வியாழன், 18 ஆகஸ்ட், 2022

இறையச்சம் மஸ்ஜிதுக்குள் மட்டுமா?

 


19-08-2022

MUHARRAM- 20

 

بسم الله الرحمن الرحيم

இறையச்சம் மஸ்ஜிதுக்குள் மட்டுமா

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 





الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ (191)ال عمران  وقال النبي صلى الله عليه وسلم : « من أطاع الله عزَّ وجلَّ فقد ذكره ومن عصاه فقد نسيه تفسير التستري

இன்றைய காலத்தில் பல முஸ்லிம்கள் தொழுகையை வெறும் சடங்காக மட்டும் உள்ளச்சமின்றி நிறைவேற்றுகின்றனர். இதனால் தொழுகை மட்டும் தான் அவர்களிடம் இருக்கிறதே தவிர பள்ளியை விட்டு வெளியேறியவுடன்  பொய், பொறாமை, வஞ்சகம், ஆளுக்குத் தகுந்த மாதிரி நடித்தல், மற்றவர்களைத் தாழ்வாக கருதுதல், கொடுக்கல் வாங்கலில் மோசடிபோன்ற பல்வேறு தவறுகள் தொழுபவர்களிடமும் குடி கொண்டுள்ளது. தொழுதால் எல்லாம் மன்னிக்கப் பட்டு விடும் என எண்ணுகின்றனர். சிறுபாவங்கள் மட்டும்தான் மன்னிக்கப்படுமே மேற்படி பெரும்பாவங்கள் மன்னிக்கப்படாது

 தொழுதால் மட்டும் சுவனம் கிடைத்து விடுமா ? நெற்றியில் சஜ்தா அடையாளம் உள்ள சிலரும் நரகத்தில் இருப்பர்

عن ابي هريرة رض عن النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (في حديثه الطويل) إِذَا أَرَادَ اللَّهُ رَحْمَةَ مَنْ أَرَادَ مِنْ أَهْلِ النَّارِ أَمَرَ اللَّهُ الْمَلَائِكَةَ أَنْ يُخْرِجُوا مَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ فَيُخْرِجُونَهُمْ وَيَعْرِفُونَهُمْ بِآثَارِ السُّجُودِ  وَحَرَّمَ اللَّهُ عَلَى النَّارِ أَنْ تَأْكُلَ أَثَرَ السُّجُودِ فَيَخْرُجُونَ مِنْ النَّارِ فَكُلُّ ابْنِ آدَمَ تَأْكُلُهُ النَّارُ إِلَّا أَثَرَ السُّجُودِ فَيَخْرُجُونَ مِنْ النَّارِ قَدْ امْتَحَشُوا6 فَيُصَبُّ عَلَيْهِمْ مَاءُ الْحَيَاةِ فَيَنْبُتُونَ كَمَا تَنْبُتُ الْحِبَّةُ فِي حَمِيلِ السَّيْلِ (بخاري)بَاب فَضْلِ السُّجُود

மறுமையில் நபிகளாரின் ஷஃபாஅத்தின் மூலம் பலர் சுவனம் சென்றாலும் அல்லாஹ் நாடிய சிலர் நரகத்தில் இருப்பர். அவர்களில் தொழுகையாளிகளும் அடங்குவர். அவர்களையும் வெளியேற்றும்படி அல்லாஹ் உத்தரவு பிறப்பித்த பின் மலக்குகள் அந்த மனிதர்களை வெளியேற்றுவார்கள். அவர்களின் நெற்றியில் உள்ள சஜ்தா அடையாளத்தை வைத்து அடையாளம் கண்டு கொள்வார்கள். அல்லாஹ் அந்த அடையாளத்தை மட்டும் நரக நெருப்புக்கு ஹராமாக்கியிருப்பான். மற்ற பகுதிகளையெல்லாம் நரக நெருப்பு தீண்டி கரிக்கட்டைகளைப் போல் இருக்கும் அவர்களை வேளியேற்றி அவர்களின் மீது சுவனத்தின் ஜீவநதி ஊற்றப்படும்.உடனே அவர்கள் சேற்று மண்ணில் விளையும் செடி போன்று புதிய மனிதர்களாக மாறுவார்கள். அவர்களை சுவனத்தில் நுழைக்கப்படும்

 

 

நம்முடைய அன்றாட வாழ்வில் ஒவ்வொரு செயலிலும் இறையச்சம் நீடிக்க வேண்டும்

ஹுஸைன் அஹ்மது மதனீரஹ் கூறினார்கள்.இஸ்லாம் பாதுகாக்கப்பட வேண்டும்என அதிகமாக உரத்து முழங்குகிறார்கள். ஆனால் தம் அன்றாட வாழ்வில் இஸ்லாத்தை விட்டு விலகி இருக்கிறார்கள். இஸ்லாம் ஒன்றும் சிலை கிடையாது அதனைப் பாதுகாப்பதற்கு.... இஸ்லாத்தைப் பாதுகாக்க படை பட்டாளம் தேவையில்லை. உங்களின் அன்றாட வாழ்வில் இஸ்லாத்தைப் பின்பற்றினாலே போதுமானது. நீங்களும் பாதுகாக்கப் படுவீர்கள் இஸ்லாமும் பாதுகாக்கப்பட்டு விடும்  

 

கடன் வாங்கினால் திருப்பிக் கொடுப்பதில் இறையச்சம் வேண்டும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ ذَكَرَ رَجُلًا مِنْ بَنِي إِسْرَائِيلَ سَأَلَ بَعْضَ بَنِي إِسْرَائِيلَ أَنْ يُسْلِفَهُ أَلْفَ دِينَارٍ فَقَالَ ائْتِنِي بِالشُّهَدَاءِ أُشْهِدُهُمْ فَقَالَ كَفَى بِاللَّهِ شَهِيدًا قَالَ فَأْتِنِي بِالْكَفِيلِ قَالَ كَفَى بِاللَّهِ كَفِيلًا قَالَ صَدَقْتَ فَدَفَعَهَا إِلَيْهِ إِلَى أَجَلٍ مُسَمًّى فَخَرَجَ فِي الْبَحْرِ فَقَضَى حَاجَتَهُ ثُمَّ الْتَمَسَ مَرْكَبًا7 يَرْكَبُهَا يَقْدَمُ عَلَيْهِ لِلْأَجَلِ الَّذِي أَجَّلَهُ فَلَمْ يَجِدْ مَرْكَبًا فَأَخَذَ خَشَبَةً فَنَقَرَهَا8 فَأَدْخَلَ فِيهَا أَلْفَ دِينَارٍ وَصَحِيفَةً مِنْهُ إِلَى صَاحِبِهِ ثُمَّ زَجَّجَ9 مَوْضِعَهَا ثُمَّ أَتَى بِهَا إِلَى الْبَحْرِ فَقَالَ اللَّهُمَّ إِنَّكَ تَعْلَمُ أَنِّي كُنْتُ تَسَلَّفْتُ فُلَانًا أَلْفَ دِينَارٍ فَسَأَلَنِي كَفِيلَا فَقُلْتُ كَفَى بِاللَّهِ كَفِيلًا فَرَضِيَ بِكَ وَسَأَلَنِي شَهِيدًا فَقُلْتُ كَفَى بِاللَّهِ شَهِيدًا فَرَضِيَ بِكَ وَأَنِّي جَهَدْتُ أَنْ أَجِدَ مَرْكَبًا أَبْعَثُ إِلَيْهِ الَّذِي لَهُ فَلَمْ أَقْدِرْ وَإِنِّي أَسْتَوْدِعُكَهَا فَرَمَى بِهَا فِي الْبَحْرِ حَتَّى وَلَجَتْ فِيهِ ثُمَّ انْصَرَفَ وَهُوَ فِي ذَلِكَ يَلْتَمِسُ مَرْكَبًا10 يَخْرُجُ إِلَى بَلَدِهِ فَخَرَجَ الرَّجُلُ الَّذِي كَانَ أَسْلَفَهُ يَنْظُرُ لَعَلَّ مَرْكَبًا قَدْ جَاءَ بِمَالِهِ فَإِذَا بِالْخَشَبَةِ الَّتِي فِيهَا الْمَالُ11 فَأَخَذَهَا لِأَهْلِهِ حَطَبًا فَلَمَّا نَشَرَهَا وَجَدَ الْمَالَ وَالصَّحِيفَةَ ثُمَّ قَدِمَ الَّذِي كَانَ أَسْلَفَهُ فَأَتَى بِالْأَلْفِ دِينَارٍ فَقَالَ وَاللَّهِ مَا زِلْتُ جَاهِدًا فِي طَلَبِ مَرْكَبٍ لِآتِيَكَ بِمَالِكَ فَمَا وَجَدْتُ مَرْكَبًا قَبْلَ الَّذِي أَتَيْتُ فِيهِ قَالَ هَلْ كُنْتَ بَعَثْتَ إِلَيَّ بِشَيْءٍ قَالَ أُخْبِرُكَ أَنِّي لَمْ أَجِدْ مَرْكَبًا قَبْلَ الَّذِي جِئْتُ فِيهِ قَالَ فَإِنَّ اللَّهَ قَدْ أَدَّى عَنْكَ الَّذِي بَعَثْتَ فِي الْخَشَبَةِ فَانْصَرِفْ بِالْأَلْفِ الدِّينَارِ رَاشِدًا (بخاري) 2291

'இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் தமக்கு ஆயிரம் தங்கக்காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர் 'சாட்சிகளை எனக்குக் கொண்டு வா! அவர்களைச் சாட்சியாக வைத்துத் தருகிறேன்' என்றார். கடன் கேட்டவர் 'சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!' என்றார். 'அப்படியானால் ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டுவா!' என்று கடன் கேட்கப்பட்டவர் கூறினார். அதற்குக் கடன் கேட்டவர் 'பிணை நிற்க அல்லாஹ்வே போதுமானவன்' என்று கூறினார். கடன் கேட்கப்பட்டவர் 'நீர் கூறுவது உண்மையே!' என்று கூறி, குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பித் தர வேண்டும் என்று ஆயிரம் தங்கக் காசுகளை அவருக்குக் கொடுத்தார். கடன் வாங்கியவர் கடல் மார்க்கமாகப் புறப்பட்டு, தம் வேலைகளை முடித்துவிட்டு, குறிப்பிட்ட தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக வாகனத்தைத் தேடினார். எந்த வாகனமும அவருக்குக் கிடைக்கவில்லை. உடனே, ஒரு மரக்கட்டையை எடுத்து, அதைக் குடைந்து அதற்குள் ஆயிரம் தங்கக் காசுகளையும் கடன் கொடுத்தவருக்கு ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்து அடைத்தார். பிறகு கடலுக்கு வந்து, 'இறைவா! இன்னாரிடம் நான் ஆயிரம் தங்கக் காசுகளைக் கடனாகக் கேட்டேன்; அவர் பிணையாளி வேண்டுமென்றார்; நான் 'அல்லாஹ்வே பிணைநிற்கப் போதுமானவன்!' என்றேன்; அவர் உன்னைப் பிணையாளியாக ஏற்றார். என்னிடம் சாட்சியைக் கொண்டுவரும்படி கேட்டார்; 'சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!' என்று கூறினேன். அவர் உன்னை சாட்சியாக ஏற்றார்; அவருக்குரிய (பணத்)தை அவரிடம் கொடுத்து அனுப்பி விடுவதற்காக ஒரு வாகனத்திற்கு நான் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை என்பதையெல்லாம் நீ அறிவாய்! எனவே, இதை உரியவரிடம் சேர்க்கும் பொறுப்பை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன்!' என்று கூறி அதைக் கடலில் வீசினார். அது கடலுக்குள் சென்றதும் திரும்பிவிட்டார். அத்துடன் தம் ஊருக்குச் செல்வதற்காக வாகனத்தையும் அவர் தேடிக் கொண்டிருந்தார். அவருக்குக் கடன் கொடுத்த மனிதர், தம் செல்வத்துடன் ஏதேனும் வாகனம் வரக்கூடும் என நோட்டமிட்ட வண்ணம் புறப்பட்டார்.அப்போது,பணம் அடங்கிய அந்த மரக்கட்டையைக் கண்டார். தம் குடும்பத்திற்கு விறகாகப் பயன்படட்டும் என்பதற்காக அதை எடுத்தார். அதைப் பிளந்து பார்த்தபோது பணத்தையும் கடிதத்தையும் கண்டார். பிறகு, கடன் வாங்கியவர் ஆயிரம் தங்கக் காசுகளை எடுத்துக்கொண்டு இவரிடம் வந்து சேர்ந்தார். 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்முடைய பணத்தை உமக்குத் தருவதற்காக வாகனம் தேடும் முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தேன். இப்போதுதான் வாகனம் கிடைத்து வந்திருக்கிறேன்!' என்று கூறினார். அதற்கு கடன் கொடுத்தவர், 'எனக்கு எதையாவது அனுப்பி வைத்தீரா?' என்று கேட்டார். கடன் வாங்கியவர், 'வாகனம் கிடைக்காமல் இப்போதுதான் வந்திருக்கிறேன் என்று உமக்கு நான் தெரிவித்தேனே!' என்று கூறினார். கடன் கொடுத்தவர், 'நீர் மரத்தில் வைத்து அனுப்பியதை உம் சார்பாக அல்லாஹ் என்னிடம் சேர்ப்பித்துவிட்டான்; எனவே, ஆயிரம் தங்கக் காசுகளை எடுத்துக் கொண்டு (சரியான) வழியறிந்து செல்லும்!' என்று கூறினார். நூல் புகாரீ                                  

படிப்பினை- கொடுத்த வாக்கை எப்படியேனும் காப்பாற்ற நினைப்பவருக்கு அல்லாஹ்வும் உதவி செய்வான்

 

ஆளுக்குத் தகுந்த மாதிரி வேஷம் போடுவதை தவிர்த்து இறையச்சத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ  رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مِنْ شَرِّ النَّاسِ ذُو الْوَجْهَيْنِ الَّذِي يَأْتِي هَؤُلَاءِ بِوَجْهٍ وَهَؤُلَاءِ بِوَجْهٍ (ابوداود)  عَنْ عَمَّارٍ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ كَانَ لَهُ وَجْهَانِ فِي الدُّنْيَا كَانَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ لِسَانَانِ مِنْ نَارٍ (ابوداود) 

மறுமை நாளில் மனிதர்களில் மிகக் கெட்டவர்கள் இரட்டை நாவு கொண்டவர்கள்.இவர்களுக்கு நெருப்பாலான நாவு தரப்பட்டு தண்டிக்கப்படும்.

كان يعدّ من أعلم تلاميذه لمّا حضرت لاحد تلاميذه الوفاة دخل عليه الفضيل بن عياض وجلس عند رأسه وقرأ سورة ياسين فقال التلميذ المحتضر : يا استاذ لا تقرا هذه السورة. فسكت الاستاذ ، ثمّ لقنه فقال له : قل لا إله إلاّ الله . فقال: لا اقولها ، لأني بريء منها ثمّ مات على ذلك  فاضطرب الفضيل من مشاهدة هذه الحالة اضطراباً شديداً. فدخل منزله ولم يخرج منه. ثمّ رآه في ا لنوم وهويسحب به الى جهنّم فسأله الفضيل: بأي شيء نزع الله المعرفة منك ، وكنت اعلم تلاميذي فقال : بثلاثة أشياء أولها : النميمة فانّي قلت لأصحابي بخلاف ما قلت لك  والثاني : بالحسد ، حسدت أصحابي  والثالث : كانت بي علة فجئت الى الطبيب فسألته عنها فقال تشرب في كل سنة قدحاً من الخمر، فانّ لم تفعل بقيت بك العلة  فكنت اشرب الخمر تبعاً لقول الطبيب  ولهذه الأشياء الثلاثة التي كانت فيّ ساءت عاقبتي ومت على تلك الحالة (منازل الاخرة)

     ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்களின் மாணவர் ஒருவர் சகராத் நிலையில் இருந்தபோது அங்கு ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் வருகை தந்தார்கள். அவரது தலைமாட்டில் அமர்ந்து யாசீன் சூரா ஓதியபோது உஸ்தாத் அவர்களே இதை என்னிடம் ஓதாதீர்கள். என்று அம்மாணவர் கூறினார். சற்று நேரம் கழித்து அவருக்கு கலிமா சொல்லித் தந்த போது இதை நான் சொல்ல மாட்டேன் நான் இதை விட்டும் நீங்கியவன் என்றார். சற்று நேரத்தில் அதே நிலையில் அவர் மரணித்தார். இதைக் கண்ட ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் மிகவும் கவலையடைந்தார்கள். இதை கவலையில் வீட்டை விட்டு வெளியிலும் வரவில்லை. பின்பு அந்த வாலிபரை கனவில் கண்ட போது அவர் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படுவதாக கண்டார்கள். அவரிடம் ஃபுழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் நீ என்னுடைய சிறந்த மாணவனாக இருந்தாயே எதனால் உனது ஞானம் பறிக்கப்பட்டது. என்று கேட்டபோது அவர் கூறினார். மூன்று காரணங்களால் எனது ஞானம் பறிக்கப்பட்டது. 1. கோள் சொல்லும் குணம். நான் உங்களிடம் ஒரு பேச்சு.. என் நண்பர்களிடம் வேறு பேச்சு என மாறி மாறிப் பேசுவேன் 2. பொறாமை குணம். என் நண்பர்கள் மீதே நான் பொறாமை கொள்வேன்.  3. எனக்கு ஒரு நோய் இருந்த து. அது பற்றி மருத்துவரிடம் சொன்னபோது வருடத்திற்கு ஒருமுறை மது அருந்தினால் உன் நோய் சரியாகி விடும் என்றார். நான் அவ்வாறு அருந்த ஆரம்பித்து அதை அடிக்கடி அருந்த ஆரம்பித்தேன். இம்மூன்றும் என்னை இந்நிலைக்கு ஆளாக்கியது- நூல் மனாஜிலுல் ஆகிரா

 

பிறரின் நிலத்தை அநியாயமாக அபகரிக்காமல் இருப்பதில் இறையச்சம்

عن زيد بن أسلم رض قال :كان للعباس بن عبد المطلب رض دار الي جنب مسجد المدينة فقال له عمر رض بِعنِيها 7 : فأراد عمر رض ان يزيدها في المسجد، فأبي العباس رض ان يبيعها إياه فقال عمر رض فهَبْها لي فأبي فقال فوَسّعْها انت في المسجد، فأبي فقال عمر رض لابد لك من احداهن فأبي عليه فقال خذ بيني وبينك رجلا، فأخذ أبيَّ بن كعب رض فاختصما اليه فقال أبيّ رض لعمر رض :ما أري أن يُخرجه من داره حتي ترضيه .فقال له عمر رض: أرأيت قضائك هذا في كتاب الله وجدته أم سنة من رسول الله صلي الله عليه وسلم؟ فقال أبيّ: بل سنة من رسول الله صلي الله عليه وسلم فقال عمر رض وما ذاك؟ فقال اني سمعت رسول الله صلي الله عليه وسلم يقول:إن سليمان بن داود عليهما الصلاة والسلام-لما بني بيت المقدس جعل كلما بني حائطا أصبح مُنهدما، فأوحي الله اليه أن لاتبني في حق رجل حتي ترضيه)) فتركه عمر رض فوسَّعها 8 ) (العباس رض بعد ذلك في المسجد (حياة الصحابة)

அப்பாஸ் ரழி அவர்களுக்குச் சொந்தமான வீடு மஸ்ஜிதுக்கு அருகில் இருந்தது. மஸ்ஜிதை விரிவு படுத்துவதற்காக அந்த இடம் தேவைப்பட்டது. அப்போது கலீபா உமர் ரழி அவர்கள் இந்த வீட்டை எனக்கு விற்று விடுங்கள். என்றார்கள். ஆனால் அப்பாஸ் ரழி மறுத்து  விட்டார்கள். அப்படியானால் அன்பளிப்பாகத் தந்து விடுங்கள் என்று கூறிய போது அதற்கும் அப்பாஸ் ரழி மறுத்து  விட்டார்கள்.  சரி நீங்களே மஸ்ஜிதுடைய விரிவாக்கத்திற்குத் தகுந்த மாதிரி உங்கள் வீட்டை ஆக்கிக் கொடுங்கள் என்ற போது அதற்கும் அப்பாஸ் ரழி மறுத்து  விட்டார்கள். கடைசியில் உமர் ரழி அவர்கள் நான் சொல்லும் ஏதாவது ஒன்றை நீங்கள் செய்தாக வேண்டும் என்று கூறியபோது அப்பாஸ் ரழி மறுத்து  விட்டார்கள். அப்போது உமர் ரழி சரி..நமக்கு மத்தியில் ஒரு நடுவரை ஆக்கிக்கொள்வோம்என்றபோது அதற்கு அப்பாஸ்ரழி சம்மதித்தார்கள்.அவ்வாறே ஆக்கப்பட்டது. இருவரின் வாதத்தையும் கேட்ட உபய் ரழி அவர்கள் உமர் ரழி அவர்களிடம் நீங்கள் ஒருவரின் முழு சம்மதம் இல்லாமல் அவரின் நிலத்தை மஸ்ஜிதுக்காக எவ்வாறு எடுக்க முடியும் என்று தீர்ப்புக்கூற, உடனே உமர் ரழி அவர்கள் இதை நீங்களாக கூறுகிறீர்களா அல்லது குர்ஆன் ஹதீஸில் இருந்து கூறுகிறீர்களா என்று கேட்க, அதற்கு உபய் ரழி அவர்கள் நபி ஸல் அவர்கள் கூற நான் கேட்டேன். சுலைமான் அலை பைத்துல் முகத்தஸைக் கட்டிய போது அதன் ஒரு பக்கச்சுவர் கட்டக் கட்ட இடிந்து கொண்டே இருந்தது. அப்போது அல்லாஹ் நபி சுலைமான் அலை அவர்களிடம் இன்னொருவருக்கு உரிமையுள்ள இடத்தில் அவரின் சம்மதம் இல்லாமல் நீங்கள் மஸ்ஜிதை கட்டக்கூடாது என்று வஹீ அறிவித்தான். பின்பு அவரிடம் சம்மதம் வாங்கினார்கள். அதன்பின்பே சுவர் நீடித்தது.                                                         

இந்த ஹதீஸைக் கூறியவுடன் உமர் ரழி அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள். இதற்குப் பின்பு அப்பாஸ் ரழி அவர்களே மஸ்ஜிதுக்காக தன் வீட்டை விட்டுக் கொடுத்தார்கள்.                    

குறிப்பு- எத்தனையோ சகோதரர்களுக்கு மத்தியில், அண்டை வீட்டாருக்கு மத்தியில் இந்த நிலத் தகராறு இருக்கிறது. அதனால் வருடக் கணக்கில் பகையுடன் இருக்கிறார். ஒருவரிடமிருந்து ஒரு ஜான் நிலத்தை அபகரித்துக் கொண்டாலே மறுமையில் ஏழு நிலங்களை அவர் கழுத்தில் கட்டி தொங்க விடப்படும்

عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ وَكَانَتْ بَيْنَهُ وَبَيْنَ أُنَاسٍ خُصُومَةٌ فِي أَرْضٍ فَدَخَلَ عَلَى عَائِشَةَ فَذَكَرَ لَهَا ذَلِكَ فَقَالَتْ يَا أَبَا سَلَمَةَ اجْتَنِبْ الْأَرْضَ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ ظَلَمَ قِيدَ شِبْرٍ طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ (بخاري

தொழுகையை உள்ளச்சம் இல்லாமல் நிறைவேற்றுவது தான் பாவங்களை விட்டும் விலகாமல் இருப்பதற்குக் காரணம்

"إِنَّ الصَّلَاة تَنْهَى عَنْ الْفَحْشَاء وَالْمُنْكَر(العنكبوت45 ) أي الصلاة مع الحشوع - واستدل به الغزالي  على أن الخشوع شرط للصلاة قال لأن صلاة الغافل لا تمنع من الفحشاء والمنكر(فيض القدير) عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنَّ فُلاَنًا يُصَلِّي بِاللَّيْلِ  فَإِذَا أَصْبَحَ سَرَقَ قَالَ:إِنَّهُ سَيَنْهَاهُ مَا تَقُولُ (أحمد) أي مثل هذه الصلاة لا محالة تنهاه فيتوب عن السرقة قريباً (مرقاة)

உணவு உண்ணும் போது அதன் ஒழுக்கங்களைப் பேணுவதால் அல்லாஹ்வின் பொருத்தத்திற்குரிய செயலாக மாறும்

عَنْ أَنَسِ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ لَيَرْضَى عَنْ الْعَبْدِ أَنْ يَأْكُلَ الْأَكْلَةَ فَيَحْمَدَهُ عَلَيْهَا أَوْ يَشْرَبَ الشَّرْبَةَ فَيَحْمَدَهُ عَلَيْهَا (مسلم) باب اسْتِحْبَابِ حَمْدِ اللَّهِ تَعَالَى بَعْدَ الأَكْلِ وَالشُّرْبِ.- كتاب الذكر والدعاء والتوبة

வாகனத்தில் செல்வதும் வணக்கமாக மாறும்.அதை நமக்கு வசப்படுத்திக் கொடுத்தவனுக்கு நன்றி செலுத்தினால்...

عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَ قَالَ شَهِدْتُ عَلِيًّا رَضِي الله عنه وَأُتِيَ بِدَابَّةٍ لِيَرْكَبَهَا فَلَمَّا وَضَعَ رِجْلَهُ فِي الرِّكَابِ قَالَ بِسْمِ اللَّهِ فَلَمَّا اسْتَوَى عَلَى ظَهْرِهَا قَالَ الْحَمْدُ لِلَّهِ ثُمَّ قَالَ"سُبْحَانَ الَّذِي سَخَّرَلَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ(الزخرف14  ثُمَّ قَالَ الْحَمْدُ لِلَّهِ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ قَالَ اللَّهُ أَكْبَرُ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ قَالَ "سُبْحَانَكَ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ" ثُمَّ ضَحِكَ فَقِيلَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ مِنْ أَيِّ شَيْءٍ ضَحِكْتَ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ كَمَا فَعَلْتُ ثُمَّ ضَحِكَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مِنْ أَيِّ شَيْءٍ ضَحِكْتَ قَالَ إِنَّ رَبَّكَ يَعْجَبُ مِنْ عَبْدِهِ إِذَا قَالَ اغْفِرْ لِي ذُنُوبِي يَعْلَمُ أَنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ غَيْرِي (ابوداود) بَاب مَا يَقُولُ الرَّجُلُ إِذَا رَكِبَ- كِتَاب الْجِهَادِ

முஸ்லிமின் வியாபாரமும் கூட பரக்கத்தைப் பெற்றுத்தரும் வணக்கமாக மாறும். நேர்மை இருந்தால்.

عَنْ الْمِقْدَامِ بْنِ مَعْدِيكَرِبَ  عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا كَسَبَ الرَّجُلُ كَسْبًا أَطْيَبَ مِنْ عَمَلِ يَدِهِ وَمَا أَنْفَقَ الرَّجُلُ عَلَى نَفْسِهِ وَأَهْلِهِ وَوَلَدِهِ وَخَادِمِهِ فَهُوَ صَدَقَةٌ (ابن ماجة) بَاب الْحَثِّ عَلَى الْمَكَاسِبِ- كِتَاب التِّجَارَاتِ عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا أَوْ قَالَ حَتَّى يَتَفَرَّقَا فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا وَإِنْ كَتَمَا وَكَذَبَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا (بخاري) كتاب البيوع

 

 

 

முடிவுரை- உலகில் மனிதர்களுக்கிடையே ஏற்படும் சண்டை. சச்சரவுகள் குற்றங்கள், அனைத்தும் முழுவதுமாக ஒழிக்கப்பட வேண்டுமானால் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இறையச்சம் ஏற்படுவதினால்  மட்டுமே முடியும். காவல் துறையோ இராணுவமோ,  ஆயுதங்களோ, மனிதர்களுக்கிடையே ஏற்படும் குற்றங்களை தடுத்து நிறுத்தி விட முடியாது போலீஸோ, இராணுவத்தினரோ, ஆயுதங்களோ, மனிதர்களுக்கிடையே ஏற்படும் குற்றங்களை தடுத்து நிறுத்தி விட முடியுமென்றிருந்தால் மனிதர்கள் அனைவரும் குற்றம் செய்யாதவர்களாக இருந்திருப்பார்கள். மாறாக காவல் துறையும், இராணுவமும் பெருகப் பெருக சண்டை சச்சரவுகளும், தீய எண்ணங்களும், வன்முறைகளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு தான் இருக்கின்றன. அதற்குக் காரணம் மக்களின் உள்ளங்களில் இறையச்சம் இல்லாமல் போனது தான். ஆகவே மனிதன் எல்லா நிலைகளிலும் குற்றங்களை விட்டும நீங்குவதற்கு இறையச்சமே முக்கியக் காரணமாகும். உதாரணமாக இலட்சக்கணக்கான ரூபாய்களும், பொருட்களும் ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவ்விடத்தில் நீங்கள் தனிமையாக இருக்கிறீர்கள் அதனைப் பாதுகாப்பதற்கும் அங்கு எவரும் இல்லை இந்நிலையில் அல்லாஹ்வுடைய பயம் மட்டும் உங்களுடைய உள்ளத்தில் இருந்தால் அப்பொருட்களிலிருந்து சிறிதளவையும் நீங்கள் எடுக்க மாட்டீர்கள் ஏனெனில் பிறர் பொருளை அனுமதியின்றி எடுத்தால் மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் பதில் சொல்லியாக வேண்டும் தண்டனை கிடைக்கும் என்ற பயம் உங்களை தடுத்து விடும்

 

சிறிய சோதனை ஏற்பட்டாலும்  தன்னிடம் ஏதோ தவறு நிகழ்ந்து விட்டதாக வருந்தும் அளவுக்கு இறையச்சம்

قال ابن عبد البر في بهجة المجالسوقد وفد على عمر بن الخطاب بفتح، فقال: متى لقيتم عدوكم؟ قالوا: أول النهار. قال: فمتى انهزموا؟ قالوا: آخر النهار. فقال: إناّ لله! وأقام الشرك للإيمان من أول النهار إلى آخره!! والله إن كان هذا إلاّ عن ذنب بعدي، أو أحدثته بعدكم، (بهجة المجالس)

ஷாம் தேசத்திற்கு உமர் ரழி அவர்கள் அனுப்பியிருந்த படைப் பிரிவுகளில் ஓர் படைப்பிரிவில் இடம் பெற்றிருந்த தூதுவர் ஒருவர் உமர் ரழி அவர்களிடம் வந்து அமீருல் முஃமினீன்  அவர்களே நமது இஸ்லாமியப் படை வெற்றி பெற்று விட்டது. அல்லாஹ் நமது படைப் பிரிவுக்கு வெற்றியை நல்கினான் என்று கூறியபோது உமர் ரழி அவர்கள் எப்போது நமது படை வீரர்கள் எதிரிப்ப்படையுடன் போரிட ஆரம்பித்தார்கள் என்று கேட்டார்கள் அதற்கு அவர் லுஹா நேரத்திற்கு சற்று முன்னதாக என்று பதில் கூறினார். மீண்டும் உமர் ரழி அவர்கள் எப்போது முஸ்லிம் படையினருக்கு வெற்றி கிடைத்த து என்று கேட்டார்கள். அதற்கு அவர் மஃரிப் நேரத்திற்கு சற்று முன்னதாக என்று பதில் கூறினார். இந்த பதிலைக் கேட்டதும் உமர் ரழி அவர்கள் இன்னா லில்லாஹ்.. சொல்லி அழ ஆரம்பித்தார்கள். (மற்றொரு அறிவிப்பில் அழுகையின் உச்ச கட்டமாக தாடி முழுவதும் நனைய தேம்பித் தேம்பி அழுதார்கள். சபையில் இருந்தவர்கள் உமர் ரழி அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தார்கள். எனினும் உமர் ரழி அவர்கள் அழுகையை நிறுத்தவில்லை.) அப்போது சபையில் இருந்தவர்கள் அமீருல் முஃமினீன்  அவர்களே அவர் இப்போது என்ன சொல்லி விட்டார் என்று நீங்கள் அழுகிறீர்கள் அவர் நல்ல செய்தியைத்தானே சொல்லியுள்ளார். நமது படை வெற்றி பெற்ற செய்தி மகிழ்ச்சியான செய்தி தானே என்று கேட்டனர். அதற்கு உமர் ரழி அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக அசத்தியத்திற்கு எதிரான அறப்போராட்டத்தில் சத்தியத்தின் வெற்றி இவ்வளவு வநேரம் வரை தாமதம்ஆகாது. அப்படியானால் நான் ஏதாவது பாவம் செய்திருக்க வேண்டும்.அல்லது மக்களாகிய நீங்கள் ஏதாவது பாவம் செய்திருக்க வேண்டும்.                                                

 

ஃபத்வா &  தக்வா ஒரு விளக்கம்

தக்வாவுக்கு பேணுதல் என்று ஒரு விளக்கம் உள்ளது சில பெரும் பாவங்களைப் பற்றி குர்ஆன் கூறும்போது அதைச் செய்யாதீர்கள் என்று கூறாமல் அதை நெருங்காதீர்கள் என்று கூறுகிறது  எனவே குறிப்பிட்ட பாவத்தைச் செய்யக் கூடாது என்பது ஃபத்வா ... அதன் பக்கம் தூண்டக்கூடிய அனைத்துக் காரியங்களையும் விட்டு விடுவது தக்வா.. ஃபிக்ஹ் ஆய்வாளர்கள் கூறுவார்கள் – அந்நியப் பெண் ஒருத்தி உளூச்  செய்து விட்டு மிச்சம் வைத்த தண்ணீரில் உளூச் செய்ய வேண்டாம். வேறு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள் ஏனெனில் அந்த மீதித் தண்ணீரை உபயோகிக்கும்போது இது இன்ன பெண் உபயோகித்த தண்ணீர் என்ற நினைவு வரும் அதுவும் சில நேரங்களில் தவறான சிந்தனையை மனதில் உண்டாக்கி விடும் என்று கூறுவார்கள் இதுதான் தக்வா.. பேணுதல் என்பதாகும் ஷரீஅத்தில் இத்தகைய பேணுதல் மிகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் அந்நியப் பெண்ணுடன் தனிமையில் இருக்க க்கூடாது. அந்நியப் பெண்ணிண் குரலை காது கொடுத்து கேட்கக்கூடாது. அவள் நறுமணம் பூசியிருந்தால் நம்முடைய மூக்கை மூடிக் கொள்ள வேண்டும். ஆகிய அனைத்தும் இந்த அடிப்படையில் கூறப்பட்டதாகும்      

                      

عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَلَالُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَهُمَا أُمُورٌ مُشْتَبِهَةٌ فَمَنْ تَرَكَ مَا شُبِّهَ عَلَيْهِ مِنْ الْإِثْمِ كَانَ لِمَا اسْتَبَانَ أَتْرَكَ وَمَنْ اجْتَرَأَ عَلَى مَا يَشُكُّ فِيهِ مِنْ الْإِثْمِ أَوْشَكَ أَنْ يُوَاقِعَ مَا اسْتَبَانَ وَالْمَعَاصِي حِمَى اللَّهِ مَنْ يَرْتَعْ حَوْلَ الْحِمَى يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ (بخاري) باب الْحَلاَلُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ-كتاب البيوع- وَقَالَ ابْنُ عُمَرَ رضي الله عنه لَا يَبْلُغُ الْعَبْدُ حَقِيقَةَ التَّقْوَى حَتَّى يَدَعَ مَا حَاكَ فِي الصَّدْرِ (بخاري) باب الإِيمَانِ - عَنْ عَطِيَّةَ السَّعْدِيِّ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَبْلُغُ الْعَبْدُ أَنْ يَكُونَ مِنْ الْمُتَّقِينَ حَتَّى يَدَعَ مَا لَا بَأْسَ بِهِ حَذَرًا لِمَا بِهِ الْبَأْسُ (ترمذي)ضعيف بَاب الْوَرَعِ وَالتَّقْوَى- كِتَاب الزُّهْدِ –

விளக்கம்- எதைச் செய்வதால் அது கூடும். பரவாயில்லை என்று உறுதியற்ற நிலையில் கூறப்படுமோ அதையும் விடுவது தக்வா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...