வியாழன், 21 ஏப்ரல், 2022

20- ம் தராவீஹ் பயான் - படிப்பினைக்குரிய சுற்றுலா

 




20- ம் தராவீஹ்  பயான் - படிப்பினைக்குரிய சுற்றுலா

أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ كَانُوا أَكْثَرَ مِنْهُمْ وَأَشَدَّ قُوَّةً وَآثَارًا فِي الْأَرْضِ (82)غافر

சுற்றுலாவை பொழுதுபோக்காக மட்டுமே  கருதும் சூழலில் அதை படிப்பினைக்குரியதாக மாற்றுவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும் அந்த வகையில் அல்லாஹ் தான் அனைத்துலகின் அதிபதி என்பதையும் நிரூபிக்கும் அத்தாட்சிகள் உலகில் பல உள்ளன. கடந்த காலங்களில் பாவிகளை அல்லாஹ் தண்டித்து, நல்லோர்களை காப்பாற்றியதன் காலடிச் சுவடுகளை இன்றும் காணலாம். அத்தகைய இடங்களுக்குச் சென்று படிப்பினை பெற அல்லாஹ் கூறுகிறான்

சமீபத்தில் சவூதி அரசு உம்ரா விசாவில் வருபவர்கள் சவூதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளது

மாபெரும் செல்வந்தன் காரூனுடைய புதைந்து போன அரண்மனையின் அடையாளங்களை இன்றும் காணலாம்
إِنَّ قَارُونَ كَانَ مِنْ قَوْمِ مُوسَى فَبَغَى عَلَيْهِمْ وَآتَيْنَاهُ مِنَ الْكُنُوزِ مَا إِنَّ مَفَاتِحَهُ لَتَنُوءُ بِالْعُصْبَةِ أُولِي الْقُوَّةِ إِذْ قَالَ لَهُ قَوْمُهُ لا تَفْرَحْ إِنَّ اللَّهَ لا يُحِبُّ الْفَرِحِين76.الي- فَخَرَجَ عَلَى قَوْمِهِ فِي زِينَتِهِ قَالَ الَّذِينَ يُرِيدُونَ الْحَيَاةَ الدُّنْيَا يَا لَيْتَ لَنَا مِثْلَ مَا أُوتِيَ قَارُونُ إِنَّهُ لَذُو حَظٍّ عَظِيمٍ وَقَالَ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ وَيْلَكُمْ ثَوَابُ اللَّهِ خَيْرٌ لِمَنْ آَمَنَ وَعَمِلَ صَالِحًا وَلَا يُلَقَّاهَا إِلَّا الصَّابِرُونَ80 فَخَسَفْنَا بِهِ وَبِدَارِهِ الْأَرْضَ فَمَا كَانَ لَهُ مِنْ فِئَةٍ يَنْصُرُونَهُ مِنْ دُونِ اللَّهِ وَمَا كَانَ مِنَ الْمُنْتَصِرِينَ (القصص) عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه  أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَمَا رَجُلٌ يَتَبَخْتَرُ يَمْشِي فِي بُرْدَيْهِ قَدْ أَعْجَبَتْهُ نَفْسُهُ فَخَسَفَ اللَّهُ بِهِ الْأَرْضَ فَهُوَ يَتَجَلْجَلُ فِيهَا إِلَى يَوْمِ الْقِيَامَةِ (مسلم) بَاب تَحْرِيمِ التَّبَخْتُرِ فِي الْمَشْيِ- كِتَاب اللِّبَاسِ وَالزِّينَةِ - وَقَالَ قَتَادَة : ذُكِرَ لَنَا أَنَّهُ يُخْسَف بِهِمْ كُلّ يَوْم قَامَة فَهُمْ يَتَجَلْجَلُونَ فِيهَا إِلَى يَوْم الْقِيَامَة (تفسير ابن كثير)

எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் புதைந்துபோன காரூனுடைய அரண்மனை அடையாளம்  உள்ளது. அருகில் அவன் மீன் பிடித்து வியாபாரம் செய்த ஏரி இன்றும் காரூன் ஏரி கஸ்ரே காரூன் என்றழைக்கப்படுகிறது.

3000 ஆண்டுகளுக்கு முந்தையஃபிர்அவ்னின் உடலை மக்களின் படிப்பினைக்காக அல்லாஹ் பாதுகாத்து வைத்துள்ளான்

         قال الله تعالي : فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ (92) (سورة يونس)

சூயஸ் கால்வாய்க்கு தெற்கே உள்ள செங்கடலில் கி.மு. 14-ம் நூற்றாண்டில் ஃபிர்அவ்னும், அவனது பரிவாரங்களும மூழ்கடிக்கப் பட்டார்கள் ஃபிர்அவ்னின் உடலை மட்டும் பாதுகாப்பேன் என அல்லாஹ் கூறியதனால்  பல நூற்றாண்டுகள் அவனது உடல் அழியாமல் கடலிலேயே பாதுகாக்கப்பட்டது. கி.பி. 1898-ல் லாரட் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டு, எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு கொண்டு வரப்பட்டு மம்மி ஆக்கப்பட்டது. 1907 ஜூலை 8-ல் இலியட் சுமித் என்பவர் மம்மியின் உறைகளை அகற்றி ஆய்வு செய்து கி.மு.14-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இரண்டாம் ராம்சஸ் [பிர்அவ்ன்] என உறுதியளித்தார். இன்றும் கெய்ரோ அருங்காட்சியகத்தி்ல் ஃபிர்அவ்னின் சடலத்தைக் காணலாம்
கி.மு.539-ம் நூற்றாண்டில் யஃஜூஜ்,மஃஜூஜ் உடைய தொல்லைகளைத் தடுக்க மன்னர் துர்கர்னைன் கட்டிய தடுப்புச் சுவர்
حَتَّى إِذَا بَلَغَ بَيْنَ السَّدَّيْنِ وَجَدَ مِنْ دُونِهِمَا قَوْمًا لا يَكَادُونَ يَفْقَهُونَ قَوْلا (93) قَالُوا يَا ذَا الْقَرْنَيْنِ إِنَّ يَأْجُوجَ وَمَأْجُوجَ مُفْسِدُونَ فِي الأرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلَى أَنْ تَجْعَلَ بَيْنَنَا وَبَيْنَهُمْ سَدًّا (94) قَالَ مَا مَكَّنِّي فِيهِ رَبِّي خَيْرٌ فَأَعِينُونِي بِقُوَّةٍ أَجْعَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ رَدْمًا (95) آتُونِي زُبَرَ الْحَدِيدِ حَتَّى إِذَا سَاوَى بَيْنَ الصَّدَفَيْنِ قَالَ انْفُخُوا حَتَّى إِذَا جَعَلَهُ نَارًا قَالَ آتُونِي أُفْرِغْ عَلَيْهِ قِطْرًا (96) سورة الكهف
இவ்வளவு காலம் வரை மேற்கூறப்பட்ட அந்த தடுப்புச்சுவர் எங்கிருக்கிறது என்பது தெரியாமல் இருந்தது. இப்போது அந்த சுவர் சோவியத் யூனியனில் டர்பண்ட்” [durbend] என்ற இடத்தில் உள்ளதாக கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்த தடுப்பு உடைந்து ஒருநாள் வெளியே வருவார்கள். அது இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். இவர்களின் எண்ணிக்கை மனித எண்ணிக்கையை விட அதிகம். மேலும் நரகம் இவர்களைக்கொண்டே அதிகம் நிரப்பப்படும். (புகாரி 3348, 4741)
ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதற்காக லூத் (அலை) உடைய சமூகம் நெருப்பு மழையால் அழிக்கப்பட்டதற்கான தடயம்
قَالُوا إِنَّا أُرْسِلْنَا إِلَى قَوْمٍ مُجْرِمِينَ (32) لِنُرْسِلَ عَلَيْهِمْ حِجَارَةً مِنْ طِينٍ (33) مُسَوَّمَةً عِنْدَ رَبِّكَ لِلْمُسْرِفِينَ (34) فَأَخْرَجْنَا مَنْ كَانَ فِيهَا مِنَ الْمُؤْمِنِينَ (35) فَمَا وَجَدْنَا فِيهَا غَيْرَ بَيْتٍ مِنَ الْمُسْلِمِينَ (36) وَتَرَكْنَا فِيهَا آَيَةً لِلَّذِينَ يَخَافُونَ الْعَذَابَ الْأَلِيمَ (37)سورة الذاريات
அத்தாட்சியாக நாம் விட்டு வைத்துள்ளோம் என்ற இறை வசனத்திற்கேற்ப ஜோர்டானில் உள்ள அந்த இடம் கடல் சூழ்ந்து இன்று மரணக் கடல் (DEAD SEA) என்றழைக்கப்படுகிறது. இப்பகுதியில் மட்டும் எந்த கடல் உயிரினங்களும் வசிப்பதில்லை. இங்குள்ள கடல் நீர் பல மடங்கு உப்புத்தன்மை கொண்டதும், அடர்த்தியானதுமாகும். எனவேதான் இந்த நீரின் மேற்பரப்பில் யாரேனும் படுத்தாலும் மிதப்பார்களே தவிர, மூழ்குவதில்லை. இது பற்றிய வீடியோ ஆதாரங்களும் வெளியிடப்பட்டுள்ளன
நூஹ் அலை  அவர்களின் கப்பல் துருக்கியில் அராரத் பகுதியில் மலைச்சிகரத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது

وَهِيَ تَجْرِي بِهِمْ فِي مَوْجٍ كَالْجِبَالِ وَنَادَى نُوحٌ ابْنَهُ وَكَانَ فِي مَعْزِلٍ يَا بُنَيَّ ارْكَبْ مَعَنَا وَلَا تَكُنْ مَعَ الْكَافِرِينَ).الي .. وَاسْتَوَتْ عَلَى الْجُودِيِّ وَقِيلَ بُعْدًا لِلْقَوْمِ الظَّالِمِينَ (44)(هود) عَنِ ابْنِ عَبَّاسٍ رض قَالَ:"كَانَ مَعَ نُوحٍ فِي السَّفِينَةِ ثَمَانُونَ رَجُلا مَعَهُمْ أَهْلُوهُهُمْ، وَأَنَّهُمْ كَانُوا فِي السَّفِينَةِ مِائَةً وَخَمْسِينَ يَوْمًا وَأَنَّ اللَّهَ وَجَّهَ السَّفِينَةَ إِلَى مَكَّةَ فَدَارَتْ بِالْبَيْتِ أَرْبَعِينَ يَوْمًا، ثُمَّ وَجَّهَهَا إِلَى الْجُودِيِّ، فَاسْتَقَرَّتْ عَلَيْهِ، فَبَعَثَ نُوحٌ الْغُرَابُ لَيَأْتِيهِ بِخَبَرِ الأَرْضِ فَذَهَبَ فَوَقَعَ عَلَى الْجِيَفِ فَأَبْطَأَ عَلَيْهِ فَبَعَثَ الْحَمَامَةَ، فَأَتَتْهُ بِوَرِقِ الزَّيْتُونِ، وَلَطَخَتْ رِجْلَهَا بِالطِّينِ فَعَرَفَ نُوحٌ أَنَّهُ الْمَاءُ قَدْ نَضَبَ، فَهَبَطَ إِلَى أَسْفَلِ الْجُودِيِّ فَبَنَى قَرْيَةً وَسَمَّاهَا ثَمَانِينَ فَأَصْبَحُوا ذَاتَ يَوْمٍ وَقَدْ تَبَلْبَلَتْ أَلْسِنَتُهُمْ عَلَى ثَمَانِينَ لُغَةٍ أَحَدُهُمَا اللِّسَانُ الْعَرَبِيُّ فَكَانَ لا يُفَقِّهُّ بَعْضُهُمْ كَلامَ بَعْضٍ، وَكَانَ نُوحٌ عَلَيْهِ السَّلامُ يُعَبِّرُ عَنْهُمْ"تفسير ابن ابي حاتم قال قتادة رض قد أبقى الله سفينة نوح عليه السلام على الجُودي من أرض الجزيرة عِبرة وآية حتى رآها أوائل هذه الأمة وكم من سفينة قدكانت بعدها فهلكت وصارت رمادًا (تفسير ابن كثير

9-5-2010 தினமலரில் படத்துடன் வெளியான செய்தி:

துருக்கி நாட்டில் மலைச்சிகரத்தில் சமீபத்தில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருப்பது பைபிளில் கூறப்பட்டுள்ள 4,800 ஆண்டுகளுக்கு முந்தைய நோவாவின் கப்பலா? என்பது குறித்த குழப்பம் ஆராய்ச்சியாளர்களிடையே நிலவி வருகிறது. உலகில் பாவச்செயல்கள் பெருகியதால், வெள்ளத்தால் உலகை மூழ்கடிக்க நினைத்த கடவுள், நோவா என்ற தீர்க்கதரிசியிடம் சில நாட்களில் உலகம் வெள்ளத்தில் மூழ்கி அழியப் போவதாகவும், ஒவ்வொரு மிருகத்திலும் ஒரு ஜோடியைப் பாதுகாத்து அவற்றை ஒரு கப்பலில் எடுத்துச்செல் எனக் கூறினார். ஊழிக் காலத்துக்குப் பின் வெள்ளம் வடிந்த போது, நோவாவின் கப்பல் துருக்கி நாட்டில் உள்ள அராரத் மலைச்சிகரத்தில் மீது தங்கியது. பின் நோவாவும், உயிரிகளும் மலையிலிருந்து பூமியில் இறங்கி பெருகினர் என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது. ஹாங்காங்கைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குனர் எங் விங் செங் தலைமையில் சர்வதேச நோவா கப்பல் மத குருக்கள் என்ற அமைப்பைச் சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர் துருக்கிப் பகுதியில் நோவாவின் கப்பல் குறித்து ஆய்வு செய்தனர். அராரத் மலைச்சிகரத்தின் ஒரு பகுதியில் அவர்கள் ஒரு மரக் கட்டுமானத்தைக் கண்டறிந்தனர். அதில் பல அறைகள் இருக்கின்றன. சில அறைகள் மரத்தால் ஆனவையாக உள்ளன. இந்த மரத்தடுப்புகள் மிருகங்களை வைக்கப் பயன்படுத்திய அறையாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது குறித்து எங் விங் செங் கூறும்போது இது 100 சதவீதம் நோவாவின் கப்பல் என்று கூற முடியா விட்டாலும் 99. 9 சதவீதம் அதுதான் என்று கூற முடியும் என்கிறார். அராரத் மலைச்சிகரம் அந்த பகுதியிலேயே மிக உயரமானது. கடல் மட்டத்தில் இருந்து 5,515 மீட்டர் உயரத்தில் உள்ளது. துருக்கி அதிகாரிகள், அப்பகுதியை உலக புராதனச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தால் தான் அங்கு அகழாய்வுகள் தொடரும் என்கின்றனர் [தினமலர்]    முதலாம் உலகப்போரின் சமயத்திலேயே விளாடிமீர் என்ற ரஷ்ய விமானி இக்கப்பலை கண்டு பி்டித்து விட்டார். எனினும் ரஷ்ய புரட்சியின் காரணமாக அந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவராமல் போய்விட்டன (நன்றி :அல்குர்ஆனின் அற்புதங்கள்)

உலகில் அல்லாஹ்வின் அதிசயங்களைக் காண்பதற்காகவும், அழிக்கப்பட்டவர்களின் தடயங்களின் இருந்து படிப்பினை பெறுவதற்காகவும் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்த சாகசப் பயணி இப்னு பதூதா என்ற ஆலிம்

கிபி 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மார்க்க அறிஞர் இப்னு பதூதா. விமானம், இரயில், பஸ், கார் போன்ற வாகனங்களும் இல்லாத அந்தக் காலத்தில் அல்லாஹ்வின் அதிசயங்களைக் காண்பதற்காகவே இவர் சுற்றுப் பயணம் செய்த தூரம் எவ்வளவு தெரியுமா ஒரு இலட்சத்து இருபதாயிரம் கி.மீ 1,20,000 1325- இல் மொராக்கோவில் அவர் பயணத்தைத் தொடங்கினார் ஜெரூஸலம், எகிப்து பிரமிடு, என உலகம் முழுவதையும் சுற்றிய அவர் 24 வருடம் கழித்து 1349-இல் மொராக்கோவுக்குத் திரும்பினார். அவர் தன்னுடைய பயணத்துக்கு நடுவே மக்கா சென்று புனித ஹஜ்ஜையும் நிறைவேற்றினார். மதீனாவுக்கும் சென்று ஜியாரத் செய்தார். இறுதியாக அவர் பயணத்தை முடித்த பின் தன்னுடைய பயண அனுபவங்களை ரிஹ்லா என்ற பெயரில் புத்தகமாக எழுதினார். -  நன்றி இந்து தமிழ் நாளிதழ் 10-03-2015

 இப்னு பதூதா  தன்னுடைய பயணத்தில் நபி ஆதம் அலை அவர்கள் இறங்கிய ஸரன்தீப் எனும் மலையைப் பார்த்தார்

இந்த உலகின் முதல் இஸ்லாமியரான ஆதம் அலை இந்த பூமிக்கு இறக்கப்பட்ட போது அவர்கள் இறங்கிய பகுதி அன்றைய இந்தியாவின் ஒரு பகுதியான இலங்கையில் உள்ள ஸரன்தீப் எனும் மலையாகும் இதை ஹிஜ்ரி 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வரலாற்று ஆசிரியர் இப்னு பதூதா பின்வருமாறு கூறுகிறார் அந்த மலை மிக உயரமாக இருந்தது. அதை கடலிலிருந்து நாங்கள் பார்த்த போது எங்களுக்கும் அதற்கும் இடையில் 9 நாள் தொலை தூரம் இருந்த து. அதில் நாங்கள் ஏறிய போது எங்களுக்குத் தாழ்வாக ஒரு மேகம் இருந்தது. அம்மலையில் சில மரங்கள் இருந்தன. அவற்றின் இலைகளோ, பூக்களோ உதிர்வதில்லை. அங்கு ஃபஸீஹ் என்றொரு இடம் உள்ளது அங்குள்ள ஒரு உயரமான கரும்பாறையில் நபி ஆதம் அலை அவர்களுடைய புனிதப் பாதங்களின் சுவடுகள் காணப்பட்டன. அந்த இடம் மட்டும் சிறிது பள்ளமாக காட்சியளித்தது. நூல்- துஹ்ஃபதுன்னழாயிர்

முடிவுரை -விடுமுறையில் பிள்ளைகளை எங்கேனும் அழைத்துச் சென்று சந்தோஷப்படுத்த வேண்டும் என்று விரும்புவது தவறல்ல. அது நன்மையான செயல். எனினும் அந்தப் பயணம் படிப்பினையானதாக அமைய வேண்டும். எத்தனையோ பேர் இந்த விடுமுறையில் பிள்ளைகளையும் உம்ராவுக்கு அழைத்துச் சென்று மாபெரும் நன்மைகளைப் பெறுகிறார்கள்.  குளிர்ப் பிரதேசங்களை நாடிச் செல்பவர்களும் இருக்கிறார்கள். அதுவும் தவறல்ல. ஆனால் எந்த ஒரு இயற்கை அதிசயங்களையும் அல்லாஹ்வின் ஆற்றலை விளங்கும் படிப்பினை சிந்தனையோடு காண்பது நன்மைக்குரிய செயல்

وعن عيسى عليه السلام أنه قال: طوبى لمن كان صَمْته فِكرًا، ونظره عبرًا" وكلامه  عبرا  وبكي علي خطيئته  وسلم الناس من يده  ولسانه  - (مشكاة الانوار)

யாருடைய மவுனம் சிந்தனையாகவும் அவரின் பார்வையும் பேச்சும் படிப்பினை நிறைந்ததாகவும் அமைந்து பாவத்தை நினைத்து அவ்வப்போது அழுபவராகவும் இருப்பதுடன் அவருடைய கையால் நாவினால் மற்றவருக்கு தொந்தரவு தராமல் இருக்கிறாரோ அவருக்கு சுப சோபனம் உண்டாகட்டும் என ஈஸா அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள்.

துன்யாவின் எந்த ஒரு பொருளையும் படிப்பினை நிறைந்த கண்களோடு பார்க்காதவன் அகக்குருடன் என முன்னோர்களில் சிலர் கூறியுள்ளனர்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...