தமிழ்நாட்டில் இன்று தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இதற்கான நல்ல முடிவுகள் வருவதற்கு நாம் முன்னெடுக்க வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. அதை சரியாக பயன்படுத்துவதில் தான் இந்த உம்மத் பலவீனப்பட்டுள்ளது. 1.உறுதியான ஈமானுடன் கூடிய நல்ல அமல் 2.முறையாக (ஹராமான வருவாயைத் தவிர்த்து, உறவைத் துண்டிப்பதற்காக அன்றி) செய்யப்படும் துஆ 3.ஒற்றுமையாக வாக்களித்தல்
உறுதியான ஈமானுடன் கூடிய அமல் உள்ளவர்களால்
எவ்வளவு பெரிய படைகளையும் தோற்கடிக்க முடியும்.
وَلَا تَهِنُوا
وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ (139)ال
عمران - كَمْ مِنْ فِئَةٍ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيرَةً بِإِذْنِ اللَّهِ
(249)البقرة
பத்ருப் போர்
நடைபெறுவதற்கு முன்பு ஆறு மாத காலம் நாங்கள் தஹஜ்ஜத் தொழுகையை விடாமல் தொழுதோம் என
அன்னை ஆயிஷா ரழி அவர்கள் கூறினார்கள். பத்ருப்போர்
நடைபெறுவதற்கு முன்பு இரவில் யாஹய்யு யாகய்யூம் என்று அழுது துஆச் செய்ததால் தான்
அல்லாஹ் வெற்றியைத் தந்தான் (என்பதை எந்த
முஸ்லிம் மறுக்க முடியும். விஷயம் எல்லை மீறிப் போய் விட்டது இனிமேல்
நாம் உட்கார்ந்து துஆ செய்து என்ன சாதிக்கப் போகிறோம் என்று சிலர் பேசுவது
வேதனையாக இருக்கிறது)
பேணுதலான
வாழ்க்கையினால் அவர்களுக்கு வெற்றி கிடைத்தது என
எதிரிப்
படையினரே ஒப்புக் கொண்ட உண்மை
وهو على أنطاكية لما قدمت منهزمة
الروم: ويلكم أخبروني عن هؤلاء القوم الذين يقاتلونكم أليسوا بشرا مثلكم؟
قالوا: بلى. قال: فأنتم أكثر أم هم؟ قالوا: بل نحن أكثر منهم أضعافاً في
كل موطن. قال: فما بالكم تنهزمون؟فقال شيخ من عظمائهم: من أجل أنهم يقومون
الليل ويصومون النهار، ويوفون بالعهد، ويأمرون بالمعروف، وينهون عن المنكر،
ويتناصفون بينهم، ومن أجل أنا نشرب الخمر، ونزني، ونركب الحرام، وننقض العهد،
ونغصب، ونظلم، ونأمر بالسخط وننهى عما يرضي الله، ونفسد في الأرض.فقال: أنت
صدقتني.
ஹிஜ்ரி 15ம் ஆண்டு ஹஜ்ரத் உமர்(ரலி)அவர்களின்ஆட்சிகாலத்தில் நடைபெற்ற யர்மூக் போர்களத்தில்ரோமர்கள் தோற்று அன் தாக்கியா போகும்போதுஅவர்களின் அரசர் ஹிர்கல் கேட்பான் உங்களைப்போன்றுஅவர்களும் மனிதர்கள்தானே அவர்களை விட நீங்கள்அதிகமானவர்கள் இல்லையா அவ்வாறிருந்தும் நீங்கள்தோற்றுவருகிறீர்கள் உங்கள் தோல்விக்கு காரணம் என்னஎன்று கேட்கும்போது அவர்களில் ஒரு வயோதிகர்சொல்வார்.அந்த முஸ்லிம்கள் இரவு நின்றுவணங்குகிறார்கள்.பகலில் நோன்பு நோற்கிறார்கள்.நன்மையை ஏவி.தீமையை தடுக்கிறார்கள்.ஒப்பந்தத்தைநிறைவேற்றுகிறார்கள்.ஆனால் நாம் மதுஅருந்துகிறோம்.விபச்சாரம் செய்கிறோம்.ஒப்பந்தத்தைமீறுகிறோம் அதுதான் காரணம் இதனைக் கேட்ட அரசன்சொல்வான் நீங்கள் சொல்வது உண்மை.
அவர்களுக்குவெற்றி கிடைத்தது அவர்களின் பேணுதலானவாழ்கையினால்.நூல்.பிதாயா வந்நிஹாயா.பாகம்.7 பக்கம்.20
ரப்புக்கு நாம் செய்யும் அதிகமான
சஜ்தாக்கள் எப்படிப்பட்ட எதிரியையும் வீழ்த்தும்.
ஒருமுறை இஸ்ரேலியப்
பெண் அமைச்சரிடம் பத்திரிக்கை நிருபர்
பேட்டி எடுத்தார். யூதர்களாகிய உங்களை
கடைசி காலத்தில் முஸ்லிம்கள் கொல்லுவார்கள். அப்போது மரம்,
மலைக்குப் பின்னால்
நீங்கள் ஒதுங்கிக் கொள்வீர்கள். ஆனால் அந்த மரமும்
மலையும் உங்களுக்கு எதிராக உங்களைக் காட்டிக் கொடுக்கும் என்று முஸ்லிம்கள்
கூறுகிறார்களே அது உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டபோது,
அந்த அமைச்சர் இது
எங்களுக்கு நன்றாகவே தெரியும். இது எப்போது
நடக்கும் என்பதும் தெரியும். முஸ்லிம்கள் அனைவரும் ஜும்ஆவுக்கு ஒன்று
கூடுவது போன்று ஒவ்வொரு நேரத் தொழுகைக்கும் ஒன்று கூடுவார்கள்.
அப்போது இது
நடக்கும். அதை எதிர் கொள்ள நாங்கள் தயார் என்று
பேசியுள்ளார். ஒட்டு மொத்த முஸ்லிம்களிடமும் இறையச்சம் வந்து விட்டால்
அல்லாஹ் எல்லாவற்றையும் நம் வசமாக்கித் தருவான் என்பதில் முஃமினுக்கு சந்தேகம்
இருக்காது. பின்வரும் நபிமொழி அதை உண்மைப்
படுத்துகிறது.
عَنْ أَبِي
هُرَيْرَةَ أنَّ رَسُولَ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا
تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقَاتِلَ الْمُسْلِمُونَ الْيَهُودَ فَيَقْتُلُهُمْ
الْمُسْلِمُونَ حَتَّى يَخْتَبِئَ الْيَهُودِيُّ مِنْ وَرَاءِ الْحَجَرِ
وَالشَّجَرِ فَيَقُولُ الْحَجَرُ أَوْ الشَّجَرُ يَا مُسْلِمُ يَا عَبْدَ اللَّهِ
هَذَا يَهُودِيٌّ خَلْفِي فَتَعَالَ فَاقْتُلْهُ إِلَّا
الْغَرْقَدَ فَإِنَّهُ مِنْ شَجَرِ الْيَهُودِ (مسلم) 5203
யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சண்டை
நடைபெறாமல் கியாமத் வராது. அப்போது யூதர்களை
முஸ்லிம்கள் கொல்லுவார்கள் அப்போது மரம், மலைக்குப் பின்னால்
யூதன் ஒதுங்கிக் கொள்வான். அப்போது அந்த மரம்
அல்லது மலை முஸ்லிமே அல்லாஹ்வின் அடியானே இங்கு வா..
இதோ எனக்குப்
பின்னால் ஒரு யூதன் இருக்கிறான். அவனைக் கொல் என்று
சொல்லும் ஙர்கத் என்ற மரத்தைத் தவிர.. ஏனெனில் அது யூத
மரமாகும்.
மேற்காணும் சிறந்த சூழ்நிலை உருவாகுவதற்குக் காரணம் சஜ்தாவின் மீது மக்களுக்கு
ஏற்படும் ஆர்வம் தான்
عن أَبي
هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَيُوشِكَنَّ أَنْ
يَنْزِلَ فِيكُمْ ابْنُ مَرْيَمَ حَكَمًا عَدْلًا فَيَكْسِرَ الصَّلِيبَ
وَيَقْتُلَ الْخِنْزِيرَ وَيَضَعَ الْجِزْيَةَ وَيَفِيضَ الْمَالُ حَتَّى لَا
يَقْبَلَهُ أَحَدٌ حَتَّى تَكُونَ السَّجْدَةُ
الْوَاحِدَةُ خَيْرًا مِنْ الدُّنْيَا وَمَا فِيهَا (بخاري)
சுருக்கம்-
ஈஸா அலை வந்தவுடன்
நீதமாக ஆட்சி செய்வார்கள். சிலுவையை ஒழித்து,
பன்றியை அழித்து,
ஜிஸ்யாவை செயல்
படுத்துவார்கள். அவர்கள்
ஆட்சி செய்யும் காலத்தில் மக்கள் மனதில் சஜ்தா என்பது இந்த பூமி மற்றும்
பூமியில் உள்ள அனைத்தையும் விட மேலானதாக ஆகி வடும்.
(அதனால் அல்லாஹ்
எல்லாவற்றையும் நம் வசமாக்கித் தருவான்.)
நிறைந்த ஈமானுடைய சஹாபாக்களின் காலத்தில் கூட அவர்களின் சிறிய சருகுதலால்
அல்லாஹ் ஆரம்பத்தில் வெற்றியைத் தந்து பிறகு தோல்வியைக் கொடுத்தான்
وَلَقَدْ
صَدَقَكُمُ اللَّهُ وَعْدَهُ إِذْ تَحُسُّونَهُمْ بِإِذْنِهِ حَتَّى إِذَا
فَشِلْتُمْ وَتَنَازَعْتُمْ فِي الْأَمْرِ وَعَصَيْتُمْ مِنْ بَعْدِ مَا أَرَاكُمْ
مَا تُحِبُّونَ مِنْكُمْ مَنْ يُرِيدُ الدُّنْيَا وَمِنْكُمْ مَنْ يُرِيدُ
الْآخِرَةَ ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِيَبْتَلِيَكُمْ وَلَقَدْ عَفَا عَنْكُمْ
وَاللَّهُ ذُو فَضْلٍ عَلَى الْمُؤْمِنِينَ (152) إِذْ تُصْعِدُونَ وَلَا تَلْوُونَ عَلَى أَحَدٍ
وَالرَّسُولُ يَدْعُوكُمْ فِي أُخْرَاكُمْ فَأَثَابَكُمْ غَمًّا بِغَمٍّ لِكَيْلَا
تَحْزَنُوا عَلَى مَا فَاتَكُمْ وَلَا مَا أَصَابَكُمْ وَاللَّهُ خَبِيرٌ بِمَا
تَعْمَلُونَ
-ال عمران
கருத்து-நீங்கள்
விரும்பியது போல் அல்லாஹ் தன் வாக்குறுதியை நிறைவேற்றினான் அதாவது ஆரம்பத்தில்
வெற்றியைத் தந்தான் எனினும் நீங்கள் மலை உச்சியின் நிற்க வேண்டுமென்ற நபியின்
உத்தரவை நிறைவேற்றுவதில் கருத்து வேறுபாடு கொண்டீர்கள். சிலர் போர் தான் முடிந்து
விட்டதே இனி நாம் கீழே இறங்கி கனீமத்தை எடுக்கலாம் என்றும், வேறு சிலர் என்ன
நடந்தாலும் நபிகளார் இங்கு தான் நிற்கும்படி கூறினார்கள் என்று உறுதியாக
இருந்தீர்கள். இப்படி கருத்து வேறுபாடு கொண்டதால் உங்களுக்கு நாம் தோல்வியைக்
கொடுத்தோம். ஏற்பட்டு சிலர் கீழே இறங்கி
வந்தவுடன் அபூசுஃப்யான் தலைமையில் எதிரிகள் வந்து தாக்க முஸ்லிம்கள் நிலை குலைந்து
போனார்கள்
படிப்பினை-
சிறிய சருகுதலுக்கே இவ்வளவு பெரிய தண்டனை என்றால் அதிலும் குறிப்பாக எல்லோரும்
அந்த தவறை செய்யவில்லை. சிலர் மட்டுமே அந்தத் தவறைச் செய்தார்கள்.
அப்படியிருந்தும் அந்த சஹாபாக்களுக்கே அத்தகைய சோதனை என்றால் நாம் எம்மாத்திரம்.
2. முறையாக செய்யப்படும் துஆ
எல்லாவற்றையும் சாதிக்கக் கூடியது
كتب رسول الله صلى الله عليه و سلم إلى كسرى وقيصر فأما
كسرى فلما قرأ الكتاب مزقه وأما قيصر فلما قرأ الكتاب طواه ثم رفعه فقال رسول الله
صلى الله عليه و سلم أما هؤلاء فيمزقون وأما هؤلاء فستكون لهم بقية ويؤيده ما روى
أن النبي صلى الله عليه و سلم لما جاءه جواب كسرى قال مزق الله ملكه
ولما جاءه جواب هرقل قال ثبت الله ملكه
(فتح الباري
ஹிஜ்ரி 6ம் ஆண்டு நபி அவர்கள் எல்லா நாட்டின்மன்னர்களுக்கும் தூதுவர்கள் மூலம் இஸ்லாமிய அழைப்புக்கடிதத்தை அனுப்பிய போது வல்லரசு நாடாக இருந்த பாரசீகத்தின் கிஸ்ரா மன்னனுக்கும் கடிதத்தை ஷுஜாஃ இப்னு வஹப் ரழி என்ற சஹாபியின்மூலம் கொடுத்தனுப்பினார்கள். வாங்கிய கடிதத்தை கிழித்து போட்டான். இதனைக்கேள்விப்பட்ட நபி(ஸல்) அவர்கள் .அல்லாஹ் கிஸ்ராவின்ஆட்சியை கிழித்து எறிவானாக. என்றுசொன்னார்கள்.நபியின் துஆவை அல்லாஹ் செயல்படுத்தினான்.
فقد
قام شيرويه بن كسرى على أبيه فقتله، وأخذ الملك لنفسه، وذلك أن شيرويه لما قتل
أباه كما تقدم كان أبوه لما عرف أن ابنه قد عمل على قتله احتال على قتل ابنه بعد
موته فعمل في بعض خزائنه المختصة به حقا مسموما وكتب عليه : حق الجماع ، من تناول
منه كذا جامع كذا . فقرأه شيرويه ، فتناول منه فكان فيه هلاكه ، فلم يعش بعد أبيه
سوى ستة أشهر (فتح الباري
பதவி வெறிகொண்ட அவனுடைய மகனானசீரவைஹி என்பவன் தனது தந்தையையே கொலைசெய்துவிட்டு ஆட்சியில் அமர்ந்தான். அதற்கு பிறகு ஒரு நாள்அரண்மனையில் உள்ள மருந்துகள் வைக்கப்படும்இடத்தில் ஆண்மைக்கு பலன் தரும் என்றுஎழுதப்பட்டிருந்த ஒரு பாத்திரத்தை கண்டான். அதில்இருந்ததோ கொடிய விஷம் .அது அவனின் தந்தை கிஸ்ராதன்னுடைய ஆட்சியை யாராவது கைபற்றினால் அவர்கள்விஷத்தால் சாகவேண்டும் என்று திட்டமிட்டு வைக்கப்பட்டவிஷம். அதை அறியாமல் அதை சாப்பிட்டு இறந்தான்.இதுநடந்தது ஆறு மாதத்திற்குல். இவர்களுக்கு எதிராக நபிகேட்ட துஆ. அவர்களையும் அவர்களின் ஆட்சியையும்அழித்தது. பிறகு ஹஜ்ரத் உமர்(ரலி) காலத்தில் பாரசீகம்இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது.
தாயிஃபில் இருந்து கடும்
மன வருத்தத்துடன் நபி (ஸல்) அவர்கள்
திரும்பும்போது கேட்ட
துஆவை நாமும் கேட்கும் நிலை உள்ளது
اللَّهُمَّ إلَيْكَ أشْكُو ضَعْفَ قُوَّتِي وقِلَّةَ حِيلَتِي وَهَوانِي على النَّاسِ يا
أرْحَمَ الرَّاحِمِينَ إلى مَنْ تَكِلْني إلى عَدُوَ يَتَجَهَّمُنِي أمْ إلى
قَرِيبٍ مَلَّكْتَهُ أمْرِي إِنْ لَمْ تَكُنْ ساخِطاً عَلَيَّ فلا أُبالِي غَيْرَ
أنَّ عافِيَتَكَ أوْسَعُ لِي أعُوذُ بِنُورِ وَجْهِكَ الكَرِيمِ الَّذِي أضاءَتْ
لَهُ السَّمواتُ والأرْضُ وأشْرَقَتْ لَهُ الظُّلُماتُ وصَلَحَ عليهِ أمْرُ
الدُّنْيا والآخِرَةِ أنْ تُحِلَّ عَليَّ غَضَبَكَ أوْ تُنْزِلَ عَلَيَّ سَخَطَكَ
وَلَكَ العُتْبى حَتَّى تَرْضى ولا حَوْلَ ولا قُوَّةَ إلاَّ بِكَ (طبراني
கருத்து- ரப்பே மற்றவர்கள் சூழ்ச்சி
செய்வது போல் எங்களுக்கு எந்த சூழ்ச்சியும் எங்களுக்குத் தெரியாது.எங்களின்
இயலாமையை உன்னிடமே முறையிடுகிறோம். வேறு யாரிடம் சென்று நாங்கள் முறையிட முடியும்.
மேற்காணும் கருத்தின்
அடிப்படையில் நாம் ஒவ்வொருவரும் மேற்படி துஆவை
அடிக்கடி ஓதுவதுடன் நாம் ஓட்டுப் போடும் மிஷினில் உள்ள நாம்
தேர்ந்தெடுக்கும் சின்னத்திற்கான பட்டனை அழுத்தும்போது
وَأُفَوِّضُ
أَمْرِي إِلَى اللَّهِ (44)
என்ற வசனத்தை
ஓதும்படி சில அறிஞர்கள் கூறுகின்றனர். என்னுடைய காரியத்தை அல்லாஹ்விடமே நான்
ஒப்படைத்து விட்டேன் என்ற கருத்து இதில் உள்ளது. நாம் என்ன தான் குறிப்பிட்ட
சின்னத்திற்கு ஓட்டுப் போட்டாலும் அதில் நடைபெறும் தில்லுமுல்லுகளை விட்டும்
பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் பொறுப்பு ஒப்படைப்பதாக இது அமையலாம் என்ற கருத்தில் அவ்வாறு
கூறப்பட்டுள்ளது.
துஆ என்பது
எதையும் சாதிக்கும் என்பதற்கும் உதாரணமாக ஹஜ்ஜாஜ் பற்றிய சம்பவம்.
கடந்த வார பயான்
குறிப்பிலும் இடம் பெற்ற சம்பவம்
ثم دعا الحجاج بآلات
اللهو، فضربت بين يدي سعيد فبكى سعيد. فقال الحجاج: ويلك يا سعيد. فقال سعيد:
الويل لمن زحزح عن الجنة، وأدخل النار. فقال: يا سعيد أي قتلة تريد أن أقتلك بها؟
قال: اختر لنفسك يا حجاج، فوالله لا تقتلني قتلة إلا قتلك الله مثلها في الآخرة.
قال: فتريد أن أعفو عنك؟ قال: إن كان العفو من الله فنعم، وأما منك أنت فلا. فقال:
اذهبوا به فاقتلوه. فلما أخرج من الباب ضحك، فأخبر الحجاج بذلك، فأمر برده فقال:
ما أضحكك وقد بلغني أن لك أربعين سنة لم تضحك؟ قال: ضحكت عجباً من جراءتك على
الله، ومن حلم الله عليك، فأمر بالنطع فبسط بين يديه، وقال: اقتلوه.فقال سعيد:
" كل نفس ذائقة الموت " . ثم قال: " وجهت وجهي للذي فطر السموات
والأرض حنيفاً مسلماً وما أنا من المشركين " . قال: وجهوه لغير القبلة. فقال
سعيد: " فأيما تولوا فثم وجه الله " فقال: كبوه لوجهه. فقال: "
منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى " فقال الحجاج: اذبحوه.
فقال سعيد: أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمداً عبده ورسوله. ثم
قال: اللهم لا تسلطه على أحد يقتله بعدي. فذبح على النطع رحمة الله تعالى
عليه، فكان رأسه يقول بعد قطعه: لا إله إلا الله مراراً. وذلك في شعبان سنة خمس
وتسعين. وكان عمر سعيد تسعاً وأربعين سنة،(حياة الحيوان– البداية والنهاية
قال عون ابن أبي شداد
العبدي ... وبلغنا أن الحجاج عاش بعده خمسة عشر ليلة ووقع الاكلة في بطنه فدعا
بالطبيب لينظر اليه فنظر اليه ثم دعا بلحم منتن فعلقه في خيط ثم أرسله في حلقه
فتركها ساعة ثم استخرجها وقد لزق به من الدم فعلم أنه ليس بناج وبلغنا أنه كان
ينادي بقية حياته مالي ولسعيد بن جبير كلما أردت النوم أخذ برجلي (حلية الاولياء)
ஹஜ்ஜாஜ் கடைசியாக கொலை செய்தது ஸயீத் இப்னு
ஜுபைர் ரழி அவர்களைத் தான். உன்னை எப்படிக் கொல்லட்டும் என ஸயீத் ரழி
அவர்களிடமே அவன் கேட்க, அது
உன் இஷ்டம். ஆனால்
அல்லாஹ் மீது சத்தியமாக நீ என்னை எப்படிக் கொன்றாலும் அல்லாஹ் பதிலுக்கு உன்னை
மறுமையில் கொல்லுவான். என்று கூறியபோது, நான் உன்னை மன்னிப்பதை விரும்புகிறாயா என்று
கேட்க, மன்னிப்பு
அல்லாஹ்விடமிருந்து என்றால் அது எனக்கு சந்தோஷம். உன் மன்னிப்பு எனக்குத் தேவையில்லை என்றார்கள். பிறகு ஹஜ்ஜாஜ் ஸயீத் ரழி அவர்களைக் கொல்ல உத்தரவிட்டான். ஸயீத் ரழி சிரித்தார்கள். உடனே ஹஜ்ஜாஜ் 40 வருடங்களாக சிரித்த தில்லை என்று உன்னைப்
பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். எதற்காக நீ இப்போது சிரித்தாய் என்று கேட்க, அல்லாஹ்வுக்கு எதிராக உனது திமிரையும், அல்லாஹ் உன்னை இன்னும் விட்டு
வைத்திருப்பதையும் எண்ணி ஆச்சரியத்தால் சிரிக்கிறேன். என்றார்கள். பிறகு அவர்களைக் கொல்வதற்காக படுக்க
வைக்கப்பட்ட போது ஒவ்வொரு ஆத்மாவும் மவ்த்தை அனுபவித்தே தீரும் என்றார்கள். அப்போது கிப்லாவின் பக்கம் முகம் இருந்தது. அந்த சந்தோஷத்தில் ஸயீத் ரழி வஜ்ஜஹ்து
ஓதினார்கள். உடனே
ஹஜ்ஜாஜ் அவரின் முகத்தை கிப்லாவை விட்டும் திருப்புங்கள் என்றான். அவ்வாறு திருப்ப ப்பட்ட போது என்ற ஆயத்தை ஓதினார்கள். அவரைக் குப்புறப் படுக்க வையுங்கள் என்றான்
ஹஜ்ஜாஜ். அப்போது فأيما تولوا فثم وجه الله
என்ற ஆயத்தை ஸயீத் ரழி அவர்கள் ஓதினார்கள். பின்பு ஸயீத் ரழி அவர்கள்
منها
خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى "
ஷஹீதாக்கப்பட்டார்கள். அவர்களின் நாவு
கடைசி நேரத்தில் கலிமாவை உச்சரித்த து மட்டுமன்றி, அவர்களின் தலையைத்
துண்டாக்கிய பின்பும் அவர்களின் தலை மட்டும் கலிமாவை மொழிந்து கொண்டே இருந்தது. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் ஸயீத்
ரழி அவர்கள் கடைசி நேரத்தில் யாஅல்லாஹ் எனக்குப் பின் வேறு யார் மீதும் இவனை நீ
சாட்டி விடாதே என்று துஆ செய்தார்கள். அதை அல்லாஹ்
ஏற்றுக் கொண்டான். இதற்குப் பின் 15 இரவுகள் மட்டுமே ஹஜ்ஜாஜ் வாழ்ந்தான். இந்த 15 நாட்களும் தூங்கவே இல்லை. படுத்தால் என் காலைப் பிடித்து ஸயீத் இழுப்பது
போன்றிருக்கிறது என்பான்
அநீதமான
அரசனின் தீமைக்கு எதிராக நமக்கு கற்றுத் தரப்பட்ட துஆக்கள்
عن
عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه و سلم قال إذا تَخَوَّفَ
أحَدُكُمُ السُّلْطانَ فَلْيَقُل اللَّهُمَّ رَبَّ السَّمَواتِ وَرَبَّ العَرْشِ
العَظيم كُنْ لِي جاراً مِنْ شَرِّ فُلانِ بنِ فُلانٍ وَشَرِّ الجِنِّ والإِنْسِ
وأتْباعِهِمْ أنْ يَفْرُطَ عَلَيَّ أحَدٌ مِنْهُمْ عَزَّ جارُكَ وَجَلَّ ثَناؤكَ
وَلاَ إله غَيْرُكَ رواه الطبراني (الترغيب والترهيب
அநீதமான ஆட்சியாளரின் தீமையை பயந்தால் அல்லாஹும்ம ரப்பஸ்
ஸமாவாத்தி........... என்ற துஆவை ஓதுங்கள்
عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ عِنْدَ
الْكَرْبِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ سُبْحَانَ اللَّهِ
رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ سُبْحَانَ اللَّهِ رَبِّ السَّمَوَاتِ السَّبْعِ
وَرَبِّ الْعَرْشِ الْكَرِيمِ قَالَ وَكِيعٌ مَرَّةً لَا إِلَهَ إِلَّا اللَّهُ
فِيهَا كُلِّهَا (ابن ماجة
عن الحسن بن حسن أن عبد الله بن
جعفر رضي الله عنه تزوج امرأة فدخل بها فلما خرج قلت لها ما قال لك قلت قال إذا
نزل بك أمر فظيع أو عظيم فقولي لا إله إلا الله الحليم الكريم لا إله إلا الله رب
العرش العظيم سبحان الله رب العالمين فدعاني الحجاج فقلتها فقال لقد دعوتك وأنا
أريد أن أضرب عنقك وما في أهلك اليوم أحد أحب إلي منك أو أعز منك (سنن الكبرى )
ஹஸன் இப்னு ஹஸன் ரஹ் அவர்கள்
கூறினார்கள். அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் ரழி அவர்கள் என் உறவுக்காரப் பெண்ணை
மணமுடித்தார்கள். அப்பெண்ணிடம் முதலிரவையும் முடித்த பின்பு நான் அந்த அம்மையாரிடம்
உங்களுக்கு அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் ரழி அவர்கள் ஏதேனும் துஆவைக் கற்றுத்
தந்தார்களா என்று கேட்டேன். அதற்கு அப்பெண் ஆம் ஏதேனும் இக்கட்டான சூழ்நிலை உனக்கு
ஏற்பட்டால் இந்த துஆவை ஓது என அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் ரழி கூறியதாக மேற்படி துஆவை
அந்தப் பெண் என்னிடம் கூறினார்கள். அந்த துஆவை நானும் கற்றுக் கொண்டேன். பின்பு
ஒரு நேரத்தில் ஹஜ்ஜாஜ் என்னைக் கொல்வதற்காக அழைத்த போது நான் இந்த துஆவை ஓதினேன்.
அப்போது ஹஜ்ஜாஜ் என்னிடம் நான் உன் கழுத்தை வெட்டவே உம்மை அழைத்தேன். ஆனால் இன்று
நீர் என் கண்ணுக்கு முன்னால் உம் குடும்பத்தார்களில் எனக்குப் பிரியமானவராக
தெரிகிறீர் என்று ஹஜ்ஜாஜ் கூறினான்.
துஆ ஏற்கப்
படுவதற்கு தகுதியுள்ளவர்களாக நாம் மாற வேண்டும்
தற்காலத்தில் துஆக்கள் ஏற்கப்படாத காரணங்களில் மிக
முக்கியமானது ஹராமான சம்பாத்தியங்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَقَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ طَيِّبٌ
لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا وَإِنَّ اللَّهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ
بِهِ الْمُرْسَلِينَ فَقَالَ{ يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنْ الطَّيِّبَاتِ
وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ}وَقَالَ{يَا أَيُّهَا
الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ }ثُمَّ ذَكَرَ
الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ
يَا رَبِّ يَا رَبِّ وَمَطْعَمُهُ حَرَامٌ وَمَشْرَبُهُ حَرَامٌ وَمَلْبَسُهُ
حَرَامٌ وَغُذِيَ بِالْحَرَامِ فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ (مسلم
ஹஜ்ஜாஜ்
இப்னு யூசுஃப் ஒரு கொடுங்கோலர் என்பதை நாம் அறிவோம். அவர் கொல்லப்பட்ட நேரத்தில்
யாருக்கும் தெரியாமல் அடக்கம் செய்தார்கள். காரணம் அவருடைய கப்ரு எங்கே என்று
தெரிந்தால் மக்கள் தோண்டி எடுத்து அந்த உடலை சித்ரவதை செய்வார்கள் என்னும்
அளவுக்கு அவருடைய ஆட்சியில் கொடுமைகள் அதிகம் இருந்தன. அவர் ஆட்சிக்கு வந்த
புதிதில் ஒரு சிலர் ஹஜ்ஜாஜிடம் உங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சில நல்ல
மனிதர்கள் இருக்கிறார்கள் அவர்கள் கையேந்தி துஆ செய்தால் உங்களுடைய ஆட்சி உடனே
அகற்றப்பட்டு விடும் என்றனர். உடனே ஹஜ்ஜாஜ் ஒருவேளை செய்தார். ஒரு மாபெரும்
விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அதில் அனைத்து மக்களும் கலந்து கொள்ளும்படி
அழைப்பு விடுத்தார். முக்கியமாக எவர்களுடைய துஆக்கள் உடனே ஏற்கப்படும் என்று
கூறப்பட்டதோ அவர்களும் அழைக்கப்பட்டனர். அனைவரும் விருந்து உண்டனர். விருந்து
முடிந்தவுடன் ஹஜ்ஜாஜ் மக்களை நோக்கி இனிமேல் உங்களில் யாருடைய துஆவைப் பற்றியும்
எனக்கு கவலையில்லை. ஏனெனில் நான் கொடுத்த
உணவு ஹராமான உணவாகும். அது உங்களின் வயிற்றுக்குள் சென்று விட்டது எனவே எனக்கு
எதிராக யார் துஆ செய்தாலும் அது ஏற்கப்படாது என்றார். தங்களை அறியாமல்
வயிற்றுக்குள் சென்று விட்ட ஹராமான உணவுக்காக அல்லாஹ்விடம் தவ்பா செய்யாமல்
அல்லாஹ் மன்னிப்பான் என்பது ஒருபுறம் இருந்தாலும் இங்கே ஹஜ்ஜாஜ் சொன்ன வார்த்தை
கவனிக்க வேண்டிய ஒன்றாகும்
அன்று
ஹஜ்ஜாஜ் செய்த வேலையைஇன்றைய முஸ்லிம் உலகிற்கு எதிராக யூத பயங்கரவாதிகள் செய்து
கொண்டிருக்கிறார்கள். மக்கள் விரும்பிச் சாப்பிடக் கூடிய உணவுப் பொருட்கள்
பலவற்றில் பன்றியின் உதிரி பாகங்களை கலந்து விற்கப்படுகின்றன. இது போதாதா? நமது துஆக்களின் பவர் குறைவதற்கு...?
பன்றியை
எவ்வளவு தான் ஆரோக்கியமான சூழலில் வளர்த்தினாலும் பன்றி பன்றி தான். அதன் இயற்கை
குணம் மாறப் போவதில்லை. இன்று பெரும்பாலும் மக்களிடம் வெட்கம் எடுபட்டுப் போனதற்கு
பன்றி இறைச்சியின் உலக மயமாக்கலும் ஒரு காரணம். ஹராமை ஹராம் என்று தெரியாமல்
உண்ணும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளோம்.
நம்முடைய துஆக்கள்
ஏற்கப்படாததற்கு மற்றொரு காரணம் உறவுகளை துண்டித்து வாழ்வது
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لَا يَزَالُ يُسْتَجَابُ لِلْعَبْدِ مَا
لَمْ يَدْعُ بِإِثْمٍ أَوْ قَطِيعَةِ رَحِمٍ مَا لَمْ يَسْتَعْجِلْ (مسلم)
நபி மூஸா அலை அவர்கள் ஒருமுறை மழைக்காக துஆ செய்ய மக்களை ஒன்று கூட்டியபோது
அல்லாஹ் மூஸா நபியவர்களிடம் மூஸாவே..இந்தக் கூட்டத்தில் ஒருவன் தன்
நெருங்கிய உறவினரோடு பகைமை கொண்ட நிலையில் வந்துள்ளான் அவன் இருக்கும் வரை நான்
உமது துஆவை ஏற்க மாட்டேன் ஆகவே ஒரு பொது அறிவிப்புச் செய்து இந்தக் கூட்டத்தினரை
கலைந்து போகச் செய்யுங்கள் அதாவது “உங்களில் யாரேனும் உறவைத் துண்டித்தவர் இருந்தால் உடனே சென்று
பேசி விட்டு வாருங்கள் என்று அறிவிக்கும்படி அல்லாஹ் கட்டளையிட்டான். அவ்வாறே மூஸா
அலை அறிவிக்க, கூட்டம் கலைந்தது. சம்பந்தப்பட்ட நபர் தன் தவறை உணர்நது உடனே சென்று
நீண்ட நாட்களாக பேசாமல் இருந்த தனது சிறிய தாயாரிடம் பேசி உறவை புதுப்பித்தார்.
பிறகு மீண்டும் மக்களை ஒன்று கூட்டி நபி மூஸா அலை துஆ செய்ய மழை பெய்தது. அந்த
நபர் யார் என்பதை தனக்கு அறிவிக்கும்படி நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் கேட்டதற்கு நான்
எனது அடியானின் இரகசியத்தை வெளிப்படுத்த மாட்டேன் என்று அல்லாஹ் கூறி விட்டான்.
3. வாக்குரிமையை முறையாக
பயன்படுத்துவது
அடுத்த ஐந்தாண்டுகள் நம்மை ஆளப்போகும் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வது
மிகவும் முக்கியமான, தட்டிக் கழிக்கக்கூடாத பொறுப்பாகும். இந்தப்பொறுப்பை ஒருவர்
வீணாக்கினாலோ, தட்டிக்கழித்தாலோ, அலட்சியப்படுத்தினாலோ அதனால் ஏற்படும் தீய
விளைவுகளுக்கு அவரும் உடந்தை ஆவார் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு.
தற்போதைய சூழ்நிலையில் ஓட்டுப் போடுவது என்பது
மிகப் பெரிய அநியாயக்கார ஆட்சியாளரிடமிருந்து
இந்த நாட்டை, இந்த நாட்டு மக்களைப் பாதுகாப்பது என்ற சட்டத்தின் அடிப்படையில்
சேரும். தற்போதைய சூழ்நிலையில் இன்னார் வர வேண்டும் என்ற நோக்கத்திற்காக
போடப்படும் இன்னார் வந்து கூடாது என்பதற்காக வேண்டியே நாம் வாக்கை செலுத்த வேண்டிய
கட்டாயத்தில் இருக்கிறோம்.
நம்மில் சிலர் வரிசையில் நின்று வாக்களிப்பதைச் சிரமமாகக் கருதுகின்றனர்.
கூட்ட நெரிசல் என்பதற்காக கிரிக்கெட் விளையாட்டுக்கு நுழைவுச்சீட்டு எடுக்காமல்
இருக்கிறார்களா? அல்லது திரைப்படத்திற்குப் போகாமல் இருக்கிறார்களா?
சிலர் எனது ஒரு வாக்கால் என்ன மாற்றம் வந்து விடப்போகிறது என்று கருதி
வாக்களிப்பதில் அலட்சியம் காட்டுகின்றனர். ஒரு வாக்கின் பெறுமதி மிகவும் கனமானது
என்பதால்தான் வெயில், மழை பாராமல் சந்து பொந்துகளிலெல்லாம் நுழைந்து வாக்குச்
சேகரிக்கிறார் அரசியல்வாதி. என்னுடைய ஒரு ஓட்டில் என்னவாகி விடப்போகிறது என்று
கருதும் அலட்சியமான குடிமக்கள்தான் கள்ள வாக்குச் செலுத்தும் நபர்களுக்கு
வாசல்களைத் திறந்து விடுகின்றனர். நூறுபேர் இப்படி நினைத்து வாக்களிப்பதை அவர்கள்
தவிர்த்தால் யோக்கியமான வேட்பாளர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படாமல் போகும்
அவலம் நேரலாம்.
இன்னும் சிலர் எங்களுடைய பெண்கள்
முகத்திரையைக் கழற்றும் வழமை இல்லாதவர்கள். ஆனால் ஓட்டுப் போடும் இடத்திற்குச்
சென்றால் முகத்திரையைக் கழற்றும் சூழ்நிலை ஏற்படும் என்று கருதி ஓட்டுப்
போடுவதற்கு பெண்களை அனுப்பாதவர்களும் நம் சமூகத்தில் உள்ளனர். இது நிர்பந்தம் என்ற
அடிப்படையில் கூடும். எவ்வாறு பாஸ்போர்ட் எடுப்பதற்கும் ஆதார் எடுப்பதற்கும்
நிர்பந்தம் என்ற அடிப்படையில் எவ்வாறு முகத்திரையை
நீக்குவது கூடுமோ அவ்வாறே இதுவும் கூடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக