02-09-2022 Safar - 4 |
|
بسم الله الرحمن الرحيم மனைவியிடம்
பொறுமை கொள்ளும் கணவனின் சிறப்பு |
|
https://chennaijamaathululama.blogspot.com
என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம் |
அல்லாஹ் சிலருக்கு அவனது
நாட்டத்தின் படி சிறந்த நற்குணமுள்ள மனைவியை அமைத்துத் தருவான். அதன் மூலம் அந்தப்
பெண் அந்த ஆணுடைய இம்மை மறுமை வெற்றிக்குக் காரணமாக அமைந்து விடுவாள்.
عَنْ أَبِي أُمَامَةَ
رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَقُولُ
مَا اسْتَفَادَ الْمُؤْمِنُ بَعْدَ تَقْوَى اللَّهِ خَيْرًا لَهُ مِنْ زَوْجَةٍ
صَالِحَةٍ إِنْ أَمَرَهَا أَطَاعَتْهُ وَإِنْ نَظَرَ إِلَيْهَا سَرَّتْهُ وَإِنْ
أَقْسَمَ عَلَيْهَا أَبَرَّتْهُ وَإِنْ غَابَ عَنْهَا نَصَحَتْهُ فِي نَفْسِهَا
وَمَالِهِ (ابن ماجة
ஆனால் எல்லோருக்கும்
அவ்வாறு அமைவதில்லை. மனைவி நல்லவளாக அமையாததை வைத்து அவரது இறையச்சத்தை எடை போட
முடியாது. நபிமார்களில் சிலருக்குக்கூட மனைவி நல்லவராக அமையவில்லை
ضَرَبَ اللَّهُ
مَثَلًا لِلَّذِينَ كَفَرُوا امْرَأَةَ نُوحٍ وَامْرَأَةَ لُوطٍ كَانَتَا تَحْتَ
عَبْدَيْنِ مِنْ عِبَادِنَا صَالِحَيْنِ فَخَانَتَاهُمَا فَلَمْ يُغْنِيَا
عَنْهُمَا مِنَ اللَّهِ شَيْئًا وَقِيلَ ادْخُلَا النَّارَ مَعَ الدَّاخِلِينَ
(10) التحريم
- قَوْلُهُ تَعَالَى:
" فَخَانَتَاهُمَاْ "عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا،
فِي قَوْلِهِ:" " فَخَانَتَاهُمَا " ، قَالَ: مَا زَنَتَا، أَمَّا
خِيَانَةُ امْرَأَةِ نُوحٍ، فَكَانَتْ تَقُولُ لِلنَّاسِ: إِنَّهُ مَجْنُونٌ، وَأَمَّا
خِيَانَةُ امْرَأَةِ لُوطٍ، فَكَانَتْ تَدُلُّ عَلَى الضَّيْفِ، فَتِلْكَ
خِيَانَتُهَا". تفسير ابن أبي حاتم
மேற்படி நபிமார்களின்
மனைவிகள் கணவருக்கு துரோகம் செய்தார்கள் என்பதை தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது
என்பதற்காக இந்த விளக்கம் தரப்பட்டுள்ளது. விபச்சாரம் போன்றதை அவர்கள் செய்யவில்லை.
நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவி தன் கணவரைப் பற்றி அவர் ஒரு பைத்தியம்
என்று கூறித் திரிந்தார். நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவி தன் கணவரை
சந்திக்க வரும் அழகான ஆண்களைப் பற்றி அந்த ஊரின் ஓரினச் சேர்க்கையாளர்களிடம் தகவல்
சொல்பவளாக இருந்தாள்.
நபி ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம்
அவர்களின்
மனைவியிடமும் ஆரம்பத்தில் நாவடக்கமற்ற குணம் இருந்தது. பிறகு தன்னைத் திருத்திக்கொண்டு
கணவருக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தார்.அல்லாஹ் குழந்தையையும் தந்தான்
فَاسْتَجَبْنَا لَهُ
وَوَهَبْنَا لَهُ يَحْيَى وَأَصْلَحْنَا لَهُ زَوْجَهُ إِنَّهُمْ كَانُوا
يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا وَكَانُوا لَنَا
خَاشِعِينَ (90) الانبياء - عن ابن عباس رضي الله عنهما : في قول الله تعالى :
{ و أصلحنا له زوجه } قال : كان في لسان امرأة زكريا طول فأصلحه الله تعالى (حاكم
فهذا الإصلاح هو كونها
صارت تلد بعد أن كانت عقيماً. وقول من قال : إن إصلاحها المذكور هو جعلها حسنة
الخلق بعد أن كانت شيئة الخلق لا ينافي ما ذكر لجواز أن يجمع له بين الأمرين فيها
، (تفسير الحاوي
நபி ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம்
அவர்களின்
மனைவியிடம் இருந்த குறையை நாம் சீர் செய்தோம் என்ற அல்லாஹ்வின் கூற்றுக்கு இரு
விளக்கங்கள். 1.மலட்டுத் தன்மையை நீக்கினோம். 2.குணத்தைத் திருத்தினோம் என இரு
விளக்கங்கள் இருந்தாலும் இரண்டும் ஒன்றிணைய வாய்ப்புண்டு. எப்போது அந்தப்
பெண்ணிடம் நாவின் பேணுதல் வந்து விட்டதோ அப்போதும் குழந்தை பாக்கியமும் கிடைத்தது
என்றும் பொருள்.
மனைவியின் ஒரு குணம்
பிடிக்கா விட்டாலும் மற்றொரு நல்ல குணத்தைப் பொருந்திக் கொண்டு வாழ்வது நல்லது
عَنْ أَبِي هُرَيْرَةَ
قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَفْرَكْ
مُؤْمِنٌ مُؤْمِنَةً إِنْ كَرِهَ مِنْهَا خُلُقًا رَضِيَ مِنْهَا آخَرَ (مسلم )
பிடிக்காத தீய குணம்
என்பதன் அளவுகோல் என்ன?
விபச்சாரம் போன்றதைப்
பொருந்திக் கொண்டு வாழ வேண்டிய அவசியமில்லை
أي ليس لمؤمن أن يبغض زوجته المؤمنة ، لأنه
إن وجد منها خلقًا يكرهه ، كسوء خلق ، رضي منها خلقًا يحبه ، كالعفاف والمعاونة ،
ونحو ذلك .( تطريز رياض الصالحين
சின்ன விஷயங்களுக்கெல்லாம்
தலாக் என்ற முடிவு கூடாது
عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَبْغَضُ الْحَلَالِ إِلَى اللَّهِ تَعَالَى
الطَّلَاقُ (ابوداود
சின்ன
விஷயங்களுக்கெல்லாம் தலாக் என்ற முடிவெடுப்பது ஷைத்தானை ஊக்கப் படுத்துவதாகும்
عَنْ جَابِرٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ إِبْلِيسَ يَضَعُ
عَرْشَهُ عَلَى الْمَاءِ ثُمَّ يَبْعَثُ سَرَايَاهُ فَأَدْنَاهُمْ مِنْهُ
مَنْزِلَةً أَعْظَمُهُمْ فِتْنَةً يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ فَعَلْتُ كَذَا
وَكَذَا فَيَقُولُ مَا صَنَعْتَ شَيْئًا قَالَ ثُمَّ يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ
مَا تَرَكْتُهُ حَتَّى فَرَّقْتُ بَيْنَهُ وَبَيْنَ امْرَأَتِهِ قَالَ فَيُدْنِيهِ
مِنْهُ وَيَقُولُ نِعْمَ أَنْتَ قَالَ الْأَعْمَشُ أُرَاهُ قَالَ فَيَلْتَزِمُهُ
(مسلم
சுருக்கம்.- இப்லீஸ்களின் மாநாடு
தண்ணீர் மீது நடைபெறும். அந்த
மாநாட்டில் ஒவ்வொரு ஷைத்தானும்
தங்களுடைய சேவையை? மாநாட்டில் சொல்லிக்
காட்டுவார்கள். அவர்களில் மிகவும் பாராட்டுக்குரியவன் யாரென்றால் எந்த ஷைத்தான்
ஒற்றுமையோடு இருக்கும் இருவரைப் பிரித்து வைத்தானோ அவன் தான். அவனை தலைமை ஷைத்தான்
கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவான்.
ஷைத்தான்களை ஊக்கப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக வாயாடி மனைவியிடம் பொறுமை கொள்வது
وقال صلى الله عليه وسلم : " خيركم خيركم
لأهله " وفي رواية خيركم ألطفكم بأهله " وكان رسول الله صلى الله عليه وسلم شديد اللطف بالنساء
وقال صلى الله عليه وسلم " أيما رجل صبر على سوء خلق امرأته أعطاه الله الأجر
مثل ما أعطى أيوب عليه السلام على بلائه وأيما امرأة صبرت على سوء خلق زوجها
أعطاها الله من الأجر مثل ما أعطى آسية بنت مزاحم امرأة فرعون " . (تفسير
الحاوي- احياء علوم الدين
நபி ஸல் அவர்கள்
மனைவிகளிடம் மிக அன்பாக நடந்து கொள்பவர்களாக இருந்தார்கள். மேலும் நபி ஸல்
கூறினார்கள். எவர் தன் மனைவியின் தீய குணத்தின் மீது பொறுமை கொள்வாரோ அவருக்கு அல்லாஹ் நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம்
அவர்கள் நோயின்மீது பொறுமை கொண்டதற்காக என்ன நற்கூலி வழங்கினானோ அத்தகைய நற்கூலியை
வழங்குவான். அதேபோல எந்தப் பெண் தன்னுடைய கணவனின் தீய குணத்தின் மீது பொறுமை கொள்வாரோ
அவருக்கு அல்லாஹ் ஃபிர்அவ்னின் மனைவி ஆஸியா அம்மையாருக்கு வழங்கிய நற்கூலி போன்று
நற்கூலி வழங்குவான். நூல்- தஃப்ஸீருல் ஹாவீ
தன்னுடைய மனைவி வாயாடி என்பதை முறையிட வந்தவருக்கு உமர் ரழி
கூறிய அறிவுரை
روي أن رجلا جاء إلى [عمر بن الخطاب] رضى الله
عنه ليشكو سوء خلق زوجته فوقف على بابه ينتظر خروجه فسمع هذا الرجل امرأة عمر
تستطيل عليه بلسانها وتخاصمه وعمر ساكت لا يرد عليها. فانصرف الرجل راجعا وقال: إن
كان هذا حال عمر مع شدته وصلابته وهو أمير المؤمنين فكيف حالي؟ وخرج عمر فرآه
موليا عن بابه فناداه وقال: ما حاجتك أيها الرجل؟فقال: يا أمير المؤمنين جئت أشكو
إليك سوء خلق امرأتي واستطالتها عَلَيّ فسمعت زوجتك كذلك فرجعت وقلت: إذا كان هذا
حال أمير المؤمنين مع زوجته فكيف حالي ؟قال عمر ـ يا أخي اسمع لمواقفهم رضوان الله
تعالى عليهم ـ يا أخي إني أحتملها لحقوق لها عليّ إنها لطباخة لطعامي، خبازة
لخبزي، غسالة لثيابي، مرضعة لولدي وليس ذلك كله بواجب عليها ويسكن قلبي بها عن
الحرام فأنا أحتملها لذلك ، فقال الرجل: يا أمير المؤمنين وكذلك زوجتي قال عمر:
فاحتملها يا أخي فإنما هي مدة يسيرة (فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله
فيه خيرا كثيرا) (عشرة النساء للنسائي)
உமர் ரழி அவர்களிடம்
ஒருவர் தன் மனைவியின் கெட்ட குணம் பற்றி முறையிட வந்தார். வீட்டை அடைந்தவுடன் உமர்
ரழி அவர்கள் வெளியே வருவதை எதிர் பார்த்து வாசலில் காத்திருந்தார். அப்போது
வீட்டுக்குள் உமர் ரழி அவர்களின் மனைவி உமர் ரழி அவர்களைத் திட்டுவதையும் அதைக்
கேட்டும் உமர் ரழி அவர்கள் பதில் எதுவும் பேசாமல் மவுனமாக இருப்பதையும் கண்டு உமர்
ரழி அவர்களின் நிலையே இது என்றால் என்னுடைய நிலை எவ்வளவோ பரவாயில்லை என்று எண்ணி
வீட்டுக்குத் திரும்பினார். அப்போது உமர் ரழி அவர்கள் அவரைப் பார்த்து
விட்டார்கள். அவரை அழைத்து எதற்காக வந்தீர்கள் என்று கேட்க, அதற்கு அவர் என்
மனைவியின் கெட்ட குணம் பற்றி முறையிட வந்தேன். ஆனால் இங்கு வந்ததும் என்னுடைய நிலை
எவ்வளவோ பரவாயில்லை என்று எண்ணி வீட்டுக்குத் திரும்பினேன் என்றும் கூறினார்.
அப்போது உமர் ரழி அவர்கள் அவரிடம் சகோதரரே நன்றாக நான் சொல்வதைக் கேளுங்கள்.
மனைவியின் மீது எனக்குள்ள கடமைகள் அடிப்படையில் நான் அவள் பேசுவதை சில நேரம்
சகித்துக் கொள்கிறேன். என் மனைவி எனக்காக உணவு சமைக்கிறாள். துணி துவைக்கிறாள்.
என் குழந்தைக்கு பாலூட்டுகிறாள். இதுவெல்லாம் அவள் மீது கடமை இல்லாமலேயே அவள்
செய்கிறாள் இத்தனைக்கும் மேலாக அவளால் தான் என்னுடைய உள்ளம் மற்ற பெண்களின் மீது
ஹராமான முறையில் அலைபாயாமல் நிலை பெறுகிறது. இத்தனை விஷயங்களுக்காக நான் நான் அவள்
பேசுவதை சில நேரம் சகித்துக் கொள்கிறேன் என்று கூற, அதற்கு அந்த மனிதர் என்
மனைவியும் அவ்வாறே எனக்காக மற்ற பணிவிடைகள் அனைத்தும் செய்கிறாள் எனினும் வாய்
அதிகம் என்று கூற அதற்கு உமர் ரழி நீர் சற்று பொறுத்துக் கொள்ள வேண்டும்.
இதுவெல்லாம் துன்யாவுடைய கொஞ்ச கால வாழ்க்கை தான் என்றார்கள். பிறகு அந்தப்
பெண்களின் சில குணங்களை நீங்கள் வெறுத்தாலும் வேறு சில நல்ல குணங்களை வைத்து
பொருந்திக் கொள்ள வேண்டும். எனவும் அறிவுரை கூறினார்கள்.
قال الامام الغزالي رحمه الله "الصبر علي لسان النساء مما يمتحن به
الاولياء (احياء علوم الدين
இமாம் கஸ்ஸாலி ரஹ்
அவர்கள் கூறினார்கள். மனைவியின் கெட்ட குணத்தின் மீது பொறுமை கொள்வது என்பது
இறைநேசர்களை அல்லாஹ் தன்னுடைய நெருக்கத்தைப் பெற வைப்பதற்கு ஏற்படுத்தும் சோதனை
கணவன் மனைவி சேர்ந்து வாழ நினைத்தாலும் அதற்குத்
தடையாக பெற்றோர்கள்
سأل الإمام أحمد رجل
فقال : إن أبي يأمرني أن أطلق امرأتي ، قال : لا تطلقها ، قال : أليس عمر أمر ابنه
عبد الله أن يطلق امرأته ، قال : حتى يكون أبوك مثل عمر . (إيقاظ الأفهام في شرح عمدة الأحكام )
இமாம் அஹ்மதுப்னு ஹம்பல் ரஹ் அவர்களிடம் ஒருவர் வந்து என் மனைவியை தலாக்
கூறும்படி என்னுடைய தந்தை என்னை வற்புறுத்துகிறார். நான் என்ன செய்யட்டும் என்று
கேட்டார். அதற்கு இமாம் அவர்கள் உன் தந்தை பேச்சைக் கேட்டு அவளை நீ தலாக்
சொல்லக்கூடாது என்று கூறினார்கள். அதற்கு அவர் ஏன் உமர் ரழி அவர்கள் தன்னுடைய
மகனிடம் அவரது மனைவியை தலாக் கூறும்படி வற்புறுத்தவில்லையா என்றார். அதற்கு இமாம்
அவர்கள் உமர் ரழி அவர்களின் அந்தஸ்தில் உன்னுடைய தந்தை இருந்தால் நீ கூறும்
வாதத்தை நான் ஏற்றுக் கொள்வேன் என்றார்கள்.
மற்றொரு சம்பவத்தில் உமர் ரழி அவர்களிடமே இதுபோல் வழக்கு வரும். முதலில் மகன்
வந்து சொன்னதும் தந்தையை அழைத்து வரச்சொல்லி விசாரிப்பார்கள். அப்போது அவர் நபி
இப்றாஹீம் அலை தன் மகனிடம் அவரது மனைவியை தலாக் கூறும்படி வற்புறுத்த்தவில்லையா
என்று கேட்பார். அதற்கு உமர் ரழி அவர்கள் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்
அந்தஸ்தில் உன்னுடைய தந்தை இருந்தால் நீ கூறும் வாதத்தை நான் ஏற்றுக் கொள்வேன் என்பார்கள்.
ஏதேனும் பிரச்சினை வரும்போது யாரேனும் ஒருவர் தாழ்ந்து போவது தவறில்லை.
குறிப்பாக கணவன் தாழ்ந்து போகலாம். பொதுவாக தோற்றுப் போவதில் மனிதனுக்கு மகிழ்ச்சி
இல்லை. ஆனால் மனைவியிடம் தோற்றுப் போவதில் மகிழ்ச்சி அடையலாம்.நபி ஸல் அவர்களுக்கும்
ஆயிஷா ரழிஅவர்களுக்கும் நடந்த இரண்டாவது ஓட்டப் பந்தயம் போல.
கணவனின்
கண்ணுக்கு மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவது போன்று மனைவியின்
கண்ணுக்கு கணவனும் தன்னை அழகாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
அதற்காக
அழகு என்பதை தவறாகப் புரிந்த பெண்களில் யாரேனும் தாடி வைக்க வேண்டாம் என்று
சொன்னால் அதை ஏற்கக் கூடாது. தாடியை அலங்கோலமாக இல்லாமல் அழகாக வைப்பது நல்லது
قال [ابن عباس]: إني لأتزين لامرأتي كما تتزين
لى وما أحب أن أستطف كل حقي الذي لي عليها فتستوجب حقها الذي لها عليَّ لأن الله
تعالى يقول: (ولهن مثل الذي عليهن بالمعروف) وقد دخل على الخليفة عمر زوج أشعت
أغبر ومعه امرأته وهي تقول: لا أنا ولا هذا لا تريده .. ، فعرف كراهية المرأة
لزوجها فأرسل الزوج ليستحم ويأخذ من شعر رأسه ويقلم أظافره فلما حضر أمره أن يتقدم
من زوجته فاستغربته ونفرت منه ثم عرفته فقَبِلَتْ به ورجعت عن دعواها رجعت تراجعت
إذن عن طلب الطلاق فقال عمر: وهكذا فاصنعوا لهن فوالله إنهن ليحببن أن تتزينوا لهن
كما تحبون أن يتزين لكم (الكتاب : عشرة النساء
للنسائي)
இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் கூறினார்கள் எனக்காக
என் மனைவி அலங்காரம் செய்வது போன்று நான் என் மனைவிக்காக அலங்கரித்துக் கொள்வதை
விரும்புகிறேன். என் மீது மட்டும் அவளுக்குக் கடமைகள் உள்ளது. அவள் மீது எனக்குக்
கடமைகள் எதுவும் இல்லை என்பதை நான் விரும்பவில்லை. காரணம் அல்லாஹ் குர்ஆனில்
அந்தப் பெண்களின் மீது உங்களுக்கும் சில கடமைகள் உள்ளது என்று கூறுகிறான். உமர்
ரழி அவர்களிடம் தலைவிரி கேலமாக அழுக்கான ஆடையுடன் ஒருவர் மனைவியுடன் வந்தார்.
அவரிடமிருந்து அப்பெண் விவாகரத்துக் கேட்கிறார் என்பதையும் எதற்காக விவாகரத்துக்
கெட்கிறார் என்பதையும் புரிந்து கொண்ட உமர் ரழி அவர்கள் அந்தக் கணவரிடம் முதலில்
உன்னை நீ நன்றாக சுத்தப்படுத்திக் கொண்டு வரும்படியும், அழகான ஆடையை அணிந்து வர
வேண்டும் என்றும் தலைமுடியை நன்றாக வாரி வர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்கள்.
அவர் அவ்வாறே செய்தார். அவர் திரும்பி வந்த பின் அவரை மனைவிக்கு முன்னால் வந்து
நிற்கச் சொன்னார்கள். அந்த மனைவி அந்தக் கோலத்தில் அவரைப் பார்த்த பின்பு முதலில்
மறுத்தாலும் சற்று நேரத்தில் மனம் மாறி விவாகரத்துக் கேட்கும் எண்ணத்தை மாற்றிக்
கொண்டார். அப்போது தான் உமர் ரழி அவர்கள் அந்தக் கணவரிடம். உங்கள் கண்ணுக்கு மனைவி
அழகாக இருக்க வேண்டும் என விரும்புவது போன்று மனைவியின் கண்ணுக்கு நீங்கள் அழகாக
இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள் என்று கூறினார்கள்.
மிகச்சிறந்த தலைப்பு
பதிலளிநீக்கு