பால்குடி காலங்களில் நபி (ஸல்)அவர்களிடம் ஹலீமா அம்மையார் கண்ட அதிசயங்கள்.
ஹலீமா அம்மையார் அவர்களே அந்த அதிசய நிகழ்வுகளைப் பற்றி விபரிக்கிறார்கள்.
قال ابن إسحاق : كانت حليمة تحدث : أنها خرجت من بلدها مع زوجها وابن لها صغير ترضعه في نسوة من بني سعد بن بكر، تلتمس الرضعاء . قالت : وذلك في سنة شهباء لم تبق لنا شيئًا، قالت : فخرجت على أتان لى قمراء، ومعنا شارف لنا، والله ما تَبِضّ ُبقطرة، وما ننام ليلنا أجمع من صبينا الذي معنا، من بكائه من الجوع، ما في ثديى ما يغنيه، وما في شارفنا ما يغذيه، ولكن كنا نرجو الغيث والفرج، فخرجت على أتانى تلك، فلقد أذَمَّتْ بالركب حتى شق ذلك عليهم، ضعفًا وعجفًا، حتى قدمنا مكة نلتمس الرضعاء، فما منا امرأة إلا وقد عرض عليها رسول الله صلى الله عليه وسلم فتأباه، إذا قيل لها : إنه يتيم، وذلك أنا كنا نرجو المعروف من أبي الصبي، فكنا نقول : يتيم ! وما عسى أن تصنع أمه وجده، فكنا نكرهه لذلك، فما بقيت امرأة قدمت معي إلا أخذت رضيعًا غيرى، فلما أجمعنا الانطلاق قلت لصاحبى : والله، إنى لأكره أن أرجع من بين صواحبى ولم آخذ رضيعًا، والله لأذهبن إلى ذلك اليتيم فلآخذنه . قال : لا عليك أن تفعلى، عسى الله أن يجعل لنا فيه بركة . قالت : فذهبت إليه وأخذته،وما حملنى على أخذه إلا أنى لم أجد غيره، قالت : فلما أخذته رجعت به إلى رحلى، فلما وضعته في حجرى أقبل عليه ثديأي بما شاء من لبن، فشرب حتى روى، وشرب معه أخوه حتى روى، ثم ناما، وما كنا ننام معه قبل ذلك، وقام زوجي إلى شارفنا تلك، فإذا هي حافل، فحلب منها ما شرب وشربت معه حتى انتهينا ريا وشبعا، فبتنا بخير ليلة، قالت : يقول صاحبى حين أصبحنا : تعلمي والله يا حليمة، لقد أخذت نسمة مباركة، قالت : فقلت : والله إنى لأرجو ذلك . قالت : ثم خرجنا وركبت أنا أتانى، وحملته عليها معى، فوالله لقطعت بالركب ما لا يقدر عليه شىء من حمرهم، حتى إن صواحبى ليقلن لى : يا ابنة أبي ذؤيب، ويحك ! أرْبِعى علينا، أليست هذه أتانك التي كنت خرجت عليها ؟ فأقول لهن : بلى والله، إنها لهي هي، فيقلن : والله إن لها شأنًا، قالت : ثم قدمنا منازلنا من بلاد بني سعد، وما أعلم أرضًا من أرض الله أجدب منها، فكانت غنمى تروح علىَّ حين قدمنا به معنا شباعًا لُبَّنًا، فنحلب ونشرب، وما يحلب إنسان قطرة لبن، ولا يجدها في ضرع، حتى كان الحاضرون من قومنا يقولون لرعيانهم : ويلكم، اسرحوا حيث يسرح راعى بنت أبي ذؤيب، فتروح أغنامهم جياعًا ما تبض بقطرة لبن، وتروح غنمى شباعًا لبنًا . فلم نزل نتعرف من الله الزيادة والخير حتى مضت سنتاه وفصلته، وكان يشب شبابًا لا يشبه الغلمان، فلم يبلغ سنتيه حتى كان غلامًا جفرًا . قالت : فقدمنا به على أمه ونحن أحرص على مكثه فينا، لما كنا نرى من بركته، فكلمنا أمه، وقلت لها : لو تركت ابني عندي حتى يغلظ، فإني أخشى عليه وباء مكة، قالت : فلم نزل بها حتى ردته معنا . (الرحيق المختوم)
‘‘நான் எனது
கணவர் மற்றும் கைக் குழந்தையுடன் ஸஅத் கிளையைச் சேர்ந்த சில பெண்களோடு பால்
குடிக்கும் குழந்தைகளைத் தேடி வெளியில் புறப்பட்டோம். அது கடுமையான பஞ்ச காலம்.
நான் எனது வெள்ளைக் கழுதையில் அமர்ந்து பயணித்தேன். எங்களுடன் ஒரு கிழப்பெண்
ஒட்டகம் இருந்தது. அதில் ஒரு சொட்டு பால் கூட கறக்க முடியாது. எங்களது குழந்தை
பசியால் அழுது கொண்டிருந்ததால் இரவு முழுவதும் எங்களால் உறங்க முடியவில்லை. எனது
மார்பில் அக்குழந்தையின் பசி தீர்க்கும் அளவு பாலும் இல்லை. எங்களது ஒட்டகையிலும்
பாலில்லை. எனினும், அல்லாஹ்வின் புறத்திலிருந்து என் சிரமத்திற்கான விடிவையும்
அவனது அருளையும் பெரிதும் எதிர்பார்த்திருந்தேன். நான் வாகனித்த பெண் கழுதை
மிகுந்த பலவீனத்துடன் மெதுவாகவே சென்றது. இது என்னுடன் வந்த குழுவினருக்கு பெரும்
சிரமத்தை அளித்தது. ஒரு வழியாக மக்காவை அடைந்து பால்குடிக் குழந்தைகளைத் தேடி
அலைந்தோம். எங்களுடன் சென்ற அனைத்துப் பெண்களிடமும் அல்லாஹ்வின் தூதரை
காட்டப்பட்டது. எனினும், அக்குழந்தை அனாதை என்று
கூறப்பட்டதால் அனைவரும் அதனை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். ஏனெனில், குழந்தையின் தந்தையிடமிருந்தே
நாங்கள் ஊதியம் பெறமுடியும். இவர்கள் அநாதை என்பதால் தாய் அல்லது பாட்டனார்
எங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்? என எங்களுக்குள் பேசிக்
கொண்டோம். எனவே, அல்லாஹ்வின்
தூதரை எடுத்துச் செல்ல எங்களில் எவரும் விரும்பவில்லை. என்னைத் தவிர என்னுடன் வந்த
அனைத்துப் பெண்களுக்கும் குழந்தைகள் கிடைத்தனர். அனைவரும் திரும்பிச் செல்லத்
தொடங்கியபோது நான் எனது கணவரிடம் ‘‘அனைவரும் குழந்தையுடன்
திரும்புகையில் நான் வெறுங்கையுடன் செல்வதில் எனக்குச் சிறிதும் சம்மதமில்லை.
அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அந்த அனாதைக் குழந்தையை பெற்று வருகிறேன்''
என்று கூறியதற்கு அவர் ‘‘தாராளமாகச்
செய்யலாமே! அக்குழந்தையின் மூலம் அல்லாஹ் நமக்கு (பரக்கத் செய்யலாம்) வளம் தரலாம்''
என்றார். நான் அங்கு சென்று குழந்தையை வாங்கி வந்தேன்.
எனக்கு வேறு எந்தக் குழந்தையும் கிட்டவில்லை என்ற காரணத்தால் மட்டுமே நான்
அக்குழந்தையை வாங்கிக் கொண்டேன். நான்
தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பினேன். அக்குழந்தையை எனது மடியில் வைத்தவுடன்
எனது மார்புகளில் பால் சுரந்தது. அக்குழந்தை வயிறு நிரம்ப பால் அருந்தியது.அதன்
சகோதரராகிய(எனது குழந்தையும்) பாலருந்தியது. பிறகு இருவரும் உறங்கிவிட்டனர்.
அதற்கு முன் நாங்கள் எங்களது குழந்தையுடன் உறங்க முடிந்ததே இல்லை.எனது கணவர் எங்களுடைய
கிழ ஒட்டகையை நோக்கிச் சென்றார். அதன் மடி பாலால் நிரம்பியிருந்தது. அதை கறந்து
நானும் என்ன்னுடைய கணவரும் பசி தீரக் குடித்தோம். அன்றிரவை நிம்மதியாகக் கழித்தோம்.காலையில்
எனது கணவர்: ‘ஹலீமாவே அல்லாஹ்வின் மீதாணையாக!நீ மிகவும் பரக்கத்(வளம்)
பொருந்திய குழந்தையை அடைந்திருக்கிறாய்' என்றார். அதற்கு ‘அப்படித்தான்
நானும் நம்புகிறேன்' என்றேன்.
பிறகு நாங்கள்
பயணத்தைத் தொடர்ந்தோம்.என் பெண் கழுதையில் அக்குழந்தையையும் அமர்த்திக் கொண்டேன்.
எனது பெண் கழுதை என்னுடன் வந்த குழுவினர் அனைவரின் கழுதைகளையும் முந்திக் கொண்டு
சென்றது. அப்பெண்கள் என்னை நோக்கி ‘‘அபூ துவைபின் மகளே! உனக்கு
என்ன நேர்ந்தது. எங்களுடன் மெதுவாகச் செல்! நீ வரும்போது வாகனித்து வந்த கழுதைதானா
இது?''
என்றனர். ‘‘நான் அல்லாஹ்வின்
மீதாணையாக! அதுதான் இது'' என்றேன். அவர்கள் ‘‘நிச்சயமாக
என்னவோ நேர்ந்துவிட்டது'' என்றனர்.
எங்களது ஊருக்குத் திரும்பினோம். அல்லாஹ்வின் பூமியில்
எங்களது பகுதியைப் போன்றதொரு வறண்ட பூமியை நான் கண்டதில்லை. ஆனால், மேய்ச்சலுக்கு
செல்லும் எனது ஆடுகள் மாலையில் வீடு திரும்பும்போது கொழுத்து மடி சுரந்து
திரும்பும். அதை கறந்து அருந்துவோம். எங்களைத் தவிர வேறு எவரும் தங்களது ஆடுகளில்
ஒரு துளிப் பால்கூட கறக்க முடியாது. அவர்களது ஆடுகளின் மடிகள் வரண்டிருந்தன.
எங்கள் சமூகத்தில் அனைவரும் தங்களது இடையர்களிடம் ‘உங்களுக்கு
என்ன நேர்ந்தது? நீங்கள்
ஹலீமாவின் இடையர் மேய்க்கும் பகுதிகளுக்குச் சென்று மேய்த்து வாருங்கள்!'என்று
சொல்வார்கள்.இருப்பினும் எனது ஆடு வயிறு நிரம்பி மடி சுரந்து வரும்போது அவர்களுடைய
ஆடுகள் வயிறுகள் ஒட்டிப் போய் காய்ந்த மடியுடன் திரும்பி வந்தன.
இவ்வாறு அக்குழந்தைக்கு பால்குடி மறக்கடிக்கும் வரையிலான
இரண்டு வருடங்கள் வரை அல்லாஹ்விடமிருந்து பல நன்மைகளையும் வளங்களையும்
அனுபவித்துக் கொண்டிருந்தோம். இரண்டு வயதில் ஏனைய குழந்தைகளை விட மிக உறுதியாகவும்
வலிமையாகவும் அக்குழந்தை வளர்ந்திருந்தது. அவரிடமிருந்து ஏராளமாக நன்மைகளை நாங்கள்
அனுபவித்துக்கொண்டிருந்ததால் அவரை எங்களுடன் தங்க வைத்துக்கொள்ள மிகுந்த
ஆவல்கொண்டோம் எனினும், தவணை முடிந்து விட்டமையால் அவரது தாயாரிடம் அழைத்துச்
சென்றோம். அவரது தாயாரிடம் ‘இந்த அருமைக் குழந்தை
இன்னும் திடகாத்திரமாக வளரும் வரை என்னிடமே விட்டுவிடுங்கள். மக்காவில் ஏதேனும்
நோய் அவரைப் பீடித்து விடுமென நான் அஞ்சுகிறேன்' என்று
கூறினேன். எனது தொடர்ச்சியான வற்புறுத்தலால் குழந்தையை என்னிடமே ஒப்படைத்து
விட்டார்.''
(இப்னு ஹிஷாம்) அர்ரஹீக்
நெஞ்சு திறக்கப்படுதல்:شق
الصدر
وهكذا رجع رسول الله صلى
الله عليه وسلم إلى بني سعد، حتى إذا كان بعده بأشهر على قول ابن إسحاق، وفي السنة
الرابعة من مولده على قول المحققين وقع حادث شق صدره، روى مسلم عن أنس : أن رسول
الله صلى الله عليه وسلم أتاه جبريل، وهو يلعب مع الغلمان، فأخذه فصرعه، فشق عن
قلبه، فاستخرج القلب، فاستخرج منه علقة، فقال : هذا حظ الشيطان منك، ثم غسله في
طَسْت من ذهب بماء زمزم، ثم لأَمَه ـ أي جمعه وضم بعضه إلى بعض ـ ثم أعاده في
مكانه، وجاء الغلمان يسعون إلى أمه ـ يعنى ظئره ـ فقالوا : إن محمدًا قد قتل،
فاستقبلوه وهو مُنْتَقِعُ اللون ـ أي متغير اللون ـ قال أنس : وقد كنت أرى أثر ذلك
المخيط في صدره .(الرحيق المختوم)
இவ்வாறே
நபி(ஸல்)அவர்கள் மீண்டும் ஸஅத் கிளையாரிடம் அழைத்து வரப்பட்டார்கள்.சில
மாதங்களுக்குப்பின் அவர்களது நெஞ்சு திறக்கப்பட்ட நிகழ்ச்சி நடைபெற்றதெனஇப்னு
இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார். (மற்ற வரலாற்று ஆசிரியர்கள் நபி (ஸல்) அவர்களின்
நான்காவது வயதில் தான் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது என்பர்.)
அந்த நிகழ்ச்சி குறித்து அனஸ்(ரழி) கூறுவதாவது:
நபி(ஸல்)அவர்கள் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது வானவர் ஜிப்ரீல் (அலை)
அவர்கள் வருகை தந்து நபி (ஸல்) அவர்களை மயக்குமுறச் செய்து, நெஞ்சைத்
திறந்து இதயத்தை வெளியே எடுத்தார். அதில் ஒட்டியிருந்த ஒரு துண்டை அகற்றிவிட்டு ‘இது
உம்மிடமிருந்த ஷைத்தானின் பங்காகும்' என்று கூறி, தங்கத்
தட்டில் இதயத்தை வைத்து அதில் ஜம்ஜம் தண்ணீரை ஊற்றிக் கழுவினார். பிறகு அந்த இதயப்
பகுதிகளை ஒன்றிணைத்து நெஞ்சினுள் திரும்பப் பதித்துவிட்டார். இதைக்கண்ட சிறுவர்கள்
ஹலீமாவிடம் ஓடோடி வந்து ‘‘முஹம்மது கொலை
செய்யப்பட்டார்''
என்றனர். நபி (ஸல்) அவர்களை நோக்கி அனைவரும் விரைந்தனர்.
அவர் நிறம் மாறிக் காட்சியளித்தார். அனஸ்
(ரழி) கூறினார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்களின்
நெஞ்சில் தைக்கப்பட்டதற்கான அடையாளத்தை நான் கண்டேன்.'' (ஸஹீஹ்
முஸ்லிம்)
وخشيت
عليه حليمة بعد هذه الوقعة حتى ردته إلى أمه، فكان عند أمه إلى أن بلغ ست سنين
.ورأت آمنة ـ وفاء لذكرى زوجها الراحل ـ أن تزور قبره بيثرب، فخرجت من مكة قاطعة
رحلة تبلغ نحو خمسمائة كيلو متر ومعها ولدها اليتيم ـ محمد صلى الله عليه وسلم ـ
وخادمتها أم أيمن، وقيمها عبد المطلب، فمكثت شهرًا ثم قفلت، وبينما هي راجعة إذ
لحقها المرض في أوائل الطريق، ثم اشتد حتى ماتت بالأبْوَاء بين مكة والمدينة .இந்நிகழ்ச்சியால்
அதிர்ந்துபோன ஹலீமா நபி(ஸல்) அவர்களை அவரது தாயாரிடம் ஒப்படைத்து விட்டார்கள். நபி
(ஸல்) ஆறு வயது வரை தாயாரிடமே வளர்ந்தார்கள். ஆமினா அம்மையார் அவர்கள் மதீனாவில்
மரணமடைந்த தனது அன்புக் கணவன் கப்ரைக் கண்டுவர விரும்பினார். தனது குழந்தை
முஹம்மது, ஊழியப்
பெண் உம்மு அய்மன் மற்றும் பொறுப்பாளர் அப்துல் முத்தலிப் ஆகியோருடன்
மக்காவிலிருந்து 500 கிலோ மீட்டர் தூரம் உள்ள மதீனாவிற்கு பயணம் மேற்கொண்டார்.
மன அமைதிக்காக ஒரு மாதம் அங்கு தங்கிவிட்டு மக்காவுக்கே மீண்டும் பயணமானார்.வழியில்
ஆமினா நோய் வாய்ப்பட்டார்கள்.பிறகு நோய் அதிகமாகி மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையே
‘அப்வா' என்ற
இடத்தில் மரணமடைந்தார்கள்.
பரிவு மிக்க பாட்டனாரிடம்:
وعاد به عبد المطلب إلى
مكة، وكانت مشاعر الحنو في فؤاده تربو نحو حفيده اليتيم الذي أصيب بمصاب جديد
نَكَأ الجروح القديمة، فَرَقَّ عليه رقة لم يرقها على أحد من أولاده، فكان لا يدعه
لوحدته المفروضة، بل يؤثره على أولاده، قال ابن هشام : كان يوضع لعبد المطلب فراش
في ظل الكعبة، فكان بنوه يجلسون حول فراشه ذلك حتى يخرج إليه، لا يجلس عليه أحد من
بنيه إجلالًا له، فكان رسول الله صلى الله عليه وسلم يأتى وهو غلام جفر حتى يجلس
عليه، فيأخذه أعمامه ليؤخروه عنه، فيقول عبد المطلب إذا رأي ذلك منهم : دعوا ابني
هذا، فوالله إن له لشأنًا، ثم يجلس معه على فراشه، ويمسح ظهره بيده، ويسره ما يراه
يصنع . ولثمانى سنوات وشهرين وعشرة أيام من عمره صلى الله عليه وسلم توفي جده عبد
المطلب بمكة، ورأي قبل وفاته أن يعهد بكفالة حفيده إلى عمه أبي طالب شقيق أبيه . .(الرحيق
المختوم)
நபி (ஸல்) அவர்களை அப்துல் முத்தலிப்
மக்காவுக்கு அழைத்து வந்தார். அவர் அனாதையான தன் பேரர் மீது அன்பையும் பாசத்தையும்
ஊட்டி வளர்த்தார். பிறக்கும் முன் தந்தையை இழந்த சோகம் ஒரு புறம் வருத்திக் கொண்டிருக்க, தற்போது தாயையும் இழந்து அந்த சோகம்
இரட்டிப்பாகி விட்டது. தனது பிள்ளைகளை விட பேரர் மீது மிகுந்த அன்பு செலுத்தினார்.
அவரை தனிமையில் விட்டுவிடாமல் எல்லா நிலையிலும் தன்னுடன் வைத்து தனது பிள்ளைகள்
அனைவரையும்விட அவருக்கு முன்னுமை அளித்து வந்தார்.புனித கஅபாவின் நிழலில் அப்துல்
முத்தலிபுக்கென ஓர் விரிப்பு விரிக்கப்பட்டிருக்கும். அவர் வரும்வரை அவரது
பிள்ளைகள் அந்த விரிப்பைச் சுற்றி அமர்ந்திருப்பர். அவருக்கு மரியாதை செய்யும்
விதமாக எவரும் அதில் அமரமாட்டார்கள். சிறுவரான நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்து
விரிப்பில் அமர்வார்கள். அவரை அதிலிருந்து அப்துல் முத்தலிபின் பிள்ளைகள் அகற்றி விட
முயல்வார்கள். இதை அப்துல் முத்தலிப் பார்த்துவிட்டால் ‘‘எனது
அருமைப் பேரரை விட்டுவிடுங்கள்! அல்லாஹ் மீது ஆணையாக! அவருக்கென ஒரு தனித்தன்மை
இருக்கிறது'' என்றுகூறி, தனது
விரிப்பில் அமர்த்தி அவரது முதுகை தடவிக் கொடுப்பார். அவரது செயல்களையும்
அசைவுகளையும் கண்டு களிப்படைவார்.
நபி (ஸல்)
அவர்களுக்கு 8 ஆண்டு
இரண்டு மாதங்கள் பத்து நாள்கள் ஆனபோது பாட்டனார் அப்துல் முத்தலிப் மக்காவில்
மரணமடைந்தார். தனது மரணத்திற்கு முன்பே சிறுவரை அவரது தந்தை அப்துல்லாஹ்வின்
உடன்பிறந்த சகோதரர் அபூதாலிப் பராமரிக்க வேண்டுமென விரும்பினார். (இப்னு ஹிஷாம்)
பாட்டனார் அப்துல் முத்தலிபின் மரணத்திற்குப்
பிறகு நபி ஸல் அவர்கள் அபூதாலிபிடம் வளர்ந்தார்கள்.
மாநபிக்காக மழை பொழிதல்:
يستسقى الغمام بوجهه- أخرج ابن عساكر عن
جَلْهُمَة بن عُرْفُطَة قال : قدمت مكة وهم في قحط، فقالت قريش : يا أبا طالب،
أقحط الوادي، وأجدب العيال، فهَلُمَّ فاستسق، فخرج أبو طالب ومعه غلام، كأنه شمس
دُجُنَّة، تجلت عنه سحابة قَتْمَاء، حوله أُغَيْلمة، فأخذه أبو طالب، فألصق ظهره
بالكعبة،ولاذ بأضبعه الغلام، وما في السماء قَزَعَة، فأقبل السحاب من هاهنا وهاهنا
وأغدق واغْدَوْدَق، وانفجر الوادي، وأخصب النادي والبادي، وإلى هذا أشار أبو طالب
حين قال :وأبيضَ يُستسقى الغَمَام بوجهه ** ثِمالُ اليتامى عِصْمَةٌ للأرامل (الرحيق
ஜல்ஹுமா இப்னு உர்ஃபுதா கூறுகிறார்: கடும் பஞ்ச காலத்தில்
மக்காவுகுச் சென்றேன். அப்போது குறைஷியர்கள் ‘‘கணவாய்கள் வரண்டு
விட்டன. பிள்ளைககள் வாடுகின்றனர்.வாருங்கள்! மழைக்காக பிரார்த்தனை செய்யுங்கள்' என
அபூதாலிபிடம் கூறினர். அவர் வெளியேறி வந்தார். அவருடன் மேகம் மறைக்காத சூரியனின்
பிரகாசமுடைய ஒரு சிறுவரும் இருந்தார். மேலும், சிறுவர்கள்
பலர் அபூதாலிபைச் சுற்றிலும் இருந்தனர். அபூதாலிப் அச்சிறுவரை தூக்கிஅவரின் முதுகைசேர்த்து
வைத்து பிரார்த்தித்தார்.அபூதாலிபின் தோள்புஜத்தை அச்சிறுவர் பற்றிக் கொண்டார்.
மேகமற்றுக்கிடந்த வானத்தில் அங்கும் இங்குமிருந்த மேகங்கள் ஒன்று திரண்டன. பிறகு
பெய்த பெரும் மழையால் கணவாய்களில் வெள்ளம் கரை புரண்டோடியது. மக்கா நகரும் அதன்
சுற்றுப்புறங்களும் பசுமையாக மாறின. இதை சுட்டிக்காட்டும் விதமாக அபூதாலிப் கவிதை
பாடினார். அவர் அழகரல்லவேர் அவரை முன்னிறுத்தி நாங்கள் மழை வேண்டுவோம்; அவர் அநாதைகளின் அரணல்லவேர் கைம்பெண்களின் காவலரல்லவோ.
துறவி
பஹீராவின் சுபச் செய்தி:
بَحِيرَى الراهب :ولما بلغ رسول الله صلى
الله عليه وسلم اثنتى عشرة سنة ـ قيل : وشهرين وعشرة أيام ـ ارتحل به أبو طالب
تاجرًا إلى الشام، حتى وصل إلى بُصْرَى ـ وهي معدودة من الشام، وقَصَبَة لحُورَان،
وكانت في ذلك الوقت قصبة للبلاد العربية التي كانت تحت حكم الرومان . وكان في هذا
البلد راهب عرف بَبحِيرَى، واسمه ـ فيما يقال : جرجيس، فلما نزل الركب خرج إليهم،
وكان لا يخرج إليهم قبل ذلك، فجعل يتخلّلهم حتى جاء فأخذ بيد رسول الله صلى الله
عليه وسلم، وقال : هذا سيد العالمين، هذا رسول رب العالمين، هذا يبعثه الله رحمة
للعالمين . فقال له [ أبو طالب و ] أشياخ قريش : [ و ] ما علمك [ بذلك ] ؟ فقال :
إنكم حين أشرفتم من العقبة لم يبق حجر ولا شجر إلا خر ساجدًا، ولا يسجدان إلا
لنبى، وإنى أعرفه بخاتم النبوة أسفل من غضروف كتفه مثل التفاحة، [ وإنا نجده في
كتبنا ] ، ثم أكرمهم بالضيافة، وسأل أبا طالب أن يرده، ولا يقدم به إلى الشام؛
خوفًا عليه من الروم واليهود، فبعثه عمه مع بعض غلمانه إلى مكة .(الرحيق المختوم
நபி (ஸல்)
அவர்களுக்கு 12
வயதாகும் போது அபூதாலிப் வியாபாரத்திற்காக ‘ஷாம்' தேசம்
சென்றார். அப்போது நபியவர்களையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். அவர்கள் ஷாம்
நாட்டின் புஸ்ரா நகரை வந்தடைந்தனர். அங்கு ‘பஹீரா' என்ற
பிரபலமான துறவி ஒருவர் இருந்தார். அவரது பெயர் ‘ஜர்ஜீஸ்' என்று
சொல்லப்படுகிறது. அவர் எங்கும் வெளியில் செல்ல மாட்டார். எனினும், இந்த
வியாபாரக் கூட்டம் புஸ்ரா சென்றதும் அவர்களை சந்திக்க வந்தார். வணிகக் கூட்டத்தைப்
பிளந்து கொண்டு வந்து சிறுவரான நபி (ஸல்) அவர்களின் கரத்தைப் பற்றிக்கொண்டு ‘‘இதோ
உலகத்தாரின் தலைவர்! உலகத்தாரின் இறைத்தூதர்! இவரை அல்லாஹ் அகிலத்தாருக்கு அருட்கொடையாக
அனுப்புவான்''என்று
கூறினார். அவரிடம் அபூதாலிபும் குறைஷிப் பெரியவர்களும் ‘‘இது எப்படி
உமக்குத் தெரியும்?'' என வினவினர். அவர் ‘‘நீங்கள்
கணவாய் வழியாக வந்தபோது கற்களும் மரங்களும் சிரம் பணிந்தன. அவை இறைத்தூதர்களுக்கே
தவிர வேறு எவருக்கும் சிரம் பணியமாட்டா. மேலும், அவரது
புஜத்துக்குக் கீழிருக்கும் ஆப்பிளைப் போன்ற இறுதித் தூதரின் முத்திரையைக்
கொண்டும் நான் அவரை அறிவேன்.எங்கள் வேதங்களில் அதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது''
என்று கூறினார்.பிறகுஅவர்களுக்கு விருந்தளித்து
உபசரித்தார். இச்சிறுவரை ஷாமுக்கு அழைத்துச் சென்றால் அங்குள்ள ரோமர்கள் மற்றும்
யூதர்களால் இவருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே, இவரை
இங்கிருந்தே மக்கா திருப்பி அனுப்பி விடுங்கள் என்று பஹீரா அபூதாலிபிடம் கூறினார்.
அதற்கினங்க அபூதாலிப் நபி (ஸல்) அவர்களை சில வாலிபர்களுடன் மக்காவுக்கு அனுப்பி
வைத்தார். (ஸுனனுத் திர்மிதி, தபரீ, முஸன்னஃப்
அபீஷைபா, இப்னு
ஹிஷாம், பைஹகீ
புஹைராவின் சம்பவம் பற்றி வேறு சில நூல்களில்..
அபுதாலிப்
அடிக்கடி ஷாம் தேசம் பயணம் செய்வார். இன்றைய 16
அரபுநாடுகள் இணைந்தது தான் அன்றைய ஷாம் எனப்படும். அப்படிப்பட்ட
ஒரு பயணத்தில்,
அவர் நபி (ஸல்)
அவர்களையும் அழைத்துச் சென்றார் அவர்களுடன் மக்காவின் தலைவர்களும் இருந்தனர். அவர்கள்
துறவி புஹைராவின் ஆலயத்தில் அருகில் தங்கியிருந்தனர். வழமைக்கு மாற்றமாக புஹைரா
அவர்களைச் சந்திக்க வெளியே வந்து கொண்டிருந்தார். மிகவும்
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், முந்தைய வணிகப்
பயணங்களில் அவர்கள் அடிக்கடி அவரது மடத்தின் அருகில் நின்றுகொண்டிருந்தாலும், அவர்
அவர்களைச் சந்திக்கவோ அல்லது அவர்களைக் கவனிக்கவோ மாட்டார்.
ஆனால்
இம்முறை அவர் நபி ஸல் அவர்களிடம் சில அடையாளங்களைக் கண்டு கொண்டதால் அதை ஊர்ஜிதப்
படுத்த அனைவரையும் விருந்துக்கு அழைத்தார். அவர் அவ்வாறு அழைப்பது மிக ஆச்சரியமாக
இருந்தது. அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால் நபி ஸல் அவர்கள் சிறுவராக இருந்த
காரணத்தால் அவர்களை வாகனங்களின் பாதுகாப்புக்கு விட்டு வந்தனர். புஹைரா அனைவரையும்
கவனித்து விட்டு உங்களில் யாரும் இங்கு வராமல் இருக்கிறீர்களா என்று கேட்க, ஒரே
ஒரு சிறுவரை மட்டும் வாகனங்களின் பாதுகாப்புக்கு விட்டு வந்தோம் என்றனர்.அவர் தான்
முக்கியமாக இங்கு வர வேண்டும் என்று கூறி நபி ஸல் அவர்களை அழைத்து வரச் செய்து நபி ஸல் அவர்களின் அங்க அடையாளங்களைப் பார்த்து
விட்டு சுபச் செய்திகளைச் சொன்னார்.
இளம் வயதிலேயே வெட்க உணர்வில் சிறந்த விளங்கிய சர்தார் நபி (ஸல்)
عن جابر بن عبد الله قال : لما بنيت الكعبة ذهب النبي
صلى الله عليه وسلم وعباس ينقلان الحجارة، فقال عباس للنبي صلى الله عليه وسلم :
اجعل إزارك على رقبتك يقيقك من الحجارة، فخر إلى الأرض وطمحت عيناه إلى السماء ثم
أفاق، فقال : ( إزاري، إزاري ) فشد عليه إزاره . وفي رواية : فما رؤيت له عورة بعد
ذلك . (الرحيق
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்(ரழி) அறிவிப்பதாவது: கஅபாவை
புதுப்பிக்கும் பணியின்போது நபி(ஸல்) அவர்களும் அப்பாஸ் ரழி அவர்களும் கல்லை
எடுத்துக் கொடுக்கும் பணியைச் செய்தார்கள். அப்போது அப்பாஸ் ரழி அவர்கள் நபி (ஸல்)
அவர்களிடம் உங்களது கீழாடையைக் கழற்றி புஜத்தில் வைத்துக் கொண்டால் கற்கள்
அழுத்தாமலிருக்கும் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் தனது ஆடையைக் கழற்றி
(புஜத்தில் வைத்தவுடன்) கண்கள் மேலே சொருக மயக்கமடைந்து விட்டார்கள். பிறகு
அவர்கள் தெளிவடைந்து எனது கீழாடை! கீழாடை! என்று கூற, நபி (ஸல்) அவர்களுக்கு அப்பாஸ் ரழி அவர்கள் ஆடையை உடுத்தி
விட்டார்கள். அதற்குப்பின் அவர்களது மறைவிடத்தை எவரும் பார்த்ததில்லை.
சிறு வயதில் இருந்தே இசையைக் கேட்டதில்லை
قال رسول الله صلى الله عليه وسلم : .... قلت ليلة للغلام الذي يرعى معي
الغنم بأعلى مكة : لو أبصرت لي غنمي حتى أدخل مكة وأسمر بها كما يسمر الشباب، فقال
: أفعل، فخرجت حتى إذا كنت عند أول دار بمكة سمعت عزفًا، فقلت : ما هذا ؟ فقالوا :
عرس فلان بفلانة، فجلست أسمع، فضرب الله على أذنى فنمت، فما أيقظني إلا حر الشمس .
فعدت إلى صاحبي فسألني، فأخبرته، ثم قلت ليلة أخرى مثل ذلك، ودخلت بمكة فأصابني
مثل أول ليلة . . . ثم ما هممت بسوء ) . الرحيق
நபி (ஸல்) கூறினார்கள்: ஓர் இரவு மக்காவின் மேற்பகுதியில்
ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவரிடம் என் ஆடுகளை நீ பார்த்துக் கொள்.
மக்காவில் வாலிபர்கள் இராக்கதை பேசுவது போன்று நானும் பேசி வருகிறேன் என்றேன்.
அவர் ஒப்புக்கொண்டார். நான் வெளியேறி மக்காவினுள் நுழைந்து அதில் முதல் வீட்டைக்
கடந்தேன். அங்கு இசை சப்தத்தைக் கேட்டு, அது என்னவென்று விசாரிக்க,.அதற்கு மக்கள்
இன்ன ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் முடிந்து இன்று முதலிரவு என்று கூறினார்கள்.
நான் அதைக்கேட்க அமர்ந்தவுடன் நான் செவியேற்காத வகையில் அல்லாஹ் என்னைத் தடுத்து
தூங்கச் செய்து விட்டான். இறுதியில் சூரிய வெப்பம்தான் என்னை எழுப்பியது.என்
தோழரிடம் நான்சென்றபோது அவர் என்ன நடந்ததென விசாரிக்க, நான் நடந்ததைக் கூறினேன்.
அதற்குப்பின் நான் எந்தவொரு தீய செயலையும் செய்ய எண்ணியதேயில்லை.'' (முஸ்தத்ரகுல்
ஹாகிம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக