர்கள் கருதுவதைப் போன்று ஈஸா அலை சிலுவையில் அறையப்படவில்லை. அல்லாஹ் அவர்களை விண்ணுக்கு உயர்த்தி விட்டான். அப்படியானால் சிலுவையில் அறையப்பட்டது யார் என்பதில் இப்னு அப்பாஸ் ரழி கூற்று

وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَكِنْ شُبِّهَ لَهُمْ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِنْهُ مَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينًا-بَلْ رَفَعَهُ اللَّهُ إِلَيْهِ..(158النساء)عَنْ اِبْن عَبَّاس رضي الله عنه قَالَ لَمَّا أَرَادَ اللَّه أَنْ يَرْفَع عِيسَى إِلَى السَّمَاء خَرَجَ عَلَى أَصْحَابه وَفِي الْبَيْت اِثْنَا عَشَر رَجُلًا مِنْ الْحَوَارِيِّينَ يَعْنِي فَخَرَجَ عَلَيْهِمْ مِنْ عَيْن فِي الْبَيْت وَرَأْسه يَقْطُر مَاء فَقَالَ : إِنَّ مِنْكُمْ مَنْ يَكْفُر بِي اِثْنَيْ عَشْر مَرَّة بَعْد أَنْ آمَنَ بِي قَالَ : ثُمَّ قَالَ أَيّكُمْ يُلْقَى عَلَيْهِ شَبَهِي فَيُقْتَل مَكَانِي وَيَكُون مَعِي فِي دَرَجَتِي فَقَامَ شَابّ مِنْ أَحْدَثهمْ سِنًّا فَقَالَ لَهُ: اِجْلِسْ ثُمَّ أَعَادَ عَلَيْهِمْ فَقَامَ ذَلِكَ الشَّابّ فَقَالَ: اِجْلِسْثُمَّ أَعَادَ عَلَيْهِمْ فَقَامَ الشَّابّ فَقَالَ : أَنَا فَقَالَ : هُوَ أَنْتَ ذَاكَ فَأُلْقِيَ عَلَيْهِ شَبَه عِيسَى -(وفي رواية قَالَ عيسي عليه السلام لِأَصْحَابِهِ أَيّكُمْ يُلْقَى عَلَيْهِ شَبَهِي وَهُوَ رَفِيقِي فِي الْجَنَّة ؟ فَانْتُدِبَ لِذَلِكَ شَابّ مِنْهُمْ فَكَأَنَّهُ اِسْتَصْغَرَهُ عَنْ ذَلِكَ فَأَعَادَهَا ثَانِيَة وَثَالِثَة وَكُلّ ذَلِكَ لَا يُنْتَدَب إِلَّا ذَلِكَ الشَّابّ فَقَالَ : أَنْتَ هُوَ وَأَلْقَى اللَّه عَلَيْهِ شَبَه عِيسَى)-وَرُفِعَ عِيسَى مِنْ رَوْزَنَة فِي الْبَيْت إِلَى السَّمَاء قَالَ : وَجَاءَ الطَّلَب مِنْ الْيَهُود فَأَخَذُوا الشَّبَه فَقَتَلُوهُ ثُمَّ صَلَبُوهُ (تفسير ابن كثير) (نسائ)

நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் எப்போது தமது உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்தார்களோ ஏப்போது தன் தோழர்களை அழைத்து அல்லாஹ் என்னை விண்ணுக்கு உயர்த்தப் போகிறான். ஆனால் அது என்னைக் கொல்ல நினைக்கும் எதிரிகளுக்கு தெரியக்கூடாது எனவே உங்களில் ஒருவருக்கு அல்லாஹ் எனது உருவத்தை அல்லாஹ் தந்து விடுவான் அவர் கொல்லப்படுவார் ஆனால் நாளை மறுமையில் அவருக்கு நிச்சயம் சுவனம் உண்டு எனக்கூறிய பின், இதற்கு உங்களில் யார் தயார் என்று கேட்க, ஒரு இளைஞர் எழுந்து நான் தயார் என்றார் அவர் இளைஞராக இருக்கிறாரே என்று தயங்கி மீண்டும் ஒருமுறை நபி ஈஸா அலைஹிஸல்லாம் அறிவிப்புச் செய்த போது மீண்டும் அவரே எழுந்தார். மூன்றாவது தடவையும் நபியவர்கள் அறிவித்த போது அவரே முன் வந்தார். அல்லாஹ்வின் தூதருக்காக தன்னுயிரை தியாகம் செய்ய முன்வந்த அவரை எண்ணி நபியவர்கள் வியந்தார்கள். அதை அங்கீகரித்தார்கள். இறுதியில் அவர் தான் ஈஸா நபிக்கு பகரமாக கொல்லப்பட்டார் இது ஒரு அறிவிப்பாகும். மறரொரு அறிவிப்பில் கொல்ல வந்த யூதர்களில் ஒருவன் ஈஸா அலை இருக்கும் அறையில் நுழைந்தவுடன் ஈஸா நபியை அல்லாஹ் உயர்த்தி, அந்த யூதனுக்கு ஈஸா நபியின் உருவத்தை அல்லாஹ் கொடுத்தான் என்றும் அவனைத் தான் சந்தேகத்துடனேயே யூதர்கள் சிலுவையில் அறைந்தார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது– தஃப்ஸீர் இப்னுகஸீர்

ஒரு நபியின் உயிருக்கு ஆபத்து வரும்போது தன் உயிரைக் கொடுத்து பாதுகாப்பது தோழர்களின் கடமை என்பதால் ஈஸா அலைஹிஸ்ஸலாம் இப்படி கூறினார்கள். இவ்வாறே உஹது போரில் நபி ஸல் அவர்களும் இவ்வாறு கூறினார்கள்

عَنْ أَنَسِ رضي الله عنهأَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُفْرِدَ يَوْمَ أُحُدٍ فِي سَبْعَةٍ مِنْ الْأَنْصَارِ وَرَجُلَيْنِ مِنْ قُرَيْشٍ فَلَمَّا رَهِقُوهُ قَالَ مَنْ يَرُدُّهُمْ عَنَّا وَلَهُ الْجَنَّةُ أَوْ هُوَ رَفِيقِي فِي الْجَنَّةِ فَتَقَدَّمَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَقَاتَلَ حَتَّى قُتِلَ ثُمَّ رَهِقُوهُ أَيْضًا فَقَالَ مَنْ يَرُدُّهُمْ عَنَّا وَلَهُ الْجَنَّةُ أَوْ هُوَ رَفِيقِي فِي الْجَنَّةِ فَتَقَدَّمَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَقَاتَلَ حَتَّى قُتِلَ فَلَمْ يَزَلْ كَذَلِكَ حَتَّى قُتِلَ السَّبْعَةُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِصَاحِبَيْهِ مَا أَنْصَفْنَا أَصْحَابَنَا(مسلم) بَاب غَزْوَةِ أُحُدٍ-  مَا أَنْصَفْنَا أَصْحَابَنَاأي ما أنصفت قريش الأنصار لكون القرشيين لم يخرجا للقتال بل خرجت الأنصار واحدا بعد واحد- وأنه يجب على الناس أن يقوا رسول الله بأنفسهم فلما قال ( من يردهم عنا ) كان ينبغي للكل أن يبادر فتأخر بعضهم ليس بإنصاف (شرح مسلم)

உஹதுப் போரின் போது நபி ஸல் அவர்கள் ஏழு நபித்தோழர்கள் மட்டும் பாதுகாப்புக்காக சுற்றி நின்றிருந்த நிலையில் கூட்டத்தை விட்டு தனித்து விடப்பட்டார்கள். ஏழு நபர்கள் மட்டும் தானே கூட இருக்கிறார்கள் என்றெண்ணி எதிரிகள் தைரியம் கொண்டு நபி ஸல் அவர்களைச் சுற்றி வளைத்தார்கள். அப்போது நபி ஸல் அவர்கள் தம் தோழர்களிடம் இப்போது உங்களில் எவர் கேடயமாக இருந்து என்னைப் பாதுகாப்பாரோ அவர் சுவனத்தில் என்னோடு இருப்பார் என்று கூறியவுடன் நபி ஸல் அவர்களின் உயிரைப் பாதுகாக்க தம் உயிரையும் தியாகம் செய்ய ஒரு அன்சாரித்தோழர்  உடனே முன்வந்தார். முடிந்தவரை நபிகளாரை நெருங்க விடாமல் எதிரிகளுடன் போராடி இறுதியில் ஷஹீதாக்கப்பட்டார். மறுபடியும் எதிரிகள் நபிகளாரை முன்னோக்கி வர மீண்டும்  நபி ஸல் அவர்கள் இப்போது உங்களில் எவர் கேடயமாக இருந்து என்னைப் பாதுகாப்பாரோ அவர் சுவனத்தில் என்னோடு இருப்பார் என அறிவிப்புச் செய்தார்கள். அப்போதும் மற்றொரு அன்சாரித் தோழர் முன் வந்தார். அவரும் ஷஹீதாக்கப்பட்டார். இவ்வாறே ஏழு அன்சாரிகள் ஷஹீதாக்கப்பட்டனர்.                                                                   

தன் உயிர் போனாலும் நபி ஸல் அவர்களுக்கு எந்த ஆபத்தும் வந்து விடக்கூடாது என்று அன்சாரி சஹாபியின் அறிவுரை

ஹழ்ரத் ஸஃது இப்னு ரபீஉ ரழி அவர்கள் நபி ஸல் அவர்களுக்குப் பிரியமான அன்சாரீ  சஹாபீ. நபி ஸல் அவர்களை மதீனாவுக்கு வரும்படியும் அங்கு எல்லா விதமான ஒத்துழைப்பும் தருகிறோம் என்று கூறி அகபாவில் ஒப்பந்தம் செய்தவர்களில் இவரும் ஒருவர். உஹதுப் போர் முடிந்த போது நபி ஸல் அவர்கள் தோழர்களிடம் உங்களில் யாரேனும் சென்று ஸஃது இப்னு ரபீஉ ரழி எந்த இடத்தில் குற்றுயிராக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்து விட்டு அவர் இறுதியாக என்ன சொல்கிறார். என்பதையும் கேட்டு வரும்படி அனுப்புகிறார்கள். ஹழ்ரத் ஜைதுப்னு தாபித் ரழி அவர்கள் சென்று பார்த்தபோது ஸஃது இப்னு ரபீஉ ரழி அவர்கள் எழுபது வெட்டுக் காயங்களுடன் குற்றுயிராக மயக்கமுற்றுக் கிடந்தார்கள். அந்த எழுபது வெட்டுகளில் 12 மட்டுமே அன்னாரின் விழிப்பு நிலையில் எதிரிகள் வெட்டியதாகும் மீதி அனைத்தும் அன்னார் மயக்கமுற்ற பிறகு வெட்டியதாகும். மயக்கம் தெளிந்த பின் அவர்கள் ஜைது ரழி அவர்களை நோக்கி நான் இன்னும் சற்றுநேரத்தில் இறந்து விடுவேன். என் பாசமுள்ள நபிக்கு என் சலாமைக் கூறுங்கள். மேலும் இத்தகைய ஷஹாதத் என்னும் மாபெரும் பாக்கியத்தை எங்களுக்குப் பெற்றுத் தந்ததற்காக என் சார்பில் நன்றியும் கூறுங்கள். என் நண்பர்கள் அனைவருக்கும் என் சலாமைக் கூறுங்கள் மேலும் எனது நண்பர்களிடம் கூறுங்கள். நம் தோழர்களில் யாரேனும் உயிருடன் இருக்கும் நிலையில் நமது உயிரினும் மேலான நபி ஸல் அவர்களை எதிரிகளில் ஒருவன் நெருங்கினால் அந்த தோழரின் கண்களில் மட்டுமே உயிர் ஒட்டியிருந்தாலும் சரி, அந்த நிலையில் அவர் நமது நபியைப் பாதுகாக்கத் தவறினால் அவரை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்க மாட்டான் என்று கூறுங்கள் என்றார்.இந்த வார்த்தையைக் கூறிய சற்று நேரத்தில் அவரின் உயிர் பிரிந்தது. நூல் ஜாதுல் மஆத்                                                                                              

நபி ஸல் அவர்களைப் பற்றி ஈஸா அலைஹிஸ்ஸலாம் கூறிய முன்னறிவிப்புகள் இன்றைய பைபிளில்....

وَإِذْ قَالَ عِيسَى بْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ (الصف:6

மேற்கானும் வசனம் பைபிளில் பின்வருமாறு- நான் பிதாவைவேண்டிக்கொள்ளுவேன். அப்போதுஎன்றைக்கும் உங்களுடனே கூடஇருக்கும்படிக்கு சத்தியஆவியாக வேறொரு தேற்றரவாளரைஅவர் உங்களுக்குத்தந்தருள்வார் (யோவான் 14:16)'பிதாவிடத்திலிருந்து நான்உங்களுக்குஅனுப்பப்போகிறவரும், பிதாவிடத்திலிருந்துபுறப்படுகிறவருமாகிய சத்தியஆவியான தேற்றரவாளர் வரும்போது, அவர் என்னைக் குறித்துச்சாட்சி கொடுப்பார்' (யோவான் 15:26)'அப்பொழுது கர்த்தர் என்னைநோக்கி,. உன்னைப் போல ஒருதீர்க்க தரிசியை நான்அவர்களுக்கு அவர்கள்சகோதரர்களிடமிருந்துஎழும்பப்பண்ணி, என்வார்த்தைகளை அவர் வாயில்அருளுவேன். நான் அவருக்குக்கற்பிப்பதையெல்லாம்அவர்களுக்குச் சொல்லுவார்.என் நாமத்திலே அவர் சொல்லும்என் வார்த்தைகளுக்குச்செவிகேடாதவன் எவனோ அவனை நான்விசாரிப்பேன்' (உபாகமம் 18:17-19) பைபிளில் இடம்பெற்றுள்ள இந்த வசனங்களில் நபியவர்களின் பெயரை திரித்துதேற்றரவாளர் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த தேற்றரவாளர் யார் என்பதற்கு கிறிஸ்தவ அறிஞர்கள் இது இயேசுவைப் பற்றி அவருக்கு முன்பிருந்த மோஸஸ் (மூஸா நபி) கூறியது என்பர்.                                                                    

ஈஸா அலை போதித்த உண்மை வழிமுறை எது என்பது ஜோர்டான் குகைவாசிகளின் குகையிலிருந்து வெளிப்பட்டுள்ளது

أَمْ حَسِبْتَ أَنَّ أَصْحَابَ الْكَهْفِ وَالرَّقِيمِ كَانُوا مِنْ آيَاتِنَا عَجَبًا - وَقَالَ عَلِيّ بْن أَبِي طَلْحَة عَنْ اِبْن عَبَّاس : الرَّقِيم الْكِتَاب (تفسير ابن كثير)

இந்த வசனத்தில் குகைவாசிகள் என்றுமட்டும் குறிப்பிடாமல் ரகீம் உடையவர்கள் என்ற சொல்லை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான். இந்த ரகீம் என்ற வார்த்தைக்கு நபித்தோழர்கள் பல விளக்கங்கள் கூறினாலும் அதில் இப்னு அப்பாஸ் ரழி கூறும் ஒரு விளக்கம்சுவடிகள், ஏடுகள் உடையவர்கள் என்பதாகும். அந்தஏடுகள்பிற்காலத்தில் கண்டெடுக்கப்பட்டு மக்களுக்கு அதில் உள்ள உண்மைகள்தெரிய வரும் என்பதற்காகவே அல்லாஹ்அவ்வாறு கூறியிருக்க முடியும். அது என்ன ஏடு என்பதுகடந்து நூற்றாண்டின் இறுதியில் அம்பலமாகியுள்ளன. "சாவுக்கடல் சாசனச் சுருள்கள்" என்ற தலைப்பில் 1998ஆம் ஆண்டு ஒரு மாதத்தில்பல தடவை பி.பி.சி. தொலைக் காட்சியில் ஒரு மணி நேர நிகழ்ச்சி ஒன்றுஒளிபரப்பப்பட்டது. அதன் விபரமாவது –

 

1947ஆம் ஆண்டு ஆடு மேய்க்கும் ஓர் அரபுச் சிறுவன், காணாமல் போனதனது ஆட்டைத்தேடி சாவுக்கடலை ஒட்டிய ஜோர்டான் நாட்டு மலைப்பகுதிகளில் தேடி அலைந்தான். அந்த மலைப் பகுதி "கும்ரான் மலைப் பகுதி" என்றுஅழைக்கப்படுகிறது.ஆட்டுக் குட்டியைத் தேடிய சிறுவன் அங்கிருந்த குகைக்குள் பார்த்த போது, மண்பாண்டங்களில் சுருட்டி நிரப்பி வைக்கப்பட்ட தோல் ஆவணங்களைக்கண்டுள்ளான். அவைகளில் சிலவற்றை எடுத்து வந்து செருப்புத்தொழிலாளியான தன் தந்தையிடம் கொடுக்க, மறு நாள் தந்தையும், மகனும் சேர்ந்துகுகைக்குள் இருந்த அனைத்துச் சுருள்களையும் வீட்டுக்குக் கொண்டு வந்துசேர்த்தார்கள்.

அந்தப் பழைய தோல்களைத் தமது செருப்புத் தொழிலுக்குப் பயன்படுத்த எண்ணியஅந்தச் சிறுவனின் தந்தை தோல்களில் ஹிப்ரு மொழியில் எழுதப்பட்டிருந்தவார்த்தைகளின் பொருள் புரியாமல், அதை அப்பொழுது ஜோர்டான் மன்னர் ஆட்சியின்கீழிருந்த கிழக்கு ஜெருஸலத்தைச் சேர்ந்த ஒரு பழைய புத்தகக் கடைக்காரரிடம்காண்பித்திருக்கிறார்.ஓரளவு ஹிப்ரு மொழியறிந்த அந்தக் கடைக்காரர் அந்தச் சுருள்கள் பழங்காலச்செய்திகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கருதி, ஒரு சில தீனார்களுக்கு அத்தனை சுருள்களையும் அந்த செருப்புத் தொழிலாளியிடமிருந்து விலைக்குவாங்கிக் கொண்டார்.கிறித்தவரான அந்தப் புத்தகக் கடைக்காரர் அந்தச் சுருள்களை அந்நகரில் இருந்தகிறித்தவ ஆலயத்தில் ஒப்படைத்து விட்டார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் சுருள்கள் கண்டெடுக்கப்பட்ட விஷயம் வெளிப்பட்டது.அதில் உள்ள செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு யூதர்களும், முஸ்லிம்களும்ஆர்வம் காட்டினர்.அப்போது ஜோர்டானை ஆட்சி செய்த மன்னர் ஹுசைன், "அந்தச் சாசனச் சுருள்கள் முஸ்லிம், யூத, கிறித்தவர்கள் அடங்கிய ஒரு குழுவிடம் பொதுவாகஒப்படைக்கப்பட்டு அவை ஆராயப்பட வேண்டும்" என்று விண்ணப்பித்தார். ஆனால் கிறித்தவப் பாதிரியார்கள், "அது தனியார் சொத்து" என்று வாதிட்டு அதைப் பொதுவில் வைக்க மறுத்து விட்டனர். கிறித்தவர்களில் பல அறிஞர்களுக்கும் கூட அவற்றைப் படிப்பதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை. இடைப்பட்ட ஐந்தாண்டு காலங்களில் ஜெருஸலத்தில் இருந்த பாதிரிமார்கள் சிலகுழுக்களை ஏற்படுத்தி கும்ரான் மலைப் பகுதிகளில் இருந்த குகைகளில்தேடியலைந்து அங்கிருந்த சாசனச் சுருள்கள் அனைத்தையும் தங்கள் கைவசம் கொண்டுவந்து விட்டனர்.1952 செப்டம்பர் மாதம் அனைத்துச் சுருள்களும் கிறித்தவப்பாதிரிமார்கள் கையில் போய்ச் சேர்ந்தன.

 

பதினைந்தாயிரம்கையெழுத்துப் பிரதிகள்) இவ்வகையில் இருப்பதாக தற்போது கணக்கிட்டு உள்ளனர்.கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேல் அந்த சாசனச் சுருள்களில் அடங்கிய செய்திகளை, ஒரு குறிப்பிட்ட கிறித்தவப் பாதிரிகள் அடங்கிய குழு இருட்டடிப்பு செய்து வந்தது.பல கிறித்தவ அறிஞர்களும், ஆராய்ச்சியாளர்களும் அதைப் படிக்க ஆர்வம் கொண்டு கேட்ட போதெல்லாம், அவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. சாசனச் சுருள்களைக் கைவசம் கொண்ட குழுவில் ஒருவர் இறக்க நேரிட்டால்அவருக்குப் பதில் அக்குழுவில் உள்ள மற்றவர்களால் வேறொரு பாதிரியார் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு மட்டுமே அதைப் படிப்பதற்கு உரிமை வழங்கப்பட்டு வந்தது.இவ்விதமாக இவ்வளவு காலமும் அந்தச் சாசனச் சுருள்களின் செய்திகள் ரகசியமாகவைக்கப்பட்டு வந்தன.

இந்த இரகசியக் காப்பில் போப் ஆண்டவரின் வாட்டிகன் சபை முன்னணியில் இருந்தது.தோலில் பதிந்த அந்தப் பழங்காலச் சாசனம் அழிந்து விடும் நிலையைக் கண்ட அதன்ரகசியக் காப்பாளர்கள் அவற்றை நுண்ணிய படச்சுருளாக எடுத்தார்கள்.அதன் ஒரு செட் போட்டோ காப்பிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ்நகரிலிருக்கும் ஒரு நூலகத்துக்குப் பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு அந்த நூலகத்துக்குத் தலைவராக ஐஸ்மேன் என்ற அறிஞர்நியமிக்கப்பட்டார். அவர் முன்பே அந்த சாசனச் சுருள்களைப் படிப்பதற்குஆர்வம் காட்டி, அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டவர்.இப்போது தனது அதிகாரத்தில் உள்ள நூலகத்தில் இருந்து சாசனச் சுருள்களின்நுண்ணிய போட்டோக்களைப் பெரிய அளவில் போட்டோ எடுக்கச் செய்து அவற்றைப்படித்தார்.அவற்றைப் படித்த போது தமக்கு வியப்பு ஏற்பட்டதாக வாக்குமூலம்அளிக்கின்றார். இத்தனை காலமும் கிறித்தவசபை அந்த சாசனச் சுருள்களை மற்றவர்களுக்குக் காட்டாமல் இருந்த உள்நோக்கம் என்ன என்பதையும் புரிந்து கொண்டதாகக் கூறுகின்றார்.

மைக்கேல் வைஸ் என்னும் சிகாகோ பல்கலைக் கழக ஹிப்ரு மொழிப் பேராசிரியர்ஒருவரின் உதவியைக் கொண்டு அந்த சாசனச் சுருள்களில் முக்கியமானது என்று அவர்கருதிய 100கையெழுத்துப் பிரதிகளை ஆங்கிலத்தில்மொழியாக்கம் செய்து வெளியிட்டார்.அந்தப் புத்தக வெளியீடு கிறித்தவ உலகத்தை உலுக்கியது என்றும், குறிப்பாககிறித்தவ மத ஆலயங்கள் பேரதிர்ச்சியில் உறைந்து போயின என்றும் அந்தடாக்குமென்டரியின் செய்தியாளர் கூறுகின்றார்.மேற்கத்திய மக்களின் மத நம்பிக்கையைத் தகர்ப்பதாக அந்தப் புத்தக வெளியீடுஇருந்தது என்றும், ஆகவே அந்த இரு அறிஞர்களும் சட்ட நடவடிக்கைகளுக்குஉட்படுத்தப்படுவார்கள் என்ற அச்சம் இருந்தது என்றும் அதன் செய்தியாளர்குறிப்பிடுகிறார்.அப்படி எது நடந்தாலும் அதைத் தாங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், இதற்கு அஞ்சி ஒரு மிகப் பெரும் பேருண்மையை உலகத்திலிருந்து தாங்கள் மறைக்கவிரும்பவில்லை என்றும் அவ்விரு அறிஞர்களும் வெளிப்படையாகக் கூறுவதையும்அந்தத் தொலைக்காட்சி டாக்குமெண்டரி பதிவு செய்து காட்டுகின்றது. கிறித்தவ மத ஆலயங்களில் இப்போது ஏசுவின் பெயரால் செய்யப்படும் மதச்சடங்குகளும், வழிபாடுகளும் ஆரம்ப கிறித்தவர்களிடையே நடைபெறவில்லை என்பதையே சாசனச் சுருள்கள் நிரூபிக்கின்றன.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...