15-07-2022 துல்ஹஜ் - 15 |
|
بسم
الله الرحمن الرحيم விருந்தோம்பலில்
சிறந்து விளங்கிய நபி இப்றாஹீம்
அலைஹிஸ்ஸலாம் |
|
https://chennaijamaathululama.blogspot.com
என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம் |
இன்று நாம் செய்யும் பல நற்காரியங்கள் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்
அவர்களை நினைவு கூரக் கூறியகாக அமைந்துள்ளன
நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்
அவர்களை நினைவு கூராமல் தொழுகை முழுமையடைவதில்லை
عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قِيلَ يَا رَسُولَ
اللَّهِ أَمَّا السَّلَامُ عَلَيْكَ فَقَدْ عَرَفْنَاهُ فَكَيْفَ الصَّلَاةُ
عَلَيْكَ قَالَ قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ
وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ
مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا
بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ (بخاري) كتاب التفسير
நபி ஸல் அவர்களும்
அடிக்கடி நபி இப்றாஹீம் அலை அவர்களை நினைவு கூருவார்கள்
عَنْ
ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ يُعَوِّذُ الْحَسَنَ وَالْحُسَيْنَ أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ
التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ ثُمَّ
يَقُولُ كَانَ أَبُوكُمْ يُعَوِّذُ بِهِمَا إِسْمَاعِيلَ وَإِسْحَقَ (ابوداود
தன் பேரப்பிள்ளைகளுக்கு ஓதிப் பார்க்கும்போது நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படித்தான் உங்களின் தந்தை நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்
தம் பிள்ளைகளுக்கு ஓதிப் பார்ப்பார்கள் என நினைவு கூருவார்கள்
அல்லாஹ்வின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு 80 வயதிலும் கத்னா செய்து கொண்ட இப்றாஹீம்
அலைஹிஸ்ஸலாம்
عَنْ
أَبِي هُرَيْرَةَرَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اخْتَتَنَ إِبْرَاهِيمُ عَلَيْهِ
السَّلَام وَهُوَ ابْنُ ثَمَانِينَ سَنَةً
بِالْقَدُّومِ(بُخاري)قدومவெட்டும் கருவி
விருந்தோம்பலிலும் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் சிறந்து விளங்கினார்கள்
وكان ابراهيم عليه السلام لا
يأكل بغير ضيف (مؤطا)-
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் எப்போதும் விருந்தாளிகள் இல்லாமல் சாப்பிட மாட்டார்கள்
ஒரேயொரு தடவை மட்டும் விருந்தாளிகள் யாரும் வரவில்லை ஏமாற்றம் அடைந்த இப்றாஹீம் (அலை) விருந்தாளியைத் தேடி வெளியில்
புறப்பட்டார்கள்அப்போதும் விருந்தாளிகள் யாரும் தென்படாத நிலையில் கவலையுடன் வீடு
திரும்பிய போது சற்றும் எதிர்பாராமல் ஒரு மனிதர் இப்றாஹீம் (அலை) அவர்களின் வீட்டினுள் நின்றார் உடனே இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் நீங்கள் யார்
? என் அனுமதி இல்லாமல் எப்படி என் வீட்டினுள் வந்தீர் ? என்று கேட்க அதற்கு அவர் நான் இந்த வீட்டின் உண்மையான அதிபதியின் அனுமதியோடு
வந்துள்ளேன் என்று கூற இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு குழப்பமாகி விட்டது
யார் நீங்கள் என்று வியப்புடன் கேட்க, அதற்கு அவர் நான் அல்லாஹ் அனுப்பிய வானவர்.
அல்லாஹ் உங்களிடம் ஒரு சுபச்செய்தியை கூறும்படி அனுப்பினான் அதாவது உங்கள்
சமூகத்தில் ஒருவரை அல்லாஹ் தன் உற்ற நேசராக ஆக்கிக் கொண்டான் என்று கூறிய
மறுநிமிடமே இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆர்வத்துடன் அவர் யார் ? எங்கே இருக்கிறார் ? இந்த உலகின் எந்த மூலையின் அவர் இருந்தாலும் சரி அவரை நான் என்னுடைய
நேசராக ஆக்கிக் கொள்வேன் அவருடனே இருப்பேன் அவரை விட்டும் பிரிய மாட்டேன் என்று
ஆர்வத்துடன் கேட்ட போது அந்த மலக்கு சொன்னார் அவர் இங்கே தான் இருக்கிறார்.... அது
நீங்கள் தான் என்று கூற உடன் ஆச்சரியமடைந்த இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் நான் தானா? என்னைத் தான் அல்லாஹ் தன் நேசராக ஆக்கிக் கொண்டானா ? எதனால் ? என்று ஆச்சரியத்துடன் கேட்க, உடன் அந்த
வானவர் நீங்கள் அனைவருக்கும் கொடுத்துத்
தான் பழகியிருக்கிறீர்கள் யாரிடத்திலும் வாங்கிப் பழகியதில்லை அதுதான் காரணம்
என்றார்.
فذُكِر
أنّ إبراهيم صلى الله عليه وسلم كان يضيف الضيفان ويطعم الطعام، فأصاب الناس سنةُ
جدب فعزَّ الطعام. فبعث إبراهيم صلى الله عليه وسلم إلى خليل له بمصر كانت المِيرة
من عنده، فبعث غلمانه معهم الغرائر والإبل ليميره، فردّهم وقال: إبراهيم لا يريد
هذا لنفسه، إنما يريده لغيره. قال: فرجع غلمانه، فمرّوا ببطحاء لينة. فاحتملوا من
رملها فملئوا الغرائر؛ استحياء من أن يردّوها فارغة، فرُدّوا على إبراهيم صلى الله
عليه وسلم فأخبروه الخبر وامرأه نائمة، فوقع عليه النوم هَمّا، وانتبهت والناس على
الباب يلتمسون الطعام. فقالت للخبّازين: افتحوا هذه الغرائر واعتجنوا، ففتحوها
فإذا أطيب طعام، فعجنوا واختبزوا. وانتبه إبراهيم صلى الله عليه وسلم فوجد ريح
الطعام، فقال: مِن أين هذا؟ فقالت امرأة إبراهيم صلى الله عليه وسلم: هذا من عند
خليلك المصرىّ. قال فقال إبراهيم: هذا من عند خليلى الله لا من عند خليلى المصرىّ.
قال: فذلك خُلّته. (الكتاب
: معانى
القرآن)
ஒருமுறை இப்றாஹீம் (அலை)
அவர்களின் ஊரில் பஞ்சம் நிலவிய போது ஊர் மக்கள் இப்றாஹீம் (அலை) அவர்களின் வீட்டை நோக்கி நம்பிக்கையுடன் வந்து விட்டார்கள் ஆனால்
அந்நேரத்தில் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வீட்டிலும் பஞ்சமே நிலவியது
எனினும் வீடு தேடி வந்த மக்களை பசியோடு திருப்பி அனுப்பக் கூடாது என்றெண்ணி தமக்கு
நெருக்கமான சில இளைஞர்களை பட்டணத்தில் வசிக்கும் தனக்கு நெருக்கமான நண்பரிடம்
அனுப்பி வைக்கிறார்கள் நான் சொன்னதாக கூறி தானிய மூட்டைகளை வாங்கி வாருங்கள் என்று
கூற அந்த இளைஞர்கள் காலியான தானியப் பைகளை தம்முடன் எடுத்துக் கொண்டு ஒட்டகங்களில்
புறப்படுகிறார்கள் விரைவாகச் சென்று அந்த நபரை சந்தித்த போது அந்த நண்பர் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பஞ்சம் தான்
எங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. வேண்டுமானால் இப்றாஹீம் அவர்களுடைய
குடும்பத்தினருக்கு மட்டும் போதுமான தானியங்களை என்னால் தர முடியும் என்று கூறி
விடுகிறார் ஏமாற்றத்துடன் அந்த இளைஞர்கள் திரும்புகிறார்கள். வரும் வழியில் ஊர் எல்லையை நெருங்கும்போது அந்த
இளைஞர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்
நாம் காலியான தானியப் பைகளுடன் ஊருக்குள் நுழைய வேண்டாம். அவ்வாறு
நுழைந்தால் காத்திருக்கும் மக்கள் மிகவும் விரக்தி அடைந்து விடுவார்கள் ஆகவே இந்த
மூட்டைகளுக்குள் மணலை நாம் நிரப்பி கொண்டு செல்வோம் அந்த மக்களுக்கு அது தானிய
மூட்டைகளைப் போல் தெரியும். நாம் வீட்டுக்குள் கொண்டு சென்றவுடன் நபி இப்றாஹீம்
அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி விடுவோம் அல்லாஹ் ஏதேனும் அற்புதத்தை
ஏற்படுத்தக் கூடும் என்றெண்ணி அவ்வாறே செய்தார்கள் மணல் மூட்டைகளுடன் வீட்டுக்குள்
நுழைந்த போது நபியவர்களின் மனைவி சாரா அம்மையார் பசி மயக்கத்தில் தூங்கிக்
கொண்டிருந்த நிலையில் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்
அவர்களிடம் மட்டும் விஷயத்தைக் கூறி விட்டு வெளியில் வந்து விட்டார்கள் நபியவர்கள் மிகவும் கவலையடைந்தார்கள் இந்த
மக்களுக்கு நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் என்ற கவலை மிகுதியால் அவர்களை
அறியாமல் தூக்கம் ஆட்கொண்டு விட்டது அவர்கள் தூங்கிய சற்று நேரத்தில் மனைவி சாரா
அம்மையார் விழித்து அந்த மூட்டைகளை பார்க்கிறார்கள் பட்டணத்து நண்பர் தான் தானியம்
கொடுத்தனுப்பியிருக்கிறார் என்றெண்ணி அதைப் பிரித்த போது அல்லாஹ்வின் அருளால் அதில்
உண்மையான தானியமே இருந்தது. உடனே சமைக்க ஆரம்பித்து விட்டார்கள் சமையல் வாசனையைக்
கண்டு நபியவர்கள் விழித்து என்ன சாரா இந்த
உணவு தானியம் எப்படி வந்தது என்று கேட்க, உங்களுடைய பட்டணத்து நண்பர் தான்
கொடுத்தனுப்பினார் உங்களுக்கே தெரியாதா என்று மனைவி கூறிய போது நபி இப்றாஹீம்
அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மகிழ்ச்சியுடன் சொன்னார்கள் இல்லை அந்த நண்பர்
கொடுத்தனுப்பவில்லை என்னுடைய உண்மை நேசனாகிய அல்லாஹ் இதை அனுப்பினான்என்றார்கள்
அப்போதே அல்லாஹ் அவர்களை தன் உற்றநேசராக ஆக்கிக்கொண்டான்.
நபி இப்றாஹீம்
அலைஹிஸ்ஸலாம் அவர்களின் விருந்தோம்பலுக்கு எடுத்துக் காட்டாக மற்றொரு சம்பவம்
قال
السدي: لما بعث الله الملائكة لقوم لوط أقبلت تمشي في صور رجال شبان حتى نزلوا على
إبراهيم فتضيفوه, فلما رآهم أجلهم {فَرَاغَ إِلَى أَهْلِهِ فَجَاءَ بِعِجْلٍ
سَمِينٍ} فذبحه ثم شواه في الرضف وأتاهم به فقعد معهم وقامت سارة تخدمهم فذلك حين
يقول ـ وامرأته قائمة وهو جالس ـ في قراءة ابن مسعود {فَقَرَّبَهُ إِلَيْهِمْ قَالَ
أَلا تَأْكُلُونَ ؟} قالوا: يا إبراهيم إنا لا نأكل طعاماً إلا بثمن, قال فإن لهذا
ثمناً, قالوا: وما ثمنه ؟ قال تذكرون اسم الله على أوله وتحمدونه على آخره فنظر
جبريل إلى ميكائيل فقال حق لهذا أن يتخذه ربه خليلاً {فَلَمَّا رَأى أَيْدِيَهُمْ
لا تَصِلُ إِلَيْهِ نَكِرَهُمْ} يقول فلما رآهم لا يأكلون فزع منهم وأوجس منهم
خيفة, فلما نظرت سارة أنه قد أكرمهم وقامت هي تخدمهم ضحكت وقالت: عجبا لأضيافنا
هؤلاء نخدمهم بأنفسنا كرامة لهم وهم لا يأكلون طعامنا.(تفسير ابن كثير
மலக்குகள்
விருந்தாளிகளைப் போன்று வருகை தந்த போது அவர்களை மலக்குகள் என்று அறியாத
நிலையிலும் அவர்களை இப்றாஹீம் அலை மிகவும் கண்ணியப்படுத்தினார்கள் அவர்களுக்காக
மாட்டை அறுத்து அதை பொறித்து முன்னால் கொண்டு வந்து வைத்து அவர்களுடன் தானும்
அமர்ந்து சாப்பிடச் சொன்ன போது அந்த மலக்குகள் இப்றாஹீம் அலை அவர்களை பரிசோதிப்பதற்காக நாங்கள் இந்த உணவை சாப்பிட வேண்டுமானால்
இதற்குரிய விலையை கொடுக்காமல் சாப்பிட மாட்டோம் என்று கூறிய போது உடனே இப்றாஹீம்
அலை அப்படியானால் இதற்கு ஒரு விலை இருக்கிறது என்று கூற, மலக்குகள் ஆச்சரியத்துடன்
என்ன விலை என்று கேட்க, உடனே இப்றாஹீம் அலை அவர்கள் இதை சாப்பிடும் முன்
பிஸ்மில்லாஹ் சொல்ல வேண்டும் சாப்பிட்டு முடித்த பின் அல்ஹம்து லில்லாஹ் சொல்ல
வேண்டும் அதுதான் இதன் விலை என்று கூற அப்போது ஜிப்ரயீல் அலை அவர்களும், மீகாயீல்
அலை அவர்களும் ஒருவரையொருவர் பார்த்துக்
கொண்ட நிலையில் ஜிப்ரயீல் அலை இவரை அல்லாஹ் தன் உற்ற நேசராக ஆக்கிக்
கொண்டது சரி தான் என்றார்கள்
விருந்தோம்பல்
எப்படி அமைய வேண்டும் என்ற விஷயத்தில் இப்றாஹீம் (அலை) பேணிய ஒழுக்கங்கள்
هَلْ أَتَاكَ حَدِيثُ
ضَيْفِ إِبْرَاهِيمَ الْمُكْرَمِينَ (24) إِذْ دَخَلُوا عَلَيْهِ فَقَالُوا
سَلَامًا قَالَ سَلَامٌ قَوْمٌ مُنْكَرُونَ (25) فَرَاغَ إِلَى أَهْلِهِ فَجَاءَ
بِعِجْلٍ سَمِينٍ (26) فَقَرَّبَهُ إِلَيْهِمْ قَالَ أَلَا تَأْكُلُونَ (27)
فَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً قَالُوا لَا تَخَفْ وَبَشَّرُوهُ بِغُلَامٍ عَلِيمٍ (28) الذاريات
فالإكرام أولاً ممن جاءه
ضيف قبل أن يجتمع به ويسلم أحدهما على الآخر أنواع من الإكرام وهي اللقاء الحسن
والخروج إليه والتهيؤ له ثم السلام من الضيف على الوجه الحسن الذي دل عليه النصب
في قوله : { سَلاَماً } إما لكونه مؤكداً بالمصدر أو لكونه مبلغاً ممن هو أعظم منه
، ثم الرد الحسن الذي دل عليه الرفع والإمساك عن الكلام لا يكون فيه وفاء إن
إبراهيم عليه السلام لم يقل سلام عليكم بل قال أمري مسالمة أو قولكم سلام وسلامكم
منكر فإن ذلك وإن كان مخلاً بالإكرام ، لكن العذر ليس من شيم الكرام ومودة أعداء
الله لا تليق بالأنبياء عليهم السلام ثم تعجيل القرى الذي دل عليه قوله تعالى : {
فَمَا لَبِثَ أَن جَاء } [ هود : 69 ] وقوله ههنا : { فَرَاغَ } فإن الروغان يدل
على السرعة والروغ الذي بمعنى النظر الخفي أو الرواح المخفي أيضاً كذلك ، ثم
الإخفاء فإن المضيف إذا أحضر شيئاً ينبغي أن يخفيه عن الضيف كي لا يمنعه من
الإحضار بنفسه حيث راغ هو ولم يقل هاتوا ، وغيبة المضيف لحظة من الضيف مستحسن
ليستريح ويأتي بدفع ما يحتاج إليه ويمنعه الحياء منه ثم اختيار الأجود بقوله : {
سَمِينٍ } ثم تقديم الطعام إليهم لا نقلهم إلى الطعام بقوله : { فَقَرَّبَهُ
إِلَيْهِمْ } لأن من قدم الطعام إلى قوم يكون كل واحد مستقراً في مقره لا يختلف
عليه المكان فإن نقلهم إلى مكان الطعام ربما يحصل هناك اختلاف جلوس فيقرب الأدنى
ويضيق على الأعلى ثم العرض لا الأمر حيث قال : { أَلا تَأْكُلُونَ } ولم يقل كلوا
ثم كون المضيف مسروراً بأكلهم غير مسرور بتركهم الطعام كما يوجد في بعض البخلاء
المتكلفين الذين يحضرون طعاماً كثيراً ويكون نظره ونظر أهل بيته في الطعام متى
يمسك الضيف يده عنه ، يدل عليه قوله تعالى : فَأَوْجَسَ مِنْهُمْ
خِيفَةً قَالُوا لَا تَخَفْ وَبَشَّرُوهُ بِغُلَامٍ عَلِيمٍ (28)
ثم أدب الضيف أنه إذا
أكل حفظ حق المؤاكلة ، يدل عليه أنه خافهم حيث لم يأكلوا ، ثم وجوب إظهار العذر
عند الإمساك يدل عليه قوله : { لاَ تَخَفْ } ثم تحسين العبارة في العذر وذلك لأن
من يكون محتمياً وأحضر لديه الطعام فهناك أمران . أحدهما : أن الطعام لا يصلح له
لكونه مضراً به . الثاني : كونه ضعيف القوة عن هضم ذلك الطعام فينبغي أن لا يقول
الضيف هذا طعام غليظ لا يصلح لي بل الحسن أن يأتي بالعبارة الأخرى ويقول : لي مانع
من أكل الطعام وفي بيتي لا آكل أيضاً شيئاً ، يدل عليه قوله : { وَبَشَّرُوهُ
بغلام } حيث فهموه أنهم ليسوا ممن يأكلون ولم يقولوا لا يصلح لنا الطعام والشراب ،
ثم أدب آخر في البشارة أن لا يخبر الإنسان بما يسره دفعة فإنه يورث مرضاً يدل عليه
أنهم جلسوا واستأنس بهم إبراهيم عليه السلام ثم قالوا نبشرك ثم ذكروا أشرف النوعين
وهو الذكر ولم يقتنعوا به حتى وصفوه بأحسن الأوصاف فإن الابن يكون دون البنت إذا
كانت البنت كاملة الخلقة حسنة الخلق والابن بالضد ، ثم إنهم تركوا سائر الأوصاف من
الحسن والجمال والقوة والسلامة واختاروا العلم إشارة إلى أن العلم رأس الأوصاف
ورئيس النعوت ، وقد ذكرنا فائدة تقديم البشارة على الإخبار عن إهلاكهم قوم لوط ،
ليعلم أن الله تعالى يهلكهم إلى خلف ، ويأتي ببدلهم خيراً منهم . (تفسير
الرازي . قال نوح بن قيس: فزعم نوح بن
أبي شداد أنهم لما دخلوا على إبراهيم، فقرب إليهم العجل، مسحه جبريل بجناحه، فقام
يدرج حتى لحق بأمه، وأم العجل في الدار. (تفسير ابن كثير
விருந்தோம்பலில் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்
கடைபிடித்த அந்த உபசரிப்பு இன்று குறைந்து கொண்டே வருகிறது. எத்தனையோ விஷயங்களில்
மேற்கத்திய கலாச்சாரம் நம்மிடம் தொற்றிக் கொண்டது போல் விருந்தோம்பல் விஷயத்திலும்
பஃபே சிஷ்டம் என்ற பெயரில் மேற்கத்திய கலாச்சாரம் நம்மிடமும் பரவி விட்டது. தட்டை ஏந்திக் கொண்டு கியூ வரிசையில்
காத்திருக்க வேண்டும். உபசரிப்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள். மறு உணவு தேவை என்றாலும் நாமே தேடிப் போய்
எடுத்துப் போட்டுக் கொள்ள வேண்டும். இது
விருந்தோம்பல் என்பதாக அறவே கூற முடியாது நபி இப்றாஹீம் அலை எத்தகைய ஒழுக்கத்தை
கடை பிடித்தார்கள் 1,வந்த
விருந்தாளிகளிடம் சாப்படுகிறீர்களா என்று கேட்காமலே விருந்து தயார் செய்தார்கள்.
2, உணவுகளில் சிறந்த உணவை தயார் செய்தார்கள்
3, விருந்தாளிகளை அந்த அறைக்கு
வாருங்கள் அங்கு தான் உணவு வைக்கப்பட்டுள்ளது என்றோ, அல்லது அங்கு போய்
கைகளை கழுவி விட்டு வாருங்கள் என்றோ சங்கடப்படுத்தாமல் அவர்கள் இருக்கும் இடத்திற்கே
கொண்டு வந்து உணவை வைத்தார்கள் 4, விருந்தாளிகளிடம் சாப்பிடுங்கள் என்று சொல்வதற்கு பதிலாக நீங்கள்
சாப்பிடக் கூடாதா என்று கணிவுடன்
கூறினார்கள் இந்த ஒழுக்கங்களில் பெரும்பகுதி பஃபே சிஷ்டத்தில்
இருப்பதில்லை.
மற்றொரு அறிவிப்பில் விருந்தாளிகளுக்காக இளம்
கன்றை நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அறுத்து விருந்து ஏற்பாடு செய்தார்கள். கடைசியில்
தான் அவர்கள் மலக்குகள் என்று தெரிய வந்தது. இறுதியாக நடந்த து என்னவென்றால்
ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் பொறித்து வைக்கப்பட்ட்ருந்த அந்த கன்றின் முன்
சப்பையின் மீது தடவிய போது அது உயிர் பெற்று எழுந்து அங்கேயே இருந்த அதன் தாயுடன்
சென்று சேர்ந்து கொண்டது. அந்த உணவு வீணாகவில்லை என்ற கருத்தும் இதில் அடங்கும்.
விருந்தாளிகளுக்காக நஃபிலான
நோன்பை விடுவது
عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ عَنْ أَبِيهِ قَالَ آخَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ سَلْمَانَ وَأَبِي الدَّرْدَاءِ فَزَارَ سَلْمَانُ
أَبَا الدَّرْدَاءِ فَرَأَى أُمَّ الدَّرْدَاءِ مُتَبَذِّلَةً فَقَالَ لَهَا مَا
شَأْنُكِ قَالَتْ أَخُوكَ أَبُو الدَّرْدَاءِ لَيْسَ لَهُ حَاجَةٌ فِي الدُّنْيَا
فَجَاءَ أَبُو الدَّرْدَاءِ فَصَنَعَ لَهُ طَعَامًا فَقَالَ كُلْ قَالَ فَإِنِّي
صَائِمٌ قَالَ مَا أَنَا بِآكِلٍ حَتَّى تَأْكُلَ قَالَ فَأَكَلَ فَلَمَّا كَانَ
اللَّيْلُ ذَهَبَ أَبُو الدَّرْدَاءِ يَقُومُ قَالَ نَمْ فَنَامَ ثُمَ ذَهَبَ
يَقُومُ فَقَالَ نَمْ فَلَمَّا كَانَ مِنْ آخِرِ اللَّيْلِ قَالَ سَلْمَانُ قُمْ
الْآنَ فَصَلَّيَا فَقَالَ لَهُ سَلْمَانُ إِنَّ لِرَبِّكَ عَلَيْكَ حَقًّا
وَلِنَفْسِكَ عَلَيْكَ حَقًّا وَلِأَهْلِكَ عَلَيْكَ حَقًّا فَأَعْطِ كُلَّ ذِي
حَقٍّ حَقَّهُ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ
ذَلِكَ لَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَصَدَقَ سَلْمَانُ
(بخاري) باب صُنْعِ الطَّعَامِ وَالتَّكَلُّفِ لِلضَّيْفِ–كتاب الأدب
ஏழைகளை விட்டு விட்டு
செல்வந்தர்களை மட்டும் அழைப்பவர்களைப் பற்றி...
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ كَانَ يَقُولُ شَرُّ
الطَّعَامِ طَعَامُ الْوَلِيمَةِ يُدْعَى لَهَا الْأَغْنِيَاءُ وَيُتْرَكُ
الْفُقَرَاءُ (بخاري) كتاب النكاح
عن أبي
هريرة رضي الله عنهقال : قال رسول الله صلى الله عليه وسلمأفشوا السلام
وأطعموا الطعام واضربوا الهام تورثوا الجنان (ترمذي)عن صهيب أن النبي صلى الله عليه وسلم قالخيركم من أطعم الطعام ورد السلام (حاكم) (واضربوا الهام)أي رؤوس الكفار أي قاتلوا اَعْداءكم في الدين
ஸலாமைப் பரப்புங்கள். பசித்தோருக்கு உணவளியுங்கள். மார்க்கத்தின் விரோதிகளோடு
போர் செய்யுங்கள் சுவனத்தை அடைவீர்கள்
விருந்தாளிகளுக்காக சக்திக்கு மீறிய, அளவுக்கு அதிகமாக
சிரமம் எடுத்துக் கொள்வதும் தேவையில்லை
عن سلمان رضي الله تعالى عنه: أن النبي صلى الله عليه وسلم قال: (لا
يتكلفنَّ أحد لضيفه ما لا يقدر عليه رواه البيهقي
عَنْ أَنَسٍ قَالَ كُنَّا عِنْدَ عُمَرَ فَقَالَ نُهِينَا
عَنِ التَّكَلُّفِ (بخاري) باب مَا يُكْرَهُ
مِنْ كَثْرَةِ السُّؤَالِ وَتَكَلُّفِ مَا لاَ يَعْنِيهِ .-كتاب الاعتصام بالكتاب
உங்களில்
எவரும் தன் விருந்தாளிகளுக்காக சக்திக்கு மீறிய சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டாம். பைஹகீ
கடன் வாங்கி விருந்து கொடுக்க வேண்டும் என்று
நினைப்பவர்களுக்கு இது ஒரு படிப்பினையான ஹதீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக