வியாழன், 21 ஜூலை, 2022

இப்றாஹீம் அலை அவர்களின் வழியில் ஆரோக்கியம் தரும் சுன்னத்துகள்

 


22-07-2022

துல்ஹஜ் 22

 

بسم الله الرحمن الرحيم 

இப்றாஹீம் அலை அவர்களின் வழியில்

ஆரோக்கியம் தரும் சுன்னத்துகள்

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 





وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ (124)البقرة

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الْفِطْرَةُ خَمْسٌ الْخِتَانُ وَالِاسْتِحْدَادُ وَقَصُّ الشَّارِبِ وَتَقْلِيمُ الْأَظْفَارِ وَنَتْفُ الْآبَاط (بخاري)باب قَصِّ الشَّارِبِ .-كتاب اللباس( الفطرة ) السنة القديمة التي اختارها الأنبياء عليهم السلام واتفقت عليها الشرائع فكأنها أمر جبلي فَطَروا عليه

நமக்கு சுன்னத்தாக ஆக்கப்பட்ட பல்வேறு விஷயங்கள் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு  ஃபர்ளாக ஆக்கப் பட்டிருந்தன. அவற்றில் பெரும்பாலான விஷயங்கள் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டவை. சுத்தம், சுகாதாரம் சம்பந்தப்பட்டவை. சுத்தம், சுகாதாரம் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகள் தான் இன்று பல்வேறு நோய்களுக்குக் காரணமாக அமைந்துள்ளன. ஆனால் அந்த சுத்தம், சுகாதாரத்தை அல்லாஹ் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு  ஃபர்ளாகவே  ஆக்கியிருந்தான். அவற்றை எவ்வித குறைவும் இன்றி நிறைவேற்றினார்கள்.       

عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَات قَالَ: ابْتَلاهُ اللَّهُ بِالطَّهَارَةِ خَمْسٌ فِي الرَّأْسِ وَخَمْسٌ فِي الْجَسَدِ:فِي الرَّأْسِ قَصُّ الشَّارِبِ وَالْمَضْمَضَةُ وَالاسْتِنْشَاقُ وَالسِّوَاكُ وَفَرْقُ الرَّأْسِ، وَفِي الْجَسَدِ: تَقْلِيمُ الأَظَافِرِ وَحَلْقُ الْعَانَةِ وَالْخِتَانُ وَنَتْفُ الإِبْطِ وَغَسْلُ أَثَرِ الْغَائِطِ وَالْبَوْلِ بِالْمَاءِ(تفسير ابن كثير)

நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஃபர்ளாக ஆக்கப்பட்டவைகளில் ஐந்து தலையுடன் சம்பந்தப்பட்டவை. மீதி ஐந்து உடலோடு சம்பந்தப்பட்டவை. 

தலையுடன் சம்பந்தப்பட்டவை ஐந்து 1. மீசையைக் கத்தரிப்பது. 2. வாய் கொப்பளிப்பது 3. நாசிக்கு நீர் செலுத்துவது 4. மிஸ்வாக் 5. நேர் வகிடு எடுத்து தலை வாருதல். அடுத்து உடலோடு சம்பந்தப்பட்டவை ஐந்து 1.நகம் வெட்டுவது. 2.மறைவிட ரோமத்தைக் களைவது 3. கத்னா 4. அக்குள் முடிகளைப் பிடுங்குவது 5. தண்ணீர் மூலம் இஸ்தின்ஜா

 

 மீசையைக் கத்தரிப்பது சுன்னத்.

நீளமாக மீசை வளர்ப்பது ஆரோக்கியத்தை பாதிக்கும். வாயில் செலுத்தும் உணவுடன் மீசையில் ஒட்டியுள்ள கிருமிகளும் உள்ளே செல்ல வாய்ப்பு உண்டு.

   عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَالِفُوا الْمُشْرِكِينَ وَفِّرُوا اللِّحَى وَأَحْفُوا الشَّوَارِبَ وَكَانَ ابْنُ عُمَرَ إِذَا حَجَّ أَوْ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ فَمَا فَضَلَ أَخَذَهُ (بخاري

இணை வைப்பவர்களுக்கு மாற்றம் செய்யுங்கள். தாடி வளர்த்துங்கள். மீசையைக் கத்தரியுங்கள். என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُصُّ أَوْ يَأْخُذُ مِنْ شَارِبِهِ وَكَانَ إِبْرَاهِيمُ خَلِيلُ الرَّحْمَنِ يَفْعَلُهُ (ترمذي

عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّهُ قَالَ كَانَ إِبْرَاهِيمُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَّلَ النَّاسِ ضَيَّفَ الضَّيْفَ وَأَوَّلَ النَّاسِ اخْتَتَنَ وَأَوَّلَ النَّاسِ قَصَّ الشَّارِبَ وَأَوَّلَ النَّاسِ رَأَى الشَّيْبَ فَقَالَ يَا رَبِّ مَا هَذَا فَقَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى وَقَارٌ يَا إِبْرَاهِيمُ فَقَالَ يَا رَبِّ زِدْنِي وَقَارًا (مؤطا مالك

நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீசையை அவ்வப்போது கத்தரிப்பவர்களாக இருந்தார்கள்.      

عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَمْ يَأْخُذْ شَارِبَهُ فَلَيْسَ مِنَّا (نسائ

யார் மீசையைக் கத்தரிக்கவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல.

عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ : أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- رَأَى رَجُلاً طَوِيلَ الشَّارِبِ فَدَعَا بِسِوَاكٍ وَشَفْرَةٍ ، فَوَضَعَ السِّوَاكَ تَحْتَ الشَّارِبِ وَقَصَّ عَلَيْهِ. (سنن الكبري

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு மனிதரைக் கண்டாரகள். உடனே ஒரு குச்சியையும் கத்தரிக்கோலையும் கொண்டு வரச் சொல்லி அவரையும் அமர வைத்து அவரது மீசையில் அந்தக் குச்சியை அளவாக வைத்து அதைத் தாண்டிய பகுதியைக் கத்தரித்து அனுப்பினார்கள்.

2. வாய் கொப்பளிப்பதும் மிஸ்வாக் செய்வதும்  நபி இப்றாஹீம் அலை அவர்களுக்கு ஃபர்ளாக ஆக்கப்பட்டிருந்தது

عَنْ أَبِي أَيُّوبَ قَاَل قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعٌ مِنْ سُنَنِ الْمُرْسَلِينَ الْحَيَاءُ وَالتَّعَطُّرُ وَالسِّوَاكُ وَالنِّكَاحُ (ترمذي) - كِتَاب النِّكَاحِ

عَنْ أَبِى هُرَيْرَةَ  رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِى لأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ مَعَ كُلِّ صَلاَةٍ (بخاري) وَقَالَتْ عَائِشَةُ رضي الله عنها عَنِ النَّبِىِّ  صلى الله عليه وسلم (السواك) مَطْهَرَةٌ لِلْفَمِ مَرْضَاةٌ لِلرَّبِّ (بخاري) باب السِّوَاكِ– كتاب الجمعة

தொழுகை அல்லாத நேரங்களிலும் நபி ஸல் அவர்கள் மிஸ்வாக் செய்வார்கள்

عَنْ حُذَيْفَةَ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ مِنْ اللَّيْلِ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ(بخاري) باب السِّوَاكِ– كتاب الجمعةعَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ عَنْ أَبِيهِ قَالَ قُلْتُ لِعَائِشَةَ بِأَىِّ شَىْءٍ كَانَ يَبْدَأُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلمإِذَا دَخَلَ بَيْتَهُ قَالَتْ "بِالسِّوَاكِ" (مسلم) بَاب السِّوَاكِ- كِتَاب الطَّهَارَةِ           சகராத் நிலையிலும் மிஸ்வாக் செய்வதை விரும்பிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

عن عَائِشَةَ  رضي الله عنها كَانَتْ تَقُولُ إِنَّ مِنْ نِعَمِ اللَّهِ عَلَيَّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُوُفِّيَ فِي بَيْتِي وَفِي يَوْمِي وَبَيْنَ سَحْرِي وَنَحْرِي13 وَأَنَّ اللَّهَ جَمَعَ بَيْنَ رِيقِي وَرِيقِهِ عِنْدَ مَوْتِهِ دَخَلَ عَلَيَّ عَبْدُ الرَّحْمَنِ وَبِيَدِهِ السِّوَاكُ وَأَنَا مُسْنِدَةٌ14 رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَيْتُهُ يَنْظُرُ إِلَيْهِ وَعَرَفْتُ أَنَّهُ يُحِبُّ السِّوَاكَ فَقُلْتُ آخُذُهُ لَكَ فَأَشَارَ بِرَأْسِهِ أَنْ نَعَمْ فَتَنَاوَلْتُهُ فَاشْتَدَّ عَلَيْهِ وَقُلْتُ أُلَيِّنُهُ لَكَ15 فَأَشَارَ بِرَأْسِهِ أَنْ نَعَمْ فَلَيَّنْتُهُ فَأَمَرَّهُ وَبَيْنَ يَدَيْهِ رَكْوَةٌ أَوْ عُلْبَةٌ يَشُكُّ عُمَرُ فِيهَا مَاءٌ فَجَعَلَ يُدْخِلُ يَدَيْهِ فِي الْمَاءِ فَيَمْسَحُ بِهِمَا وَجْهَهُ يَقُولُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ إِنَّ لِلْمَوْتِ سَكَرَاتٍ ثُمَّ نَصَبَ يَدَهُ فَجَعَلَ يَقُولُ فِي الرَّفِيقِ الْأَعْلَى حَتَّى قُبِضَ وَمَالَتْ يَدُهُ (بخاري) باب مَرَضِ النَّبِىِّ  صلى الله عليه وسلم وَوَفَاتِهِ-كتاب المغازى

அல்லாஹ் எனக்குத் தந்த அருட்கொடைகளில் ஒன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனது  வீட்டில் என்னுடன் தங்கும் நாளில் என்னுடைய கழுத்துக்கும் நெஞ்சுக்குமிடையே தலை சாய்த்த நிலையில் வஃபாத்தானார்கள். அல்லாஹ் அவர்களின் கடைசி நேரத்தில் எனது உமிழ் நீரையும் அவர்களின் உமிழ் நீரையும் ஒன்று சேர்த்தான். அதாவது என் சகோதரர் அப்துர் ரஹ்மான் ரழி என்னிடம் வருகை தந்தார். அவரிடம் ஒரு மிஸ்வாக் குச்சி இருந்தது. நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை என் மடியில் சாய்த்து வைத்திருந்த நிலையில் அவர்கள் அந்த மிஸ்வாக் குச்சியையே பார்ப்பதை நான் கண்டு அவர்கள் மிஸ்வாக் செய்ய விரும்புகிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். அதை உங்களுக்கு வாங்கித் தரட்டுமா என்று கேட்ட போது ஆம் என்று தலையசைத்தாரகள். அதை நான் வாங்கித் தந்தேன். ஆனால் புதிய மிஸ்வாக் என்பதால் அவர்களுக்கு அது சிரமமாக இருந்தது. அதை உங்களுக்கு மிருதுவாக்கித் தரட்டுமா என்று கேட்ட போது ஆம் என்று தலையசைத்தாரகள். அதை பற்களால் கடித்து அவர்களுக்கு மிருதுவாக்கித் தந்தேன். அதை வாங்கி பற்களில் தேய்த்தார்கள். அவர்களின் முன்னிலையில் ஒரு குவளை நீர் இருந்த து. அவர்களின் இரு கைகளையும் அதில் நுழைத்து பின்பு அந்தக் கைகளால் முகத்தைத் தடவினார்கள். பிறகு கலிமா சொன்னவர்களாக நிச்சயமாக ஒவ்வொரு மவ்த்துக்கும் சகராத் உண்டு என்று கூறி, தன் கைகளை மேலே தூக்கி உயர்த்தி உயர்ந்த சுவனத்திலே...என்ற வார்த்தையைக் கூறிய நிலையில் அவர்களின் உயிர் பிரிந்தது.அவர்களின் கைகள் தானாக கீழே சரிந்தது.  

ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதற்கு பற்களின் சுத்தம் மிக அவசியம்

பற்களுடன் மற்ற அனைத்து உறுப்புகளுடனும் தொடர்பு உண்டு.  சிறந்த ஒரு முஸ்லிம் மருத்துவரிடம் ஒரு நோயாளி தனது இருதயத்தில் உள்ள நோய் பற்றி முறையிட்ட போது அவரை தொடர்ந்து மிஸ்வாக் குச்சி மூலம் மிஸ்வாக் செய்யச் சொல்லி அறிவுரை வழங்கினார். சில தினங்களில் அந்த நோய் சரியாகி விட்டது. வேறு மருத்தும் தேவைப் படவில்லை. அதற்கான விளக்கத்தை மருத்துவரிடம் கேட்ட போது மருத்துவர் கூறினார். உங்களுடைய பற்களில் உள்ள ஈறுகளில் ஒரு பிரச்சினை இருந்தது. அதன் பாதிப்பு இருதயத்திலும் ஏற்பட்டது.மிஸ்வாக் செய்ததால் அந்த நோய் சரியாகி விட்டது.

-பாக்கியாத்தின் தற்போதைய முதல்வர் ஹழ்ரத் பேசியது

பொதுவாகவே ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதற்கு சுத்தம் மிக அவசியம்

إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ (222)البقرة) عَنْ جَابِرِ رض قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِفْتَاحُ الْجَنَّةِ الصَّلاَةُ  وَمِفْتَاحُ الصَّلاَةِ الطُّهُورُ(ترمذي) عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلي الله عليه وسلم تَنَظَّفُوا بِكُلِّ ما اسْتَطَعْتُمْ فإنَّ الله تَعالى بَنَى الإِسْلاَمَ على النَّظافَةِ ولَنْ يَدْخُلَ الجَنَّةَ إلاَّ كُلُّ نَظِيفٍ (كنز العمال)

அழுக்கான சட்டை அணிந்து வந்தவரை நபி ஸல் கண்டித்ததும், நீளமான மீசை வைத்திருந்தவரை எச்சரித்ததும், தாடியை ஒழுங்கு படுத்தக் கூறியதும், நீளமாக நகம் வளர்த்தக் கூடாது என அறிவுறுத்தியதும் சுத்தத்தை அடிப்படையாகக் கொண்டது

சுத்தமின்மை பிறரையும் பாதிக்கும்

عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ صَلَّى صَلَاةَ الصُّبْحِ فَقَرَأَ الرُّومَ فَالْتَبَسَ عَلَيْهِ فَلَمَّا صَلَّى قَالَ مَا بَالُ أَقْوَامٍ يُصَلُّونَ مَعَنَا لَا يُحْسِنُونَ الطُّهُورَ فَإِنَّمَا يَلْبِسُ عَلَيْنَا الْقُرْآنَ أُولَئِكَ (نسائ) باب الْقِرَاءَةُ فِي الصُّبْحِ بِالرُّومِ-كِتَاب الِافْتِتَاحِ

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருமுறை சுப்ஹு தொழுகையில் ரூம் சூராவை ஓதிய போது சூரா தடுமாறியது. தொழுது முடித்தவுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போது சரியாக உளூச் செய்யாத நிலையில் நம்மோடு தொழுத சில நபர்களால் தான் இன்று எனக்கு சூரா தடுமாறியது என்றார்கள்.

வெங்காயம் பூண்டு ஆகியவற்றை வேக வைக்காமல் சாப்பிட்டு விட்டு அப்படியே தொழ வர வேண்டாம் என்ற அறிவுரை

عَنْ جَابِرٍ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْلِ الْبَصَلِ وَالْكُرَّاثِ فَغَلَبَتْنَا الْحَاجَةُ فَأَكَلْنَا مِنْهَا فَقَالَ مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ الْمُنْتِنَةِ فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا فَإِنَّ الْمَلَائِكَةَ تَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ الْإِنْسُ  (مسلم) وَقَالَ « إِنْ كُنْتُمْ لاَ بُدَّ آكِلِيهِمَا فَأَمِيتُوهُمَا طَبْخًا (ابوداود

நோய் பரவாமல் இருக்க வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை

عن أنس رضي الله عنه قَال قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غسل الإناء وطهارة الفناء2 يورثان الغناء (كنز العمال)

عن عَامِر بْن سَعْد عَنْ أَبِيهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال إِنَّ اللَّهَ طَيِّبٌ يُحِبُّ الطَّيِّبَ نَظِيفٌ يُحِبُّ النَّظَافَةَ كَرِيمٌ يُحِبُّ الْكَرَمَ جَوَادٌ يُحِبُّ الْجُودَ فَنَظِّفُوا (أُرَاهُ قَالَ) أَفْنِيَتَكُمْ3 وَلَا تَشَبَّهُوا بِالْيَهُودِ (ترمذي) بَاب مَا جَاءَ فِي النَّظَافَةِ- كِتَاب الْأَدَبِ

நுழைவாயில் மலக்குகள் நுழையும் வழி என்பதால் அதன் சுத்தம் கூறப்பட்டுள்ளது. மற்றபடி வீடு முழுவதையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே கருத்தாகும். ஆனால் இன்று மாற்று மதத்தவர்கள் அதிகாலை எழுந்து வீட்டையும், வீட்டு வாசலையும் சுத்தப்படுத்தும் அளவுக்கு முஸ்லிம்கள் பலர் செய்வதில்லை. இதனால் முஸ்லிம் என்றால் வீடு தர  தயங்குகின்றனர். நமக்கு சொல்லப்பட்டதை நாம் விட்டு விட, மற்றவர்கள் அதை கடைபிடித்து முன்னேறி வருகின்றனர்.

நாம் பயன்படுத்தும் பொருட்களை சுத்தமாக வைத்துக் கொள்வது

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا رَفَعَهُ قَالَ خَمِّرُوا الْآنِيَةَ4 وَأَوْكُوا الْأَسْقِيَةَ5 وَأَجِيفُوا الْأَبْوَابَ6 وَاكْفِتُوا صِبْيَانَكُمْ عِنْدَ الْعِشَاءِ فَإِنَّ لِلْجِنِّ انْتِشَارًا وَخَطْفَةً وَأَطْفِئُوا الْمَصَابِيحَ عِنْدَ الرُّقَادِ فَإِنَّ الْفُوَيْسِقَةَ7 رُبَّمَا اجْتَرَّتْ الْفَتِيلَةَ8 فَأَحْرَقَتْ أَهْلَ الْبَيْتِ  (بخاري)كتاب  بدء الخلق

குறிப்பு -மேற்படி ஹதீஸில் பாத்திரங்களை மூடி வையுங்கள் என்ற கூறியதன் நோக்கங்களில் ஒன்று திறந்து கிடக்கும் பாத்திரத்தில் கிருமிகள் விழுந்தால் அந்தக் கிருமிகளால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதாகும். திறந்தே கிடக்கும் திண்பண்டங்களை சாப்பிடக் கூடாது என்பதும் இதில் அடங்கும்                                                                           

 

3. நாசிக்கு நீர் செலுத்துவதும் நபி இப்றாஹீம் அலை அவர்களுக்கு கடமையாக்கப் பட்டிருந்தது

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا اسْتَيْقَظَ أُرَاهُ أَحَدُكُمْ مِنْ مَنَامِهِ فَتَوَضَّأَ فَلْيَسْتَنْثِرْ ثَلَاثًا فَإِنَّ الشَّيْطَانَ يَبِيتُ عَلَى خَيْشُومِهِ (بخاري) باب صِفَةِ إِبْلِيسَ وَجُنُودِهِ– كتاب بدء الخلق -(خيشومه ) هو الأنف وقيل أقصى الأنف- عَنْ عَلِيٍّرضي الله عنهأَنَّهُ دَعَا بِوَضُوءٍ فَتَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَنَثَرَ بِيَدِهِ الْيُسْرَى فَفَعَلَ هَذَا ثَلَاثًا ثُمَّ قَالَ هَذَا طُهُورُ نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (نسائ) بِأَيِّ الْيَدَيْنِ يَسْتَنْثِرُ-كِتَاب الطَّهَارَةِ

மறைவிட ரோமங்களை சிரைப்பதையும், அக்குள் முடிகளை பிடுங்குவதையும்அல்லாஹ் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஃபர்ளாக்கினான். மர்மஸ்தான ரோமங்களை சிறைப்பது என்றும், அக்குள் முடிகளை பிடுங்குவது என்றும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. இது சிறப்பு என்ற அடிப்படையில் கூறப்பட்டதாகும்.  அக்குள் முடிகள் அடிக்கடி வளரும் என்பதால் பிடுங்குவது சிறப்பு. அதனால்  வலி ஏற்படும் என்றிருந்தால் சிரைப்பதும் கூடும்

يُستحب حَلْقُ جَمِيع مَا عَلَى الْقُبُل وَالدُّبُر وَحَوْلهمَا قَالَ وَذَكَرَ الْحَلْق لِكَوْنِهِ هُوَ الْأَغْلَب وَإِلَّا فَيَجُوز الْإِزَالَة بِالنَّوْرَةِ4 وَالنَّتْف وَغَيْرهمَاوَقَالَ النَّوَوِيّ: السُّنَّة فِي إِزَالَة شَعْر الْعَانَة الْحَلْق بِالْمُوسَى3 فِي حَقّ الرَّجُل وَالْمَرْأَة مَعًا- وَالْمُسْتَحَبّ الْبُدَاءَة فِيهِ بِالْيُمْنَى-عَنْ جَابِرِ رضي الله عنهقَالَكُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزَاةٍ فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ ذَهَبْنَا لِنَدْخُلَ فَقَالَ أَمْهِلُوا حَتَّى نَدْخُلَ لَيْلًا أَيْ عِشَاءً كَيْ تَمْتَشِطَ الشَّعِثَةُ5وَتَسْتَحِدَّ الْمُغِيبَةُ (مسلم)- بَاب كَرَاهَةِ الطُّرُوقِ- كِتَاب الْإِمَارَةِ-النورة : أخلاط من أملاح تستعمل لإزالة الشعر

عَنْ يُونُس بْن عَبْد الْأَعْلَى قَالَ دَخَلْت عَلَى الشَّافِعِيّ وَرَجُل يَحْلِق إِبْطه فَقَالَ :إِنِّي عَلِمْت أَنَّ السُّنَّة النَّتْف وَلَكِنْ لَا أَقْوَى عَلَى الْوَجَع-قَالَ الْغَزَالِيّ : هُوَ فِي الِابْتِدَاء مُوجِع وَلَكِنْ يَسْهُل عَلَى مَنْ اِعْتَادَهُ قَالَ: وَالْحَلْق كَافٍ لِأَنَّ الْمَقْصُود النَّظَافَة رواه اِبْن أَبِي حَاتِم فِي "مَنَاقِب الشَّافِعِيّ

நகம் வெட்டுவதையும் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் கடமையாக்கினான்

நீளமான நகங்களுக்கிடையில் அழுக்குகள் தங்கும். அவற்றை சரிவர சுத்தம் செய்யவும் முடியாது. ஆகவே நீளமான நகம் உள்ளவரின் உளூ, கடமையான குளிப்பு ஆகியவை நிறைவேறாமல் போக வாய்ப்பு உண்டு

وَالْمُرَاد إِزَالَة مَا يَزِيد عَلَى مَا يُلَابِس رَأْس الْإِصْبَع مِنْ الظُّفْر لِأَنَّ الْوَسَخ يَجْتَمِع فِيهِ فَيُسْتَقْذَر وَقَدْ يَنْتَهِي إِلَى حَدّ يَمْنَع مِنْ وُصُول الْمَاء إِلَى مَا يَجِب غَسْله فِي الطَّهَارَة وَلَمْ يَثْبُت فِي تَرْتِيب الْأَصَابِع عِنْد الْقَصّ شَيْء مِنْ الْأَحَادِيث لَكِنْ جَزَمَ النَّوَوِيّ فِي"شَرْح مُسْلِم" بِأَنَّهُ يُسْتَحَبّ الْبُدَاءَة بِمُسَبِّحَةِ الْيُمْنَى6 ثُمَّ بِالْوُسْطَى7 ثُمَّ الْبِنْصِر8 ثُمَّ الْخِنْصَر9 ثُمَّ الْإِبْهَام10 ، وَفِي الْيُسْرَى بِالْبَدَاعَةِ بِخِنْصَرِهَا ثُمَّ بِالْبِنْصِرِ إِلَى الْإِبْهَام وَيَبْدَأ فِي الرِّجْلَيْنِ بِخِنْصَرِ الْيُمْنَى إِلَى الْإِبْهَام وَفِي الْيُسْرَى بِإِبْهَامِهَا إِلَى الْخِنْصَر، وَلَمْ يَذْكُر لِلِاسْتِحْبَابِ مُسْتَنَدًاوَتَوْجِيه الْبُدَاءَة بِالْيُمْنَى لِحَدِيثِ عَائِشَة الَّذِي مَرَّ فِي الطَّهَارَة " كَانَ النَّبِىُّ  صلى الله عليه وسلم  يُحِبُّ التَّيَمُّنَ مَا اسْتَطَاعَ فِى شَأْنِهِ كُلِّهِ فِى طُهُورِهِ وَتَرَجُّلِهِ وَتَنَعُّلِهِ (بخاري) باب يَبْدَأُ بِالنَّعْلِ الْيُمْنَى – كتاب اللباس)وَالْبُدَاءَة بِالْمُسَبِّحَةِ مِنْهَا لِكَوْنِهَا أَشْرَف الْأَصَابِع لِأَنَّهَا آلَة التَّشَهُّد ، وَأَمَّا اِتِّبَاعهَا بِالْوُسْطَى فَلِأَنَّ غَالِب مَنْ يُقَلِّم أَظْفَاره يُقَلِّمهَا قَبْل ظَهْر الْكَفّ فَتَكُون الْوُسْطَى جِهَة يَمِينه فَيَسْتَمِرّ إِلَى أَنْ يَخْتِم بِالْخِنْصَرِ ثُمَّ يُكْمِل الْيَد بِقَصِّ الْإِبْهَام وَأَمَّا الْيُسْرَى فَإِذَا بَدَأَ بِالْخِنْصَرِ لَزِمَ أَنْ يَسْتَمِرّ عَلَى جِهَة الْيَمِين إِلَى الْإِبْهَام (فتح الباري)لِلِاسْتِحْبَابِ مُسْتَنَدًاமுஸ்தஹப் என்பதற்கு ஆதாரம் கூறவில்லை

நீளமான நகங்கள் நரகவாதிகளின் அடையாளங்களில் ஒன்றாக கூறப்பட்டுள்ளது

عَنْ أَنَسِ  رضي الله عنه قَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا عُرِجَ بِي مَرَرْتُ بِقَوْمٍ لَهُمْ أَظْفَارٌ مِنْ نُحَاسٍ11 يَخْمُشُونَ وُجُوهَهُمْ وَصُدُورَهُمْ فَقُلْتُ مَنْ هَؤُلَاءِ يَا جِبْرِيلُ قَالَ هَؤُلَاءِ الَّذِينَ يَأْكُلُونَ لُحُومَ النَّاسِ وَيَقَعُونَ فِي أَعْرَاضِهِمْ12 (ابوداود) بَاب فِي الْغِيبَةِ -كِتَاب الْأَدَبِ

நகம், மீசை அக்குள் முடி, மர்மஸ்தான முடி ஆகியவற்றை நாற்பது நாட்களுக்கு மேல் வெட்டாமல் இருப்பது கூடாது. இது அதிக பட்ச அளவாகும். குறைந்த பட்சம் நகம், மீசை ஆகியவற்றை ஒவ்வொரு ஜும்ஆ நாளிலும் அக்குள் முடிகளை நாற்பது நாட்களுக்கு ஒருமுறையும்,  மர்மஸ்தான முடிகளை இருபது நாட்களுக்கு ஒருமுறையும் களைவது சிறப்பு

عَنْ أَنَسِ قَالَوُقِّتَ لَنَا فِي قَصِّ الشَّارِبِ وَتَقْلِيمِ الْأَظْفَارِ وَنَتْفِ الْإِبِطِ وَحَلْقِ الْعَانَةِ أَنْ لَا نَتْرُكَ أَكْثَرَ مِنْ أَرْبَعِينَ لَيْلَةً (مسلم) بَاب خِصَالِ الْفِطْرَةِ-كِتَاب الطَّهَارَةِ-وفي سنن ابي داود "وَقَّتَ لَنَا رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ...قَالَ الْقُرْطُبِيّ فِي "الْمُفْهِم" ذِكْر الْأَرْبَعِينَ تَحْدِيد لِأَكْثَر الْمُدَّة

عن ابن عمر رضي الله  أن النبي كان يأخذ أظفاره ويحفي شاربه في كل جمعة ويحلق العانة عشرين يوما وينتف الإبط في كل أربعين يوما (مرقاة)

நம் உடலில் இருந்து நீக்கப்பட்ட நகம், முடிகளை குப்பையில் போடுவதை விட முடிந்தால் அவற்றை புதைப்பது சிறப்பு

قال الحافظ ابن حجر: قلتُ لأحمد : يأخذ من شعره وأظفاره أيدفنه أم يلقيه ؟ قال : يدفنه . قلت : بَلَغَكَ فيه شيء ؟ قال : كان ابن عمر يدفنه " وقد استحب أصحابنا دفنها لكونها أجزاء من الآدمي والله أعلم (فتح الباري)

சுன்னத் எனும் கத்னாவும் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கடமையாக்கப்பட்டதாகும்

عَنْ أَبِى هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ  صلى الله عليه وسلم  قَالَ  اخْتَتَنَ إِبْرَاهِيمُ عليه السلام بَعْدَ ثَمَانِينَ سَنَةً  وَاخْتَتَنَ بِالْقَدُومِ (بخاري) باب الْخِتَانِ بَعْدَ الْكِبَرِ وَنَتْفِ الإِبْطِ  -كتاب اللباس- عَنْ عُثَيْمِ بْنِ كُلَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِأَنَّهُ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ قَدْ أَسْلَمْتُ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلْقِ عَنْكَ شَعْرَ الْكُفْرِ يَقُولُ احْلِقْ -قَالَ الراوي- وأَخْبَرَنِي آخَرُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِآخَرَ مَعَهُ أَلْقِ عَنْكَ شَعْرَ (شِعَار) الْكُفْرِ وَاخْتَتِنْ (ابوداود) بَاب فِي الرَّجُلِ يُسْلِمُ فَيُؤْمَرُ بِالْغُسْلِ- كِتَاب الطَّهَارَةِوَعَنْ أَحْمَد وَبَعْض الْمَالِكِيَّة : يَجِب وَعَنْ أَبِي حَنِيفَة وَاجِب وَلَيْسَ بِفَرْضٍ . وَعَنْهُ سُنَّة يَأْثَم بِتَرْكِهِ .وَذَهَبَ أَكْثَر الْعُلَمَاء وَبَعْض الشَّافِعِيَّة إِلَى أَنَّهُ لَيْسَ بِوَاجِبٍ  (فتح الباري)

கத்னாவை சிறு வயதிலேயே செய்வது சிறந்தது

وَاخْتُلِفَ فِي الْوَقْت الَّذِي يُشْرَع فِيهِ الْخِتَان قَالَ الّمَاوَرْدِيّ: لَهُ وَقْتَانِ وَقْت وُجُوب وَوَقْت اِسْتِحْبَاب فَوَقْت الْوُجُوب الْبُلُوغ وَوَقْت الِاسْتِحْبَاب قَبْله ، وَالِاخْتِيَار فِي الْيَوْم السَّابِع مِنْ بَعْد الْوِلَادَة وَقِيلَ مِنْ يَوْم الْوِلَادَة فَإِنْ أَخَّرَ فَفِي الْأَرْبَعِينَ يَوْمًا ، فَإِنْ أَخَّرَ فَفِي السَّنَة السَّابِعَة ، فَإِنْ بَلَغَ وَكَانَ نِضْوًا نَحِيفًا يُعْلَم مِنْ حَاله أَنَّهُ إِذَا اُخْتُتِنَ تَلِفَ سَقَطَ الْوُجُوب . وَيُسْتَحَبّ أَنْ لَا يُؤَخَّر عَنْ وَقْت الِاسْتِحْبَاب إِلَّا لِعُذْرٍ وَقَالَ أَبُو الْفَرَج السَّرَخْسِيّ: فِي خِتَان الصَّبِيّ وَهُوَ صَغِير مَصْلَحَة مِنْ جِهَة أَنَّ الْجِلْد بَعْد التَّمْيِيز يَغْلُظ وَيَخْشُن فَمِنْ ثَمَّ جَوَّزَ الْأَئِمَّة الْخِتَان قَبْل ذَلِكَ

وَقَالَ مَالِك : يَحْسُن إِذَا أَثْغَرَ أَيْ أَلْقَى ثَغْره وَهُوَ مُقَدَّم أَسْنَانه ، وَذَلِكَ يَكُون فِي السَّبْع سِنِينَ وَمَا حَوْلهَا ، وَعَنْ اللَّيْث يُسْتَحَبّ مَا بَيْن سَبْع سِنِينَ إِلَى عَشْر سِنِينَ ،قَالَ الْوَلِيد فَسَأَلْت مَالِكًا عَنْهُ فَقَالَ : لَا أَدْرِي ، وَلَكِنَّ الْخِتَان طُهْرَة فَكُلَّمَا قَدَّمَهَا كَانَ أَحَبّ إِلَيَّ . وَأَخْرَجَ الْبَيْهَقِيُّ حَدِيث جَابِر: أَنَّ إِبْرَاهِيم عَلَيْهِ السَّلَام خَتَنَ إِسْحَاق وَهُوَ اِبْن سَبْعَة أَيَّام .(فتح الباري)

பொருள்- 5,வெளியூர் சென்ற கணவனை பிரிந்திருந்த மனைவி தன்னை அலங்கரித்து, தன் மறைவிட ரோமங்களை நீக்குவதற்காக6,கலிமா விரல் 7,நடுவிரல் 8,மோதிர விரல் 9,சுண்டு விரல் 10,பெருவிரல் 11,செம்பு 12,புறம் பேசுபவர்கள் 13,என் கழுத்துக்கும், நெஞ்சுக்குமிடையில் 14,நெஞ்சில் சாய்த்து 15,மிருதுவாக்கித் தரட்டுமா ?

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...