என்பதையும் புது வீடு கட்டுபவர்கள் செய்யும் தேவையற்ற
சடங்குகளையும் ஷிர்க்கான காரியங்களையும் உள்ளடக்கி எடுக்கப்பட்ட தலைப்பு.
என்ன தான் வெளியில் பல சவுகரியங்கள் இருந்தாலும் வீட்டுக்கு
வந்தவுடன் கிடைக்கும் நிம்மதி..
وَاللَّهُ جَعَلَ لَكُمْ مِنْ بُيُوتِكُمْ سَكَنًا وَجَعَلَ
لَكُمْ مِنْ جُلُودِ الْأَنْعَامِ بُيُوتًا تَسْتَخِفُّونَهَا يَوْمَ ظَعْنِكُمْ
وَيَوْمَ إِقَامَتِكُمْ..(80)النحل
பல்வேறு அலுவல்களுக்காக வெளியே செல்லும் ஆண்களுக்கு
வீட்டுக்கு வந்தால் ஒரு நிம்மதி ஏற்படுவது இயல்பு. சில நேரம் வீட்டிலுள்ளவர்களுடைய
தீயகுணத்தால் நிம்மதி இல்லாமல் போகலாம். அதற்கு இவ்வசனம் முரணல்ல.
ஹராமான சம்பாத்தியத்தில் வீடு
கட்டக்கூடாது
عَنِ ابْنِ عُمَرَ رضي الله عنه
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: اتَّقُوا الْحَرَامَ فِي الْبُنْيَانِ فَإِنَّهُ
أَسَاسُ الْخَرَابِ(شعب الايمان)أي لخراب الدين أو البنيان
வீடு கட்டுவதில் ஹராமை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில்
அது அழிவுக்கான அஸ்திவாரமாகும்.
ஆடம்பரமாக வீடு
கட்டுவோரின் கவனத்திற்கு....
عن أَبي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ إِذَا تَطَاوَلَ رِعَاءُ
الْبَهْمِ فِي الْبُنْيَانِ (بخاري) باب مَا جَاءَ فِى الْبِنَاءِ- الاستئذان
ஆடு மாடு
மேய்ப்பவர்களும் உயரமான கட்டிடங்களைக் கட்டுவது கியாமத் நாளின் அடையாளங்களில்
ஒன்றாகும்.
கருத்து- ஒரு காலத்தில்
ஏழைகளாக இருந்தவர்களும் வெகு சீக்கிரத்தில் செல்வந்தர்களாக மாறி மிகப் பெரும்
வீட்டைக் கட்டுவார்கள் என்ற கருத்தும் அடங்கும். டீ விற்றவர் பிரதமராக இருப்பது
போன்று..
عَنْ أَنَسِ رضي
الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ فَرَأَى قُبَّةً مُشْرِفَةً
فَقَالَ مَا هَذِهِ قَالَ لَهُ أَصْحَابُهُ هَذِهِ لِفُلَانٍ رَجُلٍ مِنْ
الْأَنْصَارِ قَالَ فَسَكَتَ وَحَمَلَهَا فِي نَفْسِهِ حَتَّى إِذَا جَاءَ
صَاحِبُهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ يُسَلِّمُ عَلَيْهِ فِي النَّاسِ أَعْرَضَ عَنْهُ
صَنَعَ ذَلِكَ مِرَارًا حَتَّى عَرَفَ الرَّجُلُ الْغَضَبَ فِيهِ وَالْإِعْرَاضَ
عَنْهُ فَشَكَا ذَلِكَ إِلَى أَصْحَابِهِ فَقَالَ وَاللَّهِ إِنِّي لَأُنْكِرُ
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالُوا خَرَجَ فَرَأَى قُبَّتَكَ قَالَ فَرَجَعَ الرَّجُلُ إِلَى قُبَّتِهِ
فَهَدَمَهَا حَتَّى سَوَّاهَا بِالْأَرْضِ فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ فَلَمْ يَرَهَا قَالَ
مَا فَعَلَتْ الْقُبَّةُ قَالُوا شَكَا إِلَيْنَا صَاحِبُهَا إِعْرَاضَكَ عَنْهُ
فَأَخْبَرْنَاهُ فَهَدَمَهَا فَقَالَ أَمَا إِنَّ كُلَّ بِنَاءٍ وَبَالٌ عَلَى
صَاحِبِهِ إِلَّا مَا لَا إِلَّا مَا لَا يَعْنِي مَا لَا بُدَّ مِنْهُ
(ابوداود)بَاب مَا جَاءَ فِي الْبِنَاءِ-
كِتَاب الْأَدَبِ
நபி(ஸல்) அவர்கள் வெளியே புறப்பட்டபோது உயரமான
கட்டிடத்தைப் பார்த்தார்கள். இது என்ன என்று விசாரித்த போது இது இன்ன
அன்சாரித்தோழரின் வீடு என நபித்தோழர்கள் கூறினார்கள். அதைக் கேட்டு மவுனமாக
இருந்து விட்ட நபி(ஸல்) அவர்கள் அதை
மனதில் வைத்துக் கொண்டார்கள். பிறகு அதன் உரிமையாளர் வந்து அனைவர் முன்னிலையும
ஸலாம் கூறிய போது நபி(ஸல்) அவர்கள்
அவரைப் புறக்கணித்தார்கள். இவ்வாறே பல தடவைகள் செய்தார்கள்.இறுதியில் அவர் தன்
மீது நபி(ஸல்) அவர்கள் கோபமாக
இருப்பதையும் அதனால் தான் புறக்கணித்து விட்டார்கள் என்பதையும் அறிந்து நான் நபி (ஸல்) அவர்களை ஏதோ கோபப்படுத்தியுள்ளேன் அது என்ன
என்று தோழர்களிடம் கேட்டார். அப்போது தோழர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் வெளியே புறப்பட்டபோது உமது உயரமான
கட்டிடத்தைப் பார்த்தார்கள் என்று கூற, உடனே அவர் அங்கிருந்து புறப்பட்டு தனது
அந்த உயரமான கட்டிடத்திற்கு வந்து அதை இடித்துத் தரை மட்டமாக்கி விட்டார். பிறகு
மற்றொரு நாள் நபி(ஸல்) அவர்கள் வெளியே
புறப்பட்டபோது அந்தக் கட்டிடத்தைக் காணாமல் இந்த உயரமான கட்டிடம் என்ன ஆனது என்று
தோழர்களிடம் கேட்டார்கள். அப்போது தோழர்கள் அதன் உரிமையாளர் தாங்கள் புறக்கணித்தது
பற்றி எங்களிடம் முறையிட்டார். நாங்கள் விஷயத்தைக் கூறினோம். உடனே அதை அவர்
இடித்து விட்டார் என்று கூறினார்கள்.
அப்போது
நபி(ஸல்) அவர்கள்
நிச்சயமாக தேவைக்கு மீறியதாக கட்டப்பட்ட ஒவ்வொரு கட்டிடமும் அதன் உரிமையாளருக்கு
அது கேடாகவே அமையும் என்று கூறினார்கள்.
படிப்பினை
1- தேவையை விட அதிகமாக வீடு கட்டுபவர்களைப் பற்றித் தான் இங்கு கூறப்பட்டுள்ளது.
படிப்பினை-
2 வீடு கட்டிய அந்த நபித் தோழரின் உள்ளத்தில் நபி ஸல் அவர்களின் அதிருப்திக்கு
ஆளாகி விடக் கூடாது என்ற சிந்தனை மட்டுமே அதிகம் இருந்தது. அவர் எண்ணியிருந்தால்
கட்டிடத்தின் உயரமான பகுதியை மட்டும் இடித்திருக்கலாம். ஆனால் அவர் நபி(ஸல்) அவர்களின் மீதுள்ள பிரியத்தின் காரணமாக கட்டிடத்தையே இடித்துத் தரை மட்டமாக்கி
விட்டார்.
عَنْ وُهَيْبِ بْنِ الْوَرْدِ قَالَ: بَنَى نُوحٌ عليه السلام بَيْتًا مِنْ
قَصَبٍ فَقِيلَ لَهُ: لَوْ بَنَيْتَ غَيْرَ هَذَا فَقَالَ:هَذَا كَثِيرٌ لِمَنْ
يَمُوتُ (شعب الايمان)
நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் வெறும் மூங்கில் குச்சிகளால் வீடு
கட்டியபோது அவர்களிடம் நீங்கள் இதை விட நல்ல கட்டிடத்தைக் கட்டியிருக்கலாமே என்று
கேட்கப்பட்டது அதற்கு அவர்கள் சீக்கிரத்தில் மரணமாகி விடக் கூடிய ஒருவருக்கு இதுவே
அதிகம் என்றார்கள்.
ஆடம்பரமாக வீடு கட்டிய
காஃபிரான அரசரை திருத்தி, முஸ்லிமாக்கிய சம்பவம்
عَنْ عَوْنِ بْنِ عَبْدِ اللهِ " أَنَّ مَلَكًا ابْتَنَى
مَدِيَنَتَهُ، فَتَنَوَّقَ فِي بِنَائِهَا، وَصَنَعَ طَعَامًا، وَدَعَا النَّاسَ،
فَأَقْعَدَ نَاسًا عَلَيْهَا عَلَى أَبْوَابِهَا يَسْأَلُونَ كُلَّ مَنْ مَرَّ
بِهِمْ: هَلْ رَأَيْتُمْ عَيْبًا؟ فَيَقُولُونَ:لَا, حَتَّى كَانَ آخِرُ مَنْ
مَرَّ بِهِمْ شَبَابٌ عَلَيْهِمْ أَكْسِيَةٌ فَقَالَ لَهُمْ: هَلْ رَأَيْتُمْ
عَيْبًا؟ قَالُوا:رَأَيْنَا عَيْبَيْنِ اثْنَيْنِ فَحَبَسُوهُمْ وَدَخَلُوا عَلَى
الْمَلِكِ فَذَكَرُوا لَهُ ذَلِكَ قَالَ:مَا كُنْتُ أَرْضَى بِوَاحِدَةٍ
فَأَدْخِلُوهُمْ فَأَدْخَلُوهُمْ عَلَيْهِ قَالَ: رَأَيْتُمْ عَيْبًا ؟ قَالُوا:
رَأَيْنَا عَيْبَيْنِ اثْنَيْنِ قَالَ:
مَا كُنْتُ أَرْضَى بِوَاحِدَةٍ فَمَا هُمَا ؟ قَالُوا: يُخَرَّبُ وَيَمُوتُ
صَاحِبُهَا قَالَ: فَتَعْلَمُونَ دَارًا لَا يُخَرَّبُ وَلَا يَمُوتُ صَاحِبُهَا ؟
قَالُوا: نَعَمْ، الْجَنَّةُ قَالَ: فَدَعَوْهُ (أي الي الاسلام) فَاسْتَجَابَ،
فَقَالَ: إِنْ خَرَجْتُ مَعَكُمْ عَلَانِيَةً لَمْ يَدَعَنِي أَهْلُ مَمْلَكَتِي،
فَوَاعَدَهُمْ مِيعَادًا فَتَنَكَّرَ وَخَرَجَ مَعَهُمْ، وَكَانَ يَتَعَبَّدُ
مَعَهُمْ، قَالَ: فَبَيْنَا هُوَ ذَاتَ يَوْمٍ إِذْ قَالَ: عَلَيْكُمُ السَّلَامُ
. قَالُوا: مَا لَكَ ؟ رَأَيْتَ مِنَّا شَيْئًا تَكْرَهُهُ ؟ قَالَ: لَا، وَلَكِنْ
أَنْتُمْ تَعْرِفُونَ حَالِي الَّتِي كُنْتُ عَلَيْهَا، فَأَنْتُمْ
تُكْرِمُونَنِي، لِذَلِكَ أَنْطَلِقُ فَأَكُونَ مَعَ قَوْمٍ لَا يَعْرِفُونَ
حَالِي الَّتِي كُنْتُ عَلَيْهَا فَأَتَعَبَّدُ مَعَهُمْ (شعب الايمان)
முற்காலத்தின் ஒரு அரசர் (பெரிய மாளிகையை) நகரத்தை உருவாக்கினார். கட்டி முடித்தவுடன் மிகப் பெரிய விருந்துக்கு
ஏற்பாடு செய்து மக்களை அழைத்தார். மாளிகை வாசலில் சிலரை நியமித்து அதைக் கடந்து
செல்லும் ஒவ்வொருவரிடமும் தனது மாளிகையில் ஏதேனும் குறை உள்ளதா? என்று விசாரிக்கச் சொன்னார். (குறையேதும்) இல்லை என்றே அனைவரும் கூறினர்.இறுதியாக சில (முஃமினான) வாலிபர்கள் கடந்து சென்றார்கள். அவர்களிடம் அவ்வாறு கேட்க, அவர்கள்
இரண்டு குறைகள் உள்ளது என்றார்கள்.உடனே அவர்களை தடுத்து வைத்து அரசரிடம்
விஷயத்தைக் கொண்டு சென்றார்கள். அதற்கு
அரசர் என் வீட்டில் ஒரு குறை கூட இருக்கக்கூடாது என்று நான் எண்ணுகிறேன். அவர்களை
அழைத்து வாருங்கள் என்றார்.அவர்கள் வந்தவுடன் நான் கட்டிய மாளிகையில் என்ன
குறைகளைக் கண்டீர்கள் என்று கேட்க, அதற்கு அந்த வாலிபர்கள் இந்த மாளிகை என்றாவது
ஒருநாள் அழிவுக்கு உள்ளாக்கப்படும். அதன் உரிமையாளர் என்றாவது ஒருநாள் இறந்து
விடத்தான் போகிறார் என்றவுடன் (அந்த வார்த்தை அரசரின்
உள்ளத்தில் அது மாற்றத்தை ஏற்படுத்தியது. அவருக்கு இந்த வாலிபர்கள் மூலம்
ஹிதாயத்தை தர அல்லாஹ் நாடி விட்டான். அதற்கடுத்து) அவர்
நீங்கள் கூறுவது உண்மையானால் அழிவே இல்லாத வீட்டைப் பற்றி எனக்கு அறிவியுங்கள்
என்றார். சுவனம் என்று அவர்கள் பதில் கூறியதுடன் அந்த அரசரை இஸ்லாத்தின் பால்
அழைத்தார்கள். அவரும் ஏற்றுக் கொண்டார்.(இருந்தாலும் அவர்
அதை பகிரங்கப் படுத்த விரும்பவில்லை.)
(தங்களுடன் வந்து விடும்படி வாலிபர்கள் ஆர்வப்படுத்தியபோது
அவருக்கு அது விருப்பமாக இருந்தாலும்) நான் (முஸ்லிமாகி) உங்களோடு வந்தால் என் சமூக மக்கள் என்னை
விட்டு வைக்க மாட்டார்கள். எனவே
யாருக்கும் தெரியாமல் வருகிறேன் என்று ஒரு நேரத்தைக் கூறி அந்த நேரத்தில்
யாருக்கும் தெரியாமல் வந்து அவர்களுடன் இணைந்து கொண்டார். அவர்களுடன் இணைந்து
வணக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இருந்தாலும் அவர்களுடன் தங்குவதில்
அவருக்கு நெருடல் இருந்தது. அதை அறிந்து கொண்ட அவர்கள் உங்களிடம் ஏதோ
மனச்சங்கடத்தை நாங்கள் உணர்கிறோமே என்று கேட்டனர். அதற்கு அவர் என்னுடைய முந்தைய
நிலையைத் தெரிந்து என்னை நீங்கள் கண்ணியப் படுத்திகிறீர்கள். (இது எனக்குப் பிடிக்கவில்லை.) எனவே நான் என்னை யார்
என்று தெரிந்து கொள்ளாத கூட்டத்தாருடன் இணைந்து வணக்கத்தில் ஈடுபட விரும்புகிறேன்
என்று கூறினார்.
(அவ்வாறே அவர்களை
விட்டும் விலகிச் சென்று சிறந்த நல்லடியாராக விளங்கினார்.)
படிப்பினை- யாருக்கு எப்போது யார்
மூலமாக ஹிதாயத் கிடைக்கும் என்று கணிக்க முடியாது
வணக்கத்தை விளம்பரப்படுத்தும்
மக்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு நல்ல மனிதர் பிறர் தனக்கு கண்ணியம் செய்வதை
விரும்பாதவராக இருந்துள்ளார். இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் அவர்களின் வாழ்க்கையும்
இது போன்றது தான்.
நபி
ஸல் அவர்களின் மனைவிமார்கள் வீட்டு வாசலின் முகடுகள் கைகளால் தொடும் அளவுக்கு
இருந்தது
عن الْحَسَنَ يَقُولُ: " كُنْتُ أَدْخُلُ بُيُوتَ أَزْوَاجِ
النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي خِلَافَةِ عُثْمَانَ،
فَأَتَنَاوَلُ سُقُفَهَا بِيَدِي "(شعب الايمان)
ஹஸன்
ரழி அவர்கள் கூறினார்கள். நான் நபி ஸல் அவர்களின் மனைவிமார்கள் வீட்டு வாசலுக்குள்
நுழையும்போது அதன் முகடுகள் கைகளால் தொடும் அளவுக்கு இருந்தது
தேவைக்கு
அதிகமாக சிறிய கட்டிடம் கட்டிய அதிகாரியை இடமாற்றம் செய்து உத்தரவிட்ட உமர் ரழியல்லாஹு அன்ஹு
عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ، قَالَ: بَلَغَ عُمَرَ أَنَّ أَبَا الدَّرْدَاءِ
ابْتَنَى كَنِيفًا بِحِمْصَ، فَكَتَبَ:" أَمَّا بَعْدُ يَا عُوَيْمِرُ أَمَا
كَانَتْ لَكَ كِفَايَةٌ فِيمَا بَنَتِ الرُّومُ عَنْ تَزْيِينِ الدُّنْيَا، وَقَدْ
أَذِنَ اللهُ بِخَرَابِهَا، فَإِذَا أَتَاكَ كِتَابِي هَذَا، فَانْتَقِلْ مِنْ
حِمْصَ إِلَى دِمَشْقَ (شعب الايمان) كَنِيفًاகுளியலறை,
விளக்கம்-
உமர் ரழி அவர்களுக்குக் கீழ் அதிகாரியாக இருந்த அபுத்தர்தா ரழி அவர்கள் ஹிம்ஸ்
பகுதியில் ஒரே ஒரு குளியலறையை கட்டியதாக உமர் ரழி அவர்களுக்கு செய்தி கிடைத்தது.
உடனே உமர் ரழி அவர்களே கடிதம் எழுதினார்கள். அபூ உவைமிர் அவர்களே உலக அலங்காரத்தை
விட்டு விட்டு ஏற்கெனவே உங்களுக்கு முன் ஆட்சியில் இருந்த ரோமர்கள் கட்டி வைத்ததை
நீங்கள் போதுமாக்கிக் கொள்ளக் கூடாதா இந்தக் கடிதம் உங்களுக்குக் கிடைத்தவுடன்
நீங்கள் ஹிம்ஸ் பகுதியில் இருந்து
திமிஷ்க் நகரத்திற்கு இடம் மாறி விடுங்கள்
உருவப்படமும்,
நாயும் உள்ள வீட்டில் மலக்குகள் நுழைய மாட்டார்கள்.
நிர்பந்தம்
என்ற ரீதியில் இருந்தாலே தவிர
عَنْ عَائِشَةَ رَضِيَ
اللَّهُ قَالَتْ حَشَوْتُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وِسَادَةً فِيهَا تَمَاثِيلُ
كَأَنَّهَا نُمْرُقَةٌ فَجَاءَ فَقَامَ بَيْنَ الْبَابَيْنِ وَجَعَلَ يَتَغَيَّرُ
وَجْهُهُ فَقُلْتُ مَا لَنَا يَا رَسُولَ اللَّهِ قَالَ مَا بَالُ هَذِهِ
الْوِسَادَةِ قَالَتْ وِسَادَةٌ جَعَلْتُهَا لَكَ لِتَضْطَجِعَ عَلَيْهَا قَالَ
أَمَا عَلِمْتِ أَنَّ الْمَلَائِكَةَ لَا تَدْخُلُ بَيْتًا فِيهِ صُورَةٌ وَأَنَّ
مَنْ صَنَعَ الصُّورَةَ يُعَذَّبُ يَوْمَ الْقِيَامَةِ يَقُولُ أَحْيُوا مَا
خَلَقْتُمْ (بخاري) باب إِذَا قَالَ أَحَدُكُمْ آمِينَ- كتاب بدء الخلق-
ஆயிஷா
ரழி கூறினார்கள் நான் நபி ஸல் அவர்களுக்காக தலையணை ஒன்று தயார் செய்தேன். அதில் பூ
டிசைன் வடிவத்தில் உருவப்படங்கள் இருந்தன. நபி ஸல் அவர்கள் வருகை தந்து இரு
கதவுகளுக்கு நடுவிலேயே நின்று விட்டார்கள். உள்ளே வரவில்லை. மேலும் அவர்களின்
முகமும் மாறியது அப்போது நான் நாங்கள் என்ன தவறு செய்தோம் என்று கேட்க, அதற்கு நபி
ஸல் அவர்கள் இது என்ன தலையணை என்று கேட்டார்கள். தாங்கள் உறங்குவதற்காக இதை நான்
தயார் செய்தேன் என்று கூற, அதற்கு நபி ஸல் அவர்கள் எந்த வீட்டில் உருவப் படங்கள்
இருக்குமோ அந்த வீட்டில் ரஹ்மத்துடைய மலக்குகள் வர மாட்டார்கள் என்று உமக்குத்
தெரியாதா என்று கூறினார்கள். மேலும் யார் உருவப் படங்கள் வரைந்தாரோ அவரிடம்
மறுமையில் அதற்கு உயிர் கொடுங்கள் என்று கூறப்படும். அவரால் அதற்கு உயிர் தர முடியாது
அதற்காக அவர் வேதனைப்படுத்தப்படுவார்.
عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ قَالَ وَعَدَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جِبْرِيلُ
فَرَاثَ (أي أبطأ) عَلَيْهِ حَتَّى اشْتَدَّ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَرَجَ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ فَلَقِيَهُ فَشَكَا إِلَيْهِ
مَا وَجَدَ فَقَالَ لَهُ إِنَّا لَا نَدْخُلُ بَيْتًا فِيهِ صُورَةٌ وَلَا كَلْبٌ
(بخاري) باب لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ صُورَةٌ- كتاب اللباس
நபி
ஸல் அவர்களிடம் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் குறிப்பிட்ட நேரத்தில் வருவதாத
வாக்களித்தார்கள். ஆனால் அவ்வாறு குறித்த நேரத்தில் வரவில்லை. மிகவும்
தாமதமாக்கினார்கள். இது நபி ஸல் அவர்களுக்கு மிகவும் மனக் கஷ்டத்தை ஏற்படுத்தியது.
நபி ஸல் அவர்கள் வீட்டை விட்டும் வெளியேறிய போது தான் ஜிப்ரயீல் அலைஹிஸ் ஸலாம் அவர்களை
சந்தித்தார்கள். அப்போது தான் அனுபவித்த மனக்கஷ்டத்தைப் பற்றி முறையிட, அதற்கு ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள். எந்த
வீட்டில் உருவப் படங்களும் நாயும் இருக்குமோ அந்த வீட்டில் நாங்கள் நுழைய
மாட்டோம்.
عَنِ
ابْنِ عَبَّاسٍ قَالَ حَدَّثَتْنِى مَيْمُونَةُ زَوْجُ النَّبِىِّ -صلى الله عليه
وسلم- أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ « إِنَّ جِبْرِيلَ عَلَيْهِ
السَّلاَمُ كَانَ وَعَدَنِى أَنْ يَلْقَانِىَ اللَّيْلَةَ فَلَمْ يَلْقَنِى ». ثُمَّ
وَقَعَ فِى نَفْسِهِ جَرْوُ كَلْبٍ تَحْتَ بِسَاطٍ لَنَا فَأَمَرَ بِهِ فَأُخْرِجَ
ثُمَّ أَخَذَ بِيَدِهِ مَاءً فَنَضَحَ بِهِ مَكَانَهُ فَلَمَّا لَقِيَهُ جِبْرِيلُ
عَلَيْهِ السَّلاَمُ قَالَ إِنَّا لاَ نَدْخُلُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلاَ
صُورَةٌ..... (ابوداود
மற்றொரு
அறிவிப்பில் நபி ஸல் (அவர்களுக்கே தெரியாமல்) அவர்களின் வீட்டில் கட்டிலுக்குக் கீழ் இருந்த ஒரு நாயின் காரணமாகவே
ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் வீட்டுக்குள் வரவில்லை என்றும் அந்த நாய் அப்புறப்படுத்தி
அது இருந்த இடத்தில் தண்ணீரைத் தெளித்து சுத்தம் செய்தார்கள் என்றும் உள்ளது
அதற்குப்பின்புதான் ஜிப்ரயீல் அலைஹிஸ்
ஸலாம் அவர்களை சந்தித்தார்கள். அப்போது தான் எந்த வீட்டில் உருவப் படங்களும்
நாயும் இருக்குமோ அந்த வீட்டில் நாங்கள் நுழைய மாட்டோம் என ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம்
கூறினார்கள்.
விளக்கம்-
நிர்பந்தமான சூழ்நிலை காரணமாக நாம் அன்றாடம் வாங்கும் பொருட்களில் உருவப்படங்கள்
இல்லாமல் பெரும்பாலும் இருப்பதில்லை. அப்போது நாம் முடிந்த வரை அவற்றைப் பிரித்து
நமது பாத்திரங்களில் கொட்டி விட்டு உருவப் படங்கள் உள்ள பிளாஸ்டிக் கவர்களை
குப்பையில் போட்டு விடலாம்.
عَنْ عَلِيٍّ رضي الله عنه قَالَ صَنَعْتُ طَعَامًا فَدَعَوْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَ فَرَأَى فِي الْبَيْتِ تَصَاوِيرَ فَرَجَعَ (ابن
ماجة) وفي رواية أَنَّ رَجُلًا أَضَافَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ فَصَنَعَ لَهُ
طَعَامًا فَقَالَتْ فَاطِمَةُ لَوْ دَعَوْنَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَكَلَ مَعَنَا فَدَعَوْهُ فَجَاءَ فَوَضَعَ يَدَهُ عَلَى
عِضَادَتَيْ الْبَابِ فَرَأَى قِرَامًا فِي نَاحِيَةِ الْبَيْتِ فَرَجَعَ
فَقَالَتْ فَاطِمَةُ لِعَلِيٍّ الْحَقْ فَقُلْ لَهُ مَا رَجَعَكَ يَا رَسُولَ
اللَّهِ قَالَ إِنَّهُ لَيْسَ لِي أَنْ أَدْخُلَ بَيْتًا مُزَوَّقًا (ابن ماجة)
بَاب إِذَا رَأَى الضَّيْفُ مُنْكَرًا رَجَعَ- كِتَاب الْأَطْعِمَةِ
பள்ளி வாசலின் அருகே
குடியிருக்குதல், அல்து குடியிருப்புகளின் அருகே பள்ளி வாசலை உருவாக்குதல்
عَنْ
عَائِشَةَ رضقَالَتْ
أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبِنَاءِ
الْمَسَاجِدِ فِي الدُّورِ وَأَنْ
تُنَظَّفَ وَتُطَيَّبَ(أبوداود)باب اتِّخَاذِ الْمَسَاجِدِ
فِى الدُّورِ- الصَّلَاةِ
குடியிருப்புகள் உள்ள
இடத்தில் மஸ்ஜித் கட்டுவதற்கும் அதை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கும் நபி ஸல்
ஏவினார்கள்
அருகில் பள்ளிவாசல்
உருவாகும் வரை தொழுகைக்கு தூரமாக நடந்து செல்வது நன்மை தரும் செயல்
عَنْ جَابِرِ رضي الله عنه قَالَ خَلَتْ
الْبِقَاعُ حَوْلَ الْمَسْجِدِ فَأَرَادَ بَنُو سَلِمَةَ أَنْ يَنْتَقِلُوا إِلَى
قُرْبِ الْمَسْجِدِ فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُمْ إِنَّهُ بَلَغَنِي أَنَّكُمْ تُرِيدُونَ
أَنْ تَنْتَقِلُوا قُرْبَ الْمَسْجِدِ قَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَدْ
أَرَدْنَا ذَلِكَ فَقَالَ يَا بَنِي سَلِمَةَ دِيَارَكُمْ تُكْتَبْ آثَارُكُمْ
دِيَارَكُمْ تُكْتَبْ آثَارُكُمْ (مسلم)بَاب فَضْلِ كَثْرَةِ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ-كِتَاب
الْمَسَاجِدِ وَمَوَاضِعِ الصَّلَاةِ
புது வீடு
கட்டுபவர்களின் கவனத்திற்கு...
ஒவ்வொரு முஃமின்களின்
வீடுகளிலும் தொழுகைக்கு தனி அறை PREYER HALL, அல்லது தனி இடம்
ஏற்படுத்..
عن مَحْمُود
بْن الرَّبِيعِ الْأَنْصَارِيّ رضي
الله عنه أَنَّ عِتْبَانَ بْنَ مَالِكٍ وَهُوَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِمَّنْ شَهِدَ بَدْرًا مِنْ
الْأَنْصَارِ أَنَّهُ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
فَقَالَ يَا رَسُولَ اللَّهِ قَدْ أَنْكَرْتُ بَصَرِي وَأَنَا أُصَلِّي لِقَوْمِي
فَإِذَا كَانَتْ الْأَمْطَارُ سَالَ الْوَادِي الَّذِي بَيْنِي وَبَيْنَهُمْ لَمْ
أَسْتَطِعْ أَنْ آتِيَ مَسْجِدَهُمْ فَأُصَلِّيَ بِهِمْ وَوَدِدْتُ يَا رَسُولَ
اللَّهِ أَنَّكَ تَأْتِينِي فَتُصَلِّيَ فِي بَيْتِي فَأَتَّخِذَهُ مُصَلًّى قَالَ
فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَفْعَلُ إِنْ
شَاءَ اللَّهُ قَالَ عِتْبَانُ فَغَدَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ حِينَ ارْتَفَعَ النَّهَارُ فَاسْتَأْذَنَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَذِنْتُ لَهُ فَلَمْ يَجْلِسْ حَتَّى دَخَلَ
الْبَيْتَ ثُمَّ قَالَ أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ مِنْ بَيْتِكَ قَالَ
فَأَشَرْتُ لَهُ إِلَى نَاحِيَةٍ مِنْ الْبَيْتِ فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَبَّرَ فَقُمْنَا فَصَفَّنَا فَصَلَّى رَكْعَتَيْنِ
ثُمَّ سَلَّمَ(بخاري)667باب
الْمَسَاجِدِ فِى الْبُيُوتِ- كِتَاب الصَّلَاةِ
இத்பான் இப்னு மாலிக்
என்ற நபித்தோழர் பத்ருப் போரில் கலந்து கொண்ட அன்சாரித்தோழர் ஆவார். அவர் நபிஸல்
அவர்களிடம் வந்து என்னுடைய கண்பார்வை குறைந்து விட்டது. நான் என்னுடைய சமூக
மக்களுக்குத் தொழ வைக்கிறேன். மழை வந்தால் நான் செல்லும் வழியிலுள்ள
பள்ளத்தாக்குகளில் வெள்ளம் ஓடுகின்றன. நான் அவர்களின் மஸ்ஜிதுக்கு வந்து தொழ வைக்க
முடியாமல் ஆகி விடுகிறேன். எனவே தாங்கள் ஒரு நேரம் எனது வீட்டுக்கு வந்து ஒரு
இடத்தில் தொழுதால் அந்த இடத்தை என்னுடைய தொழுமிடமாக ஆக்கிக் கொண்டு வீட்டில்
தொழுது கொள்ள நினைக்கிறேன். தாங்கள் என் வீட்டிற்கு வர வேண்டும் என்றார்கள்.
அதற்கு நபி ஸல் அவர்கள் இன்ஷா அல்லாஹ் அவ்வாறே செய்கிறேன் என்றார்கள். இத்பான் இப்னுமாலிக்
ரழி அவர்கள் கூறினார்கள்ஒருநாள் காலையில் நபி ஸல் அவர்களும் அபூபக்கர் ரழி
அவர்களும் என் வீட்டிற்கு வந்து அனுமதி கேட்க,நான் அனுமதி தந்தேன். அவர்கள்
அமரவில்லை. மாறாக உங்களின் வீட்டில் நான் எந்த இடத்தில் தொழ வேண்டும் என நீங்கள்
விரும்புகிறீர்கள் என்று கேட்க, நான் வீட்டின் ஒரு ஓரத்தை சுட்டிக்காட்டினேன். நபி
ஸல் அவர்கள் அங்கு நின்று தக்பீர் கட்டினார்கள். நாங்களும் நின்றோம் எங்களின்
வரிசைகளை சரி செய்து இரு ரக்அத் தொழ வைத்தார்கள் பின்பு ஸலாம் கொடுத்தார்கள். (பின்பு
அந்த இடத்தை என் தொழுமிடமாக ஆக்கிக் கொண்டேன்.)
தொழுகை அறையை
ஏற்படுத்தினால் மட்டும் போதாது. வீட்டில் தொழுகையும் நடைபெற வேண்டும்
عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اجْعَلُوا فِي بُيُوتِكُمْ مِنْ صَلَاتِكُمْ وَلَا تَتَّخِذُوهَا
قُبُورًا (بخاري) باب التَّطَوُّعِ فِى الْبَيْتِ-كتاب التهجد- ولا تتخذوها أي
بيوتكم قبورا بأن تتركوا الصلاة فيها كما تتركون في المقابر (مرقاة)
கப்ரில் இருப்பவரை மய்யித் என கூறுவது போல் தொழுகை
நடைபெறாத வீட்டில் வசிப்பவரை நடமாடும் மய்யித் என சூசகமாக கூறி..
வீட்டிலுள்ள
பெண்கள் தொழுவதுடன், ஆண்கள் நபில் தொழுகையை முடிந்தால் வீட்டில் தொழுவது நல்லது
عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ رضي الله عنه قَالَ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْمَغْرِبِ فِي مَسْجِدِ بَنِي عَبْدِ الْأَشْهَلِ فَلَمَّا
صَلَّى قَامَ نَاسٌ يَتَنَفَّلُونَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْكُمْ بِهَذِهِ الصَّلَاةِ فِي الْبُيُوتِ (نسائ) باب الْحَثِّ
عَلَى الصَّلاَةِ فِى الْبُيُوت كتاب قيام الليل وتطوع النهار
பனூ
அப்துல் அஷ்ஹல் என்ற கூட்டத்தாரின் மஸ்ஜிதில் நபி ஸல் அவர்கள் மஃரிப் தொழ
வைத்தார்கள் தொழுகை முடிந்தவுடன் மக்கள் அங்கேயே நஃபில் தொழ ஆரம்பித்தார்கள்.
அப்போது நபிஸல் அவர்கள் இந்தத் தொழுகைகளை உங்களின் வீட்டில் தொழுது கொள்ளுங்கள்
என்றார்கள்.
நபிஸல்
அவர்கள் முன் பின் சுன்னத்துகளை வீட்டில் தொழுபவர்களாக இருந்தார்கள்.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ قَالَ سَأَلْتُ عَائِشَةَ عَنْ صَلَاةِ
رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ تَطَوُّعِهِ فَقَالَتْ
كَانَ يُصَلِّي فِي بَيْتِي قَبْلَ الظُّهْرِ أَرْبَعًا ثُمَّ يَخْرُجُ فَيُصَلِّي
بِالنَّاسِ ثُمَّ يَدْخُلُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ وَكَانَ يُصَلِّي بِالنَّاسِ
الْمَغْرِبَ ثُمَّ يَدْخُلُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ وَيُصَلِّي بِالنَّاسِ الْعِشَاءَ
وَيَدْخُلُ بَيْتِي فَيُصَلِّي رَكْعَتَيْنِ... (بخاري) وقيل إن كسل عن فعلها في
البيت فالمسجد أفضل (مرقاة)
கழிவறை கட்டும்போது கிப்லாவை முன்னோக்கியோ,
பின்னோக்கியோ கட்டாம்ல் தெற்கு வடக்காக கட்டுவது நல்லது
عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ أَنَّ النَّبِيَّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا أَتَيْتُمْ الْغَائِطَ فَلَا
تَسْتَقْبِلُوا الْقِبْلَةَ وَلَا تَسْتَدْبِرُوهَا (بخاري) كتاب الصلاة
விளக்கம் : திறந்த வெளி அல்லாத நான்கு சுவற்றுக்குள் கிப்லாவை முன்னோக்குவது கூடும் என்று
ஷாஃபிஈ )ரஹ்( கூறுவார்கள். ஆனால் அபூஹனீஃபா )ரஹ்( அவர்கள் பொதுவாகவே கிப்லாவை
முன்னோக்கி மல,ஜலம் கழிப்பது கூடாது என்று கூறுவார்கள். )மிர்காத்( எனவே
பேணுதல் என்பது கிப்லாவை நோக்கி மல,ஜலம் கழிக்காமல் இருப்பதாகும்.
குர்ஆன் ஓதப்படும் வீட்டை விட்டும்,(குறிப்பாக பகரா
சூரா) ஓதப்படும் வீட்டை
விட்டும் ஷைத்தான் விரண்டு..
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ مَقَابِرَ إِنَّ
الشَّيْطَانَ يَنْفِرُ مِنْ الْبَيْتِ الَّذِي تُقْرَأُ فِيهِ سُورَةُ الْبَقَرَةِ(مسلم
باب اسْتِحْبَابِ صَلاَةِ النَّافِلَةِ فِى بَيْتِهِ وَجَوَازِهَا فِى
الْمَسْجِدِ- كتاب صلاة المسافربن
உங்களின் வீடுகளை
கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள். எந்த வீட்டில் சூரத்துல் பகரா ஓதப்படுமோ அந்த வீட்டை
விட்டும் ஷைத்தான் விரண்டோடுகிறான்.
புது வீடு குடி போகும்போது
மாற்றார்களைப் பின்பற்றி முஸ்லிம்களிடமும் பரவியுள்ள மூட நம்பிக்கைகள்.
1, வாஸ்து பார்ப்பது 2, இந்துக்களைப்போல் பாலை பொங்க
விடுவது 3, திருஷ்டி பொம்மை வைப்பது 4,கட்டிடத் தொழிலாளர்கள் செய்யும் மாற்று மத
சடங்குகளை அனுமதிப்பது, 5, பிராணியை அறுத்து அதன் இரத்தத்தை தெளிப்பதும், அதை முச்சந்தியில்
வைத்து இரவோடு இரவாக எரிப்பதும் 7, திருஷ்டிப் பூசணிக்காய் உடைப்பது 8,பழங்காலத்தைப்போல்
நடு வீட்டுக்குள் விறகு அடுப்பு எரிப்பதை சடங்காக கருதுவது 9, குத்து விளக்கு
ஏற்றுவது
வாஸ்து சரியில்லை என்பதற்காக கிராமத்தையே காலி செய்த
மக்கள்
ஆந்திர மாநிலம் அனந்த பூர் மாவட்டத்தில் கொண்டி பள்ளி
கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 100 பேர் வசிக்கின்றனர். 50 வீடுகள் உள்ளன. இந்த
கிராமத்தின் கிழக்கே ஒரு மலை உள்ளதாம். அந்த மலையின் நிழல் இந்த வீடுகளின் மேல்
விழுகிறதாம். இது வாஸ்து சாஸ்திரப்படி சரியில்லையாம். இதனால் தங்கள் வாழ்க்கை
வளமாக இருக்காது என கிராம மக்கள் கருதி தங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கித் தருமாறு
அதிகாரிகளிடம் மனு கொடுக்க அவர்கள் அதை கண்டு கொள்ளாததால் அந்த கிராம மக்கள் அனைவரும் ஊரையே காலி செய்து
விட்டுப் போய் விட்டனர் (தினகரன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக