23- ம் தராவீஹ் பயான் - முயற்சி செய். சோம்பேறித்தனம் வேண்டாம்.
وَأَنْ
لَيْسَ لِلْإِنْسَانِ إِلَّا مَا سَعَى (39) وَأَنَّ سَعْيَهُ سَوْفَ يُرَى
(40)النجم
கோழைத்தனத்தை
விட்டும் அடிக்கடி நபிகளார் பாதுகாப்பு தேடுவார்கள்
عَنْ أَنَسِرَضِأَنَّ
النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ لِأَبِي طَلْحَةَ الْتَمِسْ غُلَامًا مِنْ غِلْمَانِكُمْ يَخْدُمُنِي حَتَّى
أَخْرُجَ إِلَى خَيْبَرَ فَخَرَجَ بِي أَبُو طَلْحَةَ مُرْدِفِي وَأَنَا غُلَامٌ
رَاهَقْتُ الْحُلُمَ فَكُنْتُ أَخْدُمُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ إِذَا نَزَلَ فَكُنْتُ أَسْمَعُهُ كَثِيرًا يَقُولُ اللَّهُمَّ إِنِّي
أَعُوذُ بِكَ مِنْ الْهَمِّ1 وَالْحَزَنِ2 وَالْعَجْزِ3وَالْكَسَلِ4
وَالْبُخْلِ5 وَالْجُبْنِ6 وَضَلَعِ الدَّيْنِ7
وَغَلَبَةِ الرِّجَالِ8...(بخاري)
باب مَنْ غَزَا بِصَبِىٍّ لِلْخِدْمَةِ-كتاب الجهاد
1.நடந்ததை
எண்ணி கவலைப்படுவது 2.நடைபெறப் போவதை எண்ணி கவலைப்படுவது 3.இயலாமை உடல் பலவீனம்
4.சோம்பேறித்தனம் 5.கஞ்சத்தனம் 6.வீரமற்ற கோழைதத்தனம் 7.கடன் இரட்டிப்பாகுதல்
8.கடன்காரர்களின் அல்லது அநியாயக்கார ர்களின் அடக்கு முறை
தும்மல் என்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்தும், சோம்பலின்
அடையாளமான கொட்டாவி என்பது ஷைத்தானின் புறத்திலிருந்தும் ஏற்படுகிறது
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي
الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْعُطَاسُ مِنْ اللَّهِ
وَالتَّثَاؤُبُ
مِنْ الشَّيْطَانِ فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيَضَعْ يَدَهُ عَلَى فِيهِ
وَإِذَا قَالَ آهْ آهْ فَإِنَّ الشَّيْطَانَ يَضْحَكُ مِنْ جَوْفِهِ وَإِنَّ
اللَّهَ يُحِبُّ الْعُطَاسَ وَيَكْرَهُ التَّثَاؤُبَ فَإِذَا قَالَ الرَّجُلُ آهْ
آهْ إِذَا تَثَاءَبَ فَإِنَّ الشَّيْطَانَ يَضْحَكُ فِي جَوْفِهِ (ترمذي) بَاب
مَا جَاءَ إِنَّ اللَّهَ يُحِبُّ الْعُطَاسَ وَيَكْرَهُ التَّثَاؤُبَ-
كِتَاب
நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே
ஏற்படுகிறது என்றிருக்க இங்கே கொட்டாவியை ஷைத்தானுடன் இணைத்து கூறியதற்கு காரணம்
அவன் தான் மனிதனிடம் அதை மிகவும் விரும்புகிறான். பொதுவாகவே நல்ல செயல்களை
மலக்குகளுடனும், கெட்ட செயல்களை ஷைத்தானுடனும் இணைத்து கூறுவதற்கு காரணம் இது
தான். மிர்காத்
சோம்பேறித்தனம் என்பது முனாஃபிக்கின் அடையாளம்
சோம்பேறியை
தொழ அழைத்தால் ஏதாவது சாக்குப் போக்கு நீங்கள் சென்று வாருங்கள் என்று நம்மை
அனுப்பி வைத்து விடுவான். அதையும் மீறி அவன் வந்து விட்டாலும் தொழுகையில் அக்கறை
அற்றவனாகவே நிற்பான்
إِنَّ الْمُنَافِقِينَ
يُخَادِعُونَ اللَّهَ وَهُوَ خَادِعُهُمْ وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ
قَامُوا كُسَالَى
يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا (142)النساء
أي متثاقلين متباطئين وهو معنى
الكسل في اللغة ، وسبب ذلك الكسل أنهم يستثقلونها في الحال ولا يرجون بها ثواباً
ولا من تركها عقاباً
இதன்படி தொழுகையை
யாரெல்லாம் சுமையாக கருதுகிறார்களோ அவர்கள் அனைவரும் சோம்பேறிகள் தான்
சோம்பேறித்தனத்தால் இம்மையில் ஏற்படும் தீமைகள்
عَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ الْمُجَاشِعِيِّ أَنَّ
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ذَاتَ يَوْمٍ فِي
خُطْبَتِهِ ....... وَأَهْلُ النَّارِ خَمْسَةٌ الضَّعِيفُ الَّذِي لَا زَبْرَ لَهُ الَّذِينَ هُمْ
فِيكُمْ تَبَعًا لَا يَبْتَغُونَ أَهْلًا وَلَا مَالًا وَالْخَائِنُ الَّذِي لَا
يَخْفَى لَهُ طَمَعٌ وَإِنْ دَقَّ إِلَّا خَانَهُ وَرَجُلٌ لَا يُصْبِحُ وَلَا
يُمْسِي إِلَّا وَهُوَ يُخَادِعُكَ عَنْ أَهْلِكَ وَمَالِكَ وَذَكَرَ الْبُخْلَ
أَوْ الْكَذِبَ وَالشِّنْظِيرُ الْفَحَّاشُ (مسلم
சோம்பேறித்தனத்தால் இம்மை, மறுமை இரண்டுக்கும் பாதிப்பு உண்டாகும். சோம்பேறி
வாழ்க்கையில் முன்னேற எவ்வித முயற்சியும் செய்ய மாட்டான். நபி ஸல் அவர்கள்
கூறினார்கள். ஐந்து விதமான நபர்கள் நரகவாதிகள்1,
புத்தி சாதுர்யம் இல்லாத பலவீனமானவர். (சோம்பேறி) இவருக்கென
சுய சம்பாத்தியம் இல்லாமல் எப்போதும் உங்களைப் பின் தொடர்வார். இப்படிப்பட்டவர்கள்
(செலவுக்கு அஞ்சி) திருமணம் செய்யவும்
மாட்டார்கள். சம்பாதிக்கும் வழியையும் தேட மாட்டார்கள். 2, எந்த ஆசையையும் விட்டு
வைக்காத மோசடிக்காரன்- (இவன் அடுத்தவர்களை ஏமாற்றியே தனது
எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்வான்.) அற்பமான பொருளாக
இருந்தாலும் இவன் அடுத்தவர்களை ஏமாற்றித் தான் அதை அடைவான் 3, (கூடவே இருந்து குழி பறிக்கும்) துரோகி- இவன்
காலையிலும், மாலையிலும் (எந்த நேரமும்)
உன்னுடைய பொருள் விஷயத்திலும், உன் வீட்டார் விஷயத்திலும் உனக்கு துரோகம் செய்வான்.
4,கஞ்சன் அல்லது பொய்யன் 5,அசிங்கமான வார்த்தைகளைப் பேசும் ஒழுக்கமற்றவன்
நூல்- முஸ்லிம்
மேற்படிஹதீஸ்
உழைக்காமல் ஊர் சுற்றும் ஊதாரிகளுக்கு பெரும் எச்சரிக்கையாகும். ஒரு காலத்தில்
பொருளாதாரத்திலும் இன்ன பிற துறைகளிலும் முதலிடத்தில் இருந்த முஸ்லிம் சமூகம்
இன்று பல வகையிலும் பின் தங்கியுள்ளது. இந்திய முஸ்லிம்களில் 94.8 சதவீதம் பேர்
வறுமையில் இருப்பதாக புள்ளி விபரம் கூறுகிறது. பல நகரங்களில் தலித்துகளின்
வருமானத்தை விட முஸ்லிம்களின் வருமானம் குறைவாக உள்ளது. பல ஊர்களில் சொந்த வீட்டில்
வசித்த முஸ்லிம்கள் அந்த வீடுகளை மாற்றார்களுக்கு விற்று விட்டு வாடகை வீட்டில்
வசிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கெல்லாம்
காரணம் இஸ்லாத்தின் கடந்த கால வரலாறுகளை நம் சமூகம் மறந்தது தான்
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத்
செய்தபொழுதுவெறுங்கையுடன் தான் சென்றார்கள். எவ்வித பொருளாதாரமும்
அவர்களிடம்இல்லை. இந்நிலையில், சஅத்பின் ரபீஆ(ரழி)
அவர்களுடன் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களை சகோதரராக நபி (ஸல்) அவர்கள்
இணைத்து வைத்தார்கள். சஅத் (ரழி) அவர்கள் அவருக்காக எவ்வளவோ உதவிகள் செய்ய தயாராக
இருந்தார்கள். ஆனால் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரழி அவர்களோ அதை ஏற்காமல் சஃதே! அல்லாஹ்
உங்களைஆசீர்வதிப்பானாக!உங்களது செல்வங்கள் உங்களிடமே இருக்கட்டும். முதலில் எனக்கு
கடைவீதியை காட்டுங்கள். எனதுரிஜ்கை நானே தேடிக் கொள்கின்றேன். உங்களுக்கு பாரமாக
நான் இருக்கவிரும்பவில்லை என்றார்கள்.
அதன் படி அப்துர் ரஹ்மான்(ரழி) அவர்கள்,தன் வியாபாரத்தை தொடங்கினார்கள். அல்லாஹ் அவரது வியாபாரத்தில் அருட்கொடைகளைச்
சொறியஆரம்பித்தான்.அவர் கனவிலும் நினைத்திராத அளவுக்கு அவரது செல்வ வளங்கள்
அதிகரித்தன. அப்துர் ரஹ்மான்(ரழி)அவர்கள் ஒரு கல்லைத் தொட்டாலும் அது தங்கமாக மாறி
விடும் எனும் அளவுக்கு அவர் ஆரம்பித்த அத்தனை வியாபாரங்களிலும் இறைவன் தனது
அருள்மழையைப் பொழிந்தான். இவ்வளவு சொத்துக்களையும்
அப்துர் ரஹ்மான்(ரழி)அவர்கள் தனது சம்பாத்தியத்தின் மூலமாகவே ஈட்டிக் கொண்டார்.
மேலும், அவற்றில் இருந்து வரும்
வருமானத்தை அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக அவர் செலவிட என்றுமே தயங்கியதில்லை
ஒரு சமயம், 700 ஒட்டகங்கள் நிறைய
வணிகப்பொருட்களுடனும், தானியங்களுடனும்
மதீனமா நகரத்துக்குள் நுழைந்த பொழுது,
அந்த வணிகக்கூட்டத்தின் வருகையால் மதீனா நகரமே அதிர்ந்து கொண்டிருந்தது. இந்த
சலசலப்பைசெவியுற்ற அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள், இந்த மதீனாவிற்கு என்ன நேர்ந்து விட்டது, ஒரேசலசலப்பாக இருக்கின்றதே..! என்று தனது பணிப் பெண்ணிடம் கேட்கின்றார்கள்.
அப்துர்ரஹ்மானின் 700 ஒட்டகங்கள் வணிகப்
பொருட்களுடன் மதீனா நகருக்குள் நுழைந்துகொண்டிருப்பதாகவும், அதன் காரணமாகத் தான் இந்த சலசலப்புக்கள் என்று அவருக்குக் கூறப்பட்டது. இதனைக்
கேட்ட அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்)
அவர்கள்கூற நான் கேட்டிருக்கின்றேன் :''அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)அவர்கள்
சுவனத்தில் நுழையும் பொழுது, தவழ்ந்த நிலையிலும், குதித்துக் குதித்தும் நுழைவார்கள்;'' என்று கூறினார்கள்.இதனைக் கேள்விப்பட்ட
அப்துர்ரஹ்மான் (ரழி) அவர்கள், அன்னை ஆயிஷா (ரழி)
அவர்களிடம் வந்து அன்னையவர்களிடம், நீங்கள் இவ்வாறு
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றீர்களா என்றுகேட்டார்கள்.
அன்னையவர்களும் ஆம்..! எனச் சொன்னதும்,
நபி (ஸல்) அவர்களால் அறிவிக்கப்பட்ட இந்த நன்மாராயத்திற்காக, அல்லாஹ்வின் பெயரால்இந்த வணிகப் பொருட்களையும், அதனைச் சுமந்து வந்திருக்கின்ற இந்த ஒட்டகங்களையும்நான் இந்த முஸ்லிம்
உம்மத்தின் நல்வாழ்வுக்காக தானமாகக் கொடுக்கின்றேன் என்று கூறி, அத்தனை பொருட்களையும் ஒட்டகங்களையும் தானம் செய்து விட்டார்கள்.
இவ்வாறு அவர்கள் நிறைய தர்மம் செய்த போதும்
அவரது சொத்தின் மதிப்புநாளுக்கு நாள் வளர்ந்ததே ஒழிய குறைந்ததாகச் சரித்திரம்
கிடையாது. அவரது சந்ததிக்காகமிகப் பெரும் சொத்தை விட்டுச் சென்றார். அவரது நான்கு
மனைவிகளுக்கு மட்டும்எண்பதாயிரம் தினார்களையும், ஏராளமான தங்கக் கட்டிகளையும் விட்டுச் சென்றார். அவர் இறந்த பொழுது, அசையாச்சொத்துக்களைத் தவிர்த்து, ஆயிரம்
ஒட்டகங்களையும், நூறு குதிரைகளையும், மூவாயிரம்ஆடுகள் கொண்ட மந்தையையும் விட்டுச் சென்றார்கள்.
சுறுசுறுப்பை எறும்புகளிடமிருந்து மனிதர்கள் பாடமாக கற்க
வேண்டும்
எறும்புகள் உருவத்தில்
சிறியதாக இருந்தாலும் சுறுசுறுப்பு மற்றும் உழைப்பு ஆகியவற்றில் மனிதர்களை விட
மேலானவை. தனக்கான இரை தன்னை விட பல மடங்கு பெரியதாக இருந்தாலும் அதை நகர்த்தி
கொண்டு செல்வதில் எறும்புக்கு நிகர் வேறெதுவும் இல்லை. பொய் சொல்வதை விரும்பாத, கட்டுப்பாடு மிக்க கூட்டம்.
தங்களுக்குள்ளே கண்காணிப்பாளர், வேலைக்காரர் என பொறுப்புகளை நியமித்துக் கொண்டு
கட்டுப்பாட்டுடன் செயல்படும். முற்காலத்தில் ஒரு நல்லடியார் எறும்பு பற்றிய ஒரு
செய்தியை கூறும்போது நான் ஒருமுறை ரொட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அதன் சிறிய
ஒரு பகுதி கீழே விழ, ஒரு எறும்பு வந்து அதை கொண்டு செல்ல முயன்றது. அதனால் அந்த
உணவை நகர்த்த முடியவில்லை. உடனே அங்கிருந்து சென்று சிறிது நேரத்தில் பல
எறும்புகளை அழைத்து வந்தது. அவைகளுக்குள் இருக்கும் தகவல் பரிமாற்றம் என்னை
மெய்சிலிரிக்க வைத்தது. சற்று தூரத்தில் அவைகள் வருவதைக் கண்ட நான், என்ன தான்
நடக்கிறது என்று பார்க்கலாமே என்றெண்ணி அவைகள் வரும் முன்பே அந்த ரொட்டித் துண்டை
கையில் எடுத்துக் கொண்டேன். அவைகள் வந்து பார்த்து விட்டு ஏமாற்றத்துடன்
திரும்பின. ஆனால் அந்த முதலாவது எறும்பு மட்டும் அங்கேயே ஏக்கத்துடன் சுற்றிக்
கொண்டிருக்க, நான் மறுபடியும் அந்த
ரொட்டித் துண்டை அங்கேயே வைத்தேன். உடனே வேகமாகச் சென்று தன் கூட்டத்தை அழைத்து
வந்தது. நான் மறுபடியும் அவைகள் வருவதற்கு முன்பு அந்த அந்த ரொட்டித் துண்டை கையில்
தூக்கிக் கொள்ள, அவைகள் ஏமாற்றத்துடன் திரும்பின. இவ்வாறே மூன்றாவது தடவையும் நான்
செய்தேன். மூன்றாவது முறை அவைகள் வந்த நேரத்தில் அந்த ரொட்டித் துண்டு அங்கே
இல்லாத தைக் கண்ட அந்த எறும்புகள் அனைத்தும் அந்த முதலாவது எறும்பை சூழ்ந்து
கொண்டு அதைக் கொன்று அதன் பாகங்களை தனித்தனியாத ஆக்கி விட்டன. இவ்வாறு நடக்கும்
என்பதை சற்றும் எதிர்பார்க்காத நான் கவலைப்பட்டு உடனே அந்த ரொட்டித் துண்டை அங்கே
வைத்தேன். அதைக் கண்ட அந்த எறும்புகள் அந்த ரொட்டியின் மீது கூட சிந்தனை இல்லாமல்
அநியாயமாக நமது சகோதரனை இப்படி கொன்று விட்டோமே என்ற கவலையுடன் அந்த எறும்பையே
சுற்றிச்சுற்றி வந்த காட்சி பரிதாபமாக இருந்தது என அந்த இறைநேசர் கூறுகிறார்கள்
மேலும் நாம் எப்படி நம்மில் ஒருவர் இறந்து விட்டால் அடக்கம்
செய்கிறோமோ அதேபோல ஒரு எறும்பு இறந்து விட்டால் அதை அடக்கம் செய்யும் பழக்கமும்
எறும்புகளிடம் உண்டு என்று கூறப்பட்டுள்ளது.
சோம்பேறித்தனத்தால் பனீ இஸ்ராயீல் சமூகத்தினர் பல வருடங்கள்
பாலைவனத்தில் அலைந்தனர்
وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ
.... فَاذْهَبْ أَنْتَ وَرَبُّكَفَقَاتِلَا إِنَّا هَا هُنَا قَاعِدُونَ (24) ...قَالَ
فَإِنَّهَا مُحَرَّمَةٌ عَلَيْهِمْ أَرْبَعِينَ سَنَةً يَتِيهُونَ فِي الْأَرْضِ
(26)المائدة
அல்லாஹ்வின் உத்தரவுக்கு
கட்டுப்படுவதால் சுறுசுறுப்பு வரும் அவனுடைய உத்தரவை மீறுவதில் சோம்பலே மிஞ்சும்
فَلَمَّا
فَصَلَ طَالُوتُ بِالْجُنُودِ قَالَ إِنَّ اللَّهَ مُبْتَلِيكُمْ بِنَهَرٍ فَمَنْ
شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّي وَمَنْ لَمْ يَطْعَمْهُ فَإِنَّهُ مِنِّي إِلَّا
مَنِ اغْتَرَفَ غُرْفَةً بِيَدِهِ فَشَرِبُوا مِنْهُ إِلَّا قَلِيلًا مِنْهُمْ
فَلَمَّا جَاوَزَهُ هُوَ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ قَالُوا لَا
طَاقَةَ لَنَا الْيَوْمَ ....(249)البقرة
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக