14-07-2023 |
|
بسم
الله الرحمن الرحيم
|
|
https://chennaijamaathululama.blogspot.com
என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம் |
وَمَا
أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ (30)الشوري
ظَهَرَ
الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ
لِيُذِيقَهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ (41)
விலைவாசி நாளுக்கு ஏறிக் கொண்டே போகிறது. தற்போது
காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்து இருப்பது பற்றி மட்டும் இங்கு நாம்
பேசவில்லை. பொதுவாகவே பொருளாதாரத்தில் வீழ்ச்சி நிலவுகிறது. யாரைக் கேட்டாலும்
வியாபாரம் முன்பு போல் இல்லை. மிகவும் மந்தமாக உள்ளது என்ற பதிலைத் தான் நாம்
காதில் கேட்க முடிகிறது. இதற்கான காரணங்கள் என்ன என்பதை நாம் காண்போம். பொதுவாக
விலைவாசி உயர்வுக்கு பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் மிக முக்கியமானது உணவு
தானியங்களின் உற்பத்திக் குறைவாகும்.
உற்பத்திக்
குறைவுக்கும் பல காரணங்கள். 1.சில காய்கறி சீசன் முடிந்தால்
விலை உயரும்.இதில் யாரையும் குறை கூற முடியாது. உற்பத்தியைக் குறைந்தால்
விலைவாசி உயர்வது இயல்பு
عَنْ أَنَسِ
رض قَالَ غَلَا السِّعْرُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ قَدْ
غَلَا السِّعْرُ فَسَعِّرْ لَنَا فَقَالَ إِنَّ اللَّهَ هُوَ الْمُسَعِّرُ
الْقَابِضُ الْبَاسِطُ الرَّازِقُ إِنِّي لَأَرْجُو أَنْ أَلْقَى رَبِّي وَلَيْسَ
أَحَدٌ يَطْلُبُنِي بِمَظْلَمَةٍ فِي دَمٍ وَلَا مَالٍ (ابن ماجة)(سَعِّرْவிலை நிர்ணயம் செய்யுங்கள்
(உற்பத்திக்குறைவு காரணமாக)
நபி ஸல் அவர்களின் காலத்தில் சில பொருட்களின் விலை உயர்ந்தது.
அப்போது தோழர்கள் நபி ஸல் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே விலைவாசி உயர்ந்து
விட்டது.(வருடம் முழுவதும் உணவுப் பொருட்கள் மற்றும்
அத்தியாவசியமான பொருட்களின் விலை ஒரேமாதிரியாக இருக்கும் வகையில்) fixed rate ஏற்படுத்துங்கள் என்று கூறினார்கள்.
அப்போது நபி ஸல் அவர்கள் (நான் அவ்வாறு செய்ய மாட்டேன்.) ஏனெனில் அல்லாஹ் (உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் அவனே) விலையை ஏற்றக் கூடியவனாக இருக்கிறான். அவனே (சில
நேரம்)உற்பத்தியைக் குறைப்பவனாகவும்(சில
நேரம்) உற்பத்தியைக் கூட்டுபவனாகவும் இருக்கிறான். உணவு
வழங்குபவனாக இருக்கிறான். (எனவே தான் விலைவாசி ஒரே மாதிரி
இருப்பதில்லை.) எனவே நான் fixed rate
ஏற்படுத்தி அதனால் வியாபாரிகள் பாதிப்படைந்து தமது உயிர், பொருள் விஷயத்தில்
தனக்கு ஏற்பட்ட அநீதத்திற்காக என் மீது யாரும் புகார் கொடுக்கும் நிலையில்
அல்லாஹ்வை சந்திப்பதை நான் விரும்பவில்லை.
விலைவாசி அதிகரித்துள்ள
நேரத்தில் மக்களின் நலனுக்காக குறைந்த இலாபத்திற்கு விற்பனை செய்யும் வியாபாரிக்கு
கிடைக்கும் இலாபம் குறைவு என்றாலும் அல்லாஹ் வேறு வழியில் பரக்கத் செய்வான்.
عَنْ
عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْجَالِبُ مَرْزُوقٌ وَالْمُحْتَكِرُ مَلْعُونٌ (ابن
ماجة) الجالب الذي يجلب السلعة بربح يسير
குறைந்த இலாபத்திற்கு விற்பனை செய்யும் வியாபாரி ரிஜ்க் வழங்கப்படுவார். பதுக்குபவர்
சபிக்கப்பட்டவர்.
2.
மனிதர்களின் பாவங்கள் பெருகும் போது உற்பத்திப் பொருட்களில் அல்லாஹ் பரக்கத்தை
குறைப்பான்.
عَنْ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ رَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.. وَإِنَّ الْعَبْدَ لَيُحْرَمُ الرِّزْقَ
بِالذَّنْبِ يُصِيبُهُ (ابن ماجة
ஆட்சியாளர்கள் நல்லவர்களாக அமையாவிட்டாலும் உற்பத்திக் குறைவு ஏற்படும். பரக்கத்
நீங்கும்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ أُمَرَاؤُكُمْ خِيَارَكُمْ
وَأَغْنِيَاؤُكُمْ سُمَحَاءَكُمْ وَأُمُورُكُمْ شُورَى بَيْنَكُمْ فَظَهْرُ
الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ بَطْنِهَا وَإِذَا كَانَ أُمَرَاؤُكُمْ شِرَارَكُمْ
وَأَغْنِيَاؤُكُمْ بُخَلَاءَكُمْ وَأُمُورُكُمْ إِلَى نِسَائِكُمْ فَبَطْنُ
الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ ظَهْرِهَا (ترمذي
எதுவரை
உங்களில் தலைவர்கள் நல்லவர்களாகவும் உங்களில் செல்வந்தர்கள் தர்மம்
செய்பவர்களாகவும் உங்களுடைய காரியங்கள் உங்களுக்கிடையில் கலந்து
ஆலோசிக்கப்படுவைகளாகவும் இருக்குமோ அதுவரை
இந்த பூமியின் மேற்பரப்பு இந்த பூமியின் கீழ்பரப்பை விடவும் நல்லதாக
இருக்கும். இந்த பூமி செழிப்பாகவும் அமைதியாகவும் இருக்கும். எப்போது உங்களில்
தலைவர்கள் தீயவர்களாகவும் உங்களில் செல்வந்தர்கள் கஞ்சத்தனம் செய்பவர்களாகவும்
உங்களுடைய காரியங்கள் அனைத்தும் பெண்களிடம் ஒப்படைக்கப் படக்கூடியதாகவும் ஆகி
விடுமோ அப்போது இந்த பூமியின் கீழ்பரப்பு
இந்த பூமியின் மேற்பரப்பை விடவும் மேலானது. அதாவது இந்த பூமியில் பல விதமான
சோதனைகள் தோன்றி மனிதர்களை நிம்மதியற்றவர்களாக ஆக்கி விடும். (இந்த பூமியின் செழிப்பு குறைந்து
விடும்.)
அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு வாழும்போது
உற்பத்திப்பொருட்களில் அல்லாஹ் பரக்கத் தருவான்
وَلَوْ
أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِنَ
السَّمَاءِ وَالْأَرْضِ (96)الاعراف -
தன் சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை தர்மம் செய்யும் நல்ல மனிதருக்காக மழை
பெய்தது
عَنْ
أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « بَيْنَا رَجُلٌ
بِفَلاَةٍ مِنَ الأَرْضِ فَسَمِعَ صَوْتًا فِى سَحَابَةٍ اسْقِ حَدِيقَةَ فُلاَنٍ.فَتَنَحَّى
ذَلِكَ السَّحَابُ فَأَفْرَغَ مَاءَهُ فِى حَرَّةٍ فَإِذَا شَرْجَةٌ مِنْ تِلْكَ
الشِّرَاجِ قَدِ اسْتَوْعَبَتْ ذَلِكَ الْمَاءَ كُلَّهُ فَتَتَبَّعَ الْمَاءَ
فَإِذَا رَجُلٌ قَائِمٌ فِى حَدِيقَتِهِ يُحَوِّلُ الْمَاءَ بِمِسْحَاتِهِ فَقَالَ
لَهُ يَا عَبْدَ اللَّهِ مَا اسْمُكَ قَالَ فُلاَنٌ. لِلاِسْمِ الَّذِى سَمِعَ فِى
السَّحَابَةِ فَقَالَ لَهُ يَا عَبْدَ اللَّهِ لِمَ تَسْأَلُنِى عَنِ اسْمِى
فَقَالَ إِنِّى سَمِعْتُ صَوْتًا فِى السَّحَابِ الَّذِى هَذَا مَاؤُهُ يَقُولُ
اسْقِ حَدِيقَةَ فُلاَنٍ لاِسْمِكَ فَمَا تَصْنَعُ فِيهَا قَالَ أَمَّا إِذَا
قُلْتَ هَذَا فَإِنِّى أَنْظُرُ إِلَى مَا يَخْرُجُ مِنْهَا فَأَتَصَدَّقُ
بِثُلُثِهِ وَآكُلُ أَنَا وَعِيَالِى ثُلُثًا وَأَرُدُّ فِيهَا ثُلُثَهُ ». (مسلم)
நல்லோர்கள்
வாழ்ந்த காலத்தில் ஒரு கோதுமை என்பது பேரீத்தங்கொட்டை அளவு இருந்தது
وقد
ذكر الامام أحمد فى مسنده فى ضمن حديث قال وجدت في خزائن بعض بني أمية حنطة الحبة
بقدر نواة التمرة وهي في صرة مكتوب عليها كان هذا ينبت
في زمن من العدل وكثير من هذه الأفات أحدثها الله سبحانه
وتعالى بما أحدث العباد من الذنوب (تفسير
لابن القيم
இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹ்
அவர்கள் தனது நூலில் எழுதியுள்ளார்கள். நான் பனூ உமய்யா குலத்தாரில் சிலர்
பாதுகாத்து வைத்திருந்த பொக்கிஷங்களில் ஒரு கோதுமையை பார்த்தேன். அது ஒரு பையில்
இருந்தது. பேரீத்தம்பழத்தின் கொட்டை அளவுக்கு பெரிதாக இருந்தது. அதிலே பின்வரும்
வாசகம் எழுதப் பட்டிருந்தது. இந்தக் கோதுமை நீதமானவர்கள் நிறைந்த காலத்தில்
விளைந்ததாகும்.
பூமியில் பாவங்கள்
பெருகப் பெருக மனிதர்களின் தோற்றத்தையும்
உயரத்தையும் அல்லாஹ் குறைத்தான்.
وأما
تأثير الذنوب في الصور والخلق فقد روي الترمذي في جامعه عن النبي انه قال خلق الله
آدم وطوله في السماء ستون ذراعا ولم يزل الخلق ينقص حتى الآن (تفسير
لابن القيم
இமாம் இப்னுல்
கைய்யிம் ரஹ் அவர்கள் எழுதுகிறார்கள். பூமியில் பாவங்கள் பெருகப் பெருக மனிதர்களின் தோற்றத்தையும் உயரத்தையும் அல்லாஹ்
குறைத்தான்.ஆதம் அலை அவர்களை அல்லாஹ் அறுபது அடி உயரம் கொண்டவர்களாக அல்லாஹ்
படைத்தான். பின்பு காலங்கள் செல்லச் செல்ல அது குறைந்து கொண்டே வருகிறது.
நேரம்
கடந்தால் கெட்டுப் போகும் தன்மை பல உணவுப் பொருட்களுக்கும் குறிப்பாக
இறைச்சிக்கும் ஏற்பட்டதே மனிதர்கள் செய்த பாவங்களின்
காரணமாகத் தான்.
உருளைக்
கிழங்கு, வெங்காயம் போன்றவற்றை எவ்வாறு பல நாட்கள் வரை வெளியில் வைத்திருந்தாலும்
அழுகாமல் இருக்குறதோ அதுபோல் இறைச்சி என்பதும் இருந்தது. பனீ இஸ்ராயீல்
சமூகத்திற்கு மன்னு என்ற இனிப்புப் பண்டமும் ஸல்வா என்ற பொறித்த இறைச்சியும்
வானத்தில் இருந்து இறக்கப்பட்ட போது அவற்றை அடுத்த நாளைக்கு சேமித்து
வைக்கக்கூடாது என அல்லாஹ் உத்தரவிட்டான். ஒவ்வொரு நாளும் அல்லாஹ் இறக்குவான் என்ற
நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு உத்தரவிட்டான். ஆனால் அந்த மக்கள்
நாளைக்கு இந்த உணவு கிடைக்கா விட்டால் என்ன செய்வது என்ற பேராசை காரணமாக அவற்றை
சேமித்து வைக்கத் தொடங்கினர். அல்லாஹ் அன்று முதல் இறைச்சிக்கு கெட்டுப்போகும்
தன்மையைக் கொடுத்து விட்டான்.
عن ا بي هُرَيْرَةَ رض عَنْ رَسُولِ اللَّهِ -صلى الله
عليه وسلم- فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه
وسلم- « لَوْلاَ بَنُو إِسْرَائِيلَ لَمْ يَخْبُثِ الطَّعَامُ وَلَمْ يَخْنَزِ
اللَّحْمُ وَلَوْلاَ حَوَّاءُ لَمْ تَخُنْ أُنْثَى زَوْجَهَا الدَّهْرَ ».(مسلم) قال
العلماء معناه أن بني إسرائيل لما أنزل الله عليهم المن والسلوى نهوا عن ادخارهما
فادخروا ففسد وأنتن واستمر من ذلك الوقت ] (شرح مسلم
தற்போது உற்பத்தியாகும் பொருட்களில் உடலுக்குத் தேவையான சத்துக்களும் இல்லாமல்
போய் விட்டன.
3. வியாபாரத்தில் மோசடிகள் பெருகுவதாலும் உற்பத்திப் பொருட்களில் பரக்கத்
குறையும்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رضي الله عنه قَالَ أَقْبَلَ عَلَيْنَا
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا مَعْشَرَ
الْمُهَاجِرِينَ خَمْسٌ إِذَا ابْتُلِيتُمْ بِهِنَّ وَأَعُوذُ بِاللَّهِ أَنْ
تُدْرِكُوهُنَّ لَمْ تَظْهَرْ الْفَاحِشَةُ فِي قَوْمٍ قَطُّ حَتَّى يُعْلِنُوا
بِهَا إِلَّا فَشَا فِيهِمْ الطَّاعُونُ وَالْأَوْجَاعُ الَّتِي لَمْ تَكُنْ
مَضَتْ فِي أَسْلَافِهِمْ الَّذِينَ مَضَوْا وَلَمْ يَنْقُصُوا الْمِكْيَالَ
وَالْمِيزَانَ إِلَّا أُخِذُوا بِالسِّنِينَ وَشِدَّةِ الْمَئُونَةِ وَجَوْرِ
السُّلْطَانِ عَلَيْهِمْ وَلَمْ يَمْنَعُوا زَكَاةَ أَمْوَالِهِمْ إِلَّا مُنِعُوا
الْقَطْرَ مِنْ السَّمَاءِ وَلَوْلَا الْبَهَائِمُ لَمْ يُمْطَرُوا وَلَمْ
يَنْقُضُوا عَهْدَ اللَّهِ وَعَهْدَ رَسُولِهِ إِلَّا سَلَّطَ اللَّهُ عَلَيْهِمْ
عَدُوًّا مِنْ غَيْرِهِمْ فَأَخَذُوا بَعْضَ مَا فِي أَيْدِيهِمْ وَمَا لَمْ
تَحْكُمْ أَئِمَّتُهُمْ بِكِتَابِ اللَّهِ وَيَتَخَيَّرُوا مِمَّا أَنْزَلَ
اللَّهُ إِلَّا جَعَلَ اللَّهُ بَأْسَهُمْ بَيْنَهُمْ (ابن ماجة)
எந்த சமுதாயத்தில் ஆபாசம் மிகைத்து விடுமோ அந்த
சமுதாயத்தில் இதுவரை கேள்விப்படாத வித விதமான நோய் வராமல் இருக்காது. 2.எந்த சமுதாயத்தில்
எடை மோசடி பெருகி விடுமோ அச்சமுதாயத்தில்
பொருளாதார தட்டுப்பாடு, அநீத அரசர்களின் கொடுமைகள் வராமல் இருக்காது3.எந்த
சமுதாயத்தில் ஜகாத் தரப்படாமல் விட்டு விடப்படுமோ அந்த சமுதாயத்தில் மழை பெய்யாது.மற்ற
ஜீவராசிகளுக்காக பெய்தாலே தவிர 4.அல்லாஹ்வின் கட்டளையை
மீறும் முஸ்லிம் சமுதாயத்தின் மீது எதிரிகளை அல்லாஹ் ஏவி விடுவான். அவர்கள் இவர்களின் சொத்துக்களை சூரையாடுவர் 5.சமுதாயத்
தலைவர்கள் குர்ஆன் சட்டங்களை விட்டு விட்டு மனம்போன போக்கில் மக்களை வழி நடத்தும்போது அல்லாஹ் அவர்களிடையே
ஒற்றுமையில்லாத நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவான்.
கலப்பட மோசடியால் பரக்கத் நீங்குவதற்கு துல்ஃபிகார் சாஹிப் அவர்கள் கூறும் ஒரு
உண்மைச் சம்பவம்
முற்காலத்தில் ஒரு முஸ்லிம் பால்
வியாபாரி இருந்தார். எப்போதும் அவர் பாலில் தண்ணீர் கலக்காமல் நேர்மையாக வியாபாரம்
செய்பவர் தான். ஆனால் ஒருநாள் அவருக்கு மொத்தமாக வந்து சேர வேண்டிய பாலின் அளவு
குறைவாகவே கிடைத்தது. தாம் தினமும் சப்ளை செய்ய வேண்டிய வாடிக்கையாளர்களுக்கு
எப்படியும் பால் சப்ளை செய்தாக வேண்டும். எனவே அவர் தம் மனதில் இன்று ஒருநாள்
மட்டும் பாலில் தண்ணீரைக் கலந்து விடுவோம். வாடிக்கையாளர்கள் கேட்டால் ஏதாவது
காரணம் கூறி விடலாம் என்று எண்ணி பாலில் பாதி அளவு தண்ணீரைக் கலந்தார். அதை
எப்படியோ விற்று விட்டார். அன்றைய தினம் அவருடைய முதலீடு மிகவும் குறைவு. ஆனால்
கிடைத்த இலாபம் மிகவும் அதிகம். அதை ஒரு பண முடிப்பாக எடுத்துக் கொண்டு தன்னுடைய
வீட்டுக்குத் திரும்பினார். செல்லும் வழியில் களைப்பு காரணமாக ஒரு ஆற்றில்
ஓரத்தில் உள்ள மரத்தடியில் ஓய்வு எடுப்பதற்காக படுத்தார். அந்த நேரம் பார்த்து
மரத்தின் கிளையில் ஒரு குரங்கு அமர்ந்திருந்தது. அவர் அசந்த நேரம் பார்த்து அந்த
பண முடிப்பை எடுத்துக் கொண்டு மரத்தின் ஒரு கிளை மேல் சென்று அமர்ந்து கொண்டது.
அந்தக் கிளை ஆற்றை நோக்கி தாழ்வாக இருந்தது. அவர் கண் விழித்துப் பார்த்து
தன்னுடைய பணப்பையைக் காணாமல் பதறினார். பிறகு மேலே பார்த்த குரங்கின் கைகளில் அது
இருக்க, அவர் தன்னுடைய தோளில் கிடந்த துண்டை எடுத்துக் கீழே விரித்து அந்தப் பண
முடிப்பை துண்டில் போட்டு விடும்படி குரங்கிடம் கெஞ்சினார். அது சற்று நேரம்
விளையாட்டுக் காட்டிய பின் அந்தப் பணப்பையப் பிரித்தது. பின்பு அதிலிருந்த ஒவ்வொரு
காசாக எடுத்து ஒரு காசை ஆற்றிலும் மற்றொரு காசை துண்டின் மீது வீசியது. இவ்வாறாக
அவர் அன்று சம்பாதித்த காசில் பாதி மட்டும் தான் துண்டில் வந்து விழுந்தது. மீதிப்பணம்
தண்ணீருக்கும் சென்று விட்டது. அப்போது தான் அவருக்கு புத்தி வந்தது. நாம்
இன்றைக்கு ஹராமாக சம்பாதித்த பணம் தண்ணீருக்குள் சென்று விட்டது. நமக்கு வந்து சேர
வேண்டிய காசு மட்டும் தான் நம்மிடம் தங்கியுள்ளது என உணர்ந்தார்.
ஒரு பொருளை உற்பத்தி செய்வதில்
நடைபெறும் ஊழல் விஷயத்தில் இந்தியா முதலிடம்.
இதன் காரணமாகவே பொருளாதாரத்தில்
பெரும் வீழ்ச்சியை இந்தியா சந்தித்துள்ளது
பெரு நிறுவனங்களின் மோசடிக்கு
ஒரு உதாரணம்
இந்தியாவின்ஒரு
பெரிய நிறுவனம் மூலம் ஜெர்மனிக்கு கயிறு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. கயிற்றின்
எடையை அதிகப்படுத்த அந்த நிறுவனம் கயிற்றை
தண்ணீரில் நனைத்து பின்னர் நனைத்த கயிற்றை கடல் மண்ணிலே போட்டு புரட்டி
எடுப்பார்கள்.ஈரக்கயிற்றில் கடல் மணல் அப்படியே ஒட்டிக் கொண்டு எடையை அதிகப்
படுத்தும் என்று அவ்வாறு செய்வார்கள்.
மணல் கலந்த அக்கயிற்றை அப்படியே ஏற்றுமதி செய்து வந்தார்கள். சில மாதங்கள்
கழிந்தன. ஜெர்மனியர்களிடமிருந்து அந்த நிறுவனத்துக்கு ஒரு அதிசயமான வேண்டுகோள்
வந்தது. தயவு செய்து மண்ணை அந்த கயிற்றோடு அனுப்ப வேண்டாம். வெறும் மண்ணை மட்டும்
அனுப்புங்கள் போதும் என்று ஜெர்மன் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். அந்த ஜெர்மன்
வியாபாரிகளுக்கு கயிற்றை விட அந்த மண் விலை உயர்ந்ததாக தெரிந்தது தான் காரணம்.
அந்த அளவுக்கு கயிற்றை விட மணல் அதிகமாக இருந்தது.
பதுக்கல் செய்வதாலும் பரக்கத் குறையும்
عَنْ
عُمَرَرضي الله عنه قَال سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ يَقُولُ مَنْ احْتَكَرَ عَلَى الْمُسْلِمِينَ طَعَامًا ضَرَبَهُ اللَّهُ
بِالْجُذَامِ وَالْإِفْلَاسِ (ابن ماجة)
மக்களுக்கு தேவைப்படும்
அத்தியாவசியமான பொருட்களை விலை ஏறட்டும் என்று பதுக்கி வைப்பவரை அல்லாஹ்
வறுமையைக் கொண்டும் வெண் குஷ்டத்தைக் கொண்டும் சோதிப்பான்.
عَنْ فَرُّوخَ مَوْلَى
عُثْمَانَ أَنَّ عُمَرَ رَضِ وَهُوَ
يَوْمَئِذٍ أَمِيرُ الْمُؤْمِنِينَ خَرَجَ إِلَى الْمَسْجِدِ فَرَأَى طَعَامًا
مَنْثُورًا فَقَالَ مَا هَذَا الطَّعَامُ فَقَالُوا طَعَامٌ جُلِبَ إِلَيْنَا
قَالَ بَارَكَ اللَّهُ فِيهِ وَفِيمَنْ جَلَبَهُ قِيلَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ
فَإِنَّهُ قَدْ احْتُكِرَ قَالَ وَمَنْ احْتَكَرَهُ قَالُوا فَرُّوخُ مَوْلَى
عُثْمَانَ وَفُلَانٌ مَوْلَى عُمَرَ فَأَرْسَلَ إِلَيْهِمَا فَدَعَاهُمَا فَقَالَ
مَا حَمَلَكُمَا عَلَى احْتِكَارِ طَعَامِ الْمُسْلِمِينَ قَالَا يَا أَمِيرَ
الْمُؤْمِنِينَ نَشْتَرِي بِأَمْوَالِنَا وَنَبِيعُ فَقَالَ عُمَرُ سَمِعْتُ
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ يَقُولُ مَنْ احْتَكَرَ عَلَى
الْمُسْلِمِينَ طَعَامَهُمْ ضَرَبَهُ اللَّهُ بِالْإِفْلَاسِ أَوْ بِجُذَامٍ
فَقَالَ فَرُّوخُ عِنْدَ ذَلِكَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أُعَاهِدُ اللَّهَ
وَأُعَاهِدُكَ أَنْ لَا أَعُودَ فِي طَعَامٍ أَبَدًا وَأَمَّا مَوْلَى عُمَرَ
فَقَالَ إِنَّمَا نَشْتَرِي بِأَمْوَالِنَا وَنَبِيعُ قَالَ
أَبُو يَحْيَى فَلَقَدْ رَأَيْتُ مَوْلَى عُمَرَ مَجْذُومًا (مسند أحمد
உமர்
ரழி கலீஃபாவாக இருக்கும்போது ஒருநாள் பள்ளிக்கு முன்பு நிறைய தானிய மூட்டைகள்
இருப்பதைக் கண்டு இது என்ன என்று கேட்டார்கள் அப்போது இதுவெல்லாம் இத்தனை நாட்கள்
பதுக்கி வைக்கப்பட்டிருந்த பின் இப்போது மீட்கப்பட்டுள்ளன என்று பதில்
கூறப்பட்டது. அப்போது உமர் ரழி அவர்கள் இந்த தானியங்களில் அல்லாஹ் பரக்கத் செய்வானாக
இதை நம்மிடம் கொண்டு வர யார் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கும் அல்லாஹ் பரக்கத்
செய்வானாக என்று கூறினார்கள். அதற்கடுத்து அதைப் பதுக்கி வைத்த இருவரைப் பற்றி
தகவல் கூறப்பட்டுள்ளது. அவ்விருவரும் அடிமைகள். ஒருவர் உமர் ரழி அவர்களின் அடிமை.
மற்றொருவர் உஸ்மான் ரழி அவர்களின் அடிமை. (அடிமைகள்
சுயமாக வியாபாரம் செய்ய முதலாளி அனுமதி தந்தால் கூடும்.)
அவ்விருவரையும்
உமர் ரழி அவர்கள் அழைத்து ஏன் இவ்வாறு செய்தீர்கள் என்று கேட்க, அதற்கு
அவ்விருவரும் எங்களின் பணத்தைக் கொடுத்து நாங்கள் பொருளை கொள்முதல் செய்கிறோம்.
அதை நாங்கள் விரும்பும்போது விற்போம். இதிலென்ன தவறு என்றனர். அவ்விருவருக்கும்
உமர் ரழி அவர்கள் மேற்படி ஹதீஸைக்கூறி புத்திமதி கூற, அவ்விருவரில் உஸ்மான் ரழி
அவர்களின் அடிமையான ஃபர்ரூஹ் திருந்தி நீங்கள் இவ்வாறு கூறியபின்பு இனிமேல் நான்
ஒருபோதும் இவ்வாறு செய்ய மாட்டேன் என அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறேன்
என்றார். தன்னுடைய வியாபார இடத்தையே மாற்றி விட்டார். ஆனால் மற்றொருவர் தாம் கூறிய
அதே வாதத்தையே முன் வைத்தார். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூயஹ்யா
ரஹ் அவர்கள் கூறும்போது நான் பிற்காலத்தில் வீண் வாதம் பேசிய அந்த அடிமையை
குஷ்டரோகியாக நான் பார்த்தேன் என்று கூறினார்கள்.
வட்டியின் புழக்கம் அதிகரிப்பதாலும் உற்பத்திப்
பொருட்களில் பரக்கத்தை நீங்கி விலைவாசி உயரும்
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله
عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ لَا يُبَالِي
الْمَرْءُ بِمَا أَخَذَ الْمَالَ أَمِنْ حَلَالٍ أَمْ مِنْ حَرَامٍ (بخاري)بَاب
قَوْلِ اللَّهِ تَعَالَى يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا
أَضْعَافًا مُضَاعَفَةً- كتاب البيوع عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَأْتِي
عَلَى النَّاسِ زَمَانٌ يَأْكُلُونَ الرِّبَا فَمَنْ لَمْ يَأْكُلْهُ أَصَابَهُ
مِنْ غُبَارِهِ (ابوداود) ضعيف بَاب فِي اجْتِنَابِ الشُّبُهَاتِ - كِتَاب الْبُيُوعِ
எந்த அளவுக்கு உலகில் கெட்டவர்கள் குறைவார்களோ அந்த அளவுக்கு பரக்கத்
பெருகும்.
நபி ஈஸா அலை வருவதற்கு
முன் இமாம் மஹ்தீ அலை காலத்திலேயே நல்லவர்கள் நிறைந்திருப்பார்கள். அப்போது இந்த
பூமி செழிப்பாக இருக்கும்.
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ،
قَالَ:
ذَكَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَلاءً
يُصِيبُ هَذِهِ الأُمَّةَ حَتَّى لا يَجِدُ الرَّجُلُ مَلْجَأً يَلْجَأُ إِلَيْهِ
مِنَ الظُّلْمِ فَيَبْعَثُ اللَّهُ رَجُلا
مِنْ عِتْرَتِي أَهْلِ بَيْتِي ، فَيَمْلأُ بِهِ الأَرْضَ قِسْطًا وَعَدْلا كَمَا مُلِئَتْ
جَوْرًا وَظُلْمًا يَرْضَى عَنْهُ سَاكِنُ السَّمَاءِ وَسَاكِنُ الأَرْضِ لا
تَدَعُ السَّمَاءُ مِنْ قَطْرِهَا شَيْئًا إِلا صَبَّتْهُ مِدْرَارًا وَلا تَدَعُ الأَرْضُ مِنْ نَبَاتِهَا شَيْئًا
إِلا أَخْرَجَتْهُ حَتَّى يَتَمَنَّى الأَحْيَاءُ الأَمْوَاتَ يَعِيشُ فِي ذَلِكَ سَبْعَ سِنِينَ أَوْ ثَمَانِ
سِنِينَ أَوْ تِسْعَ سِنِينَ(شرح السنة وعَنْه قَالَ : قَالَ رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم : يَخْرُجُ فِي آخِرِ الزَّمَانِ خَلِيفَةٌ يُعْطِي
الْمَالِ بِغَيْرِ عَدَدٍ
கருத்து- முஸ்லிம்களுக்கு எதிராக உலகெங்கும்
நடைபெறும் அநியாயம் காரணமாக அவர்கள் தஞ்சம் அடைய எங்கும் இடம் இல்லாத சூழ்நிலையில்
இமாம் மஹ்தீ அலை அவர்களை அல்லாஹ் என்னுடைய குடும்பத்தில் பிறக்கச் செய்து அல்லாஹ்
அவர்களை ஆட்சியாளராக ஆக்குவான். அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் எந்த அளவுக்கு
அநியாயம் நிரம்பி வழிந்ததோ அந்த அளவுக்கு நீதத்தால் பூமியை நிரப்புவார்கள்.
அவர்களை விண்ணில் உள்ள மலக்குகளும் மண்ணில் உள்ள மனிதர்கள் பொருந்திக்
கொள்வார்ரகள். வானம் சரியான முறையில் மழையை இறக்கும். பூமி அதன் செழிப்புகளை
சரியான முறையில் தந்து கொண்டிருக்கும். உயிருடன் இருப்பவர்கள் தங்களில்
இறந்தவர்கள் குறித்து இன்ன மனிதர்களுக்குஅல்லாஹ் இன்னும் ஆயுளை அதிகமாக்கி இவருடைய
காலத்தில் வாழ வைத்திருக்கலாமே என்று எண்ணுவார்கள். மற்றொரு அறிவிப்பில் அவர்கள் கணக்குப்
பார்க்காமல் மக்களுக்கு வாரி வாரி வழங்குவார்கள். என்றும் கூறப்பட்ட்டுள்ளது.
ஈஸா அலை அவர்கள் வந்த பின்பு இன்னும் அதிகமான செழிப்பை
அல்லாஹ் தருவான்.
ففي تفسير ابن
كثير في قوله تعالى{ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ
أَيْدِي النّاسِ}أي بان النقص في الزروع والثمار بسبب المعاصي. وقال أبو العالية:
من عصى الله في الأرض فقد أفسد في الأرض, لأن صلاح الأرض والسماء بالطاعة ولهذا
جاء في الحديث الذي رواه أبو داود "لَحَدٌّ يُقام في الأرض أحبُّ إلى أهلها
من أن يمطروا أربعين صباحاً والسبب في هذا أن الحدود إذا أقيمت اِنْكَفَّ الناس أو
أكثرهم أو كثير منهم عن تعاطي المحرمات وإذا تركت المعاصي كان سبباً في حصول
البركات من السماء والأرض. ولهذا إذا نزل عيسى بن مريم عليه السلام في آخر الزمان
يحكم بهذه الشريعة المطهرة في ذلك الوقت من قتل الخنزير وكسر الصليب ووضع الجزية
وهو تركها فلا يقبل إلا الإسلام أو السيف, فإذا أهلك الله في زمانه الدجال وأتباعه
ويأجوج ومأجوج, (قيل للأرض: أخرجي بركتك, فيأكل من الرمانة الفئام من الناس
ويستظلون بقحفها ويكفي لبن اللقحة الجماعة من الناس وما ذاك إلا ببركة تنفيذ شريعة
محمد صلى الله عليه وسلم فكلما أقيم العدل كثرت البركات والخير ولهذا ثبت في
الصحيح أن الفاجر إذا مات تستريح منه العباد والبلاد والشجر والدواب.(تفسير ابن
كثير)
விளக்கம்-ஒரு கெட்டவனுக்கு முறைப்படி தண்டனை
வழங்கப்பட்டு அவன் இறந்தால் அதனால் ஏற்படும் பரக்கத், செழிப்பாகிறது நாற்பது
நாட்கள் மழை பெய்வதால் ஏற்படும் செழிப்பை விட அதிகமாகும். அதாவது கெட்டவன் உயிரோடு நம்முடன் வாழ்ந்து
கொண்டிருந்தவரை அவனது பாவங்கள் அளவுக்கு இப்பூமியில் செழிப்பு கொஞ்சம்
குறைந்திருந்தது அவன் இறந்த பின்பு அந்த செழிப்பு மீண்டும் ஏற்படுகிறது இதனால் தான்
ஒரு கெட்டவன் செத்துப் போனால்இந்த பூமியில் உள்ள மலைகள்,மரங்கள், செடிகள், கொடிகள்
அனைத்தும் நிம்மதி அடைகின்றன. அது மட்டுமல்லாமல் இறை நல்லடியார்களும் நிம்மதி
அடைகிறார்கள் ஆக எந்த அளவுக்கு இந்த பூமியில் கெட்டவர்கள் அதிகம் இருக்கிறார்களோ
அந்த அளவுக்கு இந்த பூமி பாதிக்கப்படும் ஆனால் கடைசி காலத்தில் ஈஸா அலைஹிஸ்ஸலாம்
இந்த பூமிக்கு வரும்போது கெட்டவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் நல்லவர்கள்
மட்டுமே இருப்பார்கள் அப்போது இந்த பூமியைப் பார்த்து அல்லாஹ் சொல்லுவான் பூமியே
நீ உன்னுடைய பரக்கத்தை முழுமையாக வெளிப்படுத்து என்று அல்லாஹ் கூறுவான் அப்போது இந்த
பூமி மிகவும் செழிப்பாக இருக்கும். எந்த அளவுக்கென்றால் இந்த பூமியில் விளையும்
ஒரு மாதுளம்பழத்தை ஒரு கூட்டமே உட்கார்ந்து சாப்பிடுவார்கள் சாப்பிட்ட பின் அதனுடைய தோலை மக்கள் மழைக்கு குடையாக
பயன்படுத்துவார்கள் அந்த அளவுக்கு மாதுளம் பழம் பெரிதாக இருக்கும். ஒரே ஒரு
மாட்டிலிருந்து கறக்கப்படும் பால் பெரும் கூட்டத்தினருக்கே போதுமானதாக இருக்கும்
இவ்வாறு எல்லாவற்றிலும் செழிப்பு வந்து விடும்.
தங்கத்தால் ஆன தூண்கள்
தெருவிலே கொட்டிக் கிடக்கும். அதை எடுக்க யாரும் முன்வர மாட்டார்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ تَقِيءُ الْأَرْضُ أَفْلَاذَ
كَبِدِهَا أَمْثَالَ الْأُسْطُوَانِ مِنْ الذَّهَبِ وَالْفِضَّةِ قَالَ فَيَجِيءُ
السَّارِقُ فَيَقُولُ فِي مِثْلِ هَذَا قُطِعَتْ يَدِي وَيَجِيءُ الْقَاتِلُ
فَيَقُولُ فِي هَذَا قَتَلْتُ وَيَجِيءُ الْقَاطِعُ فَيَقُولُ فِي هَذَا قَطَعْتُ
رَحِمِي ثُمَّ يَدَعُونَهُ فَلَا يَأْخُذُونَ مِنْهُ شَيْئًا (مسلم
கருத்து-கடைசி காலத்தில்
இந்தபூமி தன் ஈரக்குலையை தங்கம் வெள்ளியால் ஆன தூண்களாக வெளியே தள்ளும். அதாவது இந்த
பூமியின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் தங்க உலோகங்கள் தானாக மேலே வரும். எந்த
தங்கம் இன்று பல மைல் தூரம் பூமியைத் தோண்டி வெட்டி எடுத்தாலும் சிறிதளவு மட்டுமே
கிடைக்கிறதோ அத்தகயை தங்கம் வெள்ளி படிமங்கள் பெரும் பெரும் தூண்களாக ஆங்காங்கே
பாறைகளைப் போன்று கிடக்கும். ஒரு காலத்தில் தங்கத்தை திருடி அதற்காக கை
வெட்டப்பட்டு அப்போது திருந்தி வாழும் ஒரு மனிதர் இதற்காகவா என் கை வெட்டப்பட்டது
என்று கூறுவார்.தங்கத்திற்காக கொலை செய்தவர் இதற்காகவா நான் கொலை செய்தேன் என்று
கூறுவார். நகை (சம்பந்தமான தகராறு) காரணமாக உறவுகளைத் துண்டித்தவர் (உதாரணமாக நகை குறைவாக இருப்பதைச் சுட்டிக் காட்டி மருமகளைக் கொடுமைப்
படுத்தும் மாமியார் அல்லது கணவர்) இதற்காகவா நான் உறவினர்களுடன் சண்டையிட்டேன்
என்று கூறுவார். கடைசியில் யாரும் அதை எடுக்க மாட்டார்கள். அது அப்படியே அனாமத்தாக
கிடக்கும். அந்த அளவுக்கு அல்லாஹ் பரகத்தைத் தருவான்.
ஜகாத்தை எடுத்துக் கொண்டு
அலைந்தாலும் அதை வாங்க ஆள் இருக்காது
عَنْ
أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكْثُرَ الْمَالُ وَيَفِيضَ حَتَّى يَخْرُجَ
الرَّجُلُ بِزَكَاةِ مَالِهِ فَلَا يَجِدُ أَحَدًا يَقْبَلُهَا مِنْهُ وَحَتَّى
تَعُودَ أَرْضُ الْعَرَبِ مُرُوجًا وَأَنْهَارًا (مسلم) باب عَلاَمَاتِ
النُّبُوَّةِ فِى الإِسْلاَمِ-كتاب المناقب
ஈஸா அலை காலத்தில் மஸ்ஜித்கள் நிரம்பி வழியும். உலகின் அத்தனை சொத்து
சுகங்களையும் விட சஜ்தாவை அதிகம் விரும்புபவர்களாக மக்கள் ஆகி விடுவார்கள்
( حَتَّى تَكُون السَّجْدَة الْوَاحِدَة
خَيْرًا مِنْ الدُّنْيَا وَمَا فِيهَا ) فَمَعْنَاهُ وَاَللَّه أَعْلَم أَنَّ
النَّاس تَكْثُر رَغْبَتهمْ فِي الصَّلَاة وَسَائِر الطَّاعَات لِقِصَرِ آمَالهمْ
بِقُرْبِ الْقِيَامَة ، وَقِلَّة رَغْبَتهمْ فِي الدُّنْيَا لِعَدَمِ الْحَاجَة
إِلَيْهَا . وَهَذَا هُوَ الظَّاهِر مِنْ مَعْنَى الْحَدِيث (شرح النووي
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக