வியாழன், 6 ஏப்ரல், 2023

உத்தரவின்றி உள்ளே வராதீர்!

 15- ம் தராவீஹ்  பயான்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَى أَهْلِهَا ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ (27) فَإِنْ لَمْ تَجِدُوا فِيهَا أَحَدًا فَلَا تَدْخُلُوهَا حَتَّى يُؤْذَنَ لَكُمْ وَإِنْ قِيلَ لَكُمُ ارْجِعُوا فَارْجِعُوا هُوَ أَزْكَى لَكُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ (28) لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ مَسْكُونَةٍ فِيهَا مَتَاعٌ لَكُمْ وَاللَّهُ يَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا تَكْتُمُونَ (29)  النور

وعن أبي هريرة قال : دخلت مع رسول الله صلى الله عليه وسلم فوجد لبنا في قدح . فقال : " أبا هر الحق بأهل الصفة فادعهم إلي " فأتيتهم فدعوتهم فأقبلوا فاستأذنوا فأذن لهم فدخلوا (مشكاة

ஒரு கோப்பை பாலை  நிறைய பேர் அருந்திய அபூஹுரைரா ரழி அவர்களின் சம்பவத்தில் நீ போய் திண்ணைத் தோழர்களை அழைத்து வா என்று நபி ஸல் கூற, அவ்வாறே நான் போய் அழைத்து வந்து வாசலில் நின்று அனுமதி கேட்டோம் நபி ஸல் அனுமதித்த பின்பு உள்ளே சென்றோம் என அபூஹுரைரா ரழி கூறினார்கள்   

சலாம் சொல்லி அனுமதி கேட்காதவருக்கு அனுமதி தராதீர்கள்

عن جابر أن النبي صلى الله عليه وسلم قال : " لا تأذنوا لمن لم يبدأ بالسلام " رواه البيهقي في " شعب الإيمان "

வீட்டு வாசலில் நின்று மூன்று முறை அனுமதி கேட்டும் பதில் வரா விட்டால் அங்கேயே நின்றபடி திருப்பித் திருப்பி சலாம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்

عن أبي سعيد الخدري قال : أتانا أبو موسى قال : إن عمر أرسل إلي أن آتيه فأتيت بابه فسلمت ثلاثا فلم يرد علي فرجعت . فقال : ما منعك أن تأتينا ؟ فقلت : إني أتيت فسلمت على بابك ثلاثا فلم ترد علي فرجعت وقد قال لي رسول الله صلى الله عليه وسلم : " إذا استأذن أحدكم ثلاثا فلم يؤذن له فليرجع " . فقال عمر : أقم عليه البينة . قال أبو سعيد : فقمت معه فذهبت إلى عمر فشهدت (مشكاة   مسلم

 கருத்து- அபூமூஸா ரழி அவர்களை தன்னிடம் வரச் சொல்லி உமர் ரழி அழைப்பு விடுத்தார்கள் அபூமூஸா ரழி அவர்கள் உமர் ரழி அவர்களிடம் இருப்பிடத்திற்கு வந்து வாசலில் சற்று நேரம் நின்று மூன்று தடவை சலாம் சொன்னார்கள் உள்ளிருந்து எந்த பதிலும் வராததால் திரும்பி வந்து விட்டார்கள். இந்த விஷயம் தெரியாத உமர் ரழி அவர்கள் அபூமூஸா ரழி அவர்களிடம் நான் சொல்லி அனுப்பியும் நீங்கள் ஏன் வரவில்லை என்று கேட்க, அதற்கு அபூமூஸா ரழி அவர்கள் நான் வந்தேன் மூன்று தடவை சலாம் சொன்னேன் ஆனால்  எந்த பதிலும் வராததால் திரும்பி வந்து விட்டேன் ஏனெனில் நபி ஸல் கூறினார்கள் ஒருவரின் வீட்டுக்குச் சென்று மூன்று தடவை சலாம் சொல்லி அனுமதி கேட்ட பின்பும்  உள்ளிருந்து எந்த பதிலும் வரா விட்டால் அங்கேயே நின்றபடி திருப்பித் திருப்பி சலாம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம் அது வீட்டினருக்கு இடையூறை ஏற்படுத்தலாம் என்று கூறியுள்ளார்கள் அதனால் நான் திரும்பி வந்து விட்டேன் என்று கூற, அதற்கு உமர் ரழி நீங்கள் கூறும் இந்த நபிமொழி உண்மை தானா என்று சாட்சியுடன் நீங்கள் நிரூபிக்க வேண்டும் என்று உமர் ரழி கூற,  அபூமூஸா ரழி அவர்கள் சென்று அபூஸயீத் அவர்களை அழைத்து சாட்சி சொன்னார்கள். அதற்குப் பின்பு உமர் ரழி எதுவும் கூறவில்லை. பொதுவாகவே உமர் ரழி அவர்கள் இதுபோன்ற விஷயங்களில் அல்லாஹ் அல்லது அவனது தூதரின் சொல்லுக்கு முன்னால் அப்படியே அடங்கிப் போய் விடுவார்கள். மிம்பர் மீது ஏறி மஹரைக் குறைக்க வேண்டும் என்று பேசிய ஒரு பெண் எழுந்து குர்ஆன் வசனத்தை ஓதியவுடன் தன் கருத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார்கள்

وعن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال : " إذا دعي أحدكم فجاء مع الرسول فإن ذلك إذن " . رواه أبو داود . وفي رواية له قال : " رسول الرجل إلى الرجل إذنه "

உங்களை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பினால் அந்த நபருடன் நீங்கள் வந்தால் அனுமதி தேவையில்லை

வாசல் திறந்திருக்கும்போது எங்கே நின்று அனுமதி கேட்பது ?

وعن عبد الله بن بسر قال : كان رسول الله صلى الله عليه وسلم إذا أتى باب قوم لم يستقبل الباب تلقاء وجهه ولكن من ركنه الأيمن أو الأيسر فيقول : " السلام عليكم السلام عليكم " وذلك أن الدور لم يكن يومئذ عليها ستور . رواه أبو داود

நபி ஸல் அவர்கள் ஒரு வீட்டுக்குச் சென்றால் வாசலுக்கு நேராக நின்று அனுமதி கேட்க மாட்டார்கள் வலது  ஓரத்தில் அல்லது இடது  ஓரத்தில் நின்ற படி அனுமதி கேட்பார்கள் கதவு திறந்திருந்தால் இச்சட்டம் பொருந்தும்

عَنْ عَبْدِ اللَّهِ  رض قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْنُكَ عَلَيَّ أَنْ تَكْشِفَ السِّتْرَ (أحمد

அப்துல்லாஹ் ரழி அவர்கள் கூறினார்கள் நபி ஸல் அவர்கள் என்னிடம் இவ்வாறு கூறினார்கள் நான்  வந்து அனுமதி கேட்கும்போது நீர் திரையை நீக்குவதும் அனுமதியாக எடுத்துக் கொள்ளப்படும். 

 

நம்முடைய வீட்டில் நுழைந்தாலும் வீட்டினருக்கு ஸலாம் சொல்வதால் பரக்கத் பெருகும்.

قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ قَالَ لِى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « يَا بُنَىَّ إِذَا دَخَلْتَ عَلَى أَهْلِكَ فَسَلِّمْ يَكُونُ بَرَكَةً عَلَيْكَ وَعَلَى أَهْلِ بَيْتِكَ ». (ترمذي

வீட்டில் தாயார் மட்டும் இருக்கிறார்கள் என்றாலும் அனுமதி கேட்க வேண்டும்

عن عطاء أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم فقال : استأذن على أمي ؟ فقال : " نعم " فقال الرجل : إني معها في البيت . فقال رسول الله صلى الله عليه وسلم : " استأذن عليها " فقال الرجل : إني خادمها . فقال رسول الله صلى الله عليه وسلم : " استأذن عليها أتحب أن تراها عريانة ؟ " قال : لا . قال : " فاستأذن عليها " . رواه مالك

கருத்து -ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் வந்து நான் என் வீட்டுக்குத்தான் செல்கிறேன் உள்ளே என் தாயார் மட்டும் தான் இருக்கிறார் அவ்வாறிருக்கு என் தாயாரிடமும் நான் அனுதி கேட்க வேண்டுமா என்று வினவினார். அதற்கு நபி ஸல் அவர்கள் ஆம் என்றார்கள் மீண்டும் அவர் நான் என் தாயாருடன் தான் வசிக்கிறேன் என்று கேட்க, அப்போதும் நபி ஸல் நீ அனுமதி கேட்டே உள்ளே நுழைய வேண்டும் என்றார்கள்.மீண்டும் அவர் நான் என் தாய்க்குப் பணிவிடை செய்பவனாகத் தானே இருக்கிறேன் என்றார் அப்போதும் நபி ஸல் அவர்கள் நீ அனுமதி கேட்டே உள்ளே நுழைய வேண்டும் ஏனெனில் உன் தாயாரை அரைகுறை ஆடையுடன் இருப்பதை நீர் பார்க்க விரும்புவீரா என்று கேட்டார்கள்            

விளக்கம்- மகனோ அல்லது யாருமே வீட்டில் இல்லை என்று கருதி சில ஆடைகளைத் தளர்த்தி விட்டு வேலை பார்க்கும் அவசியம் ஏற்படலாம் அவ்வாறிருக்க திடீரென்று அனுமதி கேட்காமல் மகனே உள்ளே வந்து விட்டாலும் ஆடையை சரி செய்ய அவகாசம் இருக்காது என்பதால் நபிஸல் இவ்வாறு கூறினார்கள் 

சலாம் கூறுவதுடன் தான் வருவதை உணர்த்த கனைப்பதும் கூடும் என்று சில நூல்களில் உள்ளது

மூடப்பட்ட வீட்டுக்குள் அனுமதி கேட்கும்போது வீட்டுக்குள் இருப்பவர் யாரது என்று கேட்டால் பெயரைச் சொல்ல வேண்டுமே தவிர நான் தான் என்று சொல்லக்கூடாது

عَنْ جَابِرٍ أَنَّهُ ذَهَبَ إِلَى النَّبِىِّ -صلى الله عليه وسلم- فِى دَيْنِ أَبِيهِ فَدَقَقْتُ الْبَابَ فَقَالَ « مَنْ هَذَا ». قُلْتُ أَنَا. قَالَ « أَنَا أَنَا ». كَأَنَّهُ كَرِهَهُ.  (ابوداود

ஜாபிர் ரழி அவர்கள் தனது கடன் விஷயமாக நபி ஸல் அவர்களின் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினார்கள் உள்ளேயிருந்து நபி ஸல் அவர்கள் யாரது என்று கேட்க, நான் தான் என்று ஜாபிர் ரழி அவர்கள் கூறிய போது நபி ஸல் அவர்கள் அந்த பதிலை  வெறுக்கும் விதமாக அது என்ன நான் தான் என்று சொல்வது பெயரைச் சொல்ல வேண்டியது தானே என்றார்கள்                               

ஒரே பெயரில் பலர் இருந்தால் இன்னாரின் மகன் என்பது  போன்ற அடையாளத்தையும் குறிப்பிட வேண்டும்

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَضْحًى أَوْ فِطْرٍ إِلَى الْمُصَلَّى ثُمَّ انْصَرَفَ فَوَعَظَ النَّاسَ وَأَمَرَهُمْ بِالصَّدَقَةِ فَقَالَ أَيُّهَا النَّاسُ تَصَدَّقُوا فَمَرَّ عَلَى النِّسَاءِ فَقَالَ يَا مَعْشَرَ النِّسَاءِ تَصَدَّقْنَ فَإِنِّي رَأَيْتُكُنَّ أَكْثَرَ أَهْلِ النَّارِ فَقُلْنَ وَبِمَ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ تُكْثِرْنَ اللَّعْنَ وَتَكْفُرْنَ الْعَشِيرَ مَا رَأَيْتُ مِنْ نَاقِصَاتِ عَقْلٍ وَدِينٍ أَذْهَبَ لِلُبِّ الرَّجُلِ الْحَازِمِ مِنْ إِحْدَاكُنَّ يَا مَعْشَرَ النِّسَاءِ ثُمَّ انْصَرَفَ فَلَمَّا صَارَ إِلَى مَنْزِلِهِ جَاءَتْ زَيْنَبُ امْرَأَةُ ابْنِ مَسْعُودٍ تَسْتَأْذِنُ عَلَيْهِ فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ هَذِهِ زَيْنَبُ فَقَالَ أَيُّ الزَّيَانِبِ فَقِيلَ امْرَأَةُ ابْنِ مَسْعُودٍ قَالَ نَعَمْ ائْذَنُوا لَهَا فَأُذِنَ لَهَا قَالَتْ يَا نَبِيَّ اللَّهِ إِنَّكَ أَمَرْتَ الْيَوْمَ بِالصَّدَقَةِ وَكَانَ عِنْدِي حُلِيٌّ لِي فَأَرَدْتُ أَنْ أَتَصَدَّقَ بِهِ فَزَعَمَ ابْنُ مَسْعُودٍ أَنَّهُ وَوَلَدَهُ أَحَقُّ مَنْ تَصَدَّقْتُ بِهِ عَلَيْهِمْ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَدَقَ ابْنُ مَسْعُودٍ زَوْجُكِ وَوَلَدُكِ أَحَقُّ مَنْ تَصَدَّقْتِ بِهِ عَلَيْهِمْ . (بخاري

   நபி (ஸல்)அவர்கள் ஹஜ்ஜுப்பெருநாள்அல்லது நோன்புப் பெருநாள்தினத்தன்று தொழுகைத்திடலுக்குப் புறப்பட்டு வந்தார்கள்.(ஆண்களுக்கு உரை நிகழ்த்திய) பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று, பெண்கள் சமூகமே! தான தர்மங்கள் செய்யுங்கள். ஏனெனில் நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை எனக்குக் காட்டப்பட்டது என்று குறிப்பிட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஏன் (எங்களுக்கு இந்த நிலை)? எனப் பெண்கள் கேட்டதும். நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; மனக் கட்டுப்பாடுமிக்க கூரிய அறிவுடைய ஆண்களின் புத்தியை, அறிவிலும் மார்க்க(த் தின் கடமையி)லும் குறையுடையவர்களான நீங்கள் போக்கி விடுவதையே நான் காண்கின்றேன் என்று கூறினார்கள். இது முடிந்து நபி (ஸல்) அவர்கள் இப்னு மஸ்ஊத் ரழி அவர்களின் மனைவி ஜைனப் ரழி அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வீட்டுக்கு வந்து நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க அனுமதி கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே ஜைனப் வந்திருக்கிறார் என்று கூறப்பட்டபோது (நிறைய ஜைனப் இருக்கிறார்கள்) எந்த ஜைனப்  என்று கேட்க, இப்னு மஸ்ஊத் ரழி அவர்களின் மனைவி ஜைனப் என்று கூறப்பட்டது. பின்பு நபி (ஸல்) அவர்கள் சரி அவருக்கு அனுமதி கொடுங்கள் என்றார்கள்.  அனுமதி தரப்பட்டது. அப்போது அந்தப் பெண்மணி அல்லாஹ்வின் தூதரே தாங்கள் தர்ம ம் செய்யச் சொன்னீர்கள் என்னிடம் நகைகள் உள்ளது. அதை தர்ம ம் செய்ய நினைக்கிறேன். என்னுடைய கணவர் இப்னு மஸ்ஊத் ரழி அவர்களின் பிள்ளைகள் கஷ்டப்படுவதால் என்னுடைய ஜகாத்தை வாங்குவதற்கு அவர்கள் தகுதியானவர்கள் என என் கணவர் நினைக்கிறார் என்று கூற, அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவர் கூறியது உண்மை தான். அவர்கள் தான் தகுதியானவர்கள் என்றார்கள்.  நூல் : புகாரி  மேற்படி சட்டம் ஷாஃபிஈ மத்ஹபில் உண்டு. ஆனால் ஹனஃபி மத்ஹபில் மனைவி தன் கணவனுக்குத் தரக்கூடாது என்று சட்டம் உள்ளது. அதற்கு பல விளக்கங்கள் உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...