يَا بَنِي آدَمَ خُذُوا زِينَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ (31)الاعراف
عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ رضي الله عنها قَالَتْ كَانَتْ يَدُ كُمِّ قَمِيصِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى الرُّصْغِ(ابوداود)
இன்றைய நம்முடைய இஸ்லாமிய இளைஞர்களிடம் ஆடைக் கலாச்சாரம் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. ஒரு புறம் அரைக்கால் டவுசர் அணிந்து கொண்டு முழங்கால் தெரிய நிறைய பேர் வலம் வருகிறார்கள் என்றால் மறுபுறம் பள்ளிக்குத் தொழுகைக்கு வரும் இளைஞர்களில் சிலர் குட்டையான டி-ஷர்ட் மட்டுமே அணிந்து வந்து அத்துடன் தொழுகின்றனர். அவர்கள் ருகூவு செய்வதற்காக குனியும்போது கட்டாயம் மறைக்கவேண்டிய பின்பகுதி அப்படியே வெளியே தெரிகிறது.இதனால் அவர்களின் தொழுகை கூடாது என்பதைக் கூட அறிந்து கொள்வதில்லை எனவே ஆடை சம்பந்தமாக அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும்.
فَقَالَ اللَّه تَعَالَى " خُذُوا زِينَتكُمْ عِنْد كُلّ مَسْجِد دلت الآية على وجوب ستر العورة كما تقدم. وذهب جمهور أهل العلم إلى أنها فرض من فروض الصلاة. وقال الأبهري هي فرض في الجملة، وعلى الإنسان أن يسترها عن أعين الناس في الصلاة وغيرها. وهو الصحيح؛ (قرطبي)
மேற்படி ஆயத்தின் விளக்கமாக அவ்ரத்தை மறைப்பது தொழுகையில் மட்டுமா அல்லது மற்ற நேரத்திலுமா என்பதில் இமாம்களிடம் கருத்து வேறுபாடு உண்டு. பல இமாம்கள் மற்ற நேரங்களிலும் கூட தொப்புள் முதல் முட்டுக்கால் வரையிலான அவ்ரத்தை மறைப்பது கட்டாயம் என்று கூறுகின்றனர்.
عَنْ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ قَالَ أَقْبَلْتُ بِحَجَرٍ أَحْمِلُهُ ثَقِيلٍ وَعَلَيَّ إِزَارٌ خَفِيفٌ قَالَ فَانْحَلَّ إِزَارِي وَمَعِيَ الْحَجَرُ لَمْ أَسْتَطِعْ أَنْ أَضَعَهُ حَتَّى بَلَغْتُ بِهِ إِلَى مَوْضِعِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ارْجِعْ إِلَى ثَوْبِكَ فَخُذْهُ وَلَا تَمْشُوا عُرَاةً (مسلم) மிஸ்வரா ரழி என்ற நபித்தோழர் கூறினார்கள். நான் ஒரு கனமான கல்லை சுமந்து வந்தேன். என் மீது இலேசான கீழாடை இருந்தது. என்னுடைய கீழாடை நழுவியது. நான் அந்தக் கல்லை அதற்குரிய இடத்தில் வைக்கும் வரை கீழாடையை எடுத்து உடுத்த முடியவில்லை. அப்போது நபி ஸல் அவர்கள் என்னிடம் முதலில் உமது ஆடையை எடுத்து உடுத்துவீராக நிர்வாணமாக நடக்க வேண்டாம் என்று கூறினார்கள்.
عن جَرْهَد كَانَ مِنْ أَهْلِ الصُّفَّةِ قَالَ : جَلَسَ عِنْدَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَفَخِذِى مُنْكَشِفٌ فَقَالَ خَمِّرْ عَلَيْكَ أَمَا عَلِمْتَ أَنَّ الْفَخِذَ عَوْرَةٌ (سنن الكبري للبيهقي
ஜுர்ஹுத் ரழி அவர்கள் கூறினார்கள் எங்களுடன் நபி ஸல் அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அப்போது எனது தொடை திறந்திருந்த து. அப்போது நபி ஸல் அவர்கள் உமது தொடையை மூடுவீராக தொடை கட்டாயம் மறைக்க வேண்டிய பகுதி என்பது உமக்குத் தெரியாதா என்று கூறினார்கள்.
நாம் அணியும் ஆடைகள் சுன்னத்தான முறையில் இருக்க வேண்டும்.
சுன்னத்தான முறைகள் என்பதில் பல்வேறு வழிமுறைகள் உள்ளன.
வெண்மை ஆடையை அணிவது நல்லது
عَنْ أَبِي الدَّرْدَاءِ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَحْسَنَ مَا زُرْتُمْ اللَّهَ بِهِ فِي قُبُورِكُمْ وَمَسَاجِدِكُمْ الْبَيَاضُ(ابن ماجة)عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَسُوا ثِيَابَ الْبَيَاضِ فَإِنَّهَا أَطْهَرُ وَأَطْيَبُ(ابن ماجة)لأنه يلوح فيها أدنى وَسخ فَيُزَالُ بخلاف سائر الألوان (حاشية السندي) قيل لبقائه على اللون الذي خلقه الله عليه كما أشار اليه سبحانه بقوله فطرة الله التي فطر الناس عليها(شرح ابن ماجة
உங்களுடைய மண்ணறைகளிலும் உங்களுடைய மஸ்ஜித்களிலும் அல்லாஹ்வை நீங்கள் சந்திக்கும்போது அணிய வேண்டியவைகளில் மிக அழகானது வெண்மையான ஆடைகளாகும். நூல் இப்னுமாஜா
வெண்மை ஆடையை அணியுங்கள் அது தான் பரிசுத்தமானதாகும். விளக்கம்- ஒருவர் வெண்மையான ஆடையை அணியும் போது சிறிய அழுக்கு இருந்தாலும் அது மற்றவர்களுக்குத் தெரியும் என்பதால் அத்துடன் வெளியே செல்லத் தயங்குவார். அதை சுத்தப்படுத்துவதில் ஈடுபடுவார் அல்லது சுத்தமான வேறு ஆடையை அணிவார் ஆக அவர் முடிந்த வரை சுத்தமாக இருப்பதற்கு வெண்மை ஆடை காரணமாக அமையும். மற்ற நிறத்தாலான ஆடை அவ்வாறல்ல. அதில் அழுக்குப் பட்டாலும் தெரியாது என்பதால் அத்துடன் செல்லத் தயங்க மாட்டார். மேலும் வெண்மை நிறம் இயற்கை நிறமாக இருக்கிறது இஸ்லாம் பெரும்பாலும் இயற்கையை விரும்பும்.
வெண்மை ஆடையைத் தவிர மற்ற நிற ஆடைகள் கூடாது என்பதல்ல.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பச்சை, கறுப்பு நிற ஆடைகளையும் அணிந்துள்ளார்கள்
عَنْ أَبِي رِمْثَةَ رَضِيَ اللَّهُ عَنْه قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ ثَوْبَانِ أَخْضَرَانِ (نسائ)عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ صَنَعْتُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بُرْدَةً سَوْدَاءَ فَلَبِسَهَا فَلَمَّا عَرَقَ فِيهَا وَجَدَ رِيحَ الصُّوفِ فَقَذَفَهَا قَالَ وَأَحْسِبُهُ قَالَ وَكَانَ تُعْجِبُهُ الرِّيحُ الطَّيِّبَةُ(ابوداود
அபூ ரம்ஸா ரழி கூறினார்கள்
நபி ஸல் அவர்கள் இரண்டு பச்சை நிற ஆடைகளை அணிந்தவர்களாக எங்களிடம் வருகை புரிந்தார்கள்.
ஆயிஷா ரழி கூறினார்கள் நான் நபி ஸல் அவர்களுக்காக கருப்பு மேலங்கியைத் தயாரித்துக் கொடுத்தேன். அதை அணிந்தார்கள் பின்பு ஆனால் அந்த ஆடையை அணிந்த நிலையில் வியர்க்கும்போது ஆட்டு முடியின் வாடை ஏற்பட்டதால் அதை கழற்றிப் போட்டு விட்டார்கள்.
சட்டையும் அணிந்துள்ளார்கள். சஹாபாக்களின் சட்டை என்பது கெண்டைக்காலின் பாதி வரைக்கும் இருந்தது.
இப்போதுள்ள இளைஞர்கள் அணிவது போன்று இடுப்புக்கு மேல் உள்ளதாக இல்லை
عن أم سلمة رض قالت كان أحب الثياب إلى رسول الله صلى الله عليه وسلم القميص- عن المغيرة بن شعبة رض أن النبي صلى الله عليه وسلم لبس جبة رومية ضيقة الكمين(ترمذي)عن أبي إسحاق السبيعي يقول أدركتُهم وقُمُصُهم إلى نصف الساق أو قريب من ذلك وكم أحدهم لا يجاوز يده(التمهيد
முழுக்கைச் சட்டை அணிவது சுன்னத்
عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ رضي الله عنها قَالَتْ كَانَتْ يَدُ كُمِّ قَمِيصِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى الرُّصْغِ(ابوداود)
நபி ஸல் அவர்களின் சட்டைக்கை மணிக்கட்டு வரை இருந்தது.
தொப்பி, தலைப்பாகை அணிவதும் சுன்னத்
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ مَكَّةَ عَامَ الْفَتْحِ وَعَلَى رَأْسِهِ الْمِغْفَرُ(بخاري)
நபி ஸல் அவர்களின் தலைமீது இரும்பாலான தலைக்கவசம் இருக்கும் நிலையில்எங்களிடம் வருகை புரிந்தார்கள்.
قَالَ رُكَانَةُ وَسَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فَرْقُ مَا بَيْنَنَا وَبَيْنَ الْمُشْرِكِينَ الْعَمَائِمُ عَلَى الْقَلَانِسِ(ابوداود)
நமக்கும் இணை வைப்பாளர்களுக்கு மத்தியில் வேறுபாடு தொப்பி அணிந்து தலைப்பாகை அணிவதாகும்
عن عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ عَمَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَدَلَهَا بَيْنَ يَدَيَّ وَمِنْ خَلْفِي(ابوداود)عَنْ أَبِي يَزِيدَ الْخَوْلَانِيِّ أَنَّهُ سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ يَقُولُ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الشُّهَدَاءُ أَرْبَعَةٌ رَجُلٌ مُؤْمِنٌ جَيِّدُ الْإِيمَانِ لَقِيَ الْعَدُوَّ فَصَدَقَ اللَّهَ حَتَّى قُتِلَ فَذَلِكَ الَّذِي يَرْفَعُ النَّاسُ إِلَيْهِ أَعْيُنَهُمْ يَوْمَ الْقِيَامَةِ هَكَذَا وَرَفَعَ رَأْسَهُ حَتَّى وَقَعَتْ قَلَنْسُوَتُهُ قَالَ (الراوي)فَمَا أَدْرِي أَقَلَنْسُوَةَ عُمَرَ أَرَادَ أَمْ قَلَنْسُوَةَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ...(بخاري)
நபி ஸல் அவர்களிடம் கேட்டதாக உமர் ரழி கூற, அவர்களிடம் கேட்டதாக ஃபழாலா ரழி அவர்கள் கூறினார்கள்.
ஷுஹதாக்கள் நான்கு வகையினர். அதில் ஒரு வகையினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற முஃமினான மனிதராவார். அவர் எதிரிகளைச் சந்தித்தார். அல்லாஹ்வை உண்மைப் படுத்தினார். (அதாவது உண்மைக்காகப் போரிட்டார்). இறுதியில் ஷஹீதாக்கப்பட்டார். அவருடைய அந்தஸ்தாகிறது மறுமையில் தங்களின் கண்களை உயர்த்தி மேல் நோக்கிப் பார்க்கும் வகையில் இருக்கும் என்று சொல்லியவாறு மேல் நோக்கிப் பார்ப்பது போன்று தலையை உணர்த்தினார்கள். அப்போது அவர்கள் அணிந்திருந்த தொப்பி கீழே விழுந்தது.
அறிவிப்பாளர்கள் இதைப் பற்றிக் கூறும்போது ஃபழாலா ரழி அவர்கள் தொப்பி கீழே விழுந்ததாக கூறுவது உமர் ரழி அவர்களின் தொப்பியா அல்லது நபி ஸல் அவர்களின் தொப்பியா என்று தெரியவில்லை என்று கூறியுள்ளனர்
விளக்கம்- நபி ஸல் அவர்களோ அல்லது உமர் ரழி அவர்களோ யாராக இருப்பினும் தொப்பி அணிந்துள்ளார்கள் என்பதற்கு இது சான்றாக உள்ளது.
அணிவதற்கு தடை செய்யப்பட்ட சில ஆடைகள்
عن عَبْد اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ رضي الله عنه قَالَ رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيَّ ثَوْبَيْنِ مُعَصْفَرَيْنِ فَقَالَ إِنَّ هَذِهِ مِنْ ثِيَابِ الْكُفَّارِ فَلَا تَلْبَسْهَا (مسلم) وفي رواية قُلْتُ أَغْسِلُهُمَا قَالَ بَلْ أَحْرِقْهُمَا (مسلم)المعصفر : المصبوغ بالعصفر وهو نبات أصفر اللون
அப்துல்லாஹிப்னு அம்ருப்னுல் ஆஸ் ரழி கூறினார்கள். என் மீது குங்குமச் சாயம் போடப்பட்ட இரண்டு ஆடைகளை நபி ஸல் அவர்கள் பார்த்து விட்டு இது நிச்சயமாக காஃபிர்களின் ஆடையாகும். இதை அணிய வேண்டாம் என்று தடுத்தார்கள். அப்போது அவர்களிடம் நான் இதை சாயம் போகும் அளவுக்கு துவைத்து விடவா என்று கேட்க, இல்லை அதை எரித்து விடு என்றார்கள்.
பட்டாடைகளை பெண்கள் அணியலாம். ஆண்கள் அணிவது கூடாது. சிகிச்சைக்காகவே தவிர
عن عُمَرَ رضي الله عنه يَقُولُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَبِسَ الْحَرِيرَ فِي الدُّنْيَا لَمْ يَلْبَسْهُ فِي الْآخِرَة رواه البخاري- عَنْ عَلِيٍّ رضي الله عنه قَالَ أُهْدِيَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حُلَّةُ سِيَرَاءَ فَبَعَثَ بِهَا إِلَيَّ فَلَبِسْتُهَا فَعَرَفْتُ الْغَضَبَ فِي وَجْهِهِ فَقَالَ إِنِّي لَمْ أَبْعَثْ بِهَا إِلَيْكَ لِتَلْبَسَهَا إِنَّمَا بَعَثْتُ بِهَا إِلَيْكَ لِتُشَقِّقَهَا خُمُرًا بَيْنَ النِّسَاءِ (مسلم)
நபி ஸல் அவர்கள் கூறினார்கள் எந்த ஆண் பட்டாடை அணிகிறாரோ அவர் மறுமையில் அணிய மாட்டார். விளக்கம்- மறுமையில் அணிய மாட்டார் என்றால் சுவனம் செல்ல மாட்டார் என்பது கருத்தாகும்.
அலீ ரழி கூறினார்கள். நபி ஸல் அவர்களுக்கு ஒரு நேரத்தில் பட்டு அங்கி அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அதை எனக்குக் கொடுத்தனுப்பினார்கள். அதை நான் அணிந்து நான் வந்த போது நபி ஸல் அவர்களின் முகத்தில் கோபத்தைக்கண்டேன். பின்பு நபிஸல் அவர்கள் கூறினார்கள். இதை அணிவதற்காக நான் கொடுத்தனுப்பவில்லை. மாறாக இதைக்கிழித்துத் தைத்து பெண்களுக்கு முக்காடாக ஆக்கிக் கொள்ளவே இதை அனுப்பினேன் என்றார்கள்
இதைப்போல மற்றொரு சம்பவம் உமர் ரழி அவர்கள் விஷயத்திலும் நிகழ்ந்தது
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَأَى حُلَّةَ سِيَرَاءَ عِنْدَ بَابِ الْمَسْجِدِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ ، لَوِ اشْتَرَيْتَ هَذِهِ فَلَبِسْتَهَا يَوْمَ الْجُمُعَةِ وَلِلْوَفْدِ إِذَا قَدِمُوا عَلَيْكَ . فَقَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - « إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لاَ خَلاَقَ لَهُ فِى الآخِرَةِ » . ثُمَّ جَاءَتْ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - مِنْهَا حُلَلٌ ، فَأَعْطَى عُمَرَ بْنَ الْخَطَّابِ - رضى الله عنه - مِنْهَا حُلَّةً فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ ، كَسَوْتَنِيهَا وَقَدْ قُلْتَ فِى حُلَّةِ عُطَارِدٍ مَا قُلْتَ قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - « إِنِّى لَمْ أَكْسُكَهَا لِتَلْبَسَهَا » . فَكَسَاهَا عُمَرُ بْنُ الْخَطَّابِ - رضى الله عنه - أَخًا لَهُ بِمَكَّةَ مُشْرِكًا . (بخاري 886
மஸ்ஜித் வாசலில் நபி ஸல் அவர்கள் ஒரு அருமையான அங்கி விற்கப்படுவதை உமர் ரழி அவர்கள் கண்டு அல்லாஹ்வின் தூதரே இதை வாங்கி நீங்கள் ஜும்ஆவுக்கும் மற்றும் தூதுக் குழுவினர் தங்களைச் சந்திக்க வரும்போதும் உடுத்தினால் நன்றாக இருக்குமே என்று கூற, அதற்கு நபி ஸல் அவர்கள் யாருக்கு மறுமையில் எந்த ஒரு நற்பாக்கியமும் இல்லையோ அவர் தான் இதை உடுத்துவார். என்று கூறினார்கள் பின்பு நபி ஸல் அவர்களுக்கு அது மாதிரியான ஆடைகள் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அதில் ஒன்றை உமர் ரழி அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள். அப்போது உமர் ரழி அவர்கள் அல்லாஹ்வின் தூதரே இதற்கு முன்பு பட்டாடை விஷயத்தில் நீங்கள் அவ்வாறு சொல்லியிருக்க, இதை எனக்கு அன்பளிப்பாக தருகிறீர்களா என்று உமர் ரழி அவர்கள் கேட்க, நபி ஸல் அவர்கள் இதை நீங்கள் அணிவதற்காக நான் கொடுத்தனுப்பவில்லை. என்று கூறினார்கள்,பின்பு அதை உமர் ரழி மக்காவில் உள்ள தனது மாற்று மத சகோதரருக்குக் கொடுத்தனுப்பினார்கள்.
படிப்பினை- மாற்று மத சகோதரருடன் நட்பு ரீதியாக கொடுக்கல், வாங்கல் வைத்துக் கொள்வதில் தவறில்லை.
2.பல்வேறு வெளி நபர்கள் கலந்து கொள்ளும் ஓரிடத்திற்குச் செல்லும்போது இருப்பதில் நல்ல ஆடையை உடுத்துவதும் தவறல்ல.
قُلْ مَنْ حَرَّمَ زِينَةَ اللَّهِ الَّتِي أَخْرَجَ لِعِبَادِهِ وَالطَّيِّبَاتِ مِنَ الرِّزْقِ قُلْ هِيَ لِلَّذِينَ آمَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا خَالِصَةً يَوْمَ الْقِيَامَةِ.. 32 الاعراف)فقد دلت الآية على لباس الرفيع من الثياب والتجمل بها في الجمع والأعياد وعند لقاء الناس ومزاورة الإخوان.قال أبو العالية:كان المسلمون إذا تزاوروا تجملوا (قرطبي)وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُوا وَاشْرَبُوا وَالْبَسُوا وَتَصَدَّقُوا فِي غَيْرِ إِسْرَافٍ وَلَا مَخِيلَةٍ (بخاري)
பட்டாடை அணியக் கூடாது என்று உலமாக்கள் தடுத்தும் கேட்காத மன்னர் ஷாஜஹான்
மன்னர் ஷாஜஹானுக்கு ஒருமுறை பட்டாடை அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அதை அவர் அணிந்தார். அப்போது ஒளரங்கசீப் ரஹ் அவர்கள் தன் தந்தையிடம் வேண்டாம் தந்தையே நீங்கள் பட்டாடை அணியக்கூடாது என் உஸ்தாத் முல்லா ஜீவன் ரஹ் அவர்கள் ஆண்கள் பட்டாடை அணியக்கூடாது என அறிவுரை கூறியுள்ளார்கள். என்று தடுக்க, அதைக் கேட்காத ஷாஜஹான் என்னைத் தடுக்க அவர் யார் என்று கூறியதுடன் பட்டாடைகளை அணிந்தார். அத்தோடு முல்லா ஜீவன் ரஹ் அவர்களைக் கைது செய்யவும் உத்தரவிட்டார். அது தெரிந்த முல்லா ஜீவன் ரஹ் அவர்கள் ரப்பிடம் தொழுது துஆச் செய்வதில் ஈடுபட்டனர். அதேநேரம் இதை அறிந்து பயந்த ஒளரங்கசீப் ரஹ் அவர்கள் தன் தந்தையிடம் சென்று கெஞ்சுகிறார்கள். ஹழ்ரத் அவர்கள் நமக்கு எதிராக துஆச் செய்தால் என்ன ஆகும். எனவே தயவு செய்து கைது உத்தரவை வாபஸ் பெறுங்கள். என்று கெஞ்ச, மன்னர் ஷாஜஹான் கைது உத்தரவை வாபஸ் பெறுகிறார். அந்த உத்தரவை வாங்கிக் கொண்டு வேகமாக ஒளரங்கசீப் ரஹ் அவர்கள் உஸ்தாதிடம் வருவதற்குள் உஸ்தாத் அவர்கள் துஆ ஓதி கைகளை முகத்தில் தடவி விட்டார்கள். ஒளரங்கசீப் ரஹ் விஷயத்தைக் கூறியவுடன் முல்லா ஜீவன் ரஹ் அவர்கள் நீங்கள் இத்தகைய காரியத்தில் ஈடுபட்ட காரணத்தால் உம்முடைய ஆட்சிக்காலம் வரை தான் முகலாய அரசு நீடிக்கும் என்றார்கள். அதன்படி ஒளரங்கசீப் ரஹ் அவர்களோடு முகலாய ஆட்சி முடிவுக்கு வந்தது.
-சில வருடங்களுக்கு திண்டுக்கல் மாநாட்டில் தமிழ் மாநில ஜ.உ.சபை தலைவர் பேசியது
நிர்பந்தம் காரணமாக ஆண்கள் பட்டாடை அணியலாம்
أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رضي الله عنه خَطَبَ بِالْجَابِيَةِ فَقَالَ نَهَى نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لُبْسِ الْحَرِيرِ إِلَّا مَوْضِعَ إِصْبَعَيْنِ أَوْ ثَلَاثٍ أَوْ أَرْبَعٍ(مسلم
عن أَنَس رضي الله عنه أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ وَالزُّبَيْرَ بْنَ الْعَوَّامِ شَكَوَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقَمْلَ فَرَخَّصَ لَهُمَا فِي قُمُصِ الْحَرِيرِ فِي غَزَاةٍ لَهُمَا(مسلم)
பட்டுக் கரை உள்ள லுங்கியைப் போல இரண்டு விரல் அளவுக்கு மட்டும் பட்டு கலந்திருப்பது தவறல்ல. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரழி அவர்களும் ஜுபைர் இப்னு அவ்வாம் ரழி அவர்களும் நபி ஸல் அவர்களிடம் பேன் தொல்லையை முறையிட்டபோது அவர்கள் மட்டும் பட்டு அணிந்து கொள்ள நபி ஸல் அனுமதி தந்தார்கள்
ஆடை அணியும்போது துஆ
عَنْ سَهْلِ بْنِ مُعَاذِ بْنِ أَنَسٍ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَكَلَ طَعَامًا ثُمَّ قَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا الطَّعَامَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ قَالَ وَمَنْ لَبِسَ ثَوْبًا فَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا الثَّوْبَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ (ابوداود)
ஆடை அணியும் போது வலது புறத்தில் ஆரம்பிப்பது சுன்னத்
عَنْ أَبِى هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْه قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا لَبِسَ قَمِيصًا بَدَأَ بِمَيَامِنِهِ.رواه الترمذي
அழுக்கான ஆடையை அணிந்தவரை எச்சரித்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْه قَالَ أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَى رَجُلًا شَعِثًا قَدْ تَفَرَّقَ شَعْرُهُ فَقَالَ أَمَا كَانَ يَجِدُ هَذَا مَا يُسَكِّنُ بِهِ شَعْرَهُ وَرَأَى رَجُلًا آخَرَ وَعَلْيِهِ ثِيَابٌ وَسِخَةٌ فَقَالَ أَمَا كَانَ هَذَا يَجِدُ مَاءً يَغْسِلُ بِهِ ثَوْبَهُ (ابوداود)
ஒரு மனிதரை நபி ஸல் அவர்கள் தலை விரி கோலமாக கண்டு இவர் தன் தலையை வாரிக் கொள்வதற்கு எதையும் பெற்றுக் கொள்ள மாட்டாரா என்று எச்சரித்தார்கள். மற்றொரு மனிதரை நபி ஸல் அவர்கள் அழுக்கான ஆடை அணிந்திருப்பதாக கண்டு இவர் தன் ஆடையை துவைத்து அணிந்து கொள்வதற்கு எதையும் பெற்றுக் கொள்ள மாட்டாரா என்று எச்சரித்தார்கள்.
عَنْ أَبِي الْأَحْوَصِ عَنْ أَبِيهِ أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ثَوْبٍ دُونٍ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَكَ مَالٌ قَالَ نَعَمْ مِنْ كُلِّ الْمَالِ قَالَ مِنْ أَيِّ الْمَالِ قَالَ قَدْ آتَانِي اللَّهُ مِنْ الْإِبِلِ وَالْغَنَمِ وَالْخَيْلِ وَالرَّقِيقِ قَالَ فَإِذَا آتَاكَ اللَّهُ مَالًا فَلْيُرَ عَلَيْكَ أَثَرُ نِعْمَةِ اللَّهِ وَكَرَامَتِهِ (نسائ)
அபுல் அஹ்வஸ் ரழி அவர்களின் தந்தை நபி ஸல் அவர்களிடம் வந்தபோது மிகவும் எளிமையான ஆடையில் இருந்த தைக் கண்டு நபி ஸல் அவர்கள் அவரிடம் உங்களுக்கு வசதி உள்ளதா என்று கேட்க, ஆம் என்று அவர் கூற, எந்த மாதிரியான வசதி என்று நபி ஸல் கேட்டார்கள் அதற்கு அவர் ஒட்டகம், குதிரை, ஆடுகள், அடிமைகள் என எல்லா வசதியும் உள்ளது என்றார். அப்போது நபி ஸல் அவர்கள் அவரிடம் அல்லாஹ் உங்களுக்கு வசதி வாய்ப்பைத் தந்திருந்தால் அது உங்களிடம் வெளிப்படட்டும் என்றார்கள்.
விளக்கம்- மிகவும் ஆடம்பரமான ஆடைகளை உடுத்துவதற்கு ஆதாரமாக இதை நாம் எடுக்க முடியாது. தரமான, நீண்ட நாள் தாக்குப் பிடிக்கக் கூடிய ஆடைகள் வாங்குவதற்கு சக்தியிருந்தும் தரமற்ற ஆடைகளை அணிந்து அவர் வந்ததை த் தான் நபி ஸல் அவர்கள் கண்டித்தார்கள்.
ஜீன்ஸ் ஃபேண்ட் என்ற பெயரால் கரண்டைக்குக் கீழ் ஆடை உடுத்துவது பற்றி..
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا أَسْفَلَ مِنْ الْكَعْبَيْنِ مِنْ الْإِزَارِ فَفِي النَّارِ(بخاري)عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ أَبَاهُ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَا رَجُلٌ يَجُرُّ إِزَارَهُ إِذْ خُسِفَ بِهِ فَهُوَ يَتَجَلَّلُ فِي الْأَرْضِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ(بخاري)عَنْ ابْنِ عُمَرَ رَضِ قَالَ مَرَرْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي إِزَارِي اسْتِرْخَاءٌ فَقَالَ يَا عَبْدَ اللَّهِ ارْفَعْ إِزَارَكَ فَرَفَعْتُهُ ثُمَّ قَالَ زِدْ فَزِدْتُ فَمَا زِلْتُ أَتَحَرَّاهَا بَعْدُ فَقَالَ بَعْضُ الْقَوْمِ إِلَى أَيْنَ فَقَالَ أَنْصَافِ السَّاقَيْنِ(مسلم)عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ جَرَّ ثَوْبَهُ مِنْ الْخُيَلَاءِ لَمْ يَنْظُرْ اللَّهُ إِلَيْهِ قَالَتْ أُمُّ سَلَمَةَ يَا رَسُولَ اللَّهِ فَكَيْفَ تَصْنَعُ النِّسَاءُ بِذُيُولِهِنَّ قَالَ تُرْخِينَهُ شِبْرًا قَالَتْ إِذًا تَنْكَشِفَ أَقْدَامُهُنَّ قَالَ تُرْخِينَهُ ذِرَاعًا لَا تَزِدْنَ عَلَيْهِ (نسائ
நண்பர்களை சந்திக்கும்போது தன் ஆடைகளை, அங்க அவயங்களை சரி செய்து கொள்வதும் நபிவழி தான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சில நேரங்களில் தண்ணீரில் தன் முகத்தைப் பார்த்து தலை முடியையும், தாடி முடியையும் சரி செய்வார்கள்
عن عائشة رضي الله عنها قالت: كان نفر من أصحاب رسول الله صلى الله عليه وسلم ينتظرونه على الباب فخرج يريدهم وفي الدار ركوة فيها ماء فجعل ينظر في الماء ويسوي لحيته وشعره. فقلت:يا رسول الله وأنت تفعل هذا؟ قال: "نعم إذا خرج الرجل إلى إخوانه فليهيئ من نفسه فإن الله جميل يحب الجمال-
ஆயிஷா ரழி அவர்கள் அறிவித்துள்ளார்கள்- நபித்தோழர்களில் சிலர் நபி ஸல் அவர்களின் வீட்டு வாசலுக்கு வெளியே நபி ஸல் அவர்களுக்காக காத்திருந்தனர். அவர்களை நோக்கி நபி ஸல் செல்ல நாடிய போது வீட்டில் பெரிய குவளையில் இருந்த தண்ணீரில் தன்னுடைய முகத்தைப் பார்த்து தன்னுடைய தலை முடியையும் தாடி முடியையும் சரி செய்தார்கள். அப்போது நான் நபிஸல் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே நீங்களுமா (முடிகளை அழகு படுத்துகிறீர்கள்?) என்றேன். அதற்கு நபி ஸல் அவர்கள் ஒருவர் தன்னுடைய மார்க்க சகோதரர்களைக் காணச் சென்றால் அவர் தன்னை நல்ல முறையில் தயார் படுத்திக் கொள்ளட்டும். (அதாவது அழகு படுத்திக் கொள்ளட்டும்.) காரணம் அல்லாஹ் அழகானவன். (நம்மிடமும்) அழகை விரும்புகிறான் என்றார்கள்.
عن أنس بن مالك رَضِيَ اللَّهُ عَنْه قال: كان رسول الله صلى الله عليه وسلم يكثر دهن رأسه ويسرح لحيته بالماء-عن خالد بن معدان رَضِيَ اللَّهُ عَنْه قال: كان رسول الله صلى الله عليه وسلم يسافر بالمشط والمرآة والدهن والسواك والكحل(تفسرالقرطبي)وفي تفسير القرطبي ان الإنسان يجب أن يرى جميلا. وذلك حظ للنفس لا يلام فيه ولهذا يسرح شعره وينظر في المرآة ويسوي عمامته ويلبس بطانة الثوب الخشنة إلى داخل وظهارته الحسنة إلى خارج. وليس في شيء من هذا ما يكره ولا يذم (تفسرالقرطبي)
நபி ஸல் அவர்கள் அதிகமாக தலை முடிக்கும் தாடி முடிக்கும் எண்ணெய் தேய்ப்பவர்களாக ஆயிருந்தார்கள். தாடியை ஒழுங்கு படுத்துபவர்களாகவும் ஆயிருந்தார்கள். பிரயாணத்திற்குச் செல்லும்போது சீப்பு, கண்ணாடி, மிஸ்வாக், சுர்மாவுடன் செல்வார்கள். குர்துபீ தஃப்ஸீரில் பின்வருமாறு உள்ளது. ஒரு மனிதர் மற்றவர்களின் கண்களுக்கு அழகானவராகத் தெரிய வேண்டும். இது அவரவர் மீதுள்ள கடமையாகும். இது தவறல்ல. இதற்காக அவர் தலை முடியை சரி செய்வார். கண்ணாடியில் முகம் பார்ப்பார். தலைப்பாகையை சரி செய்வார். அணியும் சட்டையில் பார்ப்பதற்கு அழகாக இல்லாததை உட்பகுதியிலும் அழகாக உள்ளதை மேற்பகுதியிலும் ஆக்கிக் கொள்வார். இது எதுவும் தவறல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக