வியாழன், 30 மே, 2024

பள்ளி திறக்கும் முன் மாணவர்களுக்கு சில அறிவுரைகள்

தலைப்புகள்

1. பள்ளிப் படிப்பும் அவசியம். எனினும் அதை விட அவசியம் மதரஸா படிப்பு. அதற்கு சிறிது நேரம் ஒதுக்க வேண்டும்

2. ஜும்ஆவின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். மாணவர்களுக்கு பெரும்பாலும் ஜும்ஆ கிடைப்பதில்லை. சம்பந்தப் பட்ட பெற்றோர் ஸ்கூல் நிர்வாகத்திடம் பேசி குறைந்த பட்சம் ஸ்கூலில் ஜும்ஆ தொழ ஏற்பாடு செய்ய வேண்டும்.

3. இந்தியாவில் நல்ல ஆட்சி அமைய மாணவர்கள் துஆச் செய்ய வேண்டும். பருவமடையாத பிள்ளைகளின் துஆவுக்கு அல்லாஹ்விடம் சிறந்த அங்கீகாரம் உண்டு

 

1. மதரஸா  கல்வியின் அவசியம்

ஒரு முஸ்லிம் இளம் தம்பதியர் தம் குழந்தையை பற்றி பெறுமை பொங்க பேசினார்கள்.டி வி யில் பாட்டுப் போட்டால் இவன் அற்புதமாக ஆடுவான் என்றார்கள். அவர்களாக டி வியை ஆன் செய்ய இரண்டரை வயதுப் பையன் இசைக்கு ஏதுவாக நடன மாடினான். எல்லோரும் மகிழ்ச்சியில் ஆராவரம் செய்து கைகொட்டி மகிழ்ந்தனர். நம்முடைய வீடுகளில் இன்றைய சூழ்நிலையில் இதைத்தான் சொல்லிக் கொடுக்க முடிகிறது. பள்ளிக் கூடங்களிலும் நண்பர்களுடன் சேர்ந்து இதைத் தான் கற்றுக் கொள்கின்றனர். மதரஸாக்கள் தான் இந்தக் குழந்தகளுக்கு அல்லாஹ்வை ரஸூலை கலிமாவை தீனை சொல்லிக் கொடுக்கின்றன.

குர்ஆன் மதரஸாக்களை நாம் அலட்சியப் படுத்துவது தீனை அலட்சியப் படுத்துவதற்கு சமம்.

மார்க்கக் கல்வியை  ஒதுக்குவது  பல்வேறு சோதனைகள் ஏற்படுவதற்குக் காரணமாகி விடும்

عَنْ أَبِى هُرَيْرَةَ رضي الله عنه قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا اتُّخِذَ الْفَىْءُ دُوَلاً1 وَالأَمَانَةُ مَغْنَمًا2 وَالزَّكَاةُ مَغْرَمًا3 وَتُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ وَعَقَّ أُمَّهُ وَأَدْنَى صَدِيقَهُ وَأَقْصَى أَبَاهُ وَظَهَرَتِ الأَصْوَاتُ فِى الْمَسَاجِدِ وَسَادَ الْقَبِيلَةَ فَاسِقُهُمْ وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ4 وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ وَظَهَرَتِ الْقَيْنَاتُ5 وَالْمَعَازِفُ6 وَشُرِبَتِ الْخُمُورُ وَلَعَنَ آخِرُ هَذِهِ الأُمَّةِ أَوَّلَهَا فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ وَزَلْزَلَةً وَخَسْفًا وَمَسْخًا وَقَذْفًا وَآيَاتٍ تَتَابَعُ كَنِظَامٍ بَالٍ7 قُطِعَ سِلْكُهُ فَتَتَابَعَ (ترمذي) وَتُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ أي يتعلمون العلم لطلب المال والجاه لا للدين(تحفة الاحوذي

 கருத்து- 1.எப்போது பொதுச்சொத்துக்கள் தன் சொத்துக்களாக பாவிக்கப்படுமோ 2. எப்போது அமானிதம் துஷ்பிரயோகம் செய்யப்படுமோ 3.எப்போது ஜகாத் நிறைவேற்றப்படாத கடனாக ஆகி விடுமோ 4. எப்போது மார்க்கத்தை மார்க்கம் அல்லாத நோக்கத்திற்காக கற்றுக் கொள்ளப்படுமோ 5. எப்போது ஒரு ஆண் மனைவிக்குக் கட்டுப்படுபவனாக ஆகி விடுவானோ 6. எப்போது ஒரு ஆண் தன் தாயை வெறுத்து 7.நண்பனைப் பெரிதாகக் கருதி 8.தந்தையை ஒதுக்குவானோ 9. எப்போது மஸ்ஜித்களில் வீண் சப்தங்கள் பெருகி விடுமோ 10. எப்போது சமுதாயத்தில் கெட்டவன் தலைவனாக ஆக்கப் பட்டு 11. நல்லவர்கள் ஓரங்கட்டப் படுவார்களோ 12. எப்போது ஒருவனின் தீமைக்கு பயந்து மக்கள் அவனுக்கு மரியாதை செய்வார்களோ 13. எப்போது பாடகிகள் பெருகி, இசை அதிகரித்து விடுமோ 14. எப்போது மது அதிகரித்து விடுமோ  15. எப்போது இந்த உம்மத்தின் பிந்தியவர்கள் முந்தியவர்களைக் குறை கூற ஆரம்பித்து விடுவார்களோ அப்போது சிவப்பு நிற அனல் காற்று வீசுவதையும் பூகம்பம் அடிக்கடி ஏற்படுவதையும் பூமி பிளக்குதல் ஏற்படுவதையும் உருமாற்றம் ஏற்படுவதையும் எரி கற்கள் எறியப்படுதையும் எதிர் பாருங்கள். எந்த அளவுக்கெனில் பாசி மாலை அறுந்தால் தொடர்ச்சியாக பாசிகள் கீழே விழுவது போன்று தொடர்ச்சியாக இவைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.                                                                                                

இதில் நான்காவதாக இடம் பெற்றுள்ள வார்த்தைக்கு மற்றொரு பொருளும் உண்டு. அதாவது மார்க்கக் கல்வ அல்லாத மற்ற கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுமோ அப்போது இந்த அழிவுகள் உண்டாகும் என்றும் பொருள் உண்டு.                              

 பூகம்பமும், சுனாமியும் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த 100 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த பத்து ஆண்டுகளில் தான் தாக்கமும், உயிர் பலியும் அதிகரித்துள்ளது. -  தினமலர் - மேற்படி தவறுகள் நிகழ்ந்தால் பூகம்பம் அடிக்கடி ஏற்படும் என்ற நபி ஸல் அவர்களின் சொல்லுக்கேற்ப, இன்றை. விஞ்ஞானிகள் கூறும்போது ஒரு வருடத்தில் சுமார் 10 இலட்சம் நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. உலகில் ஒரு வினாடி கூட நில அதிர்வு ஏற்படாத நமிடமே இல்லை. ஒவ்வொரு வினாடியும் உலகின் எங்கேனும் ஒரு பகுதியில் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் என்கிறார்கள்             

மார்க்க விஷயங்களின் மீது அலட்சியம்  குர்ஆன் நம்மிடமிருந்து உயர்த்தப் படுவதற்குக் காரணமாகி விடும்

عن شداد بن معقل قال قال عبد الله إن هذا القرآن الذي بين أظهركم يوشك أن ينزع منك قال قلت كيف ينزع منا وقد أثبته الله في قلوبنا وأثبتناه في مصاحفنا قال يسرى عليه في ليلة واحدة فينزع ما في القلوب ويذهب ما في المصاحف ويصبح الناس منه فقراء ثم قرأ ولئن شئنا لنذهبن بالذي أوحينا إليك  (مصنف ابن ابي شبية)

நிச்சயமாக இந்தக் குர்ஆன் உங்களுக்கு முன்னால் இருக்கிறது. அது உங்களிடமிருந்து உயர்த்தப் படக் கூடும். என்று  இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் கூற, ஷத்தாத் ரஹ் அவர்கள் இது எவாறு சாத்தியம் அல்ல்லாஹ் நம்முடைய உள்ளங்களிலும்  நம்முடைய பிரதிகளிலும் அதைப் பதிய வைத்திருக்கும்போது இது எப்படி சாத்தியம் என்று கேட்க, அதற்கு இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் கூறினார்கள். ஒரே இரவில் அல்லாஹ் தஆலா  உள்ளங்களில் இருந்தும் பிரதிகளில் இருந்தும் குர்ஆனை அல்லாஹ் நீக்கி விடுவான். ஒட்டு மொத்த மக்களும்  குர்ஆனை விட்டும் ஏழைகளாக ஆகி விடுவார்கள். என்று கூறிய பின்பு பின்வரும் குர்ஆன் வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள். நாம் நாடினால் நாம் இறக்கிய வசனங்களை நாமே முற்றிலும் நீக்கி விடுவோம்.

 

விளக்கம்- ஒரு இரவில் அல்லாஹ் குர்ஆனை அத்தனை பிரதிகளிலும் இருந்தும் நீக்கி விடுவான். மறுநாள் காலையில் வெறும் பேப்பர் மட்டும் தான் மிஞ்சம். அதேபோல் யாரெல்லாம் குர்ஆனை அல்லது சூராக்களை மனனம் செய்து வைத்திருந்ந்தார்களோ அவை அத்தனையும் மறந்து விடும்.

عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ رض قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْرُسُ الْإِسْلَامُ كَمَا يَدْرُسُ وَشْيُ الثَّوْبِ حَتَّى لَا يُدْرَى مَا صِيَامٌ وَلَا صَلَاةٌ وَلَا نُسُكٌ وَلَا صَدَقَةٌ وَلَيُسْرَى عَلَى كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ فِي لَيْلَةٍ فَلَا يَبْقَى فِي الْأَرْضِ مِنْهُ آيَةٌ وَتَبْقَى طَوَائِفُ مِنْ النَّاسِ الشَّيْخُ الْكَبِيرُ وَالْعَجُوزُ يَقُولُونَ أَدْرَكْنَا آبَاءَنَا عَلَى هَذِهِ الْكَلِمَةِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَنَحْنُ نَقُولُهَا  (ابن ماجة)

 நபி ஸல் கூறியதாக  ஹுதைஃபா ரழி அறிவித்துள்ளார்கள்.  பழைய துணியில் எவ்வாறு கலர் மங்கி விடுமோ அவ்வாறு   இஸ்லாம் மங்கி விடும். அப்போது யாருக்கும் நோன்பு என்றால் என்ன?  தொழுகை என்றால் என்ன?  ஹஜ்ஜுக் கடமைகள் என்றால் என்ன? ஜகாத் என்றால் என்ன? என்பதே தெரியாது. அப்போது ஒரே ஒரு இரவில் அல்லாஹ் குர்ஆனை  உயர்த்தி விடுவான். அப்போதுள்ள முதியவர்கள் மற்றும்  மூதாட்டிகள் மட்டும் பின்வருமாறு ஞாபகப் படுத்துவார்கள். எங்களுடைய பெற்றோர் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று எதையோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். நாங்களும் அதைச் சொல்கிறோம் (மற்றபடி அதைப் பற்றி எங்களுக்கு எதுவுமே தெரியாது).   

குர்ஆன் மதரஸாக்களின் மீதான அலட்சியம் காரணமாக கடைசி காலத்தில் ஆலிம்கள் அறவே  இல்லாத சூழ்நிலை ஏற்படும். தொழவைப்பவர் இல்லாமல் மஸ்ஜித்கள் தடுமாறும்

عَنْ سَلاَمَةَ بِنْتِ الْحُرِّ أُخْتِ خَرَشَةَ بْنِ الْحُرِّ الْفَزَارِىِّ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يَتَدَافَعَ أَهْلُ الْمَسْجِدِ لاَ يَجِدُونَ إِمَامًا يُصَلِّى بِهِمْ (ابوداود

தொழ வைக்க இமாம் இல்லாமல் மஸ்ஜித்கள் தடுமாறும் நிலை  ஏற்படுவது கியாமத்தின் அடையாளமாகும்

விளக்கம்- மஸ்ஜித்களில் இமாம் இல்லாமல் பொதுமக்கள் தொழ வைக்கும் நிலை தான் ஏற்படும். அதுவும் நீடிக்காது.  ஒருவர் மற்றவரை ஏவுவார். அவர் பதிலுக்கு இவரை ஏவுவார். தொழ வைக்கத் தெரியாது என மக்கள் ஒதுங்குவார்கள். இறுதியில் இமாம் இல்லாமல் தான் தொழுகை நடைபெறும். நூல் மிர்ஆத் 

குர்ஆன் மதரஸாக்களின் மீது அலட்சியம்  நம்மைக் கொடுமைப்படுத்தும்  ஆட்சி  அமையக் காரணமாகி விடும்

ஷைகுல் ஹிந்த் மஹ்மூதுல் ஹசன் ரஹ் அவர்கள் கூறினார்கள் இன்றைய முஸ்லிம்களுக்கு ஏற்படும் சோதனைகளுக்கு இரண்டு காரணங்கள். 1.ஒற்றுமையின்மை 2. குர்ஆனின் தொடர்பை கை விட்டது.

குர்ஆனை கற்றுக் கொண்டு பிறகு மறந்து விடுபவர் குஷ்டரோகியாக அல்லாஹ்வை சந்திப்பார்

عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ امْرِئٍ يَقْرَأُ الْقُرْآنَ ثُمَّ يَنْسَاهُ إِلَّا لَقِيَ اللَّهَ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ أَجْذَمَ (ابوداود)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُرِضَتْ عَلَيَّ أُجُورُ أُمَّتِي حَتَّى الْقَذَاةُ يُخْرِجُهَا الرَّجُلُ مِنْ الْمَسْجِدِ وَعُرِضَتْ عَلَيَّ ذُنُوبُ أُمَّتِي فَلَمْ أَرَ ذَنْبًا أَعْظَمَ مِنْ سُورَةٍ مِنْ الْقُرْآنِ أَوْ آيَةٍ أُوتِيَهَا رَجُلٌ ثُمَّ نَسِيَهَا ( أبو داود بَاب فِي كَنْسِ الْمَسْجِدِ- كِتَاب الصَّلَاةِ

என் உம்மத்தின் நன்மைகள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்ட போது அதில் சிறந்ததாக நான் கண்டது மஸ்ஜிதில் கிடக்கும் ஒரு அசுத்தத்தை அப்புறப் படுத்துவதாகும். அதேபோல் என் உம்மத்தினரின் தீமைகள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்ட போது அதில் கெட்டதாக நான் கண்டது குர்ஆனின் ஒரு சூராவை மனப்பாடம் செய்த பின் அதை மறந்து விடுவதாகும்.

நமது குழந்தைகளுக்கு அல்லாஹ் ரஸூலை சொல்லிக் கொடுக்கிற மதரஸாக்களை சமுதாயம் மதிக்க வேண்டும்

   குர்ஆன் மதரஸா உஸ்தாதுகளுக்கு தகுந்த கண்ணியத்தை தரவேண்டும்.

   பிள்ளைகளை சரியாகவும் அழகாகவும் அனுப்ப வேண்டும்

    இன்று என்ன ஓதினாயா என்று விசாரிக்க வேண்டும்,

    வீட்டில் கொஞ்ச நேரம் மதரஸா  பாடம் படிக்க வற்புறுத்த வேண்டும்.

    திருக்குர்ஆன், ஒழுக்க பண்புகள்,துஆக்கள், மார்க்க சட்டங்கள் என மதரஸாக்களில் கற்றுத்தரப்படும் அனைத்தும் ஒரு எக்ஸாம் வரை மட்டுமல்ல- வாழ்வு முழுமைக்கு தேவையானவை என்பதை பிள்ளைகளுக்கு புரிய வைப்பதும், தொடர்ந்து பழக்கப் படுத்துவதும் பெற்றோர்களின் கடமையாகும்

நம் பிள்ளைகளில் சிலரையேனும் அரபு மதரஸாக்களுக்கு அனுப்பி

ஆலிம், ஹாஃபிழ்களாக உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்

( إذا كان يوم القيامة يقول الله سبحانه للعابدين والمجاهدين: ادخلوا الجنة فيقول العلماء: بفضل علمنا تعبدوا وجاهدوا فيقول الله عز وجل: أنتم عندى كبعض ملائكتى اشفعوا تشفعوا فيشفعون ثم يدخلون الجنة )(احياء)                

   மறுமை நாளில் அல்லாஹ் வணக்கசாலிகளிடமும் போர் செய்த போராளிகளிடமும் நீங்கள் சுவனத்தில் நுழையுங்கள் என்று கூறுவான். அப்போது உலமாக்கள் நாங்கள் கற்றுக் கொடுத்ததன் விளைவாகத்தான் அவர்கள் வணக்கம் புரிந்தார்கள். போர் செய்தார்கள்.ஆனால் அவர்களை அனுப்பி விட்டு எங்களை நிறுத்தி விட்டாயே என ஏக்கத்துடன் கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் கூறுவானாம். நீங்கள் என்னிடம் சில பிரத்தியேகமான மலக்குமார்களைப் போன்றவர்கள். எனவே நீங்கள் தனியாக செல்லக் கூடாது. நீங்கள் சிபாரிசு செய்யுங்கள் என்று கூறுவான். அவர்கள் சிபாரிசு செய்வார்கள். அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்வான். பிறகு அவர்கள் சுவனம் செல்வார்கள்.

 

2. ஜும்ஆவின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர வேண்டும்

أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ وَأَبَا هُرَيْرَةَ حَدَّثَاهُ  أَنَّهُمَا سَمِعَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ عَلَى أَعْوَادِ مِنْبَرِهِ لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ عَنْ وَدْعِهِمْ الْجُمُعَاتِ أَوْ لَيَخْتِمَنَّ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ ثُمَّ لَيَكُونُنَّ مِنْ الْغَافِلِينَ (مسلم

ஜும்ஆவை விடுவதை தவிர்த்துக் கொள்ளட்டும் அவ்வாறு தவிர்த்துக் கொள்ளா விட்டால் அல்லாஹ் அவர்களின் உள்ளங்கள் மீது முத்திரையிட்டு விடுவான்.  அவர்கள் (திருந்தாத உள்ளம் கொண்டவர்களாக) பொடு போக்கானவர்களாக மாறி விடுவார்கள்.     

عَنْ أَبِي الْجَعْدِ الضَّمْرِيِّ وَكَانَ لَهُ صُحْبَةٌ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَرَكَ الْجُمُعَةَ ثَلَاثَ مَرَّاتٍ تَهَاوُنًا بِهَا طُبِعَ عَلَى قَلْبِهِ (ابن ماجة

ஜும்ஆவை தகுந்த காரணமின்றி  போடுபோக்காக எவர்  விட்டு விட்டாரோ  அவரது உள்ளம் சீல் வைக்கப்படும்.

 

குறிப்பு- முஸ்லிம்கள் நடத்தும் பள்ளிகளில் ஜும்ஆவுக்கான ஏற்படீடுகள் பெரும்பாலும் இருக்கும். ஆனால் மற்றவர்கள் நடத்தும் பள்ளிகளில் ஜும்ஆத் தொழுவதற்கு பெரும்பாலும் அனுமதிப்பதில்லை. எனவே பெறரோர் அல்லது சம்பந்தப்பட்ட  ஜமாஅத் ஸ்கூல் நிர்வாகத்திடம்  போசி  கால் மணி நேரமேனும் அனுமதி தரச் சொல்ல வேண்டும். பெரிய மாணவர்கள் மூலமாகவே பள்ளிகளில் ஜும்ஆ தொழுகை நடப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஹனஃபி மத்ஹபைப் பொருத்த வரை  நிர்பந்தமான சூழ்நிலையில் இமாம் அல்லாத மூன்று பேர் இருந்தாலே ஜும்ஆ நிறைவேறும்

ومن شرائطها : الجماعة وأقلهم عند أبي حنيفة  ثلاثة سوى الإمام  (محتصر القدوري

 

3. இந்தியாவில் நல்ல ஆட்சி அமைய மாணவர்கள் துஆச் செய்ய வேண்டும்.

பருவமடையாத பிள்ளைகளின் துஆவுக்கு அல்லாஹ்விடம் சிறந்த அங்கீகாரம் உண்டு

وَمَتَى كَانَتْ (أي  صلاة الجماعة)  فَرْضَ كِفَايَةٍ ( فَتَجِبُ ) إقَامَتُهَا ( بِحَيْثُ يَظْهَرُ ) بِهَا ( الشِّعَارُ ) أَيْ شِعَارُ الْجَمَاعَةِ فِي تِلْكَ الْمَحَلَّةِ بِإِقَامَتِهَا فِي كُلِّ مُؤَدَّاةٍ مِنْ الْخَمْسِ بِجَمَاعَةٍ ذُكُورٍ أَحْرَارٍ بَالِغِينَ فِيمَا يَظْهَرُ كَرَدِّ السَّلَامِ ، بِخِلَافِ صَلَاةِ الْجِنَازَةِ فَإِنَّ مَقْصُودَهَا الدُّعَاءُ وَهُوَ مِنْ الصَّغِيرِ أَقْرَبُ إلَى الْإِجَابَةِ ؛ لِأَنَّهُ لَا ذَنْبَ عَلَيْهِ (نهاية المحتاج)

சிறந்த ஒரு முஃமினின் துஆ தான் கொடுங்கோலர் ஹஜ்ஜாஜின் கொடுமைகளுக்கு முடிவு கட்டியது

ثم دعا الحجاج بآلات اللهو، فضربت بين يدي سعيد فبكى سعيد. فقال الحجاج: ويلك يا سعيد. فقال سعيد: الويل لمن زحزح عن الجنة، وأدخل النار. فقال: يا سعيد أي قتلة تريد أن أقتلك بها؟ قال: اختر لنفسك يا حجاج، فوالله لا تقتلني قتلة إلا قتلك الله مثلها في الآخرة. قال: فتريد أن أعفو عنك؟ قال: إن كان العفو من الله فنعم، وأما منك أنت فلا. فقال: اذهبوا به فاقتلوه. فلما أخرج من الباب ضحك، فأخبر الحجاج بذلك، فأمر برده فقال: ما أضحكك وقد بلغني أن لك أربعين سنة لم تضحك؟ قال: ضحكت عجباً من جراءتك على الله، ومن حلم الله عليك، فأمر بالنطع فبسط بين يديه، وقال: اقتلوه. فقال سعيد: " كل نفس ذائقة الموت " . ثم قال: " وجهت وجهي للذي فطر السموات والأرض حنيفاً مسلماً وما أنا من المشركين " . قال: وجهوه لغير القبلة. فقال سعيد: " فأيما تولوا فثم وجه الله " فقال: كبوه لوجهه. فقال: " منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى " فقال الحجاج: اذبحوه. فقال سعيد: أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمداً عبده ورسوله. ثم قال: اللهم لا تسلطه على أحد يقتله بعدي. فذبح على النطع رحمة الله تعالى عليه، فكان رأسه يقول بعد قطعه: لا إله إلا الله مراراً. وذلك في شعبان سنة خمس وتسعين. وكان عمر سعيد تسعاً وأربعين سنة،(حياة الحيوان– البداية والنهاية

قال عون ابن أبي شداد العبدي ... وبلغنا أن الحجاج عاش بعده خمسة عشر ليلة ووقع الاكلة في بطنه فدعا بالطبيب لينظر اليه فنظر اليه ثم دعا بلحم منتن فعلقه في خيط ثم أرسله في حلقه فتركها ساعة ثم استخرجها وقد لزق به من الدم فعلم أنه ليس بناج وبلغنا أنه كان ينادي بقية حياته مالي ولسعيد بن جبير كلما أردت النوم أخذ برجلي (حلية الاولياء)

 ஹஜ்ஜாஜ் கடைசியாக கொலை செய்தது ஸயீத் இப்னு ஜுபைர் ரழி அவர்களைத் தான். உன்னை எப்படிக் கொல்லட்டும் என ஸயீத் ரழி அவர்களிடமே அவன் கேட்க, அது உன் இஷ்டம். ஆனால் அல்லாஹ் மீது சத்தியமாக நீ என்னை எப்படிக் கொன்றாலும் அல்லாஹ் பதிலுக்கு உன்னை மறுமையில் கொல்லுவான்.  என்று கூறியபோது, நான் உன்னை மன்னிப்பதை விரும்புகிறாயா என்று கேட்க, மன்னிப்பு அல்லாஹ்விடமிருந்து என்றால் அது எனக்கு சந்தோஷம். உன் மன்னிப்பு எனக்குத் தேவையில்லை என்றார்கள். பிறகு ஹஜ்ஜாஜ் ஸயீத் ரழி அவர்களைக் கொல்ல உத்தரவிட்டான். ஸயீத் ரழி சிரித்தார்கள். உடனே ஹஜ்ஜாஜ் 40 வருடங்களாக சிரித்த தில்லை என்று உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். எதற்காக நீ இப்போது சிரித்தாய் என்று கேட்க, அல்லாஹ்வுக்கு எதிராக உனது திமிரையும், அல்லாஹ் உன்னை இன்னும் விட்டு வைத்திருப்பதையும் எண்ணி ஆச்சரியத்தால் சிரிக்கிறேன். என்றார்கள். பிறகு அவர்களைக் கொல்வதற்காக படுக்க வைக்கப்பட்ட போது ஒவ்வொரு ஆத்மாவும் மவ்த்தை அனுபவித்தே தீரும் என்றார்கள். அப்போது கிப்லாவின் பக்கம் முகம் இருந்தது. அந்த சந்தோஷத்தில் ஸயீத் ரழி வஜ்ஜஹ்து ஓதினார்கள். உடனே ஹஜ்ஜாஜ் அவரின் முகத்தை கிப்லாவை விட்டும் திருப்புங்கள் என்றான். அவ்வாறு திருப்ப ப்பட்ட போது   என்ற ஆயத்தை ஓதினார்கள். அவரைக் குப்புறப் படுக்க வையுங்கள் என்றான் ஹஜ்ஜாஜ். அப்போது  فأيما تولوا فثم وجه الله

என்ற ஆயத்தை ஸயீத் ரழி அவர்கள்  ஓதினார்கள். பின்பு ஸயீத் ரழி அவர்கள்  منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى "

ஷஹீதாக்கப்பட்டார்கள். அவர்களின் நாவு கடைசி நேரத்தில் கலிமாவை உச்சரித்த து மட்டுமன்றி, அவர்களின் தலையைத் துண்டாக்கிய பின்பும் அவர்களின் தலை மட்டும் கலிமாவை மொழிந்து கொண்டே இருந்தது.  இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் ஸயீத் ரழி அவர்கள் கடைசி நேரத்தில் யாஅல்லாஹ் எனக்குப் பின் வேறு யார் மீதும் இவனை நீ சாட்டி விடாதே என்று துஆ செய்தார்கள். அதை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். இதற்குப் பின் 15 இரவுகள் மட்டுமே ஹஜ்ஜாஜ் வாழ்ந்தான். இந்த 15 நாட்களும் தூங்கவே இல்லை. படுத்தால் என் காலைப் பிடித்து ஸயீத் இழுப்பது போன்றிருக்கிறது என்பான்

 

أَمْ مَنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَئِلَهٌ مَعَ اللَّهِ قَلِيلًا مَا تَذَكَّرُونَ (62)النمل

عن علي رض قال : قال رسول الله صلى الله عليه وسلم : الدعاء سلاح المؤمن و عماد الدين و نور السماوات و الأرض (حاكم

قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ ...(26) ال عمران

அல்லாஹ் அவன் நாடியவர்களை ஆட்சியில் அமர்த்துவான் அவன் நாடியவர்களை ஆட்சியில் இருந்து அப்புறப் படுத்துவான் என்ற நம்பிக்கை யாருடைய உள்ளத்தில் ஆழமாக இருக்குமோ அப்படிப்பட்ட ஒவ்வொருவரும் ஆட்சி மாற்றத்திற்காக அல்லாஹ்விடம் துஆச் செய்வதையே தன்னுடைய முக்கிய வேலையாக ஆக்கிக் கொள்வார். இந்த நம்பிக்கை யாரிடம் இல்லையோ அவர் தான் மற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து துஆவை  ஒதுக்கித் தள்ளுவார். நாம் இந்த நேரத்தில் எந்த அளவுக்கு அல்லாஹ்விடம் கெஞ்ச முடியுமோ அந்த அளவுக்கு கெஞ்சி, அழுது கண்ணீர் விட்டு மனமுருகி கையேந்துவதும் முக்கியமானதாகும்.

அநியாயக்காரனுக்கு அழிவு நிச்சயம் உண்டு

நபி ஸல் அவர்களின் எழுத்தாளனாக இருந்து பின்பு மதம் மாறிய ஒரு கிறிஸ்தவன் நான் எழுதிக் கொடுத்ததையே முஹம்மத் பேசுகிறார். வேறு ஒன்றும் அவருக்கு தெரியாது என்று கூறியதால் அவன் இறந்த பின் அவனது உடலை கப்ரு ஏற்கவில்லை.

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ رَجُلٌ نَصْرَانِيًّا فَأَسْلَمَ وَقَرَأَ الْبَقَرَةَ وَآلَ عِمْرَانَ فَكَانَ يَكْتُبُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَادَ نَصْرَانِيًّا فَكَانَ يَقُولُ مَا يَدْرِي مُحَمَّدٌ إِلَّا مَا كَتَبْتُ لَهُ فَأَمَاتَهُ اللَّهُ فَدَفَنُوهُ فَأَصْبَحَ وَقَدْ لَفَظَتْهُ 1الْأَرْضُ فَقَالُوا هَذَا فِعْلُ مُحَمَّدٍ وَأَصْحَابِهِ لَمَّا هَرَبَ مِنْهُمْ نَبَشُوا2 عَنْ صَاحِبِنَا فَأَلْقَوْهُ فَحَفَرُوا لَهُ فَأَعْمَقُوا3 فَأَصْبَحَ وَقَدْ لَفَظَتْهُ الْأَرْضُ فَقَالُوا هَذَا فِعْلُ مُحَمَّدٍ وَأَصْحَابِهِ نَبَشُوا عَنْ صَاحِبِنَا لَمَّا هَرَبَ مِنْهُمْ فَأَلْقَوْهُ فَحَفَرُوا لَهُ وَأَعْمَقُوا لَهُ فِي الْأَرْضِ مَا اسْتَطَاعُوا فَأَصْبَحَ وَقَدْ لَفَظَتْهُ الْأَرْضُ فَعَلِمُوا أَنَّهُ لَيْسَ مِنْ النَّاسِ فَأَلْقَوْهُ (بخاري) باب عَلاَمَاتِ النُّبُوَّةِ- كتاب المناقب

 

عن علي بن زيد بن جدعان قال :كنت جالسا إلى سعيد بن المسيب فقال : يا أبا الحسن مُرْ قائدَك فيَذْهَبُ بك فينظر إلى وجه هذا الرجل وإلى جسده فانْطلقَ فإذا وجهه وجه زنجي وجسده أبيض فقال سعيد : إني أتيت على هذا وهو يسب طلحة و الزبير و عليا عليهم السلام فنهيته فأبى فقلتُ : إن كنت كاذبا فسود الله وجهك فخرجت من وجهه قُرحة12 فاسود وجهه) (مجابو الدعوة من كتب إبن أبي الدنيا)

ஸயீத் இப்னு முஸய்யப் ரழி ஒருமுறை அபுல் ஹசன் என்பவரிடம் நீர் உம்முடைய நபரை அனுப்பி நான் சொல்லும் ஒரு மனிதனைப் போய் பார்க்கச் சொல்லுங்கள் என்றார். அவ்வாறே அவர் போய் பார்த்த போது அம்மனிதனின் உடல் முழுவதும் வெண்மையாகவும், முகம் மட்டும் மிகவும் கறுப்பாகவும் இருந்தது. அதிர்ச்சியுடன் அவர் திரும்பிய போது ஸயீத் ரழி கூறினார்கள். நான் ஒருமுறை இவனை சந்தித்த போது இவன் சஹாபாக்களை திட்டினான். நான் தடுத்தும் அவன் கேட்கவில்லை. அப்போது நான் யாஅல்லாஹ் இவன் பொய்யனாக இருந்தால்  இவன் முகத்தை கறுப்பாக்கி விடு என்றேன். அவ்வாறே நடந்து விட்டது  

மன்னர் வரும்போது ஒதுங்க முடியாத மூதாட்டியை காவலன் அடிக்க, யாஅல்லாஹ் அவன் கையை துண்டாக்கி விடு  என துஆ செய்த இறை நேசர்

عن الحسن بن أبي جعفر قال:مرَّ الأمير يوما فصاحوا: "الطريق"ففرج الناس وبقيت عجوز كبيرة لا تقدر أن تمشي فجاء بعض الجلاوذة فضربها بسوط ضربة فقال حبيب أبو محمد ( اللهم اقطع يده ) فما لبث إلا ثلاثا حتى مرَّ بالرجل قد أُخذ في سرقة فقُطِعت يدُه (مجابو الدعوة....)

 

படிப்பினை- யாருடைய சாப பிரார்த்தனைக்கும் ஆளாகி விடக் கூடாது என்ற படிப்பினையும் இதில் உண்டு 

வியாழன், 23 மே, 2024

மதீனாவின் நினைவிடங்களும் படிப்பினைகளும்

 

لَمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَى مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَنْ تَقُومَ فِيهِ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ (108) التوبة

மதீனாவின் சிறப்புகள்

عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُمِرْتُ بِقَرْيَةٍ تَأْكُلُ الْقُرَى يَقُولُونَ يَثْرِبُ وَهِيَ الْمَدِينَةُ تَنْفِي النَّاسَ كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ (بخاري)

நன்மையில் மற்ற அனைத்து ஊர்களையும் மிகைத்து விடுகின்ற ஒரு ஊருக்கு ஹிஜ்ரத்  செய்யும்படி நான் ஏவப்பட்டேன். மக்கள் அதை யஸ்ரிப் என்பார்கள் ஆனால் அது மதீனாவாகும். இரும்பில் உள்ள துருவை கொல்லன் வைத்திருக்கும் கருவி நீக்குவது போல மக்களை பாவத்தில் இருந்து நீக்கும்

(யஸ்ரிப் என்று அழைப்பதை நபி ஸல் விரும்பவில்லை என்றும் சில அறிவிப்புகளில் உள்ளது)

மக்காவுக்காக இப்றாஹீம்  அலைஹிஸ்ஸலாம் துஆ செய்தது போல் மதீனாவுக்காக நபி ஸல் செய்த துஆ

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّهُ قَالَ كَانَ النَّاسُ إِذَا رَأَوْا أَوَّلَ الثَّمَرِ جَاءُوا بِهِ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا أَخَذَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي ثَمَرِنَا وَبَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا وَبَارِكْ لَنَا فِي صَاعِنَا وَبَارِكْ لَنَا فِي مُدِّنَا اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ عَبْدُكَ وَخَلِيلُكَ وَنَبِيُّكَ وَإِنِّي عَبْدُكَ وَنَبِيُّكَ وَإِنَّهُ دَعَاكَ لِمَكَّةَ وَإِنِّي أَدْعُوكَ لِلْمَدِينَةِ بِمِثْلِ مَا دَعَاكَ لِمَكَّةَ وَمِثْلِهِ مَعَهُ قَالَ ثُمَّ يَدْعُو أَصْغَرَ وَلِيدٍ لَهُ فَيُعْطِيهِ ذَلِكَ الثَّمَرَ (مسلم)

சுருக்கம்- மதீனாவின் முதல் விளைச்சலை நபி ஸல் அவர்களிடம் மக்கள் கொண்டு வரும்போது அதை வாங்கி பரக்கத்துக்காக நபி ஸல் அவர்கள் துஆச் செய்வார்கள். மேலும் யாஅல்லாஹ்  நிச்சயமாக உன்னுடைய உற்ற நண்பர் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மக்காவுக்காக துஆச் செய்தார்கள். அதுபோன்று நான் மதீனாவுக்காக உன்னிடம் துஆச் செய்கிறேன். மக்காவுக்கு இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் துஆச் செய்த தை விட ஒரு மடங்கு அதிகமாக உன்னிடம் மதீனாவுக்காக துஆச் செய்கிறேன் என்று துஆச் செய்து விட்டு, பிறகு ஒரு சிறு குழந்தையை அழைத்து அந்த முதல் கனியை அக்குழந்தையிடம் தருவார்கள்.                                                            

وفي رواية فَيَقُولُ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا وَفِي ثِمَارِنَا وَفِي مُدِّنَا وَفِي صَاعِنَا بَرَكَةً مَعَ بَرَكَةٍ ثُمَّ يُعْطِيهِ أَصْغَرَ مَنْ يَحْضُرُهُ مِنْ الْوِلْدَانِ(مسلم)

பேரீத்தம்பழத்தின் முதல் கனியை பரக்கத்துக்காக துஆ செய்து சிறு குழந்தைக்கு முதலில் கொடுக்க காரணம்

( فيعطيه ) أي الولد ( ذلك الثمر ) قال الباجي : يحتمل أن يريد بذلك عظم الأجر في إدخال المسرة على من لا ذنب له لصغره ؛ فإن سروره به أعظم من سرور الكبير  وقال عصام الدين رحمه الله وقوله يدعو أصغر وليد ليستمد بسرور قلبه على إجابة دعائه (مرقاة)

பாவமறியா பச்சிளம் குழந்தைகள் அதை முதலில் உண்டு அதில் மகிழ்ச்சியைக் காணும்போது  அதனால் நாம் செய்த துஆ விரைவில் ஏற்றுக் கொள்ளப்படலாம் என்ற வழிகாட்டுதலுக்காக அவ்வாறு செய்தார்கள்

மதீனாவில் தட்ப, வெப்ப நிலைகளை சகித்துக் கொண்டு அங்கு வசிப்பவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் செய்த பிரத்தியேக துஆ

عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ قَدِمْنَا الْمَدِينَةَ وَهِيَ وَبِيئَةٌ (يعنى ذات وباء)فَاشْتَكَى أَبُو بَكْرٍ وَاشْتَكَى بِلَالٌ فَلَمَّا رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَكْوَى أَصْحَابِهِ قَالَ اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا الْمَدِينَةَ كَمَا حَبَّبْتَ مَكَّةَ أَوْ أَشَدَّ وَصَحِّحْهَا وَبَارِكْ لَنَا فِي صَاعِهَا وَمُدِّهَا وَحَوِّلْ حُمَّاهَا إِلَى الْجُحْفَةِ(مسلم

மதீனாவில் தட்ப, வெப்ப நிலைகள் மதீனாவுக்கு வந்த புதிதில் சில நபித் தோழர்களுக்கு முற்றிலும் ஒத்து வராமல் இருந்த து அப்போது நபி ஸல் அவர்கள் அதற்கும் துஆச் செய்தார்கள் யாஅல்லாஹ் மக்காவை எங்களுக்குப் பிரியமானதாக ஆக்கியதைப் போன்று  அதை விட அதிகமாக மதீனாவை எங்களுக்குப் பிரியமானதாக ஆக்கி வைப்பாயாக மேலும் இங்கிருக்கும் நோயை  யூதர்கள் அதிகம் வசிக்கும் ஜுஹ்ஃபாவுக்குத் திருப்புவாயாக என துஆச் செய்தார்கள்.

 (وَحَوِّلْ حُمَّاهَا إِلَى الْجُحْفَة )قَالَ الْخَطَّابِيُّ وَغَيْره : كَانَ سَاكِنُو الْجُحْفَة فِي تِلْكَ الْوَقْت يَهُودًا ، فَفِيهِ : دَلِيل لِلدُّعَاءِ عَلَى الْكُفَّار بِالْأَمْرَاضِ وَالْأَسْقَام وَالْهَلَاك . وَفِيهِ : الدُّعَاء لِلْمُسْلِمِينَ بِالصِّحَّةِ وَطِيب بِلَادهمْ وَالْبَرَكَة فِيهَا وَكَشْف الضُّرّ وَالشَّدَائِد عَنْهُمْ ، وَهَذَا مَذْهَب الْعُلَمَاء كَافَّة  وَفِي هَذَا الْحَدِيث : عَلَم مِنْ أَعْلَام نُبُوَّة نَبِيّنَا صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ ، فَإِنَّ الْجُحْفَة مِنْ يَوْمئِذٍ مُجْتَنَبَة ، وَلَا يَشْرَب أَحَد مِنْ مَائِهَا إِلَّا حُمَّ

இஸ்லாமிய விரோதிகள் இருக்குமிடத்தை நோய் தாக்குவதற்காக துஆச் செய்யலாம் என்ற படிப்பினையும் இதில் உண்டு. நபி ஸல் அவர்கள் துஆச் செய்த து போன்று ஜுஹ்ஃபாவை நோய் தாக்கியது அந்த ஊரின் நீரைக் குடித்தாலே அதனால் காய்ச்சலுக்கு உள்ளாக்கப்படுவார்கள்

மதீனாவாசிகளுக்கு தீங்கு செய்பவர்களைப் பற்றி நபி ஸல் அவர்கள் எச்சரித்த ஹதீஸ்

عن  سَعْد رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَكِيدُ أَهْلَ الْمَدِينَةِ أَحَدٌ إِلَّا انْمَاعَ كَمَا يَنْمَاعُ الْمِلْحُ فِي الْمَاءِ (بخاري)

عن بن خلاد وكان من أصحاب النبي صلى الله عليه و سلم أن رسول الله صلى الله عليه و سلم قال : من أخاف أهل المدينة أخافه الله وعليه لعنة الله والملائكة والناس أجمعين لا يقبل منه صرف ولا عدل (نسائ)

மதீனாவாசிகளுக்குத் தீங்கு செய்பவர்கள் தண்ணீரில் உப்பு கரைவது போன்று கரைந்து விடுவார்கள் அதாவது அழிந்து விடுவார்கள்.

மதீனாவாசிகளை அச்சுறுத்துபவர்கள் அல்லாஹ்வினால் அச்சுறுத்தப் படுவார்கள். அவர்கள் மீது அல்லாஹ், மலக்குகள், மற்றும் அனைத்துப் படைப்புகளின் சாபமும் அவர்கள் மீது ஏற்படும்

குழப்பங்களை விளைவிக்கும் தஜ்ஜால் எல்லா ஊர்களுக்கும் வருவான். மக்கா. மதீனாவில் மட்டும் அவனால் நுழைய முடியாது

عن أَنَس بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ مِنْ بَلَدٍ إِلَّا سَيَطَؤُهُ الدَّجَّالُ إِلَّا مَكَّةَ وَالْمَدِينَةَ لَيْسَ لَهُ مِنْ نِقَابِهَا نَقْبٌ إِلَّا عَلَيْهِ الْمَلَائِكَةُ صَافِّينَ يَحْرُسُونَهَا ثُمَّ تَرْجُفُ الْمَدِينَةُ بِأَهْلِهَا ثَلَاثَ رَجَفَاتٍ فَيُخْرِجُ اللَّهُ كُلَّ كَافِرٍ وَمُنَافِقٍ (بخاري)

மஸ்ஜிதுந் நபவீயை கட்டுவதற்காக இடம் வாங்கிய போது நபி ஸல் நடந்து கொண்ட விதம். அநாதைகளின் சொத்துக்களை அவர்களே நமக்கு அன்பளிப்பாக விட்டுக் கொடுத்தாலும் நாம் வற்புறுத்தி அவர்களுக்குரியதை தருவது நல்லது

إن النبي صلى الله عليه وسلم بعد ذلك سأل أسعد بن زرارة أن يبيعه تلك البقعة التى كان من جملتها ذلك المسجد ليجعلها مسجدا فإنها كانت فى يده ليَتِيْمَيْنِ فى حِجْرِه وهما سهل وسهيل (وقيل كانا فى حجر معاذ بن عفراء قال فى الأصل وهو الأشهر وقيل كانا فى حجر أبى أيوب الأنصارى قال بعضهم والظاهر أن الكل أى من اسعد ومعاذ وأبى أيوب كانوا يتكلمون لليتيمين لأنهم بنو عم فنسبا إلى حجر كلٍّ ) فدعا الغلامين فساومهما بالمربد فقالا نهبه لك يا رسول الله فأبى أن يقبله منهما هبة حتى ابتاعه منهما بعشرة دنانير وأمر أبا بكر أن يعطيهما ذلك (سيرة الحلبية)

மஸ்ஜிதுன் நபவியின் இடம் இரு அனாதைச் சிறுவர்களுக்குச் சொந்தமாக இருந்த து அவர்களின் பெயர்கள் சஹ்ல், சுஹைல் என்பதாகும். அவ்விருவரும் நபி ஸல் அவர்களுக்கு அன்பளிப்பாக தருவதாக கூறியும் நபி ஸல் அவர்கள் அதை ஏற்காமல் பத்து தீனார் கொடுத்து விட்டு வாங்கும்படி அபூபக்கர் ரழி அவர்களிடம் கூறினார்கள்.                                                             

மஸ்ஜிதுந் நபவியில் தொழுவதின் சிறப்பு

عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ قَالَ إِنَّ امْرَأَةً اشْتَكَتْ شَكْوَى فَقَالَتْ إِنْ شَفَانِي اللَّهُ لَأَخْرُجَنَّ فَلَأُصَلِّيَنَّ فِي بَيْتِ الْمَقْدِسِ فَبَرَأَتْ ثُمَّ تَجَهَّزَتْ تُرِيدُ الْخُرُوجَ فَجَاءَتْ مَيْمُونَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُسَلِّمُ عَلَيْهَا فَأَخْبَرَتْهَا ذَلِكَ فَقَالَتْ اجْلِسِي فَكُلِي مَا صَنَعْتِ وَصَلِّي فِي مَسْجِدِ الرَّسُولِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ صَلَاةٌ فِيهِ أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ مِنْ الْمَسَاجِدِ إِلَّا مَسْجِدَ الْكَعْبَةِ (مسلم)

நோயுற்ற ஒரு பெண்  தனக்கு  அல்லாஹ் நோயில் இருந்து குணமளித்தால் பைத்துல் முகத்தஸுக்குச் சென்று தொழுவதாக  நேர்ச்சை செய்தார். அல்லாஹ்வின் அருளால் அவரது நோய் குணமடைந்த து. அப்போது அவர் எண்ணியது போல் பைத்துல் முகத்தஸுக்குப் புறப்பட்டார் அப்போது நபி ஸல் அவர்களின் துணைவியார் மைமூனா ரழி அவர்கள் அந்தப் பெண்ணுக்கு ஸலாம் சொல்லி விசாரித்த போது அந்தப் பெண் தனது பயணத்தைப் பற்றிக் கூறினார். அப்போது அன்னை மைமூனா ரழி அவர்கள் அந்தப் பெண்ணை தடுத்து நிறுத்தி நீ இங்கேயே அதாவது மஸ்ஜிதுன் நபவியிலேயே உன்னுடைய நேர்ச்சையை நிறைவேற்று காரணம் மஸ்ஜிதுல் ஹராமுக்கு அடுத்து இந்த மஸ்ஜிதுன் நபவியிலே தொழுவது மற்ற மஸ்ஜித்களில் தொழப்படும் ஆயிரம் தொழுகைகளை விட சிறந்ததாகும்  

عَنْ قَزَعَةَ مَوْلَى زِيَادٍ قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ وَقَدْ غَزَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثِنْتَيْ عَشْرَةَ غَزْوَةً قَالَ أَرْبَعٌ سَمِعْتُهُنَّ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ قَالَ يُحَدِّثُهُنَّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَعْجَبْنَنِي وَآنَقْنَنِي أَنْ لَا تُسَافِرَ امْرَأَةٌ مَسِيرَةَ يَوْمَيْنِ لَيْسَ مَعَهَا زَوْجُهَا أَوْ ذُو مَحْرَمٍ وَلَا صَوْمَ يَوْمَيْنِ الْفِطْرِ وَالْأَضْحَى وَلَا صَلَاةَ بَعْدَ صَلَاتَيْنِ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ وَبَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ وَلَا تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ مَسْجِدِ الْحَرَامِ وَمَسْجِدِي وَمَسْجِدِ الْأَقْصَى (بخاري) عَنْ أَنَسِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ مَنْ صَلَّى فِي مَسْجِدِي أَرْبَعِينَ صَلَاةً لَا يَفُوتُهُ صَلَاةٌ كُتِبَتْ لَهُ بَرَاءَةٌ مِنْ النَّارِ وَنَجَاةٌ مِنْ الْعَذَابِ وَبَرِئَ مِنْ النِّفَاقِ (مسند احمد)

பூமியில் இருந்தாலும் சொர்க்கத்தின் ஒரு பகுதி என வர்ணிக்கப்பட்ட இடம் ரவ்ழா ஷரீஃப்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ الْمَازِنيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ (مسلم)

மதீனாவில் நபி ஸல் அவர்களின் கப்ரை ஜியாரத் செய்வதின் சிறப்பும்  அதன் ஒழுக்கங்களும்

عن عمر رض قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول:من زار قبري أو قال:من زارني كنتُ له شفيعا أو شهيدا(مسند أبي داود الطيالسي

எவர் என்னை ஜியாரத் செய்வாரோ அவருக்கு நான் மறுமையில் ஷஃபாஅத் செய்வேன். சாட்சியும் கூறுவேன்

آدَابُ زِيَارَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

أ - أَنْ يَنْوِيَ زِيَارَةَ الْمَسْجِدِ النَّبَوِيِّ أَيْضًا لِتَحْصِيل سُنَّةِ زِيَارَةِ الْمَسْجِدِ وَثَوَابِهَا لِمَا فِي الْحَدِيثِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَال : لاَ تُشَدُّ الرِّحَال إِلاَّ إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ  مَسْجِدِي هَذَا، وَمَسْجِدِ الْحَرَامِ ، وَمَسْجِدِ الأْقْصَى

ஜியாரத் என்ற சுன்னத்தை நிறைவேற்றும் நிய்யத்துடன் அதன் நற்கூலியை நாடி ஜியாரத் செய்வது

 ب - الاِغْتِسَال لِدُخُول الْمَدِينَةِ الْمُنَوَّرَةِ ، وَلُبْسِ أَنْظَفِ الثِّيَابِ ، وَاسْتِشْعَارُ شَرَفِ الْمَدِينَةِ لِتَشَرُّفِهَا بِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ .

குளித்துக் கொள்வது, சுத்தமான ஆடைகளை அணிவது, மதீனாவின் கண்ணியத்தை மனதில் பதிய வைப்பது

ج - الْمُوَاظَبَةُ عَلَى صَلاَةِ الْجَمَاعَةِ فِي الْمَسْجِدِ النَّبَوِيِّ مُدَّةَ الإْقَامَةِ فِي الْمَدِينَةِ ، عَمَلاً بِالْحَدِيثِ الثَّابِتِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَال : صَلاَةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلاَةٍ فِيمَا سِوَاهُ إِلاَّ الْمَسْجِدَ الْحَرَامَ

மதீனாவில் தங்கியிருக்கும் காலமெல்லாம் ஐங்காலத் தொழுகையை மஸ்ஜிதுன்நபவியில் ஜமாஅத்துடன் தொழுவது

.د - أَنْ يُتْبِعَ زِيَارَتَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِزِيَارَةِ صَاحِبَيْهِ شَيْخَيِ الصَّحَابَةِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا وَعَنْهُمْ جَمِيعًا ، أَبِي بَكْرٍ الصِّدِّيقِ ، وَقَبْرُهُ إِلَى الْيَمِينِ قَدْرَ ذِرَاعٍ ، وَعُمَرَ يَلِي قَبْرَ أَبِي بَكْرٍ إِلَى الْيَمِينِ أَيْضًا .( آدَابُ زِيَارَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ)

நபி ஸல் அவர்களின் கப்ரை ஜியாரத் செய்வதுடன் அவர்களின் இரு தோழர்களின் கப்ருகளையும் ஜியாரத் செய்ய வேண்டும்.

நபி ஸல் அவர்களை ஜியாரத் செய்யும்போது அவர்களை நேரடியாக சந்திப்பதைப் போன்ற உணர்வு ஒவ்வொருவரின் உள்ளத்திலும் வர வேண்டும் அவர்கள் நம் முன்னால் இருக்கிறார்கள் என்ற உணர்வுடன்

عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ وَفِيهِ قُبِضَ وَفِيهِ النَّفْخَةُ وَفِيهِ الصَّعْقَةُ فَأَكْثِرُوا عَلَيَّ مِنْ الصَّلَاةِ فِيهِ فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ تُعْرَضُ صَلَاتُنَا عَلَيْكَ وَقَدْ أَرِمْتَ يَقُولُونَ بَلِيتَ فَقَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَجْسَادَ الْأَنْبِيَاءِ (ابوداود

 நபி(ஸல்)அவர்கள் ஒருமுறை தோழர்களிடம் உங்களுடைய நாட்களில் சிறந்தது  ஜும்ஆ நாளாகும். அன்று தான் ஆதம் அலை படைக்கப்பட்டார்கள். அன்று தான் ஆதம் அலை வஃபாத்தானார்கள். அன்று தான் முதல் சூர் ஊதப்படும் என்று கூறி, அன்றைய தினம் அதிகமாக நீங்கள் என் மீது சலவாத்துக் கூறினால் அதை எனக்கு எடுத்துக் காட்டப்படுகிறது என்று கூறியபோது உடனே தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இறந்து மண்ணோடு மண்ணாக ஆன பிறகு எப்படி எங்களின் சலவாத்துக்கள் உங்களை வந்து சேரும்? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "நிச்சயமாக நபிமார்களின் உடலை மண் திண்பதை அல்லாஹ் தடை செய்துள்ளான்" என்று கூறினார்கள். (நூல்-அபூதாவூத்               )

ஹழ்ரத் அபூபக்கர் ரழி உமர் ரழி ஆகியோரின் உடல்களும் அழியாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது

عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ لَمَّا سَقَطَ عَلَيْهِمْ الْحَائِطُ فِي زَمَانِ الْوَلِيدِ بْنِ عَبْدِ الْمَلِكِ أَخَذُوا فِي بِنَائِهِ فَبَدَتْ لَهُمْ قَدَمٌ فَفَزِعُوا وَظَنُّوا أَنَّهَا قَدَمُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَا وَجَدُوا أَحَدًا يَعْلَمُ ذَلِكَ حَتَّى قَالَ لَهُمْ عُرْوَةُ لَا وَاللَّهِ مَا هِيَ قَدَمُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا هِيَ إِلَّا قَدَمُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ . (بخاري 1390

கருத்து- நபி (ஸல்) அவர்களுக்கு அடுத்து நீண்ட காலத்திற்குப்பின் வலீத் இப்னு அப்துல் மலிக் (என்பவர் கி.பி 705 முதல் 715 வரை ஆட்சி செய்தார். அவரது ஆட்சியில் மஸ்ஜிதுன் நபவியின் ஒரு சுவர் இடிந்து விழுந்த போது அதைப் புதுப்பித்துக் கட்டும் பணியில் மக்கள் ஈடுபட்டனர். அப்போது ஒரு பாதம் தட்டப்பட்டது. அது ண்டு மக்கள் திடுக்கிட்டனர். அது நபி (ஸல்) அவர்களின் பாதமாக இருக்கலாம் என்று பலா ஹதனார்கள். வேறு சிலர் அது உமர் (ரழி) அவர்களின் பாதமாக இருக்கலாம் என்று எண்ணினர். எதையும் யாராலும் உறுதி செய்ய முடியவில்லை. இறுதியாக (ஆயிஷா (ரழி) அவர்களுடைய சகோதரியின் மகன்) உர்வா (ரழி) அவர்கள்தான் அந்தப் பாதத்தைப் பார்த்து விட்டு இது நபி (ஸல்) அவர்களின் பாதம் தானே தவிர. உமர் (ரழி) அவர்களின் பாதம் அல்ல என்று உறுதி செய்தார்கள். (புகாரி :1390)

  படிப்பினை - நபி (ஸல்) மற்றும் உமர் (ரழி) இருவரின் பாதங்களும் அழியாமல் இருக்கும் என்ற நம்பிக்கையில் நபித் தோழர்கள் உறுதியாக இருந்தார்கள். எனினும் இப்போது தட்டுப்பட்டது யாருடைய பாதம் என்பதில் தான் கருத்து வேறுபாடு நிலவியது.                                                                 

மஸ்ஜிதே குபாவில் தொழுவதின் சிறப்பு.

لَمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَى مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَنْ تَقُومَ فِيهِ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ (108) التوبة

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِي مَسْجِدَ قُبَاءٍ رَاكِبًا وَمَاشِيًا. عَنْ نَافِعٍ فَيُصَلِّي فِيهِ رَكْعَتَيْنِ.رواه البخاري

جبل أُحَد: عَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ نَظَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى أُحُدٍ فَقَالَ إِنَّ أُحُدًا جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ (رواه مسلم)

உஹது ஷுஹதாக்களின் நினைவிடங்களை ஜியாரத் செய்யும்போதும் அவர்கள் நம் முன்னே ஹயாத்துடன் இருக்கிறார்கள் என்பதை மனதில் உறுதி கொண்டு ஜியாரத் செய்ய வேண்டும்.

عَنْ جَابِرٍ - رضى الله عنه - قَالَ لَمَّا حَضَرَ أُحُدٌ دَعَانِى أَبِى مِنَ اللَّيْلِ فَقَالَ مَا أُرَانِى إِلاَّ مَقْتُولاً فِى أَوَّلِ مَنْ يُقْتَلُ مِنْ أَصْحَابِ النَّبِىِّ - صلى الله عليه وسلم - ، وَإِنِّى لاَ أَتْرُكُ بَعْدِى أَعَزَّ عَلَىَّ مِنْكَ ، غَيْرَ نَفْسِ رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم - ، فَإِنَّ عَلَىَّ دَيْنًا فَاقْضِ ، وَاسْتَوْصِ بِأَخَوَاتِكَ خَيْرًا . فَأَصْبَحْنَا فَكَانَ أَوَّلَ قَتِيلٍ ، وَدُفِنَ مَعَهُ آخَرُ فِى قَبْرٍ ، ثُمَّ لَمْ تَطِبْ نَفْسِى أَنْ أَتْرُكَهُ مَعَ الآخَرِ فَاسْتَخْرَجْتُهُ بَعْدَ سِتَّةِ أَشْهُرٍ ، فَإِذَا هُوَ كَيَوْمِ وَضَعْتُهُ هُنَيَّةً غَيْرَ أُذُنِهِ .(بخاري

  உஹதுப் போர் நடக்கவிருந்த போது என் தந்தை அன்றிரவு என்னை அழைத்து நாளைய போரில் முதலில் நான் தான் கொல்லப்படுவேன் என்று கருதுகிறேன். மேலும் எனக்குப் பின் நான் விட்டுச் செல்பவைகளில் நபி (ஸல்) அவர்களைத் தவிரவுள்ள வேறு யாரையும் நான் மதிப்பிற்குரியவராக கருதவில்லை. என் மீது கடன் உள்ளது. அதை நீ அடைப்பதுடன் உன் சகோதரிகளிடம் நல்ல முறையில் நடந்து கொள் என்றார்கள். மறுநாள் போரில் அவர் கூறியது போலவே முதலில் அவர் தான் கொல்லப்பட்டார். என் தந்தையுடன் இன்னொருவரையும் சேர்த்து ஒரே கப்ரில் அடக்கம் செய்யப்பட்டது. என் தந்தையுடன் இன்னொருவர் ஒரே கப்ரில் அடக்கப்பட்டதை என் மனம் விரும்பவில்லை. எனவே அடக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பின் அவரை கப்ரில் இருந்து வெளியே எடுத்தேன். அப்போது அவர் சற்றுமுன் அடக்கம் செய்யப் பட்டவரைப் போன்று இருந்தார். அவரின் காதைத்தவிர உடம்பு அப்படியே இருந்தது. (புகாரி : 1351)

46 ஆண்டுகள் ஆகியும் அழியாத நபித்தோழர்களின் உடல்கள்

عن جابر ، قال : لما أراد معاوية أن يُجرىَ العَيْنَ بأُحُد ، نودى بالمدينة : من كان له قتيل فليأت . قال جابر : فأتيناهم فأخرجناهم رطابًا يتثنون ، فأصابت المسحاة أصبع رجل منهم فانفطرت دمًا . وقال سفيان : بلغنى أنه حمزة ابن عبد المطلب ، وهذا الوقت غير الوقت الذى أخرج فيه جابر أباه من قبره .  (شرح صحيح البخاري لابن بطال)

ஹஜ்ரத் ஜாபிர் (ரழி) கூறினார்கள். முஆவியா (ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் உஹதை ஒட்டி ஒரு நதியை ஓடச் செய்வதற்காக அவர்கள் முயற்சி செய்த போது உஹது ஷுஹதாக்களின் கப்ருகளைக் கடந்து அந்த நீர் ஓட வேண்டிய நிர்பந்தம் இருந்ததால் முஆவியா (ரழி) அவர்களின் ஆணைப்படி உஹது ஷுஹதாக்களை வேறு இடத்தில் அடக்கம் செய்ய அறிவிப்பு செய்யப்பட்டது. அப்போது உஹது ஷுஹதாக்களின் ஜனாஸாக்கள் (46 வருடங்கள் கடந்தும்) புத்தம் புதியதாக இருப்பதைக் கண்டோம். மேலும் மண்வெட்டி மூலம் நாங்கள் தோண்டியபோது ஒரு ஜனாஸாவின் விரல் மீது மண்வெட்டி பலமாக பட்டுவிட்டது,அப்போது அந்த விரலில் இருந்து இரத்தம் பீறிட்டு வர ஆரம்பித்த து, சுஃப்யான் ரஹ் அவர்கள் கூறினார்கள் எங்களுக்குக் கிடைத்த தகவலின் படி அந்த ஜனாஸா ஹழ்ரத் நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தை ஹம்ஜா(ரழி) அவர்களின் புனித உடலாகும். (நூல்-பைஹகீ மற்றும் புகாரி விரிவுரை)

ஜாபிர்(ரழி) அவர்களின் தந்தை அப்துல்லாஹ் (ரழி)அவர்களின் உடல் ஆறு மாதங்களுக்குப்பின் தோண்டி எடுக்கப் பட்ட போது எப்படி இருந்ததோ அதுபோல் 46 வருடங்களுக்குப் பின் மீண்டும் அவர்களின் உடல் அதேநிலையில் பெற்றுக் கொள்ளப்பட்டது. அதையும் ஜாபிர் (ரழி) அவர்கள் விபரிக்கிறார்கள்.                   .

قال جابر : فحفرنا عنهم فوجدت أبي في قبره كأنما هو نائم على هيئته ووجدنا جاره في قبره عمرو بن الجموح و يده على جرحه فأزيلت عنه فانبعث جرحه دما ! و يقال : إنه فاح من قبورهم مثل ريح المسك رضي الله عنهم أجمعين و ذلك بعد ست و أربعين سنة من يوم دفنوا   (البداية والنهاية-  سيرة ابن كثير

ஜாபிர் ரழி கூறினார்கள். நான் என் தந்தையின் உடலை இரண்டாவது தடவையாக தோண்டி எடுத்தேன். அப்போது என் தந்தை நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பவரைப் போன்று இருந்தார். அவர்களின் உடம்பில் கஸ்தூரியின் நறுமணம் வீசியது. இது அவர்கள் அடக்கம் செய்யப்பட்டு 46 வருடங்களுக்குப் பின்பு உள்ள செய்தியாகும்.

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ أَنَّهُ بَلَغَهُ أَنَّ عَمْرَو بْنَ الْجَمُوحِ وَعَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو الْأَنْصَارِيَّيْنِ ثُمَّ السَّلَمِيَّيْنِ كَانَا قَدْ حَفَرَ السَّيْلُ قَبْرَهُمَا وَكَانَ قَبْرُهُمَا مِمَّا يَلِي السَّيْلَ وَكَانَا فِي قَبْرٍ وَاحِدٍ وَهُمَا مِمَّنْ اسْتُشْهِدَ يَوْمَ أُحُدٍ فَحُفِرَ عَنْهُمَا لِيُغَيَّرَا مِنْ مَكَانِهِمَا فَوُجِدَا لَمْ يَتَغَيَّرَا كَأَنَّهُمَا مَاتَا بِالْأَمْسِ وَكَانَ أَحَدُهُمَا قَدْ جُرِحَ فَوَضَعَ يَدَهُ عَلَى جُرْحِهِ فَدُفِنَ وَهُوَ كَذَلِكَ فَأُمِيطَتْ يَدُهُ عَنْ جُرْحِهِ ثُمَّ أُرْسِلَتْ فَرَجَعَتْ كَمَا كَانَتْ وَكَانَ بَيْنَ أُحُدٍ وَبَيْنَ يَوْمَ حُفِرَ عَنْهُمَا سِتٌّ وَأَرْبَعُونَ سَنَةً  (مؤطا

 அப்துல்லாஹ் இப்னு அமர் (ரழி). அமிருப்னுல் ஜமூஹ் (ரழி) ஆகிய இருவரும் உஹதுப் போரில் கொல்லப்பட்டார்கள். அவ்விருவரும் ஒரு நதியின் ஓரத்தில் அடக்கம் செய்யப்பட்டார்கள். 46 வருடங்களுக்குப் பிறகு அவர்களின் உடல் நீரில் அடித்துச் செல்லப்படும் நிலை உருவான போது அவ்விருவரும் கனவில் தோன்றி எங்களிருவரின் உடல்களை எடுத்து வேறு இடத்தில் அடக்கம் செய்யுங்கள் என்று கூறியதற்கு இணங்க அவர்களின் உடல்களை எடுத்தபோது சற்றுமுன் இறந்தது போன்று அவர்களின் உடல் அப்படியே இருந்தது

 அவ்விருவரில் ஒருவரான அம்ருப்னுல் ஜமூஹ் (ரழி) போரில் தனது உடம்பின் எந்தப் பகுதியில் கடுமையாகத் தாக்கப்பட்டாரோ அந்த இடத்தின்மீது தன் கைகளை வைத்தவராக உயிர் நீத்திருந்தார். இப்போதும் அதே மாதிரி இருந்ததால் அவரது கைகளை அங்கிருந்து விடுவித்து நேராக ஆக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது, பொதுவாக ஒருவர் இறந்து சற்று நேரம் ஆகி விட்டாலே அவரது உடல் உறுப்புகள் விரைத்து விடும். எதுவும் மாற்றி அமைக்க முடியாது. ஆனால் இங்கு அதற்கு நேர் மாற்றமாக இந்த சஹாபியின் கைகளை அசைக்க முடிந்தது. அவ்விரு கைகளையும் எடுத்து நேராக்கி இரு புறமும் தொங்கவிட்டனர். ஆனால் சற்று நேரத்திலேயே அவரது கைகள் முன்பு இருந்த இடத்திற்கே திரும்பி சென்று விட்டது. அவ்வாறே மீண்டும் அடக்கம் செய்தனர். (நூல்-முஅத்தா 1010)

  நபிமார்கள், ஷுஹதாக்கள் மற்றும் அல்லாஹ் நாடிய நல்லோர்களின் உடல்கள் எத்தனை ஆயிரம் வருடங்கள் கடந்தாலும் அவைகள் அழியாது என்பதே சுன்னத் வல் ஜமாஅத் உடையவர்களின் உறுதியான கொள்கையாகும். இதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும் என்பதற்கு பின்வரும் உதாரணம் போதும். மதீனாவில் பகீஃ கப்ருஸ்தானில் பல ஆயிரம் நபித்தோழர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களின் கப்ருகள் இன்று வரை பாதுகாக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தில் வேறு யாரையும் அடக்கம் செய்ய இதுவரை எந்த ஆட்சியாளர் களுக்கும் துணிச்சல் இல்லை. காரணம் வேறு யாரையேனும் அடக்குவதற்காக அந்த கப்ருகளைத் தோண்டினால் அங்கு நபித்தோழர்களின் உடல்கள் புத்தம் புதியதாகப் பெற்றுக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் உண்டு

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...