14- ம் தராவீஹ் பயான்-
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1) الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ (2)
மன ஓர்மையுடன் தொழுவது
எத்தனை ரக்அத் தொழுதோம் என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்துகிறான்
عَنْ أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أُذِّنَ بِالصَّلَاةِ أَدْبَرَ الشَّيْطَانُ لَهُ ضُرَاطٌ حَتَّى لَا يَسْمَعَ التَّأْذِينَ فَإِذَا سَكَتَ الْمُؤَذِّنُ أَقْبَلَ فَإِذَا ثُوِّبَ أَدْبَرَ فَإِذَا سَكَتَ أَقْبَلَ فَلَا يَزَالُ بِالْمَرْءِ يَقُولُ لَهُ اذْكُرْ مَا لَمْ يَكُنْ يَذْكُرُ حَتَّى لَا يَدْرِيَ كَمْ صَلَّى (بخاري)
அல்லாமா இப்னுல் கைய்யிம் ரஹ் அவர்கள் கூறியுள்ளார்கள். தொழுகையாளிகள் ஐந்து வகையினர். 1.தொழுகையில் அநியாயக்காரர்கள் இவர்கள் விட்டு விட்டு தொழுவார்கள். அல்லது ஜும்ஆ ஈத் ஆகிய முக்கிய தினங்களில் மட்டுமே தொழுவார்கள். தொழுகை தவறியதற்காக கவலைப்பட மாட்டார்கள். இவர்களுக்கு அல்லாஹ்விடம் கடுமையான தண்டனை உண்டு. 2.இவர்கள் தவறாமல் தொழுபவர்கள். பாங்கு சொன்னவுடன் மஸ்ஜிதுக்கு வருபவர்கள். எனினும் தொழ ஆரம்பித்தால் அதை முடிக்கும் வரை சிந்தனைகள் வெளியே இருக்கும். அதை கட்டுப்படுத்த எந்த முயற்சியும் செய்ய மாட்டார்கள். இவர்களும் மிகக் கடுமையாக அல்லாஹ்விடம் விசாரிக்கப்படுவார்கள். 3. இவர்களும் தவறாமல் தொழுபவர்கள் தான். இவர்களுக்கு தொழுகையில் வேறு சிந்தனைகள் சில நேரம் வரும். எனினும் அதை கட்டுப்படுத்த முடிந்த வரை முயற்சிப்பார்கள். இவர்களுக்கு தொழுகையின் நன்மைகள் கிடைக்கா விட்டாலும் இவர்களின் சிறு பாவங்கள் மன்னிக்கப்படலாம். 4.இவர்களும் தொழுகையாளிகள் தான். ஆனால் முழுக்க முழுக்க தொழுகையில் வெளி சிந்தனைகள் இன்றி கவனமாக தொழுவார்கள். இவர்கள் தான் தொழுகைக்கான நன்மைகள் வழங்கப்படுபவர்கள். 5.இவர்கள் இறைநேசர்கள் இவர்கள் தொழ ஆரம்பித்தால் அல்லாஹ்வின் அன்பில் முற்றிலுமாக மூழ்கி அல்லாஹ் தன் முன் இருப்பது போன்று தொழுவார்கள்இவர்களே மற்ற அனைவரையும் விட மேலானவர்கள்- நூல் வாபிலுஸ் ஸய்யிப்
தொழுபவர்களின் கவனத்தை திசை திருப்பக் கூடாது என்பதில் நபி ஸல் அவர்களின் பேணுதல்
عن أَنَس رضي الله عنه قَالَ بَيْنَمَا الْمُسْلِمُونَ فِي صَلَاةِ الْفَجْرِ لَمْ يَفْجَأْهُمْ إِلَّا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَشَفَ سِتْرَ حُجْرَةِ عَائِشَةَ فَنَظَرَ إِلَيْهِمْ وَهُمْ صُفُوفٌ فَتَبَسَّمَ يَضْحَكُ وَنَكَصَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى عَقِبَيْهِ لِيَصِلَ لَهُ الصَّفَّ فَظَنَّ أَنَّهُ يُرِيدُ الْخُرُوجَ وَهَمَّ الْمُسْلِمُونَ أَنْ يَفْتَتِنُوا فِي صَلَاتِهِمْ فَأَشَارَ إِلَيْهِمْ أَتِمُّوا صَلَاتَكُمْ فَأَرْخَى السِّتْرَ وَتُوُفِّيَ مِنْ آخِرِ ذَلِكَ الْيَوْمِ (بخاري)باب هَلْ يَلْتَفِتُ لأَمْرٍ يَنْزِلُ بِهِ-كتاب الاذان
நபி ஸல் அவர்களின் கடைசி நேரத்தில் அவர்கள் வீட்டில் இருக்கும் நிலையில் ஃபஜ்ருத்தொழுகை ஜமாஅத் நடைபெற்றது. திரையை விலக்கி தோழர்களைப் பார்த்தார்கள். நபி ஸல் அவர்களைக் கண்ட சந்தோஷத்தில் தோழர்களின் சிந்தனைகள் தடுமாறுவதைக் கண்ட நபி ஸல் தொழுகையைப் பூர்த்தி செய்யுங்கள் என்று கூறி திரையை மூடிக் கொண்டார்கள். அது தான் கடைசியாக தோழர்களை நபி ஸல் அவர்கள் பார்த்த பார்வையாகும் அன்றே வஃபாத்தாகி விட்டார்கள். தொழுபவருக்கு இடையூறு தரக்கூடாது என மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கவே நபி ஸல் அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டார்கள். இல்லையெனில் நபி ஸல் அவர்களிடம் பேசுவதால் அவர்களிடம் பேசுவதால் தொழுகை முறியாது
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ (الانفال 24
தொழுகையில் ஷைத்தானின் ஊசலாட்டங்களை தடுப்பது எப்படி ?
1, அல்லாஹ் நம்மை பார்த்துக் கொண்டிருப்பதாக எண்ணி, உளத்தூய்மையுடன் வணங்குவது
وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ (5البينة)عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ(في قصةمجيئ جبرئيل عليه السلام)قَالَ (مَا الْإِحْسَانُ ؟ قَالَ(النبي صَلَّي الله عليه وسلم) أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ (بخاري)
முகஸ்துதிக்காக தொழுபவர்களிடம் உளத்தூய்மை இருக்காது
فَوَيْلٌ لِلْمُصَلِّينَ (4) الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ (5) الَّذِينَ هُمْ يُرَاءُونَ (6)عَنْ اِبْن عَبَّاس رَضِيَ اللَّه عَنْهُمَا عَنْ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ " إِنَّ فِي جَهَنَّم لَوَادِيًا تَسْتَعِيذ جَهَنَّم مِنْ ذَلِكَ الْوَادِي فِي كُلّ يَوْم أَرْبَعمِائَةِ مَرَّة أُعِدَّ ذَلِكَ الْوَادِي لِلْمُرَائِينَ مِنْ أُمَّة مُحَمَّد لِحَامِلِ كِتَاب اللَّه وَلِلْمُصَّدِّقِ3 فِي غَيْر ذَات اللَّه وَلِلْحَاجِّ إِلَى بَيْت اللَّه وَلِلْخَارِجِ فِي سَبِيل اللَّه (تفسير ابن كثير)(طبراني)
இமாம் ஓதும் கிராஅத்தை செவி சாய்த்து கேட்பதாலும் கவனம் சிதறாது
قال الله تعالي وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ(204الاعراف) عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا وَإِذَا قَرَأَ فَأَنْصِتُوا (ابوداود)
இஷாவில் நபிஸல் என்ன சூரா ஓதினார்கள் என அபூஹுரைரா நினைவில் வைத்திருந்தார்கள். ஆனால் இன்னொருவருக்கு நினைவில் இல்லை
عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ النَّاسُ أَكْثَرَ أَبُو هُرَيْرَةَ فَلَقِيتُ رَجُلًا فَقُلْتُ بِمَا قَرَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَارِحَةَ فِي الْعَتَمَةِ فَقَالَ لَا أَدْرِي فَقُلْتُ لَمْ تَشْهَدْهَا قَالَ بَلَى قُلْتُ لَكِنْ أَنَا أَدْرِي قَرَأَ سُورَةَ كَذَا وَكَذَا (بخاري) باب تَفَكُّرِ الرَّجُلِ الشَّىْءَ فِى الصَّلاَةِ
தொழுகையில் கவனம் சிதறாமல் இருப்பதற்காக தடுக்கப்பட்ட சில விஷயங்கள்
عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنه قَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا وُضِعَ عَشَاءُ5 أَحَدِكُمْ وَأُقِيمَتْ الصَّلَاةُ فَابْدَءُوا بِالْعَشَاءِ وَلَا يَعْجَلَنَّ حَتَّى يَفْرُغَ مِنْهُ (مسلم)بَاب كَرَاهَةِ الصَّلَاةِ بِحَضْرَةِ الطَّعَامِ الَّذِي يُرِيدُ أَكْلَهُ فِي الْحَالِ وَكَرَاهَةِ الصَّلَاةِ مَعَ مُدَافَعَةِ الْأَخْبَثَيْنِ- كتاب المساجد
இகாமத் சொல்லப்பட்டு விட்டாலும் இரவு உணவு தயாராக இருக்கும் நிலையில் நல்ல பசியும் இருந்தால் முதலில் அஷாவை அதாவது உணவை முடித்து விட்டு பிறகு இஷா தொழுங்கள்.
காரணம் இதே பசியுடன் தொழுதால் இஷா தொழுகை அனைத்தும் உணவு சிந்தனையாக மாறி விடும்.
عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا نَعَسَ6 أَحَدُكُمْ وَهُوَ يُصَلِّي فَلْيَرْقُدْ حَتَّى يَذْهَبَ عَنْهُ النَّوْمُ فَإِنَّ أَحَدَكُمْ إِذَا صَلَّى وَهُوَ نَاعِسٌ لَا يَدْرِي لَعَلَّهُ يَسْتَغْفِرُ فَيَسُبُّ نَفْسَهُ(بخاري)وَقَالَ أَبُو الدَّرْدَاءِ مِنْ فِقْهِ الْمَرْءِ إِقْبَالُهُ عَلَى حَاجَتِهِ حَتَّى يُقْبِلَ عَلَى صَلاَتِهِ وَقَلْبُهُ فَارِغٌ (بخاري)
உருவப் படங்கள் உள்ள இடத்தில் தொழுவதால் கவனம் சிதறும்
عَنْ أَنَسٍكَانَ قِرَامٌ لِعَائِشَةَ سَتَرَتْ بِهِ جَانِبَ بَيْتِهَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَأَمِيطِي عَنَّا قِرَامَكِ7 هَذَا فَإِنَّهُ لَا تَزَالُ تَصَاوِيرُهُ تَعْرِضُ فِي صَلَاتِي(بخاري
வண்ண மயமான ஆடையை அணிந்து தொழுததால் கவனம் சிதறியது என்பதற்காக அதை திருப்பிக் கொடுத்த நபி ஸல்
عَنْ عَائِشَةَرض قالت أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي خَمِيصَةٍ8 لَهَا أَعْلَامٌ فَنَظَرَ إِلَى أَعْلَامِهَا نَظْرَةً فَلَمَّا انْصَرَفَ قَالَ اذْهَبُوا بِخَمِيصَتِي هَذِهِ إِلَى أَبِي جَهْمٍ وَأْتُونِي بِأَنْبِجَانِيَّةِ9 أَبِي جَهْمٍ فَإِنَّهَا أَلْهَتْنِي آنِفًا عَنْ صَلَاتِيوفي روايةكُنْتُ أَنْظُرُ إِلَى عَلَمِهَا وَأَنَا فِي الصَّلَاةِ فَأَخَافُ أَنْ تَفْتِنَنِي(بخاري
தொழுகையை முறிக்காத சிறிய செயலைக் கொண்டு செல்ஃபோன் ஒலியை ஆஃப் செய்ய முடிந்தால் செய்யலாம்
ويفسد الصلاة العملُ الكثير لا القليلُ والفاصل بينهما أن الكثير هو الذي لا يشك الناظر لفاعله أنه ليس في الصلاة وإن اشتبه فهو قليل على الأصح وقيل في تفسيره غير هذا كالحركات الثلاث المتواليات كثيرٌ ودونها قليل(مراقي الفلاح)
عن عائشة رضي الله عنها قالت : استفتحتُ10 الباب ورسول الله صلى الله عليه وسلم يصلي تطوعا والباب في القبلة فمشى النبي صلى الله عليه وسلم عن يمينه أو عن يساره حتى فتح الباب ثم رجع إلى الصلاة (صحيح ابن حبان)
கிப்லா பக்கம் இருந்த கதவை நோக்கி நின்று நபி ஸல் தொழுது கொண்டிருந்த போது நான் கதவைத் தட்டினேன். தொடர் படியாக எட்டு வைத்து நடக்காமல் ஒவ்வொரு எட்டாக எடுத்து வைத்து நபி ஸல் அவர்கள் கதவை திறந்தார்கள்
பொருள்- 3,தர்மம் செய்பவர் 4,தங்கக் கட்டி 5,இரவு உணவு 6,சிறு தூக்கம் தூங்கினார் 7,உருவம் உள்ள திரைத் துணியை அகற்று 8,வண்ண மயமான ஆடை 9, வண்ணம் இல்லாத ஆடை 10,கதவைத் தட்டினேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக