08-07-2022 துல்ஹஜ்- 8 |
|
بسم الله الرحمن
الرحيم அறுப்பின் சட்டங்கள் |
|
https://chennaijamaathululama.blogspot.com
என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம் |
لَنْ
يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى
مِنْكُمْ كَذَلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ
وَبَشِّرِ الْمُحْسِنِينَ (37)الحج
மாதவிடாய் மற்றும் பிரசவத்தீட்டு உள்ள பெண்களும்,
கர்ப்பிணிப் பெண்களும் குர்பானி கொடுக்கலாம்.
கர்ப்பிணிப் பெண்கள் குர்பானி கொடுக்கக் கூடாது என்ற தவறான எண்ணம்
சிலருக்கு இருக்கிறது
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا وَحَاضَتْ بِسَرِفَ قَبْلَ أَنْ تَدْخُلَ
مَكَّةَ وَهِيَ تَبْكِي فَقَالَ مَا لَكِ أَنَفِسْتِ قَالَتْ نَعَمْ قَالَ إِنَّ
هَذَا أَمْرٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ فَاقْضِي مَا يَقْضِي
الْحَاجُّ غَيْرَ أَنْ لَا تَطُوفِي بِالْبَيْتِ فَلَمَّا كُنَّا بِمِنًى أُتِيتُ
بِلَحْمِ بَقَرٍ فَقُلْتُ مَا هَذَا قَالُوا ضَحَّى رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَزْوَاجِهِ بِالْبَقَرِ (بخاري) الأضحية للمسافر
والنساء-كِتَاب الْأَضَاحِيِّ
குர்பானி
விஷயத்தில் முக்கியமான விளக்கம்.
ஒரு
குடும்பத்தில் யார் சம்பாதிக்கிறாரோ மேலும் ஜகாத்துடைய நிஸாப் அளவுக்கு மிச்சமாக
பணம் வைத்துள்ளாரோ அவர் மீது குர்பானி கடமை. ஜகாத் கடமையான சிலர் குர்பானி கடமையான
பின்பும் தன் பெயரில் கொடுக்காமல் தன் தந்தை அல்லது தாயார் பெயரில் குர்பானி
கொடுக்கிறார்கள். அவ்வாறு தருவதால் இவரின் கடமை நீங்காது. தாம் கொடுத்தது போக மிச்சமிருந்தால் பெற்றோர்
பெயரில் கொடுப்பது தவறில்லை. என் பெற்றோரை விட நான் முக்கியமானவனா என்ற எண்ணத்தில்
பலர் இத்தகைய தவறைச் செய்கிறார்கள். தொழுகை இவர் மீது கடமை என்றால் என் பெற்றோர்
தொழாமல் நான் தொழுவதா என்று நாம் யாரும் சொல்ல மாட்டோம். அதுபோன்றுதான் குர்பானி.
தனக்காக அகீகா கொடுக்கப்பட்டிருக்கா விட்டால் அந்த அகீகாவை
முதலில் தராம்ல குர்பானி தரக்கூடாது என்ற
எண்ணமும் சிலரிடம் உள்ளது. அகீகா குழந்தைப் பருவத்தில் தான் சுன்னத். அதைத்
தாண்டினால் ஜாயிஸ். ஆனால் குர்பானி
என்பது வாஜிப்.
وَنَقَلَ التِّرْمِذِيُّ
عَنْ أَهْلِ الْعِلْمِ أَنَّهُمْ يَسْتَحِبُّونَ أَنْ تُذْبَحَ الْعَقِيقَةُ فِي
السَّابِعِ فَإِنْ لَمْ يُمْكِنْ فَفِي الرَّابِعَ عَشَرَ فَإِنْ لَمْ يُمْكِنْ
فَيَوْمِ أَحَدِ وَعِشْرِينَ . وَقَالَ الشَّافِعِيُّ : لَا تُؤَخَّرُ عَنْ
السَّابِعِ اخْتِيَارًا فَإِنْ تَأَخَّرَتْ إلَى الْبُلُوغِ سَقَطَتْ عَمَّنْ
كَانَ يُرِيدُ أَنْ يَعُقَّ عَنْهُ لَكِنْ إنْ أَرَادَ هُوَ أَنْ يَعُقَّ عَنْ
نَفْسِهِ فَعَلَ . (فتح الباري – عمدة القاري
குர்பானி கொடுக்க அனுமதிக்கப்பட்ட நாட்களும். குர்பானி
கொடுப்பது மக்ரூஹாக கருதப்படும் நேரமும்
شَّافِعِيُّ
:الاضحية جائزة في يَوْم النَّحْرِ وثَلَاثَةُ أَيَّامٍ بَعْدَهُ لما
روي عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَكُلُّ أَيَّامِ التَّشْرِيقِ ذَبْحٌ
(أحمد) حديث جُبَيْرِ بْنِ مُطْعِمٍحنفي :الأضحية
جَائِزَةٌ فِي ثَلَاثَةِ أَيَّامٍ : يَوْمُ النَّحْرِ وَيَوْمَانِ بَعْدَهُقَالَ
النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :
أَيَّامُ النَّحْرِ ثَلَاثَةٌ أَفْضَلُهَا أَوَّلُهَا- وَيَجُوزُ الذَّبْحُ فِي
لَيَالِيِهَا إلَّا أَنَّهُ يُكْرَهُ لِاحْتِمَالِ الْغَلَطِ فِي ظُلْمَةِ
اللَّيْلِ (المبسوط, الهداية)
சீக்கிரம் குர்பானி கொடுப்பது நல்லது. குத்பா முடிந்து
மிம்பரிலிருந்து கீழே இறங்கியுடன் நபி ஸல்
குர்பானி கொடுத்துள்ளார்கள்
عَنْ
جَابِرِ رضي الله عنه قَالَشَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ الْأَضْحَى بِالْمُصَلَّى فَلَمَّا قَضَى خُطْبَتَهُ نَزَلَ مِنْ
مِنْبَرِهِ وَأُتِيَ بِكَبْشٍ فَذَبَحَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ بِيَدِهِ وَقَالَ بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ هَذَا عَنِّي
وَعَمَّنْ لَمْ يُضَحِّ مِنْ أُمَّتِي (ابوداود)
ஹாஜி தன்னுடைய ஹஜ்ஜில் குர்பானி கொடுப்பது அல்லாமல் பிறை
10-இல் அவருடைய ஊரில் அவருக்காக குர்பானி தரலாமா ?
والصحيح إن شاء الله أن هدي الحاج له بمنزلة الأضحية للمقيم ، ولم ينقل أحد
أن النبي {صلى الله عليه وسلم} ولا أصحابه جمعوا بين الهدي والأضحية بل كان هديهم هو
أضاحيهم فهو هدي بِمِنَى وإضحية بغيرها ، (مشكاة المصابيح مع شرحه مرعاة المفاتيح)
குர்பானிப் பிராணியை அறுக்கும் போது நிய்யத்துடன் வஜ்ஜஹ்த்து, பிஸ்மில்லாஹ் ஓதி
தக்பீர் சொல்வது
عَنْ جَابِرِ رضي
الله عنه قَالَ:ضَحَّى رَسُولُ اللَّهِ صلى
الله عليه وسلم بِكَبْشَيْنِ
فِى يَوْمِ الْعِيدِ فَقَالَ حِينَ وَجَّهَهُمَا (إِنِّى وَجَّهْتُ وَجْهِىَ
لِلَّذِى فَطَرَ السَّمَوَاتِ وَالأَرْضَ حَنِيفاً وَمَا أَنَا مِنَ
الْمُشْرِكِينَ) (إِنَّ صَلاَتِى وَنُسُكِى وَمَحْيَاىَ وَمَمَاتِى لِلَّهِ رَبِّ
الْعَالَمِينَ لاَ شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ
الْمُسْلِمِينَ اللَّهُمَّ مِنْكَ وَلَكَ عَنْ مُحَمَّدٍ وَأُمَّتِهِ ثُمَّ سَمَّى
اللَّهَ وَكَبَّرَ وَذَبَحَ (نسائ وتستحب
الصلاة على النبيصلى الله عليه وسلم
عند الذبح (الأم للشافعي)
எந்தப்பிராணியை அறுத்தாலும் அறுக்கும் முன் கத்தியை
தீட்டுவது, அறுத்தவுடன் உடனே உரிக்காமல் சூடு ஆற விடுவது
عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ
اللَّهَ كَتَبَ الْإِحْسَانَ عَلَى كُلِّ شَيْءٍ فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا
الْقِتْلَةَ وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذَّبْحَ وَلْيُحِدَّ أَحَدُكُمْ
شَفْرَتَهُ فَلْيُرِحْ ذَبِيحَتَهُ (مسلم) قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قُطِعَ مِنْ الْبَهِيمَةِ وَهِيَ حَيَّةٌ فَهِيَ
مَيْتَةٌ1 (أحمد
அறுக்கப்படும் பிராணிக்கு முன்னால் கத்தியை தீட்டுவது அதனை
பல முறை சாகடிப்பதாகும்
عن ابن عباس رضي الله عنه أن رجلا أضجع شاة وهو يحد شفرته2 فقال
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أتريد أن تُمِيتَها موتاتٍ هَلاَّ
حَدَدْتَ شَفْرَتك قبل أن تُضْجِعَها (مستدرك الحاكم) كتاب الاضحية) عن معاوية بن
قرة عن أبيه : أن رجلا قال : يا رسول الله إني لأرحم الشاة أن أذبحها فقال رسول
الله صلى الله عليه و سلم : إن رَحِمْتَها رحِمَك الله (مستدرك الحاكم) كتاب الاضحية)
ஒருவர் கத்தியை தீட்டியபடியே ஆட்டைப் படுக்க வைத்தார்.
அதைக் கண்ட நபி ஸல் அவர்கள் இதை ஒருமுறை மவ்த்தாக்க நினைக்கிறீரா அல்லது பலமுறை
மவ்த்தாக்க நினைக்கிறீரா நீ ஆட்டைப்
படுக்க வைக்கும் முன்பு மறைவாக கத்தியைத் தீட்டியிருக்க வேண்டாமா என நபி ஸல்
அவர்கள் எச்சரித்தார்கள்.
மென்மையாக அழைத்துச்செல்வதும், தண்ணீர் கொடுப்பதும், ஒரு
ஆட்டின் முன் மற்றொரு ஆட்டை அறுக்காமலிருப்பதும்
والأولى أن
تساق إلى المذبح برفق وتضجع برفق ويعرض عليها الماء قبل الذبح ولا يحد
الشفرة قِبَالتهاولا يذبح بعضها قِبالة بعض (بحر الرائق) عنْ أَبِي سَعِيدٍ
الْخُدْرِيِّ رض قَالَ مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ وَهُوَ يَجُرُّ شَاةً
بِأُذُنِهَا فَقَالَ دَعْ أُذُنَهَا وَخُذْ بِسَالِفَتِهَا3 (ابن
ماجة)عن الوضين بن عطاء رضي الله عنه أن جزارًا فتح
بابا علي شاة ليذبحها فانفلتت منه حتي جاءت الي النبي صلي
الله عليه وسلم فأَتْبَعَها فأخذ يسحبها برِجْلِها4
فقال لها النبي صلي الله عليه وسلماصبري
لأمر الله وأنت يا جزار (مصنف عبد
الرزاق)جزارகசாப்புக்கடைக்காரர்
நபி ஸல் அவர்கள் ஒரு
மனிதரைக் கடந்து சென்றார்கள். அவர் தனது ஆட்டின் காதைப் பிடித்து இழுத்துக் கொண்டு
வந்தார். அதைக் கண்ட நபி ஸல் அவர்கள் அதன் காதை விட்டு விடு. அதன் பிடரியைப்
பிடித்து இழுத்து வா என்றார்கள். காதைப் பிடித்தால் ஆட்டுக்கு வலி ஏற்படும்.
பிடரியைப் பிடித்தால் வலி ஏற்படாது என்பதால் இவ்வாறு. கூறினார்கள். மற்றொருவர் ஆடு
அடைத்து வைக்கப்படிருந்த இடத்தைத் திறந்தார். அதிலிருந்து அந்த ஆடு நழுவி நேராக
நபி ஸல் அவர்களை நோக்கி ஓடி வந்தது. அதை விரட்டி வந்த அதன் உரிமையாளர் அதன் காலைப்
பிடித்து தரதரவென இழுத்தார். நபி ஸல் அவரைக் கண்டிக்கும் விதமாக அல்லாஹ்வின்
அனுமதியின் பேரில் நீ இதை அறுக்கிறாய் சற்று பொறுமையைக் கடைபிடி என்றார்கள்.
மிருகங்களும் அடைக்கலம்
தேடி வருகின்ற புகலிடமாக நபி ஸல் அவர்கள் இருந்தார்கள்
عَنْ
عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ قَالَ أَرْدَفَنِي
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
خَلْفَهُ ذَاتَ يَوْمٍ فَأَسَرَّ إِلَيَّ حَدِيثًا لَا
أُحَدِّثُ بِهِ أَحَدًا مِنْ النَّاسِ وَكَانَ أَحَبُّ مَا اسْتَتَرَ بِهِ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَاجَتِهِ
هَدَفًا أَوْ حَائِشَ نَخْلٍ قَالَ فَدَخَلَ حَائِطًا لِرَجُلٍ مِنْ الْأَنْصَارِ
فَإِذَا جَمَلٌ فَلَمَّا رَأَى النَّبِيَّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَنَّ وَذَرَفَتْ عَيْنَاهُ
فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
فَمَسَحَ ذِفْرَاهُ فَسَكَتَ فَقَالَ مَنْ رَبُّ هَذَا الْجَمَلِ
لِمَنْ هَذَا الْجَمَلُ فَجَاءَ فَتًى مِنْ الْأَنْصَارِ فَقَالَ لِي يَا رَسُولَ
اللَّهِ فَقَالَ أَفَلَا تَتَّقِي اللَّهَ فِي هَذِهِ الْبَهِيمَةِ الَّتِي
مَلَّكَكَ اللَّهُ إِيَّاهَا فَإِنَّهُ شَكَا إِلَيَّ أَنَّكَ تُجِيعُهُ
وَتُدْئِبُهُ(ابوداود
நபி ஸல் அவர்கள்
சுவதோவைக்காக ஒரு அன்சாரித் தோழரின் பின் பக்கச் சுவற்றின் பக்கம் ஒதுங்கியபோது
அங்கே ஒரு ஒட்டகம் நபி ஸல் அவர்களைக் கண்டவுடன் தேம்பி அழத் துவங்கியது. நபி ஸல் அவர்கள் அதன் திமிலைத் தடவிக் கொடுத்த
பின் அது அமைதியானது உடனே நபி ஸல் அவர்கள் அதன் உரிமையாளரை அழைத்து நீர் இந்த
வாயில்லாப் பிராணிகள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்ச வேண்டாமா நீ அதைப் பட்டினி
போட்டதாகவும், அதைக் கொடுமைப் படுத்தியதாகவும் என்னிடம் முறையிட்டது என நபி ஸல்
கூறினார்கள்
அறுக்கும் போது குர்பானிப் பிராணியை கிப்லாவை முன்னோக்கி
வைத்து அறுப்பது
استقبال الذابح القبلة
وتوجيه الذبيحة إليها وذلك في الهدي والأضحية أشد استحبابا لأن الاستقبال مستحب في
القربات وفي كيفية توجيهها ثلاثة أوجه
أصحها يوجه مذبحها إلى القبلة ولا يوجه وجهها ليمكنه هو أيضا الاستقبال والثاني يوجهها بجميع
بدنها والثالث يوجه قوائمها5(مجموع
அறுக்கத் தெரிந்தால் முடிந்த வரை தானே அறுப்பது, அல்லது
அறுப்பவருக்கு பக்கத்தில் நிற்பது
الْأَوْلَى في
الْقُرَبِ أَنْ يَتَوَلَّاهَا الْإِنْسَانُ بِنَفْسِهِ وَإِنْ أَمَرَ بِهِ
غَيْرَهُ فَلَا يَضُرُّ لِأَنَّهُ عليه الصَّلَاةُ وَالسَّلَامُ سَاقَ مِائَةَ
بَدَنَةٍ فَنَحَرَ بيده نَيِّفًا وَسِتِّينَ ثُمَّ أَعْطَى الحِرْبَةَ عَلِيًّا
فَنَحَرَ الْبَاقِيَ وَإِنْ كان لَا يُحْسِنُ ذلك فَالْأَحْسَنُ أَنْ يَسْتَعِينَ
بِغَيْرِهِ كيلا يَجْعَلَهَا مَيْتَةً وَلَكِنْ يَنْبَغِي أَنْ يَشْهَدَهَا
بِنَفْسِهِ لِقَوْلِهِ عليه الصَّلَاةُ وَالسَّلَامُ لِفَاطِمَةَ رض
قَوْمِي فَاشْهَدِي أُضْحِيَّتَكِ فإنه يُغْفَرُ لَك بِأَوَّلِ قَطْرَةٍ من
دَمِهَا كُلُّ ذنبه (سنن الكبري للبيهقي)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ்ஜதுல்
விதாவில் 100 ஒட்டகங்களை அறுத்தார்கள். அதில் 63 ஒட்டகங்களை தாமே அறுத்தார்கள்.
மீதியை அலீ ரழி அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.
குர்பானிப் பிராணியில் கூட்டு சேர்ந்து கொண்ட ஏழு பேர் அதனை
அறுக்கும்போதும் கூட்டாக அறுத்த சம்பவம்
عن أَبي الأَسَدِّ السُّلَمِىّ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ رضي الله عنه
قَالَ :كُنْتُ سَابِعَ سَبْعَةٍ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم
فَأَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَجَمَعَ كُلُّ رَجُلٍ مِنَّا
دِرْهَمًا فَاشْتَرَيْنَا أُضْحِيَّةً بِسَبْعَةِ دَرَاهِمَ فَقُلْنَا يَا رَسُولَ
اللَّهِ لَقَدْ أَغْلَيْنَا بِهَا6 فَقَالَ النَّبِىُّ صلى الله عليه
وسلم: إِنَّ أَفْضَلَ الضَّحَايَا أَغْلاَهَا وَأَنْفَسُهَا فَأَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
رَجُلاً يَأْخُذُ بِيَدٍ وَرَجُلاً بِيَدٍ
وَرَجُلاً بِرِجْلٍ وَرَجُلاً بِرِجْلٍ وَرَجُلاً بِقَرْنٍ وَرَجُلاً بِقَرْنٍ
وَذَبَحَهَا السَّابِعُ وَكَبَّرْنَا عَلَيْهَا جَمِيعًا (مستدرك الحاكم) كتاب
الاضحية) (معجم الاوسط للطبراني)
ஒருமுறை நாங்கள் ஏழு பேர் ஒரு
பிராணியில் கூட்டாக இருந்தோம். அதில் நபி ஸல் அவர்களும் ஒருவராக இருந்தார்கள்.
ஆளுக்கு ஒரு திர்ஹம் சேர்த்து வைத்து ஏழு திர்ஹத்திற்கு ஒரு பிராணியை வாங்கினோம்.
அந்தப் பிராணியை அறுக்கும் போது அதன் நான்கு கால்களை நான்கு பேர் பிடிக்க, அதன்
இரு கொம்புகளை இருவர் பிடிக்க, ஏழாவது நபர் அதனை அறுத்தார்.
அறுக்கும் முறைபிராணியின்
கழுத்திலுள்ள இரத்தக்குழாய்கள், மூச்சுக்குழல், உணவுக்குழல் ஒரே நேரத்தில் அறுபட
வேண்டும். அப்படி அறுத்தாலும் துடிப்பு அடங்கிய பின்பே தோலை உரிக்க வேண்டு இதனால் இரத்தம் விரைவாக வெளியேறி இறைச்சி சுத்தமாகும். கத்தி கூர்மையாக
இருப்பதால் விரைவாக அறுக்க முடியும். அதனால் பிராணி வலியை உணர்வதில்லை. உதாரணமாக
கூர்மையான பிளேடினால் ஏற்படும் காயம் உடனே வலியைத் தோற்றுவிப்பதில்லை. இரத்தம்
வழிந்து சிறிது நேரம் கழித்தே வலியை
உணர்கிறோம்.
இஸ்லாமிய முறையி்ல் பிராணியை அறுக்கும் போது அது வலியை உணர்வதில்லை என்றால்
பிராணி ஏன் துடிக்கிறது ?
கழுத்தின் இரு
புறமுள்ள இரத்தக்குழாய்கள் துண்டிக்கப்பட்டவுடன் மூளைக்குச்செல்லும் இரத்தம்
தடைபடுகிறது.உடன் பிராணிநினைவை இழந்து விடுகிறது. முதுகந்தண்டு சிதையாமல்
இருப்பதால் மூளை அதன் பின் உணர்வுகளை இதயத்திற்கு அனுப்பி வைத்து உடனே மூளைக்கு
அதிக இரத்தத்தை அனுப்பித் தருமாறு கோருகிறது. ஆகவே தான் அறுக்கப்பட்டவுடன் பிராணி
துடிக்கிறது.அதனால் உடலின் பல பாகங்களிலிருந்தும் இரத்தம் துரிதமாக இதயத்தை
அடைந்து அங்கிருந்து மூளைக்கு செலுத்தப்படுகிறது.ஆனால் இரத்தக் குழாய்கள்
துண்டிக்கப்பட்டிருப்பதால் இரத்தம் மூளைக்குச்சென்றடையாமல் வெளியேறி விடுகிறது.
பிராணி துடிப்பதைப் பார்ப்பவர் அது வலியால் துடிக்கிறது என்று கருதி விடுவார்.
ஆனால் அது வலியினால் ஏற்படும் துடிப்பு அல்ல. ஏனெனில் ஏற்கெனவே
நினைவிழந்திருப்பதால் பிராணி வலியை உணர்வதில்லை.உடல் துடிப்பின்மூலம் இரத்தம்
முழுவதும் வெளியேறி விடுகிறது. இதனால் தான் பிராணியின் உடல் துடிப்பு நின்று
இரத்தம் முற்றிலும் வெளியேறும் வரை தோலை உரிக்கவோ, தசையை வெட்டவோ அனுமதி இல்லை.
இவ்விதம் பெறப்படும் இறைச்சி இரத்தம் நீங்கிய தூய்மையான இறைச்சியாகி விடுகிறது.
பிராணியும் வேதனையின்றி உயிரிழக்கிறது.
மேல்நாடுகளில்
பின்பற்றப்படும் ஸ்டன்னிங் என்ற முறையால் கறியும் சுத்தமாகாது. பிராணியும் வேதனையை
உணரும்
இம்முறைப்படி
பிராணியின் தலையில் ஓங்கி அடிக்கப்படுகிறது. உடனே பிராணி செயலிழந்து விடுகிறது.
ஆனால் நினைவை இழப்பதில்லை. பிராணி செயலிழந்து விடுவதால் அதற்கு எவ்வித வலியும்
ஏற்படுவதில்லை எனக் கருதலாம். ஆனால் உண்மையில் பிராணி மிகுந்த வேதனையுடன்
இருக்கிறது. மூளையும், நரம்பு மண்டலமும்
செயலிழந்து விடுவதால் உடலில் துடிப்பு ஏற்படுவதில்லை. அதன் காரணமாக இரத்தம்
உடலிலேயே தங்கி விடுகிறது. விரைவாக தசைகளை வெட்டுவதால் சிறிது இரத்தமே
வெளியேறக்கூடும். எனவே இறைச்சி சுத்தமற்றதாக ஆகி விடுகிறது. அதன் தோற்றமும்
மாறுபடுகிறது. சுவையும் குறைந்து விடுகிறது
ஆகுமாக்கப்பட்ட பிராணிகளில் சாப்பிட தடுக்கப்பட்ட ஏழு
பொருட்கள். அவற்றில் இரத்தம் ஹராம். மற்றவை மக்ரூஹ்
1. இரத்தம், 2. பித்தப்பை, 3. ஆண்குறி, 4. பெண்குறி, 5. இரு
விதைகள், 6. மூத்திரப்பைகள், 7. கழலை
عَنِ
ابْنِ عُمَرَ ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكْرَهُ مِنَ
الشَّاةِ سَبْعًا : الْمَرَارَةَ ، وَالْمَثَانَةَ ، وَالْمحيَاةَ ، وَالذَّكَرَ ، وَالأُنْثَيَيْنِ ، وَالْغُدَّةَ ،
وَالدَّمَ (طبراني
குர்பானி இறைச்சியை
வீணாக்காமல் அதை பதப்படுத்தி தேவைக்கேற்ப பயன்படுத்துவது சுன்னத்
-
عَنْ ثَوْبَانَ رض مَوْلَى رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ قَالَ
لِى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- وَنَحْنُ بِمِنًى :« أَصْلِحْ لَنَا
مِنْ هَذَا اللَّحْمِ ». فَأَصْلَحْتُ لَهُ مِنْهُ ، فَلَمْ يَزَلْ يَأْكُلُ
مِنْهُ حَتَّى بَلَغْنَا الْمَدِينَةَ. رواه النسائ
ஸவ்பான் ரழி கூறினார்கள் நபி ஸல் அவர்கள் ஹஜ்ஜதுல் விதாவில்
மினாவில் இருக்கும்போது என்னிடம் கூறினார்கள் இந்த குர்பானி இறைச்சியை பதப்படுத்தி
வை என்றார்கள் நான் அதைக் காய வைத்து பதப்படுத்தினேன். நாங்கள் அங்கிருந்து மதீனா
வந்து சேரும் வரை எங்களின் உணவாக அது இருந்தது
ஆரம்ப காலத்தில்
சேமிப்பது தடை செய்யப்பட்டிருந்த து பின்பு அனுமதிக்கப்பட்டது.
عَنْ
عَائِشَةَ رَضِىَ اللَّهُ عَنْهَا قَالَتْ : كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه
وسلم- قَدْ نَهَى عَنْ لُحُومِ الأَضَاحِىِّ بَعْدَ ثَلاَثٍ ، فَلَمَّا كَانَ
الْعَامُ الْقَابِلُ وَضَحَّى النَّاسُ قُلْتُ : يَا نَبِىَّ اللَّهِ إِنْ كَانَتْ هَذِهِ
الأَضَاحِىُّ لَتَرْفُقُ بِالنَّاسِ كَانُوا يَدَّخِرُونَ مِنْ لُحُومِهَا
وَوَدَكِهَا. قَالَ :« فَمَا يَمْنَعُهُمْ مِنْ ذَلِكَ الْيَوْمَ؟ ». قُلْتُ : يَا
نَبِىَّ اللَّهِ أَوَلَمْ تَنْهَهُمْ عَامَ أَوَّلَ عَنْ أَنْ يَأْكُلُوا
لُحُومَهَا فَوْقَ ثَلاَثٍ؟ فَقَالَ :« إِنَّمَا نَهَيْتُ عَنْ ذَلِكَ
لِلْحَاضِرَةِ الَّتِى حَضَرَتْهُمْ مِنْ أَهْلِ الْبَادِيَةِ لِيَبُثُّوا
لُحُومَهَا فِيهِمْ ، فَأَمَّا الآنَ فَلْيَأْكُلُوا وَلْيَدَّخِرُوا ». تحفة
17901 رواه النسائ
عَنْ ابْنِ
بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ إِنِّي كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ ثَلَاثٍ عَنْ زِيَارَةِ الْقُبُورِ
فَزُورُوهَا وَلْتَزِدْكُمْ زِيَارَتُهَا خَيْرًا وَنَهَيْتُكُمْ عَنْ لُحُومِ
الْأَضَاحِيِّ بَعْدَ ثَلَاثٍ فَكُلُوا مِنْهَا وَأَمْسِكُوا مَا شِئْتُمْ
وَنَهَيْتُكُمْ عَنْ الْأَشْرِبَةِ فِي الْأَوْعِيَةِ فَاشْرَبُوا فِي أَيِّ
وِعَاءٍ شِئْتُمْ وَلَا تَشْرَبُوا مُسْكِرًا وَلَمْ يَذْكُرْ مُحَمَّدٌ
وَأَمْسِكُوا رواه ابن ماجة
கூட்டுக் குர்பானியாக
இருந்தாலும் அதன் இறைச்சியிலுருந்து கொஞ்சம் சாப்பிடுவது சுன்னத். போய் வாங்குவது
கடும் சிரமம் என்று இருந்தாலே தவிர.
فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ (28الحج)
وفي حديث حجة الوداع... ثُمَّ انْصَرَفَ (رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ) إِلَى الْمَنْحَرِ فَنَحَرَ ثَلَاثًا وَسِتِّينَ بِيَدِهِ
ثُمَّ أَعْطَى عَلِيًّا فَنَحَرَ مَا غَبَرَ وَأَشْرَكَهُ فِي هَدْيِهِ ثُمَّ
أَمَرَ مِنْ كُلِّ بَدَنَةٍ بِبَضْعَةٍ فَجُعِلَتْ فِي قِدْرٍ فَطُبِخَتْ
فَأَكَلَا مِنْ لَحْمِهَا وَشَرِبَا مِنْ مَرَقِهَا (مسلم) بَاب
حَجَّةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ –قَالَ عَبْد اللَّه بْن وَهْب قَالَ لِي مَالِك أُحِبّ أَنْ يَأْكُل مِنْ
أُضْحِيَّته لِأَنَّ اللَّه يَقُول" فَكُلُوا مِنْهَ
ஹஜ்ஜதுல் விதாவில் நபி ஸல் அவர்கள் மொத்தம் 100 ஒட்டகங்கள்
குர்பானி கொடுத்தார்கள். தான் அறுக்கும் குர்பானி இறைச்சியில் சிறிதளவேனும்
சாப்பிடுவது நல்லது என்ற அடிப்படையில் நபி ஸல் அவர்கள் அத்தனை ஒட்டகங்களில்
இருந்தும் ஒவ்வொரு மாமிசத் துண்டை எடுத்து சால்னா காய்ச்சும்படி ஏவினார்கள். அந்த
மாமிசத்தை உண்டதோடு, அந்த சால்னாவை சிறிதளவு குடித்தார்கள். அதாவது அத்தனை ஒட்டகங்களின்
இறைச்சி சாறு அதில் இறங்கி விட்டதால் இவ்வாறு செய்தார்கள்.
நிறைமாத கர்ப்பமான ஆட்டை அறுப்பது அதன் குட்டியையும்
அறுத்ததாக கணக்கிடப்படும்
ذَكَاة
الْجَنِينِ عَنْ
أَبِي سَعِيدٍ رض قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ عَنْ الْجَنِينِ فَقَالَ كُلُوهُ إِنْ شِئْتُمْ وَقَالَ مُسَدَّدٌ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ نَنْحَرُ
النَّاقَةَ وَنَذْبَحُ الْبَقَرَةَ وَالشَّاةَ فَنَجِدُ فِي بَطْنِهَا الْجَنِينَ
أَنُلْقِيهِ أَمْ نَأْكُلُهُ قَالَ كُلُوهُ إِنْ شِئْتُمْ فَإِنَّ ذَكَاتَهُ
ذَكَاةُ أُمِّهِ رواه ابو داود
குர்பானித் தோலை
விற்பது கூடாது. அறுப்பவருக்குக் கூலியாகவும் தரக்கூடாது. ஏழைகளுக்கு தரலாம்
ما ذا يفعل بجلدها؟ قال صاحب الهداية:ويتصدق بجلدها أو يعمل
منه آلة تستعمل في البيت لقوله عليه السلام لعلي رض "تصدق بجلودها وخطامها
ولا تعط أجر الجزار منها شيئا" ولقوله عليه السلام "من باع جلد أضحيته
فلا أضحية له" لأن الاعطاء بجلدها او بجزء منهاأجرة في معني البيع
அரஃபா நோன்பு
عَنْ أَبِى قَتَادَةَ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ « صِيَامُ يَوْمِ
عَرَفَةَ إِنِّى أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِى
قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِى بَعْدَهُ (ترمذي
பிக்ஹ் நூல்கள் அனைத்திலும் அரஃபா நாள் என்பது துல்ஹஜ் 9-ம்
நாள் என்றே கூறப்பட்டுள்ளது. அரஃபாவில் ஹாஜிகள் தங்கும் நாள் என்று கூறப்படவில்லை.
ஆகவே அரஃபா நாள் ஹாஜிகளுக்கும், நமக்கும் மாறுபடுவது அல்லாஹ்வின் விதி.
ஈதுப் பெருநாள்
தொழுகையில் அதிகப்படியான தக்பீர்களைப் பற்றிய விபரம்ஷாஃபிஈ, &ஹனஃபீ
عَنْ عَائِشَةَرضي الله عنها قالت أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُكَبِّرُ فِي الْفِطْرِ وَالْأَضْحَى فِي الْأُولَى
سَبْعَ تَكْبِيرَاتٍ وَفِي الثَّانِيَةِ خَمْسًا (ابوداود) بَاب التَّكْبِيرِ فِي
الْعِيدَيْنِ
- أَنَّ سَعِيدَ بْنَ الْعَاصِ
سَأَلَ أَبَا مُوسَى الْأَشْعَرِيَّ وَحُذَيْفَةَ بْنَ الْيَمَانِ كَيْفَ كَانَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ يُكَبِّرُ فِي
الْأَضْحَى وَالْفِطْرِ فَقَالَ أَبُو مُوسَى كَانَ يُكَبِّرُ أَرْبَعًا
تَكْبِيرَهُ عَلَى الْجَنَائِزِ(ابوداود) بَاب التَّكْبِيرِ فِي الْعِيدَيْنِ(
أَرْبَعًا ): أَيْ مُتَوَالِيَة . وَالْمَعْنَى مَعَ تَكْبِيرَة الْإِحْرَام فِي
الرَّكْعَة الْأُولَى وَمَعَ تَكْبِيرَة الرُّكُوع فِي الثَّانِيَة
இந்த ஹதீஸ் ஹனஃபீ மத்ஹபுக்கு ஆதாரம் இங்கே நான்கு தக்பீர்
என்று கூறப்படுவது ஒவ்வொரு ரக்அத்திலும் நான்கு என்பதாகும். அதாவது முதல்
ரக்அத்தில் தக்பீர் தஹ்ரீமாவுடன் சேர்ந்து நான்கு பின்பு இரண்டாவது ரக்அத்தின்
கடைசியில் ருகூவுடைய தக்பீருடன் சேர்த்து நான்கு என்பதாகும் ஆக அதிகப்படியான
தக்பீர்கள் ஆறு என்பதாகும்
ஒவ்வொரு
தக்பீருக்குமிடையில் கைகளை தொங்க விடுவதா ? அல்லது கைகளை கட்டிக் கொள்வதா ?
حنفي:( وَيُرْسِلُ يَدَيْهِ فِي قَوْمَةِ الرُّكُوعِ
وَبَيْنَ تَكْبِيرَاتِ الْعِيدِ ) فَالْحَاصِلُ علي ما قَالَ شَمْسُ الْأَئِمَّةِ الْحَلْوَانِيُّ :
إنَّ كُلَّ قِيَامٍ لَيْسَ فِيهِ ذِكْرٌ مَسْنُونٌ فَالسُّنَّةُ فِيهِ الْإِرْسَالُ
وَكُلُّ قِيَامٍ فِيهِ ذِكْرٌ مَسْنُونٌ فَالسُّنَّةُ فِيهِ الْوَضْعُ وَبِهِ
كَانَ يُفْتِي شَمْسُ الْأَئِمَّةِ السَّرَخْسِيُّ وَالصَّدْرُ الْكَبِيرُ
بُرْهَانُ الْأَئِمَّةِ ،فَيَضَعُ يَدَيْهِ فِي الْقُنُوتِ وَصَلَاةِ الْجِنَازَةِ
عِنْدَ أبي حنيفة وابي يوسف رح ؛ لِأَنَّ فِيهِمَا ذِكْرًا مَسْنُونًامجمع الأنهر,
(درر الحكام)عَنْ أَبِي حَنِيفَةَ رَحِمه الله قَالَ : وَيَسْكُتُ بَيْنَ كُلِّ
تَكْبِيرَتَيْنِ بِقَدْرِ ثَلَاثِ تَسْبِيحَاتٍ
ஹனஃபிகளிடம் எந்த இரு
தக்பீர்களுக்கு இடையில் சுன்னத்தான ஓதுதல் இருக்குமோ அந்த தக்பீரின் போது கைகளைக்
கட்டிக் கொள்ள வேண்டும். உதாரணமாக ஜனாஸாத் தொழுகை, குனூத் ஆகியவை.
எந்த இரு தக்பீர்களுக்கு
இடையில் சுன்னத்தான ஓதுதல் இல்லையோ அந்த தக்பீரின் போது கைகளைக் கீழே தொங்க விட
வேண்டும். அந்த வகையில் ஈத் தக்பீர்களுக்கிடையில் ஹனஃபிகளிடம் எந்த ஓதுதலும் இல்லை
شافعي (وَوَاضِعَا) بَيْنَ كُلِّ
تَكْبِيرَتَيْنِ يُمْنَى يَدَيْهِ عَلَى يَسَارِهِ مِنْهُمَا كَمَا
بَعْدَ تَكْبِيرَةِ التَّحْرِيمِ وَظَاهِرٌ أَنَّهُ لَا بَأْسَ بِإِرْسَالِهِمَا
إذَا لَمْ يَعْبَثْ2(الغرر البهية)
2,கைகளை
கீழே தொங்க விட்டால் அந்தக் கைகளைக் கொண்டு ஏதேனும் வீண் விளையாட்டில் ஈடுபட
மாட்டார் என்றிருந்தால் கைகளைத் தொங்க விடலாம்.
அதிகப்படியான தக்பீர்களை மறதியாக விட்டு விட்டால்.
وقال أبو حنيفة وأحمد يسجد لترك تكبيرات العيد (مجموع)
அதிகப்படியான
தக்பீர்களை மறதியாக விட்டு விட்டால். கடைசியில் ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும்.
ஈதுப் பெருநாள்
தொழுகையில் ஸஜ்தா ஸஹ்வு செய்வது நல்லதல்ல என்ற கருத்தும் உள்ளது. தொழுகை கூடி
விடும்.
شافعي :فان نسى تكبيرات العيد حتى افتتح القراءة ففيه قولان قال في
القديم ياتي بها لان محلها القيام والقيام باق وقال في الجديد لا ياتي بها لانه
ذكر مسنون قبل القراءة فسقط بالدخول في القراءة كدعاء الاستفتاح (مجموع)
இமாம்
ஷாஃபியீ ரஹ் அவர்களின் பிந்தைய சொல்லின் படி தக்பீர் சுன்னத் என்பதால் அதிகப்படியான
தக்பீர்களில் ஒன்றை மறதியாக விட்டு விட்டு கிராஅத்தை ஆரம்பித்து விட்டால் அந்த
தக்பீர்களை மீட்ட வேண்டியதில்லை. எப்படி தனாவை விட்டு விட்டால் மீட்ட வேண்டியதில்லையோ
அதைப் போல..
قال الشَّافِعِيُّ ) وإذا
افْتَتَحَ الصَّلَاةَ ثُمَّ بَدَأَ بِالتَّكْبِيرَةِ الأولي من السَّبْعَةِ بَعْدَ
افْتِتَاحِ الصَّلَاةِ فَكَبَّرَهَا ثُمَّ وَقَفَ بين الْأُولَى وَالثَّانِيَةِ
قَدْرَ قِرَاءَةِ آيَةٍ لَا طَوِيلَةٍ وَلَا قَصِيرَةٍ فَيُهَلِّلُ اللَّهَ عز وجل
وَيُكَبِّرُهُ وَيَحْمَدُهُ ثُمَّ صَنَعَ هذا بين كل تَكْبِيرَتَيْنِ من السَّبْعِ
وَالْخَمْسِ ثُمَّ يَقْرَأُ بَعْدُ بِأُمِّ الْقُرْآنِ وَسُورَةٍ وَإِنْ أَتْبَعَ
بَعْضَ التَّكْبِيرِ بَعْضًا ولم يَفْصِلْ بَيْنَهُ بِذِكْرِ كَرِهْتُ ذلك له
وَلَا إعَادَةَ عليه وَلَا سُجُودَ لِلسَّهْوِ عليه فَإِنْ نسى التَّكْبِيرَ أو
بَعْضَهُ حتى يَفْتَتِحَ الْقِرَاءَةَ فَقَطَعَ الْقِرَاءَةَ وَكَبَّرَ ثُمَّ
عَادَ إلَى الْقِرَاءَةِ لم تَفْسُدْ صَلَاتُهُ وَلَا آمُرُهُ إذَا افْتَتَحَ
الْقِرَاءَةَ أَنْ يَقْطَعَهَا وَلَا إذَا فَرَغَ منها أَنْ يُكَبِّرَ وَآمُرُهُ
أَنْ يُكَبِّرَ في الثَّانِيَةِ تَكْبِيرَهَا لا يَزِيدُ عليه لِأَنَّهُ ذِكْرٌ في
مَوْضِعٍ إذَا مَضَى الْمَوْضِعُ لم يَكُنْ على تَارِكِهِ قَضَاؤُهُ في غَيْرِهِ
(الام)
குறிப்பு- இங்கு ஹனஃபீ, ஷாஃபிஈ இரு சட்டங்களையும் கூறப்பட்டிருந்தாலும்
அவரவர் மஹல்லாவுக்குத் தகுந்தாற்போல் ஏதேனும் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ளலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக