ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

16-வது தராவீஹ்- மூஸா(அலை) அவர்களின் மத்யன் பயணம்-படிப்பினைகள்

 




 

16-வது தராவீஹ்- மூஸா(அலை) அவர்களின் மத்யன் பயணம்-படிப்பினைகள்

وَلَمَّا تَوَجَّهَ تِلْقَاءَ مَدْيَنَ قَالَ عَسَى رَبِّي أَنْ يَهْدِيَنِي سَوَاءَ السَّبِيلِ (22)

மத்யன் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது.

எகிப்தில் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்ட பிறகு மத்யன் நோக்கி மூஸா அலை புறப்பட்டார்கள். எட்டு நாள் தொலைதூரம். எந்த வாகனமும் கிடையாது. எந்த உணவும் கிடையாது செல்லும் வழியில் கிடைக்கும் இலைகள் ஆகியவை தான் உணவு. மத்யனில் நம் உறவினர்கள் இருப்பார்கள் என்று அவர்களின் மனதில் தோன்றியது அதற்காக துஆவும் செய்தார்கள். எனினும் அதற்கான பாதை எதுவும் தெரியாது. ஒரு வானவர் வந்து வழி காட்டினார் இமாம் இப்னு ஜரீர் ரஹ் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்-குர்துபீ

படிப்பினை- எத்தனையோ நபிமார்கள் சொந்த ஊரில் தொல்லைகள் தாங்க முடியாமல் ஹிஜ்ரத் செய்துள்ளார்கள்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ سَتَكُونُ هِجْرَةٌ بَعْدَ هِجْرَةٍ فَخِيَارُ أَهْلِ الأَرْضِ أَلْزَمُهُمْ مهَاجَرإِبْرَاهِيمَ وَيَبْقَى فِى الأَرْضِ شِرَارُ أَهْلِهَا تَلْفِظُهُمْ أَرَضُوهُمْ تَقْذَرُهُمْ نَفْسُ اللَّهِ وَتَحْشُرُهُمُ النَّارُ مَعَ الْقِرَدَةِ وَالْخَنَازِيرِ ».(ابوداود)

عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَأَيْتُمْ الرَّايَاتِ السُّودَ قَدْ جَاءَتْ مِنْ خُرَاسَانَ فَأْتُوهَا فَإِنَّ فِيهَا خَلِيفَةَ اللَّهِ الْمَهْدِيَّ (احمد

கடைசி காலத்தில்மஹ்தீ அலை வந்த பிறகு முஸ்லிம்கள் ஷாமை நோக்கி ஹிஜ்ரத் செய்ய வேண்டியது வரலாம் என்பதை இந்த ஹதீஸ் சுட்டிக் காட்டுகிறது. ஆனால் கெட்டவர்கள் அவரவர் ஊரில் இருப்பார்கள். இறுதியில் யமனில் இருந்து கிளம்பும் நெருப்பு ஒன்று அனைவரையும் ஷாம் சிரியா நோக்கி விரட்டிச் செல்லும். மக்கள் அனைவரும் அங்கு ஒன்று கூடிய நிலையில் கியாமத் ஏற்படும். மஹ்ஷர் என்பது சிரியாவாக இருக்கலாம் என விரிவுரையாளர்கள் கூறுவர். அதாவது அல்லாஹ் உலகத்தை அழித்த பின் ஷாம் இருந்த பகுதியை மஹ்ஷராக ஆக்கலாம்.      

عَنْ حُذَيْفَةَ بْنِ أَسِيدٍ الْغِفَارِيِّ قَالَ اطَّلَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْنَا وَنَحْنُ نَتَذَاكَرُ فَقَالَ مَا تَذَاكَرُونَ قَالُوا نَذْكُرُ السَّاعَةَ قَالَ إِنَّهَا لَنْ تَقُومَ حَتَّى تَرَوْنَ قَبْلَهَا عَشْرَ آيَاتٍ....وَآخِرُ ذَلِكَ نَارٌ تَخْرُجُ مِنْ الْيَمَنِ تَطْرُدُ النَّاسَ إِلَى مَحْشَرِهِمْ (مسلم) قال الخطابي : هذا الحشر يكون قبل قيام الساعة تحشر الناس أحياء إلى الشام .(فتح الباري

எனக்குப் பின்னால் ஹிஜ்ரத் கிடையாது என்பதன் விளக்கம்

وَقَالَ صَاحِبُ النِّهَايَةِ : إنَّ الْجَمْعَ بَيْنَهُمَا أَنَّ الْهِجْرَةَ هِجْرَتَانِ : إحْدَاهُمَا الَّتِي وَعَدَ اللَّهُ عَلَيْهَا بِالْجَنَّةِ كَانَ الرَّجُلُ يَأْتِي النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيَدَعُ أَهْلَهُ ، وَمَالَهُ لَا يَرْجِعُ فِي شَيْءٍ مِنْهُ فَلَمَّا فُتِحَتْ مَكَّةُ انْقَطَعَتْ هَذِهِ الْهِجْرَةُ .( وَالثَّانِيَةُ ) مَنْ هَاجَرَ مِنْ الْأَعْرَابِ وَغَزَا مَعَ الْمُسْلِمِينَ وَلَمْ يَفْعَلْ كَمَا فَعَلَ أَصْحَابُ الْهِجْرَةِ ، وَهُوَ الْمُرَادُ بِقَوْلِهِ : لَا تَنْقَطِعُ الْهِجْرَةُ حَتَّى تَنْقَطِعَ التَّوْبَةُ(عمدة القاري)

ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய இரு பெண் மக்களின் பத்தினித்தனம்- மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பத்தினித்தனம்

وَلَمَّا وَرَدَ مَاءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ أُمَّةً مِنَ النَّاسِ يَسْقُونَ وَوَجَدَ مِنْ دُونِهِمُ امْرَأَتَيْنِ تَذُودَانِ قَالَ مَا خَطْبُكُمَا قَالَتَا لَا نَسْقِي حَتَّى يُصْدِرَ الرِّعَاءُ وَأَبُونَا شَيْخٌ كَبِيرٌ

 தண்ணீர் பிடிக்கும் இடத்தில் அப்பெண்கள் ஒதுங்கி நிற்கக்காரணம் அங்கு ஆண்களும் கலந்திருந்தார்கள் என்றும் அப்பெண்கள் தம் முகத்தை பிறர் பார்த்து விடாதபடி மறைத்துக் கொண்டிருந்தார்கள் என்றும் ரிவாயத் உள்ளது. 

ஒரு உபகாரம் செய்த பின் அதைச் சொல்லி அல்லாஹ்விடம் உதவி கேட்பதில் தவறில்லை

فَسَقَى لَهُمَا ثُمَّ تَوَلَّى إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ (24)

சுருக்கமாக மட்டுமே தான் செய்த சேவையைச் சொல்லி தன் தேவையை அல்லாஹ்விடம் முறையிட்டார்கள்

குகையில் ஒதுங்கிய மூன்றுபேர் தாம் செய்த நல்லதைக்கூறி பாறை விலக அல்லாஹ்விடம் உதவி கேட்டது போல

சற்று நேரத்தில் அல்லாஹ்வின் உதவி வந்தது ஷுஐப் அலை தன் மகளை அனுப்பி அழைத்து வரச் சொன்னார்கள்

 

فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلَى اسْتِحْيَاءٍ قَالَتْ إِنَّ أَبِي يَدْعُوكَ لِيَجْزِيَكَ أَجْرَ مَا سَقَيْتَ لَنَا فَلَمَّا جَاءَهُ وَقَصَّ عَلَيْهِ الْقَصَصَ قَالَ لَا تَخَفْ

وروي أنها لما قالت ليجزيك كره ذلك ، ولما قدم إليه الطعام امتنع ، وقال إنا أهل بيت لا نبيع ديننا بدنيانا ، ولا نأخذ على المعروف ثمناً ، حتى قال شعيب عليه السلام هذه عادتنا مع كل من ينزل بنا ، وأيضاً فليس بمنكر أن الجوع قد بلغ إلى حيث ما كان يطيق تحمله فقبل ذلك على سبيل الاضطرار (قرطبي

ஆனால் மூஸா(அலை) வேறுவகையில் உதவியை எதிர்பார்த்தார்கள். இந்தப் பெண்களுக்குச் செய்த உபகாரத்திற்கு பிரதிபலன் வேண்டும் எதிர்பார்க்கவில்லை. அதை அவர்கள் விரும்பவும் இல்லை. அதனால் தான் மூத்த பெண் சஃபூரா வருங்கால மனைவி வந்து உங்களுக்குப் பிரதி உபகாரம் செய்ய எங்களின் தந்தை அழைக்கிறார் என்று கூறியபோது அதை விரும்பவில்லை என்றும், ஷுஐப் அலை அவர்கள் சாப்பிடச் சொன்ன போது  வேண்டாம் நாங்கள்  எங்களுடைய மார்க்க சேவைகளுக்கு மக்களிடம் பிரதிபலனை எதிர்பார்க்காத குடும்பம் என்று கூறினார்கள். பின்பு ஷுஐப் அலை வற்புறுத்தி உங்களுடைய பழக்கம் அதுவாக இருக்கலாம் ஆனால் எங்களுடைய பழக்கம் வந்த விருந்தாளிகளுக்கு வயிறார விருந்தளிப்பது. நீங்கள் செய்த உபகாரத்திற்கு கூலியாக இதை நினைக்க வேண்டாம் என்று வற்புறுத்தியதால் சாப்பிட்டார்கள். படிப்பினை- உணவிலும் பத்தினித்தனம்

பார்வையிலும் பத்தினித்தனம்

عَنِ السُّدِّيِّ:" " قَالَتْ إِنَّ أَبِي يَدْعُوكَ لِيَجْزِيَكَ أَجْرَ مَا سَقَيْتَ لَنَا " ، فَقَامَ مَعَهَا، وَقَالَ لَهَا: أَمْضِي، فَمَشَتْ بَيْنَ يَدَيْهِ، فَضَرَبَتْهَا الرِّيحُ فَنَظَرَ إِلَى عَجِيزَتِهَا، فَقَالَ لَهَا: امْشِي خَلْفِي وَدُلِّينِي عَلَى الطَّرِيقِ إِنْ أَخْطَأْتُ". (تفسير ابن ابي حاتم)

சஃபூரா அம்மையாரைத் திருமணம் செய்ய மூஸா அலை கொடுத்த மஹர் எவ்வளவு?

قَالَ إِنِّي أُرِيدُ أَنْ أُنْكِحَكَ إِحْدَى ابْنَتَيَّ هَاتَيْنِ عَلَى أَنْ تَأْجُرَنِي ثَمَانِيَ حِجَجٍ فَإِنْ أَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَ (27)

மாப்பிள்ளை தேடும்போது பணக்காரனா வெளி நாட்டில் வேலை பார்ப்பவனா என்றெல்லாம் பார்க்கும் இன்றைய சூழ்நிலை இருக்கும்போது அன்று ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் வெறுங்கையுடன் இருந்த மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தன் மகளைத் திருமணம் செய்து வைத்தார்கள். காரணம் தீன் பற்றை மட்டுமே பார்த்தார்கள்.

முந்திய உம்மத்தில் பணிவிடைகளையும் மஹராக வைக்கலாம் என்ற அடிப்படையில் தனது எட்டு வருட அல்லது பத்து வருட பணிவிடையை மூஸா அலைஹிஸ்ஸலாம் மஹராக ஆக்கினார்கள். அதாவது பத்து  வருட சம்பளம் எவ்வளவோ அவ்வளவும் மஹர்.  மாஷாஅல்லாஹ்.. மஹரின் மதிப்பைப் புரிந்து கொள்ள இதுபோதும்

குர்ஆன் கற்றுத் தருவதை மஹராக வைத்து நபி ஸல் திருமணம் செய்து வைத்தார்கள் அது அவர்களுக்கு மட்டும் பிரத்தியேகமானது இன்று அந்த அனுமதி இல்லை

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ أَنَّ امْرَأَةً جَاءَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ جِئْتُ لِأَهَبَ لَكَ نَفْسِي فَنَظَرَ إِلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَعَّدَ النَّظَرَ إِلَيْهَا وَصَوَّبَهُ ثُمَّ طَأْطَأَ رَأْسَهُ فَلَمَّا رَأَتْ الْمَرْأَةُ أَنَّهُ لَمْ يَقْضِ فِيهَا شَيْئًا جَلَسَتْ فَقَامَ رَجُلٌ مِنْ أَصْحَابِهِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنْ لَمْ يَكُنْ لَكَ بِهَا حَاجَةٌ فَزَوِّجْنِيهَا فَقَالَ هَلْ عِنْدَكَ مِنْ شَيْءٍ فَقَالَ لَا وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ اذْهَبْ إِلَى أَهْلِكَ فَانْظُرْ هَلْ تَجِدُ شَيْئًا فَذَهَبَ ثُمَّ رَجَعَ فَقَالَ لَا وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ مَا وَجَدْتُ شَيْئًا قَالَ انْظُرْ وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ فَذَهَبَ ثُمَّ رَجَعَ فَقَالَ لَا وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ وَلَا خَاتَمًا مِنْ حَدِيدٍ وَلَكِنْ هَذَا إِزَارِي قَالَ سَهْلٌ مَا لَهُ رِدَاءٌ فَلَهَا نِصْفُهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا تَصْنَعُ بِإِزَارِكَ إِنْ لَبِسْتَهُ لَمْ يَكُنْ عَلَيْهَا مِنْهُ شَيْءٌ وَإِنْ لَبِسَتْهُ لَمْ يَكُنْ عَلَيْكَ شَيْءٌ فَجَلَسَ الرَّجُلُ حَتَّى طَالَ مَجْلِسُهُ ثُمَّ قَامَ فَرَآهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُوَلِّيًا فَأَمَرَ بِهِ فَدُعِيَ فَلَمَّا جَاءَ قَالَ مَاذَا مَعَكَ مِنْ الْقُرْآنِ قَالَ مَعِي سُورَةُ كَذَا وَسُورَةُ كَذَا وَسُورَةُ كَذَا عَدَّهَا قَالَ أَتَقْرَؤُهُنَّ عَنْ ظَهْرِ قَلْبِكَ قَالَ نَعَمْ قَالَ اذْهَبْ فَقَدْ مَلَّكْتُكَهَا بِمَا مَعَكَ مِنْ الْقُرْآنِ (بخاري5030

ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (-மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள-) வந்துள்ளேன்'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப்பார்த்துவிட்டு அதைத் தாழ்த்திக் கொண்டார்கள். பிறகு தம் தலையைத் தொங்கவிட்டார்கள். தம் விஷயத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எந்த முடிவுக்கும் வரவில்லை என்பதைக் கண்ட அப்பெண்மணி, (அந்த இடத்திலேயே) அமர்ந்துகொண்டார். அப்போது நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு இவர் தேவையில்லையென்றால் எனக்கு இவரை மணமுடித்துவையுங்கள்!'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் (அவரிடம்), '(மஹ்ராகச் செலுத்த) உம்மிடம் பொருள் ஏதேனும் இருக்கிறதா?' என்று கேட்டார்கள். அவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! (என்னிடம் ஏதும்) இல்லை, இறைத்தூதர் அவர்களே!'' என்று பதில் கூறினார். நபி(ஸல்)அவர்கள், 'உம் குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா என்று பார்!'' என்றார்கள். அவர் போய் பார்த்துவிட்டு பிறகு திரும்பி வந்து, 'இல்லை. இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! (ஏதும் கிடைக்கவில்லை)'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இரும்பாலான ஒரு மோதிராமாவது (ம்டைக்குமா எனப்) பார்!'' என்றார்கள். அவர் (மீண்டும்) சென்றுவிட்டுத் திரும்பி வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! (ஏதும் கிடைக்கவில்லை)'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இரும்பாலான ஒரு மோதிராமாவது (ம்டைக்குமா எனப்) பார்!'' என்றார்கள். அவர்(மீண்டும்) சென்றுவிட்டுத் திரும்பி வந்து, 'அல்லாஹ்வின் மீதாணையாக! (ஒன்றும்) கிடைக்கவில்லை. இறைத்தூதர் அவர்களே! இரும்பாலான மோதிரம் கூட கிடைக்கவில்லை; ஆனால், இதோ இந்த என்னுடைய வேட்டி உள்ளது'' என்றார். -அறிவிப்பாளர் ஸஹ்ல்(ரலி) கூறினார்: அவரிடம் ஒரு மேல்துண்டு கூட இல்லை; எனவேதான் தம் வேட்டியில் பாதியை அவளுக்குத் தருவதாகக் கூறினார். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'உம்முடைய (இந்த ஒரு) வேட்டியை வைத்துக்கொண்டு என்ன செய்வீர்? அந்த வேட்டியை நீர் உடுத்திக்கொண்டால், அவளின் மீது அதில் ஏதும் இருக்காது. அதை அவள் உடுத்திக் கொண்டால் உம் மீது அதில் ஏதும் இருக்காது. (உம்முடைய வேட்டியைக் கொடுத்து)விட்டு என்ன செய்யப்போகிறாய்?)'' என்று கேட்டார்கள். அவர் நெடுநேரம் (அங்கேயே) அமர்ந்திருந்துவிட்டுப் பிறகு எழுந்தார். அவர் திரும்பிச் செல்வதைக் கண்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரை அழைத்து வருமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர் அழைத்துவரப்பட்டபோது நபி(ஸல்) அவர்கள், 'உம்முடன் குர்ஆனில் என்ன ( மனப்பாடமாக) உள்ளது?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், '(குர்ஆனில்) இன்ன , இன்ன , இன்ன , இன்ன என்னுடன் உள்ளன'' என்று அவற்றை அவர் எண்ணி எண்ணிக் கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா?' என்று கேட்டார்கள். 'ஆம் (ஓதுவேன்)'' என்று அவர் பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், 'உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக அவளை உமக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டேன். நீர் செல்லலாம்!'' என்று கூறினார்கள்.      சட்டம்- தனக்குப் பேசப்பட்ட மஹரைத் தரா விட்டால்  கணவனுடன் படுக்கைக்கு வர மாட்டேன் என்று சொல்வதற்கும், வெளியே அழைத்துச் செல்வதற்கும் சம்மதிக்க மாட்டேன் என்று கூறுவதற்கும் அப்பெண்ணுக்கு உரிமை உண்டு- நூல்- ஹிதாயா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பாடப் புத்தகங்களில் மறைக்கப் படும் வரலாறுகள்

    01-08-2025 بسم الله الرحمن الرحيم   பாடப் புத்தகங்களில்  மறைக்கப் படும் வரலாறுகள் https://chennaijamaathululama.blogspot.com என்ற...