வியாழன், 10 அக்டோபர், 2024

இறைநேசர்களின் வழியில் உள்ளத்தைப் பக்குவப் படுத்துதல்

11-10-2024    ★    ரபீஉல் ஆகிர் 07    ★   ஹிஜ்ரி :1446    ★   بسم الله الرحمن الرحيم  


 وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى (40) فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى (41)النازغات

மனம் போன போக்கில் வாழாமல் தன் நஃப்ஸை கட்டுப்படுத்துவது அவ்வளவு எனிதான காரியம் அல்ல. இஃப்தார் நேரத்தில் துஆ கேட்டால் ஏற்கப்படும் என்று நன்றாக தெரிந்தும் கூட இந்த நஃப்ஸ் முன்னால் இருக்கும் கஞ்சியின் மீதும் வடையின் மீதும் தான் மையல் கொள்கிறது. இந்த சின்ன விஷயத்தில் கூட நம்மால் நஃப்ஸை கட்டுப்படுத்த முடியா விட்டால் பெரிய விஷயங்களில் கட்டுப்படுத்துவது அறவே முடியாது. நபி யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் தனிமையில் தன் எஜமானி அழைத்தும் நஃப்ஸைக் கட்டுப்படுத்தியதால் அல்லாஹ் பெரும் அந்தஸ்தை பதவியைத் தந்தான்

நஃப்ஸை கட்டுப்படுத்தா விட்டால் நாம் செய்யும் அமல்களின் பலனை முழுமையாகப் பெறுவது கடினம்.

   ஒரு மனிதர் நான் இறைவனை தியானம் செய்யப் போகிறேன். அதற்கு எந்த இடையூறும் இருக்கக்கூடாது என்று சொல்லி ஓரிடத்தில் தனிமையில் அமர்ந்து தியானம்  செய்ய ஆரம்பித்தார். அந்த நேரத்தில் ஒரு அழகிய பெண் நடந்து வரும் சப்தம் கேட்டது. அந்தப் பெண்ணைப் பார்த்தார். அன்றைக்கு அவருடைய தியானம் கலைந்தது. அடுத்த நாளும் அவர் முயற்சியை கை விடாமல் என் கண்கள் திறந்திருந்தால் தானே யாரையும் பார்க்க முடியும். என்று கூறி தன் கண்களை துணியால் கட்டிக் கொண்டு தியானத்தில் அமர்ந்தார். அப்போதும் அதே பெண் நடந்து வர, அவளின் கொலுசு சப்தம் கேட்டது. உடனே அவருடயை தியானம் கலைந்தது. அடுத்த நாள் அவர் என் காதுகளையும் மூடிக் கொண்டால் எந்த சப்தமும் இடையூறு செய்யாது  என்று கூறி தன் காதுகளையும் மூடியவாறு தியானத்தில் அமர்ந்தார் அப்போதும் அதே பெண் தலை நிறைய மல்லிகைப்பூவுடன் வர, அந்த நறுமணம் இவருடைய தவத்தை கலைத்து விட்டது. அடுத்த நாள் அவர் தன் மூக்கையும் மூடியவாறு தியானத்தில் அமர்ந்தார். இப்போது அந்தப் பெண்ணும் வரவேயில்லை. ஆனால் குறிப்பிட்ட அந்த நேரம் வந்தவுடன் இவர் மனதில் நேற்று இதே நேரம் அந்தப் பெண் வந்தாள். என்ற சிந்தனை ஏற்பட்டது. உடனே அவருடயை தவம் கலைந்தது.                                       

-படிப்பினை-மனதை பக்குவப்படுத்தாமல் வேறு எதை மூடினாலும் பலனில்லை

உள்ளத்தைப் பரிசுத்தப் படுத்தியவர்கள் பிறரைப் பற்றி தவறாக  எண்ண மாட்டார்கள்

 உள்ளம் என்பது ஒரு கண்ணாடி என்பார்கள் அந்தக் கண்ணாடி எவ்வளவு அழுக்காக இருக்கிறதோ அந்த அளவுக்கு எதிரில் உள்ள உருவம் மங்கலாகவே தெரியும். அதேபோல் ஒருவரின் உள்ளம் மாசு பட்டிருந்தால் அவர் தன்னைப் போலவே மற்றவர்களையும் பார்ப்பார். எவர் மீதும் நல்லெண்ணம் கொள்ள மாட்டார். ஆகவே கல்பு என்ற கண்ணாடியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கண்ணாடியை சுமார் 10 வருடங்களாக துடைக்காமல் இருந்து அதன் பின்பு அதை எடுத்து ஒரே நாளில் எப்படியாவது துடைத்து சுத்தமாக்கி விட வேண்டும் என்று நினைத்து, என்ன தான் கஷ்டப்பட்டு துடைத்தாலும் அந்த மங்கலான நிறம் மாறுவது கடினம். அதேபோல் படிப்படியாக மனதைப் பக்குவப்படுத்தாமல் அவசர  கதியில் பக்குவப்படுத்துவது சிரமம். 

இறை நேசர்கள் உள்ளத்தைப் பரிசுத்தப் படுத்தியதால் செல்வச் செழிப்பை விரும்ப மாட்டார்கள்

عن  خالد بن الفزر قال : ( كان حيوة بن شريح دعاء من البكائين وكان ضَيِّقَ الحال جِدا فجلستُ إليه ذات يوم وهو مختل وحده يدعو فقلتُ : رحمك الله لو دعوتَ اللهَ فوَسَّعَ عليك في معيشتك قال : فالتفت يمينا وشمالا فلم ير أحدا فأَخَذَ حصاة من الأرض فقال : ( اللهم إِجْعَلْها ذهبا )  قال : فإذا هي والله تبرة في كفه ما رأيت أحسن منها  قال : فرمى بها إلَيَّ وقال : ما خَيْرَ في الدنيا إلا الآخرة ثم التفت إليَّ فقال : هو أعلم بما يَصلح عباده فقلتُ : ما أصنع بهذه ؟ قال : اِسْتَنْفِقْها فهَبَتُّهُ والله إِنْ أَراَدَهُ ) (مجابوا الدعوة)

ஹாலித் ரஹ் கூறுகிறார்கள்- ஹயாத் இப்னு ஷூரைஹ் ரஹ்எப்போதும் அழுது துஆ செய்பவர். மிகவும் ஏழையாக இருந்தார். ஒருநாள் அவர் துஆ செய்யும்போது அருகில் அமர்ந்தேன். அவரிடம் நீங்கள் அல்லாஹ்விடம் துஆ செய்தால் உங்களுக்கு செல்வத்தை வழங்குவான் அல்லவா? என்று கேட்டேன். உடனே அவர் சுற்று முற்றும் திரும்பிப் பார்த்து வேறு யாரும் தம்மை கவனிக்காததை அறிந்தவுடன் அருகில் இருந்த சிறிய கல்லை எடுத்து யாஅல்லாஹ் இதை தங்கமாக மாற்று என்று துஆ செய்தார். உடனே அது அழகான தங்கமாக மாறியது. அதை என்னை நோக்கி எறிந்து இது போன்ற துன்யாவின் அலங்காரங்களில் எந்த நன்மையும் இல்லை. மறுமையின் காரியங்களில் மட்டுமே நன்மை உண்டு. யாருக்கு எது நல்லது என்பதை அல்லாஹ் நன்கு அறிவான் (எனக்கு இந்த ஏழ்மைதான் நல்லது என்பது அல்லாஹ்வின் நாட்டமாக இருக்கலாம்) என்றார்கள். பிறகு நான் அவர்களிடம் இதை வைத்து நான் என்ன செய்யட்டும் என்று கேட்க, இதை உனக்கு அன்பளிப்பாக தந்து விட்டேன். அதை நீ செலவு செய்து கொள். என்று கூறினார். அவருக்கு அந்த தங்கத்தின் மீது எந்த நாட்டமும் இல்லை.       

நஃப்ஸைக் கட்டுப் படுத்தியவர்களுக்கு எல்லாம் கைகூடும். பிற படைப்புகள் இவரைக் கண்டு அஞ்சும்

كان عمر يخطب يوم الجمعة فعرض فى خطبته أن قال: يا سارية الجبل من استرعى الذئب ظلم فالتفت الناس بعضهم إلى بعض فقال لهم علىٌّ ليخرجن مما قال فلما فرغ سألوه فقال: وقع فى خلدى أن المشركين هزموا إخواننا وأنهم يمرون بجبل ، فإن عدلوا إليه قاتلوا من وجه واحد  وإن جازوا هلكوا فخرج منى ما تزعمون أنكم سمعتموه فجاء البشير بعد شهر فذكر أنهم سمعوا صوت عمر فى ذلك اليوم  قال: فعدلنا إلى الجبل ففتح الله علينا (أبو نعيم فى الدلائل

உமர் ரழி அவர்கள் இராக் நாட்டிற்கு ஸாரியா ரழி அவர்களின் தலைமையில் ஒரு படையை அனுப்பியிருந்தார்கள் இந்நிலையில் ஒரு ஜும்ஆவில் பிரசங்கம் செய்து கொண்டிருந்த போது திடீரென தன் பிரசங்கத்துக்கிடையில் யா ஸாரியா அல்-ஜபல் ஸாரியாவே மலையைப்பாருங்கள் என்று கூறி விட்டு தன் பிரசங்கத்தை மீண்டும் தொடர்ந்தார்கள் மக்கள் அனைவரும் சம்பந்தமில்லாத வார்த்தையை உமர் ரழி கூறுவதாக கருதினார்கள் பிரசங்கம் முடிந்த பின் உமர் ரழி கூறினார்கள் நம் சகோதரர்கள் பின்பு  ஒரு மாதம் கழித்து அந்தப்படையினர் மதீனா திரும்பி வந்து சொன்ன விஷயம் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது அதாவது நாங்கள் போரிட்டுக் கொண்டிருந்த போதுமலைக்குப்பின்னால் எதிரிகள் இருப்பதை கவனிக்காமல் அந்த மலையை கடக்க முற்பட்டோம் அப்போது எங்கிருந்தோ ஒரு சப்தம் வந்தது அந்த சப்தம் வந்தவுடன் நாங்கள் மலைக்குப் பின்னால் கவனித்தோம் நான் எங்கள் பாதையை மாற்றிக் கொண்டோம்

وقعت الزلزلة في المدينة فضرب عمر الدرة على الأرض وقال : اسكني بإذن الله فسكنت وما حدثت الزلزلة بالمدينة بعد ذلك .

: وقعت النار في بعض دور المدينة فكتب عمر على خزفة : يا نار اُسكني بإذنِ الله فألقوها في النار فانطفأت في الحال (الرازي)

மதீனாவில் ஒருமுறை பூகம்பம் ஏற்பட்ட போது தரையை சாட்டையால் அடித்து அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு நீ அடங்கு என்று உமர் ரழி அவர்கள் கூறிய போது பூகம்பம் நின்றது. அதன் பின் மதீனாவில் பூகம்பம் ஏற்படவேயில்லை. அதேபோல் மதீனாவில் ஒருமுறை ஒரு வீட்டில் நெருப்பு பற்றியது. உமர் ரழி அவர்கள் ஒரு துண்டுச் சீட்டில் நெருப்பே அடங்கு என்று எழுதி அதில் போடச் சொன்னார்கள். அவ்வாறு போட்டவுடன் உடனே நெருப்பு அணைந்தது.                           

உமர் ரழி அவர்கள் தனிமையில் இருப்பதைக் கண்டு சந்தர்ப்பம் பார்த்து ரோம் நாட்டின் தூதுவன் உமர் ரழி அவர்களைக் கொல்ல முற்பட்ட போது பூமியைப் பிளந்து இரண்டு சிங்கங்கள் தோன்றிய போது அவன் பயந்து உருவிய வாளை கீழே போட்ட பின் அவைகள் மறைந்தன. அதற்குள் உமர் ரழி எழுந்த போது அவர்களிடம் நடந்ததைக் கூறி இஸ்லாத்தையும் தழுவினான்.             நஃப்ஸைக் கட்டுப்படுத்தி  தான் சேமித்து வைத்த பணத்தைக் கொண்டு  ஒரு நல்ல மனிதர் செய்த காரியம்

உண்மைச் சம்பவம்- வட மாநிலத்தின் ஒரு பகுதியில் ஒரு நல்ல மனிதர் இருந்தார். வீண் செலவுகளை அறவே விரும்ப மாட்டார். அவர் எங்காவது வெளியே சென்று ஏதேனும் ஒரு திண்பண்டத்தை விரும்பி உண்ண நினைத்தால் அதற்கான விலையை விசாரிப்பார். பிறகு அதை வாங்காமல் அந்தப்பணத்தை மிச்சப்படுத்தி சேமிப்பார். இப்படியாக சேமித்து பெரும் தொகையை சேர்த்தி விட்டார். இறுதியில் அதைக் கொண்டு என்ன செய்யலாம் என யோசித்த போது அந்தப் பகுதியில் ஒரு மஸ்ஜிதின் தேவை அதிகம் இருந்தது. எனவே தன்னுடைய செலவில் சேமித்த அப்பணத்தைக் கொண்டு மஸ்ஜித் கட்டினார். இன்றும் அவரின் நினைவாக அந்த மஸ்ஜித் இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை ஒரு மஸ்ஜிதில் ரமழானில் தராவீஹ் தொழ வைக்கும் ஹாஃபிழுக்கு நடுத்தர வசதியுடைய தனிப்பட்ட ஒருவர் ஹதியா தருகிறார். ஆனால் அவர் அதற்காக வருடம் முழுவதும் சிறிது சிறிதாக சேர்த்து வைக்கிறார். ரமழான் கடைசியில் அதை அப்படியே ஹாஃபிழுக்கு ஹதியாவாக தருகிறார். சேர்த்து வைத்த பணத்தை மொத்தமாக பார்க்கும்போது சுய நலமான சிந்தனை மேலோங்கி விடுகின்ற இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட நல்லவர்களும் இருக்கின்றனர். 

உள்ளத்தைப் பரிசுத்தப் படுத்தியவர்கள் எந்த ஒரு சிறு பாவத்தையும்  பெரிதாக   கருதுவார்கள் 

عَنْ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ حَدِيثَيْنِ أَحَدُهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْآخَرُ عَنْ نَفْسِهِ قَالَ إِنَّ الْمُؤْمِنَ يَرَى ذُنُوبَهُ كَأَنَّهُ قَاعِدٌ تَحْتَ جَبَلٍ يَخَافُ أَنْ يَقَعَ عَلَيْهِ وَإِنَّ الْفَاجِرَ يَرَى ذُنُوبَهُ كَذُبَابٍ مَرَّ عَلَى أَنْفِهِ (بخاري) 6308

சிறந்த முஃமின் ஒரு பாவத்தைச் செய்து விட்டால் தனது தலைக்கு மேலே பெரிய மலை இருப்பது போலவும் அதற்குக் கீழே அமர்ந்திருப்பது போலவும் அது தன் மீது விழுந்து விடுவது போலவும் கவலைப்படுவார். ஆனால் பாவியான மனிதன் பெரும்பாவத்தைச் செய்தாலும் தன் மூக்கைக் கடந்து செல்லும் ஈயை எப்படி ஒருவர் பொருட்படுத்த மாட்டாரோ  அதுபோல் அவரது பாவத்தைப் பொருட்படுத்த மாட்டார். மலையை உதாரணமாகக் கூறிய காரணம். மற்ற ஆபத்துகளில் இருந்து கூட தப்பித்துக் கொள்ள வாய்ப்புண்டு. ஆனால் இந்த ஆபத்திலிருந்து தப்புவது கடினம்.                                

والحكمة في التمثيل بالجبل إن غيره من المهلكات قد يحصل النسبب إلى النجاة منه بخلاف الجبل إذا سقط على الشخص لا ينجو منه عادة (مرعاة

فعلامة المؤمن أن توجعه المعصية حتى يسهر ليله فيما حل بقلبه من وجع الذنب ...فالمؤمن الكامل إذا أذنب يحل به أكثر من المصاب لحجبه عن ربه ومن أشفق من ذنوبه فكان على غاية الحذر منها لا يرجو لغفرها سوى ربه فهو يقبل على الله وهو الذي أراده الله من عباده ليتوب عليهم ويجزل ثوابهم  ولهذا قال بعض العارفين : ذنب يوصل العباد إلى الله تعالى خير من عبادة تصرفه عنه وخطيئة تفقره إلى الله خير من طاعة تغنيه عن الله. (فيض القدير

சிறந்த முஃமின் ஒரு சிறு பாவம் செய்தாலும்  அந்தக் கவலையால் அவருக்கு இரவெல்லாம் தூக்கம் வராது. அதற்காக மிகவும் வருந்துவார். அதுவே அவரது அந்தஸ்து உயர காரணமாக ஆகி விடும். இதனால்தான் சில ஆரிஃபீன்கள் “ஒரு அடியானிடம் ஏற்படும் பாவம் கூட சில நேரங்களில் அல்லாஹ்விடம் நெருக்கத்தை அதிகமாக்கி விடுகிறது. ஆனால் சில நேரங்களில் ஒரு அடியானிடம் ஏற்படும் நல்ல அமல் (அதை பிறரிடம் சொல்லிக் காட்டுவது போன்ற காரணங்களால்) அல்லாஹ்வை விட்டும் அவனைத் திருப்பி விடுகிறது. என்பார்கள்.                                              

عَنِ ابْنِ بُرَيْدَةَ لَوْ عُدِلَ بُكَاءُ أَهْلِ الأَرْضِ بِبُكَاءِ دَاوُد مَا عَدَلَهُ  وَلَوْ عُدِلَ بُكَاءُ دَاوُد وَبُكَاءُ أَهْلِ الأَرْضِ بِبُكَاءِ آدَمَ حِينَ أُهْبِطَ إِلَى الأَرْضِ مَا عَدَلَهُ (مصنف ابن ابي شيبة

உலக மக்கள் அனைவரின் அழுகையையும் ஒன்று சேர்த்தாலும் நபி தாவூத் அலை அவர்களின் அழுகைக்கு ஈடாகாது. நபி தாவூத் அலை அவர்களின் அழுகையையும், உலக மக்கள் அனைவரின் அழுகையையும் ஒன்று சேர்த்தாலும் நபி ஆதம் அலை அவர்களின் அழுகைக்கு ஈடாகாது.

நஃப்ஸைக் கட்டுப்படுத்துவதின் முக்கிய அங்கம் தற்பெருமையை  விட்டொழித்தல்

   இறை நேசர் ஜுனைதுல் பக்தாதீ ரஹ் அவர்களிடம் மாணவராக இருந்த  ஒருவர் சுமார் 12 வருடங்கள் கழித்து ஊருக்குப் புறப்பட்டார் அப்போது அவர் ஷைகு அவர்களிடம் பயணம் கூறும்போது நான் இத்தனை வருடங்களாக என் மனதில் வைத்துள்ள ஒரு கேள்வியை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். இத்தனை வருடத்தில் நான் உங்களிடம் எந்த கராமத்தையும் நான் கண்டதில்லையே என்று கூற ஷைகு அவர்கள் இந்த 12 வருடங்களில் ஏதாவது ஒரு நேரம் இமாம் ஜமாஅத்தை நான் தவற விட்டதை நீ பார்த்திருக்கிறாயா என்று கேட்டார்கள் இல்லை என்று இவர் பதில் கூறினார் மீண்டும் ஷைகு அவர்கள் இந்த 12 வருடங்களில் ஏதேனும் ஒரு நேரம் தக்பீர் தஹ்ரீமாவை நான் தவற விட்டதை நீ பார்த்திருக்கிறாயா என்று கேட்க இல்லை என்று இவர் பதில் கூறினார் அதற்கு ஷைகு அவர்கள் இதை விட என்ன அற்புதம் உமக்கு வேண்டும் என்றார்கள்... உடனே அந்த சீடர் ஷைகு அவர்களை தவறாக எண்ணி விட்டோமே என்று வருந்தியவராக  உங்களுடைய நிலையை நானும் அடைய வேண்டும் நான் ஊருக்குச் சென்று விட்டு மீண்டும் திரும்ப உங்களிடம் எப்போது வரட்டும் என்று கேட்டார் அதற்கு ஷைகு அவர்கள் "நான்" இறந்த பிறகு வா என்றார்கள் உடனே அந்த சீடர் ஷைகு அவர்களே நீங்கள் இறந்த பின்பு வருவதால் எனக்கு என்ன பிரயோஜனம் என்றார் அதற்கு ஷைகு அவர்கள் நான் இறந்த பிறகு என்று என்னுடைய மவ்த்தை நான் குறிப்பிடவில்லை மாறாக "நான்" என்ற அகம்பாவம் எப்போது உன் உள்ளத்தில் அழியுமோ, இறந்து விடுமோ அப்போது என்னிடம் வா என்ற பொருளில் தான் நான் கூறினேன் என்றார்கள். 

அமல்களில் பெருமையடித்தே பலர் பாழாகி இருக்கிறார்கள். இறைநேசர்கள் அவ்வாறல்ல

مما اشتهر عن الشيخ عبد القادر رحمه الله مما يدل على فقهه وثبات قدمه في العلم ما حكاه عنه ابنه موسى كما قال ابن رجب الحنبلي رحمه الله: (سمعتُ والدي يقول: خرجتُ في بعض سياحاتي إلى البرية9، ومكثْتُ أياماً لا أجدُ ماءً، فاشتد بي العطش، فأَظَلَّتْنِي سحابةٌ نزلَ عليَّ منها شيء يشبه الندى10 فترويتُ منه، ثم رأيتُ نوراً أضاء به الأفق، وبَدَتْ لي صورة، ونوديتُ منها: يا عبد القادر أنا ربُّك، وقد أحللتُ لك المحرمات، أوقال: ما حرمتُ على غيرك؛ فقلت: أعوذُ بالله من الشيطان الرجيم اِخْسَأْ11 يا لَعِيْنْ؛ فإذا ذلك النور ظلامٌ، وتلك الصورة دخانٌ، ثمخاطبني وقال: يا عبد القادر نجوتَ مِنِّي بعلمك بحكم ربك وفِقْهِك في أحوال منازلاتك، ولقد أضللتُ بمثل هذه الواقعة سبعين من أهل الطريق؛ فقلتُ: لربي الفضل والمنة؛ قال: فقيل له: كيف علمتَ أنه شيطان؟ قال: بقوله: وقد أحللتُ لك المحرمات) (من كتب ابن تَيْمِيَّة) (من اعتقد أن شيخاً يحلُّ له ما حرَّم الله، أويرفع عنه ما أوجبه على خلقه كالصلاة مثلاً فقد كفر.)  موسوعة الرد على الصوفية

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் வாழ்வில் நடைபெற்ற பிரபலமான சம்பவங்களில் ஒன்றை அவர்களே சொல்லிக் காட்டினார்கள். நான் என்னுடைய பயணங்களில் ஒரு பயணத்தில்  குடிக்க தண்ணீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டேன். அதே நிலையில் கடற்கரையில் நான் இறை தியானத்தில் இருந்த போது எனக்கு முன்னால் மழை மேகம் போன்ற ஒரு காட்சி தோன்றியது. அதிலிருந்து இதமான காற்றை உணர்ந்தேன். பின்பு ஆகாயத்தையே நிரப்பும் அளவுக்கு பெரும் ஒளியை நான் பார்த்தேன். அதிலிருந்து ஒரு உருவம் தோன்றி அப்துல் காதிரே! நான்தான் உன்னுடைய ரப்பு. மற்றவர்களுக்கு ஹராமாக்கப்பட்ட விஷயங்களையெல்லாம் உமக்கு நான் ஹலாலாக்கி விட்டேன். என்று கூறியது. உடனே நான் இது ஷைத்தானின் வேலை என்று எண்ணி சுதாரித்துக் கொண்டு அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் சாபத்திற்குரியவனே!  இழிவடைந்து விடு! என்றேன். ஆகாயத்தையே நிரப்பும் அளவுக்கு இருந்த அந்த ஒளி உடனே மறைந்து இருளாகி விட்டது. அந்த உருவமும் புகையாக மாறி விட்டது. பின்பு அவன் என்னை நோக்கி அப்துல் காதிரே! உம்முடைய கல்வி ஞானத்தாலும்  உம்முடைய உயர்வான பல்வேறு அந்தஸ்துகளைக் கொண்டும் என்னிடமிருந்து தப்பித்துக் கொண்டீர். நான் இது போன்ற யுக்தியை பயன்படுத்தி எழுபது தரீகத் வாதிகளை நான் கெடுத்துள்ளேன். (ஆனால் நீர் உன்னுடைய திறமையால் தப்பித்துக் கொண்டீர்)என்று பெருமையை உண்டாக்கும் வகையில் அடுத்த சூழ்ச்சியை ஆரம்பித்தான். அப்போதும் நான் சுதாரித்துக் கொண்டு (என்னிடம் எவ்வித பெருமையும் இல்லை. எவ்வித திறமையும் இல்லை) என்னுடைய ரப்புக்கே அனைத்துப் பெருமையும் உண்டு. என்று கூறினேன்.                                                                 

9,கடற்கரை 10,மழையைப்போல் 11,சாபத்திற்குரியவனே!  இழிவடைந்து விடு

இறை நல்லடியார்களின் பேணுதலுக்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்கள்

وفي تهذيب الكمال عن الإمام الشافعي الناس عيال على أبي حنيفة في الفقه وعن ابن مبارك ما رأيت أورع من أبي حنيفة وعن مكي بن إبراهيم كان أعلم أهل زمانه. لما مات صلي عليه ست مرات كثرة الزحام وعن وكيع قال: كان أبو حنيفة عظيم الأمانة، وكان يؤثر رضا الله تعالى على كل شىء،- وعن ابن المبارك، قال: قلت لسفيان الثورى: ما أبعد أبا حنيفة من الغيبة، ما سمعته يغتاب عدوًا له قط، قال: هو والله أعقل من أن يسلط على حسناته ما يذهب بها. وعن على بن عاصم، قال: لو وزن عقل أبى حنيفة بعقل نصف أهل الأرض لرجح بهم.

இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்களைப் போன்ற பேணுதலான ஒருவரை நான் கண்டதில்லை என இப்னுல் முபாரக் ரஹ் கூறினார்கள் அவர்கள் வஃபாத்தான போது இட நெருக்கடியால்  ஆறு தடவை ஜனாஸா தொழுகை  நடைபெற்றது.  அவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்திருந்தார்கள்.  என வகீஃ ரஹ் அவர்கள் கூறினார்கள் அவர்கள் வாழ்வில் யாரைப் பற்றியும் புறம் பேசியதில்லை. என  இப்னுல் முபாரக் ரஹ் கூறினார்கள்.       

இமாம் அவர்களின் பேணுதலுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு

قال يزيد بن هارون رايته (أي ابا حنيفة رح) جالسا يوما في الشمس عند باب انسان فقلت له يا ابا حنيفة لو تحولت الي الظل فقال لي علي صاحب هذه الدار دراهم ولا احب ان اجلس في ظل فناء داره   (الابداع)

    பொருள் - ஒரு நான் இமாமுல் அஃழம் ரஹ் அவர்கள் வெயிலில் ஒரு வீட்டின் நிழலருகே அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களிடம் (அந்த வீட்டின்) நிழலுக்குச் சென்று நீங்கள் அமரலாமே என்றேன். அதற்கு இமாமுல் அஃழம் ரஹ் அவர்கள் கூறியதாவது அந்த வீட்டுடையவர் என்னிடம் கடனாக வாங்கிய சில திர்ஹங்கள் மீதமுள்ளது. அதனால் அவரின் வீற்றின் முற்றத்தில் நான் அமர விரும்பவில்லை. (ஏனெனில் அது கூட வட்டியாகி விடுமே என்ற அச்சம் தான்) என்று பதில் கூறினார்கள்

யாருடைய மனதையும் புன்படுத்தாமல் இருப்பதும் இறைநேசர்களின் அடையாளம்

     மற்றொரு நேரத்தில் இமாமுல் அஃழம் ரஹ் அவர்களுக்கு கடன் பாக்கி வைத்திருந்த ஒரு யூதரின் வீட்டை இமாம் அவர்கள் கடந்து செல்லும்போது அவர்களின் செருப்பில் நஜீஸ் ஆகி விட்டது அதை உதறும்போது அதனுடைய ஒரு துளி அந்த யூதரின் வீட்டுச் சுவற்றின் மீது பட்டு விட்டது. உடனே இமாம் அவர்கள் மிகவும் கவலைப்பட்டவராக இப்போது நான் என்ன செய்ய செய்வேன். அந்த நஜீஸை நான் சுரண்டினால் அந்த வீட்டின் சுண்ணாம்பு மற்றும் காரையின் சில பகுதிகளை நான் பெயர்த்தவனாக ஆகி விடுவேன். (அந்தக் காலத்து வீடுகள் அந்த அமைப்பில் தான் இருக்கும்)  அதே வேளையில் அதை நான் அப்படியே விட்டு விட்டால் அடுத்தவரின் வீட்டை அசிங்கப்படுத்திய குற்றம் என் மீது வந்து விடுமே நான் என்ன செய்யட்டும் என்று புலம்பிய நிலையில் அவருடைய வீட்டுக் கதவை தட்டுகிறார்கள். அவரோ இமாம் அவர்கள் கடனை வசூல் செய்யத் தான் வந்துள்ளார் என்று எண்ணி வேகமாக வந்து கதவைத் திறந்து நீங்கள் சொல்லியிருந்தால் நான் வந்திருக்க மாட்டேனா? என்றார் ஆனால் இமாம் அவர்கள் நான் அதற்கு வரவில்லை உங்கள் வீட்டுச் சுவற்றை நான் இப்படி அசிங்கம் செய்து விட்டேன் அதை சுத்தம் செய்யும் வழியை எனக்குக் கூறுங்கள் என்று கூற, அவர் ஆச்சரியமடைந்தவராக “கொஞ்சம் இருங்கள். என் வீட்டை நீங்கள் சுத்தம் செய்யும் முன்பு நான் என் உள்ளத்தை சுத்தம் செய்ய வேண்டியுள்ளது” என்று கூறி இஸ்லாத்தை ஏற்றார்  

இறைநேசர்களின் வழியில் உள்ளத்தைப் பக்குவப் படுத்தியவர்கள் அமானித த்தைப் பேணுபவர்களாக இருப்பார்கள். அடுத்தவர்களின் பொருள் மீது அறவே ஆசை கொள்ள மாட்டார்கள்

அமானிதம் என்பதற்கு நம்மிடம் ஒப்படைத்ததை அப்படியே திருப்பித் தருவது உட்பட விரிவான பொருள் உண்டு

وَمِنْ أَهْلِ الْكِتَابِ مَنْ إِنْ تَأْمَنْهُ بِقِنْطَارٍ يُؤَدِّهِ إِلَيْكَ وَمِنْهُمْ مَنْ إِنْ تَأْمَنْهُ بِدِينَارٍ لَا يُؤَدِّهِ إِلَيْكَ إِلَّا مَا دُمْتَ عَلَيْهِ قَائِمًا (75)ال عمران   بِقِنْطَارٍ" أَيْ بِمَالٍ كَثِير "يُؤَدِّهِ إلَيْك" لِأَمَانَتِهِ كَعَبْدِ اللَّه بْن سَلَام أَوْدَعَهُ رَجُل أَلْفًا وَمِائَتَيْ أُوقِيَّة ذَهَبًا فَأَدَّاهَا إلَيْهِ "وَمِنْهُمْ مَنْ إنْ تَأْمَنهُ بِدِينَارٍ لَا يُؤَدِّهِ إلَيْك" لِخِيَانَتِهِ "إلَّا مَا دُمْت عَلَيْهِ قَائِمًا" لَا تُفَارِقهُ فَمَتَى فَارَقْته أَنْكَرَهُ كَكَعْبِ بْن الْأَشْرَف اسْتَوْدَعَهُ قُرَشِيّ دِينَارًا فَجَحَدَهُ (تفسير الجلالين

அப்துல்லாஹ் இப்னு ஸலாம் ரழி அவர்களிடம் ஒருவர் ஆயிரத்து இருநூறு ஊகியா தங்கத்தைக் கொடுத்து வைத்தார். அதை அவர் கேட்கும்போது  அப்படியே திருப்பித் தந்தார்கள். ஒரு ஊகியா என்பது 38 கிராம். ஆனால் கஃப் இப்னு அஷ்ரஃபிடம் ஒரு தீனாரை ஒருவர் கொடுத்து வைத்து திரும்பக் கேட்டபோது அவன் நீ தரவில்லை என மறுத்து விட்டான்.

இறையச்சம், பேணுதல், பித்அத், துஆ பற்றி முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானீ (ரஹ்) அவர்களின் உபதேசம்

மார்க்கத்தில் பித்அத்களை உருவாக்காதே ! துஆ ஏற்கப்படுவது தாமதாகுவதைப் பற்றி அவன் மீது குறை கூறாதே நீ துஆ செய்வதில் சோர்வடையாதே. இதனால் உனக்கு லாபம் இல்லா விட்டாலும் கூட நஷ்டம் இல்லை. உன் துஆவை அல்லாஹ் உடனடியாக இவ்வுலகில் ஏற்கா விட்டாலும் மறுமையில் அதற்குரிய வெகுமதியை உனக்கு தரவே செய்வான். மாக்க்கத்தில் விலக்கப்பட்டவைகளை விட்டும்  ஒதுங்க வேண்டியது உன்னுடைய கடமையாகும். இல்லையேல் அழிவுக்கயிறு உன்னை சுற்றிக் கொள்ளும் பாவத்தில் அகப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆகுமானவற்றைக் கூட பத்தில் ஒன்பது பங்கை விட்டு நாங்கள் விலகிக் கொள்வதுண்டு என்று நபித்தோழர்களான உமர் ரழி, அபூபக்ர் ரழி ஆகியோர் கூறியுள்ளார்கள்.

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் எழுதிய ஃபுதூஹுல் ஙைப் என்ற நூலில் இருந்து ஒரு உபதேசம்.  

قَالَ "الشَّيْخُ عَبْدُ الْقَادِر رح "اِفْن عَنْ الْخَلْقِ بِحُكْمِ اللَّهِ وَعَنْ هَوَاك بِأَمْرِهِ وَعَنْ إرَادَتِك بِفِعْلِهِ لِحِينَئِذٍ يَصْلُحُ أَنْ تَكُونَ وِعَاءً لِعِلْمِ اللَّهِ" فَعَلَامَةُ فَنَائِك عَنْ خَلْقِ اللَّهِ انْقِطَاعُك عَنْهُمْ وَعَنْ التَّرَدُّدِ إلَيْهِمْ وَالْيَأْسِ مِمَّا فِي أَيْدِيهِمْ فَإِذَا كَانَ الْقَلْبُ لَا يَرْجُوهُمْ وَلَا يَخَافُهُمْ لَمْ يَتَرَدَّدْ إلَيْهِمْ لِطَلَبِ شَيْءٍ مِنْهُمْ (فتوح الغيب) شرح :افْنَ عَنْ عِبَادَةِ الْخَلْقِ وَالتَّوَكُّلِ عَلَيْهِمْ بِعِبَادَةِ اللَّهِ وَالتَّوَكُّلِ عَلَيْهِ فَلَا تُطِعْهُمْ فِي مَعْصِيَةِ اللَّهِ تَعَالَى وَلَا تَتَعَلَّقْ بِهِمْ فِي جَلْبِ مَنْفَعَةٍ وَلَا دَفْعِ مَضَرَّةٍ وَأَمَّا الْفَنَاءُ عَنْ الْهَوَى بِالْأَمْرِ وَعَنْ الْإِرَادَةِ بِالْفِعْلِ بِأَنْ يَكُونَ فِعْلُهُ مُوَافِقًا لِلْأَمْرِ الشَّرْعِيِّ لَا لِهَوَاهُ وَأَنْ تَكُونَ إرَادَتُهُ لِمَا يَخْلُقُ تَابِعَةً لِفِعْلِ اللَّهِ لَا لِإِرَادَةِ نَفْسِهِ 

கருத்து- அல்லாஹ்வின் படைப்புகளிடம் (பணக்காரர்களிடம்) தன் தேவையை  நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்களுடன் உறவாடுவதை விட்டும் விலகி  இரு.. ஞானம் உனக்கு கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிள்ளைகள் மீது அன்பு செலுத்துவதும் ஒழுக்கம் கற்பிப்பதும்

  15-11-2024    ★    ஜமாதில் அவ்வல் 12     ★    ஹிஜ்ரி :1446      ★     بسم الله الرحمن الرحيم   ஒவ்வோராண்டும் உலகம் முழுவதும் நவம்பர் 20-ம்...