26-வது
தராவீஹ்
ரப்பை பயந்து நஃப்ஸை
கட்டுப்படுத்தியவர்களுக்கான வெகுமதி
وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى (40) فَإِنَّ الْجَنَّةَ
هِيَ الْمَأْوَى (41)النازغات
மனம் போன போக்கில்
வாழாமல் தன் நஃப்ஸை கட்டுப்படுத்துவது அவ்வளவு எனிதான காரியம் அல்ல. இஃப்தார்
நேரத்தில் துஆ கேட்டால் ஏற்கப்படும் என்று நன்றாக தெரிந்தும் கூட இந்த நஃப்ஸ்
முன்னால் இருக்கும் கஞ்சியின் மீதும் வடையின் மீதும் தான் மையல் கொள்கிறது. இந்த
சின்ன விஷயத்தில் கூட நம்மால் நஃப்ஸை கட்டுப்படுத்த முடியா விட்டால் பெரிய
விஷயங்களில் கட்டுப்படுத்துவது அறவே முடியாது. நபி யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் தனிமையில்
தன் எஜமானி அழைத்தும் நஃப்ஸைக் கட்டுப்படுத்தியதால் அல்லாஹ் பெரும் அந்தஸ்தை
பதவியைத் தந்தான்
நஃப்ஸை கட்டுப்படுத்தா விட்டால் நாம் செய்யும் அமல்களின்
பலனை முழுமையாகப் பெறுவது கடினம்
ஒரு மனிதர் நான் இறைவனை தியானம் செய்யப் போகிறேன். அதற்கு எந்த இடையூறும்
இருக்கக்கூடாது என்று சொல்லி ஓரிடத்தில் தனிமையில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார். அந்த நேரத்தில் ஒரு அழகிய
பெண் நடந்து வரும் சப்தம் கேட்டது. அந்தப் பெண்ணைப் பார்த்தார். அன்றைக்கு அவருடைய
தியானம் கலைந்தது. அடுத்த நாளும் அவர் முயற்சியை கை விடாமல் என் கண்கள்
திறந்திருந்தால் தானே யாரையும் பார்க்க முடியும். என்று கூறி தன் கண்களை துணியால்
கட்டிக் கொண்டு தியானத்தில் அமர்ந்தார். அப்போதும் அதே பெண் நடந்து வர, அவளின்
கொலுசு சப்தம் கேட்டது. உடனே அவருடயை தியானம் கலைந்தது. அடுத்த நாள் அவர் என்
காதுகளையும் மூடிக் கொண்டால் எந்த சப்தமும் இடையூறு செய்யாது என்று கூறி தன் காதுகளையும் மூடியவாறு
தியானத்தில் அமர்ந்தார் அப்போதும் அதே பெண் தலை நிறைய மல்லிகைப்பூவுடன் வர, அந்த
நறுமணம் இவருடைய தவத்தை கலைத்து விட்டது. அடுத்த நாள் அவர் தன் மூக்கையும்
மூடியவாறு தியானத்தில் அமர்ந்தார். இப்போது அந்தப் பெண்ணும் வரவேயில்லை. ஆனால்
குறிப்பிட்ட அந்த நேரம் வந்தவுடன் இவர் மனதில் நேற்று இதே நேரம் அந்தப் பெண்
வந்தாள். என்ற சிந்தனை ஏற்பட்டது. உடனே அவருடயை தவம் கலைந்தது.
-படிப்பினை-மனதை பக்குவப்படுத்தாமல் வேறு எதை மூடினாலும் பலனில்லை
உள்ளம் என்பது ஒரு கண்ணாடி என்பார்கள் அந்தக் கண்ணாடி
எவ்வளவு அழுக்காக இருக்கிறதோ அந்த அளவுக்கு எதிரில் உள்ள உருவம் மங்கலாகவே
தெரியும். அதேபோல் ஒருவரின் உள்ளம் மாசு பட்டிருந்தால் அவர் தன்னைப் போலவே
மற்றவர்களையும் பார்ப்பார். எவர் மீதும் நல்லெண்ணம் கொள்ள மாட்டார். ஆகவே கல்பு
என்ற கண்ணாடியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கண்ணாடியை சுமார் 10
வருடங்களாக துடைக்காமல் இருந்து அதன் பின்பு அதை எடுத்து ஒரே நாளில் எப்படியாவது
துடைத்து சுத்தமாக்கி விட வேண்டும் என்று நினைத்து, என்ன தான் கஷ்டப்பட்டு
துடைத்தாலும் அந்த மங்கலான நிறம் மாறுவது கடினம். அதேபோல் படிப்படியாக மனதைப்
பக்குவப்படுத்தாமல் அவசர கதியில்
பக்குவப்படுத்துவது சிரமம்.
ஏழு
தலைமுறைக்கு முன்னால் நஃப்ஸை கட்டுப்படுத்தி தக்வாவுடன்
வாழ்ந்த ஒரு நல்ல மனிதரின் சொத்துக்களைப்
பாதுகாக்க அல்லாஹ் ஒரு நபியையும்
ஒரு வலியையும் ஏற்படுத்தினான்
وتأملوا عباد الله كيف أن الله سبحانه سخر نبيا هو
موسى عليه السلام ووليا هو الخضر عليه السلام لإقامة جدار في قرية بخيلة فاعترض
موسى عليه السلام قَالَ لَوْ شِئْتَ لَاتَّخَذْتَ عَلَيْهِ أَجْراً
))الكهف77
ثم يخبر الخضر
عليه السلام سبب فعله بالغيب الذي أطلعه الله عليه في هذا الأمر فيقول:
((وَأَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلَامَيْنِ
يَتِيمَيْنِ فِي الْمَدِينَةِ وَكَانَ تَحْتَهُ كَنزٌ لَّهُمَا وَكَانَ أَبُوهُمَا
صَالِحاً )) الكهف:82.
وقال ابن عباس:
حفظا بصلاح أبيهما و كان الأب السابع والله أعلم
நான் என்ற அகம்பாவம் நீங்குவது நஃப்ஸைக் கட்டுப்படுத்துவதின் முக்கிய அங்கம்
இறை நேசர் ஜுனைதுல்
பக்தாதீ ரஹ் அவர்களிடம் மாணவராக இருந்த
ஒருவர் சுமார் 12 வருடங்கள் கழித்து ஊருக்குப் புறப்பட்டார் அப்போது அவர்
ஷைகு அவர்களிடம் பயணம் கூறும்போது நான் இத்தனை வருடங்களாக என் மனதில் வைத்துள்ள
ஒரு கேள்வியை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். இத்தனை வருடத்தில் நான் உங்களிடம்
எந்த கராமத்தையும் நான் கண்டதில்லையே என்று கூற ஷைகு அவர்கள் இந்த 12 வருடங்களில்
ஏதாவது ஒரு நேரம் இமாம் ஜமாஅத்தை நான் தவற விட்டதை நீ பார்த்திருக்கிறாயா என்று
கேட்டார்கள் இல்லை என்று இவர் பதில் கூறினார் மீண்டும் ஷைகு அவர்கள் இந்த 12
வருடங்களில் ஏதேனும் ஒரு நேரம் தக்பீர் தஹ்ரீமாவை நான் தவற விட்டதை நீ
பார்த்திருக்கிறாயா என்று கேட்க இல்லை என்று இவர் பதில் கூறினார் அதற்கு ஷைகு
அவர்கள் இதை விட என்ன அற்புதம் உமக்கு வேண்டும் என்றார்கள்... உடனே அந்த சீடர்
ஷைகு அவர்களை தவறாக எண்ணி விட்டோமே என்று வருந்தியவராக உங்களுடைய நிலையை நானும் அடைய வேண்டும் நான்
ஊருக்குச் சென்று விட்டு மீண்டும் திரும்ப உங்களிடம் எப்போது வரட்டும் என்று
கேட்டார் அதற்கு ஷைகு அவர்கள் "நான்" இறந்த பிறகு வா என்றார்கள் உடனே அந்த சீடர்
ஷைகு அவர்களே நீங்கள் இறந்த பின்பு வருவதால் எனக்கு என்ன பிரயோஜனம் என்றார் அதற்கு
ஷைகு அவர்கள் நான் இறந்த பிறகு என்று என்னுடைய மவ்த்தை நான் குறிப்பிடவில்லை மாறாக
"நான்" என்ற அகம்பாவம் எப்போது உன் உள்ளத்தில்
அழியுமோ, இறந்து விடுமோ அப்போது என்னிடம் வா என்ற பொருளில் தான் நான் கூறினேன்
என்றார்கள்.
அமல்களில் பெருமையடித்தே பலர் பாழாகி இருக்கிறார்கள்.
இறைநேசர்கள் அவ்வாறல்ல
مما اشتهر عن الشيخ عبد القادر
رحمه الله مما يدل على فقهه وثبات قدمه في العلم ما حكاه عنه ابنه موسى كما قال
ابن رجب الحنبلي رحمه الله: (سمعتُ والدي يقول: خرجتُ في بعض سياحاتي إلى البرية9،
ومكثْتُ أياماً لا أجدُ ماءً، فاشتد بي العطش، فأَظَلَّتْنِي سحابةٌ نزلَ عليَّ
منها شيء يشبه الندى10 فترويتُ منه، ثم رأيتُ نوراً أضاء به الأفق،
وبَدَتْ لي صورة، ونوديتُ منها: يا عبد القادر أنا ربُّك، وقد أحللتُ لك المحرمات،
أوقال: ما حرمتُ على غيرك؛ فقلت: أعوذُ بالله من الشيطان الرجيم اِخْسَأْ11
يا لَعِيْنْ؛ فإذا ذلك النور ظلامٌ، وتلك الصورة دخانٌ، ثمخاطبني وقال: يا عبد
القادر نجوتَ مِنِّي بعلمك بحكم ربك وفِقْهِك في أحوال منازلاتك، ولقد أضللتُ بمثل
هذه الواقعة سبعين من أهل الطريق؛ فقلتُ: لربي الفضل والمنة؛ قال: فقيل له: كيف
علمتَ أنه شيطان؟ قال: بقوله: وقد أحللتُ لك المحرمات) (من كتب ابن تَيْمِيَّة)
(من اعتقد أن شيخاً يحلُّ له ما حرَّم الله، أويرفع عنه ما أوجبه على خلقه كالصلاة
مثلاً فقد كفر.) موسوعة الرد على الصوفية
9,கடற்கரை
10,மழையைப்போல் 11,சாபத்திற்குரியவனே!
இழிவடைந்து விடு
இறையச்சம், பேணுதல், பித்அத், துஆ பற்றி முஹ்யித்தீன்
அப்துல்காதிர் ஜீலானீ (ரஹ்) அவர்களின் உபதேசம்
மார்க்கத்தில் பித்அத்களை உருவாக்காதே
! துஆ ஏற்கப்படுவது தாமதாகுவதைப் பற்றி அவன் மீது குறை
கூறாதே நீ துஆ செய்வதில் சோர்வடையாதே. இதனால் உனக்கு லாபம் இல்லா விட்டாலும் கூட
நஷ்டம் இல்லை. உன் துஆவை அல்லாஹ் உடனடியாக இவ்வுலகில் ஏற்கா விட்டாலும் மறுமையில்
அதற்குரிய வெகுமதியை உனக்கு தரவே செய்வான். மாக்க்கத்தில் விலக்கப்பட்டவைகளை
விட்டும் ஒதுங்க வேண்டியது உன்னுடைய
கடமையாகும். இல்லையேல் அழிவுக்கயிறு உன்னை சுற்றிக் கொள்ளும் பாவத்தில் அகப்பட்டு
விடக்கூடாது என்பதற்காக ஆகுமானவற்றைக் கூட பத்தில் ஒன்பது பங்கை விட்டு நாங்கள்
விலகிக் கொள்வதுண்டு என்று நபித்தோழர்களான உமர் ரழி, அபூபக்ர் ரழி ஆகியோர்
கூறியுள்ளார்கள்.
துஆ ஏற்கப்படாதது ஏன் என்று
வினவியவருக்கு இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் கூறிய அற்புதமான பதில்
حُكي إنّ إبراهيم بن أدهم قيل له ما بالنا ندعوا الله فلا يستجيب لنا؟ قال لأنّكم
عرفتم الله فلم تطيعوه وعرفتم الرسول فلم تتبعوا سنّته وعرفتم القرآن فلم تعملوا بما فيه وأكلتم نعمة
الله فلم تؤدّوا شكرها وعرفتم الجنّة فلم تطلبوها وعرفتم النّار فلم تهربوا منها
وعرفتم الشيطان فلم تحاربوه ووافقتموه وعرفتم الموت فلم تستعدّوا له ودفنتم الأموات
فلم تعتبروا بهم وتركتم عيوبكم واشتغلتم بعيوب الناس (قرطبي
நஃப்ஸைக் கட்டுப் படுத்தியவர்களுக்கு எல்லாம் கைகூடும்.
பிற படைப்புகள் இவரைக் கண்டு அஞ்சும்
كان عمر يخطب يوم الجمعة فعرض فى
خطبته أن قال: يا سارية الجبل من استرعى الذئب ظلم فالتفت الناس بعضهم إلى بعض فقال لهم
علىٌّ ليخرجن مما قال فلما فرغ سألوه فقال: وقع فى خلدى أن المشركين هزموا إخواننا
وأنهم يمرون بجبل ، فإن عدلوا إليه قاتلوا من وجه واحد وإن جازوا هلكوا فخرج منى ما تزعمون أنكم
سمعتموه فجاء البشير بعد شهر فذكر أنهم سمعوا صوت عمر فى ذلك اليوم قال: فعدلنا إلى الجبل ففتح الله علينا (أبو
نعيم فى الدلائل
உமர் ரழி அவர்கள் இராக் நாட்டிற்கு ஸாரியா ரழி
அவர்களின் தலைமையில் ஒரு படையை அனுப்பியிருந்தார்கள் இந்நிலையில் ஒரு ஜும்ஆவில்
பிரசங்கம் செய்து கொண்டிருந்த போது திடீரென தன் பிரசங்கத்துக்கிடையில் யா ஸாரியா
அல்-ஜபல் ஸாரியாவே மலையைப்பாருங்கள் என்று கூறி விட்டு தன் பிரசங்கத்தை மீண்டும்
தொடர்ந்தார்கள் மக்கள் அனைவரும் சம்பந்தமில்லாத வார்த்தையை உமர் ரழி கூறுவதாக
கருதினார்கள் பிரசங்கம் முடிந்த பின் உமர் ரழி கூறினார்கள் நம் சகோதரர்கள்
பின்பு ஒரு மாதம் கழித்து அந்தப்படையினர்
மதீனா திரும்பி வந்து சொன்ன விஷயம் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது அதாவது
நாங்கள் போரிட்டுக் கொண்டிருந்த போதுமலைக்குப்பின்னால் எதிரிகள் இருப்பதை
கவனிக்காமல் அந்த மலையை கடக்க முற்பட்டோம் அப்போது எங்கிருந்தோ ஒரு சப்தம் வந்தது
அந்த சப்தம் வந்தவுடன் நாங்கள் மலைக்குப் பின்னால் கவனித்தோம் நான் எங்கள் பாதையை
மாற்றிக் கொண்டோம்
وقعت
الزلزلة في المدينة فضرب عمر الدرة على الأرض وقال : اسكني بإذن الله فسكنت وما
حدثت الزلزلة بالمدينة بعد ذلك .
:
وقعت النار في بعض دور المدينة فكتب عمر على خزفة : يا نار اُسكني بإذنِ الله
فألقوها في النار فانطفأت في الحال (الرازي)
மதீனாவில் ஒருமுறை பூகம்பம் ஏற்பட்ட போது தரையை சாட்டையால் அடித்து
அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு நீ அடங்கு என்று உமர் ரழி அவர்கள் கூறிய போது பூகம்பம்
நின்றது. அதன் பின் மதீனாவில் பூகம்பம் ஏற்படவேயில்லை. அதேபோல் மதீனாவில் ஒருமுறை
ஒரு வீட்டில் நெருப்பு பற்றியது. உமர் ரழி அவர்கள் ஒரு துண்டுச் சீட்டில் நெருப்பே
அடங்கு என்று எழுதி அதில் போடச் சொன்னார்கள். அவ்வாறு போட்டவுடன் உடனே நெருப்பு
அணைந்தது.
உமர் ரழி அவர்கள் தனிமையில் இருப்பதைக் கண்டு
சந்தர்ப்பம் பார்த்து ரோம் நாட்டின் தூதுவன் உமர் ரழி அவர்களைக் கொல்ல முற்பட்ட
போது பூமியைப் பிளந்து இரண்டு சிங்கங்கள் தோன்றிய போது அவன் பயந்து உருவிய வாளை
கீழே போட்ட பின் அவைகள் மறைந்தன. அதற்குள் உமர் ரழி எழுந்த போது அவர்களிடம்
நடந்ததைக் கூறி இஸ்லாத்தையும் தழுவினான்.
:روى أن رسول ملك الروم جاء إلى عمر فطلب
داره فظن أن داره مثل قصور الملوك فقالوا ليس له ذلك وإنما هو في الصحراء يضرب
اللبن فلما ذهب إلى الصحراء رأى عمر رضي الله عنه وضع درته تحت رأسه ونام على التراب
فعجب الرسول من ذلك وقال: إن أهل الشرق والغرب يخافون من هذا الإنسان وهو على هذه
الصفة ثم قال في نفسه: إني وجدته خالياً فأقتله وأخلص الناس منه فلما رفع السيف
أخرج الله من الأرض أَسدين فقصداه فخاف وألقى السيف من يده وانتبه عمر ولم ير
شيئاً فسأله عن الحال فذكر له الواقعة وأسلم (الرازي
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக