நடந்து முடிந்த
மக்களவைத் தேர்தலில் பாசிச சக்திகளுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கா விட்டாலும் எப்படியோ ஆட்சி மீண்டும் அவர்களின் கையிலேயே சென்று விட்டதே என்ற மனக்கவலை முஃமின்களுக்கு இருக்கும்.
குறிப்பாக இதற்காக நோன்பு வைத்து அழுது துஆச் செய்த மதரஸா மாணவர்கள் மற்றும் முஃமின்களுக்கு இது
வருத்தத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அவர்கள் இந்த முறை ஆட்சி அமைத்தாலும் தனிப்பெரும்பான்மை
இல்லாததால் அவர்கள் கொண்டு வர நினைத்த இந்துத்துவா சட்டங்களை அவர்களால்
பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது. சுயமாக எழுந்து நிற்க முடியாமல் கட்டைக்
காலின் துணையோடு எழுந்து நிற்கும் நிலையில் பாசிசவாதிகளின் ஆட்சியை அல்லாஹ் ஆக்கி
வைத்துள்ளான். இந்த அளவுக்கேனும்
அவர்களின் ஆணவத்தை அடக்கியதற்காக அல்லாஹ்வுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்.
எத்தனையோ முஃமின்கள், மாணவர்கள், குழந்தைகள் செய்த துஆக்கள் அவர்கள் வைத்த
நோன்புகள் வீண் போகவில்லை என்று தான் கூற வேண்டும்
ஆனாலும்
இன்னும் எத்தனையோ முஸ்லிம்களின் துஆக்களை அல்லாஹ் எதிர் பார்க்கிறான். அவர்கள்
துஆச் செய்யவில்லை என்பது மட்டுமல்ல. துஆ ஏற்கப் படுவதற்கும் தகுதியற்றவர்கள்
என்பதை அல்லாஹ் அறிந்து வைத்துள்ளான் முஸ்லிம்களுக்கு சாதகமான முழுமையான வெற்றியை
அல்லாஹ் ஏற்படுத்தாமல் போனதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம்.
நம்மைத் திருத்தி நல்வழிப்படுத்தவே அநியாயக்காரனை அல்லாஹ் மீண்டும் பதவியில் அமர்த்துகிறான்
சிலுவை
யுத்தம் நடைபெற்ற போது முஸ்லிம்களில் பலர் சிறை பிடிக்கப்பட்டனர். அப்போது அந்த
சிறைவாசிகளுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாகவும் அவர்கள் நம்பிக்கை இழந்து
விடக்கூடாது என்ற அடிப்படையிலும் அவர்களுக்கு மத்தியில் ஒரு ஆலிம் பேசினார்.
அப்போது அந்த வழியாகச் சென்ற பிரிட்டிஷ் இராணி அவரைக் கைது செய்யும்படி
உத்தரவிட்டார். அவரிடம் விசாரணை நடந்தது. ஆலிமிடம் இராணி கூறினார். இறைவன் எங்கள்
பக்கம் தான் இருக்கிறார். அதற்கு அந்த ஆலிம் இல்லை இறைவன் எங்கள் பக்கம் தான்
என்றார். உடனே அந்த இராணி இறைவன் எங்கள் பக்கம் இருப்பதால் தான் உங்களைத்
தோற்கடித்து எங்களை ஜெயிக்க வைத்துள்ளார். என்று கூற அதற்கு அந்த ஆலிம் கூறினார்.
காரணம அதுவல்ல. ஆடுகளை மேய்ப்பதற்கு சில நேரங்களில் நாய்களைப் பயன்படுத்துவார்கள்.
நாய்களுக்கப் பயிற்சி கொடுத்திருப்பார்கள். ஆடுகள் பாதை மாறும்போதும் அந்த நாய்
குரைக்கும். அப்போது அந்த ஆடுகள் சீராகச்
செல்லும். அதுபோலத்தான் நாங்கள் பாதை மாறிச் செல்லும்போது எங்களை எச்சரிப்பதற்குத்
தான் உங்களைப் போன்றவர்களை இறைவன் எங்கள் மீது சாட்டியுள்ளான். நாங்கள் சீராக
இருந்தால் உங்களுக்கு வேலை இல்லை. என்றார். அதுதான் இன்றைய முஸ்லிம்களின் நிலை
தொடர்ந்து முஸ்லிம்களுக்கு சோதனைகள் வருவதால் முஸ்லிம்கள்
மனம் சோர்ந்து விடக்கூடாது
எந்த சூழ்நிலையிலும் உண்மையான முஃமின்கள்
துவண்டு போய் விடக்கூடாது. இஸ்லாத்திற்கு எதிரான தீய சக்திகளின் கரங்கள் எவ்வளவு
தான் வளர்ந்து கொண்டே இருந்தாலும் இறுதி வெற்றி நமக்கே சாதகமாக அமையும். நம்மைச்
சுற்றி நடைபெறும் எந்த அநியாயங்களும் நம் மனதை சோர்வடையச் செய்து விடக்கூடாது. அதே
நேரத்தில் அரைகுறை முஸ்லிமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களை முழு முஸ்லிம்களாக
ஆக்குவதற்கு முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.
அநியாக்காரனுக்கு அல்லாஹ் நிறைய அவகாசம் தருவான். கடைசியில் மொத்தமாக பிடிப்பதற்காக..
Kعن أبي موسى، عن رسول الله صلى الله عليه وسلم أنه قال:
"إن الله ليُمْلي للظالم حتى إذا أخذه لم يُفْلِتْه، ثم قرأ: { وَكَذَلِكَ
أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ
شَدِيدٌ } [ هود: 102 ] متفق عليه
அல்லாஹ்
அநியாயக்காரனுக்கு நிறைய அவகாசம் கொடுப்பான். இறுதியில் அவனைப் பிடிக்க ஆரம்பித்து
விட்டால் அவனை எளிதில் விட மாட்டான். அதாவது அவனது பிடி கடுமையாக இருக்கும். என்று
கூறிய நபி ஸல் அவர்கள் அதற்குத் தோதுவான ஒரு
வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள்.
எதிரிகளின்
கையில் மீண்டும் அதிகாரம் சென்று விட்டதே என்ற பயத்திற்கு பதிலாக எதிரிகளின் பலம்
அதிகரிக்கும்போது நம்முடைய ஈமான் அதிகரிக்க வேண்டும். அல்லாஹ்வை மீறி நம்மை யாரும் எதுவும் செய்து விட முடியாது என்ற
ஈமான் வலுப்பட வேண்டும்
الَّذِينَ قَالَ لَهُمُ
النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا وَقَالُوا
حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ (173)ال عمران
أَيْ الَّذِينَ
تَوَعَّدَهُمْ النَّاس بِالْجُمُوعِ وَخَوَّفُوهُمْ بِكَثْرَةِ الْأَعْدَاء فَمَا
اِكْتَرَثُوا لِذَلِكَ بَلْ تَوَكَّلُوا عَلَى اللَّه وَاسْتَعَانُوا بِهِ "(تفسير
ابن كثير
சுமார்
பத்தாயிரம் எதிரிகள் திரண்டு வருகிறார்கள் அவர்களை அஞ்சிக் கொள்ளுங்கள் என
முனாஃபிக்கீன்கள் பயத்தை ஏற்படுத்திய போது நபி ஸல் அவர்களும் முஃமின்களும் சற்றும்
பயப்படாமல் ஹஸ்புனல்லாஹு வநிஃமல் வகீல் என்று கூறி அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்து
மதீனாவைச் சுற்றி அகழ் தோண்ட ஆரம்பித்தார்கள். முனாஃபிக்கீன்கள் காட்டிய பயம் முஃமின்களின் உள்ளத்தில் ஈமானை அதிகமாக்கியது
قال السدي: لما تجهز
النبّي صلى الله عليه وسلم وأصحابه للمسير إلى بدر الصغرى لميعاد أبي سفيان أتاهم
المنافقون وقالوا: نحن أصحابكم الذين نهيناكم
عن الخروج إليهم وعصيتمونا، وقد قاتلوكم في دياركم وظفروا؛ فإن أتيتموهم في ديارهم
فلا يرجع منكم أحد. فقالوا: "حسبنا الله ونعم الوكيل". (تفسير القرطبي
உஹதுப் போரில் முஸ்லிம்களுக்கு தோல்வி
ஏற்பட்டதைத் தொடர்ந்து முஸ்லிம்களை பயத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்பதற்காக
அபூ சுஃப்யான் மீண்டும் முஸ்லிம்களை தாக்குவதற்கு பத்ரில் சந்திப்போம் என்று
கூறினார். ஆனால் அதற்காக பயப்படாத நபி ஸல் அபூ சுஃப்யான் சொன்ன அந்த இடத்தில்
மறுபடியும் காஃபிர்களை சந்திக்கத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். அப்போது சில
முனாஃபிக்குகள் அங்கு வந்து நாங்கள் உங்களுக்கு நல்லதே நாடுகிறோம். நீங்கள்
அவர்களுடன் மோத வேண்டாம். உங்களுடைய இடத்திற்கே வந்து அவர்கள் வெற்றியடைந்து
விட்டுச் சென்று விட்டார்கள். இப்போது நீங்கள் அவர்களுடைய இடத்திற்குச் சென்றால்
உங்களில் யாரும் உயிரோடு திரும்ப முடியாது என்று பயமுறுத்தினார்கள். அப்போது நபி
ஸல் அவர்களும் முஸ்லிம்களும் சற்றும் பயப்படாமல் ஹஸ்புனல்லாஹ்... என
மொழிந்தார்கள். பயம் அதிகமாகும் என்று கருதி பயம் காட்டிய முனாஃபிக்குகளுக்கு
ஏமாற்றமே மிஞ்சியது. மாறாக முஸ்லிம்களின்
ஈமான் மேலும் வலுவடைந்தது.
ஆரம்பத்தில்
ஏற்பட்ட தோல்வியைக் கண்டு துவண்டு விட்டவர்களுக்கு அல்லாஹ் வெற்றியைத் தராமல் கடைசி வரை நம்பிக்கையுடன் போராடும்
முஸ்லிம்களுக்குத் தான் அல்லாஹ் வெற்றியைத் தருவான்.
இது கடைசி காலத்தில் அதாவது
தஜ்ஜால் வரும் முன்பு
நடைபெறப்போகும் சம்பவம்
عَنْ
أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَنْزِلَ الرُّومُ بِالْأَعْمَاقِ
أَوْ بِدَابِقٍ فَيَخْرُجُ إِلَيْهِمْ جَيْشٌ مِنْ الْمَدِينَةِ مِنْ خِيَارِ
أَهْلِ الْأَرْضِ يَوْمَئِذٍ فَإِذَا تَصَافُّوا قَالَتْ الرُّومُ خَلُّوا
بَيْنَنَا وَبَيْنَ الَّذِينَ سَبَوْا مِنَّا نُقَاتِلْهُمْ فَيَقُولُ
الْمُسْلِمُونَ لَا وَاللَّهِ لَا نُخَلِّي بَيْنَكُمْ وَبَيْنَ إِخْوَانِنَا
فَيُقَاتِلُونَهُمْ فَيَنْهَزِمُ ثُلُثٌ لَا يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ أَبَدًا
وَيُقْتَلُ ثُلُثُهُمْ أَفْضَلُ الشُّهَدَاءِ عِنْدَ اللَّهِ وَيَفْتَتِحُ
الثُّلُثُ لَا يُفْتَنُونَ أَبَدًا فَيَفْتَتِحُونَ قُسْطَنْطِينِيَّةَ
فَبَيْنَمَا هُمْ يَقْتَسِمُونَ الْغَنَائِمَ قَدْ عَلَّقُوا سُيُوفَهُمْ بِالزَّيْتُونِ
إِذْ صَاحَ فِيهِمْ الشَّيْطَانُ إِنَّ الْمَسِيحَ قَدْ خَلَفَكُمْ فِي
أَهْلِيكُمْ فَيَخْرُجُونَ وَذَلِكَ بَاطِلٌ فَإِذَا جَاءُوا الشَّأْمَ خَرَجَ
فَبَيْنَمَا هُمْ يُعِدُّونَ لِلْقِتَالِ يُسَوُّونَ الصُّفُوفَ إِذْ أُقِيمَتْ
الصَّلَاةُ فَيَنْزِلُ عِيسَى ابْنُ مَرْيَمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
فَأَمَّهُمْ فَإِذَا رَآهُ عَدُوُّ اللَّهِ ذَابَ كَمَا يَذُوبُ الْمِلْحُ فِي
الْمَاءِ فَلَوْ تَرَكَهُ لَانْذَابَ حَتَّى يَهْلِكَ وَلَكِنْ يَقْتُلُهُ اللَّهُ
بِيَدِهِ فَيُرِيهِمْ دَمَهُ فِي حَرْبَتِهِ
(مسلم) بَاب
فِي فَتْحِ قُسْطَنْطِينِيَّةَ وَخُرُوجِ الدَّجَّالِ
நபி
ஸல் கூறினார்கள்-ரோம, பைஸாந்தியர்கள் சிரியாவில் உள்ள அஃமாக், தாபிக் ஆகிய
இடங்களில் நிலை கொள்ளாத வரை கியாமத் வராது. அவர்களை நோக்கி மதீனாவில் இருந்து (இந்த மதீனா என்பதற்கு சிரியாவின் முக்கிய நகரம் எனவும்
பொருள் உண்டு) ஒரு படை புறப்படும். அன்றைய நாளில் பூமியில்
வசிப்போரில் அவர்களே சிறந்தவர்களாக இருப்பர். அவர்கள் அணி வகுத்து நிற்கும்போது
ரோமர்கள் (அதாவது
கிறிஸ்தவர்கள்)எங்களுக்கும்,
எங்களில் சிறைக் கைதிகளாக பிடிக்கப்பட்டோருக்குமிடையில் போர் செய்ய எங்களை விட்டு
விடுங்கள் என்பார்கள். (அதாவது
முஸ்லிம்களாகிய உங்களுடன் போர் புரிய வரவில்லை. மாறாக எங்கள் மதத்தில் இருந்து
விட்டு உங்களால் சிறை பிடிக்கப்பட்டு மதம் மாறி உங்களுடன் சேர்ந்து கொண்டு
எங்களைத் தாக்குவதற்கும் துணிந்து விட்ட எங்களுடைய பழைய பங்காளிகளுடனேயே போர்
புரிய வந்துள்ளோம் என்பர். இவ்வாறு பேசி முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்த
முயல்வர். அந்த அளவுக்கு கிறிஸ்தவர்கள் அதிக அளவில் இஸ்லாத்தை ஏற்பார்கள் என்ற
கருத்தும் இதில் உள்ளது)
அப்போது
முஸ்லிம்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக எங்கள் சகோதரர்களின் மீது போர் தொடுக்க
அனுமதிக்க மாட்டோம் என்பர். ஆகவே ரோமர்கள் முஸ்லிம்கள் மீது போர் தொடுப்பார்கள்.
அப்போது முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தோற்று விரண்டோடுவர். அவர்களை
அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டான். அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர்
கொல்லப்படுவார்கள். மீதமுள்ள மூன்றில் ஒரு பகுதியினர் ரோமர்களை வெற்றி
கொள்வார்கள். அவர்கள் அதன்பின் ஒரு போதும் சோதனைக்கு உள்ளாக்கப்பட
மாட்டார்கள்.அவர்கள் தம் வாட்களை ஆலிவ் மரங்களில் தொங்க விட்டு போர் செல்வங்களை
பங்கிட்டுக் கொண்டிருக்கும்போது அவர்களிடம் ஷைத்தான் வந்து நீங்கள் இங்கு வந்த
பின் உங்கள் குடும்பத்தினரிடம் தஜ்ஜால் வந்து விட்டான் என்பான்.உடனே அவர்கள்
தம்குடும்பத்தாரிடம் புறப்படுவார்கள். அது பொய்யான செய்தியாக இருக்கும். அவர்கள்
சிரியாவுக்கு வரும்போது தான் தஜ்ஜால் கிளம்புவான். பின்பு அவர்கள் போருக்கு ஆயத்தமாகி அணிகளை சீர்செய்து
கொண்டிருக்கும்போது தொழுகைக்கு இகாமத் கூறப்படும்.அப்போது தான் ஈஸா அலை வானில்
இருந்து இறங்கி வந்து அவர்களுக்கு
தலைமையேற்பார்கள். அவர்களை தஜ்ஜால் காணும்போது தண்ணீரில் உப்பு கரைவது
போன்று கரைந்து போவான். அவனை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டால் கூட தானாக
கரைந்து அழிந்து விடுவான். ஆயினும் ஈஸா
அலை அவர்களின் கரத்தால் அல்லாஹ் அவனை அழிப்பான். ஈஸா அலை தன் ஈட்டி முனையில்
படிந்துள்ள அவனது இரத்தத்தை மக்களுக்கு காட்டுவார்கள். முஸ்லிம் 5553
படிப்பினை-
இச்சம்பவத்தில் போரின் ஆரம்பத்தில் ஏற்பட்ட தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல்
ஈமானுடன் தொடர்ந்து போராடிய முஃமின்களுக்குத் தான் அல்லாஹ் இறுதியில் வெற்றி.யைத்
தந்தான் என்பதை சிந்திக்க வேண்டும்
இறுதி வரை நம்பிக்கை இழக்காத இறை நம்பிக்கையாளர்களுக்கே வெற்றி என்பதற்கு
மற்றொரு சம்பவம்.
பனீ இஸ்ரவேலர்களில் ஒரு கூட்டம் போருக்குப் புறப்பட்டார்கள். புறப்பட்டவர்கள்
80,000 ஆனால் போரில் கலந்து கொண்டு
வெற்றிக் கனியைப் பறித்தவர்கள் 313 பேர் தான். காரணம் அவ நம்பிக்கை கொண்டவர்களை
அல்லாஹ் ஆரம்பத்திலேயே கழித்து விட்டான்.
فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِالْجُنُودِ قَالَ إِنَّ اللَّهَ
مُبْتَلِيكُمْ بِنَهَرٍ فَمَنْ شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّي وَمَنْ لَمْ
يَطْعَمْهُ فَإِنَّهُ مِنِّي إِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً بِيَدِهِ فَشَرِبُوا
مِنْهُ إِلَّا قَلِيلًا مِنْهُمْ فَلَمَّا جَاوَزَهُ هُوَ وَالَّذِينَ آمَنُوا
مَعَهُ قَالُوا لَا طَاقَةَ لَنَا الْيَوْمَ بِجَالُوتَ وَجُنُودِهِ قَالَ
الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُمْ مُلَاقُو اللَّهِ كَمْ مِنْ فِئَةٍ قَلِيلَةٍ
غَلَبَتْ فِئَةً كَثِيرَةً بِإِذْنِ اللَّهِ وَاللَّهُ مَعَ الصَّابِرِينَ
(249)البقرة وَكَانَ جَيْشه يَوْمَئِذٍ
فِيمَا ذَكَرَهُ السُّدِّيّ ثَمَانِينَ أَلْفًا- عَنْ الْبَرَاءِ رَضِيَ
اللَّهُ عَنْهُ قَالَ كُنَّا نَتَحَدَّثُ أَنَّ
أَصْحَابَ بَدْرٍ ثَلَاثُ مِائَةٍ وَبِضْعَةَ عَشَرَ بِعِدَّةِ أَصْحَابِ طَالُوتَ
الَّذِينَ جَاوَزُوا مَعَهُ النَّهَرَ وَمَا جَاوَزَ مَعَهُ إِلَّا مُؤْمِنٌ
(بخاري
பர்ராஉ ரழி கூறினார்கள். பத்ரு
வாசிகள் 313 பேர் என்பது போல தாலூத் அரசருடன் கடைசி வரை நிலைத்து நின்று போர்
செய்து ஜெயித்தவர்களும் 313 பேர் தான் என நாங்கள் பேசிக் கொள்வோம்.
قال
قتادة: النهر الذي ابتلاهم الله به هو نهر بين الأردن وفلسطين. ومعنى هذا الابتلاء
أنه اختبار لهم، فمن ظهرت طاعته في ترك الماء علم أنه مطيع فيما عدا ذلك، ومن
غلبته شهوته في الماء وعصى الأمر فهو في العصيان في الشدائد أحرى، (قرطبي
பல்லாயிரக்கணக்கான மக்களுடன் தாலூத் அரசர்
போருக்குப்புறப்பட்டாலும் அவர்களின் ஈமானை சோதிக்க அல்லாஹ்வின் உத்தரவுப்படி ஒரு
சோதனை வைக்கப்பட்டது. அதாவது செல்லும் வழியில் ஒரு ஆறு இருக்கும். அதன் நீர் மிக
சுவையாகவும் இருக்கும். ஆனால் அதிலிருந்து யாரும் நீர் அருந்தக் கூடாது. அவ்வாறு
குடிப்பதாக இருந்தாலும் ஒரு சிரங்கை மட்டும் அனுமதி என்ற நிபந்தனையுடன் ஆற்றைக்
கடந்த போது அவர்களில் பலரின் மனதில் நாம் போருக்குப் போகிறோம் தண்ணீர் நிறைய
குடித்தால் தானே தெம்பு ஏற்படும் என்று நிறைய குடித்தார்கள். ஆனால் அவ்வாறு
குடித்தவர்கள் அத்தனை பேரும் அங்கேயே களைத்து சோர்ந்து விழுந்து விட்டார்கள்.
இறைவன் மீது நம்பிக்கை வைக்காமல் மற்றொன்றின் மீது நம்பிக்கை வைத்தார்கள். எவர்கள்
நம்பிக்கை இழக்காமல் அரசரின் உத்தரவுப்படி ஒரு சிரங்கை மட்டும் நீர்
அருந்தினார்களோ அவர்கள் உற்சாகம் அதிகமாகி போர் செய்தார்கள்.
படிப்பினை- எதிரிகள் மீதான பயம் யாருக்கு அதிகமானதோ
அப்படிப்பட்டவர்களை அல்லாஹ் கழித்து பின்தங்க விட்டான். இறுதி வரை இறைவனின்
வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டவர்களை அல்லாஹ் வெற்றியைத் தந்தா இதேபோன்று தான் பாசிச
வாதிகளின் கையில் மீண்டும் ஆட்சி சென்று விட்டாலும் அல்லாஹ் நமக்குத் துணையாக
இருக்கும் வரை நம்மை யாரும் எதுவும்
செய்து விட முடியாது. என்ன நடந்தாலும் இறுதி வெற்ற நமக்குத்தான் என்ற நம்பிக்கை
எப்போதும் இருக்க வேண்டும்.
வைப்போன்ற உறுதியான ஈமான் அனைவருக்கும் வேண்டும்زِنِّيرة
وكانت زِنِّيرَةُ أمَةً رومية قد أسلمت
فعذبت في الله، وأصيبت في بصرها حتى عميت، فقيل لها : أصابتك اللات والعزى، فقالت
: لا والله ما أصابتني، وهذا من الله، وإن شاء كشفه، فأصبحت من الغد وقد رد الله
بصرها، فقالت قريش : هذا بعض سحر محمد .(الرحيق المختوم)
அபூபக்கர் ரழி அவர்களால் விடுதலை செய்யப்பட்ட
அடிமைகளில் ஒருவர் தான் இவர். இவரை விடுதலை செய்த நாளில் அவருக்கு கண்பார்வை
பறிபோனது அப்பொழுது காஃபிர்கள் இந்த பெண்ணை அபூபக்கர் விடுவித்ததால் தான் நம்முடைய
லாத், உஜ்ஜாவிற்கு கோபம் வந்து சாமி கண்ணை குத்தி விட்டது என்றார்கள் ஆனால்
அப்பெண்ணுக்கு இச்செய்தி கிடைத்த போது அவர் அதை மறுத்து என் பார்வையை அல்லாஹ் தான்
போக்கினான். அவன் நினைத்தால் மறுபடியும் எனக்குப் பார்வையைத் தருவான் என்றார்கள்.
அவ்வாறு கூறிய அடுத்த நாளே அப்பெண்ணுக்கு கண் பார்வை வந்து விட்டது. அதைக்
கேள்விப்பட்ட காஃபிர்கள் அப்போதும் திருந்தாமல் முஹம்மது ஏதோ சூனியம் செய்து
பார்வையை வரவழைத்து விட்டார் என்றார்கள்.
படிப்பினை- எவ்வாறு
தனக்கு நிச்சயம் கண் பார்வை வரும் என உறுதியாக நம்பினாரோ அதுபோல் அல்லாஹ்
எப்படியும் நமக்கு உதவி செய்வான் என்று நம்ப வேண்டும்.
கிஸ்ராவின் மாளிகையை சுராகாவுக்கு வாக்களிக்கும் அளவுக்கு
வெற்றியின்
நம்பிக்கை நபிகளாரின் உள்ளத்தில் இருந்தது
عن
الحسن أن رسول الله {صلى الله عليه وسلم} قال لسراقة بن مالك ( كيف بك إذا لبست
سواري كسرى ) قال فلما أتى عمر بسواري دعا سراقة فألبسه وقال
قل الحمد لله الذي سلبهما كسرى ابن هرمز والبسهما سراقة الأعربي (خصائص الكبري
ஹிஜ்ரத்
பயணத்தின் போது நபி ஸல் அவர்களைத் துரத்தி வந்த சுராகாவைக் கண்டு அபூபக்கர் ரழி
பயந்தார்கள். நபியவர்களைக் கொன்று விட்டு நூறு ஒட்டகங்களைப் பரிசாகப் பெற
வேண்டுமென்ற வேகத்தில் அவர் இருந்தார். அவர் அருகில் வந்த பின்பு நடந்த விஷயம்
நமக்கெல்லாம் தெரியும் இறுதியில் அவரிடம் நபி ஸல் அவர்கள் சுராக்காவே நீர்
கிஸ்ராவின் அணிகலன்களை அணிந்தால் நீர் எப்படியிருப்பீர் தெரியுமா என்று கேட்க, அவர்
வியந்தார். அவ்வளவு பெரிய அரசாங்கத்தின் அணிகலன்கள் எனக்கு எப்படி கிடைக்கப்
போகிறது என்று ஆச்சரியப்பட்டார். அதற்கு நபி ஸல் கண்டிப்பாக கிடைக்கும் என்றார்கள்
அப்படியானால் அதை எனக்கு எழுதிக் கொடுங்கள் என்று சுராகா கேட்டார். நபி ஸல் அவர்கள் அருகில் நின்ற அபூபக்கர் ரழி
அவர்களிடம் எழுதித் தருமாறு கூற, அபூபக்கர் ரழி அவர்கள் அங்கு கிடந்த எலும்புத்
துண்டில் கிஸ்ராவின் அணிகலன்களை உமக்கு நாம் வாக்களிக்கிறோம் என்று எழுதிக்
கொடுத்தார்கள். பிற்காலத்தில் சுராகா முஸ்லிமாகி விட்டார். பின்பு உமர் ரழி அவர்களின் காலத்தில் காதிஸிய்யா
போரில் பாரசீகம் வெற்றி கொள்ளப்பட்ட போது
கிடைத்த கனீமத் பொருட்கள் மஸ்ஜிதுன் நபவியில்
குவித்து வைக்கப்பட்டிருந்தன. அப்போது சுராகாவை அழைத்து ஹழ்ரத் உமர் ரழி
இதோ உங்களுக்கு நபி ஸல் அவர்கள் வாக்களித்த கிஸ்ராவின் அணிகலன்கள் என்று
ஒப்படைத்தார்கள்.
படிப்பினை-
ஹிஜ்ரத் பயணத்திற்கும் காதிஸிய்யா போருக்கும் இடையே சுமார் 20 வருடங்கள் இடைவெளி
இருந்தது. உயர்ந்த ஈமான் உடையவர்கள் நிறைந்த நபி ஸல் அவர்களின் காலத்திலேயே
இலட்சியம் நிறைவேற இருபது வருடங்கள் ஆனது என்றால் இன்று பலவீனமான ஈமானை வைத்துக்
கொண்டு உடனே பாசிச ஆட்சி முடிவுக்கு வந்து விட வேண்டும் என நினைக்கிறோம்.
நம் அன்றாட
வாழ்வில் இஸ்லாத்தைப் பின்பற்றினால் சோதனைகளை வெல்ல முடியும்.
இதைத்
தான் ஹழ்ரத் ஹுஸைன் அஹ்மத் மதனீ ரஹ் அவர்கள் கூறும்போது
இஸ்லாம் பாதுகாக்கப்பட
வேண்டும் என அதிகமாக உரத்து முழங்குகிறார்கள். ஆனால் தம் அன்றாட வாழ்வில்
இஸ்லாத்தை விட்டு விலகி இருக்கிறார்கள். இஸ்லாம் ஒன்றும் சிலை கிடையாது அதனைப்
பாதுகாப்பதற்கு....
இஸ்லாத்தைப் பாதுகாக்க படை பட்டாளம் தேவையில்லை. உங்களின் அன்றாட வாழ்வில்
இஸ்லாத்தைப் பின்பற்றினாலே போதுமானது. நீங்களும் பாதுகாக்கப் படுவீர்கள் இஸ்லாமும்
பாதுகாக்கப்பட்டு விடும்
துல்ஹஜ் பத்து நாட்கள் மற்றும் குர்பானியின்
சிறப்புகள்
நாம்
அல்லாஹ்வைத் தவிர வேறு எதைக் கொண்டும் யாரைக் கொண்டும் சத்தியம் செய்வது கூடாது.
ஆனால் அல்லாஹ் தன் படைப்பினங்களில் முக்கியமானவைகளைக் கொண்டு சத்தியம் செய்வான்.
அவ்வாறு அல்லாஹ் சத்தியம் செய்பவைகளில் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும்
ஒன்றாகும்.
قال الله تعالي وَالْفَجْرِ (1) وَلَيَالٍ عَشْرٍ (2) وَالشَّفْعِ
وَالْوَتْرِ (3)عن جابر رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم :
{والفجر وليال عشر}عشر الأضحية والوتر يوم عرفة والشفع يوم النحر هذا حديث صحيح رواه
الحاكم في المستدرك
عَنِ ابْنِ
عَبَّاسٍ رضي الله عنه قال قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ
الصَّالِحُ فِيهِنَّ أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ الْأَيَّامِ الْعَشْرِ
فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ فَقَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ
اللَّهِ إِلَّا رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ مِنْ ذَلِكَ
بِشَيْءٍ (ترمذي)
இந்த பத்து நாட்களில்
செய்யப்படும் நற்செயலை விட வருடத்தின் வேறு எந்த நாளில் செய்யப்படும் நற்செயலும்
அல்லாஹ்விடம் மிகப் பிரியமானதாக இல்லை என நபி ஸல் கூறிய போது அல்லாஹ்வின் தூதரே
மற்ற நாட்களில் செய்யும் ஜிஹாதை விட இந்த நாட்களில் செய்யப்படும் சிறிய அமல்
அல்லாஹ்விடம் மிக உயர்ந்ததா என்று கேட்க, ஆம் என்று நபி ஸல் பதில் கூறி விட்டு.
யார் ஜிஹாதுக்கு தனது உயிர் மற்றும் உடைமையுடன்
சென்று அவற்றில் எதனுடனும் வீடு திரும்பவில்லையோ அவரைத் தவிர என்று கூறினார்கள்.
இந்த நாட்களில் தக்பீர் மற்றும் தஹ்மீத் தஹலீல் ஆகியவற்றை அதிகப்படுத்த
வேண்டும்.
عَنِ ابْنِ
عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ أَيَّامٍ أَعْظَمُ عِنْدَ اللهِ
وَلَا أَحَبُّ إِلَيْهِ مِنَ الْعَمَلِ فِيهِنَّ مِنْ هَذِهِ الْأَيَّامِ
الْعَشْرِ فَأَكْثِرُوا فِيهِنَّ مِنَ التَّحْمِيدِ وَالتَّكْبِيرِ وَالتَّهْلِيلِ
குர்பானி தர விரும்புவர்
பிறை ஆரம்பித்த நாளில் இருந்து நகம் முடி களையக் கூடாது
يستحب للمضحي أن لايأخد من شعره وأظفاره شيئا من أول دي الحجة
الي أن يضحي لقول النبي صلي الله عليه
وسلم من أراد أن يضحي منكم فلا يأخد من
شعره وأظفاره شئا
من لم ينو الأضحية في أول دي الحجة فأخد شعره وأظفاره ثم نوي
الأضحية يجوز فلا يأخد شعره وأظفاره بعد النية
யார் துல்ஹஜ் பிறை ஆரம்பிக்கும்போது குர்பானியின் நிய்யத் இல்லாத நிலையில்
அவர் நகம், முடியைக் களைந்தார். பிறகு அவருக்கு குர்பானி கொடுக்க வேண்டும் என்ற
நிய்யத் ஏற்பட்டால் நிய்யத் செய்த நாளில் இருந்து அதைக் கடைபிடித்தால் போதும்
குர்பானி கொடுக்கும் நாட்களில் குர்பானியை விட மிகச் சிறந்த அமல் வேறு இல்லை.
عَنْ عَائِشَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا عَمِلَ ابْنُ آدَمَ يَوْمَ النَّحْرِ
عَمَلًا أَحَبَّ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ مِنْ هِرَاقَةِ دَمٍ وَإِنَّهُ
لَيَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَظْلَافِهَا وَأَشْعَارِهَا
وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنْ اللَّهِ عَزَّ وَجَلَّ بِمَكَانٍ قَبْلَ أَنْ
يَقَعَ عَلَى الْأَرْضِ فَطِيبُوا بِهَا نَفْسًا (ابن ماجة)
கருத்து-குர்பானி
கொடுக்கும் நாளில் குர்பானியை விட மிகச் சிறந்த அமல் வேறு எதுவும் இல்லை. ஒருவர்
குர்பானிப் பதிலாக ஒரு கோடி ரூபாய் தர்மம் செய்தாலும் குர்பானிக்கு ஈடாகாது.
குர்பானிப் பிராணி மறுமையில் அதே உருவத்தோடு வந்து நமக்காக சாட்சி சொல்லும்.
மேலும் அதன் இரத்தம் தரையைச் சென்றடைவதற்கு முன்பு அல்லாஹ்வின் பொருத்தத்தைப்
பெற்று விடுகிறது. எனவே மன மகிழ்வுடன் குர்பானி கொடுங்கள்.
عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَقَالَ
أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا رَسُولَ اللَّهِ
مَا هَذِهِ الْأَضَاحِيُّ قَالَ سُنَّةُ أَبِيكُمْ إِبْرَاهِيمَ قَالُوا فَمَا
لَنَا فِيهَا يَا رَسُولَ اللَّهِ قَالَ بِكُلِّ شَعَرَةٍ حَسَنَةٌ قَالُوا
فَالصُّوفُ يَا رَسُولَ اللَّهِ قَالَ بِكُلِّ شَعَرَةٍ مِنْ الصُّوفِ حَسَنَةٌ
(ابن ماجة)
விளக்கம்-
குர்பானி என்பது நபி இப்றாஹீம் அலை அவர்களின் வழிமுறை என நபி ஸல் கூறியபோது இதனால்
என்ன நன்மை என நபித்தோழர்கள் கேட்க, அதன் ஒவ்வொரு முடிக்கும் பகரமாக நன்மை உண்டு
என நபி ஸல் கூறியவுடன் ஆச்சரியத்துடன் யாரஸூல ல்லாஹ் அப்படியானால் ஆட்டில் முடிகள்
அதிகமாக இலட்சக் கணக்கில் இருக்குமே அதற்கும் நன்மை உண்டா என்று கேட்க ஆம் என நபி
ஸல் பதில் கூறினார்கள்.
வறிய நிலையிலும் வருடம்
தோறும் குர்பானி கொடுத்தவரின் சிறப்பு
عن أحمد بن
اسحق أنه قال كان لي أخ فقير وكان مع فقره يضحي كل سنة بشاة فلما توفي صليت ركعتين
فقلت:اللهم أرني أخي في نومي فأسأله عن حاله فنمت علي الوضوء فرأيت في منامي كأن
القيامة قد قامت وحشر الناس من قبورهم فادا أخي راكب علي فرس أشهب وبين يديه نجائب
فقلت ياأخي ما فعل الله بك؟ فقال:غفر لي,فقلت بم؟ فقال بسبب درهم تصدقت به علي
امرأة عجوز فقيرة في سبيل الله؟ فقلت ما هده النجائب؟قال ضحاياي في الدنيا والتي
أركبها أول أضحيتي فقلت الي اين قصدت؟ قال الي الجنة فغاب عن بصري {سنانية}
அஹ்மத் இப்னு இஸ்ஹாக் ரஹ் அவர்கள் கூறினார்கள். அவர்
தன்னுடைய வறிய நிலையிலும் வருடம் தோறும் ஆடு குர்பானி கொடுப்பார். ஒருநாள் அவர்
வஃபாத்தாகி விட்டார். அவர் இறந்த பின்பு அவரைப் பற்றிய மறுமை வாழிவின் நிலையைத்
தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இரண்டு ரக்அத் தொழுது அல்லாஹ்விடம் அல்லாஹ்
அவரை என் கனவில் காட்டு. நான் அவரிடம் அவரது நிலையைப் பற்றி விசாரித்துத் தெரிந்து
கொள்ள வேண்டும் என துஆச் செய்தேன். நான் உளூவுடன் தூங்கினேன். அப்போது என் கனவில்
கியாமத் ஏற்பட்டு விட்டதைப் போன்றும் மக்கள் அனைவரும் தங்களுடைய கப்ருகளில்
இருந்து எழுப்ப ப்படுவது போன்றும் கனவில் கண்டேன். அப்போது அந்த நண்பரையும்
கண்டேன். அவர் ஒரு உயர்ந்த குதிரையின் மீது சவாரி செய்த படி இருந்தார். அவருக்கு
முன்னால் கால்நடை வாகனங்கள் அணி வகுத்து நின்றன. அவரிடம் நான் அல்லாஹ் உங்களிடம்
எவ்வாறு நடந்து கொண்டான் என விசாரித்தபோது அல்லாஹ் என்னை மன்னித்தான் என்று
கூறினார். எதனால் என்று நான் கேட்க, ஒரு வயதான, ஏழ்மையான பெண்ணுக்கு ஒரு திர்ஹம்
நான் தர்மம் செய்தேன். அதனால் அல்லாஹ் என்னை மன்னித்தான் என்று கூறினார். நான்
அவரிடம் இந்த வாகனங்கள் ஏது என்று கேட்க, இதுவெல்லாம் நான் குர்பானி கொடுத்த
வாகனங்கள். நான் ஏறிப் பயணம் செய்திருக்கும் இந்த வாகனம் தான் நான் முதலில்
கொடுத்த குர்பானி என்று கூறி என் கன்னை விட்டும் மறைந்து விட்டார். விளக்கம்-ஆடாக
இருந்தாலும் அதில் சவாரி செய்யும் வகையில் பெரிய உருவமாக அல்லாஹ் மறுமையில்
மாற்றியமைக்க வாய்ப்புண்டு.
வசதி இருந்தும் குர்பானி கொடுக்கா விட்டால்
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ مَنْ كَانَ لَهُ سَعَةٌ وَلَمْ يُضَحِّ فَلَا يَقْرَبَنَّ
مُصَلَّانَا (ابن ماجة
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக