بسم الله الرحمن الرحيم
அஹ்லுல் பைத்துகளின் சிறப்புகள்
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا (33) الاحزاب
ஒவ்வொரு தொழுகையிலும் ஓதப்படும் தரூத் சலவாத்தில் நபி ஸல் அவர்களின் குடும்பத்தார்கள் மீது ஸலவாத் ஓதாமல் அதாவது அவர்களுக்காக துஆச் செய்யாமல் தொழுகை பரிபூரணமடைவதில்லை
عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قِيلَ يَا رَسُولَ اللَّهِ أَمَّا السَّلَامُ عَلَيْكَ فَقَدْ عَرَفْنَاهُ فَكَيْفَ الصَّلَاةُ عَلَيْكَ قَالَ قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ (بخاري
அல்லாஹ்வின் தூதரே உங்கள் மீது எப்படி சலாம் சொல்வது என்பதை தாங்கள் கற்றுத் தந்த அத்தஹிய்யாத் மூலம் நாங்கள் அறிவோம். உங்கள் மீது சலவாத்து சொல்வது எப்படி என்பதை விபரிக்கும்படி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப் பட்டபோது நபி ஸல் மேற்காணும் தரூத் சலவாத்தை சொல்லித்தந்தார்கள். .
இதில் இரண்டு தடவை இடம் பெற்றுள்ள வஅலா ஆலி என்ற வார்த்தை நபி ஸல் அவர்களின் குடும்பத்தார் மீது ஸலவாத் சொல்வதாகும். துஆச் செய்வதாகும். அவர்களுக்காக துஆச் செய்வதால் நம்முடைய கண்ணியம் உயரும்
ஷாஃபிஈ மத்ஹபில் அதிகாலை பஜ்ரு தொழுகையின் போது ஓதப்படுகிற குனூத்தில் பெருமானாரின் மீது சலாத் சொல்ல வேண்டும் அதற்காக நிற்க வேண்டும் என்பது போல பெருமானாரின் குடும்பத்தினர் மீது சலவாத் சொல்ல வேண்டும் அதற்காக நிற்க வேண்டும் என்று சட்டம் சொல்லப் பட்டிருக்கிறது. அதை விட்டால் சஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும் என்றும் சட்டம் சொல்லப்பட்டுள்ளது.
நபி ஸல் அவர்களின் குடும்பத்தை நேசிப்பது அவர்கள் விஷயத்தில் நல்லெண்ணம் கொள்வது நிபாக்கிலிருந்து காப்பாற்றும் என்று இமாம் தஹாவீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
ويبين الطحاوي أن البراءة من النفاق لا تكون إلا بسلامة المعتقد في آل البيت فيقول: (ومن أحسنَ القولَ في أصحاب رسول الله وأزواجه الطاهرات من كل دنس، وذرياته المقدسين من كل رجس، فقد برئ من النفاق). (- متن العقيدة الطحاوية)
நபி ஸல் அவர்களின் குடும்பத்தினர்கள் யார் யார்?
இதில் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அகீததுத் தஹாவீ நூலில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது
أهل البيت هم بنو هاشم ويدخل فيهم أمهات المؤمنين (عقيدة الطحاوي)
ففي صحيح مسلم عن زيد بن أرقم رضي الله عنه ... قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فِينَا خَطِيبًا بِمَاءٍ يُدْعَى خُمًّا بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ وَوَعَظَ وَذَكَّرَ ثُمَّ قَالَ أَمَّا بَعْدُ أَلَا أَيُّهَا النَّاسُ فَإِنَّمَا أَنَا بَشَرٌ يُوشِكُ أَنْ يَأْتِيَ رَسُولُ رَبِّي فَأُجِيبَ وَأَنَا تَارِكٌ فِيكُمْ ثَقَلَيْنِ أَوَّلُهُمَا كِتَابُ اللَّهِ فِيهِ الْهُدَى وَالنُّورُ فَخُذُوا بِكِتَابِ اللَّهِ وَاسْتَمْسِكُوا بِهِ فَحَثَّ عَلَى كِتَابِ اللَّهِ وَرَغَّبَ فِيهِ ثُمَّ قَالَ وَأَهْلُ بَيْتِي أُذَكِّرُكُمْ اللَّهَ فِي أَهْلِ بَيْتِي أُذَكِّرُكُمْ اللَّهَ فِي أَهْلِ بَيْتِي أُذَكِّرُكُمْ اللَّهَ فِي أَهْلِ بَيْتِي فَقَالَ لَهُ حُصَيْنٌ وَمَنْ أَهْلُ بَيْتِهِ يَا زَيْدُ أَلَيْسَ نِسَاؤُهُ مِنْ أَهْلِ بَيْتِهِ قَالَ نِسَاؤُهُ مِنْ أَهْلِ بَيْتِهِ وَلَكِنْ أَهْلُ بَيْتِهِ مَنْ حُرِمَ الصَّدَقَةَ بَعْدَهُ قَالَ وَمَنْ هُمْ قَالَ هُمْ آلُ عَلِيٍّ وَآلُ عَقِيلٍ وَآلُ جَعْفَرٍ وَآلُ عَبَّاسٍ قَالَ كُلُّ هَؤُلَاءِ حُرِمَ الصَّدَقَةَ قَالَ نَعَمْ (مسلم)4425
சுருக்கம்-நபி ஸல் அவர்கள் எங்களிடையே உரை நிகழ்த்தினார்கள். ஹம்து மற்றும் ஸலவாத்திற்குப்பிறகு அவர்கள் எங்களை நோக்கி மக்களே நானும் உங்களைப் போன்ற மனிதன்தான். என்னுடைய ரப்பின் தூதர் (மலக்குல் மவ்த்) என்னிடம் வரும் காலம் நெருங்கி விட்டது.நான் அவரின் அழைப்புக்கு பதில் தரக் காத்திருக்கிறேன். எனவே நான் உங்களிடம் வலுவான இரண்டை விட்டுச் செல்கிறேன். அதில் ஒன்று அல்லாஹ்வின் வேதம். அதில் நேர்வழி இருக்கிறது. எனவே அதைப் பற்றிப் பிடியுங்கள். என்று இறை வேத த்தைப் பின்பற்றும்படி ஆர்வப் படுத்திய நபி ஸல் அவர்கள் பிறகு கூறினார்கள். மற்றொன்று என்னுடைய குடும்பத்தார்கள். என்னுடைய குடும்பத்தார்கள் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்ளும்படி உங்களுக்கு நான் நினைவூட்டுகிறேன் என்று மூன்று முறை கூறினார்கள். இந்த ஹதீஸை அறிவிக்கும் ஜைத் ரழி அவர்களிடம் நபி ஸல் அவர்களின் மனைவிமார்கள் அஹ்லெ பைத்தில் இல்லையா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் நபி ஸல் அவர்களின் மனைவிமார்களும் அஹ்லெ பைத்தில் உள்ளவர்கள் தான். காரணம் அவர்கள் அனைவருமே ஜகாத் வாங்குவதற்கு தடை செய்யப் பட்டவர்கள். எனவே இவர்களில் அலீ ரழி அவர்களின் குடும்பத்தாரும் ஜஃபர் ரழி அவர்களின் குடும்பத்தாரும் அப்பாஸ் ரழி அவர்களின் குடும்பத்தாரும் அடங்குவர் என்று பதில் கூறினார்கள்.
عن ابن أبي مليكة أن خالد بن سعيد بن العاص بعث إلى عائشة ببقرة فردتها وقالت : (إنا آل محمد لا نأكل الصدقة) (مُصنف ابن أبي شيبة
நபி ஸல் அவர்களின் மனைவிமார்களும் அஹ்லெ பைத்தில் கட்டுப்படுவார்கள் என்பது
அஹ்லுஸ் ஸுன்னத் வல்-ஜமாஅத்தின் கொள்கையாகும்.
يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِنَ النِّسَاءِ إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَعْرُوفًا (32) وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا (33) (الاحزاب
பின்வரும் ஹதீஸின் மூலமாக ஏற்படும் கேள்விக்கு பதில்
عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ رَبِيبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نَزَلَتْ هَذِهِ الْآيَةُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمْ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ فَدَعَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاطِمَةَ وَحَسَنًا وَحُسَيْنًا فَجَلَّلَهُمْ بِكِسَاءٍ وَعَلِيٌّ خَلْفَ ظَهْرِهِ فَجَلَّلَهُ بِكِسَاءٍ ثُمَّ قَالَ اللَّهُمَّ هَؤُلَاءِ أَهْلُ بَيْتِي فَأَذْهِبْ عَنْهُمْ الرِّجْسَ وَطَهِّرْهُمْ تَطْهِيرًا قَالَتْ أُمُّ سَلَمَةَ وَأَنَا مَعَهُمْ يَا نَبِيَّ اللَّهِ قَالَ أَنْتِ عَلَى مَكَانِكِ وَأَنْتِ إِلَى خَيْرٍ - ترمذي 3719
நபி ஸல் அவர்களின் வளர்ப்பு மகன் உமர்பின் அபீசலமாகூறுகிறார்கள்.நபியின் குடும்பத்தினரான உங்களை சுத்தப் படுத்தவே அல்லாஹ் நினைக்கிறான்” என்ற திருக்குர் ஆனின் வசனம் நபி ஸல் உம்முசலமாவின் வீட்டிலிருந்த போது அருளப்பட்டது. உடனே நபியவர்கள் தனது மகள் ஃபாத்திமா, பேரக்குழந்தைகள் ஹசன்,ஹுசைன்(ரலி), ஆகியோரை அழைத்து தான் அணிந்திருந்த போர்வைக்குள் சேர்த்து அணைத்துக் கொண்டார்கள். பின்னால் நின்று கொண்டிருந்த அலி (ரழி) அவர்களையும் போர்வைக்குள் சேர்த்துக் கொண்டார்கள். பிறகு “இறைவா!இவர்கள் என் குடும்பத்தினர். இவர்களை விட்டு அசுத்தத்தை நீக்குவாயாக! இவர்களை முழுமையாக பரிசுத்தப் படுத்துவாயாக! என்று பிரார்த்திதார்கள். அப்போது உம்மு சலமா அவர்கள் நானும் அவர்களுடன் சேர்ந்தவள் தானே என்று கேட்டார். நீ உனது அந்தஸ்தான இட்த்தில் இருக்கிறாய். என்று பதிலளித்தார்கள். திர்மிதி 3719
போர்வைக்குள் உம்மு ஸல்மா ரழி அவர்களை நபி ஸல் ஏன் போர்வைக்குள் சேர்த்துக் கொள்ளவில்லை?
விளக்கம்- அசுத்தத்தை நீக்குவாயாக என்றால் இவர்கள் மீதான களங்கத்தை நீக்குவாயாக என்பது கருத்தாகும். இந்த நபிமொழி உம்மு சல்மா அம்மையாரை பெருமானார் தம்முடன் போர்வைக்குள் சேர்த்துக் கொள்ளவில்லை என்பதை தெரிவிக்கிறது. மருமகன் அலி (ரழி) அவர்கள் போர்வைக்குள் இருந்த தால் உம்முசல்மா ரழி அவர்களை நபி (ஸல்) அவர்கள் அழைக்கவில்லை. மற்றபடி நபி ஸல் அவர்களின் மனைவிமார்களும் அஹ்லெ பைத்தில் கட்டுப்படுவார்கள் என்று விரிவுரையாளர்கள் விளக்குகிறார்கள். .
சல்மான் ஃபார்ஸீ ரழி அவர்களும் சிறப்பு அனுமதி என்ற வகையில் அஹ்லே பைத்தில் கட்டுப் படுவார்கள்.
عن كثير بن عبد الله المزني عن ابيه عن جده : أن رسول الله صلى الله عليه و سلم وسلم خط الخندق من أحمر البسختين طرف بني حارثة عام حزب الأحزاب حتى بلغ المذابح فقطع لكل عشرة أربعين ذراعا فاحتج المهاجرون والأنصار في سلمان الفارسي رحمه الله وكان رجلا قويا فقال المهاجرون : سلمان منا وقالت الأنصار : سلمان منا فقال رسول الله صلى الله عليه و سلم : ( سلمان منا أهل البيت ) حاكم
விளக்கம்- சல்மான் ஃபார்ஸீ (ரலி) அவர்கள் பெருமானாரின் குடும்பத்தினரோடு நேரடித் தொடர்புடையவர் அல்ல. பாரசீகத்திலிருந்து ஒரு சத்திய நெறியைத் தேடி நீண்ட நெடிய பயணம் செய்த பிறகு நபி ( ஸல்) அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து இஸ்லாமைத் தழுவியவர். அகழ் யுத்தத்தின் போது மதினாவின் வாசலில் அகழி தோண்டி தற்காப்புச் செய்து கொள்ள பெருமானாருக்கு ஆலோசனை வழங்கியவர். அகழி தோண்டுவதற்காக மக்காவிலிருந்து குடிபெயர்ந்து வந்த முஹாஜிர்களும், மதீனாவை தாயகமாக கொண்ட அன்சாரிகளும் தனித்தனியாக அணிபிரிக்கப் பட்ட போது பாரசீகத்தைச் சேர்ந்த சல்மான் ஃபார்ஸீ (ரலி) அவர்கள் தனியாக நின்றார்கள். மக்காவைச் சேர்ந்த முஹாஜிர் தோழர்களும் மதீனாவைச் சேர்ந்த அன்சாரித்தோழர்களும் “இவர் எங்களவர் என்று அவரைச் சொந்தம் கொண்டாடப் போட்டியிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் குறிக்கிட்டு “சல்மானும் மின்னா மின் அஹ்லில் பைத்”சல்மான் எங்களைச் சேர்ந்தவர். எங்களது குடும்பத்தில் ஒருவர்” என்று சொன்னார்கள். அந்த ஒரு வார்த்தையின் காரணமாக சல்மான் (ரலி) பெருமானாரின் குடும்பத்தவர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
பொதுவாக அரபிகளிடம் குலப்பெருமை அதிகம். அந்நியக்குடும்பத்தை தன் குடும்பமாக எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் நபி ஸல் அவர்கள் அதை அறவே மாற்றியமைத்தார்கள். குலப்பெருமை மிகுந்த அன்றைய அரபகத்தின் சூழலில் ஒரு அன்னியரை தம்மவராக்கிக் கொண்ட பெருமானாரின் பெருந்தன்மை புரட்சிகரமானது. குலப்பெருமையின் ஆணிவேரையே அசைத்துப் போட்ட்து.
அஹ்லெ பைத்துகளுக்கு எந்த அளவுக்கு கண்ணியம் உண்டோ
அந்த அளவுக்கு கட்டுப்பாடுகளும் மற்றவர்களை விட அவர்களுக்கு அதிகம்
இன்றைய காலத்தில் முக்கியமான தலைவரின் குடும்பம் என்றால் அவர்கள் செல்லும் இடங்களில் மற்றவர்களுக்கு இல்லாத சிறப்புச் சலுகைகளை அனுபவிப்பதற்கு மட்டுமே தங்களின் பதவிகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வழமை உண்டு. ஆனால் நபி(ஸல்) அவர்களின் குடும்பம் என்றால் அவர்களுக்கும் கண்ணியம் உள்ளது என்றாலும் அதை விட அதிகப்படியாக கட்டுப்பாடுகள் அக்குடும்பத்திற்கு உண்டு.
عن بن شهاب فقال في الحديث فقال لنا : صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ هَذِهِ الصَّدَقَاتِ إِنَّمَا هِيَ أَوْسَاخُ النَّاسِ وَإِنَّهَا لَا تَحِلُّ لِمُحَمَّدٍ وَلَا لِآلِ مُحَمَّدٍ (مسلم)
ஜகாத் பொருட்களாகிறது மக்களின் பாவ அழுக்குகளாகும். நிச்சயமாக அவை முஹம்மதுக்கும் ஸல் முஹம்மதுடைய குடும்பத்திற்கும் அனுமதிக்கப்பட்டதல்ல.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ الْحَسَنَ بْنَ عَلِيٍّ أَخَذَ تَمْرَةً مِنْ تَمْرِ الصَّدَقَةِ فَجَعَلَهَا فِي فِيهِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْفَارِسِيَّةِ كِخْ كِخْ أَمَا تَعْرِفُ أَنَّا لَا نَأْكُلُ الصَّدَقَةَ (بخاري
நபி ஸல் அவர்களின் பேரப்பிள்ளை ஹசன் ரழி அவர்கள் சிறுவயதில் ஒருமுறை ஜகாத்துடைய பேரீத்தம் பழங்களில் ஒரு பேரீத்தம்பழத்தை எடுத்து அதை தன் வாயில் போட்டு விட உடனே நபி ஸல் அவர்கள் அதை உடனே துப்பி விடு என்ற பாரசீக மொழியில் எச்சரித்து விட்டு, நிச்சயமாக நாம் ஜகாத்துடைய பொருளை உண்ணக்கூடாது என்று உனக்குத் தெரியாதா என்றும் எச்சரித்தார்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُؤْتَى بِالتَّمْرِ عِنْدَ صِرَامِ النَّخْلِ فَيَجِيءُ هَذَا بِتَمْرِهِ وَهَذَا مِنْ تَمْرِهِ حَتَّى يَصِيرَ عِنْدَهُ كَوْمًا مِنْ تَمْرٍ فَجَعَلَ الْحَسَنُ وَالْحُسَيْنُ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَلْعَبَانِ بِذَلِكَ التَّمْرِ فَأَخَذَ أَحَدُهُمَا تَمْرَةً فَجَعَلَهَا فِي فِيهِ فَنَظَرَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْرَجَهَا مِنْ فِيهِ فَقَالَ أَمَا عَلِمْتَ أَنَّ آلَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَأْكُلُونَ الصَّدَقَةَ (بخاري
பேரீச்ச மரத்திலிருந்து கனிகளைப் பறிக்கும் போதே அதன் ஜகாத் பழங்கள் நபி ஸல் அவர்களிடம் கொண்டு வரப்படும். ஒவ்வொருவரும் தத்தமது பேரீச்சம் பழங்களைக் கொண்டு வருவார்கள். இறுதியில் அவை நபி ஸல் அவர்களிடம் பெரும் பேரீச்சங் குவியலாக மாறி விடும். சிறுவர்களான ஹஸன் ரழி, ஹுஸைன் ரழி இருவரும் அக் குவியலுக்கருகே விளையாடுவார்கள். ஒருநாள் அவ்விருவரில் ஒருவர் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போடுவதை நபி ஸல் அவர்கள் பார்த்து விட்டார்கள். உடனே அவரது வாயிலிருந்து அதை எடுத்து விட்டு முஹம்மதின் குடும்பத்தார் சதகாப் பொருளை உண்ணக்கூடாது என்பதை நீ அறியவில்லையா என்று கேட்டார்கள்.
இரண்டு கைகள் மாறும்போது சட்டம் சில நேரங்களில் மாறும்.
عَنْ أَنَسٍ - رضى الله عنه - أَنَّ النَّبِىَّ - صلى الله عليه وسلم - أُتِىَ بِلَحْمٍ تُصُدِّقَ بِهِ عَلَى بَرِيرَةَ فَقَالَ « هُوَ عَلَيْهَا صَدَقَةٌ ، وَهُوَ لَنَا هَدِيَّةٌ » . (بخاري
கருத்து- பரீரா ரழி அவர்களுக்கு சதகாவாக வழங்கப்பட்ட இறைச்சி நபி ஸல் அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அதை வாங்கிக் கொண்ட நபி ஸல் அவர்கள் அது அவர்களுக்குத் தான் சதகாவாகும். அவர்களுக்குத் தரப்பட்டு அவர்கள் அதை சொந்தமாக்கிக் கொண்ட பின் அதைப் நமக்குத் தந்தால் அது அன்பளிப்பாகும் என்றார்கள்.
படிப்பினை- இதிலிருந்து பல படிப்பினைகள் நமக்கு உண்டு. வங்கியில் நாம் இருப்பு வைத்திருக்கும் பணத்தை விட வங்கி தருகின்ற interest பணம் வங்கியில் கணக்கு வைத்திருப்பவருக்கு மட்டுமே அது ஹராமாகும். அவர் அதை எடுத்து நன்மையை எதிர் பார்க்காமல் ஏதேனும் ஒரு ஏழையிடம் கொடுத்து விடும்போது அது அவருக்கு ஹராம் அல்ல. அதுபோல் நபி ஸல் தங்களுடைய ஹதீஸில் ஜகாத்துடைய பொருட்களை பாவ அழுக்குகள் என்று கூறியிருந்தாலும் அது அந்தப் பணக்காரர்களைப் பொறுத்தவரை அதுபோல் நபிகளார் ஸல் அவர்களுடைய குடும்பத்தாரைப் பொறுத்த வரை பாவ அழுக்காக இருக்குமே தவிர அதைப் பயன்படுத்தும் ஏழைகளுக்கு அந்தப் பாவ அழுக்குகள் பாதிப்பை ஏற்படுத்தாது. பாவ அழுக்குகள் என்பதே அவர்களுக்குப் பொருந்தாது.
ஹஸன் ரழி, ஹுஸைன் ரழி ஆகிய இருவருக்கும் உள்ள தனிச்சிறப்பு
عن علي قال : لما ولد الحسن سميته حربا فجاء النبي صلى الله عليه و سلم فقال : ( أروني ابني ما سميتموه ) ؟ قلنا : حربا قال : ( لا بل هو حسن ) فلما ولد الحسين سميته حربا فجاء النبي صلى الله عليه و سلم فقال : ( أروني ابني ما سميتموه ) ؟ قلنا : حربا قال : ( بل هو حسين ) فلما ولد لي الثالث سميته حربا فجاء النبي صلى الله عليه و سلم فقال : ( أروني ابني ما سميتموه ) ؟ فقلنا : سميناه حربا قال : ( بل هو محسن ) ثم قال : ( إنما سميتهم بولد هارون : شبر وشبير ومشبر ) (صحيح ابن حبان)
ஹழ்ரத் அலீரழி அவர்கள் கூறினார்கள். முதல் மகனார் ஹஸன் ரழி பிறந்த போது அவருக்கு நான் ஹர்ப் (யுத்தம்) என்று பெயர் வைத்தேன். அப்போது நபி ஸல் அவர்கள் அங்கு வந்து எனது பேரனை என்னிடம் காட்டுங்கள். என்ன பெயர் வைத்துள்ளீர்கள் என்று கேட்டார்கள். நாங்கள் ஹர்ப் என்று பெயர் வைத்துள்ளதாக கூறினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் இல்லை. இனிமேல் அவர் ஹஸன் என்றார்கள்.
இரண்டாவது மகனார் ஹஸன் ரழி பிறந்த போது அவருக்கும் நான் ஹர்ப் (யுத்தம்) என்று பெயர் வைத்தேன். அப்போதும் நபி ஸல் அவர்கள் அங்குவந்து எனது பேரனை என்னிடம் காட்டுங்கள்.என்ன பெயர் வைத்துள்ளீர்கள் என்று கேட்டார்கள். நாங்கள் ஹர்ப் என்று பெயர் வைத்துள்ளதாக கூறினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் இல்லை அவர் இனிமேல் ஹுஸைன் என்றார்கள்.
மூன்றாவது மகனார் ஹஸன் ரழி பிறந்த போது அவருக்கும் நான் ஹர்ப் (யுத்தம்) என்று பெயர் வைத்தேன். அப்போதும் நபி ஸல் அவர்கள் அங்குவந்து எனது பேரனை என்னிடம் காட்டுங்கள்.என்ன பெயர் வைத்துள்ளீர்கள் என்று கேட்டார்கள். நாங்கள் ஹர்ப் என்று பெயர் வைத்துள்ளதாக கூறினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் இல்லை அவர் இனிமேல் முஹ்ஸின் என்றார்கள். பின்பு எங்களை நோக்கி நான் இந்த மூன்று பிள்ளைகளுக்கும் பெயர் வைத்த தெல்லாம் நபி ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய நடைமுறையைப் பின்பற்றித்தான். நபி ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் முதல் மகனுக்கு ஷபர் என்றும் இரண்டாவது மகனுக்கு ஷைபைர் என்றும் மூன்றாவது மகனுக்கு முஷ்பிர் என்றும் பெயர் வைத்தார்கள் என்று கூறினார்கள்.
عن حذيفة قال : أتيت النبي صلى الله عليه و سلم فصليت معه المغرب ثم قام يصلي حتى صلى العشاء ثم خرج فاتبعته فقال : ( عرض لي ملك استأذن ربه أن يسلم علي وبشرني أن الحسن والحسين سيدا شباب أهل الجنة ) ) (صحيح ابن حبان)
ஹுதைஃபா ரழி அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களிடம் நான் வருகை தந்தேன். அவர்களுடன் மஃரிப் தொழுதேன். பின்பு இஷா வரை அவர்கள் தொழுது கொண்டே இருந்தார்கள். பின்பு வெளியே வந்தார்கள். நான் அவர்களைப் பின் தொடர்ந்தேன். அப்போது என்னிடம் கூறினார்கள். என்னிடம் ஒரு மலக்கு தோன்றினார். அவர் தனது ரப்பிடம் எனக்கு ஸலாம் சொல்ல அனுமதி கேட்டு என்னிடம் வருகை தந்தார். அவர் என்னிடம் ஒரு சுபச் செய்தி கூறினார். நிச்சயமாக ஹஸன் ரழி, ஹுஸைன் ரழி இருவரும் சுவனத்து வாலிபர்களின் தலைவர்கள் என்று கூறினார்கள்.
عن عدي بن ثابت قال : سمعت البراء يقول : رأيت النبي صلى الله عليه و سلم حاملا الحسن بن علي على عاتقه وهو يقول : ( اللهم إني أحبه فأحبه ) ) (صحيح ابن حبان)
ஹஸன் ரழி அவர்கள் மூலம் இரு சாரார்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படும் என்ற சுபச் செய்தி
நபி (ஸல்) அவர்கள் தன் பேரப்பிள்ளை ஹஸன் ரழி அவர்களைத் தோளில் சுமந்த படி யாஅல்லாஹ் நான் இவரை நேசிக்கிறேன் நீயும் நேசிப்பாயாக என்று துஆச் செய்தார்கள்
عَنْ الْحَسَنِ سَمِعَ أَبَا بَكْرَةَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ وَالْحَسَنُ إِلَى جَنْبِهِ يَنْظُرُ إِلَى النَّاسِ مَرَّةً وَإِلَيْهِ مَرَّةً وَيَقُولُ ابْنِي هَذَا سَيِّدٌ وَلَعَلَّ اللَّهَ أَنْ يُصْلِحَ بِهِ بَيْنَ فِئَتَيْنِ مِنْ الْمُسْلِمِينَ (بخاري
كَانَ الْحَسَن رَضِيَ اللَّه عَنْهُ وَلِيَ الْخِلَافَة بَعْد قَتْل أَبِيهِ عَلِيّ بْن أَبِي طَالِب رَضِيَ اللَّه عَنْهُ وَكَانَ مُسْتَحِقًّا لِلْخِلَافَةِ وَبَايَعَهُ أَكْثَر مِنْ أَرْبَعِينَ أَلْفًا ثُمَّ جَرَى مَا جَرَى بَيْن الْحَسَن بْن عَلِيّ وَبَيْن مُعَاوِيَة رَضِيَ اللَّه عَنْهُمَا وَسَارَ إِلَيْهِ مُعَاوِيَة مِنْ الشَّام إِلَى الْعِرَاق ، وَسَارَ هُوَ إِلَى مُعَاوِيَة فَلَمَّا تَقَارَبَا رَأَى الْحَسَن رَضِيَ اللَّه عَنْهُ الْفِتْنَة وَأَنَّ الْأَمْر عَظِيم تُرَاق فِيهِ الدِّمَاء وَرَأَى اِخْتِلَاف أَهْل الْعِرَاق ، وَعَلِمَ الْحَسَن رَضِيَ اللَّه عَنْهُ أَنَّهُ لَنْ تُغْلَب إِحْدَى الطَّائِفَتَيْنِ حَتَّى يُقْتَل أَكْثَر الْأُخْرَى فَأَرْسَلَ إِلَى مُعَاوِيَة يُسَلِّم لَهُ أَمْر الْخِلَافَة وَعَادَ إِلَى الْمَدِينَة ، فَظَهَرَتْ الْمُعْجِزَة فِي قَوْله صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ " إِنَّ اِبْنِي هَذَا سَيِّد يُصْلِح اللَّه بِهِ بَيْن فِئَتَيْنِ مِنْ الْمُسْلِمِينَ " وَأَيّ شَرَف أَعْظَم مِنْ شَرَف مَنْ سَمَّاهُ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ سَيِّدًا .(عون المعبود
கடைசி காலத்தில் அஹ்லெ பைத்துகளில் ஒருவராக இமாம் மஹ்தீ அலை அவர்கள் பிறந்து பிற்காலத்தில் பிரபலமடைவார்கள். அவர்களின் ஆட்சியில் உலகம் முழுவதும் செழிப்புகள் நிறைந்திருக்கும்
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، قَالَ: ذَكَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَلاءً يُصِيبُ هَذِهِ الأُمَّةَ حَتَّى لا يَجِدُ الرَّجُلُ مَلْجَأً يَلْجَأُ إِلَيْهِ مِنَ الظُّلْمِ فَيَبْعَثُ اللَّهُ رَجُلا مِنْ عِتْرَتِي أَهْلِ بَيْتِي ، فَيَمْلأُ بِهِ الأَرْضَ قِسْطًا وَعَدْلا كَمَا مُلِئَتْ جَوْرًا وَظُلْمًا يَرْضَى عَنْهُ سَاكِنُ السَّمَاءِ وَسَاكِنُ الأَرْضِ لا تَدَعُ السَّمَاءُ مِنْ قَطْرِهَا شَيْئًا إِلا صَبَّتْهُ مِدْرَارًا وَلا تَدَعُ الأَرْضُ مِنْ نَبَاتِهَا شَيْئًا إِلا أَخْرَجَتْهُ حَتَّى يَتَمَنَّى الأَحْيَاءُ الأَمْوَاتَ يَعِيشُ فِي ذَلِكَ سَبْعَ سِنِينَ أَوْ ثَمَانِ سِنِينَ أَوْ تِسْعَ سِنِينَ(شرح السنة وعَنْه قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : يَخْرُجُ فِي آخِرِ الزَّمَانِ خَلِيفَةٌ يُعْطِي الْمَالِ بِغَيْرِ عَدَدٍ
கருத்து- முஸ்லிம்களுக்கு எதிராக உலகெங்கும் நடைபெறும் அநியாயம் காரணமாக அவர்கள் தஞ்சம் அடைய எங்கும் இடம் இல்லாத சூழ்நிலையில் இமாம் மஹ்தீ அலை அவர்களை அல்லாஹ் என்னுடைய குடும்பத்தில் பிறக்கச் செய்து அல்லாஹ் அவர்களை ஆட்சியாளராக ஆக்குவான். அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் எந்த அளவுக்கு அநியாயம் நிரம்பி வழிந்ததோ அந்த அளவுக்கு நீதத்தால் பூமியை நிரப்புவார்கள். அவர்களை விண்ணில் உள்ள மலக்குகளும் மண்ணில் உள்ள மனிதர்கள் பொருந்திக் கொள்வார்ரகள். வானம் சரியான முறையில் மழையை இறக்கும். பூமி அதன் செழிப்புகளை சரியான முறையில் தந்து கொண்டிருக்கும். உயிருடன் இருப்பவர்கள் தங்களில் இறந்தவர்கள் குறித்து இன்ன மனிதர்களுக்குஅல்லாஹ் இன்னும் ஆயுளை அதிகமாக்கி இவருடைய காலத்தில் வாழ வைத்திருக்கலாமே என்று எண்ணுவார்கள். மற்றொரு அறிவிப்பில் அவர்கள் கணக்குப் பார்க்காமல் மக்களுக்கு வாரி வாரி வழங்குவார்கள். என்றும் கூறப்பட்ட்டுள்ளது.
நபியின் குடும்பத்தார் விஷயத்தில் - சமுதாயத்தின் கடமை என்ன
عَنْ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ قَالَ ارْقُبُوا مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَهْلِ بَيْتِهِ –بخاري – 3713
والمراقبة للشيء المحافظة عليه , يقول احفظوه فيهم فلا تؤذوهم ولا تسيئوا إليهم . (فتح الباري
அபூபக்கர் (ரலி) கூறினார்கள். நபியின் குடும்பத்தார் விஷயத்தில் முஹம்மது (ஸல்) அவர்களிடம் கவனமாக நடந்து கொள்ளுங்கள்- நூல் புகாரீ
முஹம்மது (ஸல்) அவர்கள் குடும்பத்தினர் விசயத்தில் எச்சரிக்கையாக நடந்து கொள்வதன் மூலம் பெருமானரின் உணர்வுகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு தொல்லை தந்து விடாதீர்கள். தீங்கிழைத்து விடாதீர்கள். என்பது இந்த வாசக்த்தின் கருத்து என புகாரியின் விரிவுரையாளர் இப்னு ஹஜர் ரஹ் கூறுகிறார்கள்
அவர்கள் மீது சலவாத் சொல்ல வேண்டும். அதாவது துஆச் செய்ய வேண்டும்
இது பற்றி இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் படித்த கவிதை
وللإمام الشافعي رضي الله عنه
يـا أهل بيت رســـول الله حُبكـــم
فـرضٌ مــن الله فـي القـرآنِ أنزله
يكـفيكم مــن عظـيم الفخـــر أنكم
مـن لـم يصــل عليكم لا صلاة لـه
فقوله لا صلاة له يحتمل أن المراد صحيحة فيكون موافقا للقول القديم بوجوب الصلاة على الآل ويحتمل أن المراد لا صلاة كاملة فيوافق أظهر قوليه وهو الجديد (اعانة الطالبين)
அஹ்லெ பைத்துகளை நேசித்தல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினரை பழிப்பதோ, இவர்களெலாம் என்ன வாரிசுகள் என்று இழிவாகப் பேசவோ, வேறு வகைகளில் அவர்கள் மனம் புண்படுமாறு நடந்து கொள்ளவோ கூடாது
அவர்களிடம் ஏதேனும் ஒரு குறை தென்பட்டால் பெருமானாரின் குடும்பம் என்பதை தொடர்பு படுத்தியோ சுட்டிக்காட்டியோ பேசிவிடக்கூடாது. இவ்வாறு நடந்து கொள்ள வேண்டியது ஈமானிய பண்பு என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்
நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை அப்பாஸ் கூறுகிறார்கள்:
عَنْ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ قَالَ كُنَّا نَلْقَى النَّفَرَ مِنْ قُرَيْشٍ وَهُمْ يَتَحَدَّثُونَ فَيَقْطَعُونَ حَدِيثَهُمْ فَذَكَرْنَا ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا بَالُ أَقْوَامٍ يَتَحَدَّثُونَ فَإِذَا رَأَوْا الرَّجُلَ مِنْ أَهْلِ بَيْتِي قَطَعُوا حَدِيثَهُمْ وَاللَّهِ لَا يَدْخُلُ قَلْبَ رَجُلٍ الْإِيمَانُ حَتَّى يُحِبَّهُمْ لِلَّهِ وَلِقَرَابَتِهِمْ مِنِّي إبن ماجة
நாங்கள் குறைஷியரில் ஒரு குழுவினரை சந்தித்தோம். எங்களைப் பார்த்ததும் அவர்கள் பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள். இதைப் பற்றி நபி (ஸ்ல்) அவர்களிடம் நாங்கள் கூறினோம். அதற்கவர்கள் “என்னுடைய குடும்பத்தினரை நேசிக்கிற போதுதான் ஒருவருடைய உள்ளத்தில் ஈமான் நுழையும். அல்லாஹ்விற்காகவும் என்னிடமிக்கிற நெருக்கத்திற்காகவும் அவர்களை அவர் நேசிக்க வேண்டும்” என்றார்கள் (இப்னுமாஜா )
பெருமானாரின் குடும்பத்தாரின் சிறப்புக்கள். குடும்பங்களில் சிறந்த பரிசுத்தமான குடும்பம்
قال رسول الله -صلى الله عليه وسلم-: (إن الله اصطفى كنانة من ولد إسماعيل، واصطفى قريشاً من كنانة، واصطفاني من بني هاشم- (مسلم (2276)
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَقْتَسِمُ وَرَثَتِي دِينَارًا مَا تَرَكْتُ بَعْدَ نَفَقَةِ نِسَائِي وَمَئُونَةِ عَامِلِي فَهُوَ صَدَقَةٌ - البخاري -3096
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என் வாரிசுகள் ஒரு தீனாரைக் கூட (வாரிசு) பங்காக பெற மாட்டார்கள். என் மனைவிமார்களுக்கு சேரவேண்டிய வாழ்க்கைச் செலவு என் பிரதிநிதியின் ஊதியமும் போக நான் விட்டுச் செல்பவையெல்லாம் ஏழைகளுக்குச் சேர வேண்டிய தர்மமேயாகும்).
فَقَالَ أَبُو بَكْرٍ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا نُورَثُ مَا تَرَكْنَا صَدَقَةٌ – البخاري
அஹ்லு பைத்துகள் அமைதியின் சின்னங்கள்
· بقاؤهم أمان للأمة واقتفاؤهم نجاة لها
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக