وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ
مَشْهُودًا (78) الاسراء
நற்காரியங்கள் அனைத்தும் நன்மையில் சமமானவை
அல்ல. நிய்யத்தை கவனித்து நன்மைகள் மாறுபடும் மேலும் அதற்காக நாம் எடுத்துக்
கொள்ளும் சிரமங்களைக் கவனித்தும் நன்மைகள் மாறுபடும். சில நற்காரியங்களுக்கு
செய்யாமலேயே நன்மைகள் கிடைக்கும். சில நற்காரியங்களை செய்தும் நன்மை கிடைக்காது.
நிய்யத் சரியில்லாததால் செய்தும் நன்மை
கிடைக்காமல் போவதற்கு உதாரணம்.
(தர்மம் செய்த பிறகு
அதைச் சொல்லிக் காட்டுவதால் அதற்கு நன்மை இல்லாமல் போய் விடும்)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُبْطِلُوا
صَدَقَاتِكُمْ بِالْمَنِّ وَالْأَذَى... (264) البقرة
நிய்யத் சரியாக இருந்தால் செய்யாமலேயே நன்மைகள்
கிடைப்பதற்கு உதாரணம்.
عَنْ أَنَسٍ رَضِيَ
اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فِي
غَزَاةٍ فَقَالَ إِنَّ أَقْوَامًا بِالْمَدِينَةِ خَلْفَنَا مَا سَلَكْنَا شِعْبًا
وَلَا وَادِيًا إِلَّا وَهُمْ مَعَنَا فِيهِ حَبَسَهُمْ الْعُذْرُ (بخاري
நபி ஸல் அவர்கள் ஒரு
போரில் இருந்த போது கூறினார்கள். சில ஜனங்கள் (நம்மோடு வராமல்)
மதீனாவில் தங்கி விட்டார்கள். (இருந்தாலும் அவர்கள்
நம்மோடு தான் இருக்கிறார்கள்.) நாம் எந்தெந்த
பள்ளத்தாக்குகளைக் கடந்து செல்கிறோமோ எந்தெந்த கணவாய்களைக் கடந்து செல்கிறோமோ
அங்கெல்லாம் அவர்கள் நம்மோடு தான் இருக்கிறார்கள். காரணம் சூழ்நிலைகள் அவர்களைத்
தடுத்துள்ளது. (ஆனால் அவர்களின்
நிய்யத் நம்மோடு வர வேண்டும் என்று தான்
உள்ளது.)
நாம் சகித்துக்
கொள்ளும் சிரமங்களைக் கவனித்தும் நன்மைகள் மாறுபடும்
சிரமப்பட்டு எழுத்துக்
கூட்டி குர்ஆனை ஓதுபவருக்கு மிகுந்த
நற்கூலி உண்டு.
عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ
وَالَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَيَتَتَعْتَعُ فِيهِ وَهُوَ عَلَيْهِ شَاقٌّ لَهُ
أَجْرَانِ (مسلم) وفِي حَدِيثِ وَكِيعٍ وَالَّذِي يَقْرَأُ وَهُوَ يَشْتَدُّ
عَلَيْهِ لَهُ أَجْرَانِ (الماهر بالقرآن) هو الحاذق الكامل الحافظ الذي لا يتوقف ولا يشق عليه
القراءة لجودة حفظه وإتقانه ( ويتتعتع فيه ) هو الذي يتردد في تلاوته لضعف حفظه
فله أجران أجر بالقراءة وأجر بتتعتعه في تلاوته ومشقته ]
கருத்து- குர்ஆனை மனப்பாடமாக அல்லது ஓதுபவருக்கும் சிறப்பு உண்டு ஆனால் அதை
சிரமப்பட்டு எழுத்துக் கூட்டி ஓதுபவருக்கு இரு மடங்கு நற்கூலி உண்டு
வாகனத்தில் வருபவரை
விட நடந்து வருபவருக்கு சிறப்பு
عَنْ جَابِرِ بْنِ
عَبْدِ اللَّهِ قَالَ خَلَتْ الْبِقَاعُ حَوْلَ الْمَسْجِدِ فَأَرَادَ بَنُو
سَلِمَةَ أَنْ يَنْتَقِلُوا إِلَى قُرْبِ الْمَسْجِدِ فَبَلَغَ ذَلِكَ رَسُولَ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُمْ إِنَّهُ بَلَغَنِي
أَنَّكُمْ تُرِيدُونَ أَنْ تَنْتَقِلُوا قُرْبَ الْمَسْجِدِ قَالُوا نَعَمْ يَا
رَسُولَ اللَّهِ قَدْ أَرَدْنَا ذَلِكَ فَقَالَ يَا بَنِي سَلِمَةَ دِيَارَكُمْ
تُكْتَبْ آثَارُكُمْ دِيَارَكُمْ تُكْتَبْ آثَارُكُمْ (مسلم) بَاب فَضْلِ كَثْرَةِ
الْخُطَا إِلَى الْمَسَاجِدِ-كِتَاب الْمَسَاجِدِ وَمَوَاضِعِ الصَّلَاةِ
மஸ்ஜிதை விட்டும் தூரமான வீடுகளைக்
கொண்ட பனூஸலமா குடும்பத்தார்கள் மஸ்ஜிதுக்கு அருகில் மனைகள் காலியாக இருப்பதைக் கேள்விப்பட்டு
மஸ்ஜிதுக்கு அருகில் தங்களுடைய வீடுகளை மாற்றியமைத்துக் கொள்ள நாடினார்கள்.
அப்போது நபி ஸல் அவர்களுக்கு இச்செய்தி கிடைத்த து. அவர்களிடம் நபி ஸல் அவர்கள்
மஸ்ஜிதுக்கு அருகில் நீங்கள் இடம் பெயர நாடுகிறீர்களா என நபி ஸல் அவர்கள் கேட்க,
ஆம் என்று அவர்கள் பதில் கூறினார்கள். அப்போது நபி ஸல் அவர்கள் பனூ ஸலமா
குடும்பத்தாரே உங்களுடைய எட்டுக்கள் ஒவ்வொன்றுக்கும் நன்மைகள் எழுதப்படும் அதை
இழக்காதீர்கள் என்றார்கள்
عَنْ أَبِي مُوسَى
قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَعْظَمَ
النَّاسِ أَجْرًا فِي الصَّلَاةِ أَبْعَدُهُمْ إِلَيْهَا مَمْشًى فَأَبْعَدُهُمْ
وَالَّذِي يَنْتَظِرُ الصَّلَاةَ حَتَّى يُصَلِّيَهَا مَعَ الْإِمَامِ أَعْظَمُ
أَجْرًا مِنْ الَّذِي يُصَلِّيهَا ثُمَّ يَنَامُ (مسلم) بَاب فَضْلِ كَثْرَةِ
الْخُطَا إِلَى الْمَسَاجِدِ-
நற்கூலியால் மக்களில் சிறந்தவர்கள் மஸ்ஜிதை நோக்கிய தூரமான நடை
கொண்டவர்களாகும்.
عَنْ أُبَيِّ بْنِ
كَعْبٍ رضي الله عنه قَالَ كَانَ رَجُلٌ لَا أَعْلَمُ رَجُلًا أَبْعَدَ مِنْ
الْمَسْجِدِ مِنْهُ وَكَانَ لَا تُخْطِئُهُ صَلَاةٌ قَالَ فَقِيلَ لَهُ أَوْ
قُلْتُ لَهُ لَوْ اشْتَرَيْتَ حِمَارًا تَرْكَبُهُ فِي الظَّلْمَاءِ وَفِي
الرَّمْضَاءِ قَالَ مَا يَسُرُّنِي أَنَّ مَنْزِلِي إِلَى جَنْبِ الْمَسْجِدِ
إِنِّي أُرِيدُ أَنْ يُكْتَبَ لِي مَمْشَايَ إِلَى الْمَسْجِدِ وَرُجُوعِي إِذَا
رَجَعْتُ إِلَى أَهْلِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَدْ جَمَعَ اللَّهُ لَكَ ذَلِكَ كُلَّهُ (مسلم) بَاب فَضْلِ كَثْرَةِ
الْخُطَا إِلَى الْمَسَاجِدِ-
உபய் இப்னு கஃப் ரழி
கூறினார்கள். ஒரு மனிதர் இருந்தார் மஸ்ஜிதை நோக்கி தூரமாக நடந்து வருபவர்களில் அவரை
விட யாரையும் நான் கண்டதில்லை. அவரிடம் நான் நீங்கள் ஒரு கழுதையை வாங்கிக்
கொள்ளக்கூடாதா என்று கேட்க, அதற்கு அவர் என்னுடைய நடை ஒவ்வொன்றுக்கும் நன்மைகள்
எழுதப்படுவதை விரும்புகிறேன் என்று கூறினார். அவரைப் பற்றி நபி ஸல் கூறும்போது
அவர் அனைத்து நன்மைகளை சேகரித்துக் கொண்டார் என்றார்கள்
சிரமத்துடன் செய்யும் அமலை சஹாபாக்கள் பெரும்
பாக்கியமாக கருதினார்கள்
முஆத் ரழி அவர்களுக்கு
மரண நேரம் நெருங்கிய போது அழுதார்கள் ஏன் அழுகிறீர்கள் என்று கேட்ட போது நான்
மவ்த் வந்து விட்டதை நினைத்து அழவில்லை மாறாக, இனி
நான் ஜிஹாத் செய்ய முடியாதே என்றும், கடுமையான குளிர்
காலங்களில் இரவில் நின்று வணங்க முடியாதே என்றும், கடுமையான
வெயில் காலங்களில் நோன்பு வைக்கும் பாக்கியம் இனிமேல் எனக்குக் கிடைக்காதே
என்பதற்காகவும் நான் அழுகிறேன் என்றார்கள்.
கஞ்சன் செய்யும் தர்மத்திற்கு அதிக நற்கூலியும் இதே
அடிப்படையில் தான்
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ
قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ قَالَ أَنْ
تَصَدَّقَ وَأَنْتَ شَحِيحٌ أَوْ صَحِيحٌ تَأْمُلُ الْعَيْشَ
وَتَخْشَى الْفَقْرَ وَلَا تُمْهِلْ حَتَّى إِذَا كَانَتْ بِالْحُلْقُومِ قُلْتَ
لِفُلَانٍ كَذَا وَلِفُلَانٍ كَذَا وَقَدْ كَانَ (مسند احمد)
யாருக்கும் தெரியாமல் தர்மம் செய்ய எண்ணி மூன்று இரவுகள் அலைந்தவரின் முயற்சி
வீணாகவில்லை
أَنَّ رَسُولَ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ رَجُلٌ لَأَتَصَدَّقَنَّ
بِصَدَقَةٍ فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ سَارِقٍ فَأَصْبَحُوا
يَتَحَدَّثُونَ تُصُدِّقَ عَلَى سَارِقٍ فَقَالَ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ
لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدَيْ
زَانِيَةٍ فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ اللَّيْلَةَ عَلَى زَانِيَةٍ
فَقَالَ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَلَى زَانِيَةٍ لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ
فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدَيْ غَنِيٍّ فَأَصْبَحُوا
يَتَحَدَّثُونَ تُصُدِّقَ عَلَى غَنِيٍّ فَقَالَ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَلَى
سَارِقٍ وَعَلَى زَانِيَةٍ وَعَلَى غَنِيٍّ فَأُتِيَ فَقِيلَ لَهُ أَمَّا
صَدَقَتُكَ عَلَى سَارِقٍ فَلَعَلَّهُ أَنْ يَسْتَعِفَّ عَنْ سَرِقَتِهِ وَأَمَّا
الزَّانِيَةُ فَلَعَلَّهَا أَنْ تَسْتَعِفَّ عَنْ زِنَاهَا وَأَمَّا الْغَنِيُّ
فَلَعَلَّهُ يَعْتَبِرُ فَيُنْفِقُ مِمَّا أَعْطَاهُ اللَّهُ .(بخاري
நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முற்காலத்தில்) ஒருவர் "நான் இன்றிரவு தர்மம்
செய்யப்போகிறேன்" எனக் கூறிக்கொண்டு, (இரவில்)
தர்மத்துடன் வெளியே வந்து, (தெரியாமல்)
அதை ஒரு விபச்சாரியிடம் கொடுத்து விட்டார். காலையில் மக்கள்,
"இன்றிரவுஒரு விபச்சாரிக்குத் தர்மம்
கொடுக்கப்பட்டுள்ளது" எனப் பேசிக் கொண்டனர். (இதைக் கேட்ட) அவர்,
"இறைவா! விபச்சாரிக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே புகழ்
அனைத்தும் உரியது. (நாளையும்) நான் தர்மம் செய்வேன்" என்று கூறினார். மறுநாள்
அவர் தர்மத்துடன் (இரவில்) வெளியே வந்து, அதை
ஒரு பணக்காரரின் கையில் கொடுத்துவிட்டார். மறுநாள் காலையில் மக்கள்,
"ஒரு பணக்காரருக்குத் தர்மம் செய்யப்பட்டுள்ளது" எனப்
பேசிக்கொண்டனர். (இதைக்கேட்ட) அவர், "இறைவா! பணக்காரருக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே புகழ்
அனைத்தும் உரியது. (நாளையும்) நான் தர்மம் செய்வேன்" என்று கூறினார்.
(மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் புறப்பட்டுச் சென்று, ஒரு
திருடனின் கையில் அதைக் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள்,
"இன்றிரவு ஒரு திருடனுக்குத் தர்மம் செய்யப்
பட்டுள்ளது" என்று பேசிக்கொண்டனர். உடனே அவர், "இறைவா! விபச்சாரிக்கும் பணக்காரனுக்கும் திருடனுக்கும்
தர்மம் கொடுத்ததற்காக உனக்கே எல்லாப் புகழும் உரியது" எனக் கூறினார். பின்னர்
(கனவில்) அவரிடம் (வானவர்) அனுப்பிவைக்கப்பட்டு (பின்வருமாறு) கூறப்பட்டது: உமது
தர்மம் ஏற்கப்பட்டுவிட்டது. விபச்சாரிக்கு நீர் கொடுத்த தர்மம், அவள் விபச்சாரத்திலிருந்து விலகி கற்பைப் பேணக் காரணமாக
அமையலாம். பணக்காரனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மத்தால் அவன் படிப்பினை பெற்று, அல்லாஹ் தனக்கு வழங்கியவற்றிலிருந்து தர்மம் செய்யக்கூடும்.
திருடனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மம் அவன் களவைக் கைவிடக் காரணமாக அமையலாம்.
பனி காலத்தில் பெரும்பாலும் ஃபஜ்ரு
தொழுகை பல பேருக்கு தவறி விடுகிறது
عَنْ
أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ فَضْلُ صَلَاةِ الْجَمِيعِ عَلَى صَلَاةِ الْوَاحِدِ خَمْسٌ
وَعِشْرُونَ دَرَجَةً وَتَجْتَمِعُ مَلَائِكَةُ اللَّيْلِ وَمَلَائِكَةُ
النَّهَارِ فِي صَلَاةِ الصُّبْحِ يَقُولُ أَبُو هُرَيْرَةَ اقْرَءُوا إِنْ
شِئْتُمْ {وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا(78الاسراء)
(بخاري)
அதிகாலை நேரத்தின்
மகத்துவம் பற்றி விஞ்ஞானிகளின் கூற்று...
நரம்பியல் துறை
ஆராய்ச்சியாளர்கள் மனித மூளையின் ஆற்றலை நவீன கருவிகளைக் கொண்டு ஆய்வு
செய்கிறார்கள். மூளையின் ஆற்றல் முழுமையாக அறியப்படவில்லையென்றாலும் அவர்கள் கண்டு
பிடித்த வரை சராசரியாக மனித மூளையின் ஆற்றல் 30 முதல் 40 சதவீதமாக இருக்கிறது.
ஆனால் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக (சுமார் ஒன்றரை மணி நேரம்)
மனித மூளையின் ஆற்றல் 70 சதவீதமாக இருக்கிறது.
ஒரு விஞ்ஞானி பொறாமையோடு கூறிய வார்த்தை- முஸ்லிம்கள்
பிறக்கும்போதே வாயில் வெள்ளிக் கரண்டியோடு பிறந்தவர்கள். (MUSLIMS ARE BORN
WITH SILVER SPOON IN THEIR MOUTH) அதாவது பாக்கிய சாலிகள். காரணம் மூளையின் ஆற்றல் உச்சத்தில் இருக்கும்போது ஃபஜ்ர் தொழுகையைத் தொழுது, தங்கள் அலுவல்களை
துவங்கும்படி ஏவப்பட்டுள்ளார்கள். பெண்களின்
வயிற்றில் கரு உருவாக காரணமான சினை முட்டை உற்பத்தி அவர்களின் உடலில் வெப்ப நிலை
சீராக இருப்பதின் மூலமாகவே ஏற்படுகிறது. அதிகாலை நேரத்தில் அவர்களின் உடம்பில் உளூ, அல்லது குளிப்பின் மூலம் தண்ணீர்
படும்போது பெண்களின் உடலில் வெப்ப நிலை சீராக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அதன் படி ஒரு பெண் அதிகாலையில் எழுந்து குளித்து அல்லது உளூச் செய்து சுப்ஹு
தொழுவதால் அவர்களின் உடம்பில் வெப்ப நிலை சமச்சீராக இருக்கும்
عَنْ أَبِي
هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَحِمَ اللَّهُ رَجُلًا قَامَ مِنْ
اللَّيْلِ فَصَلَّى ثُمَّ أَيْقَظَ امْرَأَتَهُ فَصَلَّتْ فَإِنْ أَبَتْ نَضَحَ
فِي وَجْهِهَا الْمَاءَ وَرَحِمَ اللَّهُ امْرَأَةً قَامَتْ مِنْ اللَّيْلِ
فَصَلَّتْ ثُمَّ أَيْقَظَتْ زَوْجَهَا فَصَلَّى فَإِنْ أَبَى نَضَحَتْ فِي
وَجْهِهِ الْمَاءَ (ابوداود)
காலையில் சுப்ஹு
தொழுது விட்டு நேரத்தோடு வியாபாரத்தை துவக்க வேண்டும் என்ற நபிமொழி
عَنْ صَخْرٍ
الْغَامِدِيِّ رضي الله عنه عَنْ النَّبِيِّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا وَكَانَ إِذَا
بَعَثَ سَرِيَّةً أَوْ جَيْشًا بَعَثَهُمْ مِنْ أَوَّلِ النَّهَارِ وَكَانَ صَخْرٌ
رَجُلًا تَاجِرًا وَكَانَ يَبْعَثُ تِجَارَتَهُ مِنْ أَوَّلِ النَّهَارِ فَأَثْرَى
وَكَثُرَ مَالُهُ (ابوداود)
அதிகாலை நேரத்தில்
நாமும் நேரத்தோடு எழுந்து, நம் பிள்ளைகளையும் நேரத்தோடு எழுப்பி
அவர்களையும் சுப்ஹு தொழுகைக்கு அழைத்து வரும் பழக்கம் நம்மிடம் வர வேண்டும்.
அப்படியே அங்கு நடைபெறும் மதரஸாவிலும் அமர்ந்து நம் பிள்ளைகள் பாடம் பயின்றால் நம்
பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும். இன்று பரவலாக காலை மதரஸாக்கள் வலுவிழந்து
காணப்படுகின்றன. காரணம் பல வீடுகளில் இரவு 11 மணி வரை கண்டதையும் பார்த்து விட்டு
பிள்ளைகள் தூங்குவதால் அதிகாலை நேரத்தோடு அவர்களை எழுப்புவதற்கு பெற்றோர்களுக்கு
மணம் வருவதில்லை. மாலையிலும் டியூஷன், HOME WORK என்று இதே ரீதியில் பிள்ளைகள் செல்வதால் மார்க்கக்
கல்வியே இல்லாமல் பல பிள்ளைகள் வளரும் சூழல் உருவாகி உள்ளது. இந்த நிலை மாற ஒரேவழி
இரவில் சீக்கிரமாக பிள்ளைகளை தூங்க வைத்து, அதிகாலை நேரத்தோடு எழுப்புவது தான்.
கடும் குளிரிலும் அதிகாலை
எழுந்து உளூச் செய்து தொழுபவர்களுக்கு
அல்லாஹ் தரும் கண்ணியம்
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَلَا أَدُلُّكُمْ عَلَى مَا يَمْحُو
اللَّهُ بِهِ الْخَطَايَا وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ قَالُوا بَلَى يَا رَسُولَ
اللَّهِ قَالَ إِسْبَاغُ الْوُضُوءِ عَلَى الْمَكَارِهِ وَكَثْرَةُ الْخُطَا إِلَى
الْمَسَاجِدِ وَانْتِظَارُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ فَذَلِكُمْ الرِّبَاطُ (مسلم) باب فَضْلِ إِسْبَاغِ
الْوُضُوءِ-كتاب الطهارة
إسباغ الوضوء على
المكاره أي تثنية الوضوء وتثليثه في زمان البرد الشديد ، وذلك أن الإنسان يكره
ويجد المشقة والعناء بصب الماء على الجسد فإذا كرر الصب في الوضوء فقد أسبغ ووفي
وأكمل ولذلك مُدح ووُعد بهذا الأجر والثواب (شرح الترمذي)
إسباغ الوضوء على
المكاره يعني: في السبرات في البرد يُسبغ الإنسان الوضوء مع أنه يكره إيذاءه
بهذا الماء البارد ن لكنه يفعله ابتغاء وجه الله هذا من أسباب دخول الجنة كذلك
الإنسان عندما يسافر للحج او للجهاد هذا
مكروهاً عنده ، لكنه كما قال تعالى:{وَعَسَى أَنْ
تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَكُمْ (216البقرة (شرح كتاب
الرقاق) قيل: ومنها الجد في طلب الماء مع إعوازه وشراءه بالثمن الغالي(مرعاة شرح
مشكاة)
பாவங்களை
அழித்து அந்தஸ்தை உயர்த்துகின்ற அமல்களின் வரிசையில் பனி காலத்திலும் உளூவைப்
பரிபூரணமாக செய்வதின் சிறப்பைப் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது
கடும் பனியும் கூட அல்லாஹ்வின் சோதனை தான்
நரகம் தன்னுடைய பனியை
தானே தாங்கிக் கொள்ளாமல் நரகம் வெளிப்படுத்தும் சிறு துளி பனியைத் தான்
குளிர்காலத்தில் நாம் அனுபவிக்கிறோம்
عن أَبي هُرَيْرَةَ
رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ اشْتَكَتْ النَّارُ إِلَى رَبِّهَا فَقَالَتْ رَبِّ أَكَلَ بَعْضِي
بَعْضًا فَأَذِنَ لَهَا بِنَفَسَيْنِ نَفَسٍ فِي الشِّتَاءِ وَنَفَسٍ فِي
الصَّيْفِ فَأَشَدُّ مَا تَجِدُونَ مِنْ الْحَرِّ وَأَشَدُّ مَا تَجِدُونَ مِنْ الزَّمْهَرِيرِ(بخاري) باب صِفَةِ
النَّارِ وَأَنَّهَا مَخْلُوقَةٌ – كتاب بدء الخلق وفي رواية للبيهقي)
فَأَشَدَّ مَا تَجِدُونَ مِنَ الْحَرِّ فَمِنْ حَرِّهَا وَأَشَدُّ مَا تَجِدُونَ
مِنَ الْبَرْدِ فَمِنْ زَمْهَرِيرِهَا- (الزَّمْهَرِير : شِدَّة الْبَرْد)
நரகம் அல்லாஹ்விடம் என்னுடைய ஒரு பகுதி மற்றொரு பகுதியை ஆக்கிரமிக்கிறது (அந்த அளவுக்கு எனக்குள் இருக்கும் வெப்பமான பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம்
அதிகமாக உள்ளது. அதேபோல் எனக்குள் இருக்கும் பனி நிறைந்த பகுதிகளில் பனியின்
தாக்கமும் அதிகமாகவே உள்ளது) என்று
அல்லாஹ்விடம் முறையிடும். அப்போது அல்லாஹ் நரகத்திற்கு (உன்னில் ஒரு பகுதியை இலேசாக வெளியே விட்டுக்
கொள் என்று) வெயில் காலத்திலும் பனி காலத்திலும் அனுமதி கொடுப்பான். அதனடிப்படையில் வெயில்
காலத்தில் நரகம் வெளிப்படுத்தும் சிறு துளி வெப்பத்தையே நீங்கள் வெயில் நேரத்தில்
அனுபவிக்கிறீர்கள். அதுபோல் பனி காலத்தில் நரகம் வெளிப்படுத்தும் சிறு துளி
பனியையே நீங்கள் குளிர் நேரத்தில் அனுபவிக்கிறீர்கள்.
விளக்கம்- எவ்வாறு மனித உடம்புக்குள் சில நேரங்களில் அதிகப்படியான GAS சேர்ந்து விடும்போது அதை சற்று
வெளிப்படுத்தினால் தான் உடலுக்கு நிம்மதி என்பதைப் மேற்படி ஹதீஸை நாம் எடுத்துக்
கொள்ளலாம்.
படிப்பினை- புஹாரீ இமாம் அவர்கள் “நரகம் ஏற்கெனவே
படைக்கப்பட்டு விட்டது என்ற பாடத்தில் இதற்கு முந்தைய ஹதீஸை கொண்டு வருகிறார்கள்.
அதன் படி எங்கோ இருக்கும் நரகம் வெளிப்படுத்தும் சிறு துளி வெப்பமும், குளிரும் பூமி வரை பரவி
நம்மை வாட்டி வதைக்கிறது என்றால் நரகத்தின் வெப்பம், அல்லது குளிர் எப்படி
இருக்கும் என்ற சிந்தனையை மக்களுடைய உள்ளத்தில் உண்டாக்க வேண்டியது நம்
கடமையாகும். இந்தக் குளிரை தாங்க முடியாமல் காதுகளையும், முகத்தையும்
முற்றிலுமாக மறைத்துக் கொண்டு காலை நேரங்களில் நாம் நடமாடுகிறோம் என்றால் அந்த
நரகத்தின் கடும் குளிரை விட்டு நம்மை பாதுகாக்க எதை வைத்து மறைத்துக் கொள்ள
முடியும்.
நரகத்தின் பனியில் ஒருநாள்
வேதனைப்படுவது நரகத்தின் நெருப்பில் ஆயிரம் வருடம் வேதனைப்படுவதை விட பயங்கரமானது
لَا يَرَوْنَ فِيهَا
شَمْسًا وَلَا زَمْهَرِيرًا (13)الدهر
சுவனத்தில் பனியையும் வெப்பத்தையும் காண முடியாது என்ற வசனத்தின் விளக்கமாக
பின்வரும் தஃப்ஸீர் கூறப்பட்டுள்ளது
الزمهرير:البرد
القاطع وقال مقاتل بن حيان: هو شيء مثل رؤوس الإبر ينزل من السماء في غاية البرد وقال ابن
مسعود : هو لون من العذاب وهو البرد الشديد حتى ان أهل النار إذا ألقوا فيه سألوا
الله أن يعذبهم بالنارألف سنة أهون عليهم من عذاب الزمهرير يوما واحدا (قرطبي)
உடம்பெல்லாம் ஊசியால் உடம்பில் குத்தினால் எவ்வாறு இருக்குமோ அவ்வாறு
நரகத்தின் பனியின் தாக்கம் இருக்கும்.
கடும் குளிர் கலந்த
சூறாவளி காற்றின் மூலம் ஆது சமூகத்தினர் அழிக்கப் பட்டார்கள்
قَالَ تَعَالَى
" فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا (حم السجدة16) " قَالَ
بَعْضهمْ وَهِيَ الشَّدِيدَة الْهُبُوب وَقِيلَ الْبَارِدَة وَقِيلَ هِيَ الَّتِي
لَهَا صَوْت وَالْحَقّ أَنَّهَا مُتَّصِفَة بِجَمِيعِ ذَلِكَ فَإِنَّهَا كَانَتْ
رِيحًا شَدِيدَة قَوِيَّة لِتَكُونَ عُقُوبَتهمْ مِنْ جِنْس مَا اِغْتَرُّوا بِهِ
مِنْ قُوَاهُمْ وَكَانَتْ بَارِدَة شَدِيدَة الْبَرْد جِدًّا كَقَوْلِهِ تَعَالَى
"(وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ (سورة
الحاقة(6)(تفسير ابن كثير)
ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடுவதைப் பற்றி....
ஒவ்வொரு புத்தாண்டு துவங்கும் போதும் மனிதனின்
ஆயுட்காலம் குறைந்து கொண்டே வருகிறது என்பது தான் உண்மை. உதாரணமாக 2001-ல் ஒருவர்
பிறந்திருக்கிறார் அவருக்கு 2061-ல் மவ்த்தை அல்லாஹ் அவருடைய விதியில்
எழுதியிருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். இப்போது அவருடைய வாழ்க்கை அறுபது வருட
காலம். இப்போது சிந்தியுங்கள். 2024 ஜனவரி
1ம் தேதி புத்தாண்டு பிறக்கும்போது அவரது
ஆயுள் ஐம்பதாக குறையும். 2020 ஜனவரி 1-ல் அவருடைய
ஆயுள் நாற்பதாக குறையும் இவ்வாறாக...ஆயுள் குறைந்து கொண்டே வருவதை பிறந்த நாள்,
புத்தாண்டு என்ற பெயரில் கேக் வெட்டி. ஸ்வீட் கொடுத்து கொண்டாடுகிறார் என்றால்
அவர் புத்திசாலியாக இருக்க முடியுமா?
வாழ்க்கை என்பது
மவ்த்தை நோக்கிய ஒரு பயணம் இந்தப் பயணத்தில் பலரும் தன்
வாகனத்தில் ஏற நம்மை அழைப்பார்கள். ஷைத்தான், நஃப்ஸ், நண்பன் இப்படியாக பலரும் நம்மை
அழைக்கும்போது கண்ட கண்ட வாகனத்தில் ஏறினால் நாம் போய்ச் சேருமிடம் நரகமாகி
விடலாம். மற்றொரு புறம் குர்ஆனும் நம்மை அழைக்கும். அதன் வழியில் சென்றால் சுவனம்.
ஒரு பேருந்து நிலையத்தில் நிற்கும்போது தமது பஸ்ஸில்
ஏறும்படி பலரும் கூவிக்கூவி நம்மை அழைத்தாலும் நாம் நிதானமாக யோசித்து எந்தப்
பேருந்து பாதுகாப்பாகவும், விரைவாகவும் நம்மைக் கொண்டு போய் சேர்க்கும் என
தேர்ந்தெடுக்கிறோம். வாழ்க்கைப் பயணம் என்பது அதை விட மிக முக்கியமானது
عن إبراهيم بن أدهم أنه كان يسير إلى بيت الله ،
فإذا أعرابي على ناقة له فقال : يا شيخ إلى أين ؟فقال إبراهيم إلى بيت الله ، قال
كأنك مجنون لا أرى لك مركباً ؛ ولا زاداً ، والسفر طويل ، فقال إبراهيم : إن لي
مراكب كثيرة ولكنك لا تراها ، قال : وما هي ؟قال : إذا نزلت على بلية ركبت مركب
الصبر ، وإذا نزل على نعمة ركبت مركب الشكر وإذا نزل بي القضاء ركبت مركب الرضا ،
وإذا دعتني النفس إلى شيء علمت أن ما بقي من العمر أقل مما مضى فقال الأعرابي : سر
بإذن الله فأنت الراكب وأنا الراجل.(
تفسير الرازي
இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் ஒருமுறை நடந்தே ஹஜ்ஜுக்கு
சென்று கொண்டிருந்தார்கள். வழியில் வாகனத்தில் இவரைக் கடந்து சென்ற ஒருவர் “ இப்றாஹீமே எங்கு செல்கிறீர்? எனக்கேட்க, நான்
கஃபாவை நோக்கிச் செல்கிறேன் என்று கூறிய போது உடனே அவர் “ உங்களிடம் எந்த வாகனமும், உணவும் இல்லாத நிலையில் நீண்ட
தொலைவில் உள்ள கஃபாவுக்குச் செல்வதாக கூறுகிறீர் உமக்கென்ன பைத்தியமா? என்றார்.
அதற்கு இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் “உம்மால் பார்க்க இயலாத எத்தனையோ வாகனங்கள் என்னிடம் உள்ளன.
அதில் நான் பயணம் செய்கிறேன். எனக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் பொறுமை எனும்
வாகனத்தில் நான் பயணம் செய்வேன். எனக்கு ஏதேனும் அல்லாஹ்வின் உபகாரம் கிடைத்தால்
நன்றி செலுத்துதல் எனும் வாகனத்தில் நான் பயணம் செய்வேன். நான் துஆ கேட்ட பின்பும் அல்லாஹ்வின் விதியின்
படி நான் விரும்பாதது நடைபெற்றால் விதியைப் பொருந்திக் கொள்ளுதல் எனும் வாகனத்தில்
நான் பயணம் செய்வேன். என்னுடைய நஃப்ஸு ஏதேனும் தீமையை எனக்குத் தூண்டினால் நான்
வாழ்ந்த காலங்களை விட நான் வாழப்போகும் காலங்கள் குறைவு என்று எண்ணும்அந்த வாகனத்தில் நான் பயணம்
செய்வேன். என சொல்லிக் கொண்டேயிருக்க உடனே அந்த மனிதர் பதில் சொல்ல முடியாமல்
நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடருங்கள். நீங்கள் தான் உண்மையிலேயே வாகனத்தில்
செல்பவர் நான் நடந்து செல்பவன் என்று கூறி அங்கிருந்து விரைந்து சென்று விட்டார்.
புத்தாண்டு தினத்தில்
பைக் ரேஸ், மது போதை போன்ற கேளிக்கைகளில் ஈடுபடும் இளைஞர்களுக்கு மேற்படி அறிவுரை
சென்றடைய வேண்டும். போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதில் நமது இளைஞர்கள் தான்
முண்ணனியில் உள்ளனர் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. இது மிகவும் கவலைக்குரிய
விஷயமாகும்.
புத்தாண்டு
கொண்டாடுபவர்களிடம் சில கேள்விகள்
ஆண்டு
ஓடினால்! வயது மூப்பு தான் வரும். இது நியதி. பின்பு
ஏன் இந்த கொண்டாட்டம்? ஆண்டு தொடங்கினால்! பிறப்பு என்று கொண்டாடுகிறீர்கள், ஒரே நொடியில் ஆண்டு தொடங்குவதினால் “புத்தாண்டு பிறந்து விட்டது” என்றால்! அதே ஒரு நொடி முன்பு சென்ற ஆண்டு
இறந்து விடுகின்றதே! அதற்க்கு என்ன செய்வீர்கள்? அதிகமான
சமுதாயங்கள் ஆண்டு பிறப்புக்கு கொண்டாடும் போது, ஆண்டு
இறப்புக்கும் துக்கம் அனுஷ்டிக்க வேண்டியது தானே! சென்ற ஆண்டு தான் இறந்து
விடுகின்றதே! அதற்க்கு துக்கம் அனுஷ்டிக்க கூடாதா? புத்தாண்டு
பிறந்து விட்டால் அனைவரின் நாவுகளிலும் “புத்தாண்டு
வாழ்த்துக்கள் HAPPY NEW YEAR” என்ற முழக்கம். இதை சொல்வதினால் என்ன பயன்? இந்த வார்த்தையினால் ஏதாவது நன்மை பயக்குமா? அல்லது புத்தாண்டு பிறந்து விட்டால் உலகில்
ஏதாவது மாற்றங்கள் நிகழுமா? அல்லது
ஒழுக்கம் சீர்தூக்குமா? அல்லது
இளைய சமுதாயத்தில் சிந்தனை புரட்சி ஏற்படுமா? ஒன்றுமே
ஏற்படப் போவதில்லை. குடிகாரர்களின் உல்லாச தினமாக இந்த நாள் இருப்பதைத் தவிர
வேறெதுவுமில்லை
சீசனில் மட்டும் தொழுவதற்கு வருபவர்கள் சிலர் நம்மிடையே
உள்ளனர். ரமழான் 27-ம் நாள், ஜும்ஆ, ஈத் ஆகிய நாட்களைத் தொடர்ந்து ஜனவரி-1ம் தேதி
ஃபஜ்ரில் சில புதிய முகங்களை மஸ்ஜிதில் காண முடியும். அன்று அவர்கள் பக்தியோடு
துஆவும் செய்வர். இவர்கள் சந்தர்ப்பவாதிகள்
சந்தர்ப்பவாதிகளின் துஆக்களை அல்லாஹ் ஏற்பது சுலபமல்ல
ஆழ்கடல் இருளில் சிக்கிய இரு நபர்கள் துஆ செய்தனர்.
அவர்களில் ஒருவரின் துஆவை மட்டும் அல்லாஹ் ஏற்று அவரை அல்லாஹ் காப்பாற்றினான்.
ஏனெனில் அவர் எப்போதும் துஆ செய்பவர். அந்த சிரமத்திலும் துஆ செய்தார். எனவே அவரது
துஆ ஏற்கப்பட்டது. அவர் தான் நபி யூனுஸ்
அலைஹிஸ்ஸலாம். இன்னொருவனும் துஆ செய்தான். அவன் தான் ஃபிர்அவ்ன் அவன்
சந்தர்ப்பவாதி. இதற்கு முன்பு தன்னையே கடவுள் என்று வாதிட்டவன். கடைசியில் ஆபத்து
வந்தவுடன் மூன்று தடவை ஈமானுடைய வாசகங்களைக் கூறி மன்னிப்புக் கேட்டான். ஆனால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக