வெள்ளி, 22 ஏப்ரல், 2022

21-வது தராவீஹ்- முஃமின்களை மட்டும் அல்லாஹ் சோதிப்பது ஏன்? துஆவையும் சஜ்தாவையும் அதிகப்படுத்துவதால் சோதனைகள் குறையும்

 




 

21-வது தராவீஹ்- முஃமின்களை மட்டும் அல்லாஹ் சோதிப்பது ஏன்?

துஆவையும் சஜ்தாவையும் அதிகப்படுத்துவதால் சோதனைகள் குறையும்

وَلَوْلَا أَنْ يَكُونَ النَّاسُ أُمَّةً وَاحِدَةً لَجَعَلْنَا لِمَنْ يَكْفُرُ بِالرَّحْمَنِ لِبُيُوتِهِمْ سُقُفًا مِنْ فِضَّةٍ وَمَعَارِجَ عَلَيْهَا يَظْهَرُونَ (33) وَلِبُيُوتِهِمْ أَبْوَابًا وَسُرُرًا عَلَيْهَا يَتَّكِئُونَ (34) وَزُخْرُفًا وَإِنْ كُلُّ ذَلِكَ لَمَّا مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَالْآخِرَةُ عِنْدَ رَبِّكَ لِلْمُتَّقِينَ (35)

وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنْكُمْ وَالصَّابِرِينَ وَنَبْلُوَ أَخْبَارَكُمْ (31) محمد -      فَاصْبِرْ كَمَا صَبَرَ أُولُو الْعَزْمِ مِنَ الرُّسُلِ وَلَا تَسْتَعْجِلْ لَهُمْ كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَ مَا يُوعَدُونَ لَمْ يَلْبَثُوا إِلَّا سَاعَةً مِنْ نَهَارٍ بَلَاغٌ فَهَلْ يُهْلَكُ إِلَّا الْقَوْمُ الْفَاسِقُونَ (35) محمد

 இனிமேலாவது நாம் ஒவ்வொருவரும் நம் தனிப்பட்ட வாழ்க்கையைப் பரிசுத்தமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

(ஹழ்ரத் ஹுஸைன் அஹ்மத் மதனீ ரஹ் கூறினார்கள்- இஸ்லாம் பாதுகாக்கப்பட வேண்டும் என உரத்து முழங்குகிறார்கள். ஆனால் தம் அன்றாட வாழ்வில் இஸ்லாத்தை விட்டும் விலகி இருக்கிறார்கள். இஸ்லாம் ஒன்றும் சிலை கிடையாது. அதனைப் பாதுகாப்பதற்கு....  படை பட்டாளம் தேவைப் படுவதற்கு.. மாறாக உங்களின் அன்றாட வாழ்வில் இஸ்லாத்தைப் பின்பற்றுங்கள். நீங்களும் பாதுகாக்கப் படுவீர்கள். இஸ்லாமும் பாதுகாக்கப் பட்டு விடும்.)     

உங்களை வெளியேற்றுவோம் என எதிரிகள் மிரட்டியபோது நீங்கள் உங்களின் தனிப்பட்ட வாழ்வில் என்னை அஞ்சி நடந்தால்  நான் இங்கேயே உங்களைக் குடியமர்த்துவேன் என அல்லாஹ் வாக்குறுதி அளித்தான்.

உங்களை வெளியேற்றி விடுவோம் என்ற மிரட்டல் நமக்குப் புதிதல்ல. ஒவ்வொருகாலத்திலும்முஃமின்களுக்குஇந்த மிரட்டல் வந்தது

فما كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَنْ قَالُوا أَخْرِجُوا آلَ لُوطٍ مِنْ قَرْيَتِكُمْ (56)النمل-لَنُخْرِجَنَّكَ يَا شُعَيْبُ وَالَّذِينَ آمَنُوا مَعَكَ مِنْ قَرْيَتِنَا أَوْ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَا (88 الاعراف   -   وَقَالَ الَّذِينَ كَفَرُوا لِرُسُلِهِمْ لَنُخْرِجَنَّكُمْ مِنْ أَرْضِنَا أَوْ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَا فَأَوْحَى إِلَيْهِمْ رَبُّهُمْ لَنُهْلِكَنَّ الظَّالِمِينَ (13) وَلَنُسْكِنَنَّكُمُ الْأَرْضَ مِنْ بَعْدِهِمْ ذَلِكَ لِمَنْ خَافَ مَقَامِي وَخَافَ وَعِيدِ  الانبياء (14

தக்வா என்றproof நம் எல்லோரிடம் இருந்து விட்டால் நம்மை இங்கிருந்து யாரும் வெளியேற்றி விட முடியாது.

இதில் மற்றொரு கருத்தும் உள்ளது.ஆரம்பிக்கும்போது كفرواஎன ஆரம்பித்து, முடிக்கும்போது لنهلكنالظالمينஎன்று அல்லாஹ் முடித்துள்ளான். அவர்கள் காஃபிர்களாக மட்டுமன்றி ظالمينகளாக ஆகி, நாம்مظلومகளாக இருக்கும் நிலையில் நாம் உண்மை முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வின் உதவி நிச்சயம் வரும். கடைசி காலத்தில் உலகெங்கும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகி ஒதுங்க இடம் இல்லாத போது இமாம் மஹ்தீ அவர்களின் ஆட்சி வரும் என்று ஹதீஸ் உள்ளது. 

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، قَالَ : ذَكَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلمبَلاءً يُصِيبُ هَذِهِ الأُمَّةَ حَتَّى لا يَجِدُ الرَّجُلُ مَلْجَأً يَلْجَأُ إِلَيْهِ مِنَ الظُّلْمِ ، فَيَبْعَثُ اللَّهُ رَجُلا مِنْ عِتْرَتِي أَهْلِ بَيْتِي ، فَيَمْلأُ بِهِ الأَرْضَ قِسْطًا وَعَدْلا كَمَا مُلِئَتْ جَوْرًا وَظُلْمًا ، يَرْضَى عَنْهُ سَاكِنُ السَّمَاءِ وَسَاكِنُ الأَرْضِ ، لا تَدَعُ السَّمَاءُ مِنْ قَطْرِهَا شَيْئًا إِلا صَبَّتْهُ مِدْرَارًا ، وَلا تَدَعُ الأَرْضُ مِنْ نَبَاتِهَا شَيْئًا إِلا أَخْرَجَتْهُ حَتَّى يَتَمَنَّى الأَحْيَاءُ الأَمْوَاتَ ، يَعِيشُ فِي ذَلِكَ سَبْعَ سِنِينَ أَوْ ثَمَانِ سِنِينَ أَوْ تِسْعَ سِنِينَ[ مصنف عبد الرزاق

மேற்படி வசனத்தில் மற்றொரு கருத்தும் உள்ளது. ظالمينகளை நாம் அழிப்போம் என்று அல்லாஹ் கூறுவதில் இருந்து நாம் விளங்க வேண்டியது நாம் ஒருபோதும் ظالمينகளாக மாறி விடக் கூடாது. அதாவது வன்முறையை கையில் எடுத்து விடக்கூடாது. அவ்வாறு செய்தால் அல்லாஹ் கூறியுள்ள படி அழிவு நமக்குத்தான்.

ஐவேளைத் தொழுகையை முறையாக கடை பிடிக்க வேண்டும். தஹஜ்ஜத் தொழுகையையும் கடைபிடிக்க வேண்டும்.

பத்ருப் போர் நடைபெறுவதற்கு முன்பு ஆறு மாத காலம் நாங்கள் தஹஜ்ஜத் தொழுகையை விடாமல் தொழுதோம் என அன்னை ஆயிஷா ரழி அவர்கள் கூறினார்கள். பத்ருப்போர் நடைபெறுவதற்கு முன்பு இரவில் யாஹய்யு யாகய்யூம் என்று அழுது துஆச் செய்ததால் தான் அல்லாஹ் வெற்றியைத் தந்தான் (என்பதை எந்த முஸ்லிம் மறுக்க முடியும்.  விஷயம் எல்லை மீறிப் போய் விட்டது இனிமேல் நாம் உட்கார்ந்து துஆ செய்து என்ன சாதிக்கப் போகிறோம் என்று சிலர் பேசுவது வேதனையாக இருக்கிறது)

ரப்புக்கு நாம் செய்யும் அதிகமான சஜ்தாக்கள் எப்படிப்பட்ட எதிரியையும் வீழ்த்தும்.

ஒரு மகான் கூறுவார்களாம். இந்த பூமிக்கென்று ஒரு தாகம் உண்டு. அதுதான் சஜ்தாவின் தாகம். நீங்கள் ரப்புக்கு சஜ்தா செய்வது கொண்டு அந்த தாகத்தை நீங்கள் தணிக்கா விட்டால் அதற்கு இரத்த வெறி பிடித்து விடும்.

ஒருமுறை இஸ்ரேலியப் பெண் அமைச்சரிடம் பத்திரிக்கை நிருபர்  பேட்டி எடுத்தார். யூதர்களாகிய உங்களை கடைசி காலத்தில் முஸ்லிம்கள் கொல்லுவார்கள். அப்போது மரம், மலைக்குப் பின்னால் நீங்கள் ஒதுங்கிக் கொள்வீர்கள். ஆனால் அந்த மரமும் மலையும் உங்களுக்கு எதிராக உங்களைக் காட்டிக் கொடுக்கும் என்று முஸ்லிம்கள் கூறுகிறார்களே அது உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டபோது, அந்த அமைச்சர் இது எங்களுக்கு நன்றாகவே தெரியும். இது எப்போது நடக்கும் என்பதும் தெரியும்.  முஸ்லிம்கள் அனைவரும் ஜும்ஆவுக்கு ஒன்று கூடுவது போன்று ஒவ்வொரு நேரத் தொழுகைக்கும் ஒன்று கூடுவார்கள். அப்போது இது நடக்கும். அதை எதிர் கொள்ள நாங்கள் தயார் என்று பேசியுள்ளார். ஒட்டு மொத்த  முஸ்லிம்களிடமும் இறையச்சம் வந்து விட்டால் அல்லாஹ் எல்லாவற்றையும் நம் வசமாக்கித் தருவான் என்பதில் முஃமினுக்கு சந்தேகம் இருக்காது.

عَنْ أَبِي هُرَيْرَةَرضي الله عنهأَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقَاتِلَ الْمُسْلِمُونَ الْيَهُودَ فَيَقْتُلُهُمْ الْمُسْلِمُونَ حَتَّى يَخْتَبِئَ الْيَهُودِيُّ مِنْ وَرَاءِ الْحَجَرِ وَالشَّجَرِ فَيَقُولُ الْحَجَرُ أَوْ الشَّجَرُ يَا مُسْلِمُ يَا عَبْدَ اللَّهِ هَذَا يَهُودِيٌّ خَلْفِي فَتَعَالَ فَاقْتُلْهُ إِلَّا الْغَرْقَدَ فَإِنَّهُ مِنْ شَجَرِ الْيَهُودِ (مسلم) 5203

عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَيُوشِكَنَّ أَنْ يَنْزِلَ فِيكُمْ ابْنُ مَرْيَمَ حَكَمًا عَدْلًا فَيَكْسِرَ الصَّلِيبَ وَيَقْتُلَ الْخِنْزِيرَ وَيَضَعَ الْجِزْيَةَ وَيَفِيضَ الْمَالُ حَتَّى لَا يَقْبَلَهُ أَحَدٌ حَتَّى تَكُونَ السَّجْدَةُ الْوَاحِدَةُ خَيْرًا مِنْ الدُّنْيَا وَمَا فِيهَا ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ {وَإِنْ مِنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا}- (بخاري) 3448

மொத்த உலகின் சொத்து சுகங்களை விட முஃமினின் உள்ளத்தில் சஜ்தாவின் மதிப்பு கூடும்போது எல்லாம் நமக்கு வசப்படும்

துஆ மாபெரும் ஆயுதம். அதைப் பயன்படுத்த வேண்டும். ஒருபோதும் நிராசையாகி விடக்கூடாது

கடலில் விழுந்து தத்தளிக்கும் ஒருவன் துஆ செய்வது போல அல்லாஹ்விடம்கெஞ்சி துஆசெய்ய வேண்டும்.

ஹஜ்ஜாஜுக்கு எதிராக ஸயீத் ரழி அவர்கள் செய்த துஆவை அல்லாஹ்  உடனே ஏற்றுக் கொண்டான்

ثم دعا الحجاج بآلات اللهو، فضربت بين يدي سعيد فبكى سعيد. فقال الحجاج: ويلك يا سعيد. فقال سعيد: الويل لمن زحزح عن الجنة، وأدخل النار. فقال: يا سعيد أي قتلة تريد أن أقتلك بها؟ قال: اختر لنفسك يا حجاج، فوالله لا تقتلني قتلة إلا قتلك الله مثلها في الآخرة. قال: فتريد أن أعفو عنك؟ قال: إن كان العفو من الله فنعم، وأما منك أنت فلا. فقال: اذهبوا به فاقتلوه. فلما أخرج من الباب ضحك، فأخبر الحجاج بذلك، فأمر برده فقال: ما أضحكك وقد بلغني أن لك أربعين سنة لم تضحك؟ قال: ضحكت عجباً من جراءتك على الله، ومن حلم الله عليك، فأمر بالنطع فبسط بين يديه، وقال: اقتلوه.فقال سعيد: " كل نفس ذائقة الموت " . ثم قال: " وجهت وجهي للذي فطر السموات والأرض حنيفاً مسلماً وما أنا من المشركين " . قال: وجهوه لغير القبلة. فقال سعيد: " فأيما تولوا فثم وجه الله " فقال: كبوه لوجهه. فقال: " منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى " فقال الحجاج: اذبحوه. فقال سعيد: أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمداً عبده ورسوله. ثم قال: اللهم لا تسلطه على أحد يقتله بعدي. فذبح على النطع رحمة الله تعالى عليه، فكان رأسه يقول بعد قطعه: لا إله إلا الله مراراً. وذلك في شعبان سنة خمس وتسعين. وكان عمر سعيد تسعاً وأربعين سنة،(حياة الحيوان– البداية والنهاية

قال عون ابن أبي شداد العبدي ... وبلغنا أن الحجاج عاش بعده خمسة عشر ليلة ووقع الاكلة في بطنه فدعا بالطبيب لينظر اليه فنظر اليه ثم دعا بلحم منتن فعلقه في خيط ثم أرسله في حلقه فتركها ساعة ثم استخرجها وقد لزق به من الدم فعلم أنه ليس بناج وبلغنا أنه كان ينادي بقية حياته مالي ولسعيد بن جبير كلما أردت النوم أخذ برجلي (حلية الاولياء)

ஹஜ்ஜாஜ் கடைசியாக கொலை செய்த து ஸயீத் இப்னு ஜுபைர் ரழி அவர்களைத் தான். உன்னை எப்படிக் கொல்லட்டும் என ஸயீத் ரழி அவர்களிடமே அவன் கேட்க, அது உன் இஷ்டம். ஆனால் அல்லாஹ் மீது சத்தியமாக நீ என்னை எப்படிக் கொன்றாலும் அல்லாஹ் பதிலுக்கு உன்னை மறுமையில் கொல்லுவான்.  என்று கூறியபோது, நான் உன்னை மன்னிப்பதை விரும்புகிறாயா என்று கேட்க, மன்னிப்பு அல்லாஹ்விடமிருந்து என்றால் அது எனக்கு சந்தோஷம். உன் மன்னிப்பு எனக்குத் தேவையில்லை என்றார்கள். பிறகு ஹஜ்ஜாஜ் ஸயீத் ரழி அவர்களைக் கொல்ல உத்தரவிட்டான். ஸயீத் ரழி சிரித்தார்கள். உடனே ஹஜ்ஜாஜ் 40 வருடங்களாக சிரித்த தில்லை என்று உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். எதற்காக நீ இப்போது சிரித்தாய் என்று கேட்க, அல்லாஹ்வுக்கு எதிராக உனது திமிரையும், அல்லாஹ் உன்னை இன்னும் விட்டு வைத்திருப்பதையும் எண்ணி ஆச்சரியத்தால் சிரிக்கிறேன். என்றார்கள். பிறகு அவர்களைக் கொல்வதற்காக படுக்க வைக்கப்பட்ட போது ஒவ்வொரு ஆத்மாவும் மவ்த்தை அனுபவித்தே தீரும் என்றார்கள். அப்போது கிப்லாவின் பக்கம் முகம் இருந்தது. அந்த சந்தோஷத்தில் ஸயீத் ரழி வஜ்ஜஹ்து ஓதினார்கள். உடனே ஹஜ்ஜாஜ் அவரின் முகத்தை கிப்லாவை விட்டும் திருப்புங்கள் என்றான். அவ்வாறு திருப்ப ப்பட்ட போது   என்ற ஆயத்தை ஓதினார்கள். அவரைக் குப்புறப் படுக்க வையுங்கள் என்றான் ஹஜ்ஜாஜ். அப்போது  فأيما تولوا فثم وجه الله

என்ற ஆயத்தை ஸயீத் ரழி அவர்கள்  ஓதினார்கள். பின்பு ஸயீத் ரழி அவர்கள்  منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى "

ஷஹீதாக்கப்பட்டார்கள். அவர்களின் நாவு கடைசி நேரத்தில் கலிமாவை உச்சரித்த து மட்டுமன்றி, அவர்களின் தலையைத் துண்டாக்கிய பின்பும் அவர்களின் தலை மட்டும் கலிமாவை மொழிந்து கொண்டே இருந்தது.  இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் ஸயீத் ரழி அவர்கள் கடைசி நேரத்தில் யாஅல்லாஹ் எனக்குப் பின் வேறு யார் மீதும் இவனை நீ சாட்டி விடாதே என்று துஆ செய்தார்கள். அதை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். இதற்குப் பின் 15 இரவுகள் மட்டுமே ஹஜ்ஜாஜ் வாழ்ந்தான். இந்த 15 நாட்களும் தூங்கவே இல்லை. படுத்தால் என் காலைப் பிடித்து ஸயீத் இழுப்பது போன்றிருக்கிறது என்பான்

முல்லா ஜீவன் ரஹ் அவர்களைக் கைது செய்ய மன்னர் ஷாஜஹான் உத்தரவிட்ட போதுஹழ்ரத் செய்த துஆவின் விளைவு

மன்னர் ஷாஜஹானுக்கு ஒருமுறை பட்டாடை அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அதை அவர் அணிந்தார். அப்போது ஒளரங்கசீப் ரஹ் அவர்கள் தன் தந்தையிடம் வேண்டாம் தந்தையே நீங்கள் பட்டாடை அணியக்கூடாது என் உஸ்தாத் முல்லா ஜீவன் ரஹ் அவர்கள் ஆண்கள் பட்டாடை அணியக்கூடாது என அறிவுரை கூறியுள்ளார்கள். என்று தடுக்க, அதைக் கேட்காத ஷாஜஹான் என்னைத் தடுக்க அவர் யார் என்று கூறியதுடன் பட்டாடைகளை அணிந்தார். அத்தோடு முல்லா ஜீவன் ரஹ் அவர்களைக் கைது செய்யவும் உத்தரவிட்டார். அது தெரிந்த முல்லா ஜீவன் ரஹ் அவர்கள் ரப்பிடம் தொழுது துஆச் செய்வதில் ஈடுபட்டனர். அதேநேரம்  இதை அறிந்து பயந்த ஒளரங்கசீப் ரஹ் அவர்கள் தன் தந்தையிடம் சென்று கெஞ்சுகிறார்கள். ஹழ்ரத் அவர்கள் நமக்கு எதிராக துஆச் செய்தால் என்ன ஆகும். எனவே தயவு செய்து கைது உத்தரவை வாபஸ் பெறுங்கள். என்று கெஞ்ச, மன்னர் ஷாஜஹான் கைது உத்தரவை வாபஸ் பெறுகிறார். அந்த உத்தரவை வாங்கிக் கொண்டு வேகமாக ஒளரங்கசீப் ரஹ் அவர்கள் உஸ்தாதிடம் வருவதற்குள் உஸ்தாத் அவர்கள் துஆ ஓதி கைகளை முகத்தில் தடவி விட்டார்கள். ஒளரங்கசீப் ரஹ் விஷயத்தைக் கூறியவுடன் முல்லா ஜீவன் ரஹ் அவர்கள் நீங்கள் இத்தகைய காரியத்தில் ஈடுபட்ட காரணத்தால் உம்முடைய ஆட்சிக்காலம் வரை தான் முகலாய அரசு நீடிக்கும் என்றார்கள். அதன்படி ஒளரங்கசீப் ரஹ் அவர்களோடு முகலாய ஆட்சி முடிவுக்கு வந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...