வியாழன், 24 ஆகஸ்ட், 2023

சிறந்த கணவன்

 



தற்காலத்தில் ஒவ்வொரு குடும்பங்களிலும் கணவன் மனைவி இடையே பிர்ச்சினைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருப்பதை கவனித்து எடுக்கப்பட்ட தலைப்பு

ஒருவர் சிறந்த முஃமினாக இருப்பதற்கான அடையாளங்களில் ஒன்று அவர் சிறந்த கணவனாக இருக்க வேண்டும்

عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي (ابن ماجة

وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ فَإِنْ كَرِهْتُمُوهُنَّ فَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا (19)النساء

وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ (228) البقرة

உங்களுக்கு அந்தப் பெண்களிடம் சில எதிர் பார்ப்புகள் இருப்பது போன்றே அவர்களுக்கும் உண்டு

மனைவியின் உணர்வுகளை மதித்து நடப்பவர்களாக நபி ஸல் அவர்கள் இருந்துள்ளார்கள்

ஆயிஷா ரழி அவர்கள் சிறுமி என்பதால் சிறுமிக்கே உள்ள விளையாட்டுத் தனம் அன்னை அவர்களிடம் ஆரம்ப காலத்தில் இருந்தது. அதை அனுசரித்து அவர்களுடன் நபி ஸல் அவர்கள் வாழ்க்கை நடத்தினார்கள்.

أَنَّ عَائِشَةَ رضي الله عنه قَالَتْ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا عَلَى بَابِ حُجْرَتِي وَالْحَبَشَةُ يَلْعَبُونَ فِي الْمَسْجِدِ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتُرُنِي بِرِدَائِهِ أَنْظُرُ إِلَى لَعِبِهِمْ  (بخاري

عَنْ عَائِشَةَ  رضي الله عنه أَنَّهَا كَانَتْ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ قَالَتْ فَسَابَقْتُهُ فَسَبَقْتُهُ عَلَى رِجْلَيَّ فَلَمَّا حَمَلْتُ اللَّحْمَ سَابَقْتُهُ فَسَبَقَنِي فَقَالَ هَذِهِ بِتِلْكَ السَّبْقَةِ (ابوداود

ஆயிஷா ரழி அவர்கள் கூறினார்கள். நான் நபி ஸல் அவர்களுடன் பிரயாணத்தில் இருந்தபோது ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. அப்போது நான் முந்தினேன். பின்பு நான் உடல் பருமனாகி விட்ட பிறகு மறுபடியும் எங்களுக்குள் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. அப்போது நபி ஸல் அவர்கள் முந்தினார்கள். பின்பு என்னிடம் அதற்கு இது சரியாகி விட்டது என்று கூறினார்கள்.                                                             

 عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غَزْوَةِ تَبُوكَ أَوْ خَيْبَرَ وَفِي سَهْوَتِهَا سِتْرٌ فَهَبَّتْ رِيحٌ فَكَشَفَتْ نَاحِيَةَ السِّتْرِ عَنْ بَنَاتٍ لِعَائِشَةَ لُعَبٍ فَقَالَ مَا هَذَا يَا عَائِشَةُ قَالَتْ بَنَاتِي وَرَأَى بَيْنَهُنَّ فَرَسًا لَهُ جَنَاحَانِ مِنْ رِقَاعٍ فَقَالَ مَا هَذَا الَّذِي أَرَى وَسْطَهُنَّ قَالَتْ فَرَسٌ قَالَ وَمَا هَذَا الَّذِي عَلَيْهِ قَالَتْ جَنَاحَانِ قَالَ فَرَسٌ لَهُ جَنَاحَانِ قَالَتْ أَمَا سَمِعْتَ أَنَّ لِسُلَيْمَانَ خَيْلًا لَهَا أَجْنِحَةٌ قَالَتْ فَضَحِكَ حَتَّى رَأَيْتُ نَوَاجِذَهُ (ابوداود

 ஆயிஷா ரழி அவர்கள் கூறினார்கள். நபி ஸல் அவர்கள் தபூக் போரை முடித்து விட்டு ஊர் திரும்பினார்கள் அப்போது ஆயிஷா ரழி அவர்களின் அலமாறிக்கு மேலுள்ள ஸ்கிரீன் விலகி ஆயிஷா ரழி அவர்கள் வைத்திருந்த சில பொம்மைகள் வெளியே தெரிந்தன. ஆயிஷாவே இது என்ன என்று நபி ஸல் கேட்டார்கள், இவை எனது விளையாட்டு பொம்மைகள் என்று ஆயிஷா ரழி அவர்கள் கூற, பின்பு நபி ஸல் அவர்கள் அவற்றின் மத்தியில் ஒரு குதிரை இறக்கைகளுடன் இருப்பதைக் கண்டு எங்கேனும் குதிரைக்கு இறக்கை இருக்குமா என நபி ஸல் கேட்க, உடனே ஆயிஷா ரழி அவர்கள் நபி சுலைமான் அலை அவர்களிடம் இறக்கைகள் கொண்ட குதிரைகள் இருந்தன என்று நீங்கள் கேள்விப்படவில்லையா என்றார்கள். அதைக் கண்டவுடன் நபி ஸல் அவர்கள் கடைவாய்ப் பற்கள் தெரிய சிரித்து விட்டார்கள். - நூல் அபூதாவூத்                     

மனைவியை பலர் முன்னிலையில் அவமானப் படுத்துவது கூடாது

عَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ بَعْضِ نِسَائِهِ فَأَرْسَلَتْ إِحْدَى أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ بِصَحْفَةٍ فِيهَا طَعَامٌ فَضَرَبَتْ الَّتِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِهَا يَدَ الْخَادِمِ فَسَقَطَتْ الصَّحْفَةُ فَانْفَلَقَتْ فَجَمَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِلَقَ الصَّحْفَةِ ثُمَّ جَعَلَ يَجْمَعُ فِيهَا الطَّعَامَ الَّذِي كَانَ فِي الصَّحْفَةِ وَيَقُولُ غَارَتْ أُمُّكُمْ ثُمَّ حَبَسَ الْخَادِمَ حَتَّى أُتِيَ بِصَحْفَةٍ مِنْ عِنْدِ الَّتِي هُوَ فِي بَيْتِهَا فَدَفَعَ الصَّحْفَةَ الصَّحِيحَةَ إِلَى الَّتِي كُسِرَتْ صَحْفَتُهَا وَأَمْسَكَ الْمَكْسُورَةَ فِي بَيْتِ الَّتِي كَسَرَتْ   (بخاري5225

 நபி ஸல் அவர்கள் தன் மனைவிமார்களின் ஒருவரின் வீட்டில் (ஆயிஷா ரழி அவர்களின் வீட்டில்) இருந்தார்கள். (அப்போது சில தோழர்களும் உடன் இருந்தார்கள். அவர்களுக்காக அன்னை ஆயிஷா ரழி உணவு தயார் செய்து கொண்டிருந்தார்கள்) அப்போது மற்றொரு மனைவி தன் வீட்டில் இருந்து உணவைக் கொடுத்தனுப்பினார்கள். அப்போது யாருடைய வீட்டில் நபி ஸல் இருந்தார்களோ அந்த மனைவி அதாவது (ஆயிஷா ரழி அவர்கள் ரோஷம் காரணமாக) அதை தட்டி விட, தட்டு இரண்டாக உடைந்தது. உடனே நபி ஸல் அவர்கள் கோபம் அடையாமல் உடைந்த தட்டையும் அதிலிருந்து சிதறிய உணவுகளையும் சேகரித்தார்கள். பிறகு தோழர்களிடம் உங்களின் அன்னைக்கு ரோஷம் ஏற்பட்டு விட்டது என்று மட்டும் கூறினார்கள். பிறகு அந்த வீட்டில் இருந்த நல்ல தட்டை உணவு கொடுத்தனுப்பிய மனைவிக்குக் கொடுத்தனுப்பி உடைந்த தட்டை இந்த வீட்டில் வைத்தார்கள்.

படிப்பினை- பலர் முன்னிலையில் இவ்வாறு ஒரு மனைவி நடந்து கொண்டால் பொதுவாக எந்த ஒரு ஆணுக்கும் கோபம் வரும். ஆனால் நபி ஸல் அவர்கள் கோபம் அடையவில்லை.                                  

மனைவி மீது பாசம் கொண்ட நபி ஸல் அவர்கள்

فقد قال صلى الله عليه وسلم في حديث أم زرع الطويل قال لعائشة : « كُنْتُ لَكِ كَأَبِى زَرْعٍ لأُمِّ زَرْعٍ » (بخاري5189

பல பெண்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய கணவன்மார்களைப் பற்றிப் பேசும் சம்பவத்தை ஆயிஷா ரழி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் கூறுவார்கள். அதை முழுமையாகக் கேட்ட பின்பு இந்தச் சம்பவத்தில் வரும் உம்மு ஸர்உ  என்ற பெண் அபூ ஸர்உக்கு மனைவியாக இருந்த போது அந்த மனைவி மீது  எத்தகைய பாசம் உள்ளவராக இருந்தாரோ அதுபோல உன்னிடம் நான் பாசமாக இருக்க ஆசைப் படுகிறேன் என்றார்கள்.     

فقد قال صلى الله عليه وسلم في حديث أم زرع الطويل قال لعائشة : « كُنْتُ لَكِ كَأَبِى زَرْعٍ لأُمِّ زَرْعٍ » (بخاري5189

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي لَأَعْلَمُ إِذَا كُنْتِ عَنِّي رَاضِيَةً وَإِذَا كُنْتِ عَلَيَّ غَضْبَى قَالَتْ فَقُلْتُ مِنْ أَيْنَ تَعْرِفُ ذَلِكَ فَقَالَ أَمَّا إِذَا كُنْتِ عَنِّي رَاضِيَةً فَإِنَّكِ تَقُولِينَ لَا وَرَبِّ مُحَمَّدٍ وَإِذَا كُنْتِ عَلَيَّ غَضْبَى قُلْتِ لَا وَرَبِّ إِبْرَاهِيمَ قَالَتْ قُلْتُ أَجَلْ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ مَا أَهْجُرُ إِلَّا اسْمَكَ (بخاري 5228

ஆயிஷா ரழி அவர்கள் கூறினார்கள்  நபி ஸல் அவர்கள் என்னிடம் நீ என் மீது எப்போது கோபமாக இருக்கிறாய் எப்போது அன்பாக இருக்கிறாய் என நான் அடையாளம் கண்டு கொள்வேன் என்று கூறினார்கள். அதற்கு நான் அது எப்படி? என்று கேட்டேன். அதற்கு நபி ஸல் அவர்கள் நீ என் மீது அன்பாக இருந்தால் முஹம்மது ஸல் அவர்களுடைய ரப்பின் மீது சத்தியமாக என்று கூறுவாய். நீ என் மீது கோபமாக இருந்தால்  இப்றாஹீம் (அலை) அவர்களுடைய ரப்பின் மீது சத்தியமாக என்று கூறுவாய். என்றார்கள். அதற்கு நான் ஆம் யாரஸூலல்லாஹ் அந்த நேரத்திலும் உங்களுடைய பெயரை மட்டும் என் நாவு ஒதுக்குமே தவிர உங்கள் மீதான நேசம் எப்போதும் எனக்குள் இருக்கும் என்றேன்.                            

عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجْهَ اللَّهِ إِلَّا أُجِرْتَ عَلَيْهَا حَتَّى مَا تَجْعَلُ فِي فِي امْرَأَتِكَ (بخاري

அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி நீ செய்யும் தர்மம் உட்பட ஒவ்வொரு காரியங்களுக்கும் நன்மை உண்டு. உன்னுடைய மனைவிக்கு நீ உணவு ஊட்டி விடுவது உட்பட..

மனைவியிடம் சில கெட்ட குணங்கள் இருந்தாலும் அவளிடமுள்ள வேறு சில நல்ல குணங்களைப் பொருந்திக் கொண்டு அனுசரித்து வாழ்வது

روي أن رجلا جاء إلى [عمر بن الخطاب] رضى الله عنه ليشكو سوء خلق زوجته فوقف على بابه ينتظر خروجه فسمع هذا الرجل امرأة عمر تستطيل عليه بلسانها وتخاصمه وعمر ساكت لا يرد عليها. فانصرف الرجل راجعا وقال: إن كان هذا حال عمر مع شدته وصلابته وهو أمير المؤمنين فكيف حالي؟ وخرج عمر فرآه موليا عن بابه فناداه وقال: ما حاجتك أيها الرجل؟فقال: يا أمير المؤمنين جئت أشكو إليك سوء خلق امرأتي واستطالتها عَلَيّ فسمعت زوجتك كذلك فرجعت وقلت: إذا كان هذا حال أمير المؤمنين مع زوجته فكيف حالي ؟قال عمر ـ يا أخي اسمع لمواقفهم رضوان الله تعالى عليهم ـ يا أخي إني أحتملها لحقوق لها عليّ إنها لطباخة لطعامي، خبازة لخبزي، غسالة لثيابي، مرضعة لولدي وليس ذلك كله بواجب عليها ويسكن قلبي بها عن الحرام فأنا أحتملها لذلك ، فقال الرجل: يا أمير المؤمنين وكذلك زوجتي قال عمر: فاحتملها يا أخي فإنما هي مدة يسيرة (فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا)  (عشرة النساء للنسائي)

 உமர் ரழி அவர்களிடம் ஒருவர் தன் மனைவியின் கெட்ட குணம் பற்றி முறையிட வந்தார். வீட்டை அடைந்தவுடன் உமர் ரழி அவர்கள் வெளியே வருவதை எதிர் பார்த்து வாசலில் காத்திருந்தார். அப்போது வீட்டுக்குள் உமர் ரழி அவர்களின் மனைவி உமர் ரழி அவர்களைத் திட்டுவதையும் அதைக் கேட்டும் உமர் ரழி அவர்கள் பதில் எதுவும் பேசாமல் மவுனமாக இருப்பதையும் கண்டு உமர் ரழி அவர்களின் நிலையே இது என்றால் என்னுடைய நிலை எவ்வளவோ பரவாயில்லை என்று எண்ணி வீட்டுக்குத் திரும்பினார். அப்போது உமர் ரழி அவர்கள் அவரைப் பார்த்து விட்டார்கள். அவரை அழைத்து எதற்காக வந்தீர்கள் என்று கேட்க, அதற்கு அவர் என் மனைவியின் கெட்ட குணம் பற்றி முறையிட வந்தேன். ஆனால் இங்கு வந்ததும் என்னுடைய நிலை எவ்வளவோ பரவாயில்லை என்று எண்ணி வீட்டுக்குத் திரும்பினேன் என்றும் கூறினார். அப்போது உமர் ரழி அவர்கள் அவரிடம் சகோதரரே நன்றாக நான் சொல்வதைக் கேளுங்கள். மனைவியின் மீது எனக்குள்ள கடமைகள் அடிப்படையில் நான் அவள் பேசுவதை சில நேரம் சகித்துக் கொள்கிறேன். என் மனைவி எனக்காக உணவு சமைக்கிறாள். துணி துவைக்கிறாள். என் குழந்தைக்கு பாலூட்டுகிறாள். இதுவெல்லாம் அவள் மீது கடமை இல்லாமலேயே அவள் செய்கிறாள் இத்தனைக்கும் மேலாக அவளால் தான் என்னுடைய உள்ளம் மற்ற பெண்களின் மீது ஹராமான முறையில் அலைபாயாமல் நிலை பெறுகிறது. இத்தனை விஷயங்களுக்காக நான் நான் அவள் பேசுவதை சில நேரம் சகித்துக் கொள்கிறேன் என்று கூற, அதற்கு அந்த மனிதர் என் மனைவியும் அவ்வாறே எனக்காக மற்ற பணிவிடைகள் அனைத்தும் செய்கிறாள் எனினும் வாய் அதிகம் என்று கூற அதற்கு உமர் ரழி நீர் சற்று பொறுத்துக் கொள்ள வேண்டும். இதுவெல்லாம் துன்யாவுடைய கொஞ்ச கால வாழ்க்கை தான் என்றார்கள். பிறகு அந்தப் பெண்களின் சில குணங்களை நீங்கள் வெறுத்தாலும் வேறு சில நல்ல குணங்களை வைத்து பொருந்திக் கொள்ள வேண்டும். எனவும் அறிவுரை கூறினார்கள்.                                         

கணவனின் கண்ணுக்கு மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவது போன்று மனைவியின் கண்ணுக்கு கணவனும் ஷரீஅத்திற்கு மாற்றமில்லாமல் தன்னை அழகாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

قال [ابن عباس]: إني لأتزين لامرأتي كما تتزين لى وما أحب أن أستطف كل حقي الذي لي عليها فتستوجب حقها الذي لها عليَّ لأن الله تعالى يقول: (ولهن مثل الذي عليهن بالمعروف) وقد دخل على الخليفة عمر زوج أشعت أغبر ومعه امرأته وهي تقول: لا أنا ولا هذا لا تريده .. ، فعرف كراهية المرأة لزوجها فأرسل الزوج ليستحم ويأخذ من شعر رأسه ويقلم أظافره فلما حضر أمره أن يتقدم من زوجته فاستغربته ونفرت منه ثم عرفته فقَبِلَتْ به ورجعت عن دعواها رجعت تراجعت إذن عن طلب الطلاق فقال عمر: وهكذا فاصنعوا لهن فوالله إنهن ليحببن أن تتزينوا لهن كما تحبون أن يتزين لكم  (الكتاب : عشرة النساء للنسائي)

  இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் கூறினார்கள் எனக்காக என் மனைவி அலங்காரம் செய்வது போன்று நான் என் மனைவிக்காக அலங்கரித்துக் கொள்வதை விரும்புகிறேன். என் மீது மட்டும் அவளுக்குக் கடமைகள் உள்ளது. அவள் மீது எனக்குக் கடமைகள் எதுவும் இல்லை என்பதை நான் விரும்பவில்லை. காரணம் அல்லாஹ் குர்ஆனில் அந்தப் பெண்களின் மீது உங்களுக்கும் சில கடமைகள் உள்ளது என்று கூறுகிறான். உமர் ரழி அவர்களிடம் தலைவிரி கேலமாக அழுக்கான ஆடையுடன் ஒருவர் மனைவியுடன் வந்தார். அவரிடமிருந்து அப்பெண் விவாகரத்துக் கேட்கிறார் என்பதையும் எதற்காக விவாகரத்துக் கெட்கிறார் என்பதையும் புரிந்து கொண்ட உமர் ரழி அவர்கள் அந்தக் கணவரிடம் முதலில் உன்னை நீ நன்றாக சுத்தப்படுத்திக் கொண்டு வரும்படியும், அழகான ஆடையை அணிந்து வர வேண்டும் என்றும் தலைமுடியை நன்றாக வாரி வர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்கள். அவர் அவ்வாறே செய்தார். அவர் திரும்பி வந்த பின் அவரை மனைவிக்கு முன்னால் வந்து நிற்கச் சொன்னார்கள். அந்த மனைவி அந்தக் கோலத்தில் அவரைப் பார்த்த பின்பு முதலில் மறுத்தாலும் சற்று நேரத்தில் மனம் மாறி விவாகரத்துக் கேட்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டார். அப்போது தான் உமர் ரழி அவர்கள் அந்தக் கணவரிடம். உங்கள் கண்ணுக்கு மனைவி அழகாக இருக்க வேண்டும் என விரும்புவது போன்று மனைவியின் கண்ணுக்கு நீங்கள் அழகாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள் என்று கூறினார்கள்.

وقال [يحيى بن عبد الرحمن الحنظلي]: أتيت [محمد بن الحنفية] فخرج إلى في ملحفة حمراء ولحيته تقطر من الغالية ، والغالية هي خليط الأطياب بل خليط أفضل الأطياب ، ولحيته تقطر من الغالية ، يقول يحيى فقلت له: ما هذا ؟ قال محمد : إن هذه الملحفة ألقتها على امرأتى ودهنتنى بالطيب وإنهن يشتهين منا ما نشتهيه منهن ، ذكر ذلك القرطبي في تفسيره الجامع لأحكام القرآن (عشرة النساء للنسائي)

யஹ்யா ரஹ் அவர்கள் கூறினார்கள் நான் முஹம்மது இப்னு ஹனஃபிய்யா ரஹ் அவர்களிடம் வருகை தந்தபோது அவர்கள் அழகான நீண்ட அங்கியை அணிந்தவர்களாகவும் மிகச்சிறந்த நறுமணம் தடவியவர்களாகவும் இருந்தார்கள். அந்த நறுமணம் தாடியிலும் வடிந்த படி இருந்தது. அதுபற்றி அவர்களிடம் நான் கேட்டபோது இந்த ஆடையை என் மனைவி எனக்கு அணிவித்தார். இந்த நறுமணத்தையும் அவரே எனக்குத் தடவி விட்டார். நம் கண்ணுக்கு முன்னால் நம் மனைவிமார்கள் அழகாக இருக்க வேண்டும் என நாம் விரும்புவது போல மனைவியின் கண்ணுக்கு முன்னால் நாம் அழகாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவது இயல்பு தானே என்றார்கள்.

மனைவி வாயாடியாக இருந்தாலும் அனுசரித்துப் போகும் கணவனுக்கு சிறப்பு உண்டு

وعن لقيط بن صبرة قال : قلت : يا رسول الله إن لي امرأة في لسانها شيء يعني البذاء قال : " طلقها " . قلت : إن لي منها ولدا ولها صحبة قال : " فمرها " يقول عظها " فإن يك فيها خير فستقبل ولا تضربن ظعينتك ضربك أميتك " . رواه أبو داود

மனைவி என்பவள் வாழ்க்கைத் துணைவி தானே தவிர அடிமை அல்ல

சில கூட்டுக் குடும்பங்களில் இந்தப் பிரச்சினைகள் உள்ளன. கணவன் குடும்பத்தில் நாத்தனார், மாமனார், மாமியார் என அனைவருக்குமான வேலையை புதிதாக வந்த மருமகளிடமே ஒப்படைத்து விட்டு அவள் தான் வேலை செய்ய வேண்டும் என்று கட்டாயப் படுத்துவார்கள்.   

وَتُفْرَضُ عَلَى الزَّوْجِ إذَا كَانَ مُوسِرًا نَفَقَةُ خَادِمِهَا . وَهَذَا عِنْدَ أَبِي حَنِيفَةَ وَمُحَمَّدٍ . وَقَالَ أَبُو يُوسُفَ : تُفْرَضُ لِخَادِمَيْنِ لِأَنَّهَا تَحْتَاجُ إلَى أَحَدِهِمَا لِمَصَالِحِ الدَّاخِلِ وَإِلَى الْآخَرِ لِمَصَالِحِ الْخَارِجِ .(هداية) باب النفقة

கணவன் வசதி படைத்தவனாக இருந்தால் மனைவியின் பணியாளருக்கான செலவினங்களும் அவன் மீது கடமையாகும். இக்கருத்து இமாம் அபூஹனீஃபா ரஹ் மற்றும் இமாம் முஹம்மது ரஹ் ஆகியோரின் கருத்தாகும் ஆனால் இமாம் அபூயூசுஃப்  ரஹ் அவர்களின் கருத்து கணவன் வசதி படைத்தவனாக இருந்தால் மனைவியின் இரண்டு பணியாளருக்கான செலவினங்கள் அவன் மீது கடமையாகும். ஒரு பணியாளர் (பெண் பணியாளர்) வீட்டின் உள் வேலைகளை கவனிப்பதற்காக மற்றொரு பணியாளர் வெளி வேலைகளை (மளிகைப் பொருட்கள் வாங்கி வருவது) போன்ற வேலைகளை கவனிப்பதற்காக...-ஹிதாயா

     وقوله في الكتاب إذا كان موسرا إشارة إلى أنه لا تجب نفقة الخادم عند إعساره وهو رواية الحسن عن أبي حنيفة رحمه الله وهو الأصح

கணவன் ஏழையாக இருப்பின் மனைவிக்கு உதவியாளர் வைத்துக்கொள்வது கணவனுக்கு கடமையில்லை

وأما أن تجبر المرأة على شيء من الخدمة فلا أصل له بل الإجماع منعقد على أن على الزوج مؤنة الزوجة كلها ونقل الطحاوي الإجماع على أن الزوج ليس له إخراج خادم المرأة من بيته فدل على أنه يلزمه نفقة الخادم على حسب الحاجة إليه وقال الشافعي والكوفيون يفرض لها ولخادمها النفقة إذا كانت ممن تخدم  (فتح الباري

மனைவியை எந்த ஒரு பணிவிடைக்கும் கட்டாயப் படுத்துவதற்கு மார்க்கத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை. மனைவிக்கான அனைத்து செலவினங்களுக்கும் பொறுப்பு கணவன் தான் ஏற்க வேண்டும் அதன்படி இமாம் தஹாவீ ரஹ் அவர்கள் கூறும்போது மனைவிக்கு உதவியாக யாரேனும் உதவியாளரை வைத்துக் கொள்ளாமல் மனைவியே அத்தனை வேலைகளையும் செய்யட்டும் என இருப்பது கணவனுக்கு அறவே கூடாது. ஃபத்ஹுல் பாரீ

படிப்பினை- மேற்படி சட்டம் கணவன் மனைவி பிள்ளைகள் மட்டுமே இருக்கும் ஒரு குடும்பத்திற்கான சட்டமாகும். மேற்படி குடும்பத்தில் கணவன் வசதி படைத்தவனாக இருந்தால் மனைவியின் இரண்டு பணியாளருக்கான செலவினங்கள் அவன் மீது கடமை எனும்போது கூட்டுக் குடும்பத்தில் அனைத்து வேலைகளையும் மனைவியின் மீது பொறுப்பு சுமத்தலாமா என்று சிந்திக்க வேண்டும்.             

தன் குழந்தைக்கு மனைவி தாய்ப்பால் தர மறுத்து விட்டால் அதற்கான வாடகைத் தாயை கணவன் ஏற்படுத்த வேண்டும்.

وَالْوَالِدَاتُ يُرْضِعْنَ أَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ لِمَنْ أَرَادَ أَنْ يُتِمَّ الرَّضَاعَةَ وَعَلَى الْمَوْلُودِ لَهُ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ لَا تُكَلَّفُ نَفْسٌ إِلَّا وُسْعَهَا لَا تُضَارَّ وَالِدَةٌ بِوَلَدِهَا وَلَا مَوْلُودٌ لَهُ بِوَلَدِهِ (233) البقرة

அதற்காக மனைவி எந்த வேலைகளையும் செய்ய வேண்டாம் என்பதல்ல. மனைவிக்கு உதவியாக பணியாளர்களை அமர்த்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

عن مالك أن خدمة البيت تلزم المرأة ولو كانت الزوجة ذات قدر وشرف إذا كان الزوج معسرا قال ولذلك ألزم النبي صلى الله عليه و سلم فاطمة بالخدمة الباطنة وعليا بالخدمة الظاهرة       (فتح الباري

இமாம் மாலிக் ரஹ் அவர்கள் கூறும்போது மனைவி என்ன தான் வசதி படைத்த குடும்பத்தைச் சார்ந்த பெண்ணாக இருந்தாலும் வசதியற்ற கணவனுக்கு மனைவியாக அவள் வாழும் சூழ்நிலை ஏற்பட்டால் வீட்டு வேலைகளை அவளும் வெளி வேலைகளை கணவனும் கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த சூழ்நிலையில் வெளி வேலைகளுக்குக் கணவன் பொறுப்பேற்க வேண்டும். இதனடிப்படையில் தான் நபி ஸல் அவர்கள் தன்னுடைய மகள் ஃபாத்திமா ரழி அவர்கள் தன்னுடைய வேலைச் சுமையை நபி ஸல் அவர்களிடம் வந்து முறையிட்ட போது வீட்டு வேலைகளை ஃபாத்திமா ரழி அவர்களும் வெளி வேலைகளை அலீ ரழி அவர்களும் கவனித்துக் கொள்ள ஏவினார்கள்.                    

தஸ்பீஹ் ஃபாத்திமா ரழி உடைய சம்பவத்தை இந்த இடத்தில் ஞாபகப் படுத்தலாம்.

தன் மீது கடமை இல்லா விட்டாலும் கணவனின் உறவினர்களை அனுசரித்து வாழும் மனைவிக்கு சிறப்பு

عَنْ جَابِرِ رَضِيَ اللَّهُ عَنْهُ  قَالَ هَلَكَ أَبِي وَتَرَكَ سَبْعَ بَنَاتٍ أَوْ تِسْعَ بَنَاتٍ فَتَزَوَّجْتُ امْرَأَةً ثَيِّبًا فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجْتَ يَا جَابِرُ فَقُلْتُ نَعَمْ فَقَالَ بِكْرًا أَمْ ثَيِّبًا قُلْتُ بَلْ ثَيِّبًا قَالَ فَهَلَّا جَارِيَةً تُلَاعِبُهَا وَتُلَاعِبُكَ وَتُضَاحِكُهَا وَتُضَاحِكُكَ قَالَ فَقُلْتُ لَهُ إِنَّ عَبْدَ اللَّهِ هَلَكَ وَتَرَكَ بَنَاتٍ وَإِنِّي كَرِهْتُ أَنْ أَجِيئَهُنَّ بِمِثْلِهِنَّ فَتَزَوَّجْتُ امْرَأَةً تَقُومُ عَلَيْهِنَّ وَتُصْلِحُهُنَّ فَقَالَ بَارَكَ اللَّهُ لَكَ أَوْ قَالَ خَيْرًا (بخاري5367

  ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:(என் தந்தை) அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (உஹுதுப் போரில்) இறந்துவிட்டார்கள். (இறக்கும்போது) ஒன்பது பெண் மக்களை (அல்லது ஏழு பெண் மக்களை) விட்டுச் சென்றார்கள். ஆகவே, (கன்னி கழிந்த) ஒரு பெண்ணை நான் மணமுடித்துக்கொண்டேன். அப்போது என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஜாபிரே! நீ மணமுடித்துக் கொண்டாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அதற்கு "கன்னிப் பெண்ணையா, கன்னி கழிந்த பெண்ணையா (யாரை மணந்தாய்)?" என்று கேட்டார்கள். நான் "இல்லை; கன்னி கழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்), அல்லாஹ்வின் தூதரே!" என்று பதிலளித்தேன்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,"கன்னிப் பெண்ணை மணந்து "நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கொஞ்சிக் குலவி விளையாடலாமே" அல்லது "நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே" என்று கேட்டார்கள்.அதற்கு நான்,"(என் தந்தை) அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் "ஒன்பது" அல்லது "ஏழு" பெண் மக்களை விட்டுவிட்டு இறந்துவிட்டார்கள். (வயதில்) அவர்களையொத்த ஒரு (இளவயதுப்) பெண்ணை (மணமுடித்து) அவர்களிடம் அழைத்துச் செல்வதை நான் விரும்பவில்லை; அவர்களைப் பராமரித்துச் சீராகப் பேணி நிர்வகிக்கும் (பக்குவமுள்ள) ஒரு பெண்ணையே (அவர்களிடம்) அழைத்துச் செல்ல நான் விரும்பினேன்" என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் உனக்கு "பரக்கத் செய்வானாக" என்று, அல்லது "நல்ல வார்த்தையை" என்னிடம் கூறினார்கள்.

படிப்பினை- அல்லாஹ் உனக்கு "பரக்கத் செய்வானாக" என்ற துஆ அந்த மனைவிக்கும் பொருந்தும்

சிரமப்படும் கணவனுக்கு எல்லா வகையிலும் உதவியாக இருந்த ஒரு மனைவிகளைப் பற்றிய சம்பவம்

கதீஜா ரழி அவர்கள் ஹிரா குகைக்குச் சென்று உணவு கொடுத்து வந்த சம்பவம்- அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நோயின் போது உதவியாக இருந்த அவர்களின் மனைவி ரஹீமா அலை அவர்களைப் பற்றி..

وروى ابن سعد في "الطبقات" (8/ 197) بسند صحيح عَنْ عِكْرِمَةَ:  " أَنَّ أَسْمَاءَ بِنْتَ أَبِي بَكْرٍ كَانَتْ تَحْتَ الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ. وَكَانَ شَدِيدًا عَلَيْهَا، فَأَتَتْ أَبَاهَا فَشَكَتْ ذَلِكَ إِلَيْهِ فَقَالَ: " يَا بُنَيَّةُ اصْبِرِي فَإِنَّ الْمَرْأَةَ إِذَا كَانَ لَهَا زَوْجٌ صَالِحٌ ثُمَّ مَاتَ عَنْهَا فَلَمْ تَزَوَّجْ بَعْدَهُ ، جُمِعَ بَيْنَهُمَا فِي الْجَنَّةِ ".

மனைவியின் சம்பாத்தியத்தில் சோம்பேறிகளாக வீட்டில் பொழுதைக் கழிக்கும் ஆண்களுக்கு எச்சரிக்கை

عَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ الْمُجَاشِعِىِّ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ...... وَأَهْلُ النَّارِ خَمْسَةٌ الضَّعِيفُ الَّذِى لاَ زَبْرَ لَهُ الَّذِينَ هُمْ فِيكُمْ تَبَعًا لاَ يَتْبَعُونَ أَهْلاً وَلاَ مَالاً وَالْخَائِنُ الَّذِى لاَ يَخْفَى لَهُ طَمَعٌ وَإِنْ دَقَّ إِلاَّ خَانَهُ وَرَجُلٌ لاَ يُصْبِحُ وَلاَ يُمْسِى إِلاَّ وَهُوَ يُخَادِعُكَ عَنْ أَهْلِكَ وَمَالِكَ ». وَذَكَرَ الْبُخْلَ أَوِ الْكَذِبَ « وَالشِّنْظِيرُ الْفَحَّاشُ ». (مسلم

 ஐந்து விதமான நபர்கள் நரகவாதிகள் 1, புத்தி சாதுர்யம் இல்லாத பலவீனமானவர். (சோம்பேறி) இவருக்கென சுய சம்பாத்தியம் இல்லாமல் எப்போதும் உங்களைப் பின் தொடர்வார். இப்படிப்பட்டவர்கள் குடும்பத்தையும் தேட மாட்டார்கள்.சம்பாதிக்கும் வழியையும் தேட மாட்டார்கள். 2 எந்த ஆசையையும் விட்டு வைக்காத மோசடிக்காரன்- (இவன் அடுத்தவர்களை ஏமாற்றியே தனது எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்வான்.) அற்பமான பொருளாக இருந்தாலும் இவன் அடுத்தவர்களை ஏமாற்றித் தான் அதை அடைவான் 3, (கூடவே இருந்து குழி பறிக்கும்) துரோகி- இவன் காலையிலும், மாலையிலும் (எந்த நேரமும்) உன்னுடைய பொருள் விஷயத்திலும், உன் வீட்டார் விஷயத்திலும் உனக்கு துரோகம் செய்வான். 4,கஞ்சன் அல்லது பொய்யன் 5,அசிங்கமான வார்த்தைகளைப் பேசும் ஒழுக்கமற்றவன்

சுய சம்பாத்திம் இல்லாமல் அடுத்தவரை அண்டி வாழும் சோம்பேறியைப் பற்றி கூறப்பட்ட இந்த ஹதீஸ் மனைவியின் சம்பாத்தியத்தில் சோம்பேறிகளாக, குடிகாரர்களாக வீட்டில் பொழுதைக் கழிக்கும் ஆண்களுக்கும் பொருந்தும்.              

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...