25-வது
தராவீஹ்
பழுதடையாத சி.சி.டி.வி கேமராக்கள் (கண்காணிக்கும்
மலக்குகள்)
وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ وَمَا هِيَ إِلَّا ذِكْرَى لِلْبَشَرِ
(31)المدثر- مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ
إِلَّا لَدَيْهِ رَقِيبٌ
عَتِيدٌ (18)ق
மலக்குகளைப் பற்றிய ஈமானின்
அங்கமாகும். ஒரே ஒரு மலக்கை மறுத்தாலும் அவர் முஃமினல்ல
مَنْ كَانَ عَدُوًّا لِلَّهِ
وَمَلَائِكَتِهِ وَرُسُلِهِ وَجِبْرِيلَ وَمِيكَالَ فَإِنَّ اللَّهَ عَدُوٌّ
لِلْكَافِرِينَ (98)البقرة -
قَالَتْ الْيَهُود لِلْمُسْلِمِينَ لَوْ أَنَّ مِيكَائِيل كَانَ هُوَ
الَّذِي يَنْزِل عَلَيْكُمْ اِتَّبَعْنَاكُمْ فَإِنَّهُ يَنْزِل بِالرَّحْمَةِ
وَالْغَيْث وَإِنَّ جِبْرَئِيل يَنْزِل بِالْعَذَابِ وَالنِّقْمَة فَإِنَّهُ
عَدُوّ لَنَا فَنَزَلَتْ هَذِهِ الْآيَة (ابن كثير
யூதர்கள் முஸ்லிம்களிடம் உங்களுக்கு நபிக்கு
யார் வஹீ கொண்டு வருகிறார்கள். என்று கேட்க, ஜிப்ரயீல் அலை என்று பதில் கூறியவுடன்
அவரா... அவரை எங்களுக்குப் பிடிக்காதே எங்களுக்கு அறவே பிடிக்காது. அவர் வேதனையைக்
கொண்டு வருபவர். மீகாயீலாக இருந்தால் எங்களுக்குப் பிடிக்கும் என்று கூறியபோது
இவ்வசனம்..
மலக்குகளின் எண்ணிக்கையை அல்லாஹ்வே அறிவான்.
கண்காணிக்கும் இரு மலக்குகளை மட்டும் கணக்கிட்டாலே ஒவ்வொரு மனிதனுடனும் இரண்டு
பேர் என்றால் அதுவே மனித எண்ணிக்கையில் இரு மடங்கு வரும். இது தவிர மனிதர்கள்
சம்பந்தப்பட்ட ஒவ்வொரு காரியத்திற்கும் மலக்குகளின் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளனர்.
மனிதனைக் கண்காணிக்கும் மலக்குகள் பற்றி..
எப்போதும் நான்கு
மலக்குகள் புடை சூழ ஒரு முஃமின் எப்போதும் இருப்பார்
لَهُ مُعَقِّبَاتٌ مِنْ بَيْنِ
يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ يَحْفَظُونَهُ مِنْ أَمْرِ اللَّهِ إِنَّ اللَّهَ لَا
يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ (11)الرعدأَيْ لِلْعَبْدِ
مَلَائِكَة يَتَعَاقَبُونَ عَلَيْهِ حَرَس بِاللَّيْلِ وَحَرَس بِالنَّهَارِ
يَحْفَظُونَهُ مِنْ الْأَسْوَاء وَالْحَادِثَات كَمَايَتَعَاقَب مَلَائِكَة
آخَرُونَ لِحِفْظِ الْأَعْمَال مِنْ خَيْر أَوْ شَرّ مَلَائِكَة بِاللَّيْلِ
وَمَلَائِكَة بِالنَّهَارِ فَاثْنَانِ عَنْ الْيَمِين وَالشِّمَال يَكْتُبَانِ
الْأَعْمَال صَاحِب الْيَمِين يَكْتُب الْحَسَنَات وَصَاحِب الشِّمَال يَكْتُب
السَّيِّئَات وَمَلَكَانِ آخَرَانِ يَحْفَظَانِهِ وَيَحْرُسَانِهِ وَاحِد مِنْ وَرَائِهِ
وَآخَر مِنْ قُدَّامه فَهُوَ بَيْن أَرْبَعَة أَمْلَاك بِالنَّهَارِ وَأَرْبَعَة
آخَرِينَ بِاللَّيْلِ(تفسير ابن كثير
விளக்கம்-பகலில் நான்கு பேர். இரவில் வேறு நான்கு பேர். அதாவது நன்மை, தீமை
எழுதும் மலக்குகள் அன்றி நமக்கு முன்னால் ஒரு மலக்கும் பின்னால் ஒரு மலக்கும்
எப்போதும் இருப்பார்கள்
وَفِي
الْحَدِيث الْآخَر " إِنَّ مَعَكُمْ مَنْ لَا يُفَارِقكُمْ إِلَّا عِنْد
الْخَلَاء وَعِنْد الْجِمَاع فَاسْتَحْيُوهُمْ وَأَكْرِمُوهُمْ "(تفسير ابن كثير
நீங்கள் உடலுறவு
கொள்ளும் நேரத்திலும் கழிவறைக்குச் செல்லும் நேரத்திலும் கூட உங்களை விட்டும்
பிரியாத மலக்குகள் இருக்கிறார்கள். எனவே வெட்கத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்
வலது, இடது மலக்குகளில் யாருக்கு யார் அமீர்?
عَنْ كِنَانَة النَّهْدِيّ
النَّسَائِيّ : دَخَلَ عُثْمَان بْن مَاجَهْ عَلَى رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ
وَسَلَّمَ فَقَالَ يَا رَسُول اللَّه أَخْبِرْنِي عَنْ الْعَبْد كَمْ مَعَهُ مِنْ
مَلَك ؟ فَقَالَ " مَلَك عَنْ يَمِينك عَلَى حَسَنَاتك وَهُوَ أَمِير عَلَى
الَّذِي عَلَى الشِّمَال فَإِذَا عَمِلْت حَسَنَة كُتِبَتْ عَشْرًا وَإِذَا عَمِلْت
سَيِّئَة قَالَ الَّذِي عَلَى الشِّمَال لِلَّذِي عَلَى الْيَمِين اُكْتُبْهَا ؟
قَالَ لَا لَعَلَّهُ يَسْتَغْفِر وَيَتُوب فَيَسْتَأْذِنهُ ثَلَاث مَرَّات فَإِذَا
قَالَ ثَلَاثًا قَالَ اُكْتُبْهَا أَرَاحَنَا اللَّه مِنْهُ فَبِئْسَ الْقَرِين...
(تفسير ابن كثير
இடது புறம் உள்ள தீமையை எழுதும் மலக்குக்கு
வலது புறம் உள்ளவர் தான் அமீர். நீ நற்காரியம் செய்தால் வலது புறம் உள்ளவர் அவரே
பத்து நன்மைகளைப் பதிவு செய்து விடுவார். ஆனால் நீ தீமை செய்தால் இடது புறம் உள்ள
மலக்கு வலது புறம் உள்ளவரிடம் எழுதட்டுமா என்று ஆலோசிப்பார். அவர் வேண்டாம் சற்று
பொறு.. தவ்பா செய்ய வாய்ப்பு உண்டு. என்பார் இவ்வாறு மூன்று முறை கேட்பார்.
அதற்குப் பின்பே தீமையை எழுத அனுமதி தருவார். அப்போது இருவரும் கூறுவார்களாம்.
இந்தப் பாவி நம்மை வைத்துக் கொண்டே தீமை செய்துள்ளான். நமக்கென்ன... எழுதி
விடுவோம்என சபித்துக் கொண்டே எழுதுவர்.
இரவு பகல் இரண்டிலும் மொத்தம் பத்து மலக்குகள் மனிதனைச்
சுற்றி இருப்பர் என மற்றொரு ரிவாயத்
لَهُ مُعَقِّبَات مِنْ بَيْن
يَدَيْهِ وَمِنْ خَلْفه " الْآيَة ; وَمَلَك قَابِض عَلَى نَاصِيَتك فَإِذَا
تَوَاضَعْت لِلَّهِ رَفَعَك وَإِذَا تَجَبَّرْت عَلَى اللَّه قَصَمَكَ ;
وَمَلَكَانِ عَلَى شَفَتَيْك لَيْسَ يَحْفَظَانِ عَلَيْك إِلَّا الصَّلَاة عَلَى
مُحَمَّد صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَمَلَك قَائِم عَلَى فِيك لَا يَدَع
أَنْ تَدْخُل الْحَيَّة فِي فِيك وَمَلَكَانِ عَلَى عَيْنَيْك فَهَؤُلَاءِ عَشَرَة
أَمْلَاك عَلَى كُلّ آدَمِيّ يَنْزِلُونَ مَلَائِكَة اللَّيْل عَلَى مَلَائِكَة
النَّهَار لِأَنَّ مَلَائِكَة اللَّيْل سِوَى مَلَائِكَة النَّهَار فَهَؤُلَاءِ
عِشْرُونَ مَلَكًا عَلَى كُلّ آدَمِيّ وَإِبْلِيس بِالنَّهَارِ وَوَلَده
بِاللَّيْلِ "... (تفسير ابن كثير
முன் நெற்றியின் மீது ஒரு வானவர் சாட்டப்பட்டுள்ளார்.
நீ பணிந்து நடந்தால் உன்னை உயர்த்துவார். பெருமையடித்தால் பழி வாங்குவார். நீ
சலவாத்தை மொழிந்தால் உன் உதடுகளிலும் இரு மலக்குகள் இருந்து கொண்டு
பாதுகாப்பார்கள். அவர்களில்ஒருவர் உன் வாய்க்கு வெளியிலும்இருந்து கொண்டு உன்
வாய்க்குள் எந்த ஈ எறும்புகளும் தூசி துரும்புகளும் செல்லாமல் பாதுகாப்பார். இதுபோல்
உன் கண்களைப் பாதுகாக்க இரு மலக்குகள். ஆக மொத்தம் இந்த ஐந்து பேர். பகல் ஷிஃப்ட்.
இதேபோல் ஐந்து பேர் night shift. ஆக மொத்தம் பத்து மலக்குகள் உனது பாதுகாவலர்கள். நீ தீமை செய்தால்
அவர்களே உனது எதிரிகள். இதுவல்லாமல் பகலில் தகப்பன்இப்லீஸும் இரவில் குட்டி
இப்லீஸும் உன்னை வழி கெடுக்க உன்னோடு இருப்பர். அப்பனும் பிள்ளையும் மாறி மாறி
உன்னை கண்காணிப்பர். (மொத்தத்தில் நீ தனி
ஆள் அல்ல)
إِنَّهُ
يَرَاكُمْ هُوَ وَقَبِيلُهُ
مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ إِنَّا جَعَلْنَا الشَّيَاطِينَ أَوْلِيَاءَ
لِلَّذِينَ لَا يُؤْمِنُونَ (27)الاعراف
وَقَالَ كَعْب الْأَحْبَار :
لَوْ تَجَلَّى لِابْنِ آدَم كُلّ سَهْل وَكُلّ حَزْن لَرَأَى كُلّ شَيْء مِنْ
ذَلِكَ شَيْئًا يَقِينًا لَوْلَا أَنَّ اللَّه وَكَّلَ بِكُمْ مَلَائِكَة
يَذُبُّونَ عَنْكُمْ فِي مَطْعَمكُمْ وَمَشْرَبكُمْ وَعَوْرَاتكُمْ إِذًا
لَتُخُطِّفْتُمْ وَقَالَ أَبُو أُمَامَة : مَا مِنْ آدَمِيّ إِلَّا وَمَعَهُ مَلَك
يَذُود عَنْهُ حَتَّى يُسَلِّمهُ لِلَّذِي قُدِّرَ لَهُ (تفسير ابن كثير)
இன்பமும் துன்பமும் நமக்கு
எப்படி ஏற்படுகிறது என மனிதனுக்குத் தெரியவந்தால் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும்
மலக்குகளின் பங்களிப்பு இருப்பதை அவர் உணருவார். அல்லாஹ் ஒவ்வொன்றுக்கும்
மலக்குகளை சாட்டா விட்டால் உங்கள் கைக்கு வந்தது வாய்க்கு எட்டாமலும் போய்
விடலாம். (ஒருவர் தனது வாய்க்கு மிக அருகில்
கொண்டு சென்ற உணவை ஒரு பறவை வந்து கொத்திச்
சென்ற சம்பவம் சமீபத்தில் நடந்தது. இதுவும் மலக்குகளின் வேலை தான்.) உங்களுக்கென்று அல்லாஹ் ரிஜ்கை ஏற்படுத்தி இருந்தாலும் அதைக் கொண்டு
வந்து சேர்க்கும் பொறுப்பை மலக்குகள் தான்கச்சிதமாக செய்கிறார்கள்.
இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொள்ளும்போது அல்லாஹ்விடம் உதவி கோரினால்
காப்பாற்றும் மலக்குகள்
قصة: عن أنس رَضِيَ اللَّهُ عَنْهُ قال كان رجل من أصحاب رسول
الله صلى الله عليه و سلم من الأنصار يُكنى : أبا معلق وكان تاجرا يتجر بمال له ولغيره يضرب
به في الآفاق5 وكان ناسكا ورعا6فخرج مَرَّة فلقيه لُصٌّ7
مقنع في السلاح فقال له : ضَعْ ما معك فإني قاتلك قال : ما تريد إلى دمي ؟ شأنك
بالمال قال: أما المال فلي ولست أريد إلا دمك قال: أما إذا أبيتَ فذَرْني أُصلي
أربع ركعات قال : صَلِّي ما بدا لك فتوضأ ثم صلى أربع ركعات فكان من دعائه في آخر
سجدة أن قال:يا ودود يا ذا العرش المجيد يا فعال لما يريد أسألك بِعِزِّك الذي لا
يرام وملكك الذي لا يضام وبنورك الذي ملأ أركان عرشك أن تكفيني شر هذا اللص يا
مغيث أغثني يا مغيث أغثني ثلاث مرات قال : دَعَى بها ثلاث مرات فإذا هو بفارس قد
أقبل بيده حِرْبة8 واضعها بين أذني فرسه فلما بصر به اللص أقبل نحوه
فطعنه فقتله ثم أقبل إليه فقال:قُمْ قال:من أنت بأبي أنت وأمي؟ فقد أغاثني الله بك
اليوم قال: أنا ملك من أهل السماء الرابعة دعوتَ بدعائك الأول فسمعتُ لأبواب
السماء قعقعة9 ثم دعوت بدعائك الثاني فسمعت لأهل السماء ضجة ثم دعوت
بدعائك الثالث فقيل لي :دعاء مكروب فسألتُ الله تعالى أن يوليني قتله قال
أنس:فاعلم أنه من توضأ وصلى أربع ركعات ودعا بهذا الدعاء استجيب له مكروبا كان أو
غير مكروب(مجابو الدعوة لإبن أبي الدنيا)
பல வெளிநாடுகளுக்கும் வியாபாரச் சரக்குகளை கொண்டு செல்லும்
இவரை ஒரு கொள்ளையன் வழி மறித்தான். பணம் தானே உனக்கு வேண்டும் எடுத்துக் கொள்.
என்று இவர் கூறியும் அவன் பணமும் வேண்டும். உன் உயிரும் வேண்டும் என்றான்.
இறுதியில் இவர் நான்கு ரக்அத் தொழ என்னை விட்டு விடு. என்று கேட்க அவன்
சம்மதித்தான். இவர் தொழுது விட்டு அந்த கொள்ளையனிடமிருந்து காப்பாற்றும்படி மூன்று
முறை துஆ செய்த போது குதிரையில் ஒருவர் வேகமாக ஈட்டியுடன் வந்து திருடனை குத்திக்
கொன்றார். அவரிடம் நீங்கள் யார் என்று இவர் கேட்க “நான் நான்காவது வானத்தில் உள்ள மலக்குகளில்
ஒருவர். நீர் ஒவ்வொரு முறையும் துஆ செய்த
போது விண்ணில் உள்ளவர்களிடையே பெரும் சப்தம் கொந்தளிப்பு உருவானது. இறுதியில் நான்
அல்லாஹ்விடம் அந்தக் கொள்ளையனை கொன்று விட்டு வரும் பொறுப்பை என்னிடம் தரும்படி
கேட்டேன். அல்லாஹ் அனுமதித்தான். நான் அவனை கொன்றேன். அனஸ் ரழி கூறும் போது எவர்
இத்தகைய சூழ்நிலையில் இந்த துஆவை ஓதினால் ஈடேற்றம் கிடைக்கும்
மலக்குகளுடைய
எண்ணிக்கயின் பிரமாண்டத்தைப் புரிந்து கொள்ள ஒரு ஹதீஸ்.
ஏழாவது வானத்தில் பைத்துல் மஃமூர் பள்ளிவாசலில்
ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் மலக்குகள் உள்ளே நுழைகின்றனர். உள்ளே செல்பவர்கள்
யாரும் வெளியே வருவதில்லை. அப்படியே வணக்கங்களில் நீடித்து விடுவர்
وَرَأَى سِدْرَة الْمُنْتَهَى
وَغَشِيَهَا مِنْ أَمْر اللَّه تَعَالَى عَظَمَة عَظِيمَة مِنْ فَرَاش مِنْ ذَهَب
وَأَلْوَان مُتَعَدِّدَة وَغَشِيَتْهَا الْمَلَائِكَة وَرَأَى هُنَاكَ جِبْرِيل
عَلَى صُورَته وَلَهُ سِتّمِائَةِ جَنَاح وَرَأَى رَفْرَفًا أَخْضَر قَدْ سَدَّ
الْأُفُق .وَرَأَى الْبَيْت الْمَعْمُور وَإِبْرَاهِيم الْخَلِيل بَانِي
الْكَعْبَة الْأَرْضِيَّة مُسْنِد ظَهْره إِلَيْهِ لِأَنَّهُ الْكَعْبَة
السَّمَاوِيَّة يَدْخُلهُ كُلّ يَوْم سَبْعُونَ
أَلْفًا مِنْ الْمَلَائِكَة يَتَعَبَّدُونَ فِيهِ ثُمَّ لَا يَعُودُونَ إِلَيْهِ
إِلَى يَوْم الْقِيَامَة .(تفسير ابن كثير)
உயிரைக் கைப்பற்றும் வானவர் ஒருவர் மட்டுமல்ல. அதற்கும் ஒரு குழு.
அதன் தலைவர் மலக்குல் மவ்த் ஆவார்.
وَهُوَ
الْقَاهِرُ فَوْقَ عِبَادِهِ وَيُرْسِلُ عَلَيْكُمْ حَفَظَةً
حَتَّى إِذَا جَاءَ أَحَدَكُمُ الْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُنَا وَهُمْ لَا
يُفَرِّطُونَ (61)الانعام
காற்று, மழை, கடல், குளம், ஏரி, போன்ற இரணம் சம்பந்தப்பட்டவைகளுக்கு மீகாயீல்
அலை தலைமையில் ஒரு குழு உள்ளது.
நாம் சொல்லும் திக்ருகளை
அல்லாஹ்விடம் கொண்டு போய்ச் சேர்க்கும் மலக்குகள்
عَنْ
أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ لِلَّهِ
مَلَائِكَةً يَطُوفُونَ فِي الطُّرُقِ يَلْتَمِسُونَ أَهْلَ الذِّكْرِ فَإِذَا وَجَدُوا
قَوْمًا يَذْكُرُونَ اللَّهَ تَنَادَوْا هَلُمُّوا إِلَى حَاجَتِكُمْ قَالَ
فَيَحُفُّونَهُمْ بِأَجْنِحَتِهِمْ إِلَى السَّمَاءِ الدُّنْيَا قَالَ
فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ وَهُوَ أَعْلَمُ مِنْهُمْ مَا يَقُولُ عِبَادِي قَالُوا
يَقُولُونَ يُسَبِّحُونَكَ وَيُكَبِّرُونَكَ وَيَحْمَدُونَكَ وَيُمَجِّدُونَكَ
قَالَ فَيَقُولُ هَلْ رَأَوْنِي قَالَ فَيَقُولُونَ لَا وَاللَّهِ مَا رَأَوْكَ
قَالَ فَيَقُولُ وَكَيْفَ لَوْ رَأَوْنِي قَالَ يَقُولُونَ لَوْ رَأَوْكَ كَانُوا
أَشَدَّ لَكَ عِبَادَةً وَأَشَدَّ لَكَ تَمْجِيدًا وَتَحْمِيدًا وَأَكْثَرَ لَكَ
تَسْبِيحًا قَالَ يَقُولُ فَمَا يَسْأَلُونِي قَالَ يَسْأَلُونَكَ الْجَنَّةَ
قَالَ يَقُولُ وَهَلْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَا وَاللَّهِ يَا رَبِّ مَا
رَأَوْهَا قَالَ يَقُولُ فَكَيْفَ لَوْ أَنَّهُمْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَوْ
أَنَّهُمْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ عَلَيْهَا حِرْصًا وَأَشَدَّ لَهَا طَلَبًا وَأَعْظَمَ
فِيهَا رَغْبَةً قَالَ فَمِمَّ يَتَعَوَّذُونَ قَالَ يَقُولُونَ مِنْ النَّارِ
قَالَ يَقُولُ وَهَلْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَا وَاللَّهِ يَا رَبِّ مَا
رَأَوْهَا قَالَ يَقُولُ فَكَيْفَ لَوْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَوْ رَأَوْهَا
كَانُوا أَشَدَّ مِنْهَا فِرَارًا وَأَشَدَّ لَهَا مَخَافَةً قَالَ فَيَقُولُ
فَأُشْهِدُكُمْ أَنِّي قَدْ غَفَرْتُ لَهُمْ قَالَ يَقُولُ مَلَكٌ مِنْ
الْمَلَائِكَةِ فِيهِمْ فُلَانٌ لَيْسَ مِنْهُمْ إِنَّمَا جَاءَ لِحَاجَةٍ قَالَ
هُمْ الْجُلَسَاءُ لَا يَشْقَى بِهِمْ جَلِيسُهُمْ(بخاري
6408
அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர்.
அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடியவண்ணம் தெருக்களில் சுற்றி
வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக்கொண்டிருக்கும் ஒரு குழுவினரை
அவர்கள் கண்டால் 'உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய
வாருங்கள்' என்று அவர்கள் (தம்மில்) ஒருவரை ஒருவர்
அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களைத் தம்
இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம்
அவர்களின் இறைவன் 'என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?' என்று
கேட்கிறான். அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவனாவன் என்று கூறி
துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டும், உன்னைப் புகழ்ந்துகொண்டும், உன்னைப்
போற்றிக் கொண்டும் இருக்கின்றர்' என்று வானவர்கள் கூறுகின்றனர்.
அதற்கு
இறைவன், 'அவர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்களா?' என்று
கேட்பான். அதற்கு வானவர்கள், 'இல்லை; உன் மீதாணையாக! அவர்கள் உன்னைப்
பார்த்ததில்லை' என்று பதிலளிப்பார்கள்.அதற்கு இறைவன், 'என்னைப்
பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?' என்று கேட்பான். வானவர்கள், 'உன்னை
அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள்; இன்னும்
கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்' என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், 'என்னிடம்
அவர்கள் என்ன வேண்டுகிறார்கள்?' என்று (தனக்குத் தெரியாதது போன்று)
கேட்பான். வானவர்கள், 'அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக்
கேட்கின்றனர்' என்பார்கள். அதற்கு இறைவன், 'அவர்கள்
அதைப் பார்த்ததுண்டா?' என்று கேட்பான். அதற்கு வானவர்கள், 'இல்லை; உன்
மீதாணையாக! அதிபதியே! அவர்கள் அதனைப் பார்த்ததில்லை' என்பர். அதற்கு இறைவன், 'அவ்வாறாயின்
அதனை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?' என்று
கேட்பான். வானவர்கள், 'சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால்
இன்னும் அதிகமாக அதன் மீது ஆசைகொண்டு, அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத்
தேடுவார்கள்' என்று பதிலளிப்பார்கள்.
இறைவன், 'அவர்கள் எதிலிருந்து (என்னிடம்)
பாதுகாப்புக் கோருகின்றனர்?' என்று வினவுவான். வானவர்கள், 'நரகத்திலிருந்து
(பாதுகாப்புக் கோருகின்றனர்)' என்று பதிலளிப்பார். இறைவன், 'அதனை
அவர்கள் பார்த்திருக்கிறார்களா?' என்று கேட்பான். வானவர்கள், 'இல்லை; உன்
மீதாணையாக! அதனை அவர்கள் பார்த்தில்லை' என்பர். அதற்கு இறைவன், 'அவ்வாறாயின்
அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலை என்னவாக இருந்திருக்கும்?' என்று
கேட்பான் வானவர்கள், 'நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால்
நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை மிகவும்
அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்' என்பர். அப்போது இறைவன், 'எனவே
(வானவர்களே!) அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக
ஆக்குகிறேன்' என்று கூறுவான். அப்போது அந்த
வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், கேட்பார் '(அந்தக்
குழுவினரிடையே அமர்ந்திருந்த) இன்ன மனிதன், உன்னைப் போற்றுகிற அவர்களில் உள்ளவன்
அல்லன். அவன் ஏதோ தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்' என்பார். அதற்கு இறைவன், 'அவர்கள்
ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால்
(பாக்கியம் பெறுவானே தவிர,) பாக்கியமற்றவனாக ஆகமாட்டான்' என்று
கூறுவான்.
நாம் சொல்லும் சலவாத்துகளை நபியவர்களிடம் கொண்டு
போய்ச் சேர்க்கும் மலக்குகள்
عَنْ عَبْد اللَّه بْن مَسْعُود أَنَّ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
إِنَّ لِلَّهِ مَلَائِكَة سَيَّاحِينَ فِي الْأَرْض يُبَلِّغُونِي عَنْ أُمَّتِي السَّلَام(تفسير ابن كثير
உலகெங்கும் ஒரு நொடி
கூட இடைவெளி இன்றி நபிகளாரின் மீது ஸலாம் கூறப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது
மார்க்க ரீதியில் நண்பரை
சந்திக்கச் சென்றால் வாழ்த்துவதற்கும் மலக்குகள்
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ
النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَنَّ رَجُلًا زَارَ أَخًا لَهُ فِي قَرْيَةٍ أُخْرَى فَأَرْصَدَ اللَّهُ لَهُ
عَلَى مَدْرَجَتِهِ مَلَكًا فَلَمَّا أَتَى عَلَيْهِ
قَالَ أَيْنَ تُرِيدُ قَالَ أُرِيدُ أَخًا لِي فِي هَذِهِ الْقَرْيَةِ قَالَ هَلْ
لَكَ عَلَيْهِ مِنْ نِعْمَةٍ تَرُبُّهَا قَالَ لَا غَيْرَ أَنِّي أَحْبَبْتُهُ فِي
اللَّهِ عَزَّ وَجَلَّ قَالَ فَإِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكَ بِأَنَّ اللَّهَ
قَدْ أَحَبَّكَ كَمَا أَحْبَبْتَهُ فِيهِ(مسلم)
மனிதனைச் சோதிப்பதற்கும்
மலக்குமார்கள்
மூன்று பேரை அல்லாஹ் சோதிக்க நாடி வானவரை மனித தோற்றத்தில் அனுப்பிய சம்பவம்-
புகாரீ 3464
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக