வியாழன், 11 ஜனவரி, 2024

மஸ்ஜிதின் கண்ணியம்

 

இன்றைக்கு எத்தனையோ இளைஞர்கள் மஸ்ஜிதின் கண்ணியம் புரியாமல் ஜும்ஆ நாளில் குத்பா ஓதும் நேரத்தில் கூட மொபைல் போனில் வாட்ஸ்-அப் போன்ற விஷயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் கால்களை கிப்லாவின் பக்கம் நீட்டிய படி அமர்ந்து மஸ்ஜிதின் கண்ணியத்தைக் கெடுக்கின்றனர். இன்னும் சிலர் ஏதேனும் வம்பிழுப்பதற்கு மட்டுமே மஸ்ஜிதுக்கு வருகை தருவதைப் போன்று தேவையற்ற கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். மஸ்ஜித் என்பது எவ்வளவு புனிதமான இடம் என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ ...(18) التوبة

இறையில்லத்தின் கண்ணியம் தெரியாமல் கஃபாவுக்குள் வைத்தே தவறு செய்

ஆணையும் பெண்ணையும் அல்லாஹ் கல்லாக மாற்றினான்

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا (158)البقرة

ذَكَرَ مُحَمَّد بْن إِسْحَاق فِي كِتَاب السِّيرَة أَنَّ إِسَافًا وَنَائِلَة كَانَا بَشَرَيْنِ فَزَنَيَا دَاخِل الْكَعْبَة فَمُسِخَا حَجَرَيْنِ فَنَصَبَتْهُمَا قُرَيْش تُجَاه الْكَعْبَة لِيَعْتَبِر بِهِمَا النَّاسُ فَلَمَّا طَالَ عَهْدهمَا عُبِدَا ثُمَّ حُوِّلَا إِلَى الصَّفَا وَالْمَرْوَة فَنُصِبَا هُنَالِكَ فَكَانَ مَنْ طَافَ بِالصَّفَا وَالْمَرْوَة يَسْتَلِمهُمَا وَلِهَذَا.... (تفسير كثير)

முற்காலத்தில் சிரியாவில் இருந்து வந்த ஒரு ஆணும் பெண்ணும் கஃபாவுக்குள் வைத்து தவறாக நடந்து கொண்டனர். முத்தமிட்டுக் கொண்டனர் என்றும் கூறப்படுகிறது அவர்களின் பெயர் இஸாஃப், நாஇலா என்று கூறப்படுகிறது. உடனே அல்லாஹ் அவர்களை கல்லாக மாற்றி விட்டான். கல்லாக மாற்றப்பட்ட அவ்விரு சிலைகளும் சில காலம் கஃபாவுக்குள்ளேயே இருந்தன. சில காலங்களுக்குப் பிறகு அங்கிருந்து அப்புறப் படுத்தப்பட்டு சஃபா மர்வா என்ற இரு மலைகளில் வைக்கப்பட்டன. அதாவது சஃபாவில் ஒன்றும் மர்வாவில் ஒன்றும் வைக்கப்பட்டது. காலப்போக்கில் மக்கள் அதையும் வணங்க ஆரம்பித்து விட்டனர். பின்னர் சில நல்லவர்களின் முயற்சியால் அது அங்கிருந்தும் அப்புறப்படுத்தப் பட்டது. இச்சம்பவம் நடந்த காரணத்தால் சஹாபாக்களுக்கு இந்த சஃபா, மர்வா இடையே ஸயீ செய்வதில் ஒரு நெருடல் இருந்தது என்ன இருந்தாலும் சிலைகள் இருந்த இடம் ஆயிற்றே என்று தயங்கினார்கள். அதனால் அல்லாஹ் மேற்படி ஆயத்தை இறக்கினான்.

மஸ்ஜிதை சுத்தமாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்

: عن عائشة قالت : أمر رسول الله صلى الله عليه و سلم ببناء المساجد في الدور وأن تطيب وتنظف (صحيح ابن حبان

மஸ்ஜிதுன் நபவியின் ஒரு தூணுக்கு அத்தர் தேய்க்கப்பட்ட தூண் என்று பெயர் வருவதற்குக் காரணம்

உஸ்துவானதே முகல்லகா அத்தர் தேய்க்கப்பட்ட தூண். மஸ்ஜிதுன் நபவியில் இந்த தூணில் ஒருமுறை எச்சில் துப்பப் பட்டிருப்பதைப் பார்த்து அதை நபி ஸல் அவர்களே சுத்தம் செய்தார்கள். அதைப் பார்த்த ஒரு சஹாபி அந்த தூணுக்கு அத்தர் தேய்த்து விட்டார். அதனால் அப்பெயர் வந்தது.

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنها أَنَّ امْرَأَةً سَوْدَاءَ كَانَتْ تَقُمُّ الْمَسْجِدَ أَوْ شَابًّا فَفَقَدَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَ عَنْهَا أَوْ عَنْهُ فَقَالُوا مَاتَ قَالَ أَفَلَا كُنْتُمْ آذَنْتُمُونِي قَالَ فَكَأَنَّهُمْ صَغَّرُوا أَمْرَهَا أَوْ أَمْرَهُ فَقَالَ دُلُّونِي عَلَى قَبْرِهِ فَدَلُّوهُ فَصَلَّى عَلَيْهَا (مسلم)

عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَجُلاً أَسْوَدَ أَوِ امْرَأَةً سَوْدَاءَ كَانَتْ تُنْقِي الأَذَى مِنَ الْمَسْجِدِ فَدُفِنَتْ ، فَلَمْ يُؤْذِنُوا النَّبِيَّ صلى الله عليه وسلم فَأُخْبِرَ بِذَلِكَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ : دُلُّونِي عَلَى قَبْرِهَا فَانْطَلَقَ إِلَى الْقَبْرِ فَأَتَى عَلَى الْقُبُورِ فَقَالَ : إِنَّ هَذِهِ الْقُبُورَ مُمْتَلِئَةٌ عَلَى أَهْلِهَا ظُلْمَةً ، وَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُنَوِّرُهَا عَلَيْهِمْ بِصَلاَتِي ثُمَّ أَتَى الْقَبْرَ فَصَلَّى عَلَيْهِ ، (مسند أبي داود الطيالسي

கருத்து- ஒரு பெண்மணி மஸ்ஜிதுன் நபவியை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பார். அப்பெண்மணி திடீரென வஃபாத்தாகி விட்டார். அது இரவு நேரம் என்பதால் நபி ஸல் அவர்களை எழுப்புவது சிரமமாக இருக்கும் என்று இரவில் யாருக்கும் தெரிவிக்காமல் அடக்கம் செய்து விட்டார்கள். மறுநாள் காலையில் அந்தப் பெண்மணியைக் காணவில்லை என்று நபி ஸல் அவர்கள் அதுபற்றிக் கேட்க, அவர் இறந்து விட்டார் என்ற செய்தி சொல்லப்பட்டது. உடனே நபி ஸல் அவர்கள் என்னிடம் தெரிவித்திருக்க வேண்டாமா என்று கூறினார்கள் பிறகு அந்தப் பெண்ணின் கப்ரைக் காட்டுங்கள் என்று கூறி அந்தக் கப்ரு அருகே நின்று தொழ வைத்தார்கள்.

படிப்பினை-மஸ்ஜிதை சுத்தமாக வைத்திருக்கும் பெண்மணி என்பதையும் காரணமாக வைத்தே அப்பெண்ணின்மீது இவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டார்கள் என்றும் விளக்கம் கூறப்பட்டுள்ளது

عن أَنَس بْن مَالِكٍ رضي الله عنه قَالَ بَيْنَمَا نَحْنُ فِي الْمَسْجِدِ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ جَاءَ أَعْرَابِيٌّ فَقَامَ يَبُولُ فِي الْمَسْجِدِ فَقَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَهْ مَهْ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تُزْرِمُوهُ دَعُوهُ فَتَرَكُوهُ حَتَّى بَالَ ثُمَّ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعَاهُ فَقَالَ لَهُ إِنَّ هَذِهِ الْمَسَاجِدَ لَا تَصْلُحُ لِشَيْءٍ مِنْ هَذَا الْبَوْلِ وَلَا الْقَذَرِ إِنَّمَا هِيَ لِذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ وَالصَّلَاةِ وَقِرَاءَةِ الْقُرْآنِ أَوْ كَمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَأَمَرَ رَجُلًا مِنْ الْقَوْمِ فَجَاءَ بِدَلْوٍ مِنْ مَاءٍ فَشَنَّهُ عَلَيْهِ (مسلم)

நாங்கள் மஸ்ஜிதில் இருக்கும் போது ஒரு கிராமவாசி வந்து மஸ்ஜிதில் சிறுநீர் கழித்து ஆரம்பித்தார். அது கண்ட நபித்தோழர்கள் அவரை அதட்டினார்கள். அப்போது நபி ஸல் அவர்கள் அவரை பாதியில் எழுப்பாதீர்கள். அவரை விட்டு விடுங்கள் என்று கூற, தோழர்கள் விட்டு விட்டார்கள். பிறகு அவரிடம் நிச்சயமாக இந்த மஸ்ஜித்கள் என்பது சிறுநீர் கழிப்பதற்கோ அல்லது இதுபோன்ற எந்த ஒரு அசிங்கத்திற்கும் தகுதியானது அல்ல. மாறாக இது இறைவனை திக்ரு செய்வதற்கும் தொழுவதற்கும் இன்னும் குர்ஆன் ஓதுவதற்கும் உள்ளதாகும் என்று அன்போடு அறிவுரை கூறினார்கள். அதன் பின்பு ஒருவரை ஏவி வாளி நீரை எடுத்து வரச்சொல்லி அதன்மீது ஊற்றி சுத்தம்செய்யச் சொன்னார்கள்

வெங்காயம், பூண்டு ஆகியவற்றைக் பச்சையாக சாப்பிட்டு அத்துடன் மஸ்ஜிதுக்குள் வருவதை மார்க்கம் விரும்புவதில்லை

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ... مَنْ أَكَلَ الْبَصَلَ وَالثُّومَ وَالْكُرَّاثَ فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا فَإِنَّ الْمَلَائِكَةَ تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ بَنُو آدَمَ (مسلم

யார் வெங்காயம் பூண்டு ஆகியவற்றை வேக வைக்காத நிலையில் சாப்பிட்டாரோ அவர் நமது மஸ்ஜிதை நெருங்க வேண்டாம்.

பீடி, சிகரெட் மார்க்கத்தில் வெறுக்கப்பட்டவை என்பதற்கு இதுவும் ஆதாரம்

மஸ்ஜிதுக்குள் வீண் சப்தங்களை தவிர்க்க வேண்டும்

عَنْ أَبِى عَبْدِ اللَّهِ مَوْلَى شَدَّادِ بْنِ الْهَادِ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَنْ سَمِعَ رَجُلاً يَنْشُدُ ضَالَّةً فِى الْمَسْجِدِ فَلْيَقُلْ لاَ رَدَّهَا اللَّهُ عَلَيْكَ فَإِنَّ الْمَسَاجِدَ لَمْ تُبْنَ لِهَذَا ». (مسلم)

எவர் தன்னுடைய காணாமல் போன பொருளைப் பற்றி மஸ்ஜிதில் சப்தமிட்டு அறிவிப்புச் செய்வாரோ அவருடைய சப்தத்தைக் கேட்பவர் அவருக்கு அவருடைய பொருள் கிடைக்காமலே போகட்டும் என்று துஆ செய்யட்டும் காரணம் நிச்சயமாக பள்ளிவாசல்கள் இதற்காக கட்டப்படவில்லை.

மஸ்ஜித்களில் வீண் சப்தங்கள் பெருகுவது கியாமத் நாளில் அடையாளம்

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِذَا اتُّخِذَ الْفَىْءُ دُوَلاً وَالأَمَانَةُ مَغْنَمًا وَالزَّكَاةُ مَغْرَمًا وَتُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ وَعَقَّ أُمَّهُ وَأَدْنَى صَدِيقَهُ وَأَقْصَى أَبَاهُ وَظَهَرَتِ الأَصْوَاتُ فِى الْمَسَاجِدِ وَسَادَ الْقَبِيلَةَ فَاسِقُهُمْ وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ وَظَهَرَتِ الْقَيْنَاتُ وَالْمَعَازِفُ وَشُرِبَتِ الْخُمُورُ وَلَعَنَ آخِرُ هَذِهِ الأُمَّةِ أَوَّلَهَا فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ وَزَلْزَلَةً وَخَسْفًا وَمَسْخًا وَقَذْفًا وَآيَاتٍ تَتَابَعُ كَنِظَامٍ بَالٍ قُطِعَ سِلْكُهُ فَتَتَابَعَ ». (ترمذي

எப்போது பொதுச் சொத்துக்களை தன் சொத்துக்களாக கருதப்படுமோ, எப்போது அமானிதம் துஷ்பிரயோகம் செய்யப் படுமோ எப்போது ஜகாத் நிறைவேற்றப்படாத கடனாக ஆகி விடுமோ எப்போது மார்க்கத்தை மார்க்கம் அல்லாத நோக்கத்திற்காக கற்றுக் கொள்ளப் படுமோ எப்போது கணவன் தன்னுடைய மனைவிக்கு முற்றிலும் கட்டுப்பட்டவனாக ஆகி விடுவானோ எப்போது பெற்றோரை வெறுத்து நண்பர்களை பெரிதாக கருதும் காலம் ஏற்பட்டு விடுமோ எப்போது மஸ்ஜித்களில் வீண் சப்தங்கள் பெருகி விடுமோ எப்போது கெட்டவர்கள் சமூகத்தின் தலைவர்களாக ஆக்கப்பட்டு நல்லவர் ஒதுக்கப் படுவாரோ எப்போது ஒருவனின் தீமைக்கு பயந்து மக்கள் அவனுக்கு மரியாதை செய்வார்களோ எப்போது இசை, பாடகிகள், மது பெருகி விடுமோ எப்போது இந்த உம்மத்தின் பின்னால் உள்ளவர்கள் முன்னால் வாழ்ந்த முன்னோர்களைக் குறை கூற ஆரம்பித்து விடுவார்களோ அப்போது சிவப்பு நிற அனல் காற்று வீசுவதையும் பூகம்பத்தையும் உருமாற்றப் படுவதையும் எரி கற்கள் எரியப் படுவதையும் எதிர் பாருங்கள் எவ்வாறு பாசி மாலை அறுந்து விழுந்தால் அதன் பாசி மணிகள் தொடர்ச்சியாக அறுந்து விழுமோ அதுபோன்று தொடர்ச்சியாக மேற்படி ஆபத்துக்கள் ஆங்காங்கே ஏற்படும்.

மஸ்ஜிதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு எப்போது அதே இடத்தில் அமருவது கூடாது

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِبْلٍ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَقْرَةِ الْغُرَابِ وَافْتِرَاشِ السَّبْعِ وَأَنْ يُوَطِّنَ الرَّجُلُ الْمَكَانَ فِي الْمَسْجِدِ كَمَا يُوَطِّنُ الْبَعِيرُ (ابوداود

காக்கா கொத்துவதை(ப் போன்று வேக வேகமாக சஜ்தா செய்வ)தையும் நாய் இருப்பு அமருவதையும் ஒட்டகம் ஒரே இடத்தில் அமருவது போல் மஸ்ஜிதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு அமருவதையும் நபி ஸல் தடுத்தார்கள்.

மஸ்ஜிதில் ஒரு குப்பையை போடுவதும் நபி ஸல் அவர்களுக்கு காட்டப்படும்

عَنْ أَبِى ذَرٍّ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « عُرِضَتْ عَلَىَّ أَعْمَالُ أُمَّتِى حَسَنُهَا وَسَيِّئُهَا فَوَجَدْتُ فِى مَحَاسِنِ أَعْمَالِهَا الأَذَى يُمَاطُ عَنِ الطَّرِيقِ وَوَجَدْتُ فِى مَسَاوِى أَعْمَالِهَا النُّخَاعَةَ تَكُونُ فِى الْمَسْجِدِ لاَ تُدْفَنُ ». (مسلم

عَنْ مَوْلَى امْرَأَتِهِ أُمِّ عُثْمَانَ قَالَ سَمِعْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى مِنْبَرِ الْكُوفَةِ يَقُولُ إِذَا كَانَ يَوْمُ الْجُمُعَةِ غَدَتْ الشَّيَاطِينُ بِرَايَاتِهَا إِلَى الْأَسْوَاقِ فَيَرْمُونَ النَّاسَ بِالتَّرَابِيثِ أَوْ الرَّبَائِثِ وَيُثَبِّطُونَهُمْ عَنْ الْجُمُعَةِ وَتَغْدُو الْمَلَائِكَةُ فَيَجْلِسُونَ عَلَى أَبْوَابِ الْمَسْجِدِ فَيَكْتُبُونَ الرَّجُلَ مِنْ سَاعَةٍ وَالرَّجُلَ مِنْ سَاعَتَيْنِ حَتَّى يَخْرُجَ الْإِمَامُ فَإِذَا جَلَسَ الرَّجُلُ مَجْلِسًا يَسْتَمْكِنُ فِيهِ مِنْ الِاسْتِمَاعِ وَالنَّظَرِ فَأَنْصَتَ وَلَمْ يَلْغُ كَانَ لَهُ كِفْلَانِ مِنْ أَجْرٍ فَإِنْ نَأَى وَجَلَسَ حَيْثُ لَا يَسْمَعُ فَأَنْصَتَ وَلَمْ يَلْغُ لَهُ كِفْلٌ مِنْ أَجْرٍ وَإِنْ جَلَسَ مَجْلِسًا يَسْتَمْكِنُ فِيهِ مِنْ الِاسْتِمَاعِ وَالنَّظَرِ فَلَغَا وَلَمْ يُنْصِتْ كَانَ لَهُ كِفْلٌ مِنْ وِزْرٍ وَمَنْ قَالَ يَوْمَ الْجُمُعَةِ لِصَاحِبِهِ صَهٍ فَقَدْ لَغَا وَمَنْ لَغَا فَلَيْسَ لَهُ فِي جُمُعَتِهِ تِلْكَ شَيْءٌ ثُمَّ يَقُولُ فِي آخِرِ ذَلِكَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ ذَلِكَ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...