07-07-2023 துல்ஹஜ் |
|
بسم
الله الرحمن الرحيم |
https://chennaijamaathululama.blogspot.com
என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம் |
பொதுச்
சிவில் சட்டத்தை எதிர்த்து நம்முடைய கருத்துக்களைப் பதிவு செய்வதற்காக ஒவ்வொரு மஹல்லாவிலும் ஜமாஅத்துல் உலமா சபையின்
வழி காட்டுதல் அடிப்படையில் சேவைக்குழுவை ஏற்படுத்தி ஜும்ஆ முடிந்தவுடன் அவரவருடைய
மொபைலை வாங்கி சம்பந்தப்பட்ட மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்ப முயற்சி செய்ய
வேண்டும்
மக்களில் இரு வகையான
பிரிவினர் இருக்கிறார்கள். 1. தன்னைப் பற்றியும் தன்னுடைய குடும்பத்தைப் பற்றி
மட்டுமே அவர்களுக்குக் கவலை இருக்கும். இவர்கள் சுயநவாதிகள் 2. தன்னைப் பற்றியும் தன்னுடைய குடும்பத்தைப்
பற்றியும் கவலைப் படுவதுடன் சமூகத்தைப் பற்றிய அக்கறையும் அவர்களுக்கு இருக்கும்.
இவர்கள் தான் பொதுநல வாதிகள். இவ்வாறு இருப்பது முஃமினுக்கான அடையாளம்.
நபி ஸல் அவர்களோடு
ஹஜ்ஜதுல் விதாவில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான நபித்தோழர்கள் கலந்து கொண்டனர்.
அதன்படி பார்த்தால் மதீனாவில் நபி ஸல் அவர்களின் கப்ரு இருப்பதைப் போலவே சுமார் இரு
இலட்சம் நபித்தோழர்களின் கப்ருகள் இருந்திருக்க வேண்டும். ஆனால் இன்று மதீனாவில்
உள்ள பகீஃ கப்ருஸ்தானில் அடக்கம் செய்யப் பட்டிருப்பது சுமார் 14 ஆயிரம்
நபித்தோழர்கள் தான். அப்படியானால் மீதமுள்ள நபித்தோழர்களின் கப்ருகள் எங்கே என்ற
கேள்விக்கான பதில் பின்வருமாறு-
நபி ஸல் அவர்கள் ஹஜ்ஜதுல் விதாவில் ஒரு இலட்சத்திற்கும்
அதிகமான நபித்தோழர்கள் மத்தியில் உருக்கமான உரை நிகழ்த்தி விட்டு இங்கே
இருப்பவர்கள் இங்கே இல்லாதவர்களுக்கு செய்தியை எத்தி வைத்து விடுங்கள் என்றார்கள்.
அங்கிருந்து அப்படியே புறப்பட்டுச் சென்ற ஹஜ்ஜதுல் விதாவில் அதிகமான நபித்தோழர்கள்
பல நாடுகளுக்கும் சென்று இஸ்லாத்தை எடுத்துச் சொல்லி அங்கேயே தன் வாழ்நாளைக்
கழித்து அங்கேயே மரணமடைந்தனர். இதனால் தான் உலகம் முழுவதும் எந்த நாட்டுக்குச்
சென்றாலும் அங்கே ஒரு சஹாபியின் கப்ரு நிச்சயம் இருக்கும். சீனாவிலும்
நபித்தோழர்களின் கப்ருகள் உள்ளன.
عَنْ حُذَيْفَةَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « لاَ تَكُونُوا إِمَّعَةً تَقُولُونَ
إِنْ أَحْسَنَ النَّاسُ أَحْسَنَّا وَإِنْ ظَلَمُوا ظَلَمْنَا وَلَكِنْ وَطِّنُوا
أَنْفُسَكُمْ إِنْ أَحْسَنَ النَّاسُ أَنْ تُحْسِنُوا وَإِنْ أَسَاءُوا فَلاَ
تَظْلِمُوا ». (ترمذي
சுயநலவாதிகளாக இருக்காதீர்கள். அதாவது மக்கள் ஏதேனும்
எங்களுக்கு நல்லது செய்தால் நாமும் அவர்களுக்கு நல்லது செய்வோம். மக்கள்
எங்களுக்கு தீமை செய்தால் நாங்களும் அவர்களுக்கு தீங்கு செய்வோம் என கூறும்
சுயநலவாதிகளாக இருக்காதீர்கள். மாறாக உங்களின் மனதை பின்வருமாறு பக்குவ்வப்
படுத்துங்கள். மக்கள் ஏதேனும் எங்களுக்கு நல்லது செய்தால் நாமும் அவர்களுக்கு
நல்லது செய்வோம். மக்கள் எங்களுக்கு தீமை செய்தாலும் நாங்கள் அவர்களுக்கு
பதிலுக்கு தீங்கு செய்ய மாட்டோம் மாறாக நல்லதே செய்வோம் என கூறும் பொதுநலவாதிகளாக
இருங்கள்.
நாடு
முழுவதும், உலகம் முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் சூழ்ச்சிகளைப்
பற்றிய அறிதல் வேண்டும். அதை நீக்குவதற்காக அல்லாஹ்விடம் துஆச் செய்ய வேண்டும்.
عَنْ
أَبِى الدَّرْدَاءِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَا مِنْ
عَبْدٍ مُسْلِمٍ يَدْعُو لأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ إِلاَّ قَالَ الْمَلَكُ
وَلَكَ بِمِثْلٍ ».(بخاري
விளக்கம்- எங்கோ இருக்கும் முகம்
தெரியாத முஸ்லிம் பாதிக்கப் படுகிறார் என்று அறிந்து அவருக்காக துஆ செய்தால்
அல்லாஹ் ஒரு வானவரை நமக்கு அருகில் ஏற்படுத்துவான். நமக்காக நம்முடைய
பாதுகாப்புக்காக அந்த மலக்கு அல்லாஹ்விடம் துஆச் செய்வார்.
முஸ்லிம்கள் மீதான
வெறுப்பை உமிழ்வதற்காகவே நாடு முழுவதும் 16,000 பள்ளிக்கூடங்கள் செயல்படுகின்றன. அங்கு
பயிலும் மாணவர்களின் பிஞ்சு உள்ளங்களில் முஸ்லிம்கள் பற்றிய வெறுப்புணர்வை
ஊட்டுகிறார்கள். நாளடைவில் அவர்கள் வளர்ந்து பெரியவர்களாக ஆகும்போது அந்த வெறுப்புணர்வு தீயாகக் கொழுந்து விட்டு எரிய
ஆரம்பித்து விடுகிறது. முஸ்லிம்களைக் கண்டால் கொல்ல வேண்டும் என்ற வெறி பிடித்தவர்களாக
ஆக்கப் படுகிறார்கள். ஆனால் இஸ்லாமிய சமுதாயம் இதைப் பற்றிய எந்தக் கவலையும்
இல்லாமல் தங்களுடைய தொழில் தங்களுடைய குடும்பம் என்ற சுயநலத்துடன் சமுதாய
அக்கறையில்லாத சமூகமாக இருந்து வருகிறார்கள்.
إِنَّ اللَّهَ لَا
يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ (11) الرعد
சமூக அக்கறை இல்லாத மனிதர்
நல்லவராக இருந்தும் அவரை அல்லாஹ் தண்டித்தான்.
عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَوْحَى الله عَزَّ وَجَلَّ إِلَى جِبْرِيلَ
عَلَيْهِ السَّلَامُ أَنِ اقْلِبْ مَدِينَةَ كَذَا وَكَذَا بِأَهْلِهَا، قَالَ:
فَقَالَ: يَا رَبِّ إِنَّ فِيهِمْ عَبْدَكَ فُلَانًا لَمْ يَعْصِكَ طَرْفَةَ
عَيْنٍ، قَالَ: فَقَالَ: اقْلِبْهَا عَلَيْهِمْ، فَإِنَّ وَجْهَهُ لَمْ
يَتَمَعَّرْ فِيَّ سَاعَةً قَطُّ " (طبراني
அல்லாஹ் தஆலா ஜிப்ரயீல் அலை அவர்களுக்கு ஒரு ஊரை அந்த மக்களோடு சேர்ந்து அழிக்கச் சொல்லி உத்தரவிட்டான். அந்த ஊர்
மக்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்தார்கள் என்பதால் அல்லாஹ் இவ்வாறு உத்தரவிட்டான்.
அப்போது ஜிப்ரயீல் அலை அவர்கள் அல்லாஹ்விடம் ரப்பே இவர்களுக்குள் ஒரு மனிதர்
இருக்கிறார். அவர் கண் சிமிட்டும் நேரம் கூட உனக்கு மாறு செய்த தில்லை. அவரையும்
சேர்த்தே அழிக்கட்டுமா என்று கேட்க, அதற்கு அல்லாஹ் ஆம் அவருடன் சேர்த்தே அந்த
மக்களை அழித்து விடுங்கள் ஏனெனில் என்னுடைய விஷயத்தில் அந்த மக்கள் வரம்பு
மீறியதைக் கண்டும் கூட ஒரு தடவை கூட அவர் முகம் சுளித்ததில்லை என்று அல்லாஹ்
அறிவித்தான்.
சமூக அக்கறை இல்லாததால் சபிக்கப்பட்ட பனீ இஸ்ராயீல் சமூகம்
لُعِنَ الَّذِينَ كَفَرُوا مِنْ بَنِي
إِسْرَائِيلَ عَلَى لِسَانِ دَاوُدَ وَعِيسَى بْنِ مَرْيَمَ ذَلِكَ بِمَا عَصَوْا
وَكَانُوا يَعْتَدُونَ (78) كَانُوا لَا يَتَنَاهَوْنَ عَنْ مُنْكَرٍ فَعَلُوهُ
لَبِئْسَ مَا كَانُوا يَفْعَلُونَ (79)المائدة عَنْ
عَبْد اللَّه قَالَ : قَالَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ
لَمَّا وَقَعَتْ بَنُو إِسْرَائِيل فِي الْمَعَاصِي نَهَتْهُمْ عُلَمَاؤُهُمْ
فَلَمْ يَنْتَهُوا فَجَالَسُوهُمْ فِي مَجَالِسهمْ قَالَ يَزِيد وَأَحْسَبُهُ
قَالَ فِي أَسْوَاقهمْ وَوَاكَلُوهُمْ وَشَارَبُوهُمْ فَضَرَبَ اللَّه قُلُوب
بَعْضهمْ بِبَعْضٍ وَلَعَنَهُمْ عَلَى لِسَان دَاوُدَ وَعِيسَى اِبْن مَرْيَم
ذَلِكَ بِمَا " عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ "(تفسير ابن كثير)
நபி ஸல் அவர்கள் கூறினார்கள். பனூ இஸ்ராயீல் சமூகம்
பாவத்தில் ஈடுபட்ட போது ஆரம்பத்தில் அவர்களுடைய உலமாக்கள் அந்த மக்களை தடுத்துப்
பார்த்தார்கள். ஆனால் அந்த மக்கள் பாவத்தை விட்டும் விலகிக் கொள்ளவில்லை. அதற்குப்
பிறகு அந்த உலமாக்கள் அந்த மக்களை திருத்தும் எண்ணமில்லாமல் அதாவது சமூக அக்கறை
இல்லாமல் அம்மக்களோடு ஒன்றாக வியாபாரம் செய்தார்கள். அம்மக்களோடு ஒன்றாக உணவு
உண்டார்கள். கடைசியில் அல்லாஹ் ஆலிம்களின் உள்ளங்களை அந்த மக்களின் உள்ளங்களோடு
ஒன்றிணைய வைத்து விட்டான். அதாவது அந்த ஆலிம்களும் சேர்ந்து பாவத்தில் ஈடுபடும்
நிலையை உருவாக்கி விட்டான்.
பொதுச்சிவில்
சட்டம் கொண்டு வரப்படுவதை தடுக்க நம்மால் முடிந்த முயற்சி செய்ய வேண்டும்
பொதுச்சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டால் என்ன நிகழும் என்பதற்கு மற்றொரு உதாரணம்
عَنْ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ يَقُولُ لَا تَزَالُ أُمَّتِي بِخَيْرٍ مَا لَمْ يَفْشُ فِيهِمْ وَلَدُ
الزِّنَا فَإِذَا فَشَا فِيهِمْ وَلَدُ الزِّنَا فَيُوشِكُ أَنْ يَعُمَّهُمْ
اللَّهُ عَزَّ وَجَلَّ بِعِقَابٍ (أحمد
எதுவரை
என்னுடைய உம்மத்தில் விபச்சாரக் குழந்தைகள் பிறக்காமல் இருக்குமோ அதுவரை இந்த
உம்மத் நலமோடு இருக்கும். எப்போது என்னுடைய உம்மத்தில் விபச்சாரக் குழந்தைகள்
பரவலாகி விடுவார்களோ அல்லாஹ் தண்டனையைப் பொதுவாக்கி விடுவான்.
விளக்கம்- பல பெயர்
தாங்கி முஸ்லிம்கள் பள்ளிவாசலுடன் தொடர்பு வைத்திருப்பதே நிகாஹ், மவ்த் போன்ற
விஷயங்களுக்காகத் தான். இந்த இரண்டுக்கும் எப்படியிருந்தாலும் மஸ்ஜிதுக்கு வர
வந்தாக வேண்டும் என்பதாலேயே பலர் மஸ்ஜிதுடன் தொடர்பில் உள்ளனர். குறிப்பாக நிகாஹ்
என்று வரும்போது முறைப்படி நிகாஹ் நடத்தி வைப்பது ஒரு இமாம் இருந்தால் மட்டுமே
முடியும்.
النكاح
ينعقد بالإيجاب والقبول بلفظين يعبر بهما عن الماضي (هداية
நிகாஹ்
நடப்பதற்கு முக்கியமான சில நிபந்தனைகள் உண்டு. அதில் மிக முக்கியமானது ஈஜாப்,
கபூல் அதாவது பெண்ணின் தந்தை அல்லது அவரது வகீல் நான் இன்ன பெண்ணை உனக்குத் திருமணம்
செய்து வைத்தேன் என
ஆன அதாவது கடந்த
காலத்தைக் குறிக்கும் வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும். ماضي
பதிலுக்கு மாப்பிள்ளை
அதை ஏற்றுக் கொண்டேன் என அவரும் கடந்த
காலத்தைக் குறிக்கும் வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும். இதற்கு பதிலாக நான் அதை
ஏற்றுக் கொள்கிறேன் என நிகழ்காலத்தில் வார்த்தையைப் பயன்படுத்தினால் அந்த நிகாஹ்
கூடாது. அதுபோல நிகாஹில் அடுத்த முக்கியமான விஷயம் இரண்டு சாட்சிகள். இவர்கள்
இருவரும் காது கேட்பவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் ஈஜாப், கபூல் வாசகத்தை
இருவரும் காதால் கேட்க வேண்டும். இத்தனை சட்டங்கள் இருக்க பொதுச் சிவில் சட்டம்
கொண்டு வரப்பட்டு நாம் இஸ்லாம் முறைப்படி நடத்தும் திருமணங்கள் செல்லாது என
அரசாங்கம் அறிவிக்கும். ஏற்கெனவே நிகாஹ், மவ்த் இரண்டு விஷயங்களுகாக மட்டும் வேறு
வழியில்லாமல் பள்ளிவாசலுடன் தொடர்பு வைத்திருக்கும் பெயர் தாங்கி முஸ்லிம்கள் இது
தான் சந்தர்ப்பம் என்று கூறி ரிஜிஸ்டர் ஆஃபீஸில் முறையற்ற திருமணங்களை தாங்களாகவே
நடத்திக் கொள்வார்கள். அத்தகைய திருமணங்கள் அவர்களின் பார்வையில் திருமணங்களாக ஆகி
விட்டாலும் ஷரீஅத்தின் கண்ணோட்டத்தில் அவை இஸ்லாமியத் திருமணங்களாக ஆகாது.
தொடர்ந்து அந்த ஆணும் பெண்ணும் உறவு கொள்வது விபச்சாரமாகவே அமைந்து விடும். மேலும்
மஸ்ஜித்களின் மீது இருந்த கண்ணியம் எடுபட்டு விடும். காஜிகள் என்ற ஒரு பிரிவு
இல்லாமல் ஆக்கப்பட்டு விடும்.
ஷரீஅத் சட்டங்களை மாற்றியமைத்து
இந்துக் கோட்பாடுகளை இஸ்லாத்தில் புகுத்த நினைத்த மன்னர் அக்பரின் தீனே இலாஹி என்ற
மதத்தை முறியடிப்பதற்காக அன்று நம்முடைய உலமாக்களின் முயற்சிகள்
والإمام
السرهندي من أئمة القرن العاشر الهجري، وُلد في مدينة (سرهند) بالهند سنة 971هـ، وتوفي سنة 1034هـ، وكانت له جهود دؤوبة في نشر السنة وقمع البدعة، وفي توجيه الدولة
إلى الإسلام
முகலாய மன்னர் பாபர். ஹுமாயூன் ஆட்சிக் காலத்தில்
முஸ்லிம்கள் இஸ்லாத்தை விட்டும் வெகுதூரம் சென்று விட்டனர். அக்பரின் காலத்திலோ
முஸ்லிம்களுக்கும். இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நிலை உருவானது.
அக்பரின் ஆதரவுடன் இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தை முற்றிலும் அகற்றி விட்டு ஹிந்து மத சட்டங்களை செயல்படுத்த வேண்டுமென்று ஹிந்துக்கள் பகிரங்கமாக அறிக்கை விடுமளவு நிலைமை
மோசமானது. முஸ்லிம்கள் எவரும் இஸ்லாமிய நடை, உடையை கடைப்பிடித்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படுமளவுக்கு நிலைமை இருந்தது. உண்மையாக இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களுக்கு எங்கும் இழிவு காத்திருந்தது. இஸ்லாத்தை
எதிர்ப்பவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கப்பட்டது. (ஆதார நூல்: முஜத்தித்தே அல்ஃ பஸானியின் கடிதத் தொகுப்பு - 106 மற்றும் 46 - பாகம்-1- பாகம்- 65)
ஷரீஅத்தின் கடமைகளான தொழுகை. நோன்பு.ஹஜ்ஜீ. பர்தா பேனுவது தக்வா, பரிசுத்தம் போன்றவை கேலிக்கூத்தாகவும் ஆயின. இவ்வாறு ஹலால். ஹராமாகவும் ஹராம். ஹலாலாகவும்
உருமாற்றம் பெற்றது.
இந்திய முஸ்லிம்களின் கொள்கையின் நிலை இதுவென்றால்
ஒழுக்க நிலையோ இதைவிட மோசமாக இருந்தது. கொலை, கொள்ளை, குடி, விபச்சாரம், போதை எதற்கும் பஞ்சமில்லை. குடும்ப, சமுதாய எந்த நிகழ்ச்சியும் தரங்கெட்ட பெண்களின் நடனக்
கூத்துகளின்றி நடைபெறாது மார்க்க நிகழ்ச்சி என்ற பெயரில் நடைபெறும் மேடைகளில் கூட
இப்பெண்கள் முன்னிலைப்படுத்தப்பட்டார்கள். இத்தீமைகள் அனைத்து தரப்பு மக்களிடமும்
காணப்பட்டன.
(தர்யாயே லதாஃபத்- ஆசிரியர் ஷைய்யிது இன்ஷா. நூல்
வெளியீட்டாண்டு.ஹிஜ்ரீ- 1223)
அக்பர் தீனே இலாஹி (கடவுளின் மதம்)
என்று ஒரு புதிய மத்ததை உருவாக்கி இந்து மதத்தின் முக்கிய அம்சங்களை இஸ்லாத்துடன்
கலந்து ஒரு கலப்பு மதமாக அதை அறிவித்தார். இருப்பினும் இந்து மதத்திலேயே அவருடைய
நம்பிக்கை இருந்தது. இஸ்லாத்தை வெறுத்தார். விஷேச தினங்களில் யாகங்களும் சிறப்பு
பூஜைகளும் நடத்தி கோவில்களுக்குச் சென்று வந்தார். பசுவைப் புனிதப்படுத்தினார்.
தாடியை எடுத்து மீசையை வளர்க்கும் பழக்கத்தைக் கொண்டு வந்தார். சாட்சிகள் இல்லாத
திருமணங்களுக்கு சட்ட அனுமதி வழங்கினார். பாலியல் தவறுகளை அனுமதித்தார்.
பாடத்திட்டத்தில் ஜோதிடம், வேதாந்தம் ஆகியவற்றைத் திணித்தார்.
இவற்றை எதிர்ப்பவர்களை நாடு கடத்தினார். சிறைத் தண்டனை அளித்தார். சுருங்கக்
கூறின் இஸ்லாத்தை இந்தியத் துணைக் கண்டத்திலிருந்தே மூட்டை கட்டி அனுப்ப
முயன்றார்.
மீண்டும்
இஸ்லாமிய எழுச்சி எவ்வாறு ஏற்பட்டது
ஒரு
மாபெரும் வல்லரசால் உருவாக்கப்பட்ட அந்த பொய் மதத்தை முறியடிக்கும் புரட்சிக்கு வித்திட்டவர்
முஜத்தித் அல்ஃபஸானி என அன்பாக அழைக்கப்படும் மகான் ஷைக் அஹ்மது ஸர்ஹந்தீ
(ரஹ்)அவர்களாவார்கள். அவர்களின் முயற்சியால் அக்பரின் வாரிசுகளான ஜஹாங்கீர்
ஷாஜகான் ஒளரங்கசீப் போன்ற முகலாய மன்னர்கள் இஸ்லாத்தை அள்ளி அணைத்துக் கொண்டதோடு, ஆக்ரா, தில்லி முதல் லாஹூர் மற்றும் காபூல் வரை ஆழகான மஸ்ஜித்கள் இதனால் உருவாயின. இந்தியாவில் ஷரீஅத் சட்டத்தை
முழுமையாக அமல் படுத்த ஆலம்கீரி எனும் சட்ட புத்தகத்தை அக்பரின் வாரிசாகிய
ஒளரங்கசீப் (ரஹ்) உருவாக்கினார் அது எப்படி முடிந்தது இந்த மாபெரும் புரட்சிக்குப்
பின்னே மெழுகாக இருந்து தியாகம் செய்தவர்கள் மகான் ஷைக் அஹ்மது ஸர்ஹந்தீ (ரஹ்)
அவர்களாவார்கள். இந்தியா, ஆப்கானிஸ்தான், ரஷ்யா,துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளில் அன்னாரின் புகழ் பரவிற்று
من جديد
(فتاوي الشبكة الاسلامية)
உலகெங்கும்
வாழும் முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக துஆச்செய்து கொண்டே இருக்க வேண்டும்.
அநீதமான அரசனின் தீமைக்கு
எதிராக நமக்கு கற்றுத் தரப்பட்ட துஆக்கள்
عن
عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه و سلم قال إذا تَخَوَّفَ
أحَدُكُمُ السُّلْطانَ فَلْيَقُل اللَّهُمَّ رَبَّ السَّمَواتِ وَرَبَّ العَرْشِ
العَظيم كُنْ لِي جاراً مِنْ شَرِّ فُلانِ بنِ فُلانٍ وَشَرِّ الجِنِّ والإِنْسِ
وأتْباعِهِمْ أنْ يَفْرُطَ عَلَيَّ أحَدٌ مِنْهُمْ عَزَّ جارُكَ وَجَلَّ ثَناؤكَ
وَلاَ إله غَيْرُكَ رواه الطبراني (الترغيب والترهيب عن
ابن عباس رضي الله عنه قال : إذا أتيت سلطانا مهيبا تخاف أن يسطو عليك فقل : الله
أكبر ، الله أعز من خلقه جميعا ، الله أعز مما أخاف وأحذر ، أعوذ بالله الذي لا
إله إلا هو الممسك السماوات السبع أن يقعن على الارض إلا بإذنه ، من شر عبدك فلان
وجنوده وأتباعه وأشياعه من الجن والانس ، اللهم كن لي جارا من شرهم ، جل ثناؤك وعز
جارك وتبارك اسمك ولا إله غيرك - ثلاث مرات. [ مصنف ابن أبي شيبة ] (الترغيب
والترهيب
عن
عامر قال : كنت جالسا مع زياد بن أبي سفيان فأتى برجل يحمل ، ما نشك في قتله ، قال
: فرأيته حرك شفتيه بشئ ما ندري ما هو ، فخلى سبيله فأقبل إليه بعض القوم فقال :
لقد جئ بك وما نشك في قتلك ، فرأيتك حركت شفتيك بشئ ما ندري ما هو ، فخلى سبيلك ،
قال : قلت اللهم رب إبراهيم ورب إسحاق ورب يعقوب ورب جبريل وميكائيل وإسرافيل
ومنزل التوراة والانجيل والزبور والقرآن العظيم [ مصنف ابن أبي شيبة ]
ஆட்சியாளர் ஜியாதிடம்
ஒருவர் அழைத்து வரப்பட்டார். அவர் கொல்லப்படுவது உறுதி என்ற நிலை இருந்தது. ஆனால்
அவர் நாவில் எதையோ முனுமுனுத்தவராக இருந்தார். சற்று நேரத்தில் அவரை ஜியாத்
விடுவித்து விட்டார் அவரிடம் சிலர் உங்களுக்கான மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட
நிலையில் நீங்கள் அழைத்து வரப்பட்டீர்கள். ஆனால் உமது நாவில் எதையோ
முனுமுனுத்தவராக இருந்தீர்கள் பிறகு விடுவிக்கப்பட்டு விட்டீர்கள். அப்படி என்ன
ஓதினீர்கள் என்று கேட்கப்பட்ட போது நான் இன்ன துஆவை ஓதினேன் என்று மேற்படி துஆவை
ஓதிக்காட்டினார்.
عَنْ
ابْنِ عَبَّاسٍ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
كَانَ يَقُولُ عِنْدَ الْكَرْبِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ
سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ سُبْحَانَ اللَّهِ رَبِّ
السَّمَوَاتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْكَرِيمِ قَالَ وَكِيعٌ مَرَّةً لَا
إِلَهَ إِلَّا اللَّهُ فِيهَا كُلِّهَا (ابن ماجة
عن
الحسن بن حسن أن عبد الله بن جعفر رضي الله عنه تزوج امرأة فدخل بها فلما خرج قلت
لها ما قال لك قلت قال إذا نزل بك أمر فظيع أو عظيم فقولي لا إله إلا الله الحليم
الكريم لا إله إلا الله رب العرش العظيم سبحان الله رب العالمين فدعاني الحجاج
فقلتها فقال لقد دعوتك وأنا أريد أن أضرب عنقك وما في أهلك اليوم أحد أحب إلي منك
أو أعز منك (سنن الكبرى )
ஹஸன் இப்னு ஹஸன் ரஹ் அவர்கள் கூறினார்கள். அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் ரழி
அவர்கள் என் உறவுக்காரப் பெண்ணை மணமுடித்தார்கள். அப்பெண்ணிடம் முதலிரவையும்
முடித்த பின்பு நான் அந்த அம்மையாரிடம் உங்களுக்கு அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் ரழி
அவர்கள் ஏதேனும் துஆவைக் கற்றுத் தந்தார்களா என்று கேட்டேன். அதற்கு அப்பெண் ஆம்
ஏதேனும் இக்கட்டான சூழ்நிலை உனக்கு ஏற்பட்டால் இந்த துஆவை ஓது என அப்துல்லாஹ்
இப்னு ஜஃபர் ரழி கூறியதாக மேற்படி துஆவை அந்தப் பெண் என்னிடம் கூறினார்கள். அந்த
துஆவை நானும் கற்றுக் கொண்டேன். பின்பு ஒரு நேரத்தில் ஹஜ்ஜாஜ் என்னைக் கொல்வதற்காக
அழைத்த போது நான் இந்த துஆவை ஓதினேன். அப்போது ஹஜ்ஜாஜ் என்னிடம் நான் உன் கழுத்தை
வெட்டவே உம்மை அழைத்தேன். ஆனால் இன்று நீர் என் கண்ணுக்கு முன்னால் உம்
குடும்பத்தார்களில் எனக்குப் பிரியமானவராக தெரிகிறீர் என்று ஹஜ்ஜாஜ் கூறினான்.
பொதுச்
சிவில் சட்டத்தைக் கொண்டு வர நினைக்கும் பாசிசவாதிகள் இந்த நாட்டில் வாழும்
பெரும்பான்மையான இந்து மக்களிடம் கடந்த கால முஸ்லிம் ஆட்சியாளர்களைப் பற்றி தவறான
தகவலைப் பரப்புகிறார்கள். முஸ்லிம் ஆட்சியாளர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் இருந்த
சிறுபான்மை மக்களின் மீது இஸ்லாமிய
சட்டத்தை திணித்தார்கள் எனவே நாம் நம்முடைய இந்து சட்டத்தை இவர்கள் மீது
திணித்தால் என்ன தவறு என்ற தவறான சிந்தனையை உண்டாக்குகிறார்கள். இது முற்றிலும்
தவறாகும்.
சிறுபான்மை மக்களின்
உரிமைகள் மதித்த இஸ்லாமிய ஆட்சியாளர்கள்.
ஒருமுறை மாமன்னர்
ஒளரங்கசீப் தனது ஆட்சியின் ஒரு பகுதியான காசிக்கு வந்திருந்தார். அவருடன்
அவருக்குக் கீழ் உள்ள குறுநில மன்னர்களும் அவரவர் மனைவியருடன் அங்கு
வந்திருந்தனர்.அப்போது அந்த இந்து மன்னர்கள்
இது எங்களுக்கு புண்ணியமான இடம். எனவே நாங்கள் இப்பகுதியை சுற்றிப் பார்க்க
அனுமதி தர வேண்டும் என்று அனுமதி கேட்டபோது மாமன்னர் ஒளரங்கசீப் அதற்கு அனுமதி
கொடுத்தார். சுற்றுப் பயணத்தை முடித்து விட்டு எல்லோரும் திரும்பினர். ஆனால் ஒரே
ஒரு ராஜாவின் மனைவி மட்டும் காணவில்லை. அவரைத் தேடும்படி மாமன்னர் உத்தரவிட்டார்.
இறுதியில் அந்தப்பெண் ஒரு கோவில் கருவறைக்குள் அழுதபடி நிர்வாணமாக இருந்தார். யாரோ
அப்பெண்ணை அங்கு வைத்துச் சீரழித்து
விட்டனர். அவரை மீட்கப்பட்டது. இந்நிலையில் அந்தக் கோவில் நிர்வாகிகள் மாமன்னரிடம்
வந்து எங்களில் யாரோ ஒருவர் இத்தகைய பாவத்தைச் செய்து விட்டார். எப்படியிருந்தாலும்
இந்தக் காரியத்தால் இந்தக் கோவில் தீட்டுப் பட்டு விட்டது. எனவே இதனை இடித்துக் கட்ட நீங்கள் அனுமதி அளிக்க
வேண்டும். மேலும் அதற்கு ஒத்துழைப்பும் தர வேண்டும். என்று கோரிக்கை வைத்தபோது அதை
ஏற்றுக் கொண்ட மாமன்னர் உடனே சம்மதித்தார். அரசர் என்ற ரீதியில் அதற்கான அனைத்து
ஒத்துழைப்புகளையும் வழங்கினார். இதை வரலாற்று நூல்களில் எழுதும்போது மாமன்னர்
ஒளரங்கசீப் கோவிலை இடித்து விட்டு திரும்பவும் கட்ட உத்தரவிட்டார். என்று
எழுதினார்கள். ஆனால் விஷமிகள் அதன்
வாசகங்களை மாற்றி அமைத்து மாமன்னர் ஒளரங்கசீப் கோவிலை இடிக்க உத்தரவிட்டார் என்பதை
மட்டும் எழுதி அவர் மீது களங்கம் சுமத்தியுள்ளார்கள். (செ.திவான்
எழுதிய நூல்)
கீழ்காணும் இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிம்கள்
பெருமளவில் வசித்தாலும் அங்குள்ள மாற்று
மதத்தவர்களுக்கு பரிபூரணமான மத சுதந்திரம்
வழங்கப்பட்டுள்ளது
முஸ்லிம் நாடுகள் அனைத்தும் மதம் சார்ந்த நாடுகள் என்ற
பொய்யை பாசிசவாதிகள் பரப்பி வருகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. கீழ்காணும்
இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிம்கள் பெருமளவில் வசித்தாலும் தங்கள் நாட்டில் வசிக்கும்
குறைந்த சதவீத சிறுபான்மை மக்களுக்காக இன்றுவரை மதச் சார்பற்ற நாடுகளாக
இருக்கின்றன. இந்த நாடுகளில் எந்த ஒரு மதக் கலவரங்களும் நடந்ததாக வரலாறு இல்லை.
உலகின் அனைத்து முஸ்லிம் நாடுகளிலும் இதே நிலை தான்.
நாடுகள் |
முஸ்லிம்கள் |
சிறுபான்மை மக்கள் |
துருக்கி |
96% |
4% |
இந்தோனேஷியா |
90% |
10% |
அஜர்பைஜான் |
93% |
7% |
கஜகஸ்தான் |
70% |
30% |
தஜிகிஸ்தான் |
98% |
2% |
துர்க்மெனிஸ்தான் |
89% |
11% |
கிர்கிஸ்தான் |
86% |
14% |
உஸ்பெக்கிஸ்தான் |
96% |
4% |
கொசோவோ |
95% |
5% |
டிஜபௌடி/Djibouti |
96% |
4% |
பங்களாதேஷ் |
89% |
11% |
நபி (ஸல்) அவர்களும்,
முஸ்லிம் ஆட்சியாளர்களும் கடைபிடித்த சமய
நல்லிணக்கத்தை அன்று முதல் இன்று வரை இந்திய முஸ்லிம்கள் கடைபிடித்து வாழ்ந்து வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக