வியாழன், 7 மார்ச், 2024

தராவீஹ் தொழுகையின் சிறப்பு

 




முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில் ரேஷன் கார்டுக்கு 1000 ரூபாய் என்று அறிவித்தால் மக்கள் அங்கேயும் முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ஆனால் அல்லாஹ் ரமழானில் ஆஃபர் அறிவிக்கிறான். ஒன்று எழுபது மடங்கு நன்மை என அறிவிக்கிறான். ஆனாலும் ஒரு சாரார் மட்டுமே அந்த ஆஃபரைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் மற்றவர்கள் ஏதோ ரமழானில் ஆரம்பத்தில் முதலாவது தராவீஹ் அதற்கு அடுத்து 27-ம் தராவீஹ் என இந்த இரண்டு இரவுகளில் மட்டுமே தொழுதால் ரமழானின் பெருமையை அடைந்து விட்டதாக தப்புக் கணக்குப் போடுகின்றனர். இதை உணர்த்துவது நமது கடமையாகும்.                     

பொதுவாகவே இரவில் நின்று வணங்குவதின் சிறப்பு

عن الْمُغِيرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ إِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَقُومُ لِيُصَلِّيَ حَتَّى تَرِمُ قَدَمَاهُ أَوْ سَاقَاهُ فَيُقَالُ لَهُ فَيَقُولُ أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا(بخاري). بَاب قِيَامِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّيْلَ- كتاب التهجد

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللَّهِ الْمُحَرَّمُ وَأَفْضَلُ الصَّلَاةِ بَعْدَ الْفَرِيضَةِ صَلَاةُ اللَّيْلِ (مسلم)

عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ الرَّجُلُ فِي حَيَاةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَأَى رُؤْيَا قَصَّهَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَمَنَّيْتُ أَنْ أَرَى رُؤْيَا فَأَقُصَّهَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكُنْتُ غُلَامًا شَابًّا وَكُنْتُ أَنَامُ فِي الْمَسْجِدِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَيْتُ فِي النَّوْمِ كَأَنَّ مَلَكَيْنِ أَخَذَانِي فَذَهَبَا بِي إِلَى النَّارِ فَإِذَا هِيَ مَطْوِيَّةٌ كَطَيِّ الْبِئْرِ وَإِذَا لَهَا قَرْنَانِ وَإِذَا فِيهَا أُنَاسٌ قَدْ عَرَفْتُهُمْ فَجَعَلْتُ أَقُولُ أَعُوذُ بِاللَّهِ مِنْ النَّارِ قَالَ فَلَقِيَنَا مَلَكٌ آخَرُ فَقَالَ لِي لَمْ تُرَعْفَقَصَصْتُهَا عَلَى حَفْصَةَ فَقَصَّتْهَا حَفْصَةُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَفَقَالَ نِعْمَ الرَّجُلُ عَبْدُ اللَّهِ لَوْ كَانَ يُصَلِّي مِنْ اللَّيْلِ فَكَانَ بَعْدُ لَا يَنَامُ مِنْ اللَّيْلِ إِلَّا قَلِيلًا(بخاري)بَاب فَضْلِ قِيَامِ اللَّيْلِ-كتاب التهجد(وفي الحديث إيماء إلى أن قيام الليل ينجي من النار)

விளக்கம்- ஸாலிம் ரஹ் அவர்களின் தந்தையான இப்னு உமர் ரழி கூறினார்கள். நபி ஸல் அவர்கள் காலத்தில் யாரேனும் கனவு கண்டால் அதை நபி ஸல் அவர்களிடம் கூறுவார்கள். எனக்கும் ஒரு ஆசை இருந்தது. நானும் இதுவரை இரவில் எழுந்து வணங்கும் பழக்கம் இல்லாத இளைஞர் அப்துல்லாஹ் ரழி அவர்கள் இனி அதை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக இந்த கனவு காட்டப்பட்டுள்ளது.  கனவில் அவரை இரு மலக்குகள் நரகத்திற்கு அழைத்துச் செல்வதாகவும், மூன்றாவதாக ஒரு மலக்கு நீ பயப்படாதே என்று கூறி அவர்களிடமிருந்து இவரை காப்பாற்றுவதாகவும் கனவு காட்டப்பட்டுள்ளது. இந்த விஷயம் நபி ஸல் அவர்களுக்குத் தெரிந்த போது அப்துல்லாஹ் இரவில் வணங்குபவராக இருந்தால் நல்லது அவர்களும் கூறியுள்ளார்கள். 

சஹாபாப் பெருமக்களின் தராவீஹ் தொழுகை எப்ப இருந்தது.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِى بَكْرٍ أَنَّهُ قَالَ سَمِعْتُ أَبِى يَقُولُ:كُنَّا نَنْصَرِفُ مِنَ الْقِيَامِ فِى رَمَضَانَ فَنَسْتَعْجِلُ الْخَادِمُ بِالطَّعَامِ مَخَافَةَ الْفَجْرِ (سنن الكبري

அப்துல்லாஹ் இப்னு அபீபக்ர் ரழி அவர்கள் கூறினார்கள் நான் என்னுடைய தந்தை சொல்ல கேள்விப்பட்டுள்ளேன் நாங்கள் எங்களுடைய காலத்தில் ரமழானில் நின்று வணங்கி விட்டுத் திரும்புவோம். அப்போது ஃப்ஜ்ர் நேரம் வந்து விடுமோ என்ற அச்சத்தில் சீக்கிரமாக உணவு சமைத்துத் தரும்படி பணியாளரிடம் நாங்கள் ஏவுவோம்.

ஒரு மணி நேரத்தில் முடிக்கச் சொல்லும் இந்தக் காலமும், நீண்ட நேரம் நின்று தொழுத அந்தக்காலமும்

عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ قَالَ : كَانُوا يَقُومُونَ عَلَى عَهْدِ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِىَ اللَّهُ عَنْهُ فِى شَهْرِ رَمَضَانَ بِعِشْرِينَ رَكْعَةً - قَالَ - وَكَانُوا يَقْرَءُونَ بِالْمِئِينِ  وَكَانُوا يَتَوَكَّئُونَ عَلَى عُصِيِّهِمْ فِى عَهْدِ عُثْمَانَ بْنِ عَفَّانَ رَضِىَ اللَّهُ عَنْهُ مِنْ شِدَّةِ الْقِيَامِ (سنن الكبري للبيهقي)

ஸாயிப் இப்னு யஜீத் ரழி அவர்கள் கூறினார்கள் நாங்கள் உமர் ரழி அவர்களின் காலத்தில் ரமழானில் இருபது ரக்அத்துகள் தொழுவோம். அப்போது தொழ வைப்பவர்கள் (ஒரு தொழுகையில்) நூறு ஆயத்துகள் வரை ஓதுவார்கள். உமர் ரழி அவர்களின் காலத்திலும் இது தொடர்ந்தது. எந்த அளவுக்கென்றால் எங்களில் சிலர் நிற்க முடியாமல் கைத்தடி மீது சாய்ந்தவர்களாக நின்று தொழுவார்கள்.

120-வது வயதிலும் தராவீஹ் தொழுகை நடத்தியவர்

عَنِ الْوَلِيدِ بْنِ عَلِيٍّ  عَنْ أَبِيهِ  قَالَ : كَانَ سُوَيْد بْنُ غَفَلَةَ يَؤُمُّنَا فَيَقُومُ بِنَا فِي شَهْرِ رَمَضَانَ وَهُوَ ابْنُ عِشْرِينَ وَمِئَةِ سَنَةٍ. (مصنف ابن ابي شيبة)

குர்ஆனை விரைவாக ஓதுபவர், மெதுவாக ஓதுபவர், நடுத்தரமாக ஓதுபவர் என மூன்று சாரார் அப்போதே இருந்துள்ளனர்

عَنْ أَبِى عُثْمَانَ النَّهْدِىِّ قَالَ :دَعَا عُمَرُ بْنُ الْخَطَّابِرَضِىَ اللَّهُ عَنْهُ بِثَلاَثَةِ قُرَّاءٍ فَاسْتَقْرَأَهُمْ  فَأَمَرَ أَسْرَعَهُمْ قِرَاءَةً أَنْ يَقْرَأَ لِلنَّاسِ ثَلاَثِينَ آيَةً  وَأَمَرَ أَوْسَطَهُمْ أَنْ يَقْرَأَ خَمْسًا وَعِشْرِينَ آيَةً  وَأَمَرَ أَبْطَأَهُمْ أَنْ يَقْرَأَ عِشْرِينَ آيَةً وَكَذَلِكَ رَوَاهُ الثَّوْرِىُّ (سنن الكبري) 

 உமர் ரழி அவர்கள் மூன்று காரிகளை அழைத்து தொழ வைக்கக் கூறுவார்கள். அவர்களில் சற்று விரைவாக ஓதுபவரை ஒவ்வொரு ரக்அத்திலும் முப்பது ஆயத்துகள் வரை ஓதச் சொல்வார்கள். அவர்களில் இன்னும் சற்று தாமதமாக ஓதுபவரை ஒவ்வொரு ரக்அத்திலும் 25 ஆயத்துகள் வரை ஓதச் சொல்வார்கள். இன்னும் சற்று தாமதமாக ஓதுபவரை ஒவ்வொரு ரக்அத்திலும் இருபது ஆயத்துகள் வரை ஓதச் சொல்வார்கள்.விளக்கம்- சஹாபாக்களில் யாரும் நம்முடைய சில ஹாஃபிழ்களைப் போன்று விரைவாக ஓதும் வழமை யாரிடமும் இருந்திருக்கவில்லை. அந்தக் காலத்தில் முப்பது ஆயத்துகள் ஓதி விரைவாகத் தொழு வைப்பவர் என்றால் நாம் சாதாரண காலத்தில் தொழ வைக்கும்போது எந்த வேகத்தில் ஓதுகிறோமோ அந்த விரைவாகும்.     

عَنِ الْحَسَنِ قَالَ:مَنْ أَمَّ النَّاسَ فِي رَمَضَانَ فَلْيَأْخُذْ بِهِمَ الْيُسْرَ  فَإِنْ كَانَ بَطِيءَ الْقِرَاءَةِ فَلْيَخْتِمَ الْقُرْآنَ خَتْمَةً  وَإِنْ كَانَ قِرَاءَةً بَيْنَ ذَلِكَ فَخَتْمَة وَنِصْف  فَإِنْ كَانَ سَرِيعَ الْقِرَاءَةِ فَمَرَّتَيْنِ- كَانَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ يَأْمُرُ الَّذِينَ يَقْرَؤُونَ فِي رَمَضَانَ  يَقْرَؤُونَ فِي كُلِّ رَكْعَةٍ بِعَشْرِ آيَاتٍ عَشْرِ آيَاتٍ (مصنف ابن ابي شيبة)

ஹஸன் ரஹ் கூறினார்கள் ரமழானில் மக்களுக்கு தராவீஹ் தொழவைப்பவர் மக்களை சிரமப்படுத்தாமல் இலகுவான நிலையைக் கடை பிடிக்கட்டும். யார் மெதுவாக ஓதுவாரோ அவர் ஒரு குர்ஆன் முடிக்கட்டும். யார் இன்னும் சற்று விரைவாக ஓதுவாரோ அவர் ஒன்றரை குர்ஆன் முடிக்கட்டும். யார் இன்னும் சற்று விரைவாக ஓதுவாரோ அவர் இரண்டு குர்ஆன் முடிக்கட்டும்.

நோன்புக்கு முந்தைய நாளிலேயே தராவீஹ் தொழுகையின் சிறப்பை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பேசியது

عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ رضي الله عنهعَنْ سَلْمَانَ قَالَ:خَطَبَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي آخِرِ يَوْمٍ مِنْ شَعْبَانَ فَقَالَ: أَيُّهَا النَّاسُ قَدْ أَظَلَّكُمْ شَهْرٌ عَظِيمٌ شَهْرٌمُبَارَكٌ شَهْرٌ فِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍجَعَلَ اللَّهُ صِيَامَهُ فَرِيضَةً وَقِيَامَ لَيْلِهِ تَطَوُّعًا مَنْ تَقَرَّبَ فِيهِ بِخَصْلَةٍ مِنَ الْخَيْركَانَ كَمَنْ أَدَّى فَرِيضَةً فِيمَا سِوَاهُ وَمَنْ أَدَّى فِيهِ فَرِيضَةً كَانَ كَمَنْ أَدَّى سَبْعِينَ فَرِيضَةً فِيمَا سِوَاهُ.. (ابن خزيمة)

நோன்பு துவங்குவதற்கு ஓரிரு தினங்கள் இருக்கும்போது ஷஃபான் மாத இறுதியில் நபி ஸல்  எங்களுக்கு உபதேசம் செய்தார்கள். மக்களே மகத்தான மாதம்  இப்போது  நிழலிட்டுள்ளது. வரவுள்ளது. அது பரக்கத் பொருந்திய மாதம். ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு அதில் உள்ளது. அதில் நோன்பு வைப்பதை அல்லாஹ் ஃபர்ளாகவும் இரவில் நின்று வணங்குவத சுன்னத்தாகவும் அல்லாஹ் ஆக்கியுள்ளான். அந்த மாதத்தில் ஒரு உபரியான வணக்கத்தை நிறைவேற்றுபவர்  மற்ற மாதங்களில் ஒரு ஃபர்ளை நிரைவேற்றுபவரைப் போலவும் அந்த மாதத்தில் ஒரு ஃபர்ளான வணக்கத்தை நிறைவேற்றுபவர்  மற்ற மாதங்களில் 70 ஃபர்ளை நிறைவேற்றுபவரைப் போலவும் ஆகி விடுவார்.                                                                                                    

தராவீஹ் தொழுகையை தொடங்கியவர்கள் நபி ஸல் அவர்கள்.

 என்றாலும் தொடர்ந்து தொழுதால் உம்மத் மீது கடமையாகி விடும் என்ற அச்சத்தால் அதை வழமையாக்கவில்லை

عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى ذَاتَ لَيْلَةٍ فِي الْمَسْجِدِ فَصَلَّى بِصَلَاتِهِ نَاسٌ ثُمَّ صَلَّى مِنْ الْقَابِلَةِ فَكَثُرَ النَّاسُ ثُمَّ اجْتَمَعُوا مِنْ اللَّيْلَةِ الثَّالِثَةِ أَوْ الرَّابِعَةِ فَلَمْ يَخْرُجْ إِلَيْهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا أَصْبَحَ قَالَ قَدْ رَأَيْتُ الَّذِي صَنَعْتُمْ وَلَمْ يَمْنَعْنِي مِنْ الْخُرُوجِ إِلَيْكُمْ إِلَّا أَنِّي خَشِيتُ أَنْ تُفْرَضَ عَلَيْكُمْ وَذَلِكَ فِي رَمَضَانَ.(بخاري) كتاب التهجد

இன்னும் பல சுன்னத்துகளை நபி (ஸல்) செய்ய விரும்பினாலும் உம்மத் மீது ஃபர்ளாகி விடுமோ என்ற பயத்தில் விட்டுள்ளார்கள்

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَدَعُ الْعَمَلَ وَهُوَ يُحِبُّ أَنْ يَعْمَلَ بِهِ خَشْيَةَ أَنْ يَعْمَلَ بِهِ النَّاسُ فَيُفْرَضَ عَلَيْهِمْ وَمَا سَبَّحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُبْحَةَ الضُّحَى قَطُّ وَإِنِّي لَأُسَبِّحُهَا(بخاري) كتاب التهجد

தன் உம்மத்தின் மீது கடமையாகி விடுவதை அஞ்சி நபி[ஸல்] வழமையாக்காத செயலை உமர்[ரளி] வழமையாக்கினார்கள்

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدٍ الْقَارِيِّ أَنَّهُ قَالَ خَرَجْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ لَيْلَةً فِي رَمَضَانَ إِلَى الْمَسْجِدِ فَإِذَا النَّاسُ أَوْزَاعٌ مُتَفَرِّقُونَ يُصَلِّي الرَّجُلُ لِنَفْسِهِ وَيُصَلِّي الرَّجُلُ فَيُصَلِّي بِصَلَاتِهِ الرَّهْطُ فَقَالَ عُمَرُ إِنِّي أَرَى لَوْ جَمَعْتُ هَؤُلَاءِ عَلَى قَارِئٍ وَاحِدٍ لَكَانَ أَمْثَلَ ثُمَّ عَزَمَ فَجَمَعَهُمْ عَلَى أُبَيِّ بْنِ كَعْبٍ ثُمَّ خَرَجْتُ مَعَهُ لَيْلَةً أُخْرَى وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلَاةِ قَارِئِهِمْ قَالَ عُمَرُ نِعْمَ الْبِدْعَةُ هَذِهِ وَالَّتِي يَنَامُونَ عَنْهَا أَفْضَلُ مِنْ الَّتِي يَقُومُونَ يُرِيدُ آخِرَ اللَّيْلِ وَكَانَ النَّاسُ يَقُومُونَ أَوَّلَهُ (بخاري)بَاب فَضْلِ مَنْ قَامَ رَمَضَانَ- كِتَاب صَلَاةِ التَّرَاوِيحِ

விளக்கம் -அப்துர் ரஹ்மான் இப்னு அப்துல்காரீ ரழி கூறினார்கள் நான் உமர் ரழி அவர்களுடன் ரமழான் இரவில் மஸ்ஜிதுக்குச் சென்றேன்.அப்போது மக்கள் பல பிரிவுகளாக நின்று தராவீஹ் ஜமாஅத் நடத்திக் கொண்டிருப்பதைக் கண்டு நான் இவர்களையெல்லாம் ஒரேயொரு ஹாஃபிழுக்குப் பின்னால் ஒன்று சேர்த்தால் நன்றாக இருக்குமே என்று ஆசைப்பட்டார்கள். அதன்படி மிகச் சிறந்த காரீயாக விளங்கிய உபய் இப்னு கஃப் ரழி அவர்களுக்குப் பின்னால் மக்களை ஒன்று திரட்டினார்கள். பின்பு மற்றொரு இரவில் நான் மஸ்ஜிதுக்குச் சென்றேன். உபய் இப்னு கஃப் ரழி அவர்களுக்குப் பின்னால் தராவீஹ் தொழுகையை மக்கள் தொழுது கொண்டிருந்தார்கள். அதைக் கண்ட உமர் ரழி அவர்கள் பித்அத்துகளில் இது நல்ல பித்அத் என்றார்கள்.                                   

குர்ஆனை ஒன்று திரட்டியதும் கூட நல்ல பித்அத் என்ற பட்டியலில் சேரும்

عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي ابْنُ السَّبَّاقِ أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ الْأَنْصَارِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ وَكَانَ مِمَّنْ يَكْتُبُ الْوَحْيَ قَالَ أَرْسَلَ إِلَيَّ أَبُو بَكْرٍ مَقْتَلَ أَهْلِ الْيَمَامَةِ وَعِنْدَهُ عُمَرُ فَقَالَ أَبُو بَكْرٍ إِنَّ عُمَرَ أَتَانِي فَقَالَ إِنَّ الْقَتْلَ قَدْ اسْتَحَرَّ يَوْمَ الْيَمَامَةِ بِالنَّاسِ وَإِنِّي أَخْشَى أَنْ يَسْتَحِرَّ الْقَتْلُ بِالْقُرَّاءِ فِي الْمَوَاطِنِ فَيَذْهَبَ كَثِيرٌ مِنْ الْقُرْآنِ إِلَّا أَنْ تَجْمَعُوهُ وَإِنِّي لَأَرَى أَنْ تَجْمَعَ الْقُرْآنَ قَالَ أَبُو بَكْرٍ قُلْتُ لِعُمَرَ كَيْفَ أَفْعَلُ شَيْئًا لَمْ يَفْعَلْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ عُمَرُ هُوَ وَاللَّهِ خَيْرٌ فَلَمْ يَزَلْ عُمَرُ يُرَاجِعُنِي فِيهِ حَتَّى شَرَحَ اللَّهُ لِذَلِكَ صَدْرِي وَرَأَيْتُ الَّذِي رَأَى عُمَرُ قَالَ زَيْدُ بْنُ ثَابِتٍ وَعُمَرُ عِنْدَهُ جَالِسٌ لَا يَتَكَلَّمُ فَقَالَ أَبُو بَكْرٍ إِنَّكَ رَجُلٌ شَابٌّ عَاقِلٌ وَلَا نَتَّهِمُكَ كُنْتَ تَكْتُبُ الْوَحْيَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَتَبَّعْ الْقُرْآنَ فَاجْمَعْهُ فَوَاللَّهِ لَوْ كَلَّفَنِي نَقْلَ جَبَلٍ مِنْ الْجِبَالِ مَا كَانَ أَثْقَلَ عَلَيَّ مِمَّا أَمَرَنِي بِهِ مِنْ جَمْعِ الْقُرْآنِ قُلْتُ كَيْفَ تَفْعَلَانِ شَيْئًا لَمْ يَفْعَلْهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَبُو بَكْرٍ هُوَ وَاللَّهِ خَيْرٌ فَلَمْ أَزَلْ أُرَاجِعُهُ حَتَّى شَرَحَ اللَّهُ صَدْرِي لِلَّذِي شَرَحَ اللَّهُ لَهُ صَدْرَ أَبِي بَكْرٍ وَعُمَرَ فَقُمْتُ فَتَتَبَّعْتُ الْقُرْآنَ أَجْمَعُهُ مِنْ الرِّقَاعِ وَالْأَكْتَافِ وَالْعُسُبِ وَصُدُورِ الرِّجَالِ  (بخاري

விளக்கம்- யமாமா போருக்குப் பின்பு குர்ஆனை மனனம் செய்த அறிஞர்களில் ஏராளமானோர் கொல்லப்பட்டார்கள். இதனால் குர்ஆனை நம்மை விட்டும் சென்றுவிடுமோ என்ற கவலை ஹழ்ரத் உமர்(ரழி) அவர்களுக்கு ஏற்பட்டது. இக்கவலையை அப்போது கலீஃபாவாக இருந்த ஹழ்ரத் அபூபக்கர் (ரழி) அவர்களிடம் தெரிவித்து குர்ஆனை ஒன்று திரட்டும்படி கூறினார்கள். இதைக் கேட்ட ஹழ்ரத் அபூபக்கர் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்யாத செயலை நாம் எவ்வாறு செய்ய முடியும் என்று கேட்டார்கள். அதற்கு ஹழ்ரத் உமர்(ரழி) அவர்கள் அல்லாஹ் மீது ஆணையாக குர்ஆனை ஒன்று திரட்டும் இந்தப் பணி நன்மையாகவே இருக்கும் என்று கூறினார்கள். அதற்கு ஹழ்ரத் அபூபக்கர் (ரழி) அவர்களும் ஒப்புக் கொண்டார்கள். பிறகு அபூபக்கர்(ரழி) அவர்கள் ஜைத் இப்னு ஸாபித்(ரழி) அவர்களிடம் குர்ஆனை நீங்கள் ஒரே பிரதியாக ஒன்று திரட்டுங்கள் என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் இறைத் தூதர் (ஸல்) செய்யாத ஒரு செயலை நான் எப்படிச் செய்ய முடியும் என்று கேட்க, உமர்(ரழி) அவர்கள் கூறிய பதிலை அப்படியே இவர்களிடம் அபூபக்கர் (ரழி)  கூறினார்கள்

ஜைத்இப்னு ஸாபித்(ரழி)அவர்கள் கூறுகிறார்கள். எதற்காக அபூபக்கர்(ரழி), உமர்(ரழி) ஆகியோரின் அல்லாஹ் விரிவாக்கினானோஅதற்காக எனது மனதையும் அல்லாஹ் விரிவாக்கினான். அவர்கள் கூறியது போல் குர்ஆனை ஒன்று திரட்ட நான் முன் வந்தேன். மக்களின் கரங்களில் அவர்கள் குர்ஆனை எழுதி வைத்திருந்த ஓலைச்சுவடிகள், பேரீத்த மட்டைகள், ஓடுகள் ஆகியவற்றிலிருந்து நான் திருக்குர்ஆனை ஒன்று திரட்டத் துவங்கினேன். யாரெல்லாம் குர்ஆனை மனனம் செய்திருந்தார்களோ அவர்களிடமிருந்து  ஒன்று திரட்ட ஆரம்பித்தேன். ஜைதுப்னு ஸாபித்(ரழி) அவர்கள் பொதுஅழைப்பாக யார் குர்ஆனை மனனம் செய்துள்ளீர்களோ குர்ஆனை யார் எழுதி வைத்துள்ளீர்களோ அவர்களெல்லாம் என்னிடம் வாருங்கள் என அழைத்தார்கள். தேடிச் சென்றும் குர்ஆனை ஒன்று திரட்டினார்கள். ஒருவர் சொன்னதை மட்டும் வைத்து முடிவு செய்யாமல் பலரிடம் அதை உறுதிப் படுத்துவார்கள். இவ்வாறு பல கோணங்களிலும் ஆராய்ந்த பின் தான் குர்ஆன் வசனங்களை தம் தொகுப்பில் பதிவு செய்வார்கள். திருக்குர்ஆனின் எந்த ஒரு வசனமும் விடுபட்டுப் போகாத அளவுக்கு கடும் முயற்சி செய்தார்கள். இதைப் பற்றி ஜைத் இப்னு ஸாபித் (ரழி) கூறும்போது ஒரு மலையை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றியமைக்கச் சொல்லியிருந்தாலும் அது எனக்கு இலகுவாக இருக்கலாம் அதை விட குர்ஆனை ஒன்று திரட்டும் பணி எனக்கு மிக சிரமமாக இருந்தது எனக் கூறினார்கள். இவ்வாறான கடும் சிரமத்திற்கு மத்தியில் குர்ஆனை அவர்கள் திரட்டினார்கள்.

இதன் பிறகு நூல் வடிவிலான குர்ஆன் பிரதி அபூபக்கர் (ரழி)அவர்களிடம் பாதுகாப்பாக இருந்தது. அதன்பின் உமர் (ரழி) அவர்களிடம் பாதுகாப்பாக இருந்தது.அதன்பின் உமர் (ரழி) அவர்களின் மகளும் மற்றும் நபி (ஸல்) அவர்களின் மனைவியுமான ஹஃப்ஸா(ரழி) அவர்களிடம் குர்ஆன் பிரதி பாதுகாப்பாக இருந்தது.

உமர் ரழி அவர்கள் தொடங்கி வைத்த தராவீஹ் தொழுகை என்று சிலர் விமர்சனம் செய்கின்றனர்

உமர்அவர்களின் கருத்துக்குத் தோதுவாக குர்ஆன் வசனங்கள் இறங்கியுள்ளன.

قال الله تعالي وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى..(125التوبة)عَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ قَالَ عُمَرُ وَافَقْتُ اللَّهَ فِي ثَلَاثٍ أَوْ وَافَقَنِي رَبِّي فِي ثَلَاثٍ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَوْ اتَّخَذْتَ مَقَامَ إِبْرَاهِيمَ مُصَلًّى وَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ يَدْخُلُ عَلَيْكَ الْبَرُّ وَالْفَاجِرُ فَلَوْ أَمَرْتَ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ بِالْحِجَابِ فَأَنْزَلَ اللَّهُ آيَةَ الْحِجَابِ قَالَ وَبَلَغَنِي مُعَاتَبَةُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْضَ نِسَائِهِ فَدَخَلْتُ عَلَيْهِنَّ قُلْتُ إِنْ انْتَهَيْتُنَّ أَوْ لَيُبَدِّلَنَّ اللَّهُ رَسُولَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرًا مِنْكُنَّ حَتَّى أَتَيْتُ إِحْدَى نِسَائِهِ قَالَتْ يَا عُمَرُ أَمَا فِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يَعِظُ نِسَاءَهُ حَتَّى تَعِظَهُنَّ أَنْتَ فَأَنْزَلَ اللَّهُ {عَسَى رَبُّهُ إِنْ طَلَّقَكُنَّ أَنْ يُبَدِّلَهُ أَزْوَاجًا خَيْرًا مِنْكُنَّ مُسْلِمَاتٍ} الْآيَةَ (بخاري) باب قَوْلِه ( وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى ) كتاب التفسير

عَنْ أَنَسِ رضي الله عنه قَالَ: قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ : وَافَقْتُ رَبِّي فِي ثَلاثٍ ، قُلْتُ : يَا رَسُولَ اللهِ ، هَذَا مَقَامُ إِبْرَاهِيمَ لَوِ اتَّخَذْنَاهُ مُصَلًّى ، فَأَنْزَلَ اللهُ تَعَالَى : وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى ، وَقُلْتُ : يَا رَسُولَ اللهِ ، لَوْ حَجَبْتَ نِسَاءَكَ فَإِنَّهُ يَدْخُلُ عَلَيْكَ الْبَرُّ وَالْفَاجِرُ فَأَنْزَلَ اللهُ آيَةَ الْحِجَابِ: {وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ[الأحزاب:53} وَقُلْتُ فِي أُسَارَى بَدْرٍ: اضْرِبْ أَعْنَاقَهُمْ  فَاسْتَشَارَ أَصْحَابَهُ ، فَأَشَارُوا عَلَيْهِ بِأَخْذِ الْفِدَاءِ ، فَأَنْزَلَ اللهُ:{ كَانَ لِنَبِيٍّ أَنْ يَكُونَ لَهُ أَسْرَى حَتَّى يُثْخِنَ فِي الأَرْضِ[الأنفال:67}(طبراني)

மகாமே இப்றாஹீம் அருகில் இருந்தபடி உமர் ரழி அவர்கள் மகாமே இப்றாஹீமை தொழுமிடமாக நாம் ஆக்கிக் கொண்டால் நன்றாக இருக்குமே என்று கூறினார்கள். அல்லாஹ் அதற்குத் தோதுவாக வசனத்தை இறக்கினான்.   2. நபி ஸல் அவர்களிடம் உமர் ரழி அவர்கள் அல்லாஹ்வின் தூதரே உங்களை சந்திக்க நல்லவரும் வருகிறார் கெட்டவரும் வருகிறார். எனவே உங்கள் வீட்டில் திரையை ஏற்படுத்தி உங்கள் மனைவியரை மற்றவர்கள் பார்க்காத வகையில் செய்தால் நன்றாக இருக்குமே என்றார்கள். அல்லாஹ் அதற்குத் தோதுவாக ஹிஜாபுடைய வசனத்தை இறக்கினான்.  3.பத்ரில் பிடிபட்ட கைதிகள் விஷயத்தில் அவர்களைக் கொன்று விடும்படி உமர் ரழி அவர்கள் ஆலோசனை தந்தார்கள். ஆனால் நபி ஸல் அவர்கள் மற்றவர்களிடமும் ஆலோசனை செய்ததன் அட்ப்படையில் ஃபித்யா வாங்கிக் கொண்டு விட்டு விடலாம் என்று முடிவெடுத்தார்கள். ஆனால் அல்லாஹ் தஆலா உமர் ரழி அவர்களின் கருத்துக்குத் தோதுவாக வசனத்தை இறக்கினான்.

கலீபாக்கள் நடைமுறைப்படுத்தி, அப்போதைய சஹாபாக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட 20 ரக்அத் தராவீஹ் தொழுகை

 (الاحاديث المختارة للضياء)-عَنْ يَزِيدَ بْنِ رُومَانَ قَالَ :كَانَ النَّاسُ يَقُومُونَ فِى زَمَانِ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِىَ اللَّهُ عَنْهُ فِى رَمَضَانَ بِثَلاَثٍ وَعِشْرِينَ رَكْعَةً (سنن الكبري للبيهقي, مؤطا مالك, مصنف ابن ابي شيبة, مصنف عبد الرزاق, جامع الاصول)

عن أبي بن كعب أن عُمَرَ رضي الله عنه أمر أُبَيّا أن يصلي بالناس في رمضان فقال إن الناس يصومون النهار ولا يحسنون أن( يقرؤا )فلو قرأتَ القرآن عليهم بالليل فقال يا أمير المؤمنين هذا(شيء)لم يكنْ ؟فقال قد علمتُ ولكنه أحسن فصلى بهم عشرين ركعة (إسناده حسن)عَنْ عَلِىٍّ رَضِىَ اللَّهُ عَنْهُ دَعَا الْقُرَّاءَ فِى رَمَضَانَ فَأَمَرَ مِنْهُمْ رَجُلاً يُصَلِّى بِالنَّاسِ عِشْرِينَ رَكْعَةً وَكَانَ عَلِىٌّ رَضِىَ اللَّهُ عَنْهُ يُوتِرُ بِهِمْ (سنن الكبري للبيهقي)

 

அலீ ரழி அவர்கள் கலீஃபாவாக இருக்கும்போது ஹாஃபிழ்களை அழைத்து இருபது ரக்அத் தொழ வைக்க ஏவுவார்கள்.

கடைசியில் வித்ரை அலீ ரழி அவர்கள் தொழ வைப்பார்கள்.

وَأَكْثَرُ أَهْلِ الْعِلْمِ عَلَى مَا رُوِىَ عَنْ عُمَرَ وَعَلِىٍّ وَغَيْرِهِمَا مِنْ أَصْحَابِ النَّبِىِّ صلى الله عليه وسلم عِشْرِينَ رَكْعَةً. وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِىِّ وَابْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِىِّ.وَقَالَ الشَّافِعِىُّ وَهَكَذَا أَدْرَكْتُ بِبَلَدِنَا بِمَكَّةَ يُصَلُّونَ عِشْرِينَ رَكْعَةً (سنن الترمذي)

தராவீஹ் தொழுகை என்று பெயர் வந்ததற்கான அடிப்படைக் காரணங்களில் சில....

عَنْ عَطَاءٍ عَنْ عَائِشَةَ رَضِىَ اللَّهُ عَنْهَاقَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّى أَرْبَعَ رَكَعَاتٍ فِى اللَّيْلِ  ثُمَّ يَتَرَوَّحُ  فَأَطَالَ حَتَّى رَحِمْتُهُ فَقُلْتُ : بِأَبِى أَنْتَ وَأُمِّى يَا رَسُولَ اللَّهِ قَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ قَالَ: أَفَلاَ أَكُونُ عَبْدًا شَكُورًا؟

وَقَوْلُهُ :ثُمَّ يَتَرَوَّحُ. فَهُوَ أَصْلٌ فِى تَرَوُّحِ الإِمَامِ فِى صَلاَةِ التَّرَاوِيحِ وَاللَّهُ أَعْلَمُ (سنن الكبري للبيهقي)عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ:كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِىَ اللَّهُ عَنْهُ يُرَوِّحُنَا فِى رَمَضَانَ يَعْنِى بَيْنَ التَّرْوِيحَتَيْنِ قَدْرَ مَا يَذْهَبُ الرَّجُلُ مِنَ الْمَسْجِدِ إِلَى سَلْعٍ (سنن الكبري للبيهقي)سلعகணவாய்

தராவீஹ் என்றால் ஓய்வு என்று பொருள். ஒவ்வொரு நான்கு ரக்அத்துகளுக்கு மத்தியில் ஓய்வு எடுக்கச் சொல்லி உமர் ரழி கூறுவார்கள். மஸ்ஜிதில் இருந்து மலைக் கணவாய் வரை சென்று திரும்பும் அளவுக்கு ஓய்வு...

ஹிதாயா ஃபிக்ஹ் நூலில் இந்த ஓய்வு தர்வீஹா பற்றி வந்துள்ள விளக்கங்கள்

التَّرَاوِيحُ سُنَّةٌ وَالِاجْتِمَاعُ مُسْتَحَبٌّ .وَقَوْلُهُ : ( لِأَنَّهُ وَاظَبَ عَلَيْهَا الْخُلَفَاءُ الرَّاشِدُونَ ) إنَّمَا يَدُلُّ عَلَى سُنِّيَّتِهَا لِقَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ { عَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ مِنْ بَعْدِي }

وَأَهْلُ كُلِّ بَلْدَةٍ بِالْخِيَارِ يُسَبِّحُونَ أَوْ يُهَلِّلُونَ أَوْ يَنْتَظِرُونَ سُكُوتًا ، وَإِنَّمَا يُسْتَحَبُّ الِانْتِظَارُ بَيْنَ كُلِّ تَرْوِيحَتَيْنِ ؛ لِأَنَّ التَّرَاوِيحَ مَأْخُوذٌ مِنْ الرَّاحَةِ فَيُفْعَلُ مَا قُلْنَا تَحْقِيقًا لِلْمُسَمَّى ( وَاسْتَحْسَنَ الْبَعْضُ الِاسْتِرَاحَةَ عَلَى خَمْسِ تَسْلِيمَاتٍ وَهُوَ نِصْفُ التَّرَاوِيحِ وَلَيْسَ بِصَحِيحٍ ) أَيْ مُسْتَحَبٍّ .

ஒவ்வொரு ஊர் வாசிகளும் அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் இந்த தர்வீஹாவின் போது தஸ்பீஹ் அல்லது தஹ்லீல் ஓதிக் கொள்ளலாம். அல்லது மவுனமாக இருக்கலாம். ஆனால் எப்படியிருந்தாலும் ஒவ்வொரு நான்கு ரக்அத்துக்கு மத்தியில் ஓய்வு எடுப்பது முஸ்தஹப். ஏனெனில் ஓய்வு என்ற வார்த்தையில் இருந்துதான் தராவீஹ் என்ற வார்த்தே உருவாகியுள்ளது. சிலர் பத்து ரக்அத் முடிந்து ஓய்வு எடுக்கலாம் என்கின்றனர். அது சரியல்ல.

ரமளான் மாதத்தில் குர்ஆனை அதிகம் ஓதுவது, குறிப்பாக தராவீஹ் தொழுகையில் குர்ஆனை ஓதி முடிப்பது பற்றி....

شهر رمضان له خصوصية بالقرآن كما قال تعالي "شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ(البقرة 185 وقوله "إنا أنزلناه في ليلة القدر}{إنا أنزلناه في ليلة مباركة}كان بعض السلف يختم في قيام رمضان في كل ثلاث ليال وبعضهم في كل سبع منهم قتادة رض وبعضهم في كل عشرة منهم أبو رجاء العطاردي كان السلف يتلون القرآن في شهر رمضان في الصلاة وغيرها-كان الأسود يقرأ في كل ليلتين في رمضان- وكان قتادة يختم في كل سبع دائما وفي رمضان في كل ثلاث وفي العشرالأواخركل ليلة –كان للشافعيرحفي رمضان ستون ختمة يقرؤها في غير الصلاة وعن أبي حنيفة نحوه وكان قتادة يدرس القرآن في شهر رمضان وكان الزهري إذا دخل رمضان قال : فإنما هو تلاوة القرآن و إطعام الطعام:كان مالك إذا دخل رمضان يَفِرُّ من قراءة الحديث و مجالسة أهل العلم وأقبل على تلاوة القرآن من المصحف (فضائل الاشهر) 

நமது முன்னோர்கள் ரமழானில் மூன்று நாளைக்கு ஒரு குர்ஆன் முடிப்பவர்களாகவும் இருந்துள்ளார்கள் இன்னும் சிலர் ரமழானில் ஏழு நாளைக்கு ஒரு குர்ஆன் முடிப்பவர்களாகவும் இருந்துள்ளார்கள். அவர்களில் கதாதா ரஹ் அவர்களும் ஒருவர். இன்னும் சிலர் ரமழானில் பத்து நாளைக்கு ஒரு குர்ஆன் முடிப்பவர்களாகவும் இருந்துள்ளார்கள். இதுவெல்லாம் தொழுகையில் ஓதுவதைப் பற்றி....

 நமது முன்னோர்கள் ரமழானில் தொழுகையில் மட்டுமல்லாமல் தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனை அதிகம் ஓதுவார்கள். இமாம் ஷாஃபிஈ ரஹ் ரமழானில் தொழுகைக்கு வெளியில் இரண்டு நாளைக்கு நாளைக்கு ஒரு குர்ஆன் முடிப்பவர்களாகவும் இருந்துள்ளார்கள். இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்கள் ரமழான் வந்து விட்டால் குர்ஆன் வகுப்புகளை மட்டுமே நடத்துவார்கள். அதேபோல் இமாம் மாலிக் ரஹ் அவர்கள் ரமழான் வந்து விட்டால் ஹதீஸ் நடத்துவது, கல்வியைக் கற்றுத் தரும் மஜ்லிஸ் ஆகியவற்றை விட்டும் புறக்கணித்து குர்ஆன் ஓதுவதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். நூல் ஃபழாஇலுல் அஷ்ஹுர்

 

ஷைகுல் ஹிந்த் மஹ்முதுல் ஹஸன் ரஹ் அவர்களும் ஹுஸைன் அஹ்மத் மதனீ ரஹ் அவர்களும் மால்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். ரமழான் துவங்குவதற்கு இன்னும் சில தினங்கள் இருந்தன. அப்போது மஹ்முதுல் ஹஸன் ரஹ் அவர்கள் அழுதார்கள். அதற்கான காரணத்தை ஹுஸைன் அஹ்மத் மதனீ ரஹ் கேட்ட போது எப்போதும் ரமழானில் ஒரு ஹாஃபிழுக்குப் பின்னால் நின்று குர்ஆன் முழுவதையும் கேட்பேன். ஆனால் இந்த வருடம் நாம் சிறையில் இருப்பதால் அதற்கான வாய்ப்பு இல்லாமல் போய் விட்டதே என்றார்கள். அப்போது ஹுஸைன் அஹ்மத் மதனீ ரஹ் அவர்கள் இந்த வருடமும் நமக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று கூற, அது எப்படி சாத்தியம் என்று மஹ்முதுல் ஹஸன் ரஹ் அவர்கள் கேட்க, நிச்சயமாக அது சாத்தியமாகும் என ஹுஸைன் அஹ்மத் மதனீ ரஹ் அவர்கள் கூறினார்கள் அடுத்த ஓரிரு தினங்களில் ரமழான் துவங்கும் முன் முதல்நாள் ஓத வேண்டிய ஒரு ஜுஸ்வை அன்றே மனப்பாடம் செய்து முதல் தராவீஹில் ஓதினார்கள். இரண்டாம் நாள் ஓத வேண்டிய ஒரு ஜுஸ்வை அன்றே மனப்பாடம் செய்து இரண்டாம் நாள் தராவீஹில் ஓதினார்கள். இப்படியாக ரமழான் முழுவதும் தொழ வைத்தார்கள். இறைநேசர்களுக்கு அல்லாஹ் எல்லாவற்றையும் சுலபமாக்கி வைத்தான்.           

நூல்- உலமாயே ஹிந்த்

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...