வியாழன், 13 அக்டோபர், 2022

சமய நல்லிணக்கம் பேணிய சர்தார் நபி (ஸல்) அவர்கள்

  

 சமய நல்லிணக்கம் பேணிய சர்தார் நபி (ஸல்) அவர்கள்

மஹல்லா தோறும் சமய நல்லிணக்க விழாக்கள் நடத்த வேண்டும் என்பதையும் உள்ளடக்கி எடுக்கப்பட்ட தலைப்பு 

சகோதர சமயத்தவர்களுக்கு மத்தியிலி முஸ்லிம்கள் பற்றிய வெறுப்பை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விஷமிகள் மிக வேகமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் நபி ஸல் அவர்கள் மாற்று மத சகோதரர்களிடம் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதைப் பற்றியும் அத்தகைய செய்திகளை நமக்குள் மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல் மாற்று மத சகோதரர்களிடம் கொண்டு போய் சேர்க்கும் விதமாக மஹல்லா தோறும் சமய நல்லிணக்க விழாக்கள் நடத்துவதும் அந்த விழாவில் அக்கம் பக்கத்தில் உள்ள அனைவரையும் அழைத்து விருந்து ஏற்பாடுகள் செய்வதும் காலத்தின் அவசியமாக உள்ளது.   

பிஞ்சு உள்ளங்களிலும் நஞ்சை விதைக்கும் விஷமிகள்

முஸ்லிம்கள் மீதான வெறுப்பை உமிழ்வதற்காகவே நாடு முழுவதும் 16,000 பள்ளிக்கூடங்கள் செயல்படுகின்றன. அங்கு பயிலும் மாணவர்களின் பிஞ்சு உள்ளங்களில் முஸ்லிம்கள் பற்றிய வெறுப்புணர்வை ஊட்டுகிறார்கள். நாளடைவில் அவர்கள் வளர்ந்து பெரியவர்களாக ஆகும்போது அந்த  வெறுப்புணர்வு தீயாகக் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்து விடுகிறது. முஸ்லிம்களைக் கண்டால் கொல்ல வேண்டும் என்ற வெறி பிடித்தவர்களாக ஆக்கப் படுகிறார்கள். ஆனால் இஸ்லாமிய சமுதாயம் இதைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் தங்களுடைய தொழில் தங்களுடைய குடும்பம் என்ற சுயநலத்துடன் சமுதாய அக்கறையில்லாத சமூகமாக இருந்து வருகிறார்கள்.  

إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ (11)  الرعد

நம்மைப் பற்றிய தவறான சிந்தனைகளை விஷமிகள் விதைக்கக்கூடாது என்பதற்காக 

முன் கூட்டியே எச்சரிக்கையாக நடந்து கொள்வது நபியின் சுன்னத்

عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ أَنَّ صَفِيَّةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ أَنَّهَا جَاءَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزُورُهُ وَهُوَ مُعْتَكِفٌ فِي الْمَسْجِدِ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ ثُمَّ قَامَتْ تَنْقَلِبُ فَقَامَ مَعَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا بَلَغَ قَرِيبًا مِنْ بَابِ الْمَسْجِدِ عِنْدَ بَابِ أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِهِمَا رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَسَلَّمَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ نَفَذَا فَقَالَ لَهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رِسْلِكُمَا قَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ وَكَبُرَ عَلَيْهِمَا ذَلِكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الشَّيْطَانَ يَبْلُغُ مِنْ الْإِنْسَانِ مَبْلَغَ الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا شَيْئًا  (بخاري 3101

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானில் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தபோது அவர்களைச் சந்திக்க நான் சென்றேன். சிறிது நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னுடன் எழுந்து வந்தார்கள். உம்மு சலமா (ரலி) அவர்களின் (வீட்டு) வாசலுக்கு அருகில் பள்ளிவாசலின் தலைவாயிலை நான் அடைந்தபோது அன்சாரிகளில் இருவர் கடந்து சென்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவ்விருவரும் சலாம் கூறினர். அப்போது அவ்விருவரிடமும் நபி (ஸல்) அவர்கள், ‘‘சற்று நில்லுங்கள், இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த் ஹுயை தான்” எனக் கூறினார்கள்.அவ்விருவரும் (ஆச்சரியத்துடன்) சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா சந்தேகிப்போம்!) என்றனர். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியது அவ்விருவருக் கும் பெரிய விஷயமாகப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘நிச்சய மாக ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கிறான்; உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை அவன் விதைத்துவிடுவானோ என நான் அஞ்சினேன்” எனக் கூறினார்கள்.

இஸ்லாம் அன்பை போதிக்கும் மார்க்கம் என்பதை மாற்றார்களுக்கு உணரச் செய்ய வேண்டும்

முஷ்ரிக்கீன்கள் கற்களால் அடித்து  காயப்படுத்திய போதும் அவர்களுக்கு எதிராக துஆ செய்யாத நபி ஸல்....

قال تعالى{وَإِنَّكَ لعلى خُلُقٍ عَظِيمٍ [القلم: 4] عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللهِ ادْعُ اللهَ عَلَى الْمُشْرِكِينَ قَالَ:إِنَّمَا بُعِثْتُ رَحْمَةً، وَلَمْ أُبْعَثْ عَذَابًا (شعب الايمان,طبراني) عَنْ عَبْدِ اللهِ بْنِ عُبَيْدٍ قَالَ:لَمَّا كُسِرَتْ رُبَاعِيَّةُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُجَّ فِي جَبْهَتِهِ فَجَعَلَتِ الدِّمَاءُ تَسِيلُ عَلَى وَجْهِهِ قِيلَ: يَا رَسُولَ اللهِ ادْعُ اللهَ عَلَيْهِمْ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:" إِنَّ اللهَ تَعَالَى لَمْ يَبْعَثْنِي طَعَّانًا وَلَا لَعَّانًا، وَلَكِنْ بَعَثَنِي دَاعِيَةَ وَرَحْمَةٍ، اللهُمَّ اهْدِ قَوْمِي فَإِنَّهُمْ لَا يَعْلَمُونَ (شعب الايمان-هذا حديث مُرْسَلٌ)

இணை வைப்பவர்களின் கொடுமைகள் அதிகரித்த போது நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே இணை வைப்பவர்களுக்கு எதிராக துஆச் செய்யுங்கள். என்றார்கள். அதற்கு நபி ஸல் அவர்கள் நான் அருட்கொடையாக அனுப்பப்பட்டுள்ளேன். சபிப்பவனாக அனுப்பப்படவில்லை என்று கூறினார்கள்.                            

நபி ஸல் அவர்களின் முன்பற்கள் உடைக்கப்பட்ட போது, முகம் காயப்படுத்தப்பட்ட போது முகத்தில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அப்போது நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே இணை வைப்பவர்களுக்கு எதிராக துஆச் செய்யுங்கள். என்றார்கள். அதற்கு நபி ஸல் அவர்கள் நான் சபிப்பவனாக அனுப்பப்படவில்லை அருட்கொடையாக அனுப்பப்பட்டுள்ளேன் என்று கூறி விட்டு, யாஅல்லாஹ் என் சமுதாய மக்களுக்கு நேர்வழி காட்டுவாயாக அவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்று துஆச் செய்தார்கள்.                     


நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இஸ்லாமிய பிரச்சாரத்தை மேற்கொண்ட 13 வருடகாலத்தில் இறைநிராகரிப்போர் நபிகளார் மீதும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஏழை முஸ்லிம்கள் மீதும் கடுமையான தாக்குதல்களை மெற்கொண்டனர். ஆனாலும் அவர்கள் குறைஷிகளை எதிர்த்து தாக்கவில்லை இனியும் இங்கு வாழ முடியாது உயிருக்கு ஆபத்து எனும் நிலை ஏற்பட்ட பின்னரே நாடு துறக்கும் முடிவுக்கு வந்தார்கள். நாடு துறந்து வேறொரு நாட்டுக்கு அகதிகளாய் தஞ்சம் புகுந்தார்கள் அங்கும் அவர்களை நிம்மதியாக வாழ விடாமல் குறைஷிகள் யுத்தம் செய்ய தயாரான போது தான் அவர்களை எதிர்தது போரிட முடிவு செய்கிறார்கள்.13 வருடங்கள் பிறந்த நாட்டில் கொடுமைகளை சகித்துக் கொண்டு வாழ்ந்தார்கள். 

மாற்று மதத்தவரான ஸூமாமாவிடம் நபி ஸல் நடந்து கொண்ட விதம் அவரின் மனதை மாற்றியது

உலகத்தில் முதல் எதிரியாக நபிகள் நாயகத்தையும், வெறுக்கும் மார்க்கமாக இஸ்லாத்தையும், பகை நாடாக மதீனாவையும் கருதினார் ஸுமாமா பின் உஸால். அன்பு மார்க்கமாம் இஸ்லாத்தையும், அதைப் போதிக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், அம்மார்க்கத்தைப் பின்பற்றும் அருமைத் தோழர்களையும் சில நாட்கள் பார்த்த ஸுமாமாவின் உள்ளம் இஸ்லாத்திற்கு முன்னால் அடிபணிந்தது. இந்த சுமாமாவை மாற்றியது நபிகள் நாயகத்தின் மன்னிக்கும் குணம். இதோ வரலாற்றில் என்றும் மங்காத பிரகாசமாய் ஒளிவீசும் சுமாமாவின் வரலாற்றைப் பாருங்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ‘நஜ்த்’ பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் ‘பனூ ஹனீஃபா’ குலத்தைச் சேர்ந்த ஸுமாமா பின் உஸால் என்றழைக்கப்படும் ஒருவரைக் (கைது செய்து) கொண்டு வந்தார்கள். பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப் போட்டார்கள். (கைதியைக் கட்டி வைப்பது தான் வழமை)

நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, (உன் விஷயத்தில் நான் சொல்லப்போகும் முடிவைப் பற்றி) நீ என்ன கருதுகிறீர், ஸுமாமாவே? என்று கேட்டார்கள். அவர், நான் நல்லதே கருதுகிறேன் முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப்பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள்.

(என்னை மன்னித்து எனக்கு) நீங்கள் உபகாரம் செய்தால், நன்றி செய்யக் கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் அதில் நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள் என்று பதிலளித்தார். எனவே, அவர் (மன்னிக்கப்பட்டு) விடப்பட்டார். மறுநாள் அவரிடம், ஸுமாமாவே! என்ன கருதுகிறீர்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.அதற்கு அவர், தங்களிடம் நான் (ஏற்கெனவே) கூறியது தான்: நீங்கள் உபகாரம் செய்தால் நன்றியுள்ளவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள் என்றார். அவரை நபியவர்கள் (அன்றும்) விட்டுவிட்டார்கள். மறுநாளுக்கு அடுத்த நாள் வந்த போது, நீ என்ன கருதுகிறீர்? ஸுமாமாவே! என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், நான் ஏற்கெனவே தங்களிடம் சொன்னதைத் தான் கருதுகிறேன் என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ஸுமாமாவை அவிழ்த்துவிடுங்கள் என்று சொன்னார்கள்.

உடனே ஸுமாமா, பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு, பள்ளிவாசலுக்கு வந்து, ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெவருமில்லை’ என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், ‘முஹம்மது, அல்லாஹ்வின் தூதர்’ என்றும் நான் உறுதி கூறுகிறேன் என்று மொழிந்துவிட்டு, முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் முகத்தைவிட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்களுடைய முகம் எல்லா முகங்களிலும் எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் மார்க்கத்தை விட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், இன்று மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருந்திருக்கவில்லை.

ஆனால், இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகிவிட்டது. உங்கள் குதிரைப் படையினர் என்னைப் பிடித்துக் கொண்டு விட்டனர் என்று சொல்லிவிட்டு, மேலும் நான் இப்போது (மக்காவிற்குச் சென்று) உம்ரா செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று கேட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ரா செய்ய அவருக்கு அனுமதியளித்தார்கள். அவர் மக்காவிற்குச் சென்றபோது (அங்கே) ஒருவர் அவரிடம், நீ மதம் மாறிவிட்டாயா? என்று கேட்டார். அதற்கு ஸுமாமா (ரலி)அவர்கள், இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!(நான் மதம் மாறவில்லை.)மாறாக, அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறிவிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் அனுமதி தரும்வரை (எனது நாடான) யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட (மக்காவாசிகளான) உங்களுக்கு வராது என்று சொன்னார்கள். நூல்: புகாரி-4372 

படிப்பினை- ஸுமாமாவின் சம்பவத்திலிருந்து நாம் பெறும் படிப்பினையாகிறது மதரஸாக்களில், மஸ்ஜித்களில் தீவிரவாதம் போதிக்கப்படுகிறது என மார்க்கத்தைப் பற்றியும் மஸ்ஜித்களைப் பற்றியும் தவறாகக் கருதுபவர்களை அழைத்து வந்து  நமது மஸ்ஜிதை காட்ட வேண்டும். எப்படி ஸுமாமாவுக்கு நபி ஸல் காட்டினார்களோ அதுபோல்


நபி ஸல் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த முத்இம் இப்னு அதீ

அபூதாலிபின் மரணத்திற்குப் பிறகு அவரது வாழ்நாளில் கொடுக்க முடியாத கடுமையான வேதனைகளை குறைஷிகள் நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்து வந்தார்கள். அவர்களது தொல்லைகளைத் தாங்க முடியாதவர்களாக அங்கிருந்து துரத்தப்பட்டவர் போன்று அருகிலுள்ள தாயிபுக்குச் சென்றார்கள். திரும்பி வரும் போது மக்காவிற்குள் நுழைய அஞ்சிய காரணத்தால் அருகிலுள்ள ஹிரா குகையில் தங்கிக் கொண்டு தனக்கு அடைக்கலம் தந்து பக்கபலமாக இருக்க வேண்டுமென்று சில குறைஷித் தலைவர்களுக்கு தூது அனுப்பினார்கள். அதில் “முத்இம் இப்னு அதீ’ஆம்! நான் அடைக்கலம் தருவேன் என்று கூறி உடனே தனது ஆயுதங்களை அணிந்து கொண்டு தனது ஆண் பிள்ளைகள் மற்றும் கூட்டத்தாரையும் ஆயுதம் அணியச் செய்து கஅபாவுக்கு அழைத்துச் சென்று நான்கு மூலைகளிலும் நிற்க வைத்துவிட்டு தனது ஒட்டகத்தில் ஏறி அமர்ந்து கொண்டு குறைஷிகளே “நான் முஹம்மதுக்கு அடைக்கலம் கொடுத்து விட்டேன்’ உங்களில் எவரும் முஹம்மதை சொல்லாலோ, செயலாலோ நோவினை செய்யக்கூடாது என்று பகிரங்க அறிவிப்புச் செய்தார். ரஹீக்:169:170

எனினும் தொண்ணூறு வயதையும் தாண்டிய இவருக்கு இஸ்லாத்தின் பாக்கியம் கிடைக்கவில்லை. பத்ருப் போருக்கு சுமார் ஏழு மாதங்களுக்கு முன்பே இணைவைப்பவராகவே இறந்து விட்டார். எனினும் இஸ்லாத்திற்கான இவரது உதவியை நினைவு கூர்ந்த நபி(ஸல்) அவர்கள் பத்ரில் பிடிபட்ட கைதிகள் தொடர்பாக “முத்இம் பின் அதீ’ உயிரோடு இருந்து இந்த அசுத்தம் பிடித்தவர்களை (பிணை தொகை வாங்காமலேயே) விட்டுவிடும்படி அவர் என்னிடம் (பரிந்து) பேசியிருந்தால் நான் அவருக் காக (பிணைத் தொகை வாங்காமலேயே) இவர்களை விடுவித்திருப்பேனென்று கூறினார்கள். அறிவிப்பு: அவர்களின் மகன் ஜுபைர் பின் முத்இம் (ரழி) புஹாரி : 4024, 3139


நெருங்கிய உறவினர் காஃபிராக இருந்தாலும் அவரை வெறுக்கக் கூடாது என போதித்த நபி ஸல்

அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்களின் காலத்தில் என் தாயார் ஆசையாக என்னிடம் வந்தார். (அப்போது அவர் இணைவைப்பவராக இருந்தார்.) நான் நபி(ஸல்) அவர்களிடம் ‘(என் தாயார் வந்துள்ளார்.) அவருடன் உறவைப் பேணிக்கொள்ளட்டுமா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்’ உம் தாயார் இணைவைப்பவராக இருந்தாலும் அவரிடம் உறவைப் பேண வேண்டும் என்று கூறினார்கள். ‘எனவே, அஸ்மாவின் தாயார் தொடர்பாக, ‘மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கிறான்’ எனும் (திருக்குர்ஆன் 60:8 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான்’ (ஆதாரம்: புகாரி 5978 & 5979)


மாற்று மதத்தவர்கள் எவற்றை தெய்வங்களாக கருதுவார்களோ அவற்றை திட்டக் கூடாது என்ற அறிவுரை

وَلَا تَسُبُّوا الَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ فَيَسُبُّوا اللَّهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ (الانعام108) حكمها باق في هذه الأمة على كل حال فمتى كان الكافر في منعة وخيف أن يسب الإسلام أو النبي عليه السلام أو الله عز وجل فلا يحل لمسلم أن يسب صلبانهم ولا دينهم ولا كنائسهم ولا يتعرض إلى ما يؤدي إلى ذلك لأنه بمنزلة البعث على المعصية (قرطبي

மாற்று மதத்தவரிடம் நட்புறவு பற்றி அல்-குர்ஆன் 

لَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ (الممتحنة:8)

ஒளரங்கசீப் ரஹ் அவர்களின் சமய நல்லிணக்கம்

காசியில் சைவ மடாலயங்களை அமைப்பதற்காக ஒளரங்கசீப் நிலங்களை வழங்கினார் என்று வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. அதேபோல் பல்வேறு கோவில்களுக்கு மானியம் வழங்கிய வரலாற்றுக் குறிப்புகளும் உள்ளன.  உண்மை இவ்வாறிருக்க கீழ்காணும் வரலாற்றைத் திரித்து பொய்யான ஒரு செய்தியைப் பரப்புகின்றனர். பேரரசர் ஒளரங்கசீப் படை வங்காளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் வாரணாசியில் படை ஓர் நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட  ஒளரங்கசீப், தன் படை காசியில் ஓர் நாள் தங்கிச் செல்ல அனுமதியளித்தார். தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற ஒரு இளவரசி மட்டும் திரும்பவே இல்லை. இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த இளவரசியை கண்டுபிடிக்க தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் காணப்பட்டன.அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் இளவரசி கற்பழிக்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக்கொண்டு கிடந்தாள். வசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது. நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இளவரசி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டினர். மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால், கற்பக்கிரகத்தின் புனிதம் அழிந்து விட்டதாகக் கருதி மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. கோயில் இடிக்கப்பட்டது.  இந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது. இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் (Islam and Indian Culture) என்னும் நூலில் தரப்பட்டுள்ளது. 

முஸ்லிமுக்கும் யூதனுக்குமான பிரச்சினையில் உண்மை யூதனின் பக்கம் இருந்ததால் 

அவனுக்கு சாதகமாக தீர்ப்பளித்த உமர் ரழி


عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رض اخْتَصَمَ إِلَيْهِ مُسْلِمٌ وَيَهُودِيٌّ فَرَأَى عُمَرُ أَنَّ الْحَقَّ لِلْيَهُودِيِّ فَقَضَى لَهُ فَقَالَ لَهُ الْيَهُودِيُّ وَاللَّهِ لَقَدْ قَضَيْتَ بِالْحَقِّ فَضَرَبَهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ رض بِالدِّرَّةِ(1 (ثُمَّ قَالَ وَمَا يُدْرِيكَ فَقَالَ لَهُ الْيَهُودِيُّ إِنَّا نَجِدُ أَنَّهُ لَيْسَ قَاضٍ يَقْضِي بِالْحَقِّ إِلَّا كَانَ عَنْ يَمِينِهِ مَلَكٌ وَعَنْ شِمَالِهِ مَلَكٌ يُسَدِّدَانِهِ وَيُوَفِّقَانِهِ لِلْحَقِّ مَا دَامَ مَعَ الْحَقِّ فَإِذَا تَرَكَ الْحَقَّ عَرَجَا وَتَرَكَاهُ   1206مؤطا مالك     



உமர் ரழி ஜெரூசலத்தை கைப்பற்றியபோது கிறிஸ்தவர்களுக்கும்,அவர்களின் ஆலயங்களும் முழுபாதுகாப்பு உண்டு என ஒப்பந்தம்

لَمَّا دَخَلَ عمرُ رض الجَابِية جاء رؤساء بيت المقدس الي عمررض فوقع الصلح بينه وبينهم علي جزية معلومة وكتب باالصلح وثيقتين وثيقة ظلت عند العرب ووثيقة ظَلَّتْ عند الروم خلاصةُ هذه الوثيقة اطلاقُ حُرِّية الدين للمسيحيين واِبْقاؤهم علي ما كانوا عليه من امر دينهم وطُقٌوْسِهِمْ وكَنَا ئِسِهم وفي رواية لا تُسَكَّن كنائسُهم ولا تُهْدَمُ ولا يُنقَضُ منها ولا من صلبانهم ولا شيء من أموالهم ولا يُكْرَهون على دينهم ولا يُضَارّ أحد منهم(دروس التاريخ 

மராட்டிய மன்னன் சிவாஜியின் மத உணர்வுகளை மதித்த அவுரங்கசீப் ரஹ்

இந்துக்கள் மாபெரும் தலைவராக கருதும் மராட்டிய மன்னன் (சத்ரபதி) சிவாஜியை அவுரங்கசீப் சிறையில் அடைத்ததாகவும், அவரை  மத அடிப்படையில் கொடுமைப்படுத்தியதாகவும் வரலாற்று நூல்களில் திரித்து எழுதுவார்கள். ஆனால் அரசியல் காரணங்களுக்காக மட்டும் தான் சிவாஜி சிறை பிடிக்கப்பட்டாரே தவிர, மற்றபடி சிறையில் அவர் இருக்கும்போது கவுரமாக நடத்தப்பட்டார். மேலும் அவுரங்கசீப் ரஹ் அவர்கள் சிவாஜியின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக ஒருபோதும் நடந்து கொள்ளவில்லை. ஒரு முறை சிவாஜி மதுராவில் இருக்கும் கோவிலுக்கு தாம் இரண்டு குதிரைகளை தானமாக வழங்க எண்ணியிருப்பதாகவும் அதை நிறைவேற்ற அனுமதி அளிக்க வேண்டும் என்று அவுரங்கசீப் அவர்களிடம் கோரிக்கை வைத்த போது அவுரங்கசீப் அவர்கள் எந்த மறுப்பும் சொல்லாமல் அதை நிறைவேற்ற வசதி ஏற்படுத்திக் கொடுத்தார்

கட்சிப்பணம் தேவையில்லை பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மை இந்துக்களை நல்ல விதமாக நடத்துங்கள் - காயிதே மில்லத்

இந்தியா பாகிஸ்தான் பிரிந்த போது முஸ்லிம் லீக் கட்சியும் பிரிய நேரிட்டது. இந்தியாவில் காயிதே மில்லத் அவர்களின் தலைமையிலும், பாகிஸ்தானில் முஹம்மது அலி ஜின்னா அவர்களின் தலைமையிலும் செயல்படத் துவங்கிய நேரத்தில் கட்சிப் பணத்தை பிரிப்பது பற்றிய பேச்சு வந்தது. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் காயிதே மில்லத் அவர்களிடம் அது பற்றிப் பேச அழைப்பு விடுத்த போது கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்கள் கூறினார்கள் கட்சிப்பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் அதை நாங்கள் எப்படியோ சமாளித்துக் கொள்வோம் ஆனால் அதற்குப் பதிலாக நீங்கள் முக்கியமான ஒரு காரியம் செய்ய வேண்டும். உங்கள் நாட்டில் (பாகிஸ்தானில்) வாழும் சிறுபான்மை இந்து மக்களை நீங்கள் நல்ல விதமாக நடத்துங்கள் அவர்களின் உரிமைகளை மதித்து நடந்து கொள்ளுங்கள். அவர்களின் மத உரிமைகளில் தலையிடாதீர்கள் அவ்வாறு செய்தால் அதுவே எங்களுக்குப் போதும். நீங்கள் பணம் தரா விட்டாலும் பரவாயில்லை.                           

     

இஸ்லாம் தீவிரவாதத்தை ஒருபோதும் ஆதரிப்பதில்லை என்ற செய்தியை உலகெங்கும் பரப்ப வேண்டும்

 مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَاا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا (32)المائدة

عَنْ أَنَسِ  رَضِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَكْبَرُ الْكَبَائِرِ الْإِشْرَاكُ بِاللَّهِ وَقَتْلُ النَّفْسِ وَعُقُوقُ الْوَالِدَيْنِ وَقَوْلُ الزُّورِ أَوْ قَالَ وَشَهَادَةُ الزُّورِ (بخاري)

மறுமையில் மனிதனுக்கு மனிதனுக்கும் இடையேயான பிரச்சினைகளில் முதலில் விசாரணை நடப்பது கொலைக்குற்றம் தான்

عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَّلُ مَا يُقْضَى بَيْنَ النَّاسِ فِي الدِّمَاءِ (بخاري)

தொழுகையைப் பற்றித் தான் முதலில் விசாரிக்கப்படும் என்ற நபிமொழிக்கு இது முரணல்ல. காரணம் அது அல்லாஹ்வுடன் சம்பந்தப்பட்டது இது அடியார்களுடன் சம்பந்தப்பட்டது

கொலை செய்வது கொடிய செயல் என்பதால் தான் இவ்வுலகில் கொலை செய்தாலும் அதற்கான பாவத்தின் ஒரு பங்கு முதன் முதலில் அதை ஆரம்பித்து வைத்தவருக்கு உண்டு

عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تُقْتَلُ نَفْسٌ إِلَّا كَانَ عَلَى ابْنِ آدَمَ الْأَوَّلِ كِفْلٌ مِنْهَا (بخاري)

கொலைக் குற்றத்திற்கு கண்டிப்பாக பழி வாங்கப்படும்

عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَجِيءُ الْمَقْتُولُ بِالْقَاتِلِ يَوْمَ الْقِيَامَةِ نَاصِيَتُهُ وَرَأْسُهُ فِي يَدِهِ وَأَوْدَاجُهُ تَشْخَبُ دَمًا يَقُولُ يَا رَبِّ قَتَلَنِي حَتَّى يُدْنِيَهُ مِنْ الْعَرْشِ (نسائ) معانى بعض الكلمات : تشخب : تسيل - الأوداج : العروق المحيطة بالعنق التى تقطع حالة الذبح واحدها الودج

விளக்கம் – கொல்லப்பட்டவன் தன்னைக் கொன்றவனை மறுமையில் நெற்றி முடியைப் பிடித்து இழுத்துக் கொண்டு அர்ஷுக்கு நெருக்கமாக வந்து விடுவான். அதாவது கண்டிப்பாக அதற்கு பழி தீர்க்கப்படும் என்பதை இந்த ஹதீஸ் காட்டுகிறது.

ஒரு முஃமின் அன்பின் பிறப்பிடம் ஆவார். எவர் பிறரை நேசிப்பவராகவும் பிறரால் நேசிக்கப்படுபவராகவும் இல்லையோ அவரிடம் எந்த நலவும் இல்லை

عَنْ أَبِى هُرَيْرَةَ رَضِىَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- :« الْمُؤْمِنُ مَأْلَفٌ وَلاَ خَيْرَ فِيمَنْ لاَ يَأْلَفُ وَلاَ يُؤْلَفُ  (حاكم)

 

2 கருத்துகள்:

  1. துனை தலைப்பு போட்டு பதிவிடவும் ஹதீஸ் ஆயத்த சம்பவம் என பிரித்து பிரித்து பதிவிட்டால் நன்றாக இருக்கும்

    பதிலளிநீக்கு

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...