வியாழன், 21 ஏப்ரல், 2022

லைலத்துல் கத்ர்

 


22-04-2022

RAMZAN - 20

 

بسم الله الرحمن الرحيم 

 லைலத்துல் கத்ர் விளக்கம் من تفسير  الرازي

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 




إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ- وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ- لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ- تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ- سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ

عَنْ اِبْن عَبَّاس رضي الله عنهقَالَ: نَزَلَ الْقُرْآن فِي شَهْر رَمَضَان فِي لَيْلَة الْقَدْر إِلَى هَذِهِ السَّمَاء الدُّنْيَا جُمْلَة وَاحِدَة وَكَانَ اللَّهُ يُحْدِث لِنَبِيِّهِ مَا يَشَاء

லைலத்துல் கத்ர் மறைக்கப்பட்டதற்கான காரணங்கள் பற்றி....

أنه تعالى أخفى هذه الليلة لوجوه أحدها: أنه تعالى أخفاها كما أخفى سائر الأشياء فإنه أخفى رضاه في الطاعات حتى يرغبوا في الكل وأخفى الإجابة في الدعاء ليبالغوا في كل الدعواتوأخفى الاسم الأعظم ليعظموا كل الأسماء وأخفى في الصلاة الوسطى ليحافظوا على الكل وأخفى قبول التوبة ليواظب المكلف على جميع أقسام التوبة وأخفى وقت الموت ليخاف المكلففكذا أخفى هذه الليلة ليعظموا جميع ليالي رمضان وثانيها : كأنه تعالى يقول : لو عينت ليلة القدر وأنا عالم بتجاسركم على المعصية  فربما دعتك الشهوة في تلك الليلة إلى المعصية فوقعت في الذنب فكانت معصيتك مع علمك أشد من معصيتك لا مع علمك  فلهذا السبب أخفيتها عليك روي أنه عليه السلام دخل المسجد فرأى نائماً فقال : يا علي نَبِّهْه ليتوضأ  فأيقظه علي  ثم قال علي: يا رسول الله إنك سباق إلى الخيرات فلم لم تنبهه؟ قال : لأن رده عليك ليس بكفر ففعلت ذلك لتخف جنايته لو أبى فإذا كان هذا رحمة الرسول فقس عليه رحمة الرب تعالى فكأنه تعالى يقول: إذا علمت ليلة القدر فإن أطعت فيها اكتسبت ثواب ألف شهر وإن عصيت فيها اكتسب عقاب ألف شهر ودفع العقاب أولى من جلب الثواب ثالثها:أني أخفيت هذه الليلة حتى يجتهد المكلف في طلبها فيكتسب ثواب الاجتهاد ورابعهاأن العبد إذا لم يتيقن ليلة القدر فإنه يجتهد في الطاعة في جميع ليالي رمضان على رجاء أنه ربما كانت هذه الليلة هي ليلة القدر فيباهي الله تعالى بهم ملائكته يقول:كنتم تقولون فيهم يفسدون ويسفكون الدماء  (تفسير الرازي                            

1. அ.. அல்லாஹ் சிலவற்றை சிலவற்றில் மறைத்து வைத்துள்ளான். எத்தனையோ வணக்க வழிபாடுகள் நாம் செய்தாலும் அவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு அல்லாஹ்வின் திருப்தி நம் மீது உண்டாகும். அது எந்த அமல் என்பது மறைக்கப்ப்பட்டுள்ளது. இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்கள் வஃபாத்தான பின்பு அவர்களைக் கனவில் கண்ட போது அல்லாஹ் உங்களின் எந்த செயலைக் கொண்டு பொருந்திக் கொண்டான் என்று கேட்டபோது நான் ஒருமுறை பேனாவைக் கொண்டு எழுதிக் கொண்டிருந்த போது அதில் உள்ள மையை உறிஞ்சுவதற்காக ஒரு ஈ வந்து அமர்ந்தது. நான் அந்த ஈ தானாக பறந்து போகும் வரை அந்த பேனாவை சற்றும் அசைக்காமல் அப்படியே வைத்திருந்தேன். இதனால் அல்லாஹ் என்னைப் பொருந்திக் கொண்டான் என்றார்கள்.                

ஆ. துஆக்களில் எந்த துஆ ஏற்கப்படும் என்பதை மறைந்து வைத்துள்ளான். ஒரே கோரிக்கையை பல முறை கேட்கிறோம்.ஒவ்வொரு துஆவையும் இஜாபதுக்குரியதாக கருதி துஆ செய்ய வேண்டும் என்பதற்காக...                                       

இ. இஸ்முல் அஃழமை மறைத்து வைத்துள்ளான். ஒவ்வொரு திருநாமத்தையும் இஸ்முல் அஃழமாக கருதி துஆ செய்வதற்காக.     

ஈ. நடுத்தொழுகை எது என்பதை அல்லாஹ் மறைத்து வைத்துள்ளான். ஒவ்வொரு தொழுகையையும நடுத்தொழுகையாக கருதி தொழ வேண்டும். முதல் நாள் மஃரிப்  முதல் மறுநாள் மஃரிப் வரை என்ற கணக்கில் பார்த்தால் ஃபஜ்ர் நடுத்தொழுகை. ஜிப்ரயீல் அலை முதலில் கற்றுத் தந்தது லுஹர் என்ற கணக்கில் பார்த்தால் மஃரிப் நடுத்தொழுகை. இப்படி ஒவ்வொரு தொழுகையும் நடுத்தொழுகையாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.                                                               

حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ (238) البقرة

உ. தவ்பா கேட்டுக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். எந்த நேரம் மன்னிப்பு வழங்கப்படும் என்பதை அல்லாஹ் மறைத்து வைத்துள்ளான்

ஊ. மவ்த்தை மறைத்து வைத்துள்ளான். எந்த நேரமும் மவ்த் வரலாம் என்று அஞ்சி நடக்க வேண்டும் என்பதற்காக.                     

இதே மாதிரி லைலத்துல் கத்ரை அல்லாஹ் மறைத்து வைத்துள்ளான். ஒவ்வொரு இரவும் லைலத்துல் கத்ராக இருக்கலாம் என்று எண்ணி அமல் செய்வதற்காக....                                                                         

2. லைலத்துல் கத்ரு எது என்று அறிவித்துத் தரப்பட்டு அது சிறந்த இரவு என்று தெரிந்தே ஒரு முஸ்லிம் தவறு செய்தால் அவன் மீது தண்டனைகள் அதிகமாகி விடுமல்லவா அல்லாஹிவின் விதியில் ஒருவனுக்கு நன்மை அதிகம் கிடைப்பதை விட மனிதனின் பாவச் சுமைகள் பல மடங்காக ஆகி விடக்கூடாது என்பதாக இருக்கலாம். உதாரணமாக நபி ஸல் ஒருமுறை மஸ்ஜிதில் நுழைந்த போது தொழுகை நேரம் ஆகியும் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரைக் கண்டு சற்று தூரத்தில் நின்ற அலீ ரழி அவர்களை அழைத்து இவரை எழுப்புங்கள் என்று கூற அவ்வாறே அவரை அலீ ரழி அவர்கள் எழுப்பினார்கள் எனினும் ஒரு சந்தேகம் கேட்டார்கள் அல்லாஹ்வின் தூதரே நன்மையில் நீங்கள் முந்துபவர் ஆயிற்றே நீங்களே எழுப்பியிருக்கலாமே என்று கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் ஒருவேளை நான் எழுப்பி அவர் எழுந்திருக்கா விட்டால் அவர் மீது பாவம் பல மடங்காக ஆகி விடுமே அதனால் எழுப்பவில்லை என்றார்கள். மற்றொரு நேரத்தில் கோபத்தில் ஒருவர் கத்திக் கொண்டிருந்த போது மற்றொருவரை அழைத்து அவரை அஊது பில்லாஹ் சொல்லச் சொல்லுங்கள் என்றார்கள். அவர் சென்று கூறிய போது கோபத்தில் ஒருவர் கத்திக் கொண்டிருந்தவர் எனக்கென்ன பைத்தியமா என்று கூறி உதாசீனப்படுத்தி விட்டார்.                                                   

3. லைலத்துல் கத்ரைத் தேடி ஒவ்வொரு இரவிலும் அமல் செய்பவர் அதிகமான நன்மைகளைப் பெற்றுக் கொள்வார்

4. மனிதர்களின் அமல்களை மலக்குகளிடம் காட்டி அல்லாஹ் மனிதனைப்  பெருமைப் படுத்துவற்காக...

மலக்குகள் இறங்குகிறார்கள் என்பதன் விளக்கம் - நாம் நுத்ஃபா வாக இருக்கும்போது நம்மைக் கழுவி அப்புறப்படுத்தும் பெற்றோர்கள் நம்மை அழகிய உருவில் பார்க்கும்போது கொஞ்சுகின்றனர். அதுபோல் மனிதனை முதலில் அல்லாஹ் படைத்த போது பாவம் செய்யும் தோற்றத்தில் கண்டு இவர்களை ஏன் படைக்கிறாய் என்று கேட்ட மலக்குகள், மனிதனின் அழகிய வணக்க வழிபாடுகளைக் கண்டு வாழ்த்துகின்றனர்.                                      

قوله تعالى : { تَنَزَّلُ الملائكة والروح فِيهَا } وفيه مسائل :المسألة الأولى : اعلم أن نظر الملائكة على الأرواح ونظر البشر على الأشباح ثم إن الملائكة لما رأوا روحك محلاً للصفات الذميمة من الشهوة والغضب ما قبلوك فقالوا : أتجعل فيها من يفسد فيها ويفسك الدماء وأبواك لما رأوا قبح صورتك في أول الأمر حين كنت منياً وعلقة ما قبلوك أيضاً بل أظهروا النفرة واستقذروا ذلك المني والعلقة وغسلوا ثيابهم عنه ثم كم احتالوا للإسقاط والإبطال ثم إنه تعالى لما أعطاك الصورة الحسنة فالأبوان لما رأوا تلك الصورة الحسنة قبلوك ومالوا إليك فكذا الملائكة لما رأوا في روحك الصورة الحسنة وهي معرفة الله وطاعته أحبوك فنزلوا إليك معتذرين عما قالوه أولاً(تفسير الرازي)

லைலத்துல் கத்ர் இரவில் மலக்குகள் பெரும் கூட்டமாக இறங்குகிறார்கள் என்பதைப் பற்றி..

عن كعب أن سدرة المنتهى على حد السماء السابعة مما يلي الجنة فهي على حد هواء الدنيا وهواء الآخرة وساقها في الجنة وأغصانها تحت الكرسي فيها ملائكة لا يعلم عددهم إلا الله يعبدون الله ومقام جبريل في وسطها ليس فيها ملك إلا وقد أعطى الرأفة والرحمة للمؤمنين ينزلون مع جبريل ليلة القدر ، فلا تبقى بقعة من الأرض إلا وعليها ملك ساجد أو قائم يدعو للمؤمنين والمؤمنات وجبريل لا يدع أحداً من الناس إلا صافحهم وعلامة ذلك من اقشعر جلده ورق قلبه ودمعت عيناه ، فإن ذلك من مصافحة جبريل عليه السلام من قال فيها ثلاث مرات : لا إله إلا الله غفر له بواحدة ونجاه من النار بواحدة ، وأدخله الجنة بواحدة ، وأول من يصعد جبريل حتى يصير أمام الشمس فيبسط جناحين أخضرين لا ينشرهما إلا تلك الساعة من تلك الليلة ثم يدعو ملكاً ملكاً فيصعد الكل ويجتمع نور الملائكة ونور جناح جبريل عليه السلام  فيقيم جبريل ومن معه من الملائكة بين الشمس وسماء الدنيا يومهم ذلك مشغولين بالدعاء والرحمة والاستغفار للمؤمنين ولمن صام رمضان احتساباً فإذا أمسوا دخلوا سماء الدنيا فيجلسون حلقاً حلقاً فتجمع إليهم ملائكة السماء فيسألونهم عن رجل رجل وعن امرأة امرأة حتى يقولوا : ما فعل فلان وكيف وجدتموه؟ فيقولون : وجدناه عام أول متعبداً وفي هذا العام مبتدعاً وفلان كان عام أول مبتدعاً وهذا العام متعبداً فيكفون عن الدعاء للأول ويشتغلون بالدعاء للثاني ووجدنا فلاناً تالياً وفلاناً راكعاً وفلاناً ساجداً فهم كذلك يومهم وليلتهم حتى يصعدوا السماء الثانية وهكذا يفعلون في كل سماء حتى ينتهوا إلى السدرة . فتقول لهم السدرة : يا سكاني حدثوني عن الناس فإن لي عليكم حقاً ، وإني أحب من أحب الله ، فذكر كعب أنهم يعدون لها الرجل والمرأة بأسمائهم وأسماء آبائهم ، ثم يصل ذلك الخبر إلى الجنة ، فتقول الجنة : اللهم عجلهم إلي ، والملائكة ، وأهل السدرة يقولون : آمين آمين (تفسير الرازي)

விண்ணுலகில் எவ்வளவோ வணக்க வழிபாடுகள் நடைபெற்றாலும் அங்கு இல்லாத வித்தியாசமான வணக்க வழிபாடுகளை காண்பதற்காக மலக்குகள் வருகிறார்கள்

أنهم يرون في الأرض من أنواع الطاعات أشياء ما رأوها في عالم السموات أحدها:أن الأغنياء يجيئون بالطعام من بيوتهم فيجعلونه ضيافة للفقراء والفقراء يأكلون طعام الأغنياء ويعبدون الله وهذا نوع من الطاعة لا يوجد في السموات وثانيهاأنهم يسمعون أنين العصاة وهذا لا يوجد في السموات وثالثها: أنه تعالى قال لأنين المذنبين أحب إلي من زجل المسبحينفقالوا: تعالوا نذهب إلى الأرض فنسمع صوتاً هو أحب إلى ربنا من صوت تسبيحنا

செல்வந்தர்கள் இந்த இரவில் உணவுகளை ஏழைகளுக்கு வழங்குவர்.இந்த நற்செயலை விண்ணுலகில் பார்க்க முடியாது. பாவிகளின் அழுகையை இந்த உலகில் தான் பார்க்க முடியும். விண்ணுலகில் பார்க்க முடியாது. 3. தஸ்பீஹ் செய்பவர்களின் தல்பீஹை விட பாவிகளின் அழுகை அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானது அதனால் மலக்குகள் தங்களுக்குள் பேசிக் கொள்வர் வாருங்கள் பாவிகளின் அழுகுரலைக் கேட்போம் என்று                          

லைலத்துல் கத்ரு இரவில் தான் இவ்வருடம் முதல் அடுத்த வருடம் வரை உள்ள மனிதர்களின் விதிகள் மலக்குகளிடம் ஒப்படைக்கப்படுகிறது என்பது பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும். சிலர் ஷஃபான் 15 என்றும்

قال الله تعالي إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُّبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنذِرِينَ- فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ(سورة الدخان) أَيْ فِي لَيْلَة الْقَدْر يُفْصَل مِنْ اللَّوْح الْمَحْفُوظ إِلَى الْكَتَبَة أَمْر السّنَة وَمَا يَكُون فِيهَا مِنْ الْآجَال وَالْأَرْزَاق وَمَا يَكُون فِيهَا إِلَى آخِرهَا وَهَكَذَارُوِيَ عَنْ اِبْن عُمَر وَمُجَاهِد وَأَبِي مَالِك وَالضَّحَّاك وَغَيْر وَاحِد مِنْ السَّلَف (تفسير ابن كثير)عَنِ ابْنِ عَبَّاس رضي الله عنه قَالَ:إِنَّكَ لَتَرَى الرَّجُلَ يَمْشِي فِي الْأَسْوَاقِ وَقَدْ وَقَعَ اسْمُهُ فِي الْمَوْتَى، ثُمَّ قَرَأَ" إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ-فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ  يَعْنِي لَيْلَةَ الْقَدْرِ قَالَ: فَفِي تِلْكَ اللَّيْلَةِ يُفْرَقُ أَمْرُ الدُّنْيَا إِلَى مِثْلِهَا مِنْ قَابِلٍ مَوْتٌ أَوْ حَيَاةٌ أَوْ رِزْقٌكُلُّ أَمْرِ الدُّنْيَا يُفْرَقُ تِلْكَ اللَّيْلَةَ إِلَى مِثْلِهَا مِنْ قَابِلٍ (تفسير ابن ابي حاتم)         

واعلم أن تقدير الله لا يحدث في تلك الليلة فإنه تعالى قدر المقادير قبل أن يخلق السموات والأرض في الأزل ، بل المراد إظهار تلك الليلة المقادير للملائكة في تلك الليلة بأن يكتبها في اللوح المحفوظ وهذا القول اختيار عامة العلماء (تفسير الرازي)

 

)        லைலத்துல் கத்ரு இரவில் பாவமன்னிப்பு என்பது எல்லாவற்றையும் விட முக்கியமானது

عَنْ عَائِشَةَرضي الله عنها أَنَّهَا قَالَتْيَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ وَافَقْتُ لَيْلَةَ الْقَدْرِ مَا أَدْعُو قَالَ تَقُولِينَ اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي(ابن ماجة

والعفو هو التجاوز عن الخطأ، كأنه أمرها بأن تعترف بأنها مقصرة وليس لها مطلب إلا العفو، وهكذا سائر العباد، فالعبد عليه أن يحتقر عمله ولو كان كثيراً، فيكون منتهى طلبه المغفرة والعفو عن الخطأ وعن التقصير، فهذا مطلب من المطالب التي تطلب في ليلة القدر، والدعاء فيها مرجو أن يستجاب، وكذلك كثرة الذكر وكثرة القراءة وطول القيام وما أشبه ذلك، فإذا أدام العبد ذلك رجي أن يثيبه الله وأن تحصل له المغفرة التي رتبت على تلك الأعمال، والله أعلم.(شرح عمدة الاحكام)

பாவமன்னிப்பின் பலன்கள்

وبالاستغفار تزداد الأرزاق.. ويُستكثر من المال والولد.. وتُستمطر الرحمات  فقد قال جل جلاله على لسان نوح عليه السلام : (فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا* يُرْسِلِ السَّمَاء عَلَيْكُم مِّدْرَارًا * وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَل لَّكُمْ جَنَّاتٍ وَيَجْعَل لَّكُمْ أَنْهَارًا)

قام رجل بالتوعد لزوجته بالطلاق إذا لم تنجب له ذكر ، و كأن الأمر بيدها ، و كان ذلك دليل على جهله بأنها لا تملك حول أو قوة أمام إرادة الله عز و جل ، فقد قالت لزوجها ” أنت تريد البنين وما ذاك في أيدينا وإنا لنرضى بما أعطيناو قد توجهت بعد ذلك إلى البيت الحرام ، و ظلت تدعي و تبكي و تستغفر كثيرا في هذا المكان العظيم ، حيث كان موعد ولادتها قد أقترب .و لكنها لم تيأس و ظلت تزور بيت الله و ألحت كثيرا في الدعاء أملا منها في رحمة الله تعالى أن يكون المولود ذكر ، و عند ولادتها كانت تدعوا الله تعالى أن يكون ذكرا وهي تبكي ، وبالفعل أكرمها الله و وضعت ذكرا و أرتاح و فرح قلبها ، و استبشرت و شكرت الله تعالى على نعمته و رحمته الواسعة عليها .

கருத்து- அறிவற்ற கணவன் உனக்கு ஆண் குழந்தை பிறக்கா விட்டால் நீ தலாக் என்று கூறி விட்டான். அப்பெண்அழுதபடி தனது நிலையை அல்லாஹ்விடம் கூறி, அதிகமாக இஸ்திஃபாரின் வாசகங்களை ஓதியதால் அல்லாஹ் ஆண் குழந்தையைக் கொடுத்தான்.                                       

قال رسول الله صلّى الله عليه وسلّم: من لزم الاستغفار جعل الله له من كلّ همّ فرجاً، ومن كلّ ضيق مخرجاً، ورزقه من حيث لا يحتسب) رواه أبو داودفقد قال حذيفة رضي الله عنه للنّبي صلّى الله عليه وسلّم: (كان في لساني ذرب على أهلي - أي حدّة - فذكرت ذلك للنّبي - صلّى الله عليه وسلّم - فقال: أين أنت من الاستغفار يا حذيفة) رواه أحمد                 

கருத்து-ஹுதைபா ரழி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் நான் என்னையும் அறியாமல் என் குடும்பத்தாரை அதிகம் திட்டி விடுகிறேன் என்று கூறியபோது அதிகம் இஸ்திஃபார் செய்வீராக என்று கூறினார்கள்.

பாவ மன்னிப்புக் கேட்பதால் ஏற்படும் பலன்கள் பற்றி இமாம் அஹ்மதுப்னு ஹம்பல் அவர்களின் சம்பவம்

نزل الإمام أحمد بن حنبل في مدينةٍ غريبةٍ لا يعرفه سكّانها، ثم ذهب الإمام أحمد بن حنبل إلى مسجدٍ لينام فيه بعد أن بلغ منه التعب مبلغاً عظيماً، وعندما رأى الحارس الإمام أحمد بن حنبل في المسجد رفض أن يسمح له بالنوم فيه، فقال الإمام أحمد للحارس: سوف أنام عند موضع قدمي فقط، ونام الإمام أحمد عند موضع قدمه، فما كان الحارس إلا أن قام بسحب الإمام أحمد، وأخرجه من المسجد، وكان الإمام أحمد شيخاً ذا هيبةٍ، تظهر عليه ملامح الزهد والورع، فرأى خبازٌ الإمام أحمد وهو خارج المسجد في قارعة الطريق، فعرض عليه أن يذهب معه لينام عنده في داره، فذهب الإمام أحمد إلى بيت الخباز، وكان من عادة الخباز أن يستغفر الله وهو يقوم بعجن العجين وخبزه، ولمّا لاحظ الإمام أحمد مداومة الخباز على الاستغفار، سأله إن كان قد وجد لكثرة الاستغفار ثمرة؟ فأجابه الخباز: نعم، والله ما دعوت الله دعوة إلا استجاب لي ما عدا دعوة واحدة، فسأله الإمام أحمد: وما هذه الدعوة التي لم تُستجب لك؟ فقال الخباز: دعوة الله أن يُريني الإمام أحمد بن حنبل، فقال الإمام له: أنا أحمد بن حنبل، والله إني جُررت إليك جرّاً،  

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹ் அவர்கள் தெரியாத ஊருக்குச் சென்றார்கள். அவர்கள் உலகம் முழுக்க பிரபலமாக இருந்தாலும் அவர்களின் முகத்தை பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் புதிய ஊருக்குச் சென்று களைப்பின் காரணமாக மஸ்ஜிதில் ஓய்வெடுத்த போது அங்குள்ள காவலாளி அவர்களைத் தடுத்தார். ஒரு கட்டத்தில் அவர்களை வெளியேற்றவும் செய்தார். இந்நிலையில் அவர்கள் நடந்து வந்து கொண்டிருந்த போது அவர்களின் எதிரில் ரொட்டி சுட்டு விற்பனை செய்யும் வியாபாரி பார்த்தார். அவருக்கும் இமாமை அடையாளம் தெரியாது.இருந்தாலும் இமாம் அவர்களின் முகத்தில் கண்ட தெய்வீக ஒளி அவரின் மனதில் இரக்கத்தை ஏற்படுத்த பெரியவரே நீங்கள் மிகவும் களைப்பாக இருக்கிறீர்கள். என் வீட்டில் தங்குங்கள் என்றார். அவருடைய வற்புறுத்தலால் இமாம் அவர்கள் அங்கு தங்கினார்கள். அப்போது அவரின் செயல் பாடுகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டேயிருந்தார்கள். அவர் ரொட்டி சுடும் போதெல்லாம் அவரின் நாவு இஸ்திஃபாரை உச்சரித்துக்கொண்டேயிருந்த து. ஒரு கட்டத்தில் இமாம் அவர்கள் நீங்கள் இவ்வளவு தூரம் இஸ்திஃபாரை ஓதுகுறீர்களே இதன் பலனை அனுபவித்துள்ளீர்களா என்று கேட்க, அதற்கு அவர் ஆம் நான் அடிக்கடி இஸ்திஃபார் ஓதுவதால் எனது கோரிக்கைகள் அனைத்தும் அல்லாஹ்விடம் ஏற்கப்படுகின்றன. ஆனால் ஒரே ஒரு கோரிக்கை மட்டும் இதுவரை ஏற்கப்படவில்லை என்றார். அதற்கு இமாம் அவர்கள் உங்களுடைய நிறைவேறாத அந்த கோரிக்கை என்ன என்று கேட்க, அதற்கு அவர் நான் இமாம் நான் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹ் அவர்கள் பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன். பலமுறை அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் இமாம் அவர்களை என் கண்ணில் காட்டு என துஆச் செய்தேன் ஆனால் இதுவரை அந்த துஆ  ஏற்கப்படவில்லை. என்ற போது இமாம் அவர்கள் அவர் கூறியதைக் கேட்டு மிகவும் நெகிழ்ந்து போனார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் தான் அஹ்மத் இப்னு ஹம்பல். உங்களுடைய துஆவினால் அல்லாஹ் என்னை மஸ்ஜிதில் இருந்து வெளியே தள்ள வைத்து உங்களிடம் கொண்டு வந்து சேர்த்துள்ளான் என்றார்கள்.       

பஞ்சம் நீங்க, கவலைகள் தீர,  குழந்தை பாக்கியம் பெற,வீடு,தோட்டம் செழிக்க  இஸ்திஃபார் தான் சிறந்த வழி

وَيَا قَوْمِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيَزِدْكُمْ قُوَّةً إِلَى قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِينَ (52) سورة هود

فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا-يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا-وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا (12سورة نوحقال مقاتل: لما كذبوا نوحا زمانا طويلا حبس الله عنهم المطر وأعْقَمَ أرحام نسائهم أربعين سنة فهلكتْ مواشيهم وزروعهم فصاروا إلى نوح عليه السلام واستغاثوا به فقال:استغفروا ربكم إنه كان غفارا -قال الشعبي:خرج عُمَررض يستسقي فلم يزد على الاستغفارحتى رجع فأُمْطِرُوا فقالوامارأيناك استسقيت؟فقال لقد طلبت المطر بمجاديح السماء التي يستنزل بها المطرثم قرأ:استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا(القرطبي قال الأوزاعي :خرج الناس يستسقون فقام فيهم بلال بن سعد فحمد الله وأثنى عليه ثم قال: اللهم إنا سمعناك تقول: }ما على المحسنين من سبيل{)التوبة91 وقد أقررنا بالإساءة فهل تكون مغفرتك إلا لمثلنا ؟ اللهم اغفر لنا وارحمنا واسقنا فرفع يديه ورفعوا أيديهم فسُقُوْا  (تفسير القرطبي) وقال ابن صبيح : شكا رجل إلى الحسن الجدُوْبَة فقال له : اِسْتَغْفِرِ الله وشكا آخر إليه الفقر فقال له : استغفر الله وقال له آخر : اُدْعُ الله أن يرزقني ولدا فقال له :اِسْتَغْفِرِ الله وشكا إليه آخر جفاف بستانه فقال له: استغفر الله فقلنا له في ذلك ؟ فقال :ما قلتُ من عندي شيئا (القرطبي)

பாவ மன்னிப்புக் கேட்காமல் தொடர்ந்து பாவம் செய்வதால் பாதிப்புகள்

قال عبدالله بن مسعودٍ رضي الله عنه: "إني لأحسب أن الرجلَ ينسى العلم قد علِمه بالذنب يعمَله"؛ (جامع بيان العلم - لابن عبدالبر –

இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் கூறினார்கள் ஒரு மனிதன் தான் கற்ற கல்வியை அவன் செய்யும் பாவங்களால் மறந்து விட வாய்ப்புண்டு

عَنْ عَبْدِ اللَّهِ رضي الله عنه قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِئْسَ مَا لِأَحَدِهِمْ أَنْ يَقُولَ نَسِيتُ آيَةَ كَيْتَ وَكَيْتَ بَلْ نُسِّيَ وَاسْتَذْكِرُوا الْقُرْآنَ فَإِنَّهُ أَشَدُّ تَفَصِّيًا مِنْ صُدُورِ الرِّجَالِ مِنْ النَّعَمِ (بخاري) عَنْ أَبِي مُوسَى رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تَعَاهَدُوا الْقُرْآنَ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَهُوَ أَشَدُّ تَفَصِّيًا مِنْ الْإِبِلِ فِي عُقُلِهَا (بخاري) ) باب اسْتِذْكَارِ الْقُرْآنِ وَتَعَاهُدِهِ .- فضائل القرآن

ஒருவருக்கு குர்ஆன் மறந்து விட்டால் நான் மறந்து விட்டேன் என்று கூறாதீர்கள். மாறாக மறக்கடிக்கப்பட்டு விட்டது. ஒட்டகத்தை அவிழ்த்து விடப்பட்டால் பிடிக்க முடியாதது போல்குர்ஆன் ஓதி மறந்து விட்டால் எளிதில் மீட்க முடியாது

هذا ذم، وسببه ما فيه من الإشعار بعدم الاعتناء بالقرآن، إذ لا يقع النسيان إلا بكثرة التغافل وترك التعاهد، فإذا قال الإنسان نسيت آية كذا وكذا فقد شهد على نفسه بالتفريط، فيكون متعلق الذم ترك الاستنكار والتعاهد لأنه الذي يورث النسيان قاله القرطبي(: الفجر الساطع على الصحيح الجامع

குர்ஆனை நான் மறந்து விட்டேன் என்று ஒருவர் கூறுவது அவர் செய்த பாவத்திற்கு அவரே சாட்சி சொன்னவரைப் போன்றாகி விடுவார். என இமாம் குர்துபீ ரஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.

عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ،" " وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ "((7) العاديات)  ، قَالَ: الْإِنْسَانُ شَاهِدٌ عَلَى نَفْسِهِ،

 كان الإمام أبو حنيفة إذا أشكَلت عليه مسألة قال لأصحابه: "ما هذا إلا لذنبٍ أحدثتُه"، وكان يستغفر، وربما قام وصلى، فتنكشف له المسألة، ويقول: "رجوتُ أني تِيبَ علَيَّ"؛ (الجواهر المضية - محيي الدين الحنفي - ج- 2 - ص- 478).

இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்களுக்கு ஏதேனும் ஒரு மஸ்அலாவில் சிக்கல் ஏற்பட்டால் நான் செய்த பாவத்தின் காரணமாகவே இது ஏற்பட்டுள்ளது என்று கூறி இஸ்திஃபார் செய்வார்கள். சில நேரங்களில் அதற்காக தொழுது தவ்பா செய்வார்கள். அதன் பின்பு அந்த சிக்கல் நீங்கும். அப்போது இமாம் என் தவ்பா ஏற்கப்பட்டதன் அடையாளமாக இந்த சிக்கல் நீங்கி இருக்கலாம் என நான் ஆதரவு வைக்கிறேன் என்று கூறுவார்கள்.

 قال علي بن خشرم: "رأيت وكيع بن الجراح وما رأيتُ بيده كتابًا قط، إنما هو يحفظ، فسألتُه عن دواء الحفظ، فقال: تركُ المعاصي، ما جرَّبْتُ مِثلَه للحفظ"؛ (تهذيب التهذيب - لابن حجر العسقلاني - ج- 2 - ص- 129).

வகீஃ ரஹ் அவர்களை நான் கையில் கிதாப் இல்லாமலேயே மனப்பாடமாக பல விஷயங்களைக் கூறுவதை அவர்களின் மன ன சக்திக்கான காரணத்தை நான் கேட்டேன். அதற்கு அவர்கள் பாவங்களை விடுவது தான் மனன சக்திக்கு முக்கியக்காரணம் என் அனுபவத்தில் இதை விட முக்கியக் காரணத்தை கண்டதில்லை என்றார்கள்

قال مالك بن أنس للشافعي: "إن اللهَ ألقى على قلبك نورًا، فلا تُطفئه بظُلمة المعصية"؛ (تهذيب الأسماء - للنووي - ج- 1 - ص- 47).

قال الشافعي: شكوتُ إلى وكيعٍ سوءَ حِفظيفأرشَدني إلى ترك المعاصي  وأخبَرني بأن العلمَ نورٌ ونورُ الله لا يُهدى لعاص(ديوان الشافعي
மனப்பாடம் என்பது அல்லாஹ் உள்ளத்தில் உருவாக்கும் பிரகாசம். அதை உனது பாவத்தால் இருளாக்கி விடாதே என மாலிக் ரஹ் அவர்கள் இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்களுக்கு அறிவுரை கூறினார்கள். மேலும் இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் கூறும்போது நான் வகீஃ ரஹ் அவர்களிடம் என மன ன சக்தியின் குறைபாட்டை விபரித்த போது பாவங்களை விட்டு விடும்படி கூறியதுடன் மனனம் என்பது அல்லாஹ் ஏற்படுத்தும் பிரகாசம். பிரகாசத்தை அல்லாஹ் பாவிக்குத் தர மாட்டான்.

قال ابن عباس رضي الله عنه (إن للحسنة ضياء في الوجه ونوراً في القلب وسعة في الرزق وقوة في البدن ومحبة في قلوب الناس. وإن للسيئة سواداً في الوجه وظلمة في القلب ووهناً في البدن ونقصاً في الرزق وبغضاً في قلوب الناس).

இப்னு அப்பாஸ் ரழி கூறினார்கள். நன்மை செய்வதால் முகத்திலும், உள்ளத்திலும் ஒளி ஏற்படும். ரிஜ்கில் பரக்கத், உடல் வலிமை, மக்களின் பிரியம் ஆகியவை ஏற்படும். ஆனால் பாவம் செய்வதால் இதற்கு மாற்றமான நிலை தான் ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...