குகைவாசிகளும் நாம் பெற
வேண்டிய படிப்பினைகளும்
சிரமமான நிலையிலும்
ஹலாலைப் பேணிய குகைவாசிகள்
وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا
بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِنْهُمْ كَمْ لَبِثْتُمْ قَالُوا لَبِثْنَا يَوْمًا
أَوْ بَعْضَ يَوْمٍ قَالُوا رَبُّكُمْ أَعْلَمُ بِمَا لَبِثْتُمْ فَابْعَثُوا
أَحَدَكُمْ بِوَرِقِكُمْ هَذِهِ إِلَى الْمَدِينَةِ فَلْيَنْظُرْ أَيُّهَا أَزْكَى
طَعَامًا فَلْيَأْتِكُمْ بِرِزْقٍ مِنْهُ وَلْيَتَلَطَّفْ وَلَا يُشْعِرَنَّ
بِكُمْ أَحَدًا (19)الكهف
{فَلْيَنْظُرْ أَيُّهَا أَزْكَى طَعَاماً} قال
ابن عباس: أحل ذبيحة؛ لأن أهل بلدهم كانوا يذبحون على اسم الصنم، وكان فيهم قوم
يخفون إيمانهم. ابن عباس: كان عامتهم مجوسا.(قرطبي
300 வருடங்கள் தூங்கி எழுந்தவுடன் கடுமையான
பசி ஏற்பட்டது. அப்போது தங்களில் ஒருவரை உணவு வாங்க அனுப்பும்போது ஹலாலான உணவாகப்
பார்த்து வாங்கி வா என்று கூறி அனுப்பினார்கள். காரணம் அந்த ஊரில் நிறைய பேர்
மஜூஸிகள். சிலர் மட்டும் மறைவாக ஈமான் கொண்டிருந்தனர். அத்தகைய ஈமான் தாரிகள்
அறுத்த உணவையே வாங்க வேண்டும் என்று கூறி அனுப்பினார்கள்
தனக்கு அன்பளிப்பாக
வழங்கப்பட்ட ஆட்டிறைச்சி அதன் உரிமையாளரின் முறையான அனுமதி இல்லாமல்
அறுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தால் அதை சாப்பிடுவதைத் தவிர்த்த நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
عَنْ رَجُلٍ مِنْ الْأَنْصَارِ قَالَ خَرَجْنَا
مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَنَازَةٍ فَرَأَيْتُ
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى الْقَبْرِ يُوصِي
الْحَافِرَ أَوْسِعْ مِنْ قِبَلِ رِجْلَيْهِ أَوْسِعْ مِنْ قِبَلِ رَأْسِهِ
فَلَمَّا رَجَعَ اسْتَقْبَلَهُ دَاعِي امْرَأَةٍ فَجَاءَ وَجِيءَ بِالطَّعَامِ
فَوَضَعَ يَدَهُ ثُمَّ وَضَعَ الْقَوْمُ فَأَكَلُوا فَنَظَرَ آبَاؤُنَا رَسُولَ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلُوكُ لُقْمَةً فِي فَمِهِ ثُمَّ
قَالَ أَجِدُ لَحْمَ شَاةٍ أُخِذَتْ بِغَيْرِ إِذْنِ أَهْلِهَا فَأَرْسَلَتْ
الْمَرْأَةُ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَرْسَلْتُ إِلَى الْبَقِيعِ
يَشْتَرِي لِي شَاةً فَلَمْ أَجِدْ فَأَرْسَلْتُ إِلَى جَارٍ لِي قَدْ اشْتَرَى
شَاةً أَنْ أَرْسِلْ إِلَيَّ بِهَا بِثَمَنِهَا فَلَمْ يُوجَدْ فَأَرْسَلْتُ إِلَى
امْرَأَتِهِ فَأَرْسَلَتْ إِلَيَّ بِهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ أَطْعِمِيهِ الْأُسَارَى (ابوداود) باب فِى اجْتِنَابِ
الشُّبُهَاتِ.
பொருள்- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு ஒரு
ஜனாஸாவில் கலந்து கொண்டோம். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ரு
தோண்டுபவரிடம் மய்யித்தின் தலை வைக்கும் பகுதியையும், கால் வைக்கும் பகுதியையும்
பெரிதாக தோண்டுங்கள் என அறிவரை கூறக் கண்டேன். அங்கிருந்து திரும்பியவுடன் ஒரு
பெண்ணின் சார்பாக விருந்துக்கு அழைக்கப்பட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அங்கு வந்தார்கள். பின்பு உணவு கொண்டு வரப்பட்டது. அதில் கை வைத்து அவர்கள்
சாப்பிட ஆரம்பித்தவுடன் மற்றவர்களும் சாப்பிட ஆரம்பித்தார்கள். நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் தம் வாயில் ஒரு கவளத்தை மட்டுமே விழுங்கியதை எங்களின் தந்தைமார்கள்
கண்டார்கள். பின்பு எங்களிடம் உரிமையாளரின் அனுமதி இல்லாமல் அறுக்கப்பட்ட ஆட்டிறைச்சியாக இதை நான் காண்கிறேன்
என்றார்கள். பின்பு விருந்து கொடுத்த பெண்ணிடம் விளக்கம் கேட்டு அனுப்ப அப்பெண்
யாரஸூலல்லாஹ் எனக்கு ஒரு ஆடு வேண்டும் என பகீஉக்கு ஆள் அனுப்பினேன். அங்கு
கிடைக்கவில்லை. பிறகு என் அண்டை வீட்டாரிடம் சென்று எனக்காக ஆடு வாங்கி வரும்படி
ஆள் அனுப்பினேன். அவரும் இல்லை. பின்பு என் அவருடைய மனைவியிடம் கேட்டு அனுப்ப அவர்
இந்த ஆட்டைக் கொடுத்தனுப்பினார் என்று கூற பின்பு
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த இறைச்சியை தான் சாப்பிடாமல் காஃபிர்களான
கைதிகளுக்கு இதை கொடுத்து விடுங்கள் என்று கூறினார்கள்.
மக்காவாசிகள் காஃபிர்களாக
இருந்தும் கஃபாவை கட்டும் விஷத்தில் ஹலாலைப் பேணிய சம்பவம்
கஃபா 6 தடவை கட்டப்பட்டுள்ளது. 1.ஆதம்
அலை அவர்கள் படைக்கப்படும் முன் அல்லாஹ் அவனது வானவர்களின் கரத்தால் கட்டவைத்தான். 2.
ஹழ்ரத் ஆதம் அலை அவர்கள் கட்டினார்கள். 3.நபி இப்ராஹீம் அலை,இஸ்மாயீல்
அலை அவர்கள் கட்டினார்கள்.இந்த நிகழ்வு குறித்து அல்குர்ஆன் கூறுகிறது. 4.நபி
ஸல் அவர்களின் இளமைப்பருவத்தில் மக்கா காபிர்கள் கட்டினார்கள். இந்த
நிகழ்வின்போது நபி ஸல் அவர்கள் தங்களின் முபாரக்கான கரத்தால் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை
எடுத்து அந்த கஃபாவில் பதித்தார்கள். நபித்துவ வாழ்விற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புனித
கஃபாவைக் குறைஷியர்கள் புதுப்பித்துக் கட்டுவதற்கு ஏகமனதாக முன் வந்தனர். இதன்
காரணம்: கஃபா நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் காலத்திலிருந்து மேல் முகடு இல்லாமல்
ஒன்பது முழங்கள் கொண்டதாக இருந்தது. அதன் சுவரும் கட்டடங்களும்
சிதிலமடைந்து இருந்தன. காபாவினுள் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷங்களை ஒரு கூட்டம்
திருடிச் சென்றது. இந்நிலையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கஃபாவின்
கட்டடம் மேலும் பாதிப்படைந்தது. கஃபாவின் மீது கொண்ட மரியாதையின் காரணமாக
குரைஷியர் அதைப் புதுப்பிக்கத் தயாராகினர். ”குறைஷிகளே! கஃபாவின் கட்டுமானப் பணிக்காக உங்கள்
வருமானத்தில் தூய்மையானவற்றைத் தவிர வேறெதையும் ஈடுபடுத்தாதீர்கள். விபச்சாரத்தின்
வருமானமோ, வட்டிப்
பணமோ,மக்கள் எவரிடமிருந்தாவது அக்கிரமமாகப் பெறப்பட்ட
பொருளோ சேரக்கூடாது” என்று
சொல்லிக்கொண்டு,
ஒவ்வொரு குறைஷிக் குலத்தாரும் தங்களுக்கிடையே அப் பணியைப் பிரித்துக் கொண்டு
அப்பணியை செய்து முடித்தனர். ஆனால் குரைஷிகள் ஹலாலான பணப்பற்றாக்குறையின்
காரணத்தினால் இன்றைக்கு உள்ள ஹதீமை கஃபாவுடன் சேர்த்து கட்டாமல் விட்டுவிட்டனர். .
சந்தேகத்திற்குரிய
விஷயங்களையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
عن النُّعْمَانَ بْنَ بَشِيرٍ يَقُولُ
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
الْحَلَالُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ لَا
يَعْلَمُهَا كَثِيرٌ مِنْ النَّاسِ فَمَنْ اتَّقَى الْمُشَبَّهَاتِ اسْتَبْرَأَ
لِدِينِهِ وَعِرْضِهِ وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ كَرَاعٍ يَرْعَى حَوْلَ
الْحِمَى يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ أَلَا وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى أَلَا
إِنَّ حِمَى اللَّهِ فِي أَرْضِهِ مَحَارِمُهُ أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ
مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ وَإِذَا فَسَدَتْ فَسَدَ
الْجَسَدُ كُلُّهُ أَلَا وَهِيَ الْقَلْبُ (بخاري)2051
மார்க்கத்தில் சில
விஷயங்கள் தெளிவாக ஹலால் என்று கூறப்பட்டிருக்கும். உதாரணமாக உண்ண அனுமதிக்கப்பட்ட
பிராணிகள், ஹலாலான வியாபாரம் போன்றவை. சில விஷயங்கள் தெளிவாக ஹராம் என்று
கூறப்பட்டிருக்கும். உதாரணமாக பன்றியின் இறைச்சி, வட்டியினால் வரும் வருமானம்
போன்றவை. ஆனால் சில விஷயங்கள் ஹலால் என்றோ, அல்லது ஹராம் என்றோ தெளிவில்லாமல்
இருக்கும். உதாரணமாக ஒருவருக்கு ஹலாலான வருமானமும் உண்டு. ஹராமான வருமானமும்
உண்டு. அவர் உங்களுக்கு ஒரு அன்பளிப்பு வழங்கினார். அது அவருடைய ஹலாலான
வருமானத்திலிருந்து வந்ததா அல்லது ஹராமான வருமானத்திலிருந்து வந்ததா என்பது
உறுதியாகத் தெரியவில்லை. இந்தக் குழப்பமான நிலையில் அந்த அன்பளிப்பை தவிர்ப்பதே
நல்லது. அது ஹராமான இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கும் நிலையில் அதை பயன்படுத்தத்
துணிந்து விட்டால் நாளை ஹராமையே துணிவோடு செய்கின்ற நிலை ஏற்படலாம்.
ஹராம் என்பது வேலி.
அந்த வேலிக்கு அருகில் கால்நடைகளை மேய்த்துப் பழகி விட்டால் ஒருநாள் அந்த வேலிக்கு
உள்ளேயே செல்கின்ற துணிச்சல் பிறந்து விடும். இக்கருத்தை மேற்காணும் ஹதீஸ் தெளிவு
படுத்துகிறது.
ஷுப்ஹாத் உடைய விஷயங்களை தவிர்த்துக்
கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் மற்றொரு சம்பவம்
عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ
امْرَأَةً سَوْدَاءَ جَاءَتْ فَزَعَمَتْ أَنَّهَا أَرْضَعَتْهُمَا فَذَكَرَ
لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَعْرَضَ عَنْهُ وَتَبَسَّمَ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَيْفَ وَقَدْ قِيلَ وَقَدْ
كَانَتْ تَحْتَهُ ابْنَةُ أَبِي إِهَابٍ التَّمِيمِيِّ (بخاري)2052 بَاب تَفْسِيرِ الْمُشَبَّهَاتِ
விளக்கம்-நபித் தோழர் உக்பா ரழியல்லாஹு அன்ஹு
அவர்களுக்கும், அவரின் மனைவி உம்மு யஹ்யா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கும்
அவ்விருவரும் குழந்தைகளாக இருந்த போது தாய்ப்பால் ஊட்டியதாக ஒரு பெண் வந்து
கூறுகிறார். இது உண்மையானால் பால்குடி சகோதரத்துவ அடிப்படையில் இருவரும் கணவன்,
மனைவியாக நீடிக்க முடியாது.அப்பெண்ணின் வாக்கு மூலத்தை உக்பா ரழி நம்பவில்லை. அதை
உறுதி செய்வதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை. இந்நிலையில் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த நபித்தோழரிடம் “இவ்வாறு கூறப்பட்ட பின் எப்படி
அவளுடன் நீர் சேர்ந்து வாழ முடியும் என்று கூறி அந்த மனைவியை விட்டு விலகி
விடுமாறு அறிவுறுத்தினார்கள்
குறிப்பு-
“ஷுப்ஹாத்” துக்குரிய
விஷயங்கள் இன்று நம் சமுதாயத்தில் எவ்வளவோ உள்ளன. அவைகளைத் தவிர்த்துக் கொள்ள
வேண்டும். அதுபோல் சில விஷயங்கள் மார்க்கத்தில் தெளிவாக ஹராம் என்று இருந்தாலும்
பல்வேறு காரணங்களை காட்டி அது கூடும் என்று ஃபத்வா கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.
அப்படிப்பட்ட விஷயங்களிலும் மிக கவனமாக இருக்க வேண்டும்.
தன் வருமானம் ஹராமானதா அல்லது ஹலாலானதா
என்பதைப் பற்றி அறவே பொருட்படுத்தாத காலம் வரும்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ لَا يُبَالِي الْمَرْءُ مَا أَخَذَ
مِنْهُ أَمِنَ الْحَلَالِ أَمْ مِنْ الْحَرَامِ (بخاري) بَاب قَوْلِ اللَّهِ
تَعَالَى {وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا} (كتاب
التفاسير)
ஷரீஅத்தை பேணி வாழ முடியாத காலத்திலும்
தன்னால் முடிந்த வரை பேணுதலாக வாழ்பவரின் சிறப்பு
عَنْ الْمُعَلَّى بْنِ زِيَادٍ رَدَّهُ إِلَى مُعَاوِيَةَ بْنِ
قُرَّةَ رَدَّهُ إِلَى مَعْقِلِ بْنِ يَسَارٍ رَدَّهُ إِلَى النَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْعِبَادَةُ فِي الْهَرْجِ كَهِجْرَةٍ إِلَيَّ (مسلم) بَاب فَضْلِ الْعِبَادَةِ
فِي الْهَرْجِ- كِتَاب الْفِتَنِ وَأَشْرَاطِ
السَّاعَةِ- المراد بالهرج هنا الفتنة
واختلاط أمور الناس وسبب كثرة فضل العبادة فيه أن
ரகீம்
உடையவர்கள் என்பதற்கு விளக்கமாக கடந்த நூற்றாண்டின் கண்டு பிடிப்பு
حَسِبْتَ أَنَّ
أَصْحَابَ الْكَهْفِ وَالرَّقِيمِ كَانُوا مِنْ آيَاتِنَا عَجَبًا - وَقَالَ
عَلِيّ بْن أَبِي طَلْحَة عَنْ اِبْن عَبَّاس : الرَّقِيم الْكِتَاب (تفسير ابن
كثير)
இந்த
வசனத்தில் குகைவாசிகள் என்று மட்டும் குறிப்பிடாமல் ரகீம் உடையவர்கள் என்ற சொல்லை அல்லாஹ்
பயன்படுத்தியுள்ளான். இந்த ரகீம் என்ற வார்த்தைக்கு நபித்தோழர்கள் பல விளக்கங்கள்
கூறினாலும் அதில் இப்னு அப்பாஸ் ரழி கூறும் ஒரு விளக்கம் சுவடிகள், ஏடுகள் உடையவர்கள் என்பதாகும். அந்த ஏடுகள் பிற்காலத்தில்
கண்டெடுக்கப்பட்டு மக்களுக்கு அதில் உள்ள உண்மைகள் தெரிய வரும் என்பதற்காகவே அல்லாஹ் அவ்வாறு கூறியிருக்க முடியும். அது என்ன ஏடு என்பது கடந்து
நூற்றாண்டின் இறுதியில் அம்பலமாகியுள்ளன. "சாவுக்கடல் சாசனச் சுருள்கள்" என்ற தலைப்பில் 1998ஆம் ஆண்டு ஒரு மாதத்தில் பல தடவை பி.பி.சி. தொலைக் காட்சியில் ஒரு மணி நேர
நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதன்
விபரமாவது -
1947ஆம் ஆண்டு ஆடு மேய்க்கும் ஓர் அரபுச் சிறுவன், காணாமல் போன தனது ஆட்டைத்தேடி சாவுக் கடலை ஒட்டிய ஜோர்டான் நாட்டு
மலைப் பகுதிகளில் தேடி அலைந்தான். அந்த மலைப் பகுதி
"கும்ரான் மலைப் பகுதி" என்று அழைக்கப்படுகிறது. ஆட்டுக் குட்டியைத் தேடிய சிறுவன் அங்கிருந்த
குகைக்குள் பார்த்த போது, மண் பாண்டங்களில் சுருட்டி நிரப்பி வைக்கப்பட்ட தோல்
ஆவணங்களைக்
கண்டுள்ளான். அவைகளில் சிலவற்றை
எடுத்து வந்து செருப்புத் தொழிலாளியான தன் தந்தையிடம் கொடுக்க, மறு நாள் தந்தையும், மகனும் சேர்ந்து குகைக்குள் இருந்த அனைத்துச் சுருள்களையும்
வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள். அந்தப் பழைய தோல்களைத் தமது செருப்புத் தொழிலுக்குப் பயன்படுத்த எண்ணிய அந்தச் சிறுவனின் தந்தை தோல்களில் ஹிப்ரு மொழியில்
எழுதப்பட்டிருந்த வார்த்தைகளின் பொருள்
புரியாமல், அதை அப்பொழுது ஜோர்டான் மன்னர் ஆட்சியின் கீழிருந்த கிழக்கு ஜெருஸலத்தைச் சேர்ந்த ஒரு பழைய
புத்தகக் கடைக்காரரிடம் காண்பித்திருக்கிறார். ஓரளவு ஹிப்ரு மொழியறிந்த அந்தக் கடைக்காரர் அந்தச் சுருள்கள் பழங்காலச் செய்திகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கருதி, ஒரு சில தீனார்களுக்கு அத்தனை சுருள்களையும் அந்த செருப்புத்
தொழிலாளியிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொண்டார். கிறித்தவரான அந்தப் புத்தகக் கடைக்காரர் அந்தச் சுருள்களை அந்நகரில் இருந்த கிறித்தவ ஆலயத்தில் ஒப்படைத்து விட்டார். இந்தச் சந்தர்ப்பத்தில் சுருள்கள் கண்டெடுக்கப்பட்ட
விஷயம் வெளிப்பட்டது. அதில் உள்ள செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு யூதர்களும், முஸ்லிம்களும் ஆர்வம் காட்டினர். அப்போது ஜோர்டானை ஆட்சி செய்த மன்னர் ஹுசைன், "அந்தச் சாசனச் சுருள்கள் முஸ்லிம், யூத, கிறித்தவர்கள் அடங்கிய ஒரு குழுவிடம் பொதுவாக ஒப்படைக்கப்பட்டு அவை ஆராயப்பட வேண்டும்" என்று
விண்ணப்பித்தார். ஆனால் கிறித்தவப்
பாதிரியார்கள்,
"அது தனியார்
சொத்து" என்று வாதிட்டு அதைப் பொதுவில் வைக்க மறுத்து விட்டனர். கிறித்தவர்களில் பல அறிஞர்களுக்கும் கூட அவற்றைப் படிப்பதற்குச்
சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை. இடைப்பட்ட ஐந்தாண்டு காலங்களில் ஜெருஸலத்தில் இருந்த பாதிரிமார்கள் சில குழுக்களை ஏற்படுத்தி கும்ரான் மலைப் பகுதிகளில்
இருந்த குகைகளில் தேடியலைந்து அங்கிருந்த
சாசனச் சுருள்கள் அனைத்தையும் தங்கள் கைவசம் கொண்டு வந்து விட்டனர். 1952 செப்டம்பர்
மாதம் அனைத்துச் சுருள்களும் கிறித்தவப் பாதிரிமார்கள் கையில் போய்ச் சேர்ந்தன.
பதினைந்தாயிரம் கையெழுத்துப் பிரதிகள்)
இவ்வகையில் இருப்பதாக தற்போது கணக்கிட்டு உள்ளனர். கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேல் அந்த சாசனச் சுருள்களில் அடங்கிய செய்திகளை, ஒரு குறிப்பிட்ட கிறித்தவப் பாதிரிகள் அடங்கிய குழு இருட்டடிப்பு
செய்து வந்தது. பல கிறித்தவ அறிஞர்களும், ஆராய்ச்சியாளர்களும்
அதைப் படிக்க ஆர்வம் கொண்டு கேட்ட போதெல்லாம், அவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. சாசனச் சுருள்களைக் கைவசம் கொண்ட குழுவில் ஒருவர்
இறக்க நேரிட்டால் அவருக்குப் பதில்
அக்குழுவில் உள்ள மற்றவர்களால் வேறொரு பாதிரியார் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு மட்டுமே அதைப் படிப்பதற்கு உரிமை வழங்கப்பட்டு வந்தது. இவ்விதமாக இவ்வளவு காலமும் அந்தச் சாசனச் சுருள்களின்
செய்திகள் ரகசியமாக வைக்கப்பட்டு வந்தன. இந்த இரகசியக் காப்பில் போப் ஆண்டவரின் வாட்டிகன் சபை முன்னணியில் இருந்தது. தோலில் பதிந்த அந்தப் பழங்காலச் சாசனம் அழிந்து
விடும் நிலையைக் கண்ட அதன் ரகசியக் காப்பாளர்கள் அவற்றை நுண்ணிய படச் சுருளாக எடுத்தார்கள். அதன் ஒரு செட் போட்டோ காப்பிகள் அமெரிக்காவில் உள்ள
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருக்கும் ஒரு
நூலகத்துக்குப் பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு அந்த நூலகத்துக்குத் தலைவராக ஐஸ்மேன் என்ற
அறிஞர் நியமிக்கப்பட்டார். அவர் முன்பே அந்த சாசனச்
சுருள்களைப் படிப்பதற்கு ஆர்வம் காட்டி,
அதற்கான வாய்ப்பு
மறுக்கப்பட்டவர். இப்போது தனது
அதிகாரத்தில் உள்ள நூலகத்தில் இருந்து சாசனச் சுருள்களின் நுண்ணிய போட்டோக்களைப் பெரிய அளவில் போட்டோ எடுக்கச்
செய்து அவற்றைப் படித்தார். அவற்றைப் படித்த போது தமக்கு வியப்பு ஏற்பட்டதாக
வாக்குமூலம்
அளிக்கின்றார். இத்தனை காலமும்
கிறித்தவசபை அந்த சாசனச் சுருள்களை மற்றவர்களுக்குக் காட்டாமல் இருந்த உள்நோக்கம் என்ன என்பதையும் புரிந்து கொண்டதாகக் கூறுகின்றார். மைக்கேல் வைஸ் என்னும் சிகாகோ பல்கலைக் கழக ஹிப்ரு
மொழிப் பேராசிரியர் ஒருவரின் உதவியைக் கொண்டு அந்த சாசனச் சுருள்களில் முக்கியமானது என்று அவர் கருதிய 100 கையெழுத்துப் பிரதிகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். அந்தப் புத்தக வெளியீடு கிறித்தவ உலகத்தை உலுக்கியது
என்றும், குறிப்பாக கிறித்தவ மத ஆலயங்கள் பேரதிர்ச்சியில் உறைந்து போயின
என்றும் அந்த டாக்குமென்டரியின்
செய்தியாளர் கூறுகின்றார். மேற்கத்திய மக்களின் மத நம்பிக்கையைத் தகர்ப்பதாக அந்தப் புத்தக வெளியீடு இருந்தது என்றும், ஆகவே அந்த இரு அறிஞர்களும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற அச்சம் இருந்தது என்றும்
அதன் செய்தியாளர் குறிப்பிடுகிறார். அப்படி எது நடந்தாலும் அதைத் தாங்கள் எதிர்கொள்ளத்
தயாராக இருப்பதாகவும், இதற்கு அஞ்சி ஒரு மிகப்
பெரும் பேருண்மையை உலகத்திலிருந்து தாங்கள் மறைக்க விரும்பவில்லை என்றும் அவ்விரு அறிஞர்களும்
வெளிப்படையாகக் கூறுவதையும் அந்தத் தொலைக்காட்சி டாக்குமெண்டரி பதிவு செய்து காட்டுகின்றது. கிறித்தவ மத ஆலயங்களில் இப்போது ஏசுவின் பெயரால்
செய்யப்படும் மதச் சடங்குகளும், வழிபாடுகளும் ஆரம்ப கிறித்தவர்களிடையே நடைபெறவில்லை
என்பதையே சாசனச் சுருள்கள் நிரூபிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக