18- ம் தராவீஹ் பயான்
நபி சுலைமான்
அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அரசாட்சி
உலகையே ஆட்சி செய்தவர்கள் நான்கு பேர்.
قَالَ مُجَاهِد:مَلَكَ
الدُّنْيَا مَشَارِقهَا وَمَغَارِبهَا أَرْبَعَة: مُؤْمِنَانِ وَكَافِرَانِ فَالْمُؤْمِنَانِ
سُلَيْمَان عليه السلام وَذُو الْقَرْنَيْنِ وَالْكَافِرَانِ نُمْرُود وَبُخْتُنَصَّرَ وَاَللَّه
أَعْلَم
இருந்தாலும் இந்த நால்வரில் நபி சுலைமான்
அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு விசாலமான ஆட்சி தரப்பட்டிருந்தது
வேறு யாருக்கும் தராத அரசாட்சியை எனக்குத் தா
என நபி
சுலைமான் அலைஹிஸ்ஸலாம் கேட்டார்கள்
قَالَ رَبِّ اغْفِرْ لِي
وَهَبْ لِي مُلْكًا لَا يَنْبَغِي
لِأَحَدٍ مِنْ بَعْدِي إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ (35)
பதவியை ஒரு நபி இவ்வாறு கேட்கலாமா என்பதற்கு பதில்
يقال: كيف أقدم سليمان
على طلب الدنيا، مع ذمها من الله تعالى، وبغضه لها، وحقارتها لديه؟. فالجواب أن
ذلك محمول عند العلماء على أداء حقوق الله تعالى وسياسة ملكه، وترتيب منازل خلقه،
وإقامة حدوده، والمحافظة على رسومه، وتعظيم شعائره، وظهور عبادته، ولزوم طاعته، ونظم
قانون الحكم النافذ عليهم منه، وتحقيق الوعود في أنه يعلم ما لا يعلم أحد من خلقه
حسب ما صرح بذلك لملائكته فقال: { إِنِّي أَعْلَمُ مَا لا تَعْلَمُونَ } وحوشي
سليمان عليه
السلام أن
يكون سؤاله طلبا لنفس الدنيا؛ لأنه هو والأنبياء أزهد خلق الله فيها، وإنما سأل
مملكتها لله، كما سأل نوح دمارها وهلاكها لله؛ فكانا محمودين مجابين إلى ذلك،
فأجيب نوح فأهلك من عليها، وأعطى سليمان المملكة.
(قرطبي)
நபி சுலைமான் (அலை)
அவர்களின் ஆட்சி அதிகாரத்தில் தாம் தலையிடக்கூடாது என்பதற்காக தாம் பிடித்து வைத்த
ஷைத்தானை நபி ஸல் அவர்கள் அவிழ்த்து விட்டார்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ
رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ
صَلَّى صَلَاةً قَالَ إِنَّ الشَّيْطَانَ عَرَضَ لِي فَشَدَّ عَلَيَّ لِيَقْطَعَ
الصَّلَاةَ1 عَلَيَّ فَأَمْكَنَنِي اللَّهُ مِنْهُ فَذَعَتُّهُ2
وَلَقَدْ هَمَمْتُ أَنْ أُوثِقَهُ إِلَى سَارِيَةٍ حَتَّى تُصْبِحُوا فَتَنْظُرُوا إِلَيْهِ
فَذَكَرْتُ قَوْلَ سُلَيْمَانَ عَلَيْهِ السَّلَام رَبِّ {هَبْ لِي مُلْكًا لَا
يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي (سورة ص35)} فَرَدَّهُ اللَّهُ خَاسِيًا (بخاري) باب مَا يَجُوزُ مِنَ الْعَمَلِ فِى الصَّلاَةِ
என் தொழுகையில் ஷைத்தான்
இடையூறு செய்ய முயன்றான். அல்லாஹ் எனக்கு ஷைத்தானை வசப்படுத்திக் கொடுத்ததால் அவனை
நான் பிடித்துக் கொண்டேன். அவனை ஒரு தூணில் கட்டி வைத்து காலையில் எல்லோரும் அவனை பார்க்க வேண்டும்
என்று எண்ணினேன் ஆனால் சுலைமான் அலை செய்த துஆ நினைவுக்கு வந்தது. யாஅல்லாஹ்
எனக்குப் பின் வேறு யாருக்கும் தர மாட்டாயே அத்தகைய ஆட்சியை எனக்குத் தா என்று
கேட்டதன் அடிப்படையில் ஷைத்தான்கள் சுலைமான் நபிக்கு கட்டுப்படும் நிலையை அல்லாஹ்
வைத்திருந்தான். அதில் தலையிடக்கூடாது என்று எண்ணி அவனை அவிழ்த்து விட்டு
விட்டேன். ஏமாற்றம் அடைந்தவனாக திரும்பிச் சென்றான்.
காற்றுக்கு உத்தரவிட்டால் காற்று அவர்களையும்
அவர்களின் படையையும் விரும்பிய இடத்திற்கு கொண்டு செல்லும்
وَلِسُلَيْمَانَ
الرِّيحَ غُدُوُّهَا شَهْرٌ وَرَوَاحُهَا شَهْرٌ وَأَسَلْنَا لَهُ عَيْنَ
الْقِطْرِ وَمِنَ الْجِنِّ مَنْ يَعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِإِذْنِ رَبِّهِ وَمَنْ
يَزِغْ مِنْهُمْ عَنْ أَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ السَّعِيرِ (12) سبأ
பொருள்- நபி சுலைமான்
அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். ஒரு மாதம் கடக்க
வேண்டிய தூரத்தை ஒரு பகல் நேரம் முடிவதற்குள் அந்தக் காற்று கடந்து விடும். ஒரு மாதம் கடக்க வேண்டிய தூரத்தை ஒரு இரவு
நேரம் முடிவதற்குள் அந்தக் காற்று கடந்து விடும்.
وَلِسُلَيْمَانَ
الرِّيحَ عَاصِفَةً تَجْرِي بِأَمْرِهِ
إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا وَكُنَّا بِكُلِّ شَيْءٍ عَالِمِينَ
(الانبياء
وروى سعيد بن جبير عن
ابن عباس قال: كان سليمان إذا جلس نصبت حواليه أربعمائة ألف كرسي، ثم جلس رؤساء
الإنس مما يليه، وجلس سفلة الإنس مما يليهم، وجلس رؤساء الإنس مما يلي سفلة الإنس،
وجلس سفلة الجن مما يليهم، وموكل بكل كرسي طائر لعمل قد عرفه، ثم تقلهم الريح،
والطير تظلهم من الشمس، فيغدو من بيت المقدس إلى إصطخر، فيبيت ببيت المقدس، ثم قرأ
ابن عباس: { غُدُوُّهَا شَهْرٌ وَرَوَاحُهَا شَهْرٌ }
மிகப் பெரிய ராட்சத
விரிப்பின் மீது நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்களின் படையினரும்
அமருவார்கள். நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சுற்றி நான்கு இலட்சம் இருக்கைகள் இருக்கும். முதல்
வரிசைகளில் மனித இனத்தில் நின்றும் அதிகாரிகள் இருப்பார்கள். அடுத்தடுத்த
வரிசைகளில் அடுத்த பொறுப்புகளில் உள்ள மனிதர்கள் இருப்பார்கள். அடுத்த
வரிசைகளில் ஜின்களின் நின்றும்
பொறுப்புதாரிகள் இருப்பார்கள். எல்லோரும் அமர்ந்தவுடன் காற்று அவர்களை கொண்டு
செல்லும். ஒவ்வொருவரின் தலைக்கு மேலேயும் ஒரு பெரிய பறவை நிழல் தந்து
கொண்டிருக்கும். ஒரு மாத தொலை தூரத்தை ஒரு பகல் நேரம் முடிவதற்குள்
சென்றடைவார்கள்.
நபி சுலைமான்
அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கட்டளைக்கு கட்டுப்படாத ஜின்களை தண்டிக்கும் அதிகாரமும் நபி சுலைமான்
அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
وَمِنَ الْجِنِّ مَنْ
يَعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِإِذْنِ رَبِّهِ وَمَنْ يَزِغْ مِنْهُمْ عَنْ أَمْرِنَا
نُذِقْهُ
مِنْ
عَذَابِ السَّعِيرِ (12) يَعْمَلُونَ لَهُ مَا يَشَاءُ مِنْ مَحَارِيبَ
وَتَمَاثِيلَ وَجِفَانٍ كَالْجَوابِ وَقُدُورٍ رَاسِيَاتٍ اعْمَلُوا آلَ دَاوُدَ
شُكْرًا وَقَلِيلٌ مِنْ عِبَادِيَ الشَّكُورُ (13)
وذلك أن الله تعالى وكل
بهم فيما روى السدي - ملكا بيده سوط من نار، فمن زاغ عن أمر سليمان ضربه بذلك
السوط ضربة من حيث لا يراه فأحرقته.
படிப்பினை- இத்தனை அதிகாரம்
வழங்கப்பட்டிருந்தாலும் நபி சுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் பணிவு இருந்தது. ராட்சத விரிப்பு
மூலம் அதாவது உலகில் இதுவரை யாரும் கண்டு பிடிக்காத ராட்சத விமானத்தில் ஆகாயத்தில்
பறந்து கொண்டிருக்கும்போது நபி சுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) மட்டும் அல்லாஹ்வை திக்ரு செய்த படி தலை
கவிழ்ந்தே அமர்ந்திருப்பார்கள்.
சுலைமான் அலைஹிஸ்ஸலாம் வழியாக சித்த
மருத்துவத்தை அல்லாஹ் பூமிக்கு அறிமுகப்படுத்தினான்
قوله تعالى ) فلما قضينا عليه الموت ( أي على سليمان قال
: العلماء : كان سليمان يتجرد للعبادة في بيت المقدس السنة والسنتين والشهر
والشهرين , وأقل من ذلك وأكثر فيدخل فيه ومعه طعامه وشرابهم فدخله المرة التي مات
فيها وكان سبب ذلك أنه كان لا يصبح يوماً إلا وقد نبتت في محرابه ببيت المقدس شجرة
فيسألها : ما اسمك ؟ فتقول : كذا وكذا فيقول لأي شيء خلقت ؟ فتقول : لكذا وكذا
فيأمر بها فتقطع.
فإن كانت لغرس
أمره بها فغرست وإن كانت لدواء كتب ذلك حتى نبتت الخروبة فقال : لها ما أنت قالت
أنا الخروبة قال ولأي شيء نبت قالت لخراب مسجدك , قال سليمان : ما كان الله ليخربه
وأنا حي أنت التي على وجهك هلاكي وخراب بيت المقدس , ثم نزعها وغرسها في حائط له
ثم قال : اللهم عم على الجن موتي حتى تعلم الإنس أن الجن لا يعلمون الغيب , وكانت
الجن تخبر الإنس أنهم يعلمون من الغيب شيئاً , ويعلمون ما في غد ثم دخل المحراب
وقام يصلي على عادته متكئاً على عصاه فمات قائماً , وكان للمحراب كوى من بين يديه
, ومن خلقه فكان الجن يعملون تلك الأعمال الشاقة التي كانوا يعملون في حياة سليمان
, وينظرون إليه ويحسبون أنه حي ولا ينكرون احتباسه عن الخروج إلى الناس لطول صلاته
, وانقطاعه قبل ذلك فمكثوا يدأبون بعد موته حولاً كاملاً حتى أكلت الأرضة عصا
سليمان , فخر ميتاً فعلموا بموته
(تفسير الخازن)
நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் வாழ்நாளில் சில சந்தர்ப்பங்களில்
பைத்துல் முகத்தஸில் இஃதிகாஃப் போன்று மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில்
உட்கார்ந்து விடுவார்கள். அவர்களுக்கான உணவு அங்கு தேடி வந்து விடும். இவ்வாறு
அவர்களின் வாழ்வின் கடைசிக் கட்டத்தில் மஸ்ஜிதில் தங்கியபோது அவர்கள் சஜ்தா செய்த
போதெல்லாம் அந்த இடத்தில் ஒரு செடி முளைத்தது. மற்றொரு அறிவிப்பில் நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம்ஒருமுறை மலக்குல்
மவ்த் அவர்களிடம் தம் மரணத்தின் அறிகுறிகளைப் பற்றிக் கேட்டபோது நீங்கள் சஜ்தா
செய்யும் ஒவ்வொரு இடத்திலும் ஒரு செடி முளைக்கும். அதில் கடைசியாக ஹரூபா என்ற
முட்செடி முளைக்கும். அன்று தான் உங்களுடைய மரணம் நிகழும் என்று மலக்குல் மவ்த்
கூறினார்கள்.அதன் பின் நபி சுலைமான் அலை எங்கெல்லாம்
சஜ்தா செய்தார்களோ அங்கெல்லாம் செடி முளைத்தது. அந்தச் செடியிடம் நபி சுலைமான் அலை
பேசுவார்கள். முதலாவதாக விளைந்த செடியிடம் நீ யார்?
எனக் கேட்க, நான் இன்ன மருத்துவ குணத்திற்காக உருவாக்கப்பட்டேன் என்று கூறியது. அதை எடுத்து மஸ்ஜிதுக்கு வெளியே தோட்டத்தில் நட்டினார்கள்.இவ்வாறு
ஒவ்வொரு சஜ்தா செய்யும் போதும் விளைந்த அந்த செடிகளிடம் அதன் பயன்பாடு பற்றி நபி
சுலைமான் (அலை) கேட்கஅந்தந்த செடிகள் தனது பயன்பாட்டைக்
கூறும்.அதைசுலைமான்(அலை)தோட்டத்தில்
நட்டுவார்கள். இப்படியாக ஒரு மூலிகைத் தோட்டமே உருவானது.
கடைசியாக ஒரு இடத்தில் அவர்கள் சஜ்தா செய்த போது அந்த
முட்செடி உருவானது. நீ யார்? எனக் கேட்க, நான் பைத்துல் முகத்தஸை
சேதப்படுத்தவே விளைந்துள்ளேன். எனக் கூறியது. அதைத் தூக்கி
தோட்டத்தில் வீசி எறிந்த சுலைமான் (அலை) தனக்கு மவ்த் நெருங்கி விட்டதை உணர்ந்தார்கள். ஆனாலும்அல்லாஹ்விடம்
யாஅல்லாஹ்! பைத்துல் முகத்தஸ் கட்டி முடிக்கப்படும் வரை
எனது மவ்த்தை ஜின்களுக்கு காட்டித் தராதே! என துஆ செய்தார்கள். அந்த துஆவை அல்லாஹ்
ஏற்றுக் கொண்டான். அன்றைய தினம் வழக்கம் போல் மிஹ்ராபில் கைத்தடி மீது சற்று சாய்ந்தவர்களாக
தொழுகையில் ஈடுபட்டார்கள். அதே நிலையில் உயிர் பிரிந்த து. ஆனால் அவர்கள் இறந்த
விஷயம் ஜின்களுக்கு அறவே தெரியாது. நபி சுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) தங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதாக எண்ணி
ஜின்கள் பைத்துல் முகத்தஸைக் கட்டும் வேலையில் தொடர்ந்து ஒரு வருடம்
ஈடுபட்டார்கள். கடைசியில் அவர்கள் சாய்ந்து நின்ற கைத்தடியை கரையான் அரித்து நபி சுலைமான் (அலை)
கீழே விழுந்த போது தான் நபி சுலைமான் (அலை) இறந்து விட்டதை அறிந்தார்கள். நூல் தஃப்ஸீர்
இப்னு கஸீர், தஃப்ஸீர் காஜின்
فَلَمَّا
قَضَيْنَا عَلَيْهِ الْمَوْتَ مَا دَلَّهُمْ عَلَى
مَوْتِهِ إِلَّا دَابَّةُ الْأَرْضِ
تَأْكُلُ مِنْسَأَتَهُ فَلَمَّا خَرَّ تَبَيَّنَتِ الْجِنُّ أَنْ لَوْ كَانُوا
يَعْلَمُونَ الْغَيْبَ مَا لَبِثُوا فِي الْعَذَابِ الْمُهِينِ (14)
படிப்பினை- 1. மறைவானவை எங்களுக்கும் தெரியும் என்ற ஜின்களின் வாதம் பொய்யானது
2. இன்றைக்கு கண்டு பிடிக்கப்படும் மருந்துகளின் அசல் மூல மருந்துகள்
அனைத்தும் நபி சுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் சஜ்தாவில் உருவானது. சஜ்தாவைக்
கொண்டு ஷிஃபா வை அல்லாஹ் வைத்துள்ளான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக