சனி, 16 ஏப்ரல், 2022

15- ம் தராவீஹ் - பயான் நபிமார்களின் பரக்கத்தால் புகழடைந்த அத்தி, ஜைத்தூன் மரங்கள்

 




15- ம் தராவீஹ்  பயான்

நபிமார்களின் பரக்கத்தால் புகழடைந்த அத்தி, ஜைத்தூன் மரங்கள்

اللَّهُ نُورُ السَّمَوَاتِ وَالْأَرْضِ مَثَلُ نُورِهِ كَمِشْكَاةٍ فِيهَا مِصْبَاحٌ الْمِصْبَاحُ فِي زُجَاجَةٍ الزُّجَاجَةُ كَأَنَّهَا كَوْكَبٌ دُرِّيٌّ يُوقَدُ مِنْ شَجَرَةٍ مُبَارَكَةٍ زَيْتُونَةٍ لَا شَرْقِيَّةٍ وَلَا غَرْبِيَّةٍ يَكَادُ زَيْتُهَا يُضِيءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نار(35)النور

زيتونة ( وإنما خصّ الزيتونة من بين سائر الاشجار لأنّ دهنها أضوأ وأصفر .  (الكشف والبيان

கருத்து- ஜைத்தூன் ஆயிலுக்கு அதாவது ஆலிவ் ஆயிலுக்கு இயற்கையாகவே பிரகாசம் உண்டு. அவ்வாறிருக்க அந்த எண்ணெய் மூலம் ஒரு விளக்கு  ஏற்றப்பட்டு அந்த விளக்கு ஒரு கண்ணாடி குளோபுக்குள் வைக்கப்பட்டு  அந்த குளோப் ஒரு மாடத்தில் வைக்கப்பட்டால் அந்த மாடம் எவ்வளவு பிரகாசமாக இருக்குமோ அது போன்று ஒரு முஃமினின் உள்ளத்தில் ஏற்படுத்தும் பிரகாசம் சிறப்பானதாகும்.

ஜைத்தூன் (ஆலிவ்)மரம்

ஜைத்தூன் மரம் பற்றியும் அதன் எண்ணைய் பற்றியும் குர்ஆனில் வேறு பல இடங்களிலும்

وَشَجَرَةً تَخْرُجُ مِنْ طُورِ سَيْنَاءَ تَنْبُتُ بِالدُّهْنِ وَصِبْغٍ لِلْآكِلِينَ (20)المؤمنون

وَالتِّينِ وَالزَّيْتُونِ (1) وَطُورِ سِينِينَ (2) وَهَذَا الْبَلَدِ الْأَمِينِ (3)

நாம் அல்லாஹ்வைத் தவிர வேறு எதன் மீதும் சத்தியம் செய்ய முடியாது. ஆனால் அல்லாஹ் அவனது படைப்புகளில் முக்கியமானவைகளின் மீது சத்தியம் செய்வான்.அந்த வகையில் அத்தி, ஜைத்தூன் மரங்களின் மீது அல்லாஹ் சத்தியம் செய்கிறான். இந்த மரங்கள் நபிமார்கள் அதிகம் வாழ்ந்த பாலஸ்தீன் பகுதியில் அதிகம் விளைகின்றன. நபி மூஸா அலை தன் கடைசி விருப்பமாக இந்த மண்ணில் பைத்துல் முகத்தஸுக்கு அருகில் அடக்கம் செய்யப் பட வேண்டும் என விரும்பினார்கள். (சம்பவம்)

நபி யூசுஃப் அலை எகிப்தில் இறந்தாலும் என்றாவது ஒருநாள் நீங்கள் பாலஸ்தீன் செல்லும்போது என் உடலையும் அங்கு எடுத்துச் சென்று விடுங்கள் என வஸிய்யத் செய்தார். (சம்பவம்)

வெள்ளப் பிரளயத்திற்குப் பின் உலகில் முதலாவதாக விளைந்த மரம்

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:"كَانَ مَعَ نُوحٍ فِي السَّفِينَةِ ثَمَانُونَ رَجُلا مَعَهُمْ أَهْلُوهُهُمْ، وَأَنَّهُمْ كَانُوا فِي السَّفِينَةِ مِائَةً وَخَمْسِينَ يَوْمًا وَأَنَّ اللَّهَ وَجَّهَ السَّفِينَةَ إِلَى مَكَّةَ فَدَارَتْ بِالْبَيْتِ أَرْبَعِينَ يَوْمًا، ثُمَّ وَجَّهَهَا إِلَى الْجُوادِيِّ، فَاسْتَقَرَّتْ عَلَيْهِ، فَبَعَثَ نُوحٌ الْغُرَابُ لَيَأْتِيهِ بِخَبَرِ الأَرْضِ، فَذَهَبَ فَوَقَعَ عَلَى الْجِيَفِ، فَأَبْطَأَ عَلَيْهِ فَبَعَثَ الْحَمَامَةَ، فَأَتَتْهُ بِوَرِقِ الزَّيْتُونِ، وَلَطَخَتْ رِجْلَهَا بِالطِّينِ، فَعَرَفَ نُوحٌ أَنَّهُ الْمَاءُ قَدْ نَضَبَ، فَهَبَطَ إِلَى أَسْفَلِ الْجُودِيِّ فَبَنَى قَرْيَةً وَسَمَّاهَا ثَمَانِينَ، فَأَصْبَحُوا ذَاتَ يَوْمٍ وَقَدْ تَبَلْبَلَتْ أَلْسِنَتُهُمْ عَلَى ثَمَانِينَ لُغَةٍ أَحَدُهُمَا اللِّسَانُ الْعَرَبِيُّ فَكَانَ لا يُفَقِّهُّ بَعْضُهُمْ كَلامَ بَعْضٍ، وَكَانَ نُوحٌ عَلَيْهِ السَّلامُ يُعَبِّرُ عَنْهُمْ".(تفسير ابن كثير)

அந்தக் கப்பல் சுமார் 150 நாட்கள் பயணம் செய்தது. வரும் வழியில் மக்காவில் மட்டும் கஃபாவை நாற்பது நாட்கள் அக்கப்பல் சுற்றிச் சுற்றி வந்தது.  (கஃபாவின் உண்மையான உயரம் பைத்துல் மஃமூர் வரை என்பது குறிப்பிடத்தக்கது.) பின்பு ஜூதி மலையில் தரை தட்டிய பின் நபி நூஹ் அலை நீர் வற்றி விட்டதா என்று பார்க்க காகத்தை அனுப்ப, அது ஒரு பிணத்தைப் பார்த்தவுடன் அதன் மீது உட்கார்ந்து சாப்பிடத் துவங்கி விட்டது. திரும்பி வரத் தாமதம் ஆனதால் புறாவை அனுப்பினார்கள். அது சென்று பார்த்து விட்டு வந்த போது அதன் காலில் சேறும், அதன் வாயில் ஜைத்தூன் மர இலையும் இருப்பதைக் கண்டார்கள். (தூஃபானுக்குப் பின் முதலில் விளைந்த மரம் ஜைத்தூன் மரம் தான்.) நீர் வற்றியதை அறிந்து அங்கிருந்து கீழே இறங்கி மலையடிவாரத்தில் தங்கினார்கள். அந்த இடத்திற்கு ஸமானூன் என்று பெயரும் வைத்தார்கள். காரணம் அவர்கள் மொத்தம் 80 பேர் இருந்தார்கள். அந்த 80 பேரும் தூங்கும்போது ஒரே பாஷை பேசுபவர்களாக இருந்தனர். ஆனால் தூங்கி எழுந்த பின் அவர்களின் பாஷைகள் அனைத்தயும் அல்லாஹ் மாற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாஷை பேசுபவர்களாக மாறி விட்டனர். ஒருவரின் பாஷை மற்றவருக்குப் புரியாது. எல்லா பாஷைகளையும் புரிந்தவர்கள் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் மட்டும் தான். அல்லாஹ் தன் ஆற்றலை வெளிக்காட்ட இவ்வாறு செய்தான்.

عَنْ أَبِي أَسِيدٍ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُوا الزَّيْتَ وَادَّهِنُوا بِهِ فَإِنَّهُ مِنْ شَجَرَةٍ مُبَارَكَةٍ (ترمذي)

ஜைத்தூன் எண்ணெயை சால்னாவாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேனியில் தேய்ப்பதற்கும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் ஜைத்தூன் மரம் பரக்கத் (அபிவிருத்தி)நிறைந்த மரமாகும்.  நபிமொழி-  இப்னுமாஜா

عن عبد الله بن ثابت الأنصاري قال : دعا بَنِيه ودعا بزيت فقال : ادهنوا رؤوسكم ، فقالوا : لا ندهن رؤوسنا بالزيت قال : فأخذ العصا وجعل يضربهم ويقول : أترغبون عن دهن رسول الله ( صلى الله عليه وسلم ) – قرطبي

அப்துல்லாஹ் இப்னு ஸாபித் ரழி தன் மகனை ஜைத்தூன் எண்ணெயை தலைக்குத் தேய்க்கும்படி சொன்னார்கள். அதற்கு மகன் எனக்கு இந்த எண்ணெயை தலைக்கு நாங்கள் தேய்க்க மாட்டோம். எங்களுக்கு பிடிக்காது என்று சொன்ன போது நபி ஸல் அவர்களுக்கு பிடித்தமான எண்ணெயை நீங்கள் பிடிக்காது என்றா கூறுகிறாய் என்று அதட்டி குச்சியை எடுத்து  மகனை அடிக்க ஆரம்பித்தார்கள்.                       

وأول شجرة نبتت بعد الطوفان وتنبت في منازل الأنبياء والأرض المقدسة ودعا لها سبعون نبيا بالبركة منهم إبراهيم ومنهم محمد صلى الله عليه و سلم فإنه قال : [ اللهم بارك في الزيت والزيتون ] قاله مرتين  - قرطبي

வெள்ளப் பிரளயத்திற்குப் பின் உலகில் முதலாவதாக விளைந்த மரம் ஜைத்தூன் மரமாகும். நபிஇப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் உட்பட சுமார் எழுபது நபிமார்கள் ஜைத்தூன் மரத்தின் அபிவிருத்திக்காக துஆ செய்துள்ளார்கள்.  அதில் குறிப்பாக நமது நபி ஸல் அவர்கள் துஆ செய்துள்ளார்கள். மற்றொரு அறிவிப்பில்

நபிஇப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் உட்பட சுமார் எழுபது நபிமார்கள் ஜைத்தூன் பழத்தை பயன்படுத்தியுள்ளார்கள். காயத்தால் ஏற்பட்ட தளும்புகள் மறைய இந்த ஜைத்தூன்(ஆலிவ்) ஆயிலை தடவலாம்.நூல்- துஹ்ஃபதுல் அஹ்வதீ

قال النبي صلى اللّه عليه وسلم "نعم السواك الزيتون من الشجرة المباركة، يطيب الفم، ويذهب بالحفر، وهي سواكي وسواك الأنبياء من قبلي" .(طبراني)

عن عقبة بن عامر أنَّ رسول الله ( صلى الله عليه وسلم ) قال : ( عليكم بهذه الشجرة المباركة زيت الزيتون فتداووا به فإنّه مصحّة من الباسور ) . قرطبي

ஜைத்தூன் எண்ணெயை சால்னாவாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஜைத்தூன் ஆயில் மூல நோய்க்கு மருந்தாகும்.

அத்தி மரம்

أما التين فقالوا إنه غذاء وفاكهة ودواء أما كونه غذاء فالأطباء زعموا أنه طعام لطيف سريع الهضم لا يمكث في المعدة يلين الطبع ويخرج الترشح ويقلل البلغم ويطهر الكليتين ويزيل ما في المثانة من الرمل ويسمن البدن ويفتح مسام الكبد والطحال وهو خير الفواكه (الرازي     

அத்திமரம் இது பல வகைஉள்ளது. இந்த இடத்தில் கூறப்பட்டுள்ள அத்திமரம் என்பது மக்களால் அதிகமாக உண்ணப்படும் அத்திப் பழங்களைக் கொடுக்கின்ற வகையாகும். இப்பழம் மிகவும் சிறப்பு மிக்கதாகும். மிக விரைவில் ஜீரணமாகக் கூடிய உணவும் மிகவும் பயனுள்ள மரமாகும். இது கோழைத் தன்மையை உடைத்துவிடும். ஆண்மையை அதிகரிக்கும். மலட்டுத் தன்மையை நீக்கும். வீரியத்தைக் கொடுக்கும். உடலில் உள்ள பருமனைக் குறைக்கும். மேலும் இடுப்பின் முது கெலும்புகளுடன் ஒட்டி இருக்கின்ற இரண்டு தசைத் துண்டுகளை தூய்மைப் படுத்துகிறது இந்த தசையில் இருந்து தான் சிசுவின் பிண்ட உற்பத்தி விளைகிறது. மேலும் சிறு நீரகத்தில் (கிட்னியில்)  உற்பத்தியாகிற மணலை நீக்கி விடும்.  உடல் பலத்தை கொடுக்கும். அத்திப் பழம் வாய் நாற்றத்தைப் போக்கும் கூந்தலை வளரச் செய்யும் பக்கவாத நோய் வராமல் தடுக்கும் என்று ஒரு சஹாபி கூறியுள்ளார்கள்.  அத்தி மரக்கட்டையின் சாம்பல் தோட்டங்களில் தூவப் பட்டால் அங்குள்ள புழுக்கள் செத்துப்போகும். அதன் புகையால் கொசுவும் மூட்டைப் பூச்சியும் விலகும்.

நபி ஆதம் (அலை) சுவனத்தில் இருந்து கொண்டு வந்த அத்தி இலைகள்

وقال أبو ذر: أهدي للنبي صلى اللّه عليه وسلم سل تين؛ فقال: "كلوا" وأكل منه. ثم قال: "لو قلت إن فاكهة نزلت من الجنة لقلت هذه، لأن فاكهة الجنة بلا عجم، فكلوها فإنها تقطع البواسير، وتنفع من النقرس"(تفسير الرازي)

 

நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு கூடை நிறைய அத்திப்பழம் அன்பளிப்பாக அளிக்கப்பட்டது அதிலிருந்து சிலவற்றை சாப்பிட்டபிறகு, சாப்பிடுங்கள்!கொட்டைகள் இல்லாத சுவனத்துப் பழங்களில் இருந்து ஒரு பழம் பூமிக்கு இறங்கி இருக்கிறது என்றால் இதை நான் கூறுவேன்.  இதனை உண்ணுங்கள் இது மூலநோயை நீக்கும். கை, கால்களில் ஏற்படும் வாதத்தைக் கட்டுப்படுத்தும் என்றார்கள். 

படிப்பினை-சுவனத்துப் பழங்களில் எதற்கும் கொட்டை இருக்காது. ஏனெனில் அதை தூக்கி வீசுவோம். சுவனத்தில் அத்தகைய வேஸ்ட் எதுவும் இருக்காது

 

ஆதம் (அலை) அவர்கள் அல்லாஹ் தடுத்த கனியை சாப்பிட்டார்கள். அதனால் அவர்கள் ஆடை நீங்கியது வெட்கப்பட்டு அத்தி மரத்தின் இலைகளை வைத்துத் தான் தங்கள் உடலை மறைத்துக் கொண்டார்கள். பிறகு பூமிக்கு அனுப்பப்பட்டார்கள். இதைக் கேள்விபட்ட சில மான்களின் கூட்டம் பார்ப்பதற்கு வந்தது. ஆதம் (அலை) அவர்கள் அந்த இலையை உண்ணக் கொடுத்தார்கள். அந்த மான்கள் அதை உண்டன. உடனே அவைகளின் உடலில் கஸ்தூரியும் அழகும் ஏற்பட்டது.

பிறகு அந்த மான்கள் தன்கூட்டத்திற்கு சென்றது. அதைக் கண்ட மற்ற மான்கள் நாங்களும் இது போன்று ஆகவேண்டும் என்ற ஆசையுடன் ஆதம் (அலை) அவர்களைக் காண வந்தன. அந்த மான்களும் அந்த இலையை உண்டன. ஆனால் கஸ்தூரி உருவாகவில்லை அழகு மட்டும் கூடியது. காரணம் முதலில் வந்த மான்கள் ஆதம் (அலை) அவர்களுக்கு மரியாதை தரும் நோக்கத்தில் வந்தன. அடுத்து வந்த மான்கள் சுயநல நோக்கத்துடன் வந்தன. என்று காரணம் கூறுவார்கள்.

பெருமானார் ஸல் அவர்களுக்கு உதாரணம் அத்தி மரம்.

உலகிலேயே சாதாரணமாக மற்ற மரங்களில் முதலில் பூ பூக்கும். அதைப் பறித்தால் நமக்குப் பலன்கள் இருக்காது. சில மரங்கள் தான் பூப்பூக்காமல் காய் காய்க்கும். அதில் அத்தி மரமும் ஒன்று. அதேபோல் சாதாரணமாக மற்ற மரங்களின் பழங்களை கீழிருந்து பறிக்க முடியாது. அதன் கிளைகளில் தான் பறிக்க முடியும். கிளைகளில் கூட அதன் நுனியில் பறிக்க முடியாது. ஆனால் அத்தி மரத்தின் அடியிலும் அத்திப் பழம் உருவாகும். அதன் கிளைகளில் இருந்து பிரிகின்ற எல்லா பாகங்களிலும் உருவாகும். இது நபி ஸல் அவர்களுக்கு உதாரணம். நபி ஸல் அவர்களின் குழந்தைப் பருவம், இளமைப் பருவம், முதுமைப் பருவம் என எல்லா பருவங்களும் நமக்கு முன்மாதிரி எனும்  பலன்களைத் தருகின்றன.

சிறந்த முஃமினுக்கு உதாரணமாக பேரீத்த மரத்தையும் நபி ஸல் கூறியுள்ளார்கள்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ مِنْ الشَّجَرِ شَجَرَةً لَا يَسْقُطُ وَرَقُهَا وَهِيَ مَثَلُ الْمُسْلِمِ حَدِّثُونِي مَا هِيَ فَوَقَعَ النَّاسُ فِي شَجَرِ الْبَادِيَةِ وَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ قَالَ عَبْدُ اللَّهِ فَاسْتَحْيَيْتُ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنَا بِهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هِيَ النَّخْلَةُ قَالَ عَبْدُ اللَّهِ فَحَدَّثْتُ أَبِي بِمَا وَقَعَ فِي نَفْسِي فَقَالَ لَأَنْ تَكُونَ قُلْتَهَا أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ يَكُونَ لِي كَذَا وَكَذَا (بخاري131

வயதில் மூத்தவர்கள் உள்ளனர் என்ற அடக்கத்தால் பதில் கூறவில்லை. பணிவு தான் அவர்களை உயர்த்தியது

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...