புதன், 5 ஏப்ரல், 2023

பிற படைப்பினங்களின் வணக்கங்கள்

                                                        14ம் தராவீஹ்  பயான்

அதிகாலை நேரத்தை அடைந்தாலே பறவைகளின் சப்தங்களை நாம் அதிகமாக கேட்க முடியும் அவை வெறும் சப்தங்கள் என்று எண்ணி விடக்கூடாது பறவைகள் தஸ்பீஹ் செய்கின்றன என குர்ஆன் கூறுகிறது. அதுபோல் மனிதன் மற்றும் ஜின் தவிர மற்ற அனைத்தும் 100 சதவீதம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துபவைகளாக உள்ளன

أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يَسْجُدُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُومُ وَالْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ وَكَثِيرٌ مِنَ النَّاسِ وَكَثِيرٌ حَقَّ عَلَيْهِ الْعَذَابُ (الحج18) - وَإِنْ مِنْ شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا (الإسراء: 44)

சூரியனின் சஜ்தா

عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي ذَرٍّ حِينَ غَرَبَتْ الشَّمْسُ أَتَدْرِي أَيْنَ تَذْهَبُ قُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ فَإِنَّهَا تَذْهَبُ حَتَّى تَسْجُدَ تَحْتَ الْعَرْشِ فَتَسْتَأْذِنَ فَيُؤْذَنُ لَهَا وَيُوشِكُ أَنْ تَسْجُدَ فَلَا يُقْبَلَ مِنْهَا وَتَسْتَأْذِنَ فَلَا يُؤْذَنَ لَهَا يُقَالُ لَهَا ارْجِعِي مِنْ حَيْثُ جِئْتِ فَتَطْلُعُ مِنْ مَغْرِبِهَا (بخاري

ஒருநாள் சூரியன்  மறைந்த போது இது எங்கே செல்கிறது தெரியுமா என நபி ஸல் கேட்டார்கள் பின்பு அவர்களே பதில் கூறினார்கள் தினமும் அல்லாஹ்வின் அர்ஷுக்குக் கீழே சென்று சஜ்தா செய்யும் பின்பு உதிப்பதற்கு அனுமதி கேட்கும் அனுமதி தரப்பட்ட பின் அது உதிக்கும் கடைசியில் ஒருநாள் அதற்கு அனுமதி தரப்படாது நீ வந்த திசையிலேயே திரும்பு என்று கூறப்படும் அப்போது வழமைக்கு மாற்றமாக மேற்கில் உதயமாகும்.                                                                     

மரங்கள் மற்றும் மலைகளின் நிழல் கீழே விழுவது அவைகள் தஸ்பீஹ் செய்வதற்கான அடையாளம்

أَوَلَمْ يَرَوْا إِلَى مَا خَلَقَ اللَّه مِنْ شَيْء يَتَفَيَّأ ظِلَاله عَنْ الْيَمِين وَالشَّمَائِل سُجَّدًا لِلَّهِ وَهُمْ دَاخِرُونَ (النحل48

தாவூத் அலை தஸ்பீஹ் செய்யும்போது அவர்களுடன் மரங்களும்,மலைகளும், பறவைகளும் தஸ்பீஹ் செய்யும்

وَاذْكُرْ عَبْدَنَا دَاوُدَ ذَا الْأَيْدِ إِنَّهُ أَوَّابٌ - إِنَّا سَخَّرْنَا الْجِبَالَ مَعَهُ يُسَبِّحْنَ بِالْعَشِيِّ وَالْإِشْرَاقِ (سورة ص 18)أَيْ أَنَّهُ تَعَالَى سَخَّرَ الْجِبَال تُسَبِّح مَعَهُ عِنْد إِشْرَاق الشَّمْس وَآخِر النَّهَار كَمَا قَالَ عَزَّ وَجَلَّ " يَا جِبَال أَوِّبِي مَعَهُ وَالطَّيْر " وَكَذَلِكَ كَانَتْ الطَّيْر تُسَبِّح بِتَسْبِيحِهِ وَتُرَجِّع بِتَرْجِيعِهِ إِذَا مَرَّ بِهِ الطَّيْر وَهُوَ سَابِح فِي الْهَوَاء فَسَمِعَهُ وَهُوَ يَتَرَنَّم بِقِرَاءَةِ الزَّبُور لَا يَسْتَطِيع الذَّهَاب بَلْ يَقِف فِي الْهَوَاء (تفسير ابن كثير)

தஸ்பீஹ் மட்டுமன்றி நபி ஸல் அவர்களுக்கு ஸலாம் சொல்லும் முறையையும் தெரிந்து வைத்திருக்கும் மரங்கள்

عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي لَأَعْرِفُ حَجَرًا بِمَكَّةَ كَانَ يُسَلِّمُ عَلَيَّ قَبْلَ أَنْ أُبْعَثَ إِنِّي لَأَعْرِفُهُ الْآنَ (مسلم) بَاب فَضْلِ نَسَبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- كِتَاب الْفَضَائِلِ

நபி ஸல் அவர்கள் கூறினார்கள் மக்காவில் ஒரு பாறையை நான் அறிவேன்.  நான் நபியாக ஆக்கப்படும் முன்பே அது என்னைக் கண்டால் சலாம் சொல்லும்

நபி ஸல் அவர்களின் மிம்பராக பயன்பட்ட மரம் அவர்களின் பிரிவைத் தாங்க முடியாமல் அழுத சம்பவத்தையும் இங்கே சுட்டிக் காட்டலாம்

பறவைகளின் வணக்கம்

أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يُسَبِّحُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالطَّيْرُ صَافَّاتٍ كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهُ وَتَسْبِيحَهُ (النور41)

விளக்கம்-மனிதர்களில் பலருக்கு அல்லாஹ்வை வணங்குவது தெரியாமல் இருக்கலாம். ஆனால் மற்ற அனைத்து ஜீவராசிகளும் அல்லாஹ்வை வணங்கும் முறையை தெரிந்து வைத்துள்ளன என்பது மேற்படி வசனத்தின் கருத்து.

قال مجاهد وغيره:الصلاة للإنسان والتسبيح لما سواه من الخلق. وقال سفيان: للطير صلاة ليس فيها ركوع ولا سجود. وقيل: إن ضربها بأجنحتها صلاة وإن أصواتها تسبيح  (قرطبي

சுஃப்யான் ரஹ் அவர்கள் கூறினார்கள் மனிதர்களுக்குத் தான் தொழுகை ஆனால் மற்ற உயிரினங்களுக்கு தஸ்பீஹ் மட்டும் தான். மற்றொரு அறிவிப்பில் சுஃப்யான் ரஹ் அவர்கள் கூறினார்கள் பறவைகளுக்கு தொழுகை உண்டு ஆனால் ருகூவு சுஜூது கிடையாது மிக அபூர்வமாக சில பறவைகள் சுஜூதும் செய்ய வாய்ப்பு உண்டு. ஹரம் ஷரீஃபில் நடந்த தாக வந்த வீடியோவை உதாரணமாக கூறலாம் 

 

 

பறவைகள் பறக்கும்போது கீழே விழுந்து விடாமல் பாதுகாப்பவன் அல்லாஹ் என்ற கருத்து விமானத்திற்கும் பொருந்தும்.

أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ وَيَقْبِضْنَ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَنُ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ بَصِيرٌ (19سورة الملك)

                             எறும்புகளின் தஸ்பீஹ்            

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ نَمْلَةً قَرَصَتْ نَبِيًّا مِنْ الْأَنْبِيَاءِ فَأَمَرَ بِقَرْيَةِ النَّمْلِ فَأُحْرِقَتْ فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ أَفِي أَنْ قَرَصَتْكَ نَمْلَةٌ أَهْلَكْتَ أُمَّةً مِنْ الْأُمَمِ تُسَبِّحُ (بخاري)بَاب إِذَا حَرَّقَ الْمُشْرِكُ الْمُسْلِمَ هَلْ يُحَرَّقُ-كتاب الجهاد (مسلم) بَاب النَّهْيِ عَنْ قَتْلِ النَّمْلِ- كِتَاب السَّلَامِ

எறும்புப் புற்று அருகே தங்கியிருந்த ஒரு நபியை ஒரு எறும்பு கடித்து விட்டது உடனே அவர்கள் அந்தப் புற்றையே எரித்து விட்டார்கள் உடனே அல்லாஹ் ஒரு எறும்பு கடித்த தற்காக அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்யும் கூட்டத்தையே அழித்து விட்டீர்களே என்று எச்சரித்தான்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نَزَلَ نَبِيٌّ مِنْ الْأَنْبِيَاءِ تَحْتَ شَجَرَةٍ فَلَدَغَتْهُ نَمْلَةٌ فَأَمَرَ بِجِهَازِهِ فَأُخْرِجَ مِنْ تَحْتِهَا ثُمَّ أَمَرَ بِهَا فَأُحْرِقَتْ فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ فَهَلَّا نَمْلَةً وَاحِدَةً (مسلم) بَاب النَّهْيِ عَنْ قَتْلِ النَّمْلِ كِتَاب السَّلَامِ-(بخاري باب خَمْسٌ مِنَ الدَّوَابِّ -بدء الخلق

عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ قَتْلِ أَرْبَعٍ مِنْ الدَّوَابِّ النَّمْلَةُ وَالنَّحْلَةُ وَالْهُدْهُدُ وَالصُّرَدُ(ابوداود) باب فِى قَتْلِ الذَّرِّ.

மழைக்காக எறும்பு பிரார்த்தனை செய்த சம்பவம்

عَنْ أَبِي الصِّدِّيقِ أَنَّ سُلَيْمَانَ عليه السلام خَرَجَ بِالنَّاسِ يَسْتَسْقِي فَمَرَّ عَلَى نَمْلَةٍ مُسْتَلْقِيَةٍ عَلَى قَفَاهَا رَافِعَةٍ قَوَائِمَهَا إِلَى السَّمَاءِ وَهِيَ تَقُولُ اللَّهُمَّ إنَّا خَلْقٌ مِنْ خَلْقِكَ لَيْسَ بِنَا غِنًى عَنْ رِزْقِكَ فَإِمَّا أَنْ تَسْقِيَنَا وَإِمَّا أَنْ تُهْلِكَنَا فَقَالَ سُلَيْمَانُ لِلنَّاسِ:ارْجِعُوا فَقَدْ سُقِيتُمْ بِدَعْوَةِ غَيْرِكُمْ (م:ابن ابي شيبة

சுலைமான் அலைஹிஸ்ஸலாம் மழைத் தொழுகைக்காக புறப்பட்ட போது ஒரு எறும்பு மல்லாந்து படுத்தபடி யாஅல்லாஹ் நாங்கள் உன்னுடைய படைப்பினங்களில் ஒரு படைப்பினம். உன்னுடைய உணவு இல்லாமல் எங்களால் வாழ முடியாது ஒன்று எங்களுக்கு மழையை இறக்கு.. அல்லது எங்களை அழித்து விடு என துஆச் செய்த து அதைக் கேட்ட சுலைமான் அலை அவர்கள் வாருங்கள் திரும்பிச் செல்வோம் மற்ற படைப்பினத்தின் துஆவால் நிச்சயம் மழை பெய்யும் என்றார்கள்            

அல்லாஹ்வின் படைப்பில் சேவல் ஒரு அதிசயம். சேவல் கூவும்போது துஆ செய்தால் ஏற்கப்படும்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا سَمِعْتُمْ صِيَاحَ الدِّيَكَةِ فَاسْأَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ فَإِنَّهَا رَأَتْ مَلَكًا وَإِذَا سَمِعْتُمْ نَهِيقَ الْحِمَارِ فَتَعَوَّذُوا بِاللَّهِ مِنْ الشَّيْطَانِ فَإِنَّهُ رَأَى شَيْطَانًا (بخاري) باب خَيْرُ مَالِ الْمُسْلِمِ- كتاب بدء الخلق-

சேவல் கூவினால் அல்லாஹ்வின் அருளை வேண்டுங்கள் ஏனெனில் அது மலக்குகளைப் பார்க்கிறது. கழுதை கத்துவதை கண்டால் அவூது ஓதுங்கள் ஏனெனில் அது இப்லீஸை பார்க்கிறது.

قَالَ عِيَاض: كَانَ السَّبَب فِيهِ رَجَاء تَأْمِين الْمَلَائِكَة عَلَى دُعَائِهِ وَاسْتِغْفَارهمْ لَهُ وَشَهَادَتهمْ لَهُ بِالْإِخْلَاصِ  وَيُؤْخَذ مِنْهُ اِسْتِحْبَاب الدُّعَاء عِنْد حُضُور الصَّالِحِينَ تَبَرُّكًا بِهِمْ (فتح الباري)

நல்லோர்கள் இருக்கும் இடத்தில் அல்லாஹ்வின் அருள் இறங்கும். ஆகவே  அருளை வேண்டி அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டும் என்பதும், தீயோர்கள் இருக்கும் இடத்தில் அல்லாஹ்வின் சாபம்  இறங்கும். ஆகவே அதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேட வேண்டும் என்ற படிப்பினையும் இதில் உண்டு –மிர்காத்

சில ஜீவராசிகள் மலக்குகளை கண்ணால் பார்க்கின்றன. சில ஜீவராசிகள் ஷைத்தானை பார்க்கின்றன. ஆனால் மனிதன் மலக்கையும் பார்ப்பதில்லை. ஷைத்தானையும் பார்ப்பதில்லை. (சிலரைத் தவிர)

وهذا مما يدل على قدرة الله عز وجل، وأن من المخلوقات من ترى ما لا يراه الإنسان، فإن هذا فيه أن الديك رأى ملكاً وأن الحمار رأى شيطاناً، والناس لا يرون الملائكة ولا يرون الشياطين. (شرح ابي داود)

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَمِعْتُمْ نُبَاحَ الْكِلَابِ وَنَهِيقَ الْحُمُرِ بِاللَّيْلِ فَتَعَوَّذُوا بِاللَّهِ فَإِنَّهُنَّ يَرَيْنَ مَا لَا تَرَوْنَ (ابوداود) بَاب مَا جَاءَ فِي الدِّيكِ وَالْبَهَائِمِ-كِتَاب الْأَدَبِ-مسلم- باب اسْتِحْبَابِ الدُّعَاءِ عِنْدَ صِيَاحِ الدِّيكِ.-كتاب  الذكر والدعاء

السؤال: هل يجوز أن نرمي الكلاب إذا سمعنا نباحها، باعتبار أنها رأت أمامنا شيطاناً؟ الجواب: الكلاب لا ترمى، ولكن إذا آذت وحصل منها أذى تقتل من أجل أذاها،-(شرح سنن ابي داود)

கழுதையும், நாயும் ஷைத்தானைக் கண்டு கத்துகிறது என்பதற்காக அவைகளை விரட்டக்கூடாது ஹதீஸில் வந்துள்ள படி பாதுகாப்பு மட்டுமே கேட்க வேண்டும். தொந்தரவு தந்தால் விரட்டலாம்

السؤال: من يقرأ القرآن وسمع صياح الديك فهل يقطع قراءته ويسأل الله؟ الجواب: نعم؛ فهو مثل ما يتوقف لرد السلام إذا سلم عليه شخص من الناس. (شرح سنن ابي داود)

குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கும்போது சேவல் கத்தினால் குர்ஆன் ஓதுவதை நிறுத்தி விட்டு பதில் கூற வேண்டுமா

பதில் ஆம். அது சலாமுக்கு பதில் கூறுவது போன்றாகும்.

ஃபஜ்ரு தொழுகைக்காக குறித்த நேரத்தில் மக்களை எழுப்பும் சேவல். ஃபஜ்ர் நேரம் மாறி மாறி வந்தாலும்.

عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَسُبُّوا الدِّيكَ فَإِنَّهُ يُوقِظُ لِلصَّلَاةِ (ابوداود) بَاب مَا جَاءَ فِي الدِّيكِ وَالْبَهَائِمِ-كِتَاب الْأَدَبِ -وَعِنْد الْبَزَّار مِنْ هَذَا الْوَجْه سَبَب قَوْله صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ ذَلِكَ وَأَنَّ دِيكًا صَرَخَ فَلَعَنَهُ رَجُل فَقَالَ ذَلِكَ (فتح الباري,مرقاة)

وفي رواية أحمد "لاَ تَسُبُّوا الدِّيكَ فَإِنَّهُ يَدْعُو إِلَى الصَّلاَةِ" وفي رواية "إِنَّهُ يُؤَذِّنُ بِالصَّلاَةِ (مسندأحمد) وَلَيْسَ مَعْنَى قَوْله فَإِنَّهُ يَدْعُو إِلَى الصَّلَاة أَنْ يَقُول بِصَوْتِهِ حَقِيقَة صَلُّوا أَوْ حَانَتْ الصَّلَاة  بَلْ مَعْنَاهُ أَنَّ الْعَادَة جَرَتْ بِأَنَّهُ يَصْرُخ عِنْد طُلُوع الْفَجْر وَعِنْد الزَّوَال فِطْرَة فَطَرَهُ اللَّه عَلَيْهَا

அனுபவப்பட்ட சேவல் சரியாக ஃபஜ்ருடைய நேரம் துவங்கும்போதும், முடியும்போதும் கூவும் என்பதால் ஷாஃபியாக்கள் சிலரின் கூற்றுப்படி சேவலின் சப்தம் கேட்டு ஃபஜ்ர் தொழலாம்.

وَلِلدِّيكِ خَصِيصَة لَيْسَتْ لِغَيْرِهِ مِنْ مَعْرِفَة الْوَقْت اللَّيْلِيّ فَإِنَّهُ يُقَسِّط أَصْوَاته فِيهَا تَقْسِيطًا لَا يَكَاد يَتَفَاوَت ، وَيُوَالِي صِيَاحه قَبْل الْفَجْر وَبَعْده لَا يَكَاد يُخْطِئ سَوَاء أَطَالَ اللَّيْل أَمْ قَصُرَ ، وَمِنْ ثَمَّ أَفْتَى بَعْض الشَّافِعِيَّة بِاعْتِمَادِ الدِّيك الْمُجَرَّب فِي الْوَقْت (فتح الباري)

قال الطيبي رحمه الله الديك أقرب الحيوانات صوتا إلى الذاكرين الله لأنه يحفظ غالبا أوقات الصلاة وأنكر الأصوات صوت الحمار فإنه أقرب صوتا إلى من هو أبعد من رحمة الله ولذا شبه صوت الحمار بصباح الكفار حال كونهم في النار في قوله تعالى "لَهُمْ فِيهَا زَفِيرٌ وَشَهِيقٌ (هود 106)

அல்லாஹ்வின் படைப்பில் ஒட்டகம் ஒரு அதிசயம். ஒட்டகம் கப்பல் போன்ற அமைப்பில் உள்ளது என்ற வசனம்

 

أَفَلَا يَنْظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ (17الغاشية) وَآيَةٌ لَهُمْ أَنَّا حَمَلْنَا ذُرِّيَّتَهُمْ فِي الْفُلْكِ الْمَشْحُونِ (41) وَخَلَقْنَا لَهُمْ مِنْ مِثْلِهِ مَا يَرْكَبُونَ (سورة يس42) وَكَانَ شُرَيْح الْقَاضِي يَقُول اُخْرُجُوا بِنَا حَتَّى نَنْظُر إِلَى الْإِبِل كَيْفَ خُلِقَتْ ؟(تفسير ابن كثير)

பெட்ரோலில் ஓடும் இன்றைய வாகனமும் -தண்ணீரில் ஓடிய அன்றைய பாலைவனக் கப்பலும்.

இன்றைய வாகனங்களின் பெட்ரோல் டேங்குக்கு நிகராக ஒட்டகத்தின் வயிற்றில் அல்லாஹ் பொருத்திய அதிசய வாட்டர் டேங்க்.
கடலைப் போல் பரந்து கிடக்கும் பாலைவனத்தில் எந்த உயிரினமும் பயணிக்க முடியாவிட்டாலும் ஒட்டகங்கள் சர்வ சாதாரணமாகப் பயணிப்பதைக் காண்கிறோம். அதற்கு ஏற்றவாறு ஒட்டகத்திற்குள் வேறு எந்த உயிரினத்திற்கும் இல்லாத சிறப்புத் தன்மைகள் அளிக்கப்பட்டுள்ளன. வெப்பத்தினால் உடலிலும் இரத்தத்திலும் உள்ள தண்ணீர் குறைந்து விட்டால் எந்த உயிரினமும் அழிந்து போய் விடும். உயிரினத்தின் இரத்தத்தில் தண்ணீரின் அளவு குறைந்தால் இரத்தம் உறைந்து ஓட்டமின்றி அந்த உயிரினம் செத்து விடும். இந்த நிலை ஏற்படாதவாறு பாலை வனக் கப்பல் எனப்படும் ஒட்டகத்தில் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. ஒட்டகம், ஒரு நேரத்தில் 100 லிட்டர் தண்ணீரை பத்து நிமிடங்களுக்குள் உறிஞ்சி தன் உடலுக்குள் உள்ள சிறப்பான தண்ணீர்ப் பையில் தேக்கி வைத்துக் கொள்கிறது. அந்தப் பையிலிருந்து இரத்தத்தில் தண்ணீரின் அளவு குறையும் போதெல்லாம் இரத்தக் குழாய்க்கு பாய்ச்சுகிறது ஒட்டக இரத்தத்தின் ஒவ்வொரு சிகப்பு அணுவும் 200 மடங்கு விரிவடைகின்றது. இதனால் எவ்வளவு நாட்கள் தண்ணீர் கிடைக்காவிட்டாலும் பையில் இருக்கும் தண்ணீர் தீரும் வரை இரத்தம் உறைந்து போகாமல் ஒட்டகத்தால் பயணிக்க முடியும்
நீர் கிடைக்காத வழியில் பயணிகளையும், சரக்குகளையும் சுமந்த வண்ணம் சென்று கொண்டிருக்கும் பொழுது இரத்த ஓட்டத்திற்கு தேவையான தண்ணீரை இரத்தத்தின் சிகப்பணுக்கள் சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு இரத்தம் பாகுபோல் உறைந்து ஒட்டகத்திற்கு வெடிப்பு மரணம் (Explosive Heat Death) ஏற்பட்டு விட்டால் படைப்பாளனுடைய வல்லமைக்கு குந்தகம் ஏற்பட்டு விடும் அதனால் எல்லாம் அறிந்த அல்லாஹ் ரப்புல்ஆலமீன் அதன் இரத்தத்தின் சிகப்பணுக்களை மற்ற உயிரிணங்களுக்கு இருப்பதைப் போல் அல்லாமல் பெரிதாக அமைத்தான். பெரிய அளவிலான இரத்தத்தின் சிகப்பணுக்கள் நீர் கிடைக்கும்பொழுது தேவைக்கதிமாகவே தேக்கி வைத்துக் கொண்டு இரத்தத்தை உறைய விடாதளவுக்கு இரத்தத்திற்கு தண்ணீர் சப்ளை செய்து கொண்டிருக்கிறது.

செடிகளின் தஸ்பீஹ் கப்ரில் செடியை நட்டி வைக்க நபி ஸல் கூறிய சம்பவத்தை கூறலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...