செவ்வாய், 12 மார்ச், 2024

பிறருக்கு உதவும் நற்குணம் நற்குணங்களும் தீய குணங்களும்- தொடர் 1

 வாழ்க்கையில் நாம் பிறருக்குச் செய்யும் உதவி, உபகாரம், ஒத்துழைப்பு ஆகியவற்றை இரண்டு விதமாக பிரிக்கலாம். சில உதவிகளை நாம் செய்ய வேண்டும் என்று நாடி அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகளை நாம் தேடிச் செல்வோம். சில நேரங்களில் நாம் சாதாரணமாக இருக்கும்போது  பிறருக்கு உதவி செய்யும் சூழ்நிலைகளை தானாக அமையும். அவைகளை நாம் தட்டிக் கழிக்கக் கூடாது அவைகளை சந்தர்ப்பமாக கருதி அந்த உதவிகளைச் செய்ய வேண்டும். உதாரணமாக டிக்கெட் முன்பதிவு செய்யுமிடத்தில் ஒருவர் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யத் தெரியாமல் தடுமாறுகிறார் அவருக்கு அதை பூர்த்தி செய்து தருவது. ஒருவர் பேனாவை மறந்து வைத்து விட்டு வந்து நம்மிடம் பேனாவைக் கேட்பார். அவருக்கு சிறிது நேரம் பேனா கொடுத்து உதவுவது மேலும் வண்டியில் இருந்து இறங்க சிரமப் படுபவரை இறக்கி விடுவது. பைக்கில் போகும்போது ஏதாவது ஒரு பொருளைத் தவற விட்டுச் செல்பவருக்கு அதை எடுத்துக் கொடுப்பது இது மாதிரி எதார்த்தமான முறையில் உதவி செய்யும் வாய்ப்புகள் தானாக வந்து அமையும் போது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

சில வகையான சின்னச் சின்ன உதவிகளுக்கு அல்லாஹ் தரும் பெரிய பெரிய நன்மைகள்

عَنْ عَائِشَةَ رضي الله عنها  أَنَّهَا قَالَتْيَا رَسُولَ اللَّهِ مَا الشَّيْءُ الَّذِي لَا يَحِلُّ مَنْعُهُ قَالَ الْمَاءُ وَالْمِلْحُ وَالنَّارُ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا الْمَاءُ قَدْ عَرَفْنَاهُ فَمَا بَالُ الْمِلْحِ وَالنَّارِ قَالَ يَا حُمَيْرَاءُ مَنْ أَعْطَى نَارًا فَكَأَنَّمَا تَصَدَّقَ بِجَمِيعِ مَا أَنْضَجَتْ تِلْكَ النَّارُ وَمَنْ أَعْطَى مِلْحًا فَكَأَنَّمَا تَصَدَّقَ بِجَمِيعِ مَا طَيَّبَ ذَلِكَ الْمِلْحُ وَمَنْ سَقَى مُسْلِمًا شَرْبَةً مِنْ مَاءٍ حَيْثُ يُوجَدُ الْمَاءُ فَكَأَنَّمَا أَعْتَقَ رَقَبَةً وَمَنْ سَقَى مُسْلِمًا شَرْبَةً مِنْ مَاءٍ حَيْثُ لَا يُوجَدُ الْمَاءُ فَكَأَنَّمَا أَحْيَاهَا (ابن ماجة)ضعيف- بَاب الْمُسْلِمُونَ شُرَكَاءُ فِي ثَلَاثٍ–كِتَاب الْأَحْكَامِ

அன்னை ஆயிஷா ரழி அவர்கள் கூறுவதாவது நான் நபி ஸல் அவர்களிடம் கேட்டேன். நம்மிடமுள்ள சில அற்பமான (விலை மலிவான) பொருட்களில் சிலவற்றை யாரேனும் தாம் சிறிது பயன்படுத்திக் கொள்ள கேட்கும்போது எந்தெந்தப் பொருட்களை நாம் தராமல் மறுக்கக் கூடாது என்று ஏதேனும்  சட்டம் உள்ளதா என்று கேட்டேன் அதற்கு நபி ஸல் அவர்கள் தண்ணீர், உப்பு, நெருப்பு என பதிலளித்தார்கள். உடனே நான் தண்ணீர் தர மறுக்கக்கூடாது என்பது எனக்கும் புரிகிறது. பிறரை தாகத்தோடு விட்டு விடுவது தவறு. ஆனால் நெருப்பையும், உப்பையும் பிறருக்குத் தருவதற்கு ஏன் மறுக்கக்கூடாது என்ற காரணம் எனக்குப் புரியவில்லையே என்றேன் அதற்கு நபி ஸல் அவர்கள் பற்ற வைப்பதற்காக ஒரு நெருப்புக் கங்கை ஒருவர் தந்தால் அந்த நெருப்பின் மூலம் என்னென்ன சமைக்கப்படுகிறதோ அவைகள் அனைத்தையும் தானமாக தந்தவரைப் போலாவார். அதேபோல அதேபோல் உப்பை ஒருவர் சிறிதளவு தானமாக கொடுத்தாலும் அந்த உப்பு எந்த உணவுக்கெல்லாம் சுவையைக் கூட்டியதோ அவைகள் அனைத்தையும் தானமாக தந்தவரைப் போலாவார். எவர் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத நேரத்தில் ஒரு முஸ்லிமுக்கு ஒரு மிடறு தண்ணீர் தருவாரோ அவர் ஒரு அடிமையை உரிமையை விட்டவரைப் போலாவார். எவர் தண்ணீர் தட்டுப்பாடுள்ள  நேரத்தில் ஒரு முஸ்லிமுக்கு ஒரு மிடறு தண்ணீர் தருவாரோ அவர் அந்த முஸ்லிமுக்கு உயிர் கொடுத்தவரைப் போலாவார்.

அற்பமான உதவிகளைக் கூட தானும் செய்யாமல் பிறரையும் தடுப்பவனைப் பற்றிய கண்டனம்

أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ - فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ - وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ (3) فَوَيْلٌ لِلْمُصَلِّينَ (4) الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ (5) الَّذِينَ هُمْ يُرَاءُونَ (6) وَيَمْنَعُونَ الْمَاعُونَ (7)عَنْ أَبِي الْعُبَيْدَيْنِ أَنَّهُ سَأَلَ اِبْن مَسْعُود عَنْ الْمَاعُون فَقَالَ هُوَ مَا يَتَعَاطَاهُ النَّاس بَيْنهمْ مِنْ الْفَأْس وَالْقِدْر وَالدَّلْو وَأَشْبَاه ذَلِكَ (تفسير ابن كثير)

சில நேரங்களில் நாம் படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தை அல்லது பேப்பரை யாரேனும் இரவலாக கேட்கலாம். அதைப் படிக்கக் கொடுப்பதும் சிறிய உதவி தான். எனினும் அதை வாங்குபவர்கள் சரியாக திருப்பித் தர வேண்டும். இன்றைய காலத்தில் யாருக்கேனும் இரவலாக கொடுத்தால் திரும்பி வராத பொருட்களின் பட்டியலில் புத்தகங்கள் தான் அதிகம்

وَالَّذِينَ تَبَوَّءُوا الدَّارَ وَالْإِيمَانَ مِنْ قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِمَّا أُوتُوا وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ (9) الحشر

அனைவருக்கும் உதவும் நல்ல குணம் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் இருந்தது

عن ابن عباس أصاب الناس سنة جهدوا فيها فحشروا إلى باب إبراهيم عليه السلام يطلبون الطعام(وكان له صديق بمصر يعطي الميرة) فبعث غلمانه بالإبل إلى خليله بمصر يسأله الميرة فقال خليله لو كان إبراهيم  يريده لنفسه احتملنا ذلك له ولكنه يريد للأضياف وقد دخل علينا ما دخل على الناس من الشدة فرجع رسل إبراهيم فمروا ببطحاء فقالوا لو أنا احتملنا من هذه البطحاء ليرى الناس أنا قد جئنا بميرة إنا لنستحي أن نمرّ بهم وإبلنا فارغة  فملؤا تلك الغرائر رملا ثم إنهم أتوا إبراهيم وسارة نائمة فأعلموه ذلك فاهتم إبراهيم لمكان الناس فغلبته عيناه فنام واستيقظت سارة فقامت إلى تلك الغرائر ففتحتها فإذا هي أجود حوّاري تكون فأمرت الخازين فخبزوا وأطعموا الناس واستيقظ إبراهيم فوجد ريح الطعام فقال ياسارة من أين هذا الطعام؟ فقالت من عند خليلك المصري فقال هذا من عند خليلي الله فيومئذٍ اتخذه الله خليلاً  (غرائب القران

ஒரு முறை இப்றாஹீம் (அலை) அவர்களின் ஊரில் பஞ்சம் நிலவிய போது ஊர் மக்கள் இப்றாஹீம் (அலை) அவர்களின் வீட்டை நோக்கி நம்பிக்கையுடன் வந்து விட்டார்கள் ஆனால் அந்நேரத்தில் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வீட்டிலும் பஞ்சமே நிலவியது எனினும் வீடு தேடி வந்த மக்களை பசியோடு திருப்பி அனுப்பக் கூடாது என்றெண்ணி தமக்கு நெருக்கமான சில இளைஞர்களை பட்டணத்தில் வசிக்கும் தனக்கு நெருக்கமான நண்பரிடம் அனுப்பி வைக்கிறார்கள் நான் சொன்னதாக கூறி தானிய மூட்டைகளை வாங்கி வாருங்கள் என்று கூற அந்த இளைஞர்கள் காலியான தானியப் பைகளை தம்முடன் எடுத்துக் கொண்டு ஒட்டகங்களில் புறப்படுகிறார்கள் விரைவாகச் சென்று அந்த நபரை சந்தித்த போது அந்த நண்பர்  உங்களுக்கு ஏற்பட்டுள்ள பஞ்சம் தான் எங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. வேண்டுமானால் இப்றாஹீம் அவர்களுடைய குடும்பத்தினருக்கு மட்டும் போதுமான தானியங்களை என்னால் தர முடியும் என்று கூறி விடுகிறார் ஏமாற்றத்துடன் அந்த இளைஞர்கள் திரும்புகிறார்கள்.  வரும் வழியில் ஊர் எல்லையை நெருங்கும்போது அந்த இளைஞர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்  நாம் காலியான தானியப் பைகளுடன் ஊருக்குள் நுழைய வேண்டாம். அவ்வாறு நுழைந்தால் காத்திருக்கும் மக்கள் மிகவும் விரக்தி அடைந்து விடுவார்கள் ஆகவே இந்த மூட்டைகளுக்குள் மணலை நாம் நிரப்பி கொண்டு செல்வோம் அந்த மக்களுக்கு அது தானிய மூட்டைகளைப் போல் தெரியும். நாம் வீட்டுக்குள் கொண்டு சென்றவுடன் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி விடுவோம் அல்லாஹ் ஏதேனும் அற்புதத்தை ஏற்படுத்தக் கூடும் என்றெண்ணி அவ்வாறே செய்தார்கள் மணல் மூட்டைகளுடன் வீட்டுக்குள் நுழைந்த போது நபியவர்களின் மனைவி சாரா அம்மையார் பசி மயக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில்  நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் மட்டும் விஷயத்தைக் கூறி விட்டு வெளியில் வந்து விட்டார்கள்  நபியவர்கள் மிகவும் கவலையடைந்தார்கள் இந்த மக்களுக்கு நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் என்ற கவலை மிகுதியால் அவர்களை அறியாமல் தூக்கம் ஆட்கொண்டு விட்டது அவர்கள் தூங்கிய சற்று நேரத்தில் மனைவி சாரா அம்மையார் விழித்து அந்த மூட்டைகளை பார்க்கிறார்கள் பட்டணத்து நண்பர் தான் தானியம் கொடுத்தனுப்பியிருக்கிறார் என்றெண்ணி அதைப் பிரித்த போது அல்லாஹ்வின் அருளால் அதில் உண்மையான தானியமே இருந்தது. உடனே சமைக்க ஆரம்பித்து விட்டார்கள் சமையல் வாசனையைக் கண்டு நபியவர்கள் விழித்து  என்ன சாரா இந்த உணவு தானியம் எப்படி வந்தது என்று கேட்க, உங்களுடைய பட்டணத்து நண்பர் தான் கொடுத்தனுப்பினார் உங்களுக்கே தெரியாதா என்று மனைவி கூறிய போது நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மகிழ்ச்சியுடன் சொன்னார்கள் இல்லை அந்த நண்பர் கொடுத்தனுப்பவில்லை என்னுடைய உண்மை நேசனாகிய அல்லாஹ் இதை அனுப்பினான் என்றார்கள் அப்போது தான் அல்லாஹ் அவர்களை தன் உற்ற நேசராக ஆக்கிக் கொண்டான்

قَالَ السُّدِّيّ لَمَّا بَعَثَ اللَّه الْمَلَائِكَة لِقَوْمِ لُوط أَقْبَلَتْ تَمْشِي فِي صُوَر رِجَال شُبَّان حَتَّى نَزَلُوا عَلَى إِبْرَاهِيم فَتَضَيَّفُوهُ فَلَمَّا رَآهُمْ أَجَلَّهُمْ " فَرَاغَ إِلَى أَهْله فَجَاءَ بِعِجْلٍ سَمِين" فَذَبَحَهُ ثُمَّ شَوَاهُ فِي الرَّضْف وَأَتَاهُمْ بِهِ فَقَعَدَ مَعَهُمْ وَقَامَتْ سَارَة تَخْدُمهُمْ فَلَمَّا قَرَّبَهُ إِلَيْهِمْ قَالَ أَلَا تَأْكُلُونَ" قَالُوا يَا إِبْرَاهِيم إِنَّا لَا نَأْكُل طَعَامًا إِلَّا بِثَمَنٍ قَالَ فَإِنَّ لِهَذَا ثَمَنًا قَالُوا وَمَا ثَمَنه ؟ قَالَ تَذْكُرُونَ اِسْم اللَّه عَلَى أَوَّلِهِ وَتَحْمَدُونَهُ عَلَى آخِره فَنَظَرَ جِبْرِيلُ إِلَى مِيكَائِيلَ فَقَالَ حَقَّ لِهَذَا أَنْ يَتَّخِذَهُ رَبُّهُ خَلِيلًا"(فَلَمَّا رَأَى أَيْدِيَهُمْ لَا تَصِلُ إِلَيْهِ نَكِرَهُمْ وَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً قَالُوا لَا تَخَفْ إِنَّا أُرْسِلْنَا إِلَى قَوْمِ لُوطٍ)(تفسيرابن كثير)

மலக்குகள் விருந்தாளிகளைப் போன்று வருகை தந்த போது அவர்களை மலக்குகள் என்று அறியாத நிலையிலும் அவர்களை இப்றாஹீம் அலை மிகவும் கண்ணியப்படுத்தினார்கள் அவர்களுக்காக ஆட்டை அறுத்து அதை பொறித்து முன்னால் கொண்டு வந்து வைத்து அவர்களுடன் தானும் அமர்ந்து சாப்பிடச் சொன்ன போது அந்த மலக்குகள் இப்றாஹீம் அலை அவர்களை பரிசோதிப்பதற்காக  நாங்கள் இந்த உணவை சாப்பிட வேண்டுமானால் இதற்குரிய விலையை கொடுக்காமல் சாப்பிட மாட்டோம் என்று கூறிய போது உடனே இப்றாஹீம் அலை அப்படியானால் இதற்கு ஒரு விலை இருக்கிறது என்று கூற, மலக்குகள் ஆச்சரியத்துடன் என்ன விலை என்று கேட்க, உடனே இப்றாஹீம் அலை அவர்கள் இதை சாப்பிடும் முன் பிஸ்மில்லாஹ் சொல்ல வேண்டும் சாப்பிட்டு முடித்த பின் அல்ஹம்து லில்லாஹ் சொல்ல வேண்டும் அதுதான் இதன் விலை என்று கூற அப்போது ஜிப்ரயீல் அலை அவர்களும், மீகாயீல் அலை அவர்களும் ஒருவரையொருவர் பார்த்துக்  கொண்ட நிலையில் ஜிப்ரயீல் அலை இவரை அல்லாஹ் தன் உற்ற நேசராக ஆக்கிக் கொண்டது சரி தான் என்றார்கள்

وكان ابراهيم عليه السلام لا يأكل بغير ضيف (مؤطا)-

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் எப்போதும்  விருந்தாளிகள் இல்லாமல் சாப்பிட மாட்டார்கள் ஒரேயொரு தடவை மட்டும் விருந்தாளிகள் யாரும் வரவில்லை ஏமாற்றம் அடைந்த இப்றாஹீம் (அலை) விருந்தாளியைத் தேடி வெளியில் புறப்பட்டார்கள்அப்போதும் விருந்தாளிகள் யாரும் தென்படாத நிலையில் கவலையுடன் வீடு திரும்பிய போது சற்றும் எதிர்பாராமல் ஒரு மனிதர் இப்றாஹீம் (அலை) அவர்களின் வீட்டினுள் நின்றார் உடனே இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் நீங்கள் யார் ?    என் அனுமதி இல்லாமல் எப்படி என் வீட்டினுள் வந்தீர் ? என்று கேட்க அதற்கு அவர் நான் இந்த வீட்டின் உண்மையான அதிபதியின் அனுமதியோடு வந்துள்ளேன் என்று கூற இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு குழப்பமாகி விட்டது யார் நீங்கள் என்று வியப்புடன் கேட்க,  அதற்கு அவர் நான் அல்லாஹ் அனுப்பிய வானவர். அல்லாஹ் உங்களிடம் ஒரு சுபச்செய்தியை கூறும்படி அனுப்பினான் அதாவது உங்கள் சமூகத்தில் ஒருவரை அல்லாஹ் தன் உற்ற நேசராக ஆக்கிக் கொண்டான் என்று கூறிய மறுநிமிடமே இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆர்வத்துடன் அவர் யார் ? எங்கே இருக்கிறார்  ? இந்த உலகின் எந்த மூலையின் அவர் இருந்தாலும் சரி அவரை நான் என்னுடைய நேசராக ஆக்கிக் கொள்வேன் அவருடனே இருப்பேன் அவரை விட்டும் பிரிய மாட்டேன் என்று ஆர்வத்துடன் கேட்ட போது அந்த மலக்கு சொன்னார் அவர் இங்கே தான் இருக்கிறார்.... அது நீங்கள் தான் என்று கூற உடன் ஆச்சரியமடைந்த இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் நான் தானா ? என்னைத் தான் அல்லாஹ் தன் நேசராக ஆக்கிக் கொண்டானா ? எதனால் ? என்று ஆச்சரியத்துடன் கேட்க, உடன் அந்த வானவர்  நீங்கள் அனைவருக்கும் கொடுத்துத் தான் பழகியிருக்கிறீர்கள் யாரிடத்திலும் வாங்கிப் பழகியதில்லை அதுதான் காரணம் என்றார்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...