07-10-2022 ரபீஉல் அவ்வல் 10 |
|
بسم
الله الرحمن الرحيم நபி நேசம் நம்
சுவாசத்தை விட மேலானது |
|
https://chennaijamaathululama.blogspot.com
என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம் |
உயிருக்கும் மேலாக நபிகளாரை நேசிக்க வேண்டும்
النَّبِيُّ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ
أَنْفُسِهِمْ (6) الاحزاب -
அல்லாஹ் ரஸூலை விட மற்றவைகளை அதிகமாக
நேசிப்பவர்களுக்கு எச்சரிக்கை
قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ
وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا
وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ
وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ
بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ (24)التوبة
நபி (ஸல்) அவர்களை நேசிப்பதால் கிடைக்கும்
பலன்கள்
عَنْ أَنَسٍ رَضِيَ
اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ عَنْ السَّاعَةِ فَقَالَ مَتَى السَّاعَةُ قَالَ وَمَاذَا أَعْدَدْتَ
لَهَا قَالَ لَا شَيْءَ إِلَّا أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ فَقَالَ أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ قَالَ أَنَسٌ فَمَا فَرِحْنَا
بِشَيْءٍ فَرَحَنَا بِقَوْلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ قَالَ أَنَسٌ فَأَنَا أُحِبُّ
النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ
وَأَرْجُو أَنْ أَكُونَ مَعَهُمْ بِحُبِّي إِيَّاهُمْ وَإِنْ لَمْ أَعْمَلْ
بِمِثْلِ أَعْمَالِهِمْ (بخاري3688
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கியாமத் எப்போது வரும் என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் கியாமத் நாளுக்காக நீர் என்ன
தயாரித்து வைத்துள்ளீர் என்று கேட்க, அதற்கு அவர் |(பெரிதாக) எதுவும் என்னிடம் இல்லை. எனினும் அல்லாஹ்வையும் அவனது ரஸூலையும் நேசிக்கிறேன்
என்றார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீர் யாரை நேசிக்கிறீரோ அவர்களுடன் சுவனத்தில்
இருப்பீர் என்று பதில் கூறினார்கள். அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியது எங்களுக்கு மிகவும் சந்தோஷத்தை உண்டாக்கியது.நான்
நபி ஸல் அவர்களையும், அபூபக்கர் (ரழி)
உமர் (ரழி) அவர்களையும் நேசிக்கிறேன். அவர்கள் அளவுக்கு நான் அமல் செய்யவலில்லை.
எனினும் அவர்களை நான் நேசிப்பதால் அவர்களுடன் சுவனத்தில் இருப்பேன் என்பதை ஆதரவு
வைக்கிறேன்.
புகாரீ3688
நபி (ஸல்) அவர்களை நேசிப்பதன் வெளிப்பாடாக
அவர்களுடன் சுவனத்திலும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நபித்தோழர்கள்
عَنْ عَائِشَة قَالَتْ جَاءَ رَجُل إِلَى النَّبِيّ
صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : يَا رَسُول اللَّه : إِنَّك لَأَحَبّ
إِلَيَّ مِنْ نَفْسِي وَأَحَبّ إِلَيَّ مِنْ أَهْلِي وَأَحَبّ إِلَيَّ مِنْ
وَلَدِي وَإِنِّي لَأَكُون فِي الْبَيْت فَأَذْكُرك فَمَا أَصْبِر حَتَّى آتِيك
فَأَنْظُر إِلَيْك وَإِذَا ذَكَرْت مَوْتِي وَمَوْتك عَرَفْت أَنَّك إِذَا دَخَلْت
الْجَنَّة رُفِعْت مَعَ النَّبِيِّينَ وَإِنْ دَخَلْت الْجَنَّة خَشِيت أَنْ لَا
أَرَاك فَلَمْ يَرُدّ عَلَيْهِ النَّبِيّ صَلَّى حَتَّى نَزَلَتْ عَلَيْهِ وَمَنْ
يُطِعْ اللَّه وَالرَّسُول فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّه عَلَيْهِمْ
مِنْ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاء وَالصَّالِحِينَ وَحَسُنَ
أُولَئِكَ رَفِيقًا ( تفسير ابن كثير
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து யாரஸூலல்லாஹ் நீங்கள் எனக்கு என் உயிரை விடவும் என்
மனைவியை விடவும் என் பிள்ளைகளை விடவும் மிகவும் பிரியமானவர்களாக இருக்கிறீர்கள்.
நான் வீட்டில் இருக்கும்போது அடிக்கடி உங்களின் ஞாபகம் வந்தால் உடனே உங்களை வந்து பார்த்து விடுகிறேன். இந்த நிலையில் ஒரு விஷயம்
என்னைக் கவலையில் ஆழ்த்தியது. எனக்கும் மவ்த் உண்டு. உங்களுக்கும் மவ்த் உண்டு.
எனினும் உங்களின் வஃபாத்துக்குப் பின்னால் நீங்கள் மற்ற நபிமார்களுடன் உயர்ந்த
சுவனத்தில் நுழைவீர்கள். நாங்கள் கீழ்நிலையில் இருப்போம் எனவே இந்த உலக
வாழ்வுக்குப் பிறகு உங்களைப் பார்க்க முடியாமல் போய் விடுமோ என்ற கவலை என்னை
வாட்டியது. இதன் விளக்கம் தெரியாமல் என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை அதனால்
ஓடோடி வந்தேன் என்றார். நபி ஸல் அவர்கள் சற்று மவுனமாக இருந்தார்கள். சற்று நேரத்தில்
மேற்படி வசனம் இறங்கியது.
عَنْ سَعِيد بْن جُبَيْر
قَالَ : جَاءَ رَجُل مِنْ الْأَنْصَار إِلَى رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ
وَسَلَّمَ وَهُوَ مَحْزُون فَقَالَ لَهُ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ
وَسَلَّمَ " يَا فُلَان مَالِي أَرَاك مَحْزُونًا " فَقَالَ يَا نَبِيّ
اللَّه شَيْء فَكَّرْت فِيهِ فَقَالَ مَا هُوَ ؟ قَالَ نَحْنُ نَغْدُو عَلَيْك
وَنَرُوح نَنْظُر إِلَى وَجْهك وَنُجَالِسك وَغَدًا تُرْفَع مَعَ النَّبِيِّينَ
فَلَا نَصِل إِلَيْك فَلَمْ يَرُدّ عَلَيْهِ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ
وَسَلَّمَ شَيْئًا فَأَتَاهُ جِبْرِيل بِهَذِهِ الْآيَة " وَمَنْ يُطِعْ
اللَّه وَالرَّسُول فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّه عَلَيْهِمْ مِنْ
النَّبِيِّينَ " الْآيَة فَبَعَثَ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ
وَسَلَّمَ فَبَشَّرَهُ . (تفسير ابن كثير)
மற்றொரு அறிவிப்பில் (நன்கு
திடகாத்திரமாக இருந்த) ஒரு சஹாபீ கவலையுடன் (உடல் மெலிந்து) நபிகளாரிடம் வந்தபோது ஏன் கவலையுடன் இருக்கிறீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் காரணம் கேட்க, யாரஸூலல்லாஹ் நாங்கள்
காலையிலும் மாலையிலும் உங்களுடனே இருக்கிறோம் உங்களின் திருமுகத்தை தினமும்
காண்பதிலும் உங்களுடன் அமருவதிலும் நாங்கள் சந்தோஷம் அடைகிறோம். ஆனால் உங்களின்
மறைவுக்குப் பின்னால் நீங்கள் மற்ற நபிமார்களுடன் உயர்ந்த சுவனத்தில் நுழைவீர்கள்.
உங்களை நெருங்க முடியாதவர்களாக மறுமையில் ஆகி விடுவோமோ என்ற கவலைப் படுகிறோம்
என்று கூற, சற்று நேரத்தில் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் இந்த வசனத்துடன் இறங்கினார்கள்
நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு ஆபத்து என்றவுடன் உயிரைக் கொடுத்துக் காப்பாற்றிய
தோழர்கள்
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُفْرِدَ يَوْمَ أُحُدٍ فِي
سَبْعَةٍ مِنْ الْأَنْصَارِ وَرَجُلَيْنِ مِنْ قُرَيْشٍ فَلَمَّا رَهِقُوهُ قَالَ
مَنْ يَرُدُّهُمْ عَنَّا وَلَهُ الْجَنَّةُ أَوْ هُوَ رَفِيقِي فِي الْجَنَّةِ
فَتَقَدَّمَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَقَاتَلَ حَتَّى قُتِلَ ثُمَّ رَهِقُوهُ
أَيْضًا فَقَالَ مَنْ يَرُدُّهُمْ عَنَّا وَلَهُ الْجَنَّةُ أَوْ هُوَ رَفِيقِي
فِي الْجَنَّةِ فَتَقَدَّمَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَقَاتَلَ حَتَّى قُتِلَ
فَلَمْ يَزَلْ كَذَلِكَ حَتَّى قُتِلَ السَّبْعَةُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِصَاحِبَيْهِ مَا أَنْصَفْنَا أَصْحَابَنَا (مسلم4742
உஹதுப்போரில் நபி (ஸல்) அவர்களைச் சுற்றி ஏழு அன்சாரித் தோழர்கள் மற்றும் இரண்டு குரைஷித்
தோழர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் எதிரிகளுடன் தனித்து விடப்பட்டார்கள்.
எதிரிகள் நபி (ஸல்) அவர்களைச் சூழ்ந்து
கொண்ட அந்த சூழ்நிலையில் (நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய தோழர்களுக்கு
நற்பாக்கியத்தைப் பெற்றுத் தரும் நோக்கத்தில்) தமது
தோழர்களிடம் கூறினார்கள். உங்களில் யார் எதிரிகளிடமிருந்து இறைத்தூதரைப் பாதுகாக்கும்
கேடயமாக இப்போது செயல்படுகிறாரோ அவருக்கு சுவனம் உண்டு என்றவுடன் முதலில் ஒரு
அன்சாரித்தோழர் முன்வந்து எதிரிகளுடன் சண்டையிட்டார். இறுதியில்
ஷஹீதாக்கப்பட்டார். மறுபடியும் எதிரிகள் சூழ்ந்து கொண்ட நிலையில் நபி (ஸல்) அவர்கள் மீண்டும் அந்த சுபச்செய்தியைக் கூறினார்கள். அதற்குப் பின் மற்றொரு அன்சாரித்தோழர்
முன்வந்து எதிரிகளுடன் சண்டையிட்டார். அவரும் ஷஹீதாக்கப்பட்டார். இப்படியாக ஏழு
அன்சாரித்தோழர்களும் ஷஹீதாக்கப்பட்டார்கள். (இறுதியில்
அல்லாஹ்வின் அருளால் நபி(ஸல்) அவர்கள்
காப்பாற்றப்பட்டார்கள்) அப்போது நபி(ஸல்)அவர்கள் அவ்விரு குரைஷித் தோழர்களிடம் கூறினார்கள். குரைஷித் தோழர்களான
நாம் நமது அன்சாரித்தோழர்களுக்கு சரி சமமாக நடந்து கொள்ளவில்லை. அதாவது அந்த ஏழு
பேர் மட்டுமே ஷஹாத த்திலும் சுவனத்தைப் பெற்றுக் கொள்வதிலும் முந்திக்
கொண்டார்கள்.
விளக்கம்- அனைத்து நபித் தோழர்களுக்கும் நபி(ஸல்) அவர்களைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை
இருந்தது. இருப்பினும் அதில் அவர்களுக்கு மத்தியில் போட்டி இருந்தது.ஒருவர்
ஷஹீதாக்கப்பட்டவுடன் உடனே வேகமாக களத்தில் இறங்குவதில் அன்சாரித்தோழர்கள் மிக
வேகமாக இருந்தார்கள்.
عن مخرمة بن بكير عن أبيه قال : بعثني رسول الله صلى
الله عليه و سلم يوم أحد لطلب سعد بن الربيع و قال لي : إن رأيته فاقرئه مني
السلام و قل له : يقول لك رسول الله صلى الله عليه و سلم : كيف تجدك ؟ قال : فجعلت
أطوف بين القتلى فأصبته وفي آخر رمق و به سبعون ضربة ما بين طعنة برمح و ضربة بسيف
و رمية بسهم فقلت له : يا سعد إن رسول الله صلى الله عليه و سلم يقرأ عليك السلام
و يقول لك : خبرني كيف تجدك ؟ قال على رسول الله السلام و عليك السلام قل له : يا
رسول الله أجدني أجد ريح الجنة و قل لقومي الأنصار لا عذر لكم عند الله أن يخلص
إلى رسول الله صلى الله
عليه و سلم و فيكم شفر يطرف قال :
و فاضت نفسه رحمه الله [ مستدرك الحاكم وفي
رواية يقول سعد : جزاك الله عنا و عن جميع الأمة خيرا
ஹழ்ரத்
ஸஃது இப்னு ரபீஉ (ரழி) அவர்கள் நபி (ஸல்)
அவர்களுக்குப் பிரியமான அன்சாரீ சஹாபீ.
நபி (ஸல்) அவர்களை மதீனாவுக்கு
வரும்படியும் அங்கு எல்லா விதமான ஒத்துழைப்பும் தருகிறோம் என்று கூறி அகபாவில்
ஒப்பந்தம் செய்தவர்களில் இவரும் ஒருவர். உஹதுப் போர் முடிந்த போது நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் உங்களில் யாரேனும் சென்று
ஸஃது இப்னு ரபீஉ (ரழி) எந்த இடத்தில்
குற்றுயிராக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்து விட்டு அவர் இறுதியாக என்ன
சொல்கிறார். என்பதையும் கேட்டு வரும்படி அனுப்புகிறார்கள். ஹழ்ரத் ஜைதுப்னு தாபித்
ரழி அவர்கள் சென்று பார்த்தபோது ஸஃது இப்னு ரபீஉ ரழி அவர்கள் எழுபது வெட்டுக்
காயங்களுடன் குற்றுயிராக மயக்கமுற்றுக் கிடந்தார்கள். அந்த எழுபது வெட்டுகளில் 12
மட்டுமே அன்னாரின் விழிப்பு நிலையில் எதிரிகள் வெட்டியதாகும் மீதி அனைத்தும்
அன்னார் மயக்கமுற்ற பிறகு வெட்டியதாகும். மயக்கம் தெளிந்த பின் அவர்கள் ஜைது (ரழி) அவர்களை நோக்கி நான் இன்னும் சற்றுநேரத்தில்
இறந்து விடுவேன். என் பாசமுள்ள நபிக்கு என் சலாமைக் கூறுங்கள். மேலும் இத்தகைய
ஷஹாதத் என்னும் மாபெரும் பாக்கியத்தை எங்களுக்குப் பெற்றுத் தந்ததற்காக என்
சார்பில் நன்றியும் கூறுங்கள். என் நண்பர்கள் அனைவருக்கும் என் சலாமைக்
கூறுங்கள் மேலும் எனது நண்பர்களிடம் கூறுங்கள். நம் தோழர்களில் யாரேனும் உயிருடன்
இருக்கும் நிலையில் நமது உயிரினும் மேலான நபி ஸல் அவர்களை எதிரிகளில் ஒருவன்
நெருங்கினால் அந்த தோழரின் கண்களில் மட்டுமே உயிர் ஒட்டியிருந்தாலும் சரி, அந்த
நிலையில் அவர் நமது நபியைப் பாதுகாக்கத் தவறினால் அவரை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்க
மாட்டான் என்று கூறுங்கள் என்றார்.இந்த வார்த்தையைக் கூறிய சற்று நேரத்தில்
அவரின் உயிர் பிரிந்தது. நூல் ஜாதுல் மஆத்
நபிகளாரின் மீதுள்ள பிரியத்தால் அவர்களின் புனித உடம்பை முத்தமிடும் பாக்கியம்
பெற்ற சஹாபீ
عَنْ
أُسَيْدِ بْنِ حُضَيْرٍ رَجُلٍ مِنْ الْأَنْصَارِ قَالَ بَيْنَمَا هُوَ يُحَدِّثُ
الْقَوْمَ وَكَانَ فِيهِ مِزَاحٌ بَيْنَا يُضْحِكُهُمْ فَطَعَنَهُ النَّبِيُّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي خَاصِرَتِهِ بِعُودٍ فَقَالَ أَصْبِرْنِي
فَقَالَ اصْطَبِرْ قَالَ إِنَّ عَلَيْكَ قَمِيصًا وَلَيْسَ عَلَيَّ قَمِيصٌ
فَرَفَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَمِيصِهِ
فَاحْتَضَنَهُ وَجَعَلَ يُقَبِّلُ كَشْحَهُ قَالَ إِنَّمَا أَرَدْتُ هَذَا يَا
رَسُولَ اللَّهِ (ابن ماجة- بَاب فِي قُبْلَةِ الْجَسَدِ- كِتَاب الْأَدَبِ
உஸைத் இப்னு ஹுழைர்
என்ற நபித்தோழர் தமாஷாகப் பேசுவார்.
ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் அவர் தமாஷாகப் பேசிக் கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்களும் விளையாட்டாக அவரது இடுப்பில் ஒரு
குச்சியால் குத்தினார்கள். இதன் பின்பு அந்த சஹாபீ யாரஸூலல்லாஹ் என்னுடைய
இடுப்பில் நீங்கள் குத்தி வலியை ஏற்படுத்தி விட்டீர்கள். எனவே அதற்குப் பழிக்குப்
பழியாக நான் உங்களை அதே போன்று குத்துவதற்கு நீங்கள் இடமளிக்க வேண்டும் என்ற போது
நபி (ஸல்) அவர்கள் அதை ஏற்றுக்
கொண்டார்கள். அப்போது அவர் யாரஸூலல்லாஹ் நீங்கள் என்னைக் குத்தும்போது என்
உடம்பில் சட்டை இருந்திருக்கவில்லை. ஆனால் உங்கள் உடம்பில் சட்டை உள்ளதே என்று
கூற, நபி (ஸல்) அவர்கள் தமது சட்டையை
உயர்த்திக் காண்பிக்க, அவர் நபி (ஸல்)
அவர்களைக் கட்டியணைத்து அவர்களின் புனித மேனியில் முத்தமிட்டு யாரஸூலல்லாஹ் இதைத் தான்
நான் விரும்பினேன் என்றார்.
மேற்படி ஹதீஸ் பின்வரும் அறிவிப்பில் ஸவாத் ரழி என்ற சஹாபீ விஷயமாக வருகிறது
عن سَوَاد بْن عَمْرٍو
قَالَ : أَتَيْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- وَأَنَا مُتَخَلِّقٌ بِخَلُوقٍ
فَلَمَّا رَآنِى قَالَ لِى :« يَا سَوَادُ بْنَ عَمْرٍو خَلُوقُ
وَرْسٍ أَوَلَمْ أَنْهَ عَنِ الْخَلُوقِ؟ ». وَنَخَسَنِى بِقَضِيبٍ فِى يَدِهِ فِى
بَطْنِى فَأَوْجَعَنِى فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ الْقِصَاصَ قَالَ الْقِصَاصَ
فَكَشَفَ لِى عَنْ بَطْنِهِ فَجَعَلْتُ أُقَبِّلُهُ ثُمَّ قُلْتُ يَا رَسُولَ
اللَّهِ أَدَعُهُ شَفَاعَةً لِى يَوْمَ الْقِيَامَةِ (سنن الكبري للبيهقي
ஸவாத் இப்னு அம்ர் ரழி அவர்கள் கூறினார்கள்.
நான் நபி (ஸல்) அவர்கள் தடுத்த ஒரு நறுமணத்தைப் பூசிய படி நான் வந்தேன். அதை நபி (ஸல்) அவர்கள் கண்டித்த போது அவர்களின் கையில்
வைத்திருந்த குச்சியைக் கொண்டு என் வயிற்றில் இடித்து விட்டார்கள். எனக்கு
வலித்தது. நான் அதைக் காரணமாக வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதரே என்னை அடித்ததற்கு
நான் உங்களைப் பழி வாங்க வேண்டும் என்றேன். நபி(ஸல்)அவர்கள் தன் வயிற்றைத் திறந்து காட்டினார்கள், நான் அவர்களின் வயிற்றை
முத்தமிட்டு, யாரஸூலல்லாஹ் மறுமையில் என் சிபாரிசுக்காக விட்டு வைக்கிறேன் என்றேன்
\
நபி (ஸல்)
அவர்களை உளமாற நேசிப்பவர்களின்
அடையாளங்களில் சில
யார் மீதும் சிறிதளவும் பொறாமை கொள்ளாமல் எதார்த்தமான
உள்ளத்துடன் இருப்பது நபிகளார் சுன்னத்.
عَنْ
سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ قَالَ قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ لِي رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا بُنَيَّ إِنْ قَدَرْتَ أَنْ
تُصْبِحَ وَتُمْسِيَ لَيْسَ فِي قَلْبِكَ غِشٌّ لِأَحَدٍ فَافْعَلْ ثُمَّ قَالَ
لِي يَا بُنَيَّ وَذَلِكَ مِنْ سُنَّتِي وَمَنْ أَحْيَا سُنَّتِي فَقَدْ
أَحَبَّنِي وَمَنْ أَحَبَّنِي كَانَ مَعِي فِي الْجَنَّةِ (ترمذي) بَاب مَنْ أَحْيَا
سُنَّةً قَدْ أُمِيتَتْ- كِتَاب الْمُقَدِّمَةِ
அனஸ் ரழி அவர்களிடம்
நபி ஸல் அவர்கள் உன்னால் இயன்ற வரை யார் மீதும் எவ்வித காழ்ப்புணர்ச்சியும்
கொள்ளாமல் இரு அது தான் எனது சுன்னத்தாகும். எனது இந்த நடைமுறையை எவர்
பின்பற்றுவாரோ அவர் என்னை நேசித்தவர் ஆவார். என்னை நேசித்தவர் என்னோடு சுவனத்தில்
இருப்பார் என்றார்கள் - நூல் திர்மிதீ
عن
ابن مسعود رضي الله عنه قال قال
رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لا يُبَلِّغُنِي احدٌ من اصحابي عن احد شيئا
فاِنِّي اُحبُّ ان أَخْرُجَ اليكم وانا سليم الصدر (ابوداود)
உங்களில் யாரும் யாரைப் பற்றியும் குறையாக
என்னிடம் வந்து பேச வேண்டாம். காரணம் நான் உங்களிடமிருந்து விடை பெறும்போதும்
யாரைப் பற்றியும் தவறான எண்ணம் இல்லாமல் விடைபெற நினைக்கிறேன்.
أَنَسُ بْنُ مَالِكٍ ، قَالَ : كُنَّا جُلُوسًا عِنْدَ
رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ : يَطْلُعُ
عَلَيْكُمُ الآنَ مِنْ هَذَا الْفَجِّ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ ، قَالَ :
فَطَلَعَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ تَنْطِفُ لِحْيَتُهُ مِنْ وَضُوئِهِ قَدْ
عَلَّقَ نَعْلَهُ فِي يَدِهِ الشِّمَالِ ، فَسَلَّمَ ، فَلَمَّا كَانَ مِنَ
الْغَدِ ، قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ ذَلِكَ :
فَطَلَعَ ذَلِكَ الرَّجُلُ مِثْلَ مَرَّتِهِ الأُولَى ، فَلَمَّا كَانَ الْيَوْمُ
الثَّالِثُ ، قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ مَقَالَتِهِ
أَيْضًا : فَطَلَعَ ذَلِكَ الرَّجُلُ عَلَى مِثْلِ حَالِهِ الأُولَى ، فَلَمَّا
قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، تَبِعَهُ عَبْدُ اللَّهِ
بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ ، قَالَ : إِنِّي لاحَيْتُ أَبِي ، فَأَقْسَمْتُ أَلا
أَدْخُلَ عَلَيْهِ ثَلاثًا ، فَإِنْ رَأَيْتَ أنْ تُؤْوِيَنِي إِلَيْكَ حَتَّى
تَنْقَضِيَ الثَّلاثَةُ ، فَعَلْتَ ، قَالَ : نَعَمْ ، قَالَ أَنَسٌ : فَكَانَ
عَبْدُ اللَّهِ يُحَدِّثُ أَنَّهُ بَاتَ مَعَهُ ثَلاثَ لَيَالٍ ، قَال : فَلَمْ
يَرَهُ يَقُومُ مِنَ اللَّيْلِ شَيْئًا ، غَيْرَ أَنَّهُ إذَا تَعَارَّ مِنَ
اللَّيْلِ ، وَتَقَلَّبَ عَلَى فِرَاشِهِ ، ذَكَرَ اللَّهَ ، وَكَبَّرَ حَتَّى
يَقُومَ لِصَلاةِ الْفَجْرِ غَيْرَ أَنَّهُ لا يَقُولُ إِلا خَيْرًا قَالَ :
فَلَمَّا مَضَتِ الثَّلاثُ لَيَالٍ ، وَكِدْتُ أَحْتَقِرُ عَمَلَهُ ، قُلْتُ : يَا
عَبْدَ اللَّهِ إِنَّهُ لَمْ يَكُنْ بَيْنِي وَبَيْنَ وَالِدِي غَضَبٌ ، وَلا
هَجْرٌ ، وَلَكِنْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ،
يَقُولُ ثَلاثَ مَرَّاتٍ : يَطْلُعُ عَلَيْكُمُ الآنَ رَجُلٌ مِنْ أَهْلِ
الْجَنَّةِ ، فَطَلَعْتَ أَنْتَ الثَّلاثَ مَرَّاتٍ ، فَأَرَدْتُ أَنْ آوِيَ
إِلَيْكَ لأَنْظُرَ مَا عَمَلُكَ ، فَلَمْ أَرَكَ تَعْمَلُ كَثِيرَ عَمَلٍ ، فَمَا
الَّذِي بَلَغَ بِكَ مَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
؟ فَقَالَ : مَا هُوَ إِلا مَا رَأَيْتَ قَالَ : فَانْصَرَفْتُ عَنْهُ ، فَلَمَّا
وَلَّيْتُ ، دَعَانِي ، فَقَالَ : مَا هُوَ إِلا مَا رَأَيْتَ غَيْرَ أَنِّي لا
أَجِدُ فِي نَفْسِي عَلَى أَحَدٍ مِنَ الْمُسْلِمِينَ غِشًّا ، وَلا أَحْسُدُهُ
عَلَى خَيْرٍ أَعْطَاهُ اللَّهُ إِيَّاهُ فَقَالَ عَبْدُ اللَّهِ : فَهَذِهِ
الَّتِي بَلَغَتْ بِكَ ، وَهِيَ الَّتِي لا تُطَاقُ (أحمد
அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் நாங்கள் நபி ஸல் அவர்களோடு
அமர்ந்திருந்தோம், நபி (ஸல்) அவர்கள். அப்போது உங்கள் முன் ஒரு சுவனவாசி
வருகை தருவார். என்றார்கள்அப்போது ஒரு அன்சாரித் தோழர் உளூச்
செய்த தண்ணீர் தாடியில் சொட்டிக் கொண்டிருக்கும் நிலையில் வந்தார், இடக்கரத்தில் செருப்பை பற்றியிருந்தார்.
மறுநாள் நபிஸல்) அவர்கள்
அவ்வாறே கூறினார்கள். அம்மனிதால் அதே மனிதர் கோலத்தில் வந்தார். மூன்றாவது நாளும்
நபி (ஸல்) அவர்கள் அவ்வாறே கூறினார்கள். அம் மனிதரும் முதல் நாளைப் போன்றே வந்தார். நபி
(ஸல்) அவர்கள் சபையிலிருந்து எழுந்தபோது அம் மனிதரை அப்துல்லாஹ் பின் அம்ரு இப்னு
ஆஸ் (ரலி) அவர்கள் பின் தொடர்ந்து சென்று அம்மனிதரிடம் நான் என் தந்தையைிடம்
வாக்கு வாதம் செய்து, மூன்று நாட்கள் அவரிடம் வரமாட்டேன் என சத்தியம் செய்து
விட்டேன். அந்த மூன்று நாட்கள் வரை உம்முடன் தங்கிக் கொள்ள அனுமதிப்பீரா என்று
கேட்டார் அதற்கு அந்த அன்சாரித் தோழர் சரி என பதிலளித்தார்.
அனஸ் (ரலி அவர்கள் கூறினார்கள், அப்துல்லாஹ் (ரலி அம் மனிதரிடம் மூன்று இரவுகள்
தங்கினார். அம்மனிதர் இரவில் எழுந்து வணங்கவில்லை, ஆனால், தூக்கத்தில் விழிப்பு ஏற்பட்டு புரண்டு படுத்தால்
அல்லாஹ்வை திக்ரு செய்து தக்பீர் சொல்லிக் கொள்வார். இறுதியில் ஃபஜ்ருத்
தொழுகைக்கு எழுவார்
அப்துல்லாஹ் (ரலி அவர்கள்
கூறினார்கள் அவர் நன்மையான விஷயங்களை மட்டுமே பேசக் கேட்டேன், மூன்று இரவுகள் கடந்த பின் அவரது அமல்கள் மிகக்
குறைவானது என நினைத்து அவரிடம் நான் கூறினேன். அல்லாஹ்வின் அடியாரே எனக்கும் என்
தந்தைக்குமிடையே கோபமோ, வெறுப்போ கிடையாது. எனினும் நபி
(ஸல்) அவர்கள் மூன்று நாட்களாக உங்களிடத்தில் சுவனவாசி ஒருவர் வருகிறார் என்று
கூறினார்கள். மூன்று நாட்களும் நீங்கள் தான் வந்தீர்கள் நான் உங்களது செயல்களை
கவனித்து நான் உம்மை பின்பற்ற எண்ணி தொடர்ந்து வந்தேன் ஆனால் உமது செயல்கள் எதுவும்
எனக்கு பெரிதாக தோன்றவில்லையே! பிறகு எப்படி நபி (ஸல் அவர்கள் கூறிய அந்தஸ்தை
அடைந்தீர்? என்று கேட்டேன்
அதற்கு அவர் நீங்கள் கண்டதைத்
தவிர வேறொன்றுமில்லை என்றார். நான் திரும்பிச் செல்ல முயன்ற போது என்னை அழைத்த
அவர். நீங்கள் கண்டதைத் தவிர வேறொன்றுமில்லை என்றாலும் நான் எந்த மனிதனையும் மோசடி
செய்ய வேண்டும் என்று நினைத்ததில்லை. அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளைக் கண்டு
எவர்மீதும் பொறாமை கொண்டதில்லை என்று கூறினார் அப்துல்லாஹ் (ரலி அதனால் தான் இத்தகைய உயர்
அந்தஸ்தை அடைந்தீர்கள் என்று கூறினார்கள்
நபிகளாரை உண்மையாக
நேசிப்பவர் சோதனைகளுக்கும் தன்னைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்
عَنْ
عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ قَالَ قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا رَسُولَ اللَّهِ وَاللَّهِ
إِنِّي لَأُحِبُّكَ فَقَالَ انْظُرْ مَاذَا تَقُولُ قَالَ وَاللَّهِ إِنِّي
لَأُحِبُّكَ فَقَالَ انْظُرْ مَاذَا تَقُولُ قَالَ وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ
ثَلَاثَ مَرَّاتٍ فَقَالَ إِنْ كُنْتَ تُحِبُّنِي فَأَعِدَّ لِلْفَقْرِ تِجْفَافًا
فَإِنَّ الْفَقْرَ أَسْرَعُ إِلَى مَنْ يُحِبُّنِي مِنْ السَّيْلِ إِلَى
مُنْتَهَاهُ (ترمذي) بَاب
مَا جَاءَ فِي فَضْلِ الْفَقْرِ-كتاب الزهد تجفافا)
أي مشقة
நபி ஸல் அவர்களிடம்
ஒருவர் வந்து உங்களை நான் நேசிக்கிறேன் என்று கூறிய போது நன்கு யோசித்துத் தான்
இதைக் கூறுகிறீர்களா என நபி ஸல் அவர்கள் கேட்க, அதற்கு அவர் ஆம் உங்களை நான் நேசிக்கிறேன் என்று மூன்று தடவை
கூறினார். அப்போது நபி ஸல் அவர்கள் என்னை உண்மையாக நீ நேசிப்பதாக இருந்தால்
சகிப்புத் தன்மையுடன் வறுமைக்கு உன்னை நீ தயார் படுத்திக் கொள்வீராக ஏனெனில் என்னை
உளமாற நேசிப்பவர்களிடம் வெள்ளம் அதன்
கரையை நோக்கி வருவது வறுமை அவர்களை நோக்கி வரும் என்று கூறினார்கள். அதாவது எத்தகைய சோதனைக்கும் தன்னை தயார் படுத்திக் கொள்பவரே
என்னை உண்மையில் நேசிப்பவர் ஆவார்
والمعنى أنه لابد من
وصول الفقر بسرعة إليه ومن نزول البلايا والرزايا بكثرة عليه فإن أشد الناس بلاء
الأنبياء ثم الأمثل فالأمثل خصوصا سيد الأنبياء فيكون بلاؤه أشد بلائهم ويكون
لأتباعه نصيب على قدر ولائهم [ تحفة الأحوذي
وفي
رواية إِنَّ الفَقْرَ إلى مَنْ يُحِبُّنِي مِنْكُمْ أَسْرَعُ مِنَ السَّيْلِ مِنْ
أَعْلَى الوَادِي ، أَوِ الجَبَل إلى أَسْفَلِهِ "
மக்களிடம் விடுபட்டுப் போன ஒரு சுன்னத்தை உயிர்ப்பிப்பவருக்கு கிடைக்கும்
நற்கூலி
عن
كَثِير بْن عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ سَمِعْتُ رَسُولَ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ أَحْيَا سُنَّةً مِنْ
سُنَّتِي قَدْ أُمِيتَتْ بَعْدِي فَإِنَّ لَهُ مِنْ الْأَجْرِ مِثْلَ أَجْرِ مَنْ
عَمِلَ بِهَا مِنْ النَّاسِ لَا يَنْقُصُ مِنْ أُجُورِ النَّاسِ شَيْئًا وَمَنْ
ابْتَدَعَ بِدْعَةً لَا يَرْضَاهَا اللَّهُ وَرَسُولُهُ فَإِنَّ عَلَيْهِ مِثْلَ
إِثْمِ مَنْ عَمِلَ بِهَا مِنْ النَّاسِ لَا يَنْقُصُ مِنْ آثَامِ النَّاسِ
شَيْئًا (ابن ماجة) بَاب مَنْ أَحْيَا سُنَّةً قَدْ أُمِيتَتْ- كِتَاب
الْمُقَدِّمَةِ
عن أبي هريرةَ ( رضي اللَّه عنه ) ، عن النبيِّ صلى الله
عليه وسلم قَالَ : " المُسْتَمْسِكُ بسُنَّتِي عِنْدَ فَسَادِ أُمَّتِي ،
لَهُ أَجْرُ مِائَةِ شَهِيدٍ " ،(طبراني
காலம் கெட்டு விட்ட இந்த உம்மத்தின் கடைசிக் காலத்தில் என்னுடைய ஒரு சுன்னத்துக்கு
உயிர் கொடுப்பவர் அதாவது நடைமுறைப் படுத்துபவரின் நற்கூலி நூறு ஷஹீதுகளின்
நற்கூலியைப் போன்றதாகும்.
-
கடைசி காலத்தில் ஒரே ஒரு சுன்னத்தைக் கடை பிடிப்பவருக்கு இவ்வளவு சிறப்பை நபி ஸல் கூறுவதன் காரணம்
அத்தகைய காலத்தில் சுன்னத்தைப்
பின்பற்றுவதில் மிகப் பெரும் வெற்றிடம்
இருக்கும் என்பதால்தான்
சுன்னத்துக்களைப் பின்பற்றுபவரால் தான் ஃபர்ளுகளை
பரிபூரணமாக நிறைவேற்ற முடியும்.
உளூவை உதாரணமாக எடுத்துக் கொண்டால் உளூவில் தண்ணீர் சுத்தமாக இருக்க வேண்டும்
என்பது ஷர்த். ஆனால் துவக்கத்தில் முகத்தைக் கழுவுதல் என்ற ஃபர்ளை
நிறைவேற்றுவதில்லை. மாறாக அதற்கு முன்பு வாய் கொப்பளித்தல், நாசிக்கு நீர்
செலுத்துதல் என்ற சுன்னத்துகளை நிறைவேற்றி விட்டு பிறகு முகத்தைக் கழுவுகிறோம்.
காரணம் வாய் கொப்பளிக்கும்போது தண்ணீரில் ஏதேனும் டேஸ்ட் மாறியிருந்தால் நாசிக்கு
நீர் செலுத்தும்போது ஏதேனும் தண்ணீரில் ஏதேனும் வாடை மாறியிருந்தால் தெரிந்து
விடும். வேறு தண்ணீரை மாற்றிக் கொள்ளலாம். ஃபர்ளை நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக
சுன்னத்துக்கள் உள்ளன.
நபிகளாரின் சுன்னத்தை சஹாபாக்கள்
சின்னச் சின்ன விஷயங்களிலும் பின்பற்றினார்கள்
நபி ஸல் நடந்து போகும்போது குறிப்பிட்ட
இடத்தில் பாதையை மாற்றிச் செல்வது போல் நடந்தார்கள் என்பதற்காக அவ்வாறே நடந்த
சஹாபி
عَنْ
مُجَاهِدٍ قَالَ كُنَّا مَعَ ابْنِ عُمَرَ فِي سَفَرٍ
فَمَرَّ بِمَكَانٍ فَحَادَ عَنْهُ فَسُئِلَ لِمَ فَعَلْتَ فَقَالَ رَأَيْتُ
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ
هَذَا فَفَعَلْتُ (احمد)
عَن ابن
عُمَر أنه كان يأتي شجرة بين مكة والمدينة
، فيقيل تحتها ، ويُخْبِرُ أن النبي صلى الله عليه وسلم كان يفعل ذلك.(بزار)
الترغيب والترهيب (يقيل -قيلولة
நபி ஸல் அவர்களை சந்தித்த போது அவர்களின் சட்டையில் ஒரு சில
பட்டன்கள் திறந்திருந்தது என்பதற்காக தன் வாழ்நாள் முழுவதும் கடும் குளிரிலும்
அந்த குறிப்பிட்ட சட்டை பட்டன்களை பூட்டாத நபித் தோழர்கள்
عَنْ عُرْوَةَ
بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قُشَيْرٍ حَدَّثَنِي مُعَاوِيَة بْن قُرَّةَ حَدَّثَنِي أَبِي قَالَ
أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَهْطٍ مِنْ
مُزَيْنَةَ فَبَايَعْنَاهُ وَإِنَّ قَمِيصَهُ لَمُطْلَقُ الْأَزْرَارِ قَالَ
فَبَايَعْتُهُ ثُمَّ أَدْخَلْتُ يَدَيَّ فِي جَيْبِ قَمِيصِهِ فَمَسِسْتُ
الْخَاتَمَ قَالَ عُرْوَةُ ( اَحَدُ الرواة) "فَمَا رَأَيْتُ مُعَاوِيَةَ
وَلَا ابْنَهُ قَطُّ إِلَّا مُطْلِقَيْ أَزْرَارِهِمَا فِي شِتَاءٍ وَلَا حَرٍّ
وَلَا يُزَرِّرَانِ أَزْرَارَهُمَا أَبَدًا (ابوداود) بَاب فِي حَلِّ الْأَزْرَارِ
- كِتَاب اللِّبَاسِ
நபி ஸல்
அவர்கள் சுரைக்காயை விரும்பி சாப்பிட்டதால் அதையே தினமும் தன்னுடைய உணவாக
ஆக்கியவர்
عن انس إِنَّ
خَيَّاطًا2 دَعَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ صَنَعَهُ قَالَ أَنَسٌ
فَذَهَبْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَيْتُهُ يَتَتَبَّعُ6
الدُّبَّاءَ مِنْ حَوَالَيْ الْقَصْعَةِ قَالَ فَلَمْ أَزَلْ أُحِبُّ الدُّبَّاءَ
مِنْ يَوْمِئِذٍ (بخاري) وفي رواية لمسلم فَمَا صُنِعَ لِى طَعَامٌ بَعْدُ
أَقْدِرُ عَلَى أَنْ يُصْنَعَ فِيهِ دُبَّاءٌ إِلاَّ صُنِعَ (مسلم) باب
جَوَازِ أَكْلِ الْمَرَقِ- كتاب الأشربة
நபி ஸல் சிரித்துக்
கொண்டே அறிவித்த ஹதீஸை மற்றவருக்கு சிரித்துக் கொண்டே அறிவித்த சஹாபீ
عَنْ ابْنِ مَسْعُودٍ أَنَّ
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ آخِرُ
مَنْ يَدْخُلُ الْجَنَّةَ رَجُلٌ فَهْوَ يَمْشِي مَرَّةً وَيَكْبُو3
مَرَّةً وَتَسْفَعُهُ4 النَّارُ مَرَّةً فَإِذَا مَا جَاوَزَهَا
الْتَفَتَ إِلَيْهَا فَقَالَ تَبَارَكَ الَّذِي نَجَّانِي مِنْكِ لَقَدْ
أَعْطَانِي اللَّهُ شَيْئًا مَا أَعْطَاهُ أَحَدًا مِنْ الْأَوَّلِينَ
وَالْآخِرِينَ فَتُرْفَعُ لَهُ شَجَرَةٌ
فَيَقُولُ أَيْ رَبِّ أَدْنِنِي مِنْ هَذِهِ الشَّجَرَةِ فَلِأَسْتَظِلَّ
بِظِلِّهَا وَأَشْرَبَ مِنْ مَائِهَا فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ يَا ابْنَ
آدَمَ لَعَلِّي إِنَّ أَعْطَيْتُكَهَا سَأَلْتَنِي غَيْرَهَا فَيَقُولُ لَا يَا
رَبِّ وَيُعَاهِدُهُ أَنْ لَا يَسْأَلَهُ غَيْرَهَا وَرَبُّهُ يَعْذِرُهُ5
لِأَنَّهُ يَرَى مَا لَا صَبْرَ لَهُ عَلَيْهِ فَيُدْنِيهِ مِنْهَا فَيَسْتَظِلُّ
بِظِلِّهَا وَيَشْرَبُ مِنْ مَائِهَا ثُمَّ تُرْفَعُ لَهُ شَجَرَةٌ هِيَ أَحْسَنُ
مِنْ الْأُولَى فَيَقُولُ أَيْ رَبِّ أَدْنِنِي مِنْ هَذِهِ لِأَشْرَبَ مِنْ
مَائِهَا وَأَسْتَظِلَّ بِظِلِّهَا لَا أَسْأَلُكَ غَيْرَهَا فَيَقُولُ يَا ابْنَ
آدَمَ أَلَمْ تُعَاهِدْنِي أَنْ لَا تَسْأَلَنِي غَيْرَهَا فَيَقُولُ
لَعَلِّي إِنْ أَدْنَيْتُكَ مِنْهَا تَسْأَلُنِي غَيْرَهَا فَيُعَاهِدُهُ أَنْ لَا
يَسْأَلَهُ غَيْرَهَا وَرَبُّهُ يَعْذِرُهُ لِأَنَّهُ يَرَى مَا لَا صَبْرَ لَهُ
عَلَيْهِ فَيُدْنِيهِ مِنْهَا فَيَسْتَظِلُّ بِظِلِّهَا وَيَشْرَبُ مِنْ مَائِهَا
ثُمَّ تُرْفَعُ لَهُ شَجَرَةٌ عِنْدَ بَابِ الْجَنَّةِ هِيَ أَحْسَنُ مِنْ
الْأُولَيَيْنِ فَيَقُولُ أَيْ رَبِّ أَدْنِنِي مِنْ هَذِهِ لِأَسْتَظِلَّ
بِظِلِّهَا وَأَشْرَبَ مِنْ مَائِهَا لَا أَسْأَلُكَ غَيْرَهَا فَيَقُولُ يَا
ابْنَ آدَمَ أَلَمْ تُعَاهِدْنِي أَنْ لَا تَسْأَلَنِي غَيْرَهَا قَالَ بَلَى يَا
رَبِّ هَذِهِ لَا أَسْأَلُكَ غَيْرَهَا وَرَبُّهُ يَعْذِرُهُ لِأَنَّهُ يَرَى مَا
لَا صَبْرَ لَهُ عَلَيْهَا فَيُدْنِيهِ مِنْهَا فَإِذَا أَدْنَاهُ مِنْهَا
فَيَسْمَعُ أَصْوَاتَ أَهْلِ الْجَنَّةِ فَيَقُولُ أَيْ رَبِّ أَدْخِلْنِيهَا
فَيَقُولُ يَا ابْنَ آدَمَ مَا يَصْرِينِي مِنْكَ أَيُرْضِيكَ أَنْ أُعْطِيَكَ
الدُّنْيَا وَمِثْلَهَا مَعَهَا قَالَ يَا رَبِّ أَتَسْتَهْزِئُ مِنِّي وَأَنْتَ
رَبُّ الْعَالَمِينَ فَضَحِكَ ابْنُ مَسْعُودٍ فَقَالَ أَلَا تَسْأَلُونِي مِمَّ
أَضْحَكُ فَقَالُوا مِمَّ تَضْحَكُ قَالَ هَكَذَا ضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا مِمَّ تَضْحَكُ يَا رَسُولَ اللَّهِ قَالَ مِنْ
ضِحْكِ رَبِّ الْعَالَمِينَ حِينَ قَالَ أَتَسْتَهْزِئُ مِنِّي وَأَنْتَ رَبُّ
الْعَالَمِينَ فَيَقُولُ إِنِّي لَا أَسْتَهْزِئُ مِنْكَ وَلَكِنِّي عَلَى مَا
أَشَاءُ قَادِرٌ (مسلم) بَاب آخِرِ
أَهْلِ النَّارِ كِتَاب الْإِيمَان
பொருள்- 3,தடுமாறி விழுகிறார், 4,அவரை தீண்டுகிறது
5,கோரிக்கையை ஏற்கிறான்
“இறுதியாகச் சொர்க்கத்தில் நுழையக் கூடிய ஒருவர், (நரகத்திலிருந்து
வெளியேறி) ஒருபோது நடந்தும் ஒருபோது தவழ்ந்தும் வருவார். ஒருபோது நரக நெருப்பு
அவரது முகத்தைத் தாக்கும். இந்நிலையில் அவர் நரகத்தைத் தாண்டியதும் அதைத்
திரும்பிப் பார்த்து, ‘நற்பேறுகளுக்கு உரிய(என்னிறை)வன் உன்னிடமிருந்து என்னைக்
காப்பாற்றி விட்டான். (எனக்கு) முன்-பின்னோர் எவருக்கும் வழங்காத பேற்றை அல்லாஹ்
எனக்கு வழங்கினான்!’ என்று கூறுவார். அப்போது அவருக்கு ஒரு மரம் காட்டப்படும்.
உடனே அவர், ‘என்
இறைவா! அந்த மரத்திடம் என்னைக் கொண்டு சேர்ப்பாயாக! அதனிடம் நிழப் பெற்றுக்
கொள்வேன்; அதன்
(கீழ் ஓடும்) நீரைப் பருகிக் கொள்வேன்’ என்று கூறுவார். ‘ஆதமின்
மகனே! அதை நான் உனக்கு வழங்கினால் அதையன்றி வேறொன்றும் என்னிடம் கேட்க மாட்டாயே?’ என்று
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கேட்பான். அதற்கவர், ‘இல்லை; வேறெதையும்
உன்னிடம் நான் கேட்க மாட்டேன் இறைவா!’ என்று வாக்குறுதி அளிப்பார்.
அவரது அவசரத்தைக் காணும் இறைவன், அவருக்கு வாய்ப்பளித்து, அவரை
அந்த மரத்தின் அருகே கொண்டு சேர்ப்பான். அவர் அந்த மரத்தின் நிழலைப் பெறுவார்; அதன்
(கீழ் ஓடும்) நீரைப் பருகிக் கொள்வார். பின்னர், முதலில்
காட்டப் பட்ட மரத்தை விட மிகவும் அழகான மற்றொரு மரம் அவருக்குக் காட்டப்படும்.
(அதைக் காணும்) அவர், ‘என் இறைவா! அதனிடம் என்னைக் கொண்டு சேர்ப்பாயாக! நான் அதன்
நீரைப் பருகி அதன் நிழலை அடைந்துக் கொள்வேன்! அதையன்றி வேறெதையும் உன்னிடம் கேட்க
மாட்டேன்’ என்று
கூறுவார். ‘ஆதமின்
மகனே! வேறெதையும் கேட்கமாட்டேன் என்று என்னிடம் நீ (முன்பு) வாக்குறுதி
கொடுத்தாயே! அதனிடம் உன்னை நான் கொண்டு சேர்த்தால் அதையன்றி வேறொன்றும் என்னிடம்
கேட்க மாட்டாயே?’ என்று
அல்லாஹ் கேட்பான். அவர், ‘வேறெதையும் கேட்க மாட்டேன்’ என்று
(மீண்டும்) வாக்குறுதி அளிப்பார். அவரது அவசரத்தைக் காணும் இறைவன், அவருக்கு
(இன்னொரு) வாய்ப்பளித்து, அவரை அந்த (அழகிய) மரத்தின்
அருகே கொண்டு சேர்ப்பான். அவர் அந்த மரத்தின் நிழலைப் பெறுவார்; அதன்
(கீழ் ஓடும்) நீரைப் பருகிக் கொள்வார்.
அதன் பிறகு முதலிரண்டு மரங்களை
விடவும் பேரழகான, சொர்க்க வாசலில் உள்ள ஒரு மரம் அவருக்குக் காட்டப்படும்.
(அதைக் கண்ட) அவர், ‘என் இறைவா! அதனிடம் என்னைக் கொண்டு சேர்ப்பாயாக! நான் அதன்
நீரைப் பருகி அதன் நிழலை அடைந்துக் கொள்வேன்! அதையன்றி வேறெதையும் உன்னிடம் கேட்க
மாட்டேன்’ என்று
கூறுவார். ‘ஆதமின்
மகனே! வேறெதையும் கேட்கமாட்டேன் என்று என்னிடம் நீ (முன்பு இருமுறை) வாக்குறுதி
கொடுத்தாயே! என்று கேட்பான். அதற்கு அவர், ‘ஆம்; என்
இறைவா! இந்தத் தடவை அதையன்றி வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன்’ என்று
கூறுவார். அவரது அவசரத்தைக் காணும் இறைவன், அவருக்கு
வாய்ப்பளித்து, அவரை
அந்த மரத்தின் அருகே கொண்டு சேர்ப்பான். அவர் அந்த மரத்தை நெருங்கும்போது
சொர்க்கவாசிகளின் குரல்கள் அவருக்குக் கேட்கும். உடனே அவர், ‘என்
இறைவா! சொர்க்கத்தின் உள்ளே என்னை அனுப்புவாயாக!’ என்று
கேட்பார். அதற்கு இறைவன், ‘ஆதமின் மகனே! ஏன் என்னிடம்
கோருவதை நிறுத்திக் கொண்டாய்? உலகத்தையும் அதைப் போன்ற
இன்னொரு மடங்கையும் உனக்கு நான் வழங்கினால் நீ மனநிறைவு கொள்வாய் அல்லவா?’ என்று
கேட்பான். அதற்கு அவர், ‘என் இறைவா! அகிலத்தின்
அதிபதியே! நீ என்னைக் கேலி செய்கிறாயா?’ என்று கேட்பார்” என்று
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்
: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி).
இதை அறிவித்தபோது அப்துல்லாஹ்
பின் மஸ்ஊத் (ரலி) சிரித்தார்கள். பிறகு, “நான் ஏன் சிரித்தேன் என்று
என்னிடம் நீங்கள் கேட்கமாட்டீர்களா?” என்று மக்களைக் கேட்டார்கள்.
அப்போது மக்கள், “ஏன்
சிரிக்கிறீர்கள்?” என்று
கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), “இவ்வாறுதான்
(இதைக் கூறும்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சிரித்தார்கள். அப்போது நபித்தோழர்கள், “ஏன்
சிரித்தீர்கள்?, அல்லாஹ்வின்
தூதரே?” என்று
கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அகிலத்தின்
அதிபதியாகிய நீ என்னைக் கேலி செய்கிறாயா?” என்று அந்த மனிதர் கூறும்போது
அதைக் கேட்டு அல்லாஹ் சிரிப்பான். (அதனால் தான் நானும் சிரித்தேன்.) மேலும், “நான்
உன்னைப் பரிகாசம் செய்யவில்லை. மாறாக, நாடியதைச் செய்கின்ற ஆற்றல்
உள்ளவன் நான்” என
இறைவன் கூறுவான் என்றும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
எதை வெறுத்தார்களோ அதை முற்றிலும் வெறுத்த நபித்தோழர்கள்
عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنه قَالَ مَرَرْتُ عَلَى رَسُولِ اللَّهِ
ﷺوَفِي إِزَارِي اسْتِرْخَاءٌ فَقَالَ يَا عَبْدَ اللَّهِ ارْفَعْ إِزَارَكَ
فَرَفَعْتُهُ ثُمَّ قَالَ زِدْ فَزِدْتُ فَمَا زِلْتُ أَتَحَرَّاهَا بَعْدُ
فَقَالَ بَعْضُ الْقَوْمِ إِلَى أَيْنَ فَقَالَ أَنْصَافِ السَّاقَيْنِ رواه مسلم
كتاب اللباس والزينة4238
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ ﷺرَأَى خَاتَمًا مِنْ
ذَهَبٍ فِي يَدِ رَجُلٍ فَنَزَعَهُ فَطَرَحَهُ وَقَالَ يَعْمِدُ أَحَدُكُمْ إِلَى
جَمْرَةٍ مِنْ نَارٍ فَيَجْعَلُهَا فِي يَدِهِ فَقِيلَ لِلرَّجُلِ بَعْدَ مَا
ذَهَبَ رَسُولُ اللَّهِ ﷺخُذْ خَاتِمَكَ انْتَفِعْ بِهِ قَالَ لَا وَاللَّهِ لَا
آخُذُهُ أَبَدًا وَقَدْ طَرَحَهُ رَسُولُ اللَّهِ ﷺرواه مسلم كتاب اللباس والزينة4243
عَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ
كُنْتُ سَاقِيَ الْقَوْمِ يَوْمَ حُرِّمَتْ الْخَمْرُ قَالَ وَكَانَ أَبُو
طَلْحَةَ قَدْ اجْتَمَعَ إِلَيْهِ بَعْضُ أَصْحَابِهِ فَجَاءَ رَجُلٌ فَقَالَ
أَلَا إِنَّ الْخَمْرَ قَدْ حُرِّمَتْ قَالَ فَقَالَ لِي أَبُو طَلْحَةَ اخْرُجْ
فَانْظُرْ قَالَ فَخَرَجْتُ فَنَظَرْتُ فَسَمِعْتُ مُنَادِيًا يُنَادِي أَلَا
إِنَّ الْخَمْرَ قَدْ حُرِّمَتْ قَالَ فَأَخْبَرْتُهُ قَالَ فَاذْهَبْ
فَأَهْرِقْهَا قَالَ فَجِئْتُ فَأَهْرَقْتُهَا رواه احمد
நபி ஸல் அவர்களை நேசிப்பவர்களின் அடையாளங்களில் ஒன்று
முடிவுரை-நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் மீதான நேசம் முழுமையடைவதற்கான வழிமுறைகள்
عن عبد الرحمن بن أبي قراد ، أن النبي ﷺ توضأ يوما فجعل أصحابه يتمسحون
بوضوئه ، فقال لهم النبي ﷺ : « ما يحملكم على هذا ؟ » قالوا : حب الله ورسوله ،
فقال النبي ﷺ : « من سره أن يحب الله ورسوله ، أو يحبه الله ورسوله فليصدق حديثه
إذا حدث ، وليؤد أمانته إذا ائتمن ، وليحسن جوار من جاوره »رواه البيهقي في شعب
الايمان
நபி
ஸல் அவர்கள் உளூச் செய்தபோது அவர்களின் கரங்களில் இருந்து வடியும் தண்ணீரை
பரக்கத்துக்காக நபித் தோழர்கள் தங்களின் கைகளால் பிடித்து தங்களின் மேனியில்
தடவினார்கள். அப்போது நபி ஸல் அவர்கள்
உங்களை இவ்வாறு செய்யத் தூண்டியது எது என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்,
ரஸூலின் மீதான நேசம் என நபித்தோழர்கள் பதில் கூறினார்கள். அதற்கு நபி ஸல் அவர்கள்
எவர் அல்லாஹ், ரஸூலை நேசிப்பாரோ அல்லது அல்லாஹ்வும் அவனது ரஸூலும் தன்னை நேசிப்பதை
விரும்புவாரோ அவர் பேசினால் உண்மை பேசட்டும்.
அமானிதத்தை நிறைவேற்றட்டும். அண்டை வீட்டாரிடம் நல்ல விதமாக நடந்து
கொள்ளட்டும் என்றார்கள். பைஹகீ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக