لَمَسْجِدٌ أُسِّسَ
عَلَى التَّقْوَى مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَنْ تَقُومَ فِيهِ فِيهِ رِجَالٌ
يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ (108) التوبة
மதீனாவின் சிறப்புகள்
عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ أُمِرْتُ بِقَرْيَةٍ
تَأْكُلُ الْقُرَى يَقُولُونَ يَثْرِبُ وَهِيَ الْمَدِينَةُ تَنْفِي النَّاسَ
كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ (بخاري)
நன்மையில் மற்ற அனைத்து
ஊர்களையும் மிகைத்து விடுகின்ற ஒரு ஊருக்கு ஹிஜ்ரத் செய்யும்படி நான் ஏவப்பட்டேன். மக்கள் அதை
யஸ்ரிப் என்பார்கள் ஆனால் அது மதீனாவாகும். இரும்பில் உள்ள துருவை கொல்லன்
வைத்திருக்கும் கருவி நீக்குவது போல மக்களை பாவத்தில் இருந்து நீக்கும்
(யஸ்ரிப் என்று அழைப்பதை
நபி ஸல் விரும்பவில்லை என்றும் சில அறிவிப்புகளில் உள்ளது)
மக்காவுக்காக இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் துஆ செய்தது போல் மதீனாவுக்காக
நபி ஸல் செய்த துஆ
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّهُ قَالَ كَانَ النَّاسُ إِذَا رَأَوْا أَوَّلَ الثَّمَرِ جَاءُوا بِهِ إِلَى
النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا أَخَذَهُ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي ثَمَرِنَا
وَبَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا وَبَارِكْ لَنَا فِي صَاعِنَا وَبَارِكْ لَنَا
فِي مُدِّنَا اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ عَبْدُكَ وَخَلِيلُكَ وَنَبِيُّكَ
وَإِنِّي عَبْدُكَ وَنَبِيُّكَ وَإِنَّهُ دَعَاكَ لِمَكَّةَ وَإِنِّي أَدْعُوكَ
لِلْمَدِينَةِ بِمِثْلِ مَا دَعَاكَ لِمَكَّةَ وَمِثْلِهِ مَعَهُ قَالَ ثُمَّ
يَدْعُو أَصْغَرَ وَلِيدٍ لَهُ فَيُعْطِيهِ ذَلِكَ الثَّمَرَ (مسلم)
சுருக்கம்- மதீனாவின்
முதல் விளைச்சலை நபி ஸல் அவர்களிடம் மக்கள் கொண்டு வரும்போது அதை வாங்கி
பரக்கத்துக்காக நபி ஸல் அவர்கள் துஆச் செய்வார்கள். மேலும் யாஅல்லாஹ் நிச்சயமாக உன்னுடைய உற்ற நண்பர் இப்றாஹீம்
அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மக்காவுக்காக துஆச் செய்தார்கள். அதுபோன்று நான் மதீனாவுக்காக
உன்னிடம் துஆச் செய்கிறேன். மக்காவுக்கு இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் துஆச் செய்த தை
விட ஒரு மடங்கு அதிகமாக உன்னிடம் மதீனாவுக்காக துஆச் செய்கிறேன் என்று துஆச்
செய்து விட்டு, பிறகு ஒரு சிறு குழந்தையை அழைத்து அந்த முதல் கனியை
அக்குழந்தையிடம் தருவார்கள்.
وفي رواية فَيَقُولُ
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا وَفِي ثِمَارِنَا وَفِي مُدِّنَا وَفِي
صَاعِنَا بَرَكَةً مَعَ بَرَكَةٍ ثُمَّ يُعْطِيهِ أَصْغَرَ مَنْ يَحْضُرُهُ مِنْ
الْوِلْدَانِ(مسلم)
பேரீத்தம்பழத்தின் முதல் கனியை பரக்கத்துக்காக
துஆ செய்து சிறு குழந்தைக்கு முதலில் கொடுக்க காரணம்
( فيعطيه ) أي الولد ( ذلك الثمر ) قال
الباجي : يحتمل أن يريد بذلك عظم الأجر في إدخال المسرة على من لا ذنب له لصغره ؛
فإن سروره به أعظم من سرور الكبير وقال
عصام الدين رحمه الله وقوله يدعو أصغر وليد ليستمد بسرور قلبه على إجابة دعائه
(مرقاة)
பாவமறியா பச்சிளம்
குழந்தைகள் அதை முதலில் உண்டு அதில் மகிழ்ச்சியைக் காணும்போது அதனால் நாம் செய்த துஆ விரைவில் ஏற்றுக்
கொள்ளப்படலாம் என்ற வழிகாட்டுதலுக்காக அவ்வாறு செய்தார்கள்
மதீனாவில் தட்ப, வெப்ப நிலைகளை சகித்துக் கொண்டு
அங்கு வசிப்பவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் செய்த பிரத்தியேக துஆ
عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ قَدِمْنَا الْمَدِينَةَ وَهِيَ وَبِيئَةٌ (يعنى ذات
وباء)فَاشْتَكَى أَبُو بَكْرٍ وَاشْتَكَى بِلَالٌ فَلَمَّا رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَكْوَى أَصْحَابِهِ قَالَ اللَّهُمَّ حَبِّبْ
إِلَيْنَا الْمَدِينَةَ كَمَا حَبَّبْتَ مَكَّةَ أَوْ أَشَدَّ وَصَحِّحْهَا
وَبَارِكْ لَنَا فِي صَاعِهَا وَمُدِّهَا وَحَوِّلْ حُمَّاهَا إِلَى الْجُحْفَةِ(مسلم
மதீனாவில் தட்ப, வெப்ப
நிலைகள் மதீனாவுக்கு வந்த புதிதில் சில நபித் தோழர்களுக்கு முற்றிலும் ஒத்து
வராமல் இருந்த து அப்போது நபி ஸல் அவர்கள் அதற்கும் துஆச் செய்தார்கள் யாஅல்லாஹ்
மக்காவை எங்களுக்குப் பிரியமானதாக ஆக்கியதைப் போன்று அதை விட அதிகமாக மதீனாவை எங்களுக்குப்
பிரியமானதாக ஆக்கி வைப்பாயாக மேலும் இங்கிருக்கும் நோயை யூதர்கள் அதிகம் வசிக்கும் ஜுஹ்ஃபாவுக்குத்
திருப்புவாயாக என துஆச் செய்தார்கள்.
(وَحَوِّلْ
حُمَّاهَا إِلَى الْجُحْفَة )قَالَ الْخَطَّابِيُّ وَغَيْره : كَانَ سَاكِنُو
الْجُحْفَة فِي تِلْكَ الْوَقْت يَهُودًا ، فَفِيهِ : دَلِيل لِلدُّعَاءِ عَلَى
الْكُفَّار بِالْأَمْرَاضِ وَالْأَسْقَام وَالْهَلَاك . وَفِيهِ : الدُّعَاء
لِلْمُسْلِمِينَ بِالصِّحَّةِ وَطِيب بِلَادهمْ وَالْبَرَكَة فِيهَا وَكَشْف
الضُّرّ وَالشَّدَائِد عَنْهُمْ ، وَهَذَا مَذْهَب الْعُلَمَاء كَافَّة وَفِي هَذَا الْحَدِيث : عَلَم مِنْ أَعْلَام
نُبُوَّة نَبِيّنَا صَلَّى اللَّه عَلَيْهِ
وَسَلَّمَ ، فَإِنَّ
الْجُحْفَة مِنْ يَوْمئِذٍ مُجْتَنَبَة ، وَلَا يَشْرَب أَحَد مِنْ مَائِهَا
إِلَّا حُمَّ
இஸ்லாமிய விரோதிகள்
இருக்குமிடத்தை நோய் தாக்குவதற்காக துஆச் செய்யலாம் என்ற படிப்பினையும் இதில் உண்டு.
நபி ஸல் அவர்கள் துஆச் செய்த து போன்று ஜுஹ்ஃபாவை நோய் தாக்கியது அந்த ஊரின்
நீரைக் குடித்தாலே அதனால் காய்ச்சலுக்கு உள்ளாக்கப்படுவார்கள்
மதீனாவாசிகளுக்கு தீங்கு செய்பவர்களைப் பற்றி
நபி ஸல் அவர்கள் எச்சரித்த ஹதீஸ்
عن سَعْد رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ يَقُولُ لَا يَكِيدُ أَهْلَ الْمَدِينَةِ أَحَدٌ إِلَّا انْمَاعَ كَمَا يَنْمَاعُ الْمِلْحُ فِي الْمَاءِ (بخاري)
عن بن خلاد وكان من أصحاب النبي صلى الله عليه و
سلم أن رسول الله صلى الله عليه و سلم قال : من أخاف أهل المدينة أخافه الله وعليه لعنة الله والملائكة والناس
أجمعين لا يقبل منه صرف ولا عدل (نسائ)
மதீனாவாசிகளுக்குத்
தீங்கு செய்பவர்கள் தண்ணீரில் உப்பு கரைவது போன்று கரைந்து விடுவார்கள் அதாவது
அழிந்து விடுவார்கள்.
மதீனாவாசிகளை
அச்சுறுத்துபவர்கள் அல்லாஹ்வினால் அச்சுறுத்தப் படுவார்கள். அவர்கள் மீது அல்லாஹ்,
மலக்குகள், மற்றும் அனைத்துப் படைப்புகளின் சாபமும் அவர்கள் மீது ஏற்படும்
குழப்பங்களை விளைவிக்கும் தஜ்ஜால் எல்லா
ஊர்களுக்கும் வருவான். மக்கா. மதீனாவில் மட்டும் அவனால் நுழைய முடியாது
عن أَنَس بْنُ مَالِكٍ
رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ مِنْ بَلَدٍ إِلَّا سَيَطَؤُهُ
الدَّجَّالُ إِلَّا مَكَّةَ وَالْمَدِينَةَ لَيْسَ لَهُ مِنْ نِقَابِهَا نَقْبٌ
إِلَّا عَلَيْهِ الْمَلَائِكَةُ صَافِّينَ يَحْرُسُونَهَا ثُمَّ تَرْجُفُ
الْمَدِينَةُ بِأَهْلِهَا ثَلَاثَ رَجَفَاتٍ فَيُخْرِجُ اللَّهُ كُلَّ كَافِرٍ
وَمُنَافِقٍ (بخاري)
மஸ்ஜிதுந் நபவீயை கட்டுவதற்காக இடம் வாங்கிய
போது நபி ஸல் நடந்து கொண்ட விதம். அநாதைகளின் சொத்துக்களை அவர்களே நமக்கு
அன்பளிப்பாக விட்டுக் கொடுத்தாலும் நாம் வற்புறுத்தி அவர்களுக்குரியதை தருவது
நல்லது
إن النبي صلى الله عليه وسلم بعد ذلك سأل أسعد بن زرارة أن يبيعه تلك البقعة التى كان من جملتها
ذلك المسجد ليجعلها مسجدا فإنها كانت فى يده ليَتِيْمَيْنِ فى حِجْرِه وهما سهل
وسهيل (وقيل كانا فى حجر معاذ بن
عفراء قال فى الأصل وهو الأشهر وقيل كانا فى حجر أبى أيوب الأنصارى قال بعضهم
والظاهر أن الكل أى من اسعد ومعاذ وأبى أيوب كانوا يتكلمون لليتيمين لأنهم بنو عم
فنسبا إلى حجر كلٍّ )
فدعا الغلامين فساومهما بالمربد فقالا نهبه لك يا رسول الله فأبى أن يقبله منهما
هبة حتى ابتاعه منهما بعشرة دنانير وأمر أبا بكر أن يعطيهما ذلك (سيرة
الحلبية)
மஸ்ஜிதுன் நபவியின்
இடம் இரு அனாதைச் சிறுவர்களுக்குச் சொந்தமாக இருந்த து அவர்களின் பெயர்கள் சஹ்ல்,
சுஹைல் என்பதாகும். அவ்விருவரும் நபி ஸல் அவர்களுக்கு அன்பளிப்பாக தருவதாக கூறியும்
நபி ஸல் அவர்கள் அதை ஏற்காமல் பத்து தீனார் கொடுத்து விட்டு வாங்கும்படி அபூபக்கர்
ரழி அவர்களிடம் கூறினார்கள்.
மஸ்ஜிதுந் நபவியில் தொழுவதின் சிறப்பு
عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ قَالَ إِنَّ امْرَأَةً
اشْتَكَتْ شَكْوَى فَقَالَتْ إِنْ شَفَانِي اللَّهُ لَأَخْرُجَنَّ
فَلَأُصَلِّيَنَّ فِي بَيْتِ الْمَقْدِسِ فَبَرَأَتْ ثُمَّ تَجَهَّزَتْ تُرِيدُ
الْخُرُوجَ فَجَاءَتْ مَيْمُونَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ تُسَلِّمُ عَلَيْهَا فَأَخْبَرَتْهَا ذَلِكَ فَقَالَتْ اجْلِسِي فَكُلِي
مَا صَنَعْتِ وَصَلِّي فِي مَسْجِدِ الرَّسُولِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ صَلَاةٌ فِيهِ أَفْضَلُ مِنْ أَلْفِ
صَلَاةٍ فِيمَا سِوَاهُ مِنْ الْمَسَاجِدِ إِلَّا مَسْجِدَ الْكَعْبَةِ (مسلم)
நோயுற்ற ஒரு பெண் தனக்கு
அல்லாஹ் நோயில் இருந்து குணமளித்தால் பைத்துல் முகத்தஸுக்குச் சென்று
தொழுவதாக நேர்ச்சை செய்தார். அல்லாஹ்வின்
அருளால் அவரது நோய் குணமடைந்த து. அப்போது அவர் எண்ணியது போல் பைத்துல்
முகத்தஸுக்குப் புறப்பட்டார் அப்போது நபி ஸல் அவர்களின் துணைவியார் மைமூனா ரழி
அவர்கள் அந்தப் பெண்ணுக்கு ஸலாம் சொல்லி விசாரித்த போது அந்தப் பெண் தனது
பயணத்தைப் பற்றிக் கூறினார். அப்போது அன்னை மைமூனா ரழி அவர்கள் அந்தப் பெண்ணை
தடுத்து நிறுத்தி நீ இங்கேயே அதாவது மஸ்ஜிதுன் நபவியிலேயே உன்னுடைய நேர்ச்சையை
நிறைவேற்று காரணம் மஸ்ஜிதுல் ஹராமுக்கு அடுத்து இந்த மஸ்ஜிதுன் நபவியிலே தொழுவது
மற்ற மஸ்ஜித்களில் தொழப்படும் ஆயிரம் தொழுகைகளை விட சிறந்ததாகும்
عَنْ قَزَعَةَ مَوْلَى زِيَادٍ قَالَ سَمِعْتُ
أَبَا سَعِيدٍ وَقَدْ غَزَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
ثِنْتَيْ عَشْرَةَ غَزْوَةً قَالَ أَرْبَعٌ سَمِعْتُهُنَّ مِنْ رَسُولِ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ قَالَ يُحَدِّثُهُنَّ عَنْ النَّبِيِّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَعْجَبْنَنِي وَآنَقْنَنِي أَنْ لَا
تُسَافِرَ امْرَأَةٌ مَسِيرَةَ يَوْمَيْنِ لَيْسَ مَعَهَا زَوْجُهَا أَوْ ذُو مَحْرَمٍ
وَلَا صَوْمَ يَوْمَيْنِ الْفِطْرِ وَالْأَضْحَى وَلَا صَلَاةَ بَعْدَ صَلَاتَيْنِ
بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ وَبَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ
الشَّمْسُ وَلَا تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ مَسْجِدِ
الْحَرَامِ وَمَسْجِدِي وَمَسْجِدِ الْأَقْصَى (بخاري) عَنْ أَنَسِ عَنْ
النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ مَنْ صَلَّى فِي
مَسْجِدِي أَرْبَعِينَ صَلَاةً لَا يَفُوتُهُ صَلَاةٌ كُتِبَتْ لَهُ بَرَاءَةٌ مِنْ النَّارِ وَنَجَاةٌ مِنْ الْعَذَابِ وَبَرِئَ مِنْ
النِّفَاقِ (مسند احمد)
பூமியில் இருந்தாலும் சொர்க்கத்தின் ஒரு பகுதி
என வர்ணிக்கப்பட்ட இடம் ரவ்ழா ஷரீஃப்
عَنْ عَبْدِ اللَّهِ
بْنِ زَيْدٍ الْمَازِنيِّ أَنَّ رَسُولَ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ
مِنْ رِيَاضِ الْجَنَّةِ (مسلم)
மதீனாவில் நபி ஸல் அவர்களின் கப்ரை ஜியாரத்
செய்வதின் சிறப்பும் அதன் ஒழுக்கங்களும்
عن عمر رض قال سمعت رسول الله صلى
الله عليه وسلم يقول:من زار قبري أو قال:من زارني كنتُ له شفيعا أو شهيدا(مسند أبي داود الطيالسي
எவர்
என்னை ஜியாரத் செய்வாரோ அவருக்கு நான் மறுமையில் ஷஃபாஅத் செய்வேன். சாட்சியும்
கூறுவேன்
آدَابُ زِيَارَةِ النَّبِيِّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
أ - أَنْ يَنْوِيَ زِيَارَةَ الْمَسْجِدِ النَّبَوِيِّ أَيْضًا
لِتَحْصِيل سُنَّةِ زِيَارَةِ الْمَسْجِدِ وَثَوَابِهَا لِمَا فِي الْحَدِيثِ عَنْ
أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَال :
لاَ تُشَدُّ الرِّحَال إِلاَّ إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ مَسْجِدِي هَذَا، وَمَسْجِدِ الْحَرَامِ ،
وَمَسْجِدِ الأْقْصَى
ஜியாரத் என்ற சுன்னத்தை
நிறைவேற்றும் நிய்யத்துடன் அதன் நற்கூலியை நாடி ஜியாரத் செய்வது
ب - الاِغْتِسَال لِدُخُول الْمَدِينَةِ
الْمُنَوَّرَةِ ، وَلُبْسِ أَنْظَفِ الثِّيَابِ ، وَاسْتِشْعَارُ شَرَفِ
الْمَدِينَةِ لِتَشَرُّفِهَا بِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ .
குளித்துக்
கொள்வது, சுத்தமான ஆடைகளை அணிவது, மதீனாவின் கண்ணியத்தை மனதில் பதிய வைப்பது
ج - الْمُوَاظَبَةُ عَلَى صَلاَةِ الْجَمَاعَةِ فِي
الْمَسْجِدِ النَّبَوِيِّ مُدَّةَ الإْقَامَةِ فِي الْمَدِينَةِ ، عَمَلاً
بِالْحَدِيثِ الثَّابِتِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ
النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَال : صَلاَةٌ فِي مَسْجِدِي هَذَا
خَيْرٌ مِنْ أَلْفِ صَلاَةٍ فِيمَا سِوَاهُ إِلاَّ الْمَسْجِدَ الْحَرَامَ
மதீனாவில்
தங்கியிருக்கும் காலமெல்லாம் ஐங்காலத் தொழுகையை மஸ்ஜிதுன்நபவியில் ஜமாஅத்துடன்
தொழுவது
.د - أَنْ يُتْبِعَ زِيَارَتَهُ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِزِيَارَةِ صَاحِبَيْهِ شَيْخَيِ الصَّحَابَةِ رَضِيَ
اللَّهُ عَنْهُمَا وَعَنْهُمْ جَمِيعًا ، أَبِي بَكْرٍ الصِّدِّيقِ ، وَقَبْرُهُ
إِلَى الْيَمِينِ قَدْرَ ذِرَاعٍ ، وَعُمَرَ يَلِي قَبْرَ أَبِي بَكْرٍ إِلَى
الْيَمِينِ أَيْضًا .(
آدَابُ زِيَارَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ)
நபி ஸல் அவர்களின்
கப்ரை ஜியாரத் செய்வதுடன் அவர்களின் இரு தோழர்களின் கப்ருகளையும் ஜியாரத் செய்ய
வேண்டும்.
நபி ஸல் அவர்களை ஜியாரத்
செய்யும்போது அவர்களை நேரடியாக சந்திப்பதைப் போன்ற உணர்வு ஒவ்வொருவரின்
உள்ளத்திலும் வர வேண்டும் அவர்கள் நம் முன்னால் இருக்கிறார்கள் என்ற உணர்வுடன்
عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ قَالَ قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ أَفْضَلِ
أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ وَفِيهِ قُبِضَ وَفِيهِ
النَّفْخَةُ وَفِيهِ الصَّعْقَةُ فَأَكْثِرُوا عَلَيَّ مِنْ الصَّلَاةِ فِيهِ
فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ
وَكَيْفَ تُعْرَضُ صَلَاتُنَا عَلَيْكَ وَقَدْ أَرِمْتَ يَقُولُونَ بَلِيتَ فَقَالَ إِنَّ اللَّهَ
عَزَّ وَجَلَّ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَجْسَادَ الْأَنْبِيَاءِ (ابوداود
நபி(ஸல்)அவர்கள் ஒருமுறை
தோழர்களிடம் உங்களுடைய நாட்களில் சிறந்தது
ஜும்ஆ நாளாகும். அன்று தான் ஆதம் அலை படைக்கப்பட்டார்கள். அன்று தான் ஆதம்
அலை வஃபாத்தானார்கள். அன்று தான் முதல் சூர் ஊதப்படும் என்று கூறி, அன்றைய தினம்
அதிகமாக நீங்கள் என் மீது சலவாத்துக் கூறினால் அதை எனக்கு எடுத்துக் காட்டப்படுகிறது
என்று கூறியபோது உடனே தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இறந்து மண்ணோடு மண்ணாக
ஆன பிறகு எப்படி எங்களின் சலவாத்துக்கள் உங்களை வந்து சேரும்? என்று
கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "நிச்சயமாக நபிமார்களின் உடலை மண்
திண்பதை அல்லாஹ் தடை செய்துள்ளான்" என்று கூறினார்கள். (நூல்-அபூதாவூத் )
ஹழ்ரத்
அபூபக்கர் ரழி உமர் ரழி ஆகியோரின் உடல்களும் அழியாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது
عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ
لَمَّا سَقَطَ عَلَيْهِمْ الْحَائِطُ فِي زَمَانِ الْوَلِيدِ بْنِ عَبْدِ
الْمَلِكِ أَخَذُوا فِي بِنَائِهِ فَبَدَتْ لَهُمْ قَدَمٌ فَفَزِعُوا وَظَنُّوا
أَنَّهَا قَدَمُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَا وَجَدُوا
أَحَدًا يَعْلَمُ ذَلِكَ حَتَّى قَالَ لَهُمْ عُرْوَةُ لَا وَاللَّهِ مَا هِيَ
قَدَمُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا هِيَ إِلَّا قَدَمُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ . (بخاري 1390
கருத்து-
நபி (ஸல்) அவர்களுக்கு அடுத்து நீண்ட காலத்திற்குப்பின் வலீத் இப்னு அப்துல் மலிக்
(என்பவர் கி.பி 705 முதல் 715 வரை ஆட்சி செய்தார்.
அவரது ஆட்சியில் மஸ்ஜிதுன் நபவியின் ஒரு சுவர் இடிந்து விழுந்த போது அதைப்
புதுப்பித்துக் கட்டும் பணியில் மக்கள் ஈடுபட்டனர். அப்போது ஒரு பாதம்
தட்டப்பட்டது. அது ண்டு மக்கள் திடுக்கிட்டனர். அது நபி (ஸல்) அவர்களின் பாதமாக
இருக்கலாம் என்று பலா ஹதனார்கள். வேறு சிலர் அது உமர் (ரழி) அவர்களின் பாதமாக
இருக்கலாம் என்று எண்ணினர். எதையும் யாராலும் உறுதி செய்ய முடியவில்லை. இறுதியாக
(ஆயிஷா (ரழி) அவர்களுடைய சகோதரியின் மகன்) உர்வா (ரழி) அவர்கள்தான் அந்தப்
பாதத்தைப் பார்த்து விட்டு இது நபி (ஸல்) அவர்களின் பாதம் தானே தவிர. உமர் (ரழி)
அவர்களின் பாதம் அல்ல என்று உறுதி செய்தார்கள். (புகாரி :1390)
படிப்பினை - நபி (ஸல்) மற்றும் உமர் (ரழி)
இருவரின் பாதங்களும் அழியாமல் இருக்கும் என்ற நம்பிக்கையில் நபித் தோழர்கள்
உறுதியாக இருந்தார்கள். எனினும் இப்போது தட்டுப்பட்டது யாருடைய பாதம் என்பதில்
தான் கருத்து வேறுபாடு நிலவியது.
மஸ்ஜிதே குபாவில்
தொழுவதின் சிறப்பு.
لَمَسْجِدٌ أُسِّسَ
عَلَى التَّقْوَى مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَنْ تَقُومَ فِيهِ فِيهِ رِجَالٌ
يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ (108) التوبة
عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ
كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ يَأْتِي
مَسْجِدَ قُبَاءٍ رَاكِبًا وَمَاشِيًا. عَنْ نَافِعٍ فَيُصَلِّي فِيهِ
رَكْعَتَيْنِ.رواه البخاري
جبل أُحَد: عَنْ أَنَسٍ رضي الله عنه
قَالَ نَظَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى أُحُدٍ فَقَالَ إِنَّ أُحُدًا
جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ (رواه مسلم)
உஹது
ஷுஹதாக்களின் நினைவிடங்களை ஜியாரத் செய்யும்போதும் அவர்கள் நம் முன்னே ஹயாத்துடன்
இருக்கிறார்கள் என்பதை மனதில் உறுதி கொண்டு ஜியாரத் செய்ய வேண்டும்.
عَنْ جَابِرٍ - رضى الله عنه - قَالَ لَمَّا
حَضَرَ أُحُدٌ دَعَانِى أَبِى مِنَ اللَّيْلِ فَقَالَ مَا أُرَانِى إِلاَّ
مَقْتُولاً فِى أَوَّلِ مَنْ يُقْتَلُ مِنْ أَصْحَابِ النَّبِىِّ - صلى الله عليه
وسلم - ، وَإِنِّى لاَ أَتْرُكُ بَعْدِى أَعَزَّ عَلَىَّ مِنْكَ ، غَيْرَ نَفْسِ
رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم - ، فَإِنَّ عَلَىَّ دَيْنًا فَاقْضِ ،
وَاسْتَوْصِ بِأَخَوَاتِكَ خَيْرًا . فَأَصْبَحْنَا فَكَانَ أَوَّلَ قَتِيلٍ ،
وَدُفِنَ مَعَهُ آخَرُ فِى قَبْرٍ ، ثُمَّ لَمْ تَطِبْ نَفْسِى أَنْ أَتْرُكَهُ
مَعَ الآخَرِ فَاسْتَخْرَجْتُهُ بَعْدَ سِتَّةِ أَشْهُرٍ ، فَإِذَا هُوَ كَيَوْمِ وَضَعْتُهُ
هُنَيَّةً غَيْرَ أُذُنِهِ .(بخاري
உஹதுப் போர் நடக்கவிருந்த போது என் தந்தை
அன்றிரவு என்னை அழைத்து நாளைய போரில் முதலில் நான் தான் கொல்லப்படுவேன் என்று
கருதுகிறேன். மேலும் எனக்குப் பின் நான் விட்டுச் செல்பவைகளில் நபி (ஸல்)
அவர்களைத் தவிரவுள்ள வேறு யாரையும் நான் மதிப்பிற்குரியவராக கருதவில்லை. என் மீது
கடன் உள்ளது. அதை நீ அடைப்பதுடன் உன் சகோதரிகளிடம் நல்ல முறையில் நடந்து கொள்
என்றார்கள். மறுநாள் போரில் அவர் கூறியது போலவே முதலில் அவர் தான் கொல்லப்பட்டார்.
என் தந்தையுடன் இன்னொருவரையும் சேர்த்து ஒரே கப்ரில் அடக்கம் செய்யப்பட்டது. என்
தந்தையுடன் இன்னொருவர் ஒரே கப்ரில் அடக்கப்பட்டதை என் மனம் விரும்பவில்லை. எனவே அடக்கப்பட்ட
ஆறு மாதங்களுக்குப் பின் அவரை கப்ரில் இருந்து வெளியே எடுத்தேன். அப்போது அவர்
சற்றுமுன் அடக்கம் செய்யப் பட்டவரைப் போன்று இருந்தார். அவரின் காதைத்தவிர உடம்பு
அப்படியே இருந்தது. (புகாரி : 1351)
46 ஆண்டுகள் ஆகியும் அழியாத நபித்தோழர்களின்
உடல்கள்
عن جابر ، قال : لما
أراد معاوية أن يُجرىَ العَيْنَ بأُحُد ، نودى بالمدينة : من كان له قتيل فليأت .
قال جابر : فأتيناهم فأخرجناهم رطابًا يتثنون ، فأصابت المسحاة أصبع رجل منهم
فانفطرت دمًا . وقال سفيان : بلغنى أنه حمزة ابن عبد المطلب ، وهذا الوقت غير
الوقت الذى أخرج فيه جابر أباه من قبره .
(شرح صحيح البخاري لابن بطال)
ஹஜ்ரத்
ஜாபிர் (ரழி) கூறினார்கள். முஆவியா (ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் உஹதை ஒட்டி
ஒரு நதியை ஓடச் செய்வதற்காக அவர்கள் முயற்சி செய்த போது உஹது ஷுஹதாக்களின்
கப்ருகளைக் கடந்து அந்த நீர் ஓட வேண்டிய நிர்பந்தம் இருந்ததால் முஆவியா (ரழி)
அவர்களின் ஆணைப்படி உஹது ஷுஹதாக்களை வேறு இடத்தில் அடக்கம் செய்ய அறிவிப்பு
செய்யப்பட்டது. அப்போது உஹது ஷுஹதாக்களின் ஜனாஸாக்கள் (46 வருடங்கள்
கடந்தும்) புத்தம் புதியதாக இருப்பதைக் கண்டோம். மேலும்
மண்வெட்டி மூலம் நாங்கள் தோண்டியபோது ஒரு ஜனாஸாவின் விரல் மீது மண்வெட்டி பலமாக பட்டுவிட்டது,அப்போது அந்த விரலில்
இருந்து இரத்தம் பீறிட்டு வர ஆரம்பித்த து, சுஃப்யான் ரஹ் அவர்கள் கூறினார்கள்
எங்களுக்குக் கிடைத்த தகவலின் படி அந்த ஜனாஸா ஹழ்ரத் நபி (ஸல்) அவர்களின் சிறிய
தந்தை ஹம்ஜா(ரழி) அவர்களின் புனித உடலாகும். (நூல்-பைஹகீ மற்றும்
புகாரி விரிவுரை)
ஜாபிர்(ரழி)
அவர்களின் தந்தை அப்துல்லாஹ் (ரழி)அவர்களின் உடல் ஆறு மாதங்களுக்குப்பின் தோண்டி
எடுக்கப் பட்ட போது எப்படி இருந்ததோ அதுபோல் 46 வருடங்களுக்குப் பின்
மீண்டும் அவர்களின் உடல் அதேநிலையில் பெற்றுக் கொள்ளப்பட்டது. அதையும் ஜாபிர்
(ரழி) அவர்கள் விபரிக்கிறார்கள். .
قال جابر : فحفرنا
عنهم فوجدت أبي في قبره كأنما هو نائم على هيئته ووجدنا جاره في قبره عمرو بن
الجموح و يده على جرحه فأزيلت عنه فانبعث جرحه دما ! و يقال : إنه فاح من قبورهم
مثل ريح المسك رضي الله عنهم أجمعين و ذلك بعد ست و أربعين سنة من يوم دفنوا (البداية والنهاية- سيرة ابن كثير
ஜாபிர்
ரழி கூறினார்கள். நான் என் தந்தையின் உடலை இரண்டாவது தடவையாக தோண்டி எடுத்தேன்.
அப்போது என் தந்தை நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பவரைப் போன்று இருந்தார். அவர்களின்
உடம்பில் கஸ்தூரியின் நறுமணம் வீசியது. இது அவர்கள் அடக்கம் செய்யப்பட்டு 46 வருடங்களுக்குப்
பின்பு உள்ள செய்தியாகும்.
عَنْ عَبْدِ
الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ أَنَّهُ بَلَغَهُ أَنَّ عَمْرَو بْنَ
الْجَمُوحِ وَعَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو الْأَنْصَارِيَّيْنِ ثُمَّ
السَّلَمِيَّيْنِ كَانَا قَدْ حَفَرَ السَّيْلُ قَبْرَهُمَا وَكَانَ قَبْرُهُمَا مِمَّا
يَلِي السَّيْلَ وَكَانَا فِي قَبْرٍ وَاحِدٍ وَهُمَا مِمَّنْ اسْتُشْهِدَ يَوْمَ
أُحُدٍ فَحُفِرَ عَنْهُمَا لِيُغَيَّرَا مِنْ مَكَانِهِمَا فَوُجِدَا لَمْ
يَتَغَيَّرَا كَأَنَّهُمَا مَاتَا بِالْأَمْسِ وَكَانَ أَحَدُهُمَا قَدْ جُرِحَ
فَوَضَعَ يَدَهُ عَلَى جُرْحِهِ فَدُفِنَ وَهُوَ كَذَلِكَ فَأُمِيطَتْ يَدُهُ عَنْ
جُرْحِهِ ثُمَّ أُرْسِلَتْ فَرَجَعَتْ كَمَا كَانَتْ وَكَانَ بَيْنَ أُحُدٍ
وَبَيْنَ يَوْمَ حُفِرَ عَنْهُمَا سِتٌّ وَأَرْبَعُونَ سَنَةً (مؤطا
அப்துல்லாஹ் இப்னு அமர்
(ரழி). அமிருப்னுல் ஜமூஹ் (ரழி) ஆகிய இருவரும் உஹதுப் போரில் கொல்லப்பட்டார்கள்.
அவ்விருவரும் ஒரு நதியின் ஓரத்தில் அடக்கம் செய்யப்பட்டார்கள். 46 வருடங்களுக்குப்
பிறகு அவர்களின் உடல் நீரில் அடித்துச் செல்லப்படும் நிலை உருவான போது
அவ்விருவரும் கனவில் தோன்றி எங்களிருவரின் உடல்களை எடுத்து வேறு இடத்தில் அடக்கம்
செய்யுங்கள் என்று கூறியதற்கு இணங்க அவர்களின் உடல்களை எடுத்தபோது சற்றுமுன்
இறந்தது போன்று அவர்களின் உடல் அப்படியே இருந்தது
அவ்விருவரில் ஒருவரான அம்ருப்னுல் ஜமூஹ் (ரழி)
போரில் தனது உடம்பின் எந்தப் பகுதியில் கடுமையாகத் தாக்கப்பட்டாரோ அந்த இடத்தின்மீது
தன் கைகளை வைத்தவராக உயிர் நீத்திருந்தார். இப்போதும் அதே மாதிரி இருந்ததால் அவரது
கைகளை அங்கிருந்து விடுவித்து நேராக ஆக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது, பொதுவாக
ஒருவர் இறந்து சற்று நேரம் ஆகி விட்டாலே அவரது உடல் உறுப்புகள் விரைத்து விடும்.
எதுவும் மாற்றி அமைக்க முடியாது. ஆனால் இங்கு அதற்கு நேர் மாற்றமாக இந்த சஹாபியின்
கைகளை அசைக்க முடிந்தது. அவ்விரு கைகளையும் எடுத்து நேராக்கி இரு புறமும்
தொங்கவிட்டனர். ஆனால் சற்று நேரத்திலேயே அவரது கைகள் முன்பு இருந்த இடத்திற்கே
திரும்பி சென்று விட்டது. அவ்வாறே மீண்டும் அடக்கம் செய்தனர். (நூல்-முஅத்தா 1010)
நபிமார்கள், ஷுஹதாக்கள் மற்றும்
அல்லாஹ் நாடிய நல்லோர்களின் உடல்கள் எத்தனை ஆயிரம் வருடங்கள் கடந்தாலும் அவைகள்
அழியாது என்பதே சுன்னத் வல் ஜமாஅத் உடையவர்களின் உறுதியான கொள்கையாகும். இதை
எல்லோரும் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும் என்பதற்கு பின்வரும் உதாரணம் போதும்.
மதீனாவில் பகீஃ கப்ருஸ்தானில் பல ஆயிரம் நபித்தோழர்கள் அடக்கம்
செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களின் கப்ருகள் இன்று வரை பாதுகாக்கப்பட்டுள்ளன. அந்த
இடத்தில் வேறு யாரையும் அடக்கம் செய்ய இதுவரை எந்த ஆட்சியாளர் களுக்கும் துணிச்சல்
இல்லை. காரணம் வேறு யாரையேனும் அடக்குவதற்காக அந்த கப்ருகளைத் தோண்டினால் அங்கு
நபித்தோழர்களின் உடல்கள் புத்தம் புதியதாகப் பெற்றுக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கை
எல்லோருக்கும் உண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக