வியாழன், 21 டிசம்பர், 2023

பேரிடர் காலங்களில் உதவுவதும் உதவி பெறுவதும்

 மழை, புயல் போன்ற பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்மால் இயன்ற வரை உதவ வேண்டும் என்பதையும் மேலும் இதுபோன்ற காலங்களில் அரசாங்கம் தரும் நிவாரணத் தொகைகளைப் பெறுவது பற்றி பலரின் மனதில் உள்ள சந்தேகங்களை நீக்குவதையும் உள்ளடக்கி இந்த தலைப்பு தொகுக்கப் பட்டுள்ளது.

சென்னையில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்டதைப் போன்றே தென் மாவட்டங்களில் தற்போது பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல மக்கள் ஒவ்வொரு மஹல்லாவிலும் பரவலாக வசிக்கிறார்கள். அவர்கள் இங்கிருந்த படியே பல்வேறு உதவிகளைச் செய்யலாம்.

சிரமத்தில் இருப்பவருக்கு உதவுவது நபிமார்களின் நல்ல குணமாகும்

وَلَمَّا تَوَجَّهَ تِلْقَاءَ مَدْيَنَ قَالَ عَسَى رَبِّي أَنْ يَهْدِيَنِي سَوَاءَ السَّبِيلِ (22) وَلَمَّا وَرَدَ مَاءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ أُمَّةً مِنَ النَّاسِ يَسْقُونَ وَوَجَدَ مِنْ دُونِهِمُ امْرَأَتَيْنِ تَذُودَانِ قَالَ مَا خَطْبُكُمَا قَالَتَا لَا نَسْقِي حَتَّى يُصْدِرَ الرِّعَاءُ وَأَبُونَا شَيْخٌ كَبِيرٌ (23) فَسَقَى لَهُمَا ثُمَّ تَوَلَّى إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ (24) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلَى اسْتِحْيَاءٍ قَالَتْ إِنَّ أَبِي يَدْعُوكَ لِيَجْزِيَكَ أَجْرَ مَا سَقَيْتَ لَنَا فَلَمَّا جَاءَهُ وَقَصَّ عَلَيْهِ الْقَصَصَ قَالَ لَا تَخَفْ نَجَوْتَ مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ (25) قَالَتْ إِحْدَاهُمَا يَا أَبَتِ اسْتَأْجِرْهُ إِنَّ خَيْرَ مَنِ اسْتَأْجَرْتَ الْقَوِيُّ الْأَمِينُ (26) قَالَ إِنِّي أُرِيدُ أَنْ أُنْكِحَكَ إِحْدَى ابْنَتَيَّ هَاتَيْنِ عَلَى أَنْ تَأْجُرَنِي ثَمَانِيَ حِجَجٍ فَإِنْ أَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَ وَمَا أُرِيدُ أَنْ أَشُقَّ عَلَيْكَ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصَّالِحِينَ (27) القصص

பஞ்சமான காலங்களில் உதவுவது அரசாங்கத்தின் கடமையாகும்

يُوسُفُ أَيُّهَا الصِّدِيقُ أَفْتِنَا فِي سَبْعِ بَقَرَاتٍ سِمَانٍ يَأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَسَبْعِ سُنْبُلَاتٍ خُضْرٍ وَأُخَرَ يَابِسَاتٍ لَعَلِّي أَرْجِعُ إِلَى النَّاسِ لَعَلَّهُمْ يَعْلَمُونَ (46) قَالَ تَزْرَعُونَ سَبْعَ سِنِينَ دَأَبًا فَمَا حَصَدْتُمْ فَذَرُوهُ فِي سُنْبُلِهِ إِلَّا قَلِيلًا مِمَّا تَأْكُلُونَ (47) ثُمَّ يَأْتِي مِنْ بَعْدِ ذَلِكَ سَبْعٌ شِدَادٌ يَأْكُلْنَ مَا قَدَّمْتُمْ لَهُنَّ إِلَّا قَلِيلًا مِمَّا تُحْصِنُونَ (48) ثُمَّ يَأْتِي مِنْ بَعْدِ ذَلِكَ عَامٌ فِيهِ يُغَاثُ النَّاسُ وَفِيهِ يَعْصِرُونَ (49)يوسف

  விளக்கம்- நபி யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் திறமையாக செயல்பட்டு செழிப்பான முதல் ஏழு வருடங்களில் முடிந்த வரை  சேமித்து வைத்து அரசாங்கத்தின் பைத்துல் மாலில் பத்திரப்படுத்தினார்கள். அதற்கடுத்த பஞ்சமான ஏழு வருடங்கள் வந்த போது சேமித்து வைத்த அந்த தானியங்களை நாட்டு மக்கள் அனைவருக்கும் நிவாரண உதவியாக வழங்கினார்கள். அந்தப் பணிகளில் முழுமையாக அவர்கள் ஈடு பட்டதால் தான் குடும்பம் ஒன்று சேர்ந்த பிறகு  தந்தையைச் சந்திப்பதற்கும் கூட அவர்கள் வர முடியவில்லை.                            

சிரமத்தில் சிக்கியவருக்கு உதவுவது ஹஜ்ஜுடைய நன்மையைப் பெற்றுத் தரும் 

عَنْ عَبْدِ اللَّهِ بن عُمَرَ قَالا : مَنْ مَشَى فِي حَاجَةِ أَخِيهِ الْمُسْلِمِ أَظَلَّهُ اللَّهُ تَعَالَى بِخَمْسَةٍ وَسَبْعِينَ أَلْفَ مَلَكٍ يَدْعُونَ لَهُ ، وَلَمْ يَزَلْ يَخُوضُ فِي الرَّحْمَةِ حَتَّى يَفْرُغَ ، فَإِذَا فَرَغَ كَتَبَ اللَّهُ لَهُ حَجَّةً وَعُمْرَةً ، وَمَنْ عَادَ مَرِيضًا أَظَلَّهُ اللَّهُ بِخَمْسَةٍ وَسَبْعِينَ أَلْفَ مَلَكٍ ، لا يَرْفَعُ قَدَمًا إِلا كُتِبَتْ لَهُ حَسَنَةٌ ، وَلا يَضَعُ قَدَمًا إِلا حُطَّتْ عَنْهُ سَيِّئَةٌ ، وَرُفِعَ بِهَا دَرَجَةً حَتَّى يَقْعُدَ فِي مَقْعَدِهِ ، فَإِذَا قَعَدَ غَمَرَتْهُ الرَّحْمَةُ ، فَلا يَزَالُ كَذَلِكَ إِذَا أَقْبَلَ حَتَّى يَنْتَهِيَ إِلَى مَنْزِلِهِ . لا يُرْوَى هَذَا الْحَدِيثُ عَنِ ابْنِ عُمَرَ إِلا بِهَذَا الإِسْنَادِ رواه الطبراني في المعجم الكبير

 யார் முஸ்லிமான தனது சகோதரரின் தேவையை நிறைவேற்றி வைப்பதற்காகச் செல்கிறாரோ அவருக்காக 75 ஆயிரம் மலக்குகள் தம் இறக்கைகளை விரித்த படி துஆ செய்கிறார்கள். அவரது தேவையையும் நிறைவேற்றி வைத்து விட்டால் அவருக்கு ஒரு ஹஜ் மற்றும் உம்ராவின் நன்மை கிடைக்கும். அவர் திரும்பி வரும் வரை அல்லாஹ்வின் ரஹ்மத்தில் மூழ்கியவராக இருப்பார். யார் முஸ்லிமான நோய்வாய்ப்பட்ட தனது சகோதரரை நலம் விசாரிப்பதற்காகச் செல்கிறாரோ அவருக்காக 75 ஆயிரம் மலக்குகள் தம் இறக்கைகளை விரித்த படி துஆ செய்கிறார்கள். அவர் அந்த நோயாளியிடம் அமரும் வரை இச்சிறப்பு இருக்கும். அவர் அந்த நோயாளியிடம் சென்று நலம் விசாரிக்க அமர்ந்து விட்டால் அல்லாஹ்வின் ரஹ்மத் அவரைச் சூழ்ந்து கொள்ளும். மேலும் அவர் அங்கிருந்து திரும்பி தன் வீட்டுக்கு வரும் வரை அவரது ஒவ்வொரு எட்டுக்கும் நன்மை எழுதப்பட்டு, பாவம் மன்னிக்கப்பட்டு அந்தஸ்து உயர்த்தப்படுகிறது.          

عن علي بن حسين ، قال : خرج الحسن يطوف بالكعبة ، فقام إليه رجل فقال : يا أبا محمد ، اذهب معي في حاجة إلى فلان ، فترك الطواف وذهب معه ، فلما ذهب قام إليه رجل حاسد للرجل الذي ذهب معه ، فقال : يا أبا محمد ، تركْتَ الطواف وذهبتَ معه ؟ قال : فقال له الحسن : وكيف لا أذهب معه ؟ ورسول الله صلى الله عليه وسلم قال :  من ذهب في حاجة لأخيه المسلم فقضيت حاجته كتبت له حجة وعمرة ، وإن لم يقض كتبت له عمرة فقد اكتسبت حجة وعمرة ورجعت إلى طوافي (بيهقي في شعب الايمان

ஹஸன் ரழி தவாஃப் செய்து கொண்டிருக்கும்போது ஒரு நண்பர் வந்து அபூ முஹம்மத் அவர்களே வாருங்கள். நாம் இருவரும் இணைந்து ஒரு மனிதரின் முக்கியமான அவசியத்தேவையை நிறைவேற்ற வேண்டியுள்ளது என்று கூறியவுடன் ஹஸன் ரழி அவர்கள் உடனே தவாஃபை விட்டு விட்டு அவருடன் சென்று விட்டார்கள். அப்போது அந்த நண்பருக்கு வேண்டாத மற்றொருவர் இதைக் கவனித்து விட்டு ஹஸன் ரழி அவர்களிடம் வந்து அவர் அழைத்தவுடன் நீங்கள் தவாஃபை பாதியில் விட்டு விட்டுச் சென்று விட்டீர்களே இது நியாயமா என்று பொறாமையுடன் கூறினார். அப்போது ஹஸன் ரழி அவர்கள் நான் எப்படி அவருடன் செல்லாமல் இருக்க முடியும் நபி ஸல்ல ல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள் யார் முஸ்லிமான தனது சகோதரரின் தேவையை நிறைவேற்றி வைப்பதற்காகச் சென்று அவரது நிறைவேற்றியும் வைத்து விட்டால் அவருக்கு ஒரு ஹஜ் மற்றும் உம்ராவின் நன்மை கிடைக்கும். அதே நேரத்தில் அவரது தேவையை நிறைவேற்றி வைப்பதற்காக இவர் புறப்பட்டுச் சென்றும் அதற்கான வாய்ப்பு இவருக்குக் கிடைக்கா விட்டால் புறப்பட்டுச் சென்றதற்காக ஒரு உம்ராவின் நற்கூலி வழங்கப்படுகிறது என நபி ஸல்ல ல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியிருக்கும்போது நான் எப்படி அவருடன் செல்லாமல் இருக்க முடியும். இப்போது நான் ஹஜ், உம்ராவின் நன்மையையும் அடைந்து கொண்டேன். என்னுடைய தவாஃபை விட்டதில் இருந்து திரும்ப ஆரம்பித்து அதன் நன்மையையும் பெற்றுக் கொண்டேன் என்று பதில் கூறினார்கள்.                                                          

عَن أَنَس بن مالك : أن رسول الله صلى الله عليه وسلم قال : من أغاث ملهوفا كتب الله له ثلاثا وسبعين مغفرة مغفرة واحدة منها فيها صلاح لأمره كله وثنتان وسبعون إلى يوم القيامة ، أو ذخرها له يوم القيامة. (مسند البزار

யார் பாதிக்கப் பட்டவருக்கு உதவுவாரோ அல்லாஹ் அவருக்கு 73 மஃபிரத்துகளை வழங்குகிறான். அவற்றில் ஒரு மஃபிரத் மட்டுமே அவருடைய இம்மையின் ஈடேற்றத்திற்குப் போதுமாகும். மூதமுள்ள 72 மஃபிரத் அவருடைய மறுமையின் நலனுக்காக சேமித்து வைக்கப்படும். 

عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ....مَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِه (مسلم

எவர் தன் உடன் பிறவா சகோதரரின் தேவையை நிறைவேற்றுவதில் ஈடுபட்டிருப்பாரோ அவருடைய தேவையை நிறைவேற்றுவதில் அல்லாஹ் ஈடு பட்டிருப்பான்.                                                      

عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَثَلُ الْمُؤْمِنِينَ فِي تَوَادِّهِمْ وَتَرَاحُمِهِمْ وَتَعَاطُفِهِمْ مَثَلُ الْجَسَدِ إِذَا اشْتَكَى مِنْهُ عُضْوٌ تَدَاعَى لَهُ سَائِرُ الْجَسَدِ بِالسَّهَرِ وَالْحُمَّى (مسلم

ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதில் உண்மை முஃமின்களுக்கு உதாரணம் ஒரே உடலைப் போன்றாகும். உடலின் ஒருபகுதிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் மற்ற பகுதிகளும் அதில் ஒத்துழைக்கின்றன. விழித்திருப்பது, காய்ச்சல் போன்றவைகள் மூலம் மற்ற உறுப்புக்கள் சிரமத்தில் பங்கெடுத்துக் கொள்கின்றன. 

عَنِ الْبَرَاءِ ...قَالَ.. مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَوْمٍ جُلُوسٍ فِي الطَّرِيقِ قَالَ إِنْ كُنْتُمْ لَا بُدَّ فَاعِلِينَ فَاهْدُوا السَّبِيلَ وَرُدُّوا السَّلَامَ وَأَغِيثُوا الْمَظْلُوم – احمد

 عن أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ رضي الله عنه  قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ قَالُوا فَإِنْ لَمْ يَجِدْ قَالَ فَيَعْمَلُ بِيَدَيْهِ فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ قَالُوا فَإِنْ لَمْ يَسْتَطِعْ أَوْ لَمْ يَفْعَلْ قَالَ فَيُعِينُ ذَا الْحَاجَةِ الْمَلْهُوفَ قَالُوا فَإِنْ لَمْ يَفْعَلْ قَالَ فَيَأْمُرُ بِالْخَيْرِ أَوْ قَالَ بِالْمَعْرُوفِ قَالَ فَإِنْ لَمْ يَفْعَلْ قَالَ فَيُمْسِكُ عَنْ الشَّرِّ فَإِنَّهُ لَهُ صَدَقَةٌ (بخاري

பேரிடர் காலங்களில் அரசாங்கம் தரும் நிதி உதவிகளைப் பெறுவது பற்றி....

பேரிடர் காலங்களில் அரசாங்கம் தரும் நிதி உதவிகளைப் பெறுவது பற்றி பல்வேறு சந்தேகங்கள் மக்களுக்கு உண்டு. அது கூடாது என்று ஃபத்வா கொடுப்பவர்களும் உண்டு. சிலர் அதைப் பயன்படுத்தலாமா வேண்டாமா என்ற சந்தேகத்தில் அப்படியே செலவு செய்யாமல் வைத்திருப்பவர்களும் உண்டு. அது பற்றிய விளக்கம்...

தேர்தலுக்கு முன்பு ஓட்டுக்கு பணம் கொடுப்பதைப் போன்று 

இந்த நிவாரணத்தைப் பணத்தை கருத முடியாது

பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும். நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் பஞ்சமான நேரத்தில் மக்களுக்கு உதவி செய்த தை இங்கு உதாரணமாக  கூறலாம்.

 இந்தப் பணத்தை பயன்படுத்துவது கூடாது என்று கூறுவதாக இருந்தால் எத்தனையோ விஷயங்களில் அரசாங்கம் தரும் சலுகைகளையும் கூடாது என்று சொல்ல வேண்டியது வரும். உதாரணமாக முதியோர் ஓய்வூதியம், இரயிலில் முதியோர்களுக்கு சலுகை, அரசு பஸ்ஸில் பெண்களின் இலவசப் பயணம், அரசு வேலைகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம் இன்னும் இதுபோன்றவைகளை கூடாது என்று சொல்ல வேண்டியது வரும். 

وَلَا يَجُوزُ قَبُولُ هَدِيَّةِ أُمَرَاءِ الْجَوْرِ لِأَنَّ الْغَالِبَ في مَالِهِمْ الْحُرْمَةُ إلَّا إذَا عَلِمَ أَنَّ أَكْثَرَ مَالِهِ حَلَالٌ بِأَنْ كان صَاحِبَ تِجَارَةٍ أو زَرْعٍ فَلَا بَأْسَ بِهِ لِأَنَّ أَمْوَالَ الناس لَا تَخْلُو عن قَلِيلٍ حَرَامٍ فَالْمُعْتَبَرُ الْغَالِبُ وَكَذَا أَكْلُ طَعَامِهِمْ كَذَا في الِاخْتِيَارِ شَرْحِ الْمُخْتَارِ

அநியாயக்கார அரசர்கள் தரும் அன்பளிப்புகளை ஏற்பது கூடாது. காரணம் அவர்களின் பணங்கள் பெரும்பாலும் முறையற்ற சம்பாத்தியமாகும் ஆனால் அநியாயக்கார அரசன் என்றாலும் அரசாங்கத்தின் வருவாயில் மற்ற முறையான வருவாயும் அதிகம் இருந்தால் அப்போது அந்த அரசர்கள் தரும் வாங்குவது தவறில்லை. காரணம் மக்களின் பணம் சிறிதளவு ஹராமை விட்டும் நீங்காமல் இருக்காது. - நூல் ஃபாதாவா ஹிந்திய்யா            


முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்களின் காலத்தில் மோசமான ஆட்சியாளர் ஒருவர் இருந்தார். அவர் மக்களியமிருந்து அநியாயமாக பணம் வசூலிப்பவராக இருந்தார். ஆனால் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் யார் தவறு செய்தாலும் தனது பயானில் அதைக் கண்டிப்பார்கள். சம்பந்தப்ப்பட்ட அந்த ஆட்சியாளர் ஒருமுறை அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்களின் சபைக்கு வந்து பண முடிப்பைக் கொடுக்க முன் வந்தார். அதை ஏற்க அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் மறுத்து விட்டார்கள். அவர் மீண்டும் மீண்டும் அதை வற்புறுத்திக் கொடுக்க முயற்சித்த போது அதை வாங்கிய அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் கையில் அதை வாங்கி இரு கைகளாலும் நசுக்கினார்கள். தீனார்களால் நிரம்பியிருந்த அந்தப் பண முடிப்பிலிருந்து இரத்தம் வழிந்தோடியது. அதைக் கண்டதும் அவர் மயங்கி விழுந்து விட்டார். மயக்கம் தெளிந்தவுடன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் அவரை நோக்கி மக்களின் இரத்தத்தை உறிஞ்சி சம்பாதித்து அதை என்னிடமே தர முயற்சி செய்கிறீர்களா என்று கேட்டார்கள். அதற்குப் பிறகு அவர் அதை எடுத்துக் கொண்டு சென்று விட்டார். 


தமிழக அரசாக இருந்தாலும் சரியே அல்லது இந்திய அரசாங்கமாக இருந்தாலும் சரியே டாஸ்மாக் போன்ற முறையற்ற வருவாய்களும் இருந்தாலும் கூட அது அல்லாத எத்தனையோ முறையான வருவாய்களும் அரசுக்கு உள்ளதால் அதை முற்றிலும் ஹராம் என்று கூறி விட முடியாது.   

   أَهْدَى إلَى رَجُلٍ شيئا أو أَضَافَهُ إنْ كان غَالِبُ مَالِهِ من الْحَلَالِ فَلَا بَأْسَ إلَّا أَنْ يَعْلَمَ بِأَنَّهُ حَرَامٌ فَإِنْ كان الْغَالِبُ هو الْحَرَامَ يَنْبَغِي أَنْ لَا يَقْبَلَ الْهَدِيَّةَ وَلَا يَأْكُلَ الطَّعَامَ إلَّا أَنْ يُخْبِرَهُ بِأَنَّهُ حَلَال

قال الْفَقِيهُ أبو اللَّيْثِ رَحِمَهُ اللَّهُ تَعَالَى اخْتَلَفَ الناس في أَخْذِ الْجَائِزَةِ من السُّلْطَانِ قال بَعْضُهُمْ يَجُوزُ ما لم يَعْلَمْ أَنَّهُ يُعْطِيهِ من حَرَامٍ قال مُحَمَّدٌ رَحِمَهُ اللَّهُ تَعَالَى وَبِهِ نَأْخُذُ ما لم نَعْرِفْ شيئا حَرَامًا بِعَيْنِهِ وهو قَوْلُ أبي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ تَعَالَى وَأَصْحَابِهِ كَذَا في الظَّهِيرِيَّةِ 

 ( الفتاوى الهندية في مذهب الإمام الأعظم أبي حنيفة النعمان)

ஃபகீஹ் அபுல் லைஸ் ரஹ் அவர்கள் கூறினார்கள். ஆட்சியாளர்கள் தரும் அன்பளிப்புகளை ஏற்கும் விஷயத்தில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. சிலர் கூறும்போது தெளிவாக ஹராம் என்று உறுதியாக தெரியும் வரை அது அனுமதிக்கப்பட்டது தான் என்று கூறியுள்ளனர். இமாம் முஹம்மது ரஹ் அவர்களும் அதையே கூறியுள்ளனர். இதுதான் இமாம் அபூஹனீஃபா ரஹ் மற்றும் அவர்களுடன் இருப்பவர்களின் கூற்றாகவும் உள்ளது.             

فَفِي الْبَزَّازِيَّةِ قُبَيْلَ كِتَابِ الزَّكَاةِ : مَا يَأْخُذُهُ مِنْ الْمَالِ ظُلْمًا وَيَخْلِطُهُ بِمَالِهِ وَبِمَالِ مَظْلُومٍ آخَرَ يَصِيرُ مِلْكًا لَهُ وَيَنْقَطِعُ حَقُّ الْأَوَّلِ فَلَا يَكُونُ أَخْذُهُ عِنْدَنَا حَرَامًا مَحْضًا (رد المختار

எத்தனையோ முஸ்லிம்களின் மனதில் அரசு தரும் நிவாரண உதவிகளைப் பெறுவதில் நெருடல் உள்ளது.

அரசின் வருவாய் பெரும்பாலும் டாஸ்மாக் மூலம் தானே வருகிறது என்று கருதுகின்றனர். அது பற்றிய தெளிவு

ஹிதாயா ஃபிக்ஹ் கிதாபில் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக நிறைய சட்டங்கள் கூறப்பட்டுள்ளன. அதில் சில...

وَإِذَا بَاعَ الْمُسْلِمُ خَمْرًا وَأَخَذَ ثَمَنَهَا وَعَلَيْهِ دَيْنٌ فَإِنَّهُ يُكْرَهُ لِصَاحِبِ الدَّيْنِ أَنْ يَأْخُذَ مِنْهُ ، وَإِنْ كَانَ الْبَائِعُ نَصْرَانِيًّا فَلَا بَأْسَ بِهِ ) وَالْفَرْقُ أَنَّ الْبَيْعَ فِي الْوَجْهِ الْأَوَّلِ قَدْ بَطَلَ ؛ لِأَنَّ الْخَمْرَ لَيْسَ بِمَالٍ مُتَقَوِّمٍ فِي حَقِّ الْمُسْلِمِ فَبَقِيَ الثَّمَنُ عَلَى مِلْكِ الْمُشْتَرِي فَلَا يَحِلُّ أَخْذُهُ مِنْ الْبَائِعِ .وَفِي الْوَجْهِ الثَّانِي صَحَّ الْبَيْعُ ؛ لِأَنَّهُ مَالٌ مُتَقَوِّمٌ فِي حَقِّ الذِّمِّيِّ فَمَلَكَهُ الْبَائِعُ فَيَحِلُّ الْأَخْذُ مِنْهُ . (هداية)  فصل في البيع


 ஒரு முஸ்லிம் மதுவை விற்று அதை வைத்துள்ளார். இந்நிலையில் அவருக்குக் கடன் கொடுத்த ஒருவர் அவரிடம் தன் கடனைத் திரும்பப் பெறுகிறார் என்றால் என்ன தான் அது தனக்கு வந்து சேர வேண்டிய கடன் தான் என்றாலும் அது மது விற்ற பணம் என்பதால் அதை வாங்குவது மக்ரூஹ் ஆகும். ஆனால் அதே நேரத்தில் கடன் வாங்கிய அந்த நபர் முஸ்லிம் அல்லாதவராக இருந்து அவருக்கு இவர் கடன் தந்திருந்தால் இவர் கொடுத்த கடனைத் திருப்பி வாங்குவது மக்ரூஹ் அல்ல. தாராளமாக அது கூடும். காரணம் முந்திய மஸ்அலாவில் முஸ்லிம் என்பதால் அவரைப் பொறுத்த வரை மது கூடாது என்ற நிலை உள்ளது. ஒரு முஸ்லிம் தனக்கு ஹராமான முறையில் வருவாய் ஈட்டியிருப்பதால் அவரிடமிருந்து வாங்குவது மக்ரூஹ். ஆனால் இரண்டாவது மஸ்அலாவில் அந்த மாற்று மதத்தவரைப் பொறுத்த வரை மது விற்பனை கூடும் என்ற நிலை உள்ளது. தன்னைப் பொறுத்த வரை முறையானதாக உள்ள வகையில் வருவாய் ஈட்டியிருப்பதால் அவரிடமிருந்து வாங்குவது மக்ரூஹ் அல்ல. 

படிப்பினை- இதுபோன்று தான் என்ன தான் அரசாங்கம் மது விற்பனை மூலம் நிறைய சம்பாதித்தாலும் அது அவர்களைப் பொறுத்த வரை தவறான வியாபாரம் அல்ல. எனவே அதன் மூலம் வருகின்ற வருவாயைத் தானே நமக்குத் தருகிறார்கள் என்ற நெருடல் தேவையற்றதாகும்.                                            

மாற்று மத ஆட்சியாளர்கள் தந்த அன்பளிப்புகளை ஏற்றுக் கொண்ட நபி ஸல் அவர்கள்

وَقَالَ أَبُو حُمَيْدٍ أَهْدَى مَلِكُ أَيْلَةَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَغْلَةً بَيْضَاءَ وَكَسَاهُ بُرْدًا (بخاري

அய்லாவின் அரசர் நபி ஸல் அவர்களுக்கு வெள்ளை நிறக் கோவேரிக் கழுதையை அன்பளிப்புச் செய்தார். நபி ஸல் அவர்கள் அவருக்கு சால்வையை அன்பளிப்பாக வழங்கினார்கள்

عن أبي سعيد الخدري رضي الله عنه قال : أهدى ملك الهند إلى رسول الله صلى الله عليه و سلم جرة فيها زنجبيل فأطعم أصحابه قطعة قطعة و أطعمني منها قطعة (حاكم

இந்தியாவில் இருந்து சென்ற சேரமான் பெருமான் என்ற மன்னர் நபி ஸல் அவர்களிடம் வருகை தந்து ஒரு பை நிறைய இஞ்சியைக் கொண்டு வந்து அன்பளிப்பாக தந்தார். அதை தன் தோழர்களுக்கு நபி ஸல் பங்கிட்டார்கள்.


நபி ஸல் இருக்கும்போதே கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொடுங்கலூரில் சேரமான்பெருமான் என்ற அரசர் சந்திரன் பிளந்த நிகழ்வைக் கண்டு அதன் பிண்ணனியில் அவர் மக்கா சென்று இஸ்லாத்தை ஏற்று திரும்பும் வழியில் இறந்தார். எனினும் தன்னோடு அழைத்து வந்த மாலிக் இப்னு தீனார் ரழி அவர்கள் மூலம் ஊருக்கு கடிதம் கொடுத்தனுப்பி கி.பி 612-ல் கொடுங்களூரில் இந்தியாவின் முதல் மஸ்ஜித் கட்டப்பட்டது.


மாற்று மத அரசன் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குத் தந்த அன்பளிப்பு தான் ஹாஜரா அலை

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَاجَرَ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلَام بِسَارَةَ فَدَخَلَ بِهَا قَرْيَةً فِيهَا مَلِكٌ مِنْ الْمُلُوكِ أَوْ جَبَّارٌ مِنْ الْجَبَابِرَةِ فَقِيلَ دَخَلَ إِبْرَاهِيمُ بِامْرَأَةٍ هِيَ مِنْ أَحْسَنِ النِّسَاءِ فَأَرْسَلَ إِلَيْهِ أَنْ يَا إِبْرَاهِيمُ مَنْ هَذِهِ الَّتِي مَعَكَ قَالَ أُخْتِي ثُمَّ رَجَعَ إِلَيْهَا فَقَالَ لَا تُكَذِّبِي حَدِيثِي فَإِنِّي أَخْبَرْتُهُمْ أَنَّكِ أُخْتِي وَاللَّهِ إِنْ عَلَى الْأَرْضِ مُؤْمِنٌ غَيْرِي وَغَيْرُكِ فَأَرْسَلَ بِهَا إِلَيْهِ فَقَامَ إِلَيْهَا فَقَامَتْ تَوَضَّأُ وَتُصَلِّي فَقَالَتْ اللَّهُمَّ إِنْ كُنْتُ آمَنْتُ بِكَ وَبِرَسُولِكَ وَأَحْصَنْتُ فَرْجِي إِلَّا عَلَى زَوْجِي فَلَا تُسَلِّطْ عَلَيَّ الْكَافِرَ فَغُطَّ حَتَّى رَكَضَ بِرِجْلِهِ قَالَ الْأَعْرَجُ قَالَ أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ إِنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ قَالَتْ اللَّهُمَّ إِنْ يَمُتْ يُقَالُ هِيَ قَتَلَتْهُ فَأُرْسِلَ ثُمَّ قَامَ إِلَيْهَا فَقَامَتْ تَوَضَّأُ تُصَلِّي وَتَقُولُ اللَّهُمَّ إِنْ كُنْتُ آمَنْتُ بِكَ وَبِرَسُولِكَ وَأَحْصَنْتُ فَرْجِي إِلَّا عَلَى زَوْجِي فَلَا تُسَلِّطْ عَلَيَّ هَذَا الْكَافِرَ فَغُطَّ حَتَّى رَكَضَ بِرِجْلِهِ قَالَ عَبْدُ الرَّحْمَنِ قَالَ أَبُو سَلَمَةَ قَالَ أَبُو هُرَيْرَةَ فَقَالَتْ اللَّهُمَّ إِنْ يَمُتْ فَيُقَالُ هِيَ قَتَلَتْهُ فَأُرْسِلَ فِي الثَّانِيَةِ أَوْ فِي الثَّالِثَةِ فَقَالَ وَاللَّهِ مَا أَرْسَلْتُمْ إِلَيَّ إِلَّا شَيْطَانًا ارْجِعُوهَا إِلَى إِبْرَاهِيمَ وَأَعْطُوهَا آجَرَ فَرَجَعَتْ إِلَى إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلَام فَقَالَتْ أَشَعَرْتَ أَنَّ اللَّهَ كَبَتَ الْكَافِرَ وَأَخْدَمَ وَلِيدَةً (بخاري

சாரா அம்மையார் பற்றிய சம்பவம் விரிவாக புகாரி ஷரீஃபில் ஒரு நாள் இப்ராஹீம் (அலை) அவர்களும், சாரா அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனது வழியாகச் சென்றார்கள். அப்போது அந்த மன்னனிடம், "இங்கு ஒரு மனிதர் வந்திருக்கிறார்; அவருடன் அவரது அழகான மனைவியும் இருக்கிறாள்” என்று கூறப்பட்டது. உடனே இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்து வரச் சொல்லி ஆளனுப்பினான். அவர்களிடம் சாராவைப் பற்றி, "இவர் யார்?” என்று விசாரித்தான். இப்ராஹீம் (அலை) அவர்கள், "என் சகோதரி” என்று பதிலளித்தார்கள். பிறகு சாராவிடம் சென்று, "சாராவே! பூமியின் மேல் உன்னையும் என்னையும் தவிர இறை நம்பிக்கையுடையவர் எவரும் இல்லை. இவனோ என்னிடம் உன்னைப் பற்றிக் கேட்டு விட்டான். நீ என் சகோதரி என்று நான் அவனுக்குத் தெரிவித்து விட்டேன். ஆகவே நீ என்னைப் பொய்யனாக்கி விடாதே!” என்று கூறினார்கள். அந்த மன்னன் சாரா அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான். சாரா அவர்கள் அவனிடம் சென்ற போது, அவன் அவரைத் தன் கையால் அள்ள முயன்றான். உடனே அவன் தண்டிக்கப்பட்டான். "அல்லாஹ்விடம் எனக்காகப் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன்” என்று சொன்னான். உடனே சாரா அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க அவன் விடுவிக்கப் பட்டான். பிறகு இரண்டாவது முறையாக அவர்களை அணைக்க முயன்றான். முன்பு போலவே மீண்டும் தண்டிக்கப்பட்டான். அல்லது அதைவிடக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டான். அப்போது "அல்லாஹ்விடம் எனக்காகப் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன்” என்று சொன்னான். உடனே சாரா அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க அவன் விடுவிக்கப்பட்டான். பிறகு தன் காவலன் ஒருவனை அழைத்து "நீங்கள் என்னிடம் ஒரு மனிதரைக் கொண்டு வரவில்லை. ஒரு ஷைத்தானைக் கொண்டு வந்துள்ளீர்கள்” என்று சொன்னான். பிறகு ஹாஜர் அவர்களை சாரா அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான். இப்ராஹீம் (அலை) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது சாரா அவர்கள் வந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கைகளால் சைகை செய்து, "என்ன நடந்தது?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அல்லாஹ் இறை நிராகரிப்பாளனின் அல்லது தீயவனின் சூழ்ச்சியை முடியடித்து அவன் மீதே திருப்பி விட்டான். ஹாஜரைப் பணிப் பெண்ணாக அளித்தான்” என்று கூறினார்கள்.நூல்: புகாரி (3358)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...