வியாழன், 25 ஜனவரி, 2024

குடியரசு தினம்

குடியரசுதினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி. அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறை குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். குடியரசு தினம் எதற்காக கொண்டாடப் படுகிறது என்பதைப் பற்றிப் பேசும் முன்பு உண்மையான குடியரசு ஆட்சியை அதாவது மக்களுக்காக, மக்களுடைய மக்கள் விரும்பும் ஆட்சியைத் தந்தவர்கள் நம் முன்னோர்கள் தான் என்பதற்கான சில சம்பவ்வங்களைப் பேசுவது காலத்தின் கட்டாயமாகும்
 உண்மையான மக்களாட்சி என்பது அன்று நம் முன்னோர்கள் ஆட்சி செய்த முறையாகும் 
لما رجع عمر رضي الله عنه من الشام إلى المدينة - انفرد عن الناس؛ ليتعرف أخبار رعيته، فمر بعجوز لها خباء، فقصدها، فقالت: يا هذا، ما فعل عمر؟ قال: قد أقبل من الشام سالماً، فقالت: لا جزاه الله عني خيراً. قال لها: ولم؟ قالت: لأنه ما فاتني من عطائه منذ ولي أمر المسلمين دينار ولا درهم، فقال: وما يدري عمر بحالك وأنت في هذا الموضع؟! فقالت: سبحان الله: ما ظننت أن أحداً يلي على الناس، ولا يدري ما بين مشرقها ومغربها. فبكى عمر، فقال: واعمراه بك أتدافعه منك حتى العجائز، ثم قال لها: يا أمة الله، بكم تبيعيني ظلامتك من عمر؟ فإني أرحمه من النار، فقالت: لا تهزأ بي، يرحمك الله؟ فقال عمر: لست بهزاء - فلم يزل بها حتى اشترى ظلامتها بخمسة وعشرين ديناراً - فبينما هو كذلك إذ أقبل: علي بن أبي طالب، وعبد الله بن مسعود - رضي الله عنهما - فقالا: السلام عليك يا أمير المؤمنين. فوضعت العجوز يدها على رأسها، وقالت: واسوأتاه، شتمت أمير المؤمنين في وجهه، فقال: لا عليك، يرحمك الله.ثم طلب وفاء فلم يجده، فقطع قطعة من مرقعته، وكتب فيها: " بسم الله الرحمن الرحيم. هذا ما اشترى عمر ظلامتها منذ ولي إلى يوم كذا بخمسة وعشرين ديناراً، فما تدعيه عند وقوفه في المحشر بين يدي الله تعالى فهو منه بريء شهد على ذلك من فلانة: علي بن أبي طالب، وعبد الله بن مسعود " .قال أبو طلحة: ثم دفع الكتاب إلي، وقال: إذا مت فاجعله في كفني؛ ألقى به ربي عز وجل. (: سمط النجوم العوالي في أنباء الأوائل والتوالي 
கலீஃபா உமர் (ரலி) அவர்கள் (ஆட்சிக்காலம். அபூ உபைதா (ரலி) அவர்களின் அழைப்பின் பேரில்) ஷாமுக்குச் சென்று விட்டு மதீனா நோக்கி, (தம் நண்பர்கள் இப்னு மஸ்வூத் (ரலி), அலீ (ரலி) மற்றும் சிலரோடு) திரும்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது, அவர்களில் இருந்து பிரிந்து தங்களின் ஆட்சியின் நிலைகள் குறித்து மக்கள் என்ன கூறுகின்றார்கள் என அறிய ரகசியமாக ஆய்வு செய்வதற்காக புறப்பட்டார்கள்.அப்போது வயதான மூதாட்டி ஒருவரை உமர் (ரலி) அவர்கள் கடந்து சென்றார்கள். அந்த மூதாட்டி உமர் (ரலி) அவர்கள் யார் என்று தெரியாமல் அவர்களிடம் பேச்சுக்கொடுத்தார்.பேச்சின் ஊடாக உமர்(ரலி)அவர்களிடம் எங்கு சென்று கொண்டிருக்கின்றாய்?   நீ யார்? என்று கேட்டார் அந்த மூதாட்டி. அதற்கு, உமர் (ரலி) அவர்கள் தாம் மதீனாவைச் சார்ந்தவர் என்றும் மதீனாவிற்கு ஒரு வேளையாக வந்து விட்டு மீண்டும் மதீனா திரும்புவதாகக் கூறினார்கள். அம்மூதாட்டி, “உமர் எப்படி இருக்கின்றார்?” என்று கேட்டார். உமர் (ரலி) அவர்கள் அவர் சலாமத்தாக நலமோடு உள்ளார்” என்றார்கள். அதற்கு அம்மூத்தட்டி அல்லாஹ் உமருக்கு நற்கூலி வழங்காமல் இருப்பானாக! என்றார்கள். அதைக்கேட்ட உமர் ரலி அவர்கள் ஏன்? இப்படித் துஆச் செய்கின்றீர்கள் என வினவினார்கள்.அவர் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இது நாள் வரை எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றாள் அம்மூதாட்டி. உன் நிலைகள் உமருக்கு எப்படி தெரியும்?  என்று கலீஃபா உமர் (ரலி) கேட்ட போது, அம்மூதாட்டி, “சுப்ஹானல்லாஹ்! மக்களின் ஆட்சியை பொறுப்பேற்றிருக்கிற ஒருவரின் ஆட்சிக்கு உட்பட்ட மேற்கு மற்றும் கிழக்கு பற்றி தனக்கு தெரியாது என்று சொல்வாரா என்ன உமர்?” என்று கேட்டார். இது கேட்ட உமர் (ரலி) அழுதார்கள். அழுது கொண்டே தங்களின் ஆன்மாவோடு  ”உமரே! உம்மை விடவும் மிகச்சிறந்த அறிவாளிகள் எல்லாம் உலகில்  உண்டு! இதோ இந்த மூதாட்டி உட்பட” என்றார்கள். அல்லாஹ்வின் அடிமைப் பெண்ணே! உமர் உனக்கு செய்த அநீதிக்கு பகரமாக என்னிடம் விலை பெற்றுக்கொள்.அவரை நரகை விட்டும் நான் காப்பாற்ற பிரியப்படுகின்றேன் என்றார்கள் உமர் (ரலி) அவர்கள். அதைக் கேட்ட அம்மூதாட்டி,  என்னைக் கேலி செய்யாதீர்! யாரோ ஒரு உமருக்காக நீர் இரக்கப்படுகின்றீர்! அல்லாஹ் உமக்கு அருள் புரிவான்! என்றார். அதற்கு, உமர் ரலி,  இல்லை அல்லாஹ்வின் அடிமைப் பெண்ணே!  நான் கேலி செய்யவில்லை, உண்மையைத் தான் பேசுகிறேன் என்று கூறி - ஒரு வழியாக உமரின் அநீதிக்கு 25 தீனாரை பகரமாக அம்மூதாட்டியின் கையில் கொடுத்தார்கள். அப்போது, அப்பக்கம் வந்த அலி (ரலி), மற்றும் இப்னு மஸ்ஊத் (ரலி) ஆகிய இருவரும் அமீருல் முஃமினீன் அவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் என்றார்கள். அதை செவியுற்ற அந்த மூதாட்டி, இவ்வளவு நேரம் அமீருல் முஃமினீன் அவர்களை, அவர்களின் முகத்திற்கு நேராகவே திட்டிவிட்டேனே! என்று பயந்து நடுங்கினார்.இதைப் பார்த்த உமர் (ரலி) அவர்கள் நீங்கள் பயப்படவேண்டாம் என்று கூறி, ஒரு தோல் பேப்பரில் ஒரு ஒப்பந்தம் எழுதினார்கள்.அதில் எழுதப்பட்ட விஷயம் “அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்....  உமர் ஆட்சிப்பொறுப்பு ஏற்றது முதல்  இன்று வரை எனக்கு செய்த அநீதிக்கு பகரமாக 25 தீனார் பெற்றுக் கொண்டு நான் அவரை விடுதலை செய்கிறேன்.மேலும் நாளை மறுமையில் அல்லாஹ்வுக்கு முன்னிலையில் அவரை விசாரனைக்கு நிறுத்தமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன் என்று எழுதி”  அலி (ரலி) மற்றும் இப்னு மஸ்வூத் (ரலி) ஆகிய இருவரையும் சாட்சியாக்கி அந்த தோல் பேப்பரை தங்களோடு மதீனா கொண்டு வந்தார்கள். இந்தச் செய்தியை நினைவு படுத்தும் அபூதல்ஹா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “பின்னர், ஒரு நாள் என்னை அழைத்த உமர் (ரலி) அவர்கள் அந்த தோல் பேப்பரை என்னிடம் கொடுத்து, அபூதல்ஹாவே! நான் மரணித்து என்னை கஃபன் செய்கிற போது “இந்த தோல் பேப்பரையும் என்னோடு இணைத்து விடுங்கள்! இந்தக் கடிதத்தோடு என் ரப்பைச் சந்திக்க விரும்புகின்றேன்” என்றார்கள். மக்கள் பிரதிநிதிகள் ஆடம்பரம் இல்லாமல் எளிமையைக் கடைபிடிக்க அறிவுரை கூறிய உமர் ரழியல்லாஹு அன்ஹு
عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رضي الله عنه كَانَ إِذَا بَعَثَ عُمَّالًا اشْتَرَطَ عَلَيْهِمْ: أَلَا تَرْكَبُوا بِرْذَوْنَا وَلَا تَأْكُلُوا نَقِيًّا وَلَا تَلْبَسُوا رَقِيقًا وَلَا تُغْلِقُوا أَبْوَابَكُمْ دُونَ حَوَائِجِ النَّاسِ فَإِنْ فَعَلْتُمْ شَيْئًا مِنْ ذَلِكَ فَقَدْ حَلَّتْ بِكُمُ الْعُقُوبَةُ ثُمَّ يُشَيِّعُهُمْ (بيهقي في شعب الايمان) அதிகாரிகளை பல பகுதிகளுக்கும் அனுப்பும்போது “நீங்கள் ஒருபோதும் உயர்தர வாகனங்களைப் பயன் படுத்தக் கூடாது. உயர்தர உணவுகளை உட்கொள்ளக்கூடாது. உயர்தர ஆடைகள் உடுத்தக்கூடாது. மக்கள் உங்களைத் தேடி வரும்போது உங்கள் கதவுகள் ஒருபோதும் தாளிடப் படக்கூடாது. இச்சட்டத்தை நீங்கள் மீறினால் தண்டனை உங்களைத் தேடி வரும் என்று எச்சரித்து பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்புவார்கள்
 فقد روى البيهقي في سننه عن عبد الرحمن بن القاسم حدثنا مالك قال: وكان من عمّال عمر بن الخطاب -رضي الله عنه- - نمرقتين لامرأة عمر -رضي الله عنه فدخل عمر فرآهما فقال: (من أين لك هاتين؟ اشتريتهما؟ أخبريني ولا تكذبيني!) قالت: بعث بهما إليّ فلان، فقال: قاتل الله فلانا إذا أراد حاجة فلم يستطعها من قِبَلِي أتَانِي من قِبَلِ أهلي؛ فاجتذبهما اجتذابا شديدا من تحتِ من كان عليهما جالسا، فخرج يحملهما فتبعته جاريتها فقالت: إنّ صوفهما لنا، ففتقهما وطرح إليها الصّوف، وخرج بهما فأعطى إحداهما امرأة من المهاجرات، وأعطى الأخرى امرأة من الأنصار". 
ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் மனைவிக்கு, அரசவையில் பணி புரிந்த ஒருவர் இரண்டு தலையணையை அன்பளிப்பாக வழங்குகின்றார். கலீஃபா உமர் (ரலி) அவர்கள் அரசவையில் அரசர் சாய்ந்து அமரும் மாதிரியான இரு தலையணையை தம் வீட்டினுள் பார்த்தார்கள். உடனே, தன் மனைவியிடம்,  இந்த இரண்டும் எங்கிருந்து வந்தது? அல்லது நீ விலைக்கு வாங்கினாயா? உண்மையைச் சொல், மறைக்காதே கேட்கிறார்கள்.இதை இன்ன நபர் நமக்கு அன்பளிப்பாக அனுப்பியுள்ளார் என்று தன் மனைவி கூறிய பதிலைக் கேட்டு, “அல்லாஹ் அவருடன் போரிடுவானாக...” என கோபமாகக் கூறினார்கள். மேலும் அந்த நபர் தனக்கு உண்டான ஒரு தேவையை நிறைவேற்றித் தருமாறு என்னிடம்  வந்தார். அதை நான் அனுமதிக்கவில்லை. இப்போது என் குடும்பத்தினர் வழியாக சமரசம் பேசவே இந்த இரண்டு தலையணையை அன்பளிப்பு என்ற பெயரில் கொடுத்து அனுப்பியுள்ளார்” என கூறினார்கள். பின்னர் அந்த இரண்டு தலையணையையும் உமர் (ரலி) அவர்கள் தங்களின் மனைவியிடமிருந்து பிடுங்கிச் செல்கிற போது, எதுவும் பேச இயலாது விக்கித்து நின்ற உமர் (ரலி) அவர்களின்  மனைவி தன் கணவர் உமர் (ரலி) அவர்கள் பின் சென்று, அதன் மேல் இருக்கின்ற கம்பளி உறை நம்முடையது என்றதுமே அதை மட்டும் எடுத்துக் கொடுத்து விடுகிறார்கள். பின்பு,  ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் அதில் ஒன்றை  முஹாஜிர்களில் ஒரு பெண்ணுக்கும்,  இன்னொன்றை  அன்ஸாரிகளில் ஒரு பெண்ணுக்கும் அன்பளிப்பாக கொடுத்து விட்டார்கள். பைஹகீ 
சாமானிய மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் போட்டா போட்டி 
عن أبى صالح الغفارى : أن عمر بن الخطاب كان يتعاهد عجوزا كبيرة عمياء فى بعض حواشى المدينة من الليل فيستسقى لها ويقوم بأمرها فكان إذا جاءها وجد غيره قد سبقه إليها فأصلح ما أرادت فجاءها غير مرة فلا يسبق إليها فرصده عمر فإذا هو بأبى بكر الصديق الذى يأتيها وهو خليفة فقال عمر أنت لعمرى [كنز العمال] (لعمري) هذه من الصيغ المؤكدة، وليست قسماً، 
மதீனா எல்லையில் ஒரு மூதாட்டி இருந்தார்.அவருக்கு ஏதேனும் உதவி செய்ய உமர் ரழி வரும்போதெல்லாம் தனக்கு முன்பே வேறொரு நபர் முந்திக் கொள்வதை உமர் ரழி அவர்கள் தூரத்தில் இருந்தே பார்த்து விட்டு, கவலையுடன் திரும்புவார்கள். ஒருநாள் அந்த மனிதர் யாரென அறிய முற்படும் போது, அது கலீஃபா அபூபக்கர் ரழி எனத் தெரிய வந்தது. அப்போது உமர் ரழி அவர்கள் அபூபக்கர் ரழி அவர்களை நோக்கி எப்பொழுதுமே நீங்கள் நீங்கள் தான். உங்களை முந்த முடியாது என்றார்கள். 
 தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு குடும்பம் பசியோடு இருப்பது கண்டு மிகவும் கவலைப்பட்டு உமர் ரழி எடுத்த நடவடிக்கையும், அந்த ஏழைக் குழந்தைகளின் முகத்தில் சிரிப்பைக் காணும் வரை அங்கிருந்து நகராமல் இருந்ததும்..
 عن أسلم أن عمر رضي الله عنه طاف ليلة فإذا هو بامرأة في جوف دار لها وحولها صبيان يبكون وإذا قدر على النار قد ملأتها ماء فدنا عمر من الباب فقال: يا أمة الله! ما بكاء هؤلاء الصبيان؟ قالت: بكاؤهم من الجوع، قال: فما هذه القِدر التي على النار؟ قالت: قد جعلت فيها ماء هو ذا أعللهم به حتى يناموا وأوهمهم أن فيها شيئا دقيقا فبكى عمر ثم جاء إلى دار الصدقة وأخذ غرارة وجعل فيها شيئا من دقيق وشحم وسمن وتمر وثياب ودراهم حتى ملأ الغرارة ثم قال: يا أسلم! اِحْمِل علي، فقلتُ: يا أمير المؤمنين! أنا أحمله عنك؟ فقال لي: لا أم لك يا أسلم! أنا أحمله لأني أنا المسؤول عنهم في الآخرة، فحمله حتى أتى به منزل المرأة، فأخذ القدر فجعل فيها دقيقا وشيئا من شحم وتمر وجعل يحركه بيده وينفخ تحت القدر، فرأيت الدخان يخرج من خلل لحيته حتى طبخ لهم، ثم جعل يغرف بيده ويطعمهم حتى شبعوا! ثم خرج وربض بحذائهم حتى كأنه سبع، وخفت أن أكلمه، فلم يزل كذلك حتى لعب الصبيان وضحكوا، ثم قام فقال: يا أسلم! تدري لم ربضت بحذائهم؟ قلت لا، قال: رأيتهم يبكون فكرهت أن أذهب وأدعهم حتى أراهم يضحكون، فلما ضحكوا طابت نفسي (كنز العمال) 
 கருத்து- மக்களின் குறைகளை நேரடியாகத் தெரிந்து கொண்டு களைய, கலீஃபா உமர் (ரலி), இரவில் நகர் வலம் செல்வது வழக்கம். ஒருநாள் இரவு அவ்வாறு நகர் வலம் வந்த போது ஒரு பெண் பானையில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்துக் காய்ச்சிக் கொண்டிருந்தார். அவரிடம் உமர் ரழி அவர்கள் ஏன் குழந்தைகள் அழுகிறார்கள் என்று காரணம் கேட்க, பசியால் அழுகிறார்கள் என்று அப்பெண் பதில் கூறினார். இந்தச் சட்டியில் உள்ளது என்ன என்று உமர் ரழி அவர்கள் கேட்ட போது இதில் வெறும் தண்ணீர் மட்டும் உள்ளது. சமைக்க மாவு எதுவும் இல்லை. ஆனாலும் இதில் ஏதேனும் இருப்பதாக எண்ணி ஆறுதல் அடைவார்கள் அம்மா பசியைப் போக்கத்தான் அடுப்பில் சோறு சமைத்துக் கொண்டிருக்கிறார்'' என எண்ணியவர்களாக பசி மயக்கத்தில் உறங்கிப் போய் விடுவார்கள். என்று அப்பெண் பதில் கூறினார். அதைக் கேட்ட உமர் ரழி அவர்கள் அழுதார்கள். பின்பு சதகா தானியங்களின் கிடங்குக்குச் சென்று ஒரு மூட்டையை எடுத்து அதில் அத்தியாவசியப் பொருட்களை வைத்து அதை தன்னுடைய முதுகில் ஏற்றி விடும்படி தனது உதவியாளர் அஸ்லம் ரழி அவர்களிடம் உமர் ரழி அவர்கள் கூற, அதற்கு அந்த உதவியாளர் நான் சுமந்து வருகிறேன் என்றார்கள். ஆனால் உமர் ரழி அவர்கள் அதை மறுத்து நான் தான் இதைப் பற்றி மறுமையில் விசாரிக்கப் படுவேன் எனவே நானே சுமக்கிறேன் அப்பெண்ணின் வீடு வரை சுமந்து வந்தார்கள். பிறகு தானே அடுப்புப் பற்ற வைத்து அதைச் சமைத்தார்கள். அவர்களின் தாடியின் நடுவே புகையை நான் கண்டேன் என அஸ்லம் ரழி அவர்கள் கூறினார்கள். இவ்வாறாக அந்தக் குழந்தைகளின் பசியைப் போக்கி அக்குழந்தைகள் சிரித்து விளையாடுவதைப் பார்த்த பிறகே கலீஃபா உமர்(ரலி). அங்கிருந்து புறப்பட்டார்கள். 
 உதவிக்கு ஆளில்லாமல் பிரசவ வலியில் ஒரு பெண் துடித்த போது உமர் ரழி உடனே தன் மனைவியை அழைத்து வந்த சம்பவமும், அச்சமயத்திலும் தன்னை யார் என்றே காட்டிக் கொள்ளாத எளிமையும் 
عن أنس بن مالك بينما أمير المؤمنين عمر يعس ذات ليلة إذ مر بأعرابي جالس بفناء خيمة فجلس إليه يحدثه ويسأله ويقول له: ما أقدمك هذه البلاد؟ فبينما هو كذلك إذ سمع أنيناً من الخيمة فقال: من هذا الذي أسمع أنينه؟ فقال: أمر ليس من شأنك، امرأة تمخض، فرجع عمر إلى منزله وقال: يا أم كلثوم شدي عليك ثيابك واتبعيني، قال: ثم انطلق حتى انتهى إلى الرجل فقال له: هل لك أن تأذن لهذه المرأة أن تدخل عليها فتؤنسها، فأذن لها فدخلت فلم يلبث أن قالت يا أمير المؤمنين بشر صاحبك بغلام، فلما سمع قولها أمير المؤمنين وثب من حينه فجلس بين يديه وجعل يعتذر إليه فقال: لا عليك!! إذا أصبحت فائتنا فلما أصبح أتاه ففرض لابنه في الذرية وأعطاه(تاريخ الاسلام கருத்து- உமர் ரழி அவர்கள் ஒருமுறை நகர் வலம் வந்த போது ஒரு கூடாரத்தின் வெளியே கிராமவாசி கவலையுடன் அமர்ந்திருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தபோது கூடாரத்தின் உள்ளேயிருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டது. அதைக் கேட்ட உமர் ரழி எதற்காக அப்பெண் அழுகிறார் என்று கேட்க, அதைக் கேட்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என் மனைவி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறாள் என்றார். அந்த நபருக்கு தன்னுடன் பேசிக் கொண்டிருப்பது அமீருல் முஃமினீன் என்று தெரியாது. உமர் ரழி அவர்களும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. உடனே உமர் ரழி அவர்கள் தன் வீட்டுக்குச் சென்று மனைவியிடம் பிரசவம் பார்ப்பதற்குரிய ஆடையை உடுத்திக் கொண்டு என்னுடன் வா என்று அழைத்துக் கொண்டு வந்தார்கள். அந்த கிராமவாசியிடம் உங்கள் மனைவிக்கு இவர் பிரசவம் பார்க்க அனுமதி தருகிறீர்களா என்று கேட்டார்கள். சரி என்று அவர் சந்தோஷத்துடன் கூறினார். உள்ளே சென்ற சற்று நேரத்தில் உமர் ரழி அவர்களின் மனைவி சப்தமாக அமீர் முஃமினீன் அவர்களே உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று கூற, அது கேட்ட அந்த கிராமவாசி அப்போது தான் தன்னுடன் பேசிக் கொண்டிருப்பது அமீருல் முஃமினீன் என்று அறிந்து அவர்களிடம் கடுமையாகப் பேசியதற்காக மன்னிப்புக் கேட்டார். அப்போது உமர் ரழி அவர்கள் பரவாயில்லை. நாளை காலையில் என்னை வந்து பாருங்கள் என்றார்கள் அடுத்த நாள் காலையில் அவர் வந்த போது அவருக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் கொடுத்தனுப்பினார்கள். 
 أن الأحنف بن قيس قدم على عمر في وفد من العراق قدموا عليه في يوم صائف شديد الحر وهو متحجز بعباءة يهنأ بعيرا من إبل الصدقة فقال: يا أحنف ضع ثيابك وهلم وأعن أمير المؤمنين على هذا البعير فإنه من إبل الصدقة فيه حق اليتيم والأرملة والمسكين فقال رجل يغفر الله لك يا أمير المؤمنين فهلا تأمر عبدا من عبيد الصدقة فيكفيك هذا؟ فقال عمر: يا ابن فلانة وأي عبد هو أعبد مني ومن الأحنف بن قيس هذا إنه من ولي أمر المسلمين فهو عبد للمسلمين يجب عليه لهم ما يجب على العبد لسيده من النصيحة وأداء الأمانة. அஹ்னஃப் இப்னு கைஸ் ரஹ் அவர்கள் ஈராக்கில் இருந்து மதீனா வந்திருந்த போது உமர் ரழி அவர்கள் சதகாவின் ஒட்டகங்களைப் பராமரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். அஹ்னஃப் இப்னு கைஸைப் பார்த்து அஹ்னஃபே உன்னுடைய ஆடையை வரிந்து கட்டிக் கொண்டு இந்த வேலையில் என்னோடு உதவி செய் என்று கூற அவர்களும் அதற்கு உதவி செய்தார்கள் இருந்தாலும் அந்த அஹ்னஃப் இப்னு கைஸ் ரஹ் அவர்கள் அமீருல் முஃமினீன் அவர்களே நீங்கள் இதற்கெல்லாம் அடிமைகளை வைத்து வேலை வாங்க க் கூடாதா என்று கேட்க, அதற்கு உமர் ரழி அவர்கள் என்னை விட அடிமை வேறு யார் இருக்கிறார் என்று கூறினார்கள் 
 குடியரசு தினம் கொண்டாடப் படுவதன் நோக்கம் 
 1947- ஆகஸ்ட் 15-ல் இந்தியா சுதந்திரம் பெற்றாலும் ஒரு நாட்டை ஆளுவதற்கான அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப் படுவதற்கு கால அவகாசம் தேவைப்பட்டது. மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால் தான் இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஆகும். எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம். இந்திய சுதந்திரத்திற்கு முன் 1946 டிச. 9ல் அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டது. அதன் தற்காலிகதலைவராக சச்சிதானந்த சின்கா தேர்வானார். இந்திய சுதந்திரசட்டம் 1947 ஜூனில் நிறைவேறியது. 1947 ஆக.15ல் இந்தியா சுதந்திரம் அடைந்தது 1947ல், அரசியல் நிர்ணய சபை தலைவர் சின்கா மறைவையொட்டி, டாக்டர் ராஜேந்திர பிரசாத் அதன் தலைவரானார். முதல் குடியரசு தலைவராகவும் அவர் பொறுப்பேற்றார். இந்தியாவிற்கு அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் பொறுப்பேற்றார். அக்குழு தந்த வரைவினை அரசியல் நிர்ணய சபை 1949 நவ.26ல் ஏற்று கொண்டது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26ல் நடை முறைக்கு வந்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜன. 26 குடியரசு தினமாக கடை பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் அனைத்து மக்களும் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் முஸ்லிம் தலைவர்களும் மற்ற சகோதர சமயத் தலைவர்களும் இணைந்து உருவாக்கியது தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம். ஆனால் அதை அடியோடு மாற்றி விடலாம் என இன்றைய பாசிச அரசு முயல்கிறது. 
 இந்திய அரசியல் சாசனத்தில் இடம்பெறும் ஷரத்துக்களில் நாம் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில ஷரத்துக்கள் 
இந்திய அரசியல் சாசனத்தில் இடம்பெறும் 395 ஷரத்துக்களில் நாம் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில ஷரத்துக்கள் உள்ளன. அவை சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை அழுத்தமாக முன்வைக்கின்றன. இந்திய அரசியல் சாசனத்தில் இடம்பெறும் 395 ஷரத்துக்களில் நாம் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில ஷரத்துக்கள் உள்ளன. அவை சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை அழுத்தமாக முன்வைக்கின்றன. அவற்றின் மீது கை வைப்பது இந்திய அரசியல் சாசனத்தின் சுவாசத்தையே முற்றாக நிறுத்தி விடுவதாகும். 25-ம் ஷரத்து- இந்தியர் எவரும் அவர் விரும்பிய மதத்தில் வாழவும், அதைப் பரப்பவும் அவருக்கு உரிமை உண்டு. ஷரத்து 26- சமயம் சார்ந்த நிறுவனங்களை, அறநிலையங்களை அமைக்க, நிர்வகிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஷரத்து 27- மதம் சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்கு ஆகும் செலவுக்கு வரி செலுத்துமாறு கட்டாயப் படுத்தக்கூடாது ஷரத்து 29-A - இந்தியக் குடிமக்கள் தாங்கள் பேசும் மொழி, கலாச்சாரம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் உரிமை உண்டு. ஷரத்து- 30- சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை, உருவாக்க, நிர்வகிக்க உரிமை உண்டு. ஷரத்து 32- மேலே குறிப்பிடப்பட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டால் உச்ச நீதி மன்றத்தில் முறையீடு செய்யலாம். மேற்படி உரிமைகள் அனைத்தையும் அடியோடு மாற்ற நினைக்கும் இந்திய ஜனநாயகத்துக்கு எதிரான பாசிச மத்திய அரசை, நாட்டு மக்கள் அனைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும்
 ஓட்டளித்து ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் ஜனநாயக அமைப்பை குஃப்ர் என்று சிலர் கூறி வருகின்றனர். 
 மக்களாட்சித் தத்துவம் என்பது நபித்தோழர்களின் வழிமுறை தான். இதை குஃப்ரு என்று கூறினால் இன்றைய முஸ்லிம்களில் பெரும்பாலான மக்களை காஃபிர்கள் என்று கூறுவதாக அமைந்து விடும். 
இமாமை தேர்ந்தெடுப்பதும் மக்கள் தேர்வு தான். மக்கள் விரும்பாதவர் இமாமத் செய்ய முடியாது. 
عن بن عباس قال: قال رسول الله صلى الله عليه وسلم: "ثلاثة لا يقبل الله لهم صلاة: إمام قوم وهم له كارهون وامرأة باتت وزوجها عليها غضبان وأخوان متصارمان" (ابن حبان 
எனினும் கலீஃபாக்கள் தேர்வுக்கும் இன்றைய ஆட்சி முறை தேர்வுக்கும் வித்தியாசம் உண்டு. மேற்கூறப்பட்டது போல குடியாட்சிக்கு மறைமுக ஆதாரங்கள் சில இருந்தாலும் இன்றைய ஜனநாயக முறை என்பது அதாவது ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கும் முறை நபியவர்கள் காலத்தில் இல்லை. எனினும் அது கூடும். கலீஃபாவத் தேர்ந்தெடுக்கும் இஸ்லாமிய முறைக்கு மாற்றமாக இன்று உலகில் பரவலாக ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கும் முறைக்கு மக்கள் பெரும்பாலான முஸ்லிம்களும் மாறியதற்கு காரணம் சில நிர்பந்தங்கள் தான். அதாவது இஸ்லாமிய ஆட்சியாளர்   மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் அல்லாஹ்வின் பிரதிநிதி. அல்லாஹ்வின் அதிகாரத்தை பூமியில் நிலைநாட்டுபவர். இந்த முறை சிறப்பாக செயல்பட ஆட்சியாளர்களிடம் தக்வாவும் மக்களிடம் பொறுப்புணர்வும் அவசியம். அது குறைந்து போனதால் தான் இதிலிருந்து விடுபட விரும்பிய முஸ்லிம்கள் தேர்தல் பாணி அரசியலுக்கு மறினர். 19-ம் நூற்றாண்டிலிருந்து சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக  முஸ்லிம் உலகத்திலும் தோதல் அரசியல் வெளிப்படத் தொடங்கியது. இப்போது  துருக்கி இரான் எகிப்து ஜோடான் லெபனான் மெராக்கோ குவைத் எமன் பாகிஸ்தான் பங்களாதேஷ் மலேஷயா செனகல் நைஜீயா போன்ற நாடுகளில் தேர்தல் பானி ஜனநாயக நடைமுறை வழக்கில் இருக்கிறது. இந்தியா தென்னாப்பிரிக்கா ஐரோப்பா வடஅமரிக்கா ஆஸ்திரேலியா போன்ற முஸ்லிம்கள் பெரும் சிறுபான்மையினராக வாழ்கிற தேசங்களிலும் தேர்தல் அரசியலில் முஸ்லிம்கள் பங்கேற்று வருகிறார்கள். மக்களாட்சி தவறானதல்ல.ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஆட்சியாளர்கள் சுயநலமிகளாக மாறி விடுவது தான் அநியாயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...