வியாழன், 25 ஆகஸ்ட், 2022

பொது வாழ்வில் பேணுதல் மிக அவசியம்

 


26-08-2022

 

بسم الله الرحمن الرحيم 

பொது வாழ்வில் பேணுதல் மிக அவசியம்

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

 




இறையச்சம் என்பது மஸ்ஜிதில் மட்டுமா என்ற கடந்த வாரத் தலைப்பின் தொடர்ச்சியாகவும் இதை ஆக்கிக் கொள்ளலாம்

மற்ற மக்களால் கவனிக்கப்படுகின்ற வகையில் பல்வேறு பொறுப்புகளில் இருப்பவர்கள், சமுதாயத் தலைவர்கள், குடும்பத் தலைவர்கள் தங்களின் வாழ்க்கையை எப்படி பேணுதலோடு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி..     

  

{ اتق الله حيثما كنت، وأتبع السيئة الحسنة تمحها، وخالق الناس بخلق حسن } [رواه الترمذي وأحمد]

நபிமார்களிடம் சிறு சறுகுதல் ஏற்பட்டாலும் அல்லாஹ் பெரிய தண்டனையைத் தந்தது மற்ற மக்களுக்காக...

وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ (139) إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُونِ (140) فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِينَ (141) فَالْتَقَمَهُ الْحُوتُ وَهُوَ مُلِيمٌ (142) فَلَوْلَا أَنَّهُ كَانَ مِنَ الْمُسَبِّحِينَ (143) لَلَبِثَ فِي بَطْنِهِ إِلَى يَوْمِ يُبْعَثُونَ (144) فَنَبَذْنَاهُ بِالْعَرَاءِ وَهُوَ سَقِيمٌ (145) وَأَنْبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِنْ يَقْطِينٍ (146) الصافات

وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ (35) فَأَزَلَّهُمَا الشَّيْطَانُ عَنْهَا فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِ وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ (36) البقرة

பொது வாழ்வில் பேணுதலைக் கடைபிடிப்பவர்களுக்கு சிறந்த உதாரணம் நபி ஸல் அவர்கள்

عَنْ رَجُلٍ مِنْ الْأَنْصَارِ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَنَازَةٍ فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى الْقَبْرِ يُوصِي الْحَافِرَ أَوْسِعْ مِنْ قِبَلِ رِجْلَيْهِ أَوْسِعْ مِنْ قِبَلِ رَأْسِهِ فَلَمَّا رَجَعَ اسْتَقْبَلَهُ دَاعِي امْرَأَةٍ فَجَاءَ وَجِيءَ بِالطَّعَامِ فَوَضَعَ يَدَهُ ثُمَّ وَضَعَ الْقَوْمُ فَأَكَلُوا فَنَظَرَ آبَاؤُنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلُوكُ لُقْمَةً فِي فَمِهِ ثُمَّ قَالَ أَجِدُ لَحْمَ شَاةٍ أُخِذَتْ بِغَيْرِ إِذْنِ أَهْلِهَا فَأَرْسَلَتْ الْمَرْأَةُ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَرْسَلْتُ إِلَى الْبَقِيعِ يَشْتَرِي لِي شَاةً فَلَمْ أَجِدْ فَأَرْسَلْتُ إِلَى جَارٍ لِي قَدْ اشْتَرَى شَاةً أَنْ أَرْسِلْ إِلَيَّ بِهَا بِثَمَنِهَا فَلَمْ يُوجَدْ فَأَرْسَلْتُ إِلَى امْرَأَتِهِ فَأَرْسَلَتْ إِلَيَّ بِهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَطْعِمِيهِ الْأُسَارَى (ابوداود

நபி ஸல் அவர்கள் ஒரு ஜனாஸா அடக்கி முடித்து விட்டுத் திரும்பிய போது அவர்களை ஒரு பெண் விருந்துக்கு அழைத்தார். அந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட நபி (ஸல்) அவர்கள் சாப்பிட ஆரம்பிக்கும்போது அங்கே பரிமாறப்பட்ட இறைச்சி உரிமையாளரிடம் முறையான அனுமதி பெறாமல் வாங்கப்பட்ட ஆட்டின் இறைச்சி என்பதை உணருவதாக கூறி, அந்தப் பெண்ணை அழைத்து விபரம் கேட்டார்கள். அப்போது அந்தப் பெண் உங்களுக்கு விருந்து கொடுப்பதற்காக ஆடு வாங்க முயற்சித்தேன். கிடைக்கவில்லை. இறுதியில் அண்டை வீட்டார் தற்போது தான் ஒரு ஆடு வாங்கியிருப்பதை அறிந்து பணம் கொடுத்து அனுப்பினேன். கணவர் வீட்டில் இல்லை. மனைவியிடம் நீங்கள் எப்படியேனும் உங்கள் கணவரிடம் சொல்லி சம்மதம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி பணம் தந்து இந்த ஆட்டை வாங்கி வந்தேன் என்றார். நபி(ஸல்) அவர்கள் அதை சாப்பிட விரும்பவில்லை. இதை காஃபிரான கைதிகளுக்கு உணவாக கொடுத்து விடுங்கள் என்றார்கள்.   

பொதுவாழ்வில் பேணுதலைக் கடைபிடித்த முன்னோர்களின் வரலாறுகள்

وفي تهذيب الكمال عن الإمام الشافعي الناس عيال على أبي حنيفة في الفقه وعن ابن مبارك ما رأيت أورع من أبي حنيفة وعن مكي بن إبراهيم كان أعلم أهل زمانه. لما مات صلي عليه ست مرات كثرة الزحام وعن وكيع قال: كان أبو حنيفة عظيم الأمانة، وكان يؤثر رضا الله تعالى على كل شىء،- وعن ابن المبارك، قال: قلت لسفيان الثورى: ما أبعد أبا حنيفة من الغيبة، ما سمعته يغتاب عدوًا له قط، قال: هو والله أعقل من أن يسلط على حسناته ما يذهب بها. وعن على بن عاصم، قال: لو وزن عقل أبى حنيفة بعقل نصف أهل الأرض لرجح بهم.

இப்னுல் முபாரக் ரஹ் அவர்கள் கூறினார்கள். இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்களைப் போன்று பேணுதலாக ஒருவரை நான் கண்டதில்லை. மற்றொரு இமாம் கூறினார்கள். அவர்கள் வஃபாத்தான நேரத்தில் கட்டுப் படுத்த முடியாத கூட்டம் காரணமாக ஆறு முறை ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது. வகீஃ ரஹ் அவர்கள் கூறினார்கள். இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்கள் அமானிதத்தைப் பாதுகாப்பதில் மக்களிடம் நற்பெயர் பெற்றிருந்தார்கள். சுஃப்யானுஸ் ஸவ்ரீ ரஹ் அவர்கள் கூறினார்கள். இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்கள் யாரைப் பற்றியும் புறம் பேசியதை நான் கண்டதில்லை. 

وعن قيس بن الربيع، قال: كان أبو حنيفة ورعًا، فقيهًا، كثير البر والصلة لكل من لجأ إليه، كثير الأفضال على إخوانه، وكان يبعث البضائع إلى بغداد فيشترى بها الأمتعة، ويجلب إلى الكوفة، ويجمع الأرباح من سنة إلى سنة، فيشترى بها حوائج الأشياخ المحدثين وأثوابهم وكسوتهم، وما يحتجون إليه، ثم يعطيهم باقى الدنانير من الأرباح، ويقول: أنفقوها فى حوائجكم، ولا تحمدوا إلا الله تعالى، فإنه والله ما يجريه الله لكم على يدى، فما فى رزق الله حول لغيره. (تهذيب الأسماء واللغات للعلامة أبى زكريا محيي الدين بن شرف النووي)

இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்கள் தன்னை நாடி வருபவர்களுக்கு அதிகம் உதவி செய்வார்கள். குறிப்பாக தன் சொந்த பந்தங்களுக்கு அதிகம் உதவி செய்வார்கள். ஒருமுறை பக்தாதுக்கு தன் சரக்குகளை அனுப்பிய இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்கள் அதில் பெரும்பகுதியை ஹதீஸ் கலையில் ஈடுபட்டிருக்கும் வறியவர்களுக்கு நிறைய வாரி வழங்கினார்கள். பின்பு அவர்களிடம் நீங்கள் என்னிடம் இதைப் பெற்றுக் கொண்ட பின் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் புகழக்கூடாது. எல்லாம் அவன் தந்தது. என்னிடம் எதுவும் இல்லை என்றும் கூறுவார்கள்.            

இமாம் அவர்களின் பேணுதலுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு

قال يزيد بن هارون رايته (أي ابا حنيفة رح) جالسا يوما في الشمس عند باب انسان فقلت له يا ابا حنيفة لو تحولت الي الظل فقال لي علي صاحب هذه الدار دراهم ولا احب ان اجلس في ظل فناء داره

மேற்படி ஹதீஸின் பொருள் - ஒரு நான் இமாமுல் அஃழம் ரஹ் அவர்கள் வெயிலில் ஒரு வீட்டின் நிழலருகே அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களிடம் (அந்த வீட்டின்) நிழலுக்குச் சென்று நீங்கள் அமரலாமே என்றேன். அதற்கு இமாமுல் அஃழம் ரஹ் அவர்கள் கூறியதாவது அந்த வீட்டுடையவர் என்னிடம் கடனாக வாங்கிய சில திர்ஹங்கள் மீதமுள்ளது. அதனால் அவரின் வீற்றின் முற்றத்தில் நான் அமர விரும்பவில்லை. (ஏனெனில் அது கூட வட்டியாகி விடுமே என்ற அச்சம் தான்) என்று பதில் கூறினார்கள்.                                                 

மற்றொரு நேரத்தில் இமாமுல் அஃழம் ரஹ் அவர்களுக்கு கடன் பாக்கி வைத்திருந்த ஒரு யூதரின் வீட்டை இமாம் அவர்கள் கடந்து செல்லும்போது அவர்களின் செருப்பில் நஜீஸ் ஆகி விட்டது அதை உதறும்போது அதனுடைய ஒரு துளி அந்த யூதரின் வீட்டுச் சுவற்றின் மீது பட்டு விட்டது. உடனே இமாம் அவர்கள் மிகவும் கவலைப்பட்டவராக இப்போது நான் என்ன செய்ய செய்வேன். அந்த நஜீஸை நான் சுரண்டினால் அந்த வீட்டின் சுண்ணாம்பு மற்றும் காரையின் சில பகுதிகளை நான் பெயர்த்தவனாக ஆகி விடுவேன். (அந்தக் காலத்து வீடுகள் அந்த அமைப்பில் தான் இருக்கும்)  அதே வேளையில் அதை நான் அப்படியே விட்டு விட்டால் அடுத்தவரின் வீட்டை அசிங்கப்படுத்திய குற்றம் என் மீது வந்து விடுமே நான் என்ன செய்யட்டும் என்று புலம்பிய நிலையில் அவருடைய வீட்டுக் கதவை தட்டுகிறார்கள். அவரோ இமாம் அவர்கள் கடனை வசூல் செய்யத் தான் வந்துள்ளார் என்று எண்ணி வேகமாக வந்து கதவைத் திறந்து நீங்கள் சொல்லியிருந்தால் நான் வந்திருக்க மாட்டேனா? என்றார் ஆனால் இமாம் அவர்கள் நான் அதற்கு வரவில்லை உங்கள் வீட்டுச் சுவற்றை நான் இப்படி அசிங்கம் செய்து விட்டேன் அதை சுத்தம் செய்யும் வழியை எனக்குக் கூறுங்கள் என்று கூற, அவர் ஆச்சரியமடைந்தவராக கொஞ்சம் இருங்கள். என் வீட்டை நீங்கள் சுத்தம் செய்யும் முன்பு நான் என் உள்ளத்தை சுத்தம் செய்ய வேண்டியுள்ளது என்று கூறி இஸ்லாத்தை ஏற்றார்.         

كان حفص بن عبد الرحمن شريك أبي حنيفة وكان أبو حنيفة يجهز عليه فبعث إليه في رفقة بمتاع وأعلمه أن في ثوب كذا وكذا عيبا فإذا بعته فبين فباع حفص المتاع ونسي أن يبين ولم يعلم ممن باعه فلما علم أبو حنيفة تصدق بثمن المتاع كله (تهذيب الكمال

இமாமுல் அஃழம் அவர்கள் அவர்களுடைய வியாபார நண்பரான் ஹஃஸ் இப்னு அப்துர் ரஹ்மான் ரஹ் அவர்களிடம்  வியாபார விஷயமாக தன் சரக்குகளைக் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். விற்பனைப் பொருட்களில் ஒன்றில் குறை இருந்தது. அந்தக் குறையைச் சொல்லி அப்பொருளை விற்கும்படி சொல்லி அனுப்பினார்கள். ஆனால் அந்த நண்பர் அப்பொருளை விற்கும்போது குறையை சொல்ல மறந்து விட்டார். இமாமுல் அஃழம் அவர்களிம் அதற்கான பணம் வந்த போது யாருக்கு அந்தப் பொருள் விற்கப்பட்டது என்பதையும் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்போது இமாமுல் அஃழம் அவர்கள் அந்தப் பணத்தை தாம் பயன்படுத்தாமல் அப்படியே தர்மம் செய்து விட்டார்கள்.

பொது வாழ்வில் மக்களால் பின்பற்றப்படும் நபர் மீது எவ்வித களங்கமும் ஏற்பட்டு விடக்கூடாது

قال عبد السلام المباركفوري إن الإمام البخاري ركب البحر مرة في أيام طلبه وكان معه ألف دينار ، فجاءه رجل من أصحاب السفينة، وأظهر له حبه ومودته وأصبح يقاربه ويجالسه فلما رأى الإمام حبه وولاءه مال اليه وبلغ الأمر أنه بعد المجالسات أخبره عن الدنانير الموجودة عنده .وذات يوم قام صاحبه من النوم فأصبح يبكي ويعول ويمزق ثيابه ويلطم وجهه ورأسه ، فلما رأى الناس حالته تلك أخذتهم الدهشة والحيرة وأخذو يسألونه عن السبب ، وألحوا عليه في السؤال ، فقال لهم : عندي صرة فيها ألف دينار وقد ضاعت!.فأصبح الناس يفتشون ركاب السفينة واحدا واحدا ،وحينئذ أخرج البخاري صرة دنانيره خفية وألقاها في البحر ، ووصل المفتشون إليه وفتشوه أيضا حتى انتهوا من جميع ركاب السفينة ، ولم يجدوا شيئا فرجعوا إليه ولاموه ووبخوه توبيخا شديدا (سيرة البخاري

 .இமாம் புஹாரீ அவர்கள் ஒரு நேரத்தில் கடல் பிரயாணம் செய்தார்கள். அப்போது அவர்களுடன் ஒருவன் மிகவும் அன்பாக நடந்து கொள்வது போல் நடித்தான். அவன் ஒரு திருடன். அவனை நம்பிய இமாம் அவர்கள் அவனுடன் தன்னைப் பற்றிய எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். தன்னிடம் ஒரு பை இருப்பதையும் அதில் ஆயிரம் தீனார்கள் இருப்பதையும் அவனிடம் தெரிவித்து விட்டார்கள். இதைத் தான் அவன் எதிர் பார்த்தான். அன்றைய இரவு முடிந்து காலை நேரம் ஆனதும் அவன் தன் ஒப்பாரி வைத்தவனாக தன்னிடம் இன்ன அடையாளத்துடன் கூடிய ஒரு இருந்ததாகவும் அதில் ஆயிரம் தீனார்கள் இருந்ததாகவும் அதை இப்போது காணவில்லை என்பதாகவும் நடித்தான். இவன் சொன்னதன் பேரில் அனைவருடைய உடைமைகளையும் சோதிக்கப்பட்டது. இமாம் அவர்கள் இவனுடைய சூழ்ச்சியைப் புரிந்து கொண்டார்கள். யாருக்கும் தெரியாமல் அந்தப் பையை கடலில் வீசி விட்டார்கள். அனைவரிடமும் தேடிப் பார்த்தவர்கள் இமாம் அவர்களிடமும் தேடினர். பை கிடைக்கவில்லை. திருடன் ஏமாற்றம் அடைந்தான். அது மட்டுமன்றி அவன் ஒரு பொய்யன் என்பதும் அங்கு நிரூபிக்கப்பட்டு விட்டது. பின்னால் இமாம் அவர்களிடம் இதைப்பற்றிக் கேட்கப்பட்ட போது அதற்கு அவர்கள் ஆயிரம் தீனார்களை எப்போதும் சம்பாதித்துக் கொள்ளலாம். இழந்த மானம் மரியாதையை மீண்டும் சம்பாதிக்க முடியாது. பல மக்களால் நான் பின்பற்றப் படும் சூழ்நிலையில் என்னிடம் இதுபோன்ற குறையைக் கண்டால் மக்கள் நான் சொல்வதை நம்ப மாட்டார்கள் என்றார்கள்.

மக்களால் பின்பற்றப்படும் நபர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி ஹதாயா நூலில்...

قال ومن دعى إلي وليمه أو طعام فوجد ثمة لعبا أو غناء فلا بأس بأن يقعد ويأكل قال أبو حنيفة رحمه الله ابتليت بهذا مرة فصبرت وهذا لأن أجابة الدعوة سنة قال عليه الصلاة والسلام من لم يجب الدعوة فقد عصى أبا القاسم فلايتركها لما اقترنت به من البدعة من غيره كصلاة الجنازة واجبة الإقامة وإن حضرتها نياحة فإن قدر على المنع منعهم وإن لم يقدر يصبر وهذا إذا لم يكن مقتدى به فإن كان مقتدى ولم يقدر على منعهم يخرج ولا يقعد لأن في ذلك شين الدين وفتح باب المعصية على المسلمين والمحكى عن أبي حنيفة رحمه الله في الكتاب كان قبل أن يصير مقتدى به ولو كان ذلك على المائدة لا ينبغي أن يقعد وإن لم يكن مقتدى لقوله تعالى { فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين } وهذا كله بعد الحضور ولو علم قبل الحضور لا يحضر لأنه لم يلزمه حق الدعوة (هداية

 சுருக்கம்- அனாச்சாரம் நடப்பதை நாம் அறிந்து கொள்ளாத நிலையில் ஒரு விருந்துக்கு நாம் சென்றால் மன வெறுப்புடன் அதில் கலந்து கொண்டு உடனே திரும்புவது தவறில்லை. ஆனால் மக்களால் பின்பற்றப்படும் நபர் இதுபோன்ற விருந்துகளில் எந்த சூழ்நிலையிலும் கலந்து கொள்ளக்கூடாது

பொது வாழ்வில் பொறுமையும் நிதானமும் மிக அவசியம்

قال نسطور لما بعث صاحبيه ليدعوان الملك إلى دين عيسى وأمرهما بالرفق فخالفا وأغلظا عليه فحبسهما وآذاهما فقال لهما نسطور : مثلكما كالمرأة التي لم تلد قط فولدت بعد ما كبرت فأحبت أن تعجل شبابه لتنتفع به فحملت على معدته ما لا يطيق فقتلته.(فيض القدير

 நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு நெருக்கமான  ஒருவர் மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைக்க தன் சார்பில் இருவர ஒரு ஊருக்கு அனுப்பி வைத்த போது அவ்விருவரிடமும் நீங்கள் மென்மையான முறையில் தான் மக்களை அழைக்க வேண்டும் என்றார் ஆனால் அவ்விருவரும் அந்த ஊருக்குச் சென்றவுடன் சற்று கடுமையாக நடந்து கொண்டனர். மக்களை நிர்பந்தப் படுத்தினர். அதனால் அவ்விருவரும் அரசனால் சிறை பிடிக்கப்பட்டனர். அப்போது  அவ்விருவரிடமும் கூறினார்

உங்களைப் பார்த்தால் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ஒரு பெண்ணுக்கு பல வருடங்களாக குழந்தை இல்லை. பிறகு அவள் தன் முதிய வயதில் தான் கர்ப்பம் அடைந்தாள். ஆனால் அந்தக் குழந்தை சீக்கிரமாக வளர வாலிபனாக வேண்டும் என ஆசைப்பட்டாள். அந்தக் குழந்தை அவள் நினைத்த போன்று சீக்கிரமாக வளராத காரணத்தால் அவளே அக்குழந்தையைக் கொன்று விட்டாள்.  

وَقَدْ قِيلَ إِنَّ عُمَر بْن الْخَطَّاب رَضِيَ اللَّه عَنْهُ سَأَلَ أُبَيّ بْن كَعْب عَنْ التَّقْوَى فَقَالَ لَهُ أَمَا سَلَكْت طَرِيقًا ذَا شَوْك ؟ قَالَ بَلَى قَالَ فَمَا عَمِلْت قَالَ شَمَّرْت وَاجْتَهَدْت قَالَ فَذَلِكَ التَّقْوَى .(تفسير ابن كثير

உமர் (ரலி) அவர்கள் உபை இப்னு கஅபு (ரலி) அவர்களிடத்திலே தக்வா என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு, உபை (ரலி) அவர்கள் நீங்கள் முட்கள் நிறைந்த மரங்கள் அடர்ந்த காட்டில் நடந்து செல்வதுண்டா? என்று கேட்டார்கள். அதற்கு, உமர் (ரலி) அவர்கள் ஆம் என்றார்கள். எப்படிக் கடந்து சென்றீர்கள்? சொல்லுங்கள்! என உபை (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் கேட்டார்கள்.
அதற்கு, உமர் (ரலி) அவர்கள் உடல் மற்றும் உடையைப் பாதுகாத்தவாறு, வழியையும் கடக்க வேண்டும். அதே நேரத்தில் உடலிலோ, உடையிலோ முள்ளும் தைத்து விடக் கூடாது என மிக கவனத்தோடும், பேணுதலோடும் ஒவ்வொரு எட்டாக எடுத்து வைத்து நடப்பேன் என்று பதிலளித்தார்கள். அப்போது, உபை (ரலி) அவர்கள் இவ்வாறு தான் இறையச்சமும் என்று பதிலளித்தார்கள்..

 

 

 

 

                                                           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...