வியாழன், 25 ஏப்ரல், 2024

கோடைகால வகுப்புகளின் அவசியம்

 

கோடை விடுமுறையில் பல மாணவர்களின் நிலைகள் எப்படியெல்லாமோ சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர்களை மார்க்கக் கல்வியுடன் குறிப்பாக குர்ஆனுடன் தொடர்பு படுத்த வேண்டிய கடமை பெற்றோர்களுக்கும் ஆன்மீகத் தந்தைமார்களான நமக்கும் உண்டு.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ.... (6)التحريم

படிப்பினை- நரகத்தின் உஷ்ணத்தை விட்டும் உங்களின் பிள்ளைகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். வெயிலால் ஏற்படும் உஷ்ணத்தை விட்டும் நம் பிள்ளைகளைப் பாதுகாக்க எவ்வளவோ ஏற்பாடுகள் செய்கிறோம். ஆனால் இந்த உஷ்ணத்தை விட அந்த உஷ்ணம் பயங்கரமானது என்பதை நினைவில் வைக்க வேண்டும். 

மறுமையை மக்களுக்கு ஞாபகப் படுத்தவே அல்லாஹ் வெப்பத்தை ஏற்படுத்துகிறான்

حكي : أن أبا يزيد البسطامي قدس سره : دخل الحمام يوماً فأصابه الحر ، فصاح فسمع نداء من الزوايا الأربع : يا أبا يزيد ما لم تسلط عليك نار الدنيا لم تذكرنا ، ولم تستغث بنا  (تفسير   روح البيان)

அபூ யஜீதுல் பிஸ்தாமீ ரஹ் அவர்கள் ஒரு நேரத்தில் முகடு இல்லாத பொதுக் குளியலறையில்  நுழைந்தார்கள். மேல் முகடு இல்லாததால் வெயில் அவர்களைத் தாக்கியது. சிரமத்தால் அழுதார்கள் அப்போது ஒரு அசரீரி சப்தம் கேட்டது. அபூ யஜீதே இந்த வெப்பமும் உம்மைத் தாக்கா விட்டால் நீங்கள் அல்லாஹ்வை நினைப்பதை மறந்து விடுவீர்கள். நம்மிடம் பாதுகாவல் கேட்கவும் மாட்டீர்கள் என அல்லாஹ்வின் புறத்திலிருந்து அசரீரி சப்தம் கேட்டது.

கடும் வெயில் காலத்தில் நரகத்தின் உஷ்ணம் நம் சிந்தனைக்கு வர வேண்டும்

عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَكَتْ النَّارُ إِلَى رَبِّهَا فَقَالَتْ رَبِّ أَكَلَ بَعْضِي بَعْضًا فَأَذِنَ لَهَا بِنَفَسَيْنِ نَفَسٍ فِي الشِّتَاءِ وَنَفَسٍ فِي الصَّيْفِ فَأَشَدُّ مَا تَجِدُونَ مِنْ الْحَرِّ وَأَشَدُّ مَا تَجِدُونَ مِنْ الزَّمْهَرِيرِ(بخاري) باب صِفَةِ النَّارِ وَأَنَّهَا مَخْلُوقَةٌ – كتاب بدء الخلق وفي رواية للبيهقي) فَأَشَدَّ مَا تَجِدُونَ مِنَ الْحَرِّ فَمِنْ حَرِّهَا وَأَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الْبَرْدِ فَمِنْ زَمْهَرِيرِهَا- (الزَّمْهَرِير : شِدَّة الْبَرْد)

கருத்து-வருடத்திற்கு ஒரு முறை நரகம் தன்னுடைய வைப்பத்தை தானே தாங்க முடியாமல் மூச்சு விடும். (அல்லாஹ்வின் அனுமதி பெற்று தன்னுடைய சிறு பகுதியை வெளியிடும்.) அதன் தாக்கத்தையே கோடை காலத்தில் நாம் அனுபவிக்கிறோம். அதேபோல வருடத்தில் மற்றொரு முறை நரகம் தன்னுடைய குளிரை தானே தாங்க முடியாமல் மூச்சு விடும். (அல்லாஹ்வின் அனுமதி பெற்று தன்னுடைய சிறு பகுதியை வெளியிடும்.) அதன் தாக்கத்தையே குளிர் காலத்தில் நாம் அனுபவிக்கிறோம்.

படிப்பினை-புஹாரீ ரஹ் அவர்கள் நரகம் ஏற்கெனவே படைக்கப்பட்டு விட்டது என்ற பாடத்தில் இதற்கு முந்தைய ஹதீஸை கொண்டு வருகிறார்கள். அதன்படி எங்கோ இருக்கும் நரகம் வெளிப்படுத்தும் சிறு துளி வெப்பமும், குளிரும் பூமி வரை பரவி நம்மை வாட்டி வதைக்கிறது என்றால் நரகத்தின் வெப்பம், அல்லது குளிர் எப்படி இருக்கும் என்ற சிந்தனையை மக்களுடைய உள்ளத்தில் உண்டாக்க வேண்டியது நம் கடமையாகும். இந்த வெயிலை தாங்க முடியாமல் வாகனங்களிலும் வீடுகளிலும் மஸ்ஜித்களிலும் எப்போதும் A.C. உடன் அமர்ந்திருக்கிறோம் என்றால்அந்த நரகத்தின் கடும் வெயிலை விட்டும் நம்மையும் நம் பிள்ளைகளையும்  பாதுகாக்க எதை நாம் தயாரித்து வைத்திருக்கிறோம்.

கோடை விடுமுறையில் பிள்ளைகளின் நேரங்களைப் பயனுள்ளதாக ஆக்கி வைத்து நரகத்தின் கடுமையான உஷ்ணத்தை விட்டும் அவர்களைப் பாதுகாக்க முயற்சிக்க வேண்டும்

)والنفس البشرية جُبلت على أن الإنسان إن لم يشغلها بالخير شغلته بالشر.وروي عن الإمام الشافعي في هذا المعني (الكتاب:الوقت وأهميته في حياة المسلم)

கருத்து- நமது பிள்ளைகளின் நேரங்களை நல்ல விஷயத்திற்காகப் பயன்படுத்தா விட்டால்  தானாகவே அந்த நேரங்கள் தீமைக்குப் பயன்படுத்தப்பட்டு விடும். இதே கருத்தையொட்டி இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்களும் கூறியுள்ளார்கள்.

மதரஸாவுக்கு காலையில் சென்று ஒரு குர்ஆன் ஆயத்தை கற்பது 100 ரக்அத் தொழுவதை விட சிறந்தது

عَنْ أَبِي ذَرٍّ قَالَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا ذَرٍّ لَأَنْ تَغْدُوَ فَتَعَلَّمَ آيَةً مِنْ كِتَابِ اللَّهِ خَيْرٌ لَكَ مِنْ أَنْ تُصَلِّيَ مِائَةَ رَكْعَةٍ وَلَأَنْ تَغْدُوَ فَتَعَلَّمَ بَابًا مِنْ الْعِلْمِ عُمِلَ بِهِ أَوْ لَمْ يُعْمَلْ خَيْرٌ لَكَ مِنْ أَنْ تُصَلِّيَ أَلْفَ رَكْعَةٍ(ابن ماجة)

جاء شخص وعليه علامات الانكماش إلى أمير المؤمنين علي رضي الله عنه وقال له: أحس في نفسي أني أموت بعد ساعة، فقال له علي رضي الله عنه: (الموت ليس مشكلة، كلنا نموت).فقال له: ماذا أعمل في هذه الساعة؟قال (عليرضي الله عنه (اطلب العلم).

ஹழ்ரத் அலீ ரழி அவர்களிடம் ஒருவர் வந்து எனக்குள் மவ்த்துடைய அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விட்டதுஎன்றார். அதற்கு அலீ ரழி இது எல்லோருக்கும் வருவது  தானே என்றுகூற, அதற்கு அவர் நான் இறுதிநேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று கேட்க,கல்வியை கற்றுக் கொள் என்றார்கள். 

நம்மில் எத்தனை பேர் குர்ஆன் ஒத தெரியாதவர்கள், மார்க்க சட்டதிட்டங்கள் தெரியாதவர்கள் நம்மில் பலருக்கு ஒளு செய்யும் முறையே தெரியவில்லை ஒளுவின் முறித்தல்கள் தெரியவில்லை, பர்ளான குளிப்பு ஒன்று இருக்கிறது என்றே பலருக்கு தெரியவில்லை. அப்படியே தெரிந்தவர்களுக்கும் குளிப்பின் பர்ளுகள் என்ன என்று தெரிவதில்லைஇது தான் இன்றைய இஸ்லாமியர்களின் நிலை....அதிகாலை எழுந்து தானும் பஜ்ர் தொழுது தனது பிள்ளைகளையும் பஜர் தொழ வைத்து பிள்ளைகளை நிரப்பமாக பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோர்கள் அன்று இருந்தனர் ஆனால் இன்றோ தானும் எட்டு மணிக்கு எழுவதுடன் பிள்ளைகளை அதன் பின் எழுப்பி ஸ்கூலுக்கு அரக்க பறக்க அனுப்புவதே பெரும்பாடாக உள்ளது இதற்கிடையில் மக்தபை பற்றி சிந்திக்கவே முடிவதில்லை .மாலையில் பிள்ளைகள் வீடுதிரும்பியதும் டியூஸன் என்ற பெயரில் இரவுவரை கழித்து விட்டுவீடு வந்ததும் சாப்பிட்டு படுக்கவே நேரம் உள்ளது.

கோடை கால சிறப்பு வகுப்புகள் மூலம் நமது மாணவர்களுக்கு அதிகம் தர்பியத் தர வேண்டும்

ஒரு ஹதீஸைத் தேடி மதீனாவில் இருந்து சிரியாவுக்குச் சென்ற காலம் இருந்தது. ஆனால் இன்று பள்ளிவாசல் தோறும் மதரஸாக்கள் இருந்தும்  மாரக்கக் கல்வியைக் கற்கும் ஆர்வம் இல்லை

عَنْ كَثِيرِ بْنِ قَيْسٍ قَالَكُنْتُ جَالِسًا مَعَ أَبِي الدَّرْدَاءِ فِي مَسْجِدِ دِمَشْقَ فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ يَا أَبَا الدَّرْدَاءِ إِنِّي جِئْتُكَ مِنْ مَدِينَةِ الرَّسُولِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَدِيثٍ بَلَغَنِي أَنَّكَ تُحَدِّثُهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا جِئْتُ لِحَاجَةٍ قَالَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَيَقُولُ مَنْ سَلَكَ طَرِيقًا يَطْلُبُ فِيهِ عِلْمًا سَلَكَ اللَّهُ بِهِ طَرِيقًا مِنْ طُرُقِ الْجَنَّةِ وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ وَإِنَّ الْعَالِمَ لَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ وَالْحِيتَانُ فِي جَوْفِ الْمَاءِ وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ وَإِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الْأَنْبِيَاءِ وَإِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا وَرَّثُوا الْعِلْمَ فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ (ابوداود) باب الْحَثِّ عَلَى طَلَبِ الْعِلْمِ- كتاب العلم

முகலாய மன்னர்களில் ஒளரங்கசீப் அவர்களுக்கு முஸ்லிம்கள் மத்தியில் நல்ல மரியாதை உண்டு. சிறந்த பக்தியாளர். அரசாங்கப் பணத்தை ஆடம்பரமாக செலவு  செய்யாதவர். ஆனால் அவருடைய தந்தை ஷாஜஹான். மூத்த சகோதரர் தாராஷிகோ. இளையவர் முராத் ஆகிய அனைவரும்அரசாங்கப் பணத்தை ஆடம்பரமாக செலவு  செய்பவர்கள்.  தாஜ்மகாலை கட்டிய ஷாஜஹான் அதற்குப் பதிலாக ஒரு மஸ்ஜிதை கட்டியிருந்தால் இன்று வரை அவருக்கு நன்மை போய்ச் சேர்ந்து கொண்டிருக்கும் இதுவே அவர் ஒரு ஆடம்பரப் பிரியர் என்பதற்கு உதாரணம். . தாராஷிகோ. இளையவர் முராத் ஆகிய இருவரும் குடிகாரர்கள். அரசுப் பணத்தை குடித்தே அழித்தவர்கள். இந்த இருவருக்கும் உடந்தையாக ஷாஜஹான் இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் ஒளரங்கசீப் மட்டும் முற்றிலும் மாறுபட்ட நிலையில் வளர்ந்தார் என்றால் அதற்குக் காரணம் அவருக்குக் கிடைத்தமார்க்கக் கல்வி தான். ம்கதப் மதரஸாக்களில் ஆசிரியர்களின் போதனையால் தன்னுடைய தந்தையும், சகோதரர்களும் செய்வது தவறு என்று புரிந்து கொண்டார். மேலும் முந்தைய ஆட்சியின் அனைத்து ஆடம்பரங்களையும் ஒழித்தார். உதாரணமாக முந்தைய ஆட்சியில் கவிஞர் வாரியம் என்று இருந்தது. இவர்களின் முழு வேலை அரசரைப் புகழ்ந்து கவிதைகள் இயற்றுவது. அதைப் படித்து பொற்காசுகளைப் பெறுவது.  இதற்காக அரசுப் பணம் வீணாக்கப்பட்டது ஒளரங்கசீப் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வாரியத்தை கலைத்தார். மன்னரை இசையெழுப்பி தூங்க வைக்க இசைவாணர் குழு என்றிருந்தது அதையும் கலைத்தார். தன் கையால் தொப்பி தயாரித்து அந்தப் பணத்தில் செலவு செய்தார். இவ்வாறு இஸ்லாமிய அடிப்படையில் அவர் ஆட்சியை அமையக் காரணம் அவர் பெற்ற மார்க்கக் கல்வியாகும். 

மார்க்கக் கல்வியின் மதிப்பை உணராத சில பெற்றோர் அன்றும் இருந்தனர். இன்றும் இருக்கின்றனர்

இமாம் அபூயூசுஃப் ரஹ் அவர்களுடைய தாய் ஆரம்பத்தில் இவர்களை துணி துவைக்கும் வண்ணானிடம் அனுப்பி வைத்தார்கள். அங்கே போனாலும் நாலு காசு சம்பாதிக்கலாம் என்று. ஆனால் இமாம் அவர்களோ அந்தக் காலத்தில் கல்வியில் சிறந்த விளங்கிய இமாமுல் அஃழம் அபூஹனீஃபா ரஹ் அவர்களிடம் கல்வி கற்கச் சென்றார்கள்.  மகன் காசு இல்லாமல் வெறுங்கையோடு வருவதைக் கண்ட அந்தத் தாய் நேராக இமாமுல் அஃழம் ரஹ் அவர்களிடம் சென்று என்ன... என் மகனின் மனதை நீங்கள் மாற்ற நினைக்கிறீர்களா? வண்ணானிடம் சென்றாலும் நாலு காசு சம்பாதிப்பான். நீங்கள் அவனுடைய மனதை மாற்றி உங்களுடன் அமர வைத்துக் கொண்டீர்.. என்று கோபப்பட, இமாமுல் அஃழம் பொறுமையுடன் தாயே! நீங்கள் உங்களுடைய மகனை துணி துவைக்கும் வண்ணானாக பார்க்கிறீர்கள் ஆனால் நானோ இவரை இந்த நாட்டு மன்னருடன் சரி சமமாக உட்கார்ந்து ஃபாலூதா என்னும் உயர்வகை பானத்தை அருந்துபவராக பார்க்கிறேன் பிற்காலத்தில் இவர் அப்படி வருவார் என்று நினைக்கிறேன் என்றார்கள். அதன்பின்பு அந்தத் தாய் மகனுடைய விருப்பத்தில் தலையிடுவதில்லை. இமாம் அபூயூசுப் ரஹ் அவர்கள் பிற்காலத்தில் இமாமுல் அஃழம் அவர்களிடம் கல்வி பயின்று அவருடைய திறமையின் காரணமாக அந்த நாட்டின் மன்னர் ஹாரூன் ரஷீத் அவர்களால் உயர்ந்த நீதிபதி பொறுப்புக்கு நியமிக்கப்படுகிறார்கள் ஒரு நேரத்தில் மன்னர் விருந்துக்கு அழைத்த போது, அங்கே சென்று மன்னருக்கு அருகில் அமர்ந்து ஃபாலூதாவை அருந்திக் கொண்டிருக்கும்போது இமாம் அபூயூசுஃப் ரஹ் அவர்களுக்கு பழைய நினைவு வருகிறது அன்று என் தாய் என்னை வண்ணானிடம் அனுப்ப, நான் இமாமுல் அஃழம் அவர்களிடம் சென்று கல்வி பயின்றேனே அப்போது அவர்கள் கூறியது இப்போது நிஜமாகி இருக்கிறதே என்று எண்ணி சந்தோஷத்தால் கண்கலங்கினார்கள்.                                          

 

மார்க்கக்கல்வியின் மதிப்பை உணர்ந்த  அன்றைய பெற்றோருக்கு  சிறந்த உதாரணம்

மார்க்கக் கல்வியில் மேற்படிப்பை கற்றுக் கொள்வதற்காக இமாம் ஷாஃபியீ ரஹ் அவர்களை அவர்களின் தாய் மக்காவுக்கு அனுப்பி வைக்கும்போது மகனே!  நீ கல்வியைப் பெற்ற அறிஞனாக மட்டும் திரும்பி வர வேண்டும் என்று உபதேசம் செய்கிறார்கள்.  இமாம் ஷாஃபியீ ரஹ் மக்காவுக்குச் சென்று இமாம் மாலிக் இப்னு அனஸ் அவர்களிடம் கல்வி பயின்று நன்கு தேர்ச்சி பெறுகிறார்கள் இவர்களின் உயர்ந்த பண்பும், திறமையும் மாலிக் ரஹ் அவர்களைக் கவர்ந்து விட சிறிது காலத்தில் இவர்களே ஒரு தனிப்பிரிவுக்கு ஆசிரியராக நியமிக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட இமாம் ஷாஃபியீ ரஹ் அவர்கள் விருதுகளை சுமந்தவர்களாக தன் ஆசிரியரால் தரப்பட்ட அன்பளிப்புகளுடன் சொந்த ஊர் வருகிறார்கள். அவர்கள் வருவதையும், எவ்வாறு வருகிறார்கள் என்பதையும் அறிந்து கொண்ட அந்தத்தாய்  என் மகனை இங்கிருந்து புறப்பட்ட கோலத்திலேயே பார்க்க விரும்புகிறேன். கல்வியினால் பிரதிபலன் பெற்றவராக அல்லஎன்று செய்தி அனுப்பினார்கள். இதைக் கேள்விப்பட்ட இமாம் ஷாஃபியீ ரஹ் அவர்கள் தங்களிடமுள்ள பரிசுகளை அனைவருக்கும் தந்து விட்டு வெறுங்கையுடன் வீடு திரும்பி அந்தத் தாயின் மனதை குளிர வைத்தார்கள். தமது பிள்ளைகளின் மார்க்கக் கல்வியை மட்டுமே குறிக்கோளாக கருதும் அன்றைய பெற்றோர்களின் நிலை அவ்வாறிருந்தது.              

 

குர்ஆனைக் கற்று அதை மறந்தவர்கள் அதை மீண்டும் ஞாபகப் படுத்திக் கொள்வதற்கான

வாய்ப்பான  கோடை விடுமுறையை ஆக்கிக் கொள்ள வேண்டும்

குர்ஆனை கற்றவர் அதை அடிக்கடி ஓதிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் அவிழ்த்து விடப்பட்ட ஒட்டகம் விரண்டோடுவது போல் நம்மை விட்டும் விரண்டோடி விடும். 

عَنِ ابْنِ عُمَرَ رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ  صلى الله عليه وسلم قَالَ إِنَّمَا مَثَلُ صَاحِبِ الْقُرْآنِ كَمَثَلِ صَاحِبِ الإِبِلِ الْمُعَقَّلَةِ إِنْ عَاهَدَ عَلَيْهَا أَمْسَكَهَا وَإِنْ أَطْلَقَهَا ذَهَبَتْ (بخاري)

குர்ஆனை கற்றுக் கொண்டு பிறகு மறந்து விடுபவர் குஷ்டரோகியாக அல்லாஹ்வை சந்திப்பார்

عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ قَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ امْرِئٍ يَقْرَأُ الْقُرْآنَ ثُمَّ يَنْسَاهُ إِلَّا لَقِيَ اللَّهَ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ أَجْذَمَ (ابوداود)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُرِضَتْ عَلَيَّ أُجُورُ أُمَّتِي حَتَّى الْقَذَاةُ يُخْرِجُهَا الرَّجُلُ مِنْ الْمَسْجِدِ وَعُرِضَتْ عَلَيَّ ذُنُوبُ أُمَّتِي فَلَمْ أَرَ ذَنْبًا أَعْظَمَ مِنْ سُورَةٍ مِنْ الْقُرْآنِ أَوْ آيَةٍ أُوتِيَهَا رَجُلٌ ثُمَّ نَسِيَهَا ( أبو داود بَاب فِي كَنْسِ الْمَسْجِدِ- كِتَاب الصَّلَاةِ

என் உம்மத்தின் நன்மைகள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்ட போது அதில் சிறந்ததாக நான் கண்டது மஸ்ஜிதில் கிடக்கும் ஒரு அசுத்தத்தை அப்புறப் படுத்துவதாகும். அதேபோல் என் உம்மத்தினரின் தீமைகள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்ட போது அதில் கெட்டதாக நான் கண்டது குர்ஆனின் ஒரு சூராவை மனப்பாடம் செய்த பின் அதை மறந்து விடுவதாகும்.                            

ஷைகுல் ஹிந்த் மஹ்மூதுல் ஹசன் ரஹ் அவர்கள் கூறினார்கள் இன்றைய முஸ்லிம்களுக்கு ஏற்படும் சோதனைகளுக்கு இரண்டு காரணங்கள். 1.ஒற்றுமையின்மை 2. குர்ஆனின் தொடர்பை கை விட்டது.

பணம் பங்களா போன்றவற்றின் பரக்கத்தை விட ஒரு குடும்பம் குர்ஆனைக் கொண்டு பரக்கத் பெறுவது சிறந்தது

عن أَنَس رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ اشْتَكَى ابْنٌ لِأَبِي طَلْحَةَ قَالَ فَمَاتَ وَأَبُو طَلْحَةَ خَارِجٌ فَلَمَّا رَأَتْ امْرَأَتُهُ أَنَّهُ قَدْ مَاتَ هَيَّأَتْ شَيْئًا وَنَحَّتْهُ فِي جَانِبِ الْبَيْتِ فَلَمَّا جَاءَ أَبُو طَلْحَةَ قَالَ كَيْفَ الْغُلَامُ قَالَتْ قَدْ هَدَأَتْ نَفْسُهُ وَأَرْجُو أَنْ يَكُونَ قَدْ اسْتَرَاحَ وَظَنَّ أَبُو طَلْحَةَ أَنَّهَا صَادِقَةٌ قَالَ فَبَاتَ فَلَمَّا أَصْبَحَ اغْتَسَلَ فَلَمَّا أَرَادَ أَنْ يَخْرُجَ أَعْلَمَتْهُ أَنَّهُ قَدْ مَاتَ فَصَلَّى مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ أَخْبَرَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَا كَانَ مِنْهُمَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَعَلَّ اللَّهَ أَنْ يُبَارِكَ لَكُمَا فِي لَيْلَتِكُمَا قَالَ سُفْيَانُ فَقَالَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَرَأَيْتُ لَهُمَا تِسْعَةَ أَوْلَادٍ كُلُّهُمْ قَدْ قَرَأَ الْقُرْآنَ .(بخاري

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ مَاتَ ابْنٌ لِأَبِي طَلْحَةَ مِنْ أُمِّ سُلَيْمٍ فَقَالَتْ لِأَهْلِهَا لَا تُحَدِّثُوا أَبَا طَلْحَةَ بِابْنِهِ حَتَّى أَكُونَ أَنَا أُحَدِّثُهُ قَالَ فَجَاءَ فَقَرَّبَتْ إِلَيْهِ عَشَاءً فَأَكَلَ وَشَرِبَ فَقَالَ ثُمَّ تَصَنَّعَتْ لَهُ أَحْسَنَ مَا كَانَ تَصَنَّعُ قَبْلَ ذَلِكَ فَوَقَعَ بِهَا فَلَمَّا رَأَتْ أَنَّهُ قَدْ شَبِعَ وَأَصَابَ مِنْهَا قَالَتْ يَا أَبَا طَلْحَةَ أَرَأَيْتَ لَوْ أَنَّ قَوْمًا أَعَارُوا عَارِيَتَهُمْ أَهْلَ بَيْتٍ فَطَلَبُوا عَارِيَتَهُمْ أَلَهُمْ أَنْ يَمْنَعُوهُمْ قَالَ لَا قَالَتْ فَاحْتَسِبْ ابْنَكَ قَالَ فَغَضِبَ وَقَالَ تَرَكْتِنِي حَتَّى تَلَطَّخْتُ ثُمَّ أَخْبَرْتِنِي بِابْنِي فَانْطَلَقَ حَتَّى أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ بِمَا كَانَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَارَكَ اللَّهُ لَكُمَا فِي غَابِرِ لَيْلَتِكُمَا قَالَ فَحَمَلَتْ قَالَ فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ وَهِيَ مَعَهُ وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَى الْمَدِينَةَ مِنْ سَفَرٍ لَا يَطْرُقُهَا طُرُوقًا فَدَنَوْا مِنْ الْمَدِينَةِ فَضَرَبَهَا الْمَخَاضُ فَاحْتُبِسَ عَلَيْهَا أَبُو طَلْحَةَ وَانْطَلَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَقُولُ أَبُو طَلْحَةَ إِنَّكَ لَتَعْلَمُ يَا رَبِّ إِنَّهُ يُعْجِبُنِي أَنْ أَخْرُجَ مَعَ رَسُولِكَ إِذَا خَرَجَ وَأَدْخُلَ مَعَهُ إِذَا دَخَلَ وَقَدْ احْتَبَسْتُ بِمَا تَرَى قَالَ تَقُولُ أُمُّ سُلَيْمٍ يَا أَبَا طَلْحَةَ مَا أَجِدُ الَّذِي كُنْتُ أَجِدُ انْطَلِقْ فَانْطَلَقْنَا قَالَ وَضَرَبَهَا الْمَخَاضُ حِينَ قَدِمَا فَوَلَدَتْ غُلَامًا فَقَالَتْ لِي أُمِّي يَا أَنَسُ لَا يُرْضِعُهُ أَحَدٌ حَتَّى تَغْدُوَ بِهِ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا أَصْبَحَ احْتَمَلْتُهُ فَانْطَلَقْتُ بِهِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَصَادَفْتُهُ وَمَعَهُ مِيسَمٌ فَلَمَّا رَآنِي قَالَ لَعَلَّ أُمَّ سُلَيْمٍ وَلَدَتْ قُلْتُ نَعَمْ فَوَضَعَ الْمِيسَمَ قَالَ وَجِئْتُ بِهِ فَوَضَعْتُهُ فِي حَجْرِهِ وَدَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَجْوَةٍ مِنْ عَجْوَةِ الْمَدِينَةِ فَلَاكَهَا فِي فِيهِ حَتَّى ذَابَتْ ثُمَّ قَذَفَهَا فِي فِي الصَّبِيِّ فَجَعَلَ الصَّبِيُّ يَتَلَمَّظُهَا قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ انْظُرُوا إِلَى حُبِّ الْأَنْصَارِ التَّمْرَ قَالَ فَمَسَحَ وَجْهَهُ وَسَمَّاهُ عَبْدَ اللَّهِ (مسلم)

அபூ தல்ஹா ரழி அவர்கள் வெளியூர் சென்று திரும்பும் நேரத்தில் அவரது ஆண்குழந்தை நோயால் இறந்து விட்டது. இந்நிலையில் சோகத்தால் அழுத அவரது மனைவி குழந்தையின் ஜனாஸாவை மறைத்து விட்டு தன் உறவினர்களிடம் நான் சொல்லாமல் என் மகன் இறந்த விபரத்தை யாரும் சொல்லவேண்டாம் என்றார். வெளியூர் சென்று திரும்பும் தன் கணவரிடம் உடனே இதைச் சொல்லி சங்கடப் படுத்தக்கூடாது என்பது அப்பெண்ணின் நோக்கம். இந்நிலையில் வெளியூர் சென்று திரும்பும் கணவரை திருப்திப் படுத்த வேண்டும் என்ற ஷரீஅத்தின் அறிவுரைப்படி தன்னை அலங்கரித்துக் கொண்டார்.அவர் வந்தவுடன் குழந்தையைப் பற்றி விசாரித்தார். அவர் நிம்மதியாக ஓய்வெடுக்கிறார் என்று கூற, அதை அவர் நம்பி வாட்டார். இந்நிலையில் கணவருக்கு உணவு பரிமாறினார். நீண்ட நாட்கள் பிரிந்திருந்த தன் மனைவியிடம் கணவர் உறவும் கொண்டார்.

 

அந்த மனைவி எப்போது அவருடைய உடலும் உள்ளமும் திருப்தி அடைந்ததோ அப்போது அப்பெண் அதுவரை மறைத்து வைத்திருந்த தன் சோகத்தை வெளிப்படுத்தினார். மற்றொரு அறிவிப்பில் அதிகாலையில் குளித்து விட்டு மஸ்ஜிதுக்குப் புறப்படும்போது தன் கணவரை நோக்கி ஒருவரிடம் மற்றொருவர் ஒரு இரவல் கொடுத்து விட்டு அதைத் திருப்பிக் கேட்டால் தர மறுக்கலாமா என்றார். அதற்கு அக்கணவர் கூடாது என்றார். உடனே அப்பெண் உங்களுடைய ஆண் குழந்தையையும் அவ்வாறு எண்ணிக் கொள்ளுங்கள் அல்லாஹ் தந்தான் அல்லாஹ் திருப்பி வாங்கிக் கொண்டான். என்று அழுத படியே கூற,  அந்தக் கணவர்  அழுகை தாங்க முடியாமல் இதை வந்தவுடன் சொல்லாமல் உறவு கொள்ளும் அளவுக்கு என்னை ஆக்கி விட்டாயே என்று அழுதார். பிறகு அக்குழந்தைநபி ஸல் அவர்களிடம் சென்று நடந்த விபரத்தைக் கூறினார். தானும் தனது மனைவியும் தவறு செய்து விட்டோமோ என்ற குற்ற உணர்வு அவரிடம் இருந்தது. ஆனால் அந்த மனைவியின் நல்ல எண்ணத்தைப் புரிந்து கொண்ட நபி ஸல்  அவர்கள் அல்லாஹ் உங்களுடைய இந்த உடலுறவில் பரக்கத் செய்வானாக என துஆச் செய்தார்கள்.

 

சில மாதங்கள் கழித்து நபி ஸல் அவர்களுடன் அந்த தம்பதிகள் ஒரு பிரயாணம் மேற்கொண்டனர். பிரயாணம் முடிந்து மதீனாவை நெருங்கும்போது அப்பெணுக்கு பிரசவ வேதனை ஏற்பட்டது  இருப்பினும் நபி ஸல் அவர்களுடனேயே இந்தப் பிரயாணத்தை மதீனா வரை முடிக்க வேண்டும் என்ற கணவரின் விருப்பத்திற்கு இணங்க அப்பெண் பிரசவ வேதனையை பொறுத்துக் கொண்டார். மதீனாவுக்கு வந்தவுடன் குழந்தை பிறந்த து. அந்தக் குழந்தையை தன் மூத்த பிள்ளையான அனஸ் ரழி அவர்களிடம் கொடுத்தனுப்பி  இக்குழந்தை உண்ணும் முதல் உணவு நபி ஸல்  அவர்களால் மென்று தரப்பட்ட பரக்கத்தான உணவாக இருக்க வேண்டும் என்று கூறி கொடுத்தனுப்பினார்.நபி ஸல் அவர்களிடம் அக்குழந்தை கொண்டு செல்லப்பட்டவுடன் உம்மு சுலைமுக்கு குழந்தை பிறந்துள்ளதா என்று கூறி சந்தோஷமாக அதை வாங்கி அஜ்வா பேரீத்தம்பழத்தை மென்று முபாரக்கான அந்த உமிழ்நீரை அந்தக் குழந்தையின் வாயில் தடவ, அக்குழந்தை ருசியுடன் சுவைத்தது. அப்போது நபி ஸல் அவர்கள் இந்த அன்சாரிகளுக்குத்தான் பேரீத்தம்பழத்தின் மீது எவ்வளவு ஆசை பாருங்கள் என்றார்கள்.அக்குழந்தைக்கு அப்துல்லாஹ் எனப் பெயர் வைத்தார்கள். அந்த அப்துல்லாஹ் வளரந்துஆளாகி திருமணம்செய்து அவருக்கு 9 ஆண் மக்கள் பிறந்தார்கள்.அத்தனை பேரும் ஹாஃபிழ்களாக இருந்தனர்.  படிப்பினை- அல்லாஹ் உங்களுடைய உடலுறவில் பரக்கத் செய்வானாக என்ற துஆவின் தாத்பரியம் காசோ பணமோ பங்களாவோ அல்ல. மாறாக குர்ஆன் தான் அந்த பரக்கத்.

நம் பிள்ளைகளில் சிலரையேனும் அரபு மதரஸாக்களுக்கு அனுப்பி

ஆலிம், ஹாஃபிழ்களாக உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்

( إذا كان يوم القيامة يقول الله سبحانه للعابدين والمجاهدين: ادخلوا الجنة فيقول العلماء: بفضل علمنا تعبدوا وجاهدوا فيقول الله عز وجل: أنتم عندى كبعض ملائكتى اشفعوا تشفعوا فيشفعون ثم يدخلون الجنة )(احياء)              

  மறுமைநாளில் அல்லாஹ் வணக்கசாலிகளிடமும்போர் செய்தபோராளிகளிடமும் நீங்கள் சுவனத்தில் நுழையுங்கள் என்று கூறுவான். அப்போது உலமாக்கள் நாங்கள் கற்றுக் கொடுத்ததன் விளைவாகத்தான் அவர்கள் வணக்கம் புரிந்தார்கள். போர் செய்தார்கள்.ஆனால் அவர்களை அனுப்பிவிட்டு எங்களை நிறுத்தி விட்டாயே என ஏக்கத்துடன் கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் கூறுவானாம். நீங்கள் என்னிடம் சில பிரத்தியேகமான மலக்குமார்களைப் போன்றவர்கள். எனவே நீங்கள் தனியாக செல்லக்கூடாது. நீங்கள் சிபாரிசு செய்யுங்கள் என்று கூறுவான். அவர்கள் சிபாரிசு செய்வார்கள். அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்வான். பிறகு அவர்கள் சுவனம் செல்வார்கள்.

கடைசி காலத்தில் ஆலிம்கள் அறவே  இல்லாத சூழ்நிலை ஏற்படும். தொழவைப்பவர் இல்லாமல் மஸ்ஜித்கள் தடுமாறும்

عَنْ سَلاَمَةَ بِنْتِ الْحُرِّ أُخْتِ خَرَشَةَ بْنِ الْحُرِّ الْفَزَارِىِّ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يَتَدَافَعَ أَهْلُ الْمَسْجِدِ لاَ يَجِدُونَ إِمَامًا يُصَلِّى بِهِمْ (ابوداود

தொழ வைக்க இமாம் இல்லாமல் மஸ்ஜித்கள் தடுமாறும் நிலை  ஏற்படுவது கியாமத்தின் அடையாளமாகும்

விளக்கம்- மஸ்ஜித்களில் இமாம் இல்லாமல் பொதுமக்கள் தொழ வைக்கும் நிலை தான் ஏற்படும். அதுவும் நீடிக்காது.  ஒருவர் மற்றவரை ஏவுவார். அவர் பதிலுக்கு இவரை ஏவுவார். தொழ வைக்கத் தெரியாது என மக்கள் ஒதுங்குவார்கள். இறுதியில் இமாம் இல்லாமல் தான் தொழுகை நடைபெறும். நூல் மிர்ஆத்

முடிந்த வரை மேற்காணும் நிலை ஏற்படாமல் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையல்ல

    பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெண்கள்  இன்று வெளியாகி உள்ளன. சில நாட்களுக்கு முன்பு 11 மற்றும 12-ம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெ...