13- ம் தராவீஹ் பயான்
قَالَ فَمَا خَطْبُكَ
يَا سَامِرِيُّ (95) قَالَ بَصُرْتُ بِمَا لَمْ يَبْصُرُوا بِهِ فَقَبَضْتُ
قَبْضَةً مِنْ أَثَرِ الرَّسُولِ فَنَبَذْتُهَا وَكَذَلِكَ سَوَّلَتْ لِي نَفْسِي
(96) قَالَ فَاذْهَبْ فَإِنَّ لَكَ فِي الْحَيَاةِ أَنْ تَقُولَ لَا مِسَاسَ (97) طه
وَقَالَ قَتَادَة أَنْ تَقُول لَا مِسَاس
قَالَ عُقُوبَة لَهُمْ وَبَقَايَاهُمْ الْيَوْم يَقُولُونَ لَا مِسَاس . (تفسير
ابن كثير
மூஸா
அலைஹிஸ்ஸலாம் தூர்சினா மலைக்குச் சென்ற நேரத்தில் அவர்களின் சமூக மக்களை வழி
கெடுத்து காளை மாட்டை வணங்க வைத்தவன் ஸாமிரீ. இவனின் வாரிசுகள் தான் கோமாதாவை
வணங்கும் பிராமணர்கள் என்றும் கூறப்படுகிறது. கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்குள்
வந்தார்கள். இவன் செய்த பாவத்தின் காரணமாக இவனை மூஸா அலைஹிஸ்ஸலாம் சபித்தார்கள்.
அந்த சாபமாகிறது இனிமேல் அவனும் அவனின் சந்ததிகளும் எப்போதும் எங்களை யாரும்
தொடாதீர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பதாகும். கதாதா ரஹ் அவர்கள் கூறும்போது
இன்று வரை அது அவனது சந்ததிகளில் தொடர்ந்து கொண்டிக்கிறது என்று
கூறியுள்ளார்கள்.
ஸாமிரி வளர்ந்த விதம் பற்றி தஃப்ஸீர்களில்
பின்வருமாறு
قال ابن عباس رضي الله عنهما في رواية
الكلبي : إنما عرفه / لأنه رآه في صغره وحفظه من القتل حين أمر فرعون بذبح أولاد
بني إسرائيل ، فكانت المرأة تلد وتطرح ولدها حيث لا يشعر به آل فرعون فتأخذ
الملائكة الولدان فيربونهم حتى يترعرعوا ويختلطوا بالناس فكان السامري ممن أخذه
جبريل عليه السلام وجعل كف نفسه في فيه وارتضع منه العسل واللبن فلم يزل يختلف
إليه حتى عرفه ، فلما رآه عرفه (تفسير الرازي
ஃபிர்அவ்ன் அனைத்து ஆண் பிள்ளைகளையும் கொல்ல
உத்தரவிட்ட நேரத்தில் இந்த ஸாமிரியை அவனின் தாயார் மறைவான ஓரிடத்தில் வீசினார்கள்.
அக்குழந்தையை மலக்குகள் எடுத்து வளர்த்தினார்கள். குழப்பங்களுக்கு காரணமாக இவனை
மலக்குகள் வளர்த்தியது அல்லாஹ்வின் சோதனைக்காகத்தான். எப்படி ஷைத்தானுக்கு அல்லாஹ் அவகாசம் அளித்து அவனுக்குள் சில
திறமைகளையும் கொடுத்துள்ளானோ அதுபோன்று தான்
ஸாமிரீ வழி கெடுத்த விதம்
عن عِكْرِمَةَ،"إِنَّ السامري رأي الرسول، فألقى في روعه أنك إِنَّ
أخذت مِنَ اثر هَذَا الفرس قبضة، فألقيتها في شىء، فقلت لَهُ: كن، فكان فقبض قبضة
مِنَ اثر الرسول فيبست أصابعه علي القبضة، فلما ذهب موسى للميقات وكان بنو إسرائيل
استعاروا احلي آل فرعون، فقال لَهُمْ السامري: إنما أصابكم مِنَ اجل هَذَا الحلي
فأجمعوه، فجمعوه فأوقدوا عليه فذاب فاه السامري فألقي في روعه أنك لو قذقت هذه
القبضة في هذه فقلت: كن كَانَ فقذ القبضة، وَقَالَ: كن، فكان عجلا لَهُ خوار،
فقال: " هَذَا إِلَهُكُمْ وَإِلَهُ مُوسَى}". تفسير
ابن ابي حاتم
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமூகம்
பிர்அவ்னின் பிடியில் இருந்து பாதுகாக்கப்பட்டது. கடல் பிளந்து வழிவிட்டது. அந்தச்
சம்பவத்தில் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் பயணித்த குதிரையை ஸாமிரீ நன்கு கவனித்தான்.
அதனுடைய கால் பாதம் பட்ட இடங்களெல்லாம் பசுமையாக மாறியதைக் கண்டு அந்த மண்ணை
எடுத்து வைத்துக் கொண்டான்.மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமூகமும் கடலைக் கடந்தனர்.
பிர்அவ்னும் அவனது கூட்டமும் அழிக்கப்பட்டது. மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கூட்டத்தினர்
வருகின்ற வழியில் சிலை வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு கூட்டத்தைக் கண்டனர்.
அதைப் பார்த்தவுடன் இவர்களுக்கெலாம் “பார்த்து
வணங்க பல கடவுள்கள் இருப்பது போல் எங்களுக்கும் ஒரு கடவுளை ஏற்பாடு செய்யுங்கள்” என்று கேட்டனர்.அவர்களின் உள்ளத்தில் சிலை வழிபாட்டின் மீது ஈர்ப்பு
இருந்தது என்பதையும் மாட்டின் மீது நேசமும் உள்ளது என்றும் ஸாமிரி தெரிந்து
கொண்டான். அவன் இந்த சந்தர்ப்பை பயன்படுத்தி அவர்களை வழி கெடுப்பதற்கு முயற்சி
செய்து கொண்டிருந்தான். அப்போது இந்த ஸாமிரி, அந்த மக்களின்
நகைகளையும் அணிகலன்களையும் வாங்கினான். இந்த நகைகள் ஃபிர்அவ்னின் கூட்டத்தாரின்
நகைகள். பாவப்பட்ட நகைகள். இவை உங்களிடம் இருக்கக் கூடாது என்று ஏமாற்று
வார்த்தைகள் கூறி அவர்களை மயக்கினான். பின்பு அவற்றை உருக்கினான். ஒரு காளை மாட்டை
சிலை வடித்தான். அதன் மீது ஜிப்ரீல் (அலை) அவர்களின் காலடி தடம்பட்ட மண்ணைப்
போட்டான். ஒரு அதிசயம் நடந்தது. அந்தக் காளை மாட்டுச் சிலை மாடு போன்று கத்தியது.
அதற்கு சதையும் உண்டானது. இந்த அதிசயத்தைக் கண்ட மக்கள் ஏமாந்தனர்.
قيل : إن بني إسرائيل كان لهم عيد يتزينون فيه ويستعيرون من القبط الحلي
فاستعاروا حلي القبط لذلك اليوم ، فلما أغرق الله القبط بقيت تلك الحلي في أيدي
بني إسرائيل ، فجمع السامري تلك الحلي وكان رجلاً مطاعاً فيهم ذا قدر وكانوا قد
سألوا موسى عليه السلام أن يجعل لهم إلهاً يعبدونه ، فصاغ السامري عجلاً. ثم اختلف
الناس ، فقال قوم كان قد أخذ كفاً من تراب حافر فرس جبريل عليه السلام فألقاه في
جوف ذلك العجل فانقلب لحماً ودماً وظهر منه الخوار مرة واحدة. فقال السامري : هذا
إلهكم وإله موسى (الرازي
மற்றொரு அறிவிப்பின் படி பனீ இஸ்ராயீல்
சமூகத்திற்கு ஒரு பண்டிகை நாள் வந்த து அப்போது அவர்களிடம் நகைகள் இல்லாத தால்
ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடம் நகைகளை இரவல் வாங்கியிருந்தார்கள் அவற்றை இன்னும் திருப்பிக்
கொடுக்காத நிலையில் தான் கடல் பிளக்கும் சம்பவம் ஏற்பட்டு ஃபிர்அவ்னின்
கூட்டத்தார் அழிக்கப்பட்டார்கள். நகைகள் இவர்களிடம் தங்கி விட்டன.
அல்லாஹ் சோதிப்பதற்காக
கெட்டவன் மூலமாகக் கூட அதிசயத்தை வெளிப்படுத்தலாம். மக்கள் அந்த காளை மாட்டுச்
சிலையை வணங்க ஆரம்பித்தனர். ஹாரூன் நபி “இது என்ன சிலை? அல்லாஹ் சோதிக்கின்றான்.
வழிதவறி விடாதீர்கள்” என்று எடுத்துச் சொன்னார்கள். ஆனால் கேட்கும் நிலையில் அவர்கள்
இருக்கவில்லை. மாட்டின் மீதுள்ள மோகம் அதிகரித்தது. ஹாரூன் நபியைக் கொலை செய்யவும்
முற்பட்டனர்.
فَرَجَعَ
مُوسَى إِلَى قَوْمِهِ غَضْبَانَ أَسِفًا قَالَ يَا قَوْمِ أَلَمْ يَعِدْكُمْ
رَبُّكُمْ وَعْدًا حَسَنًا أَفَطَالَ عَلَيْكُمُ الْعَهْدُ أَمْ أَرَدْتُمْ أَنْ
يَحِلَّ عَلَيْكُمْ غَضَبٌ مِنْ رَبِّكُمْ فَأَخْلَفْتُمْ مَوْعِدِي (86) قَالُوا
مَا أَخْلَفْنَا مَوْعِدَكَ بِمَلْكِنَا وَلَكِنَّا حُمِّلْنَا أَوْزَارًا مِنْ
زِينَةِ الْقَوْمِ فَقَذَفْنَاهَا فَكَذَلِكَ أَلْقَى السَّامِرِيُّ (87)
கருத்து- மூஸா அலைஹிஸ்ஸலாம் திரும்பி வந்தவுடன்
அங்கு நடந்ததைக் கண்டு ஆத்திரப்பட்ட அவர்கள் ஹாரூன் நபி மீது கோபப்பட்டு
விசாரித்தார்கள். ஹாரூன் நபி நடந்ததை விபரித்தார்கள்.
கோபத்தில் மூஸா அலை வீசிய ஏடுகள் நோன்பு வைத்ததால் சீரானது
وَأَلْقَى الالْوَاحَ} قال ابن عباس : لما ألقى موسى عليه السلام
الألواح تكسرت فصام أربعين يوماً ، فأعاد الله تعالى الألواح وفيها عين ما في
الأولى ، (تفسير الرازي
கோபத்தில் மூஸா அலை அல்லாஹ்விடமிருந்து பெற்று வந்த
தவ்ராத் ஏடுகளை தூக்கி வீசினார்கள் இனி இதற்கு பிரயோஜனம் இல்லாமல் ஆகி விட்டதே
என்ற ஆதங்கத்தால் அவ்வாறு செய்திருக்கலாம். பின்பு அதற்காக வருத்தப்பட்டார்கள்
அதற்கான பரிகாரம் என்ன என்று அல்லாஹ்விடம் கேட்டார்கள் அதற்கு அல்லாஹ் அது எத்தனை
துண்டுகளாக உடைந்த தோ அந்த எண்ணிக்கை அளவுக்கு நோன்பு வைக்கும்படி உத்தரவிட்டான்.
அல்லாஹ்விடம் உரையாடுவதற்கு எப்படி நாற்பது நாட்கள் நோன்பு வைத்தார்களோ அதுபோல்
இதற்கும் நோன்பு வைத்தார்கள். அவர்கள் நோன்பு வைக்க வைக்க உடைந்த ஏடுகள் ஒன்று
சேர்ந்தன.
قَالَ فَمَا خَطْبُكَ يَا سَامِرِيُّ (95) قَالَ
بَصُرْتُ بِمَا لَمْ يَبْصُرُوا بِهِ فَقَبَضْتُ قَبْضَةً مِنْ أَثَرِ الرَّسُولِ
فَنَبَذْتُهَا وَكَذَلِكَ سَوَّلَتْ لِي نَفْسِي (96) قَالَ فَاذْهَبْ فَإِنَّ
لَكَ فِي الْحَيَاةِ أَنْ تَقُولَ لَا مِسَاسَ (97) وَإِنَّ لَكَ مَوْعِدًا لَنْ تُخْلَفَهُ
وَانْظُرْ إِلَى إِلَهِكَ الَّذِي ظَلْتَ عَلَيْهِ عَاكِفًا لَنُحَرِّقَنَّهُ
ثُمَّ لَنَنْسِفَنَّهُ فِي الْيَمِّ نَسْفًا (97) طه
- لَا مِسَاس "
أَيْ كَمَا أَخَذْت وَمَسِسْت مَا لَمْ يَكُنْ لَك أَخْذه وَمَسّه مِنْ أَثَر
الرَّسُول فَعُقُوبَتك فِي الدُّنْيَا أَنْ تَقُول لَا مِسَاس أَيْ لَا تَمَاسّ
النَّاس وَلَا يَمَسُّونَك وَإِنَّ لَك مَوْعِدًا أَيْ يَوْم الْقِيَامَة لَنْ
تُخْلَفَهُ أَيْ لَا مَحِيد لَك عَنْهُ وَقَالَ قَتَادَة أَنْ تَقُول لَا مِسَاس
قَالَ عُقُوبَة لَهُمْ وَبَقَايَاهُمْ الْيَوْم يَقُولُونَ لَا مِسَاس (تفسير ابن
كثير
ஸாமிரி மீது உள்ள சாபமாகிறது.இனிமேல் அவனும் அவனின்
சந்ததிகளும் எப்போதும் எங்களை யாரும் தொடாதீர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பதாகும்.
கதாதா ரஹ் அவர்கள் கூறும்போது இன்று வரை அது அவனது சந்ததிகளில் தொடர்ந்து
கொண்டிக்கிறது என்று கூறியுள்ளார்கள்.
தங்களை உயர் ஜாதி என்று கருதிக் கொண்டு அவர்கள் தங்களை யாரும் தொட வேண்டாம்
என்று சொல்லிக் கொள்ளலாம் ஆனால் அது தான் அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்த தண்டனை.
ஆனால் அதை அவர்கள் விளங்க மாட்டார்கள்.அல்லாஹ் அனுமதித்தசிறந்த அசைவ உணவுகளும்
அவர்களுக்கு இல்லை என்றாகி விட்டது
فنفاه موسى عن قومه وأمر بني إسرائيل ألا
يخالطوه ولا يقربوه ولا يكلموه عقوبة له. (قرطبي
மற்றொரு
அறிவிப்பில் மூஸா அலைஹிஸ்ஸலாம், ஸாமிரியை
நாடு கடத்தினார்கள் அவனோடு எந்த உறவும் யாரும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று
அனுப்பினார்கள். குர்துபீ
அவ்வாறு
வந்த அவனும் அவனின் வாரிசுகள் கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் புகுந்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக