18-10-2024 ★ ரபீஉல் ஆகிர் 14 ★ ஹிஜ்ரி :1446 ★ بسم الله الرحمن الرحيم
ஒவ்வொரு இயற்கைச் சீற்றங்களின் போதும் பல்வேறு விதமாக பாதிப்புகளால் பல மக்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். உதாரணமாக தற்போது பெய்த கனமழை போன்ற பேரிடர்கள் ஏற்படும்போது நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்பதை நம்முடைய மார்க்கம் வலியுறத்துகிறது. அதுதான் மனித நேயமும் கூட... ஆனால் சிலர் இதற்கு நேர் மாற்றமாக இந்த நேரத்திலும் கூட மனிதாபிமானம் இல்லாமல் அத்தியாவசியமான பொருட்களின் விலையை தாறுமாறாக விலையை ஏற்றி வியாபாரம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசியமான பொருட்களின் விலையை பல மடங்காக விலையை ஏற்றி வியாபாரம் செய்தவர்களும் உள்ளனர். ஆனால் இதுபோன்ற நேரங்களில் இலவசமாக வினியோகம் செய்ய முடிந்தால் செய்ய வேண்டும் என்பதை நம்முடைய மார்க்கம் வலியுறுத்துகிறது.
சிரமத்தில் இருப்பவருக்கு உதவுவது நபிமார்களின் நல்ல குணமாகும்
وَلَمَّا تَوَجَّهَ تِلْقَاءَ مَدْيَنَ قَالَ عَسَى رَبِّي أَنْ يَهْدِيَنِي سَوَاءَ السَّبِيلِ (22) وَلَمَّا وَرَدَ مَاءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ أُمَّةً مِنَ النَّاسِ يَسْقُونَ وَوَجَدَ مِنْ دُونِهِمُ امْرَأَتَيْنِ تَذُودَانِ قَالَ مَا خَطْبُكُمَا قَالَتَا لَا نَسْقِي حَتَّى يُصْدِرَ الرِّعَاءُ وَأَبُونَا شَيْخٌ كَبِيرٌ (23) فَسَقَى لَهُمَا ثُمَّ تَوَلَّى إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ (24) القصص
يُوسُفُ أَيُّهَا الصِّدِيقُ أَفْتِنَا فِي سَبْعِ بَقَرَاتٍ سِمَانٍ يَأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَسَبْعِ سُنْبُلَاتٍ خُضْرٍ وَأُخَرَ يَابِسَاتٍ لَعَلِّي أَرْجِعُ إِلَى النَّاسِ لَعَلَّهُمْ يَعْلَمُونَ (46) قَالَ تَزْرَعُونَ سَبْعَ سِنِينَ دَأَبًا فَمَا حَصَدْتُمْ فَذَرُوهُ فِي سُنْبُلِهِ إِلَّا قَلِيلًا مِمَّا تَأْكُلُونَ (47) ثُمَّ يَأْتِي مِنْ بَعْدِ ذَلِكَ سَبْعٌ شِدَادٌ يَأْكُلْنَ مَا قَدَّمْتُمْ لَهُنَّ إِلَّا قَلِيلًا مِمَّا تُحْصِنُونَ (48) ثُمَّ يَأْتِي مِنْ بَعْدِ ذَلِكَ عَامٌ فِيهِ يُغَاثُ النَّاسُ وَفِيهِ يَعْصِرُونَ (49)يوسف
விளக்கம்- நபி யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் திறமையாக செயல்பட்டு செழிப்பான முதல் ஏழு வருடங்களில் முடிந்த வரை சேமித்து வைத்து அரசாங்கத்தின் பைத்துல் மாலில் பத்திரப்படுத்தினார்கள். அதற்கடுத்த பஞ்சமான ஏழு வருடங்கள் வந்த போது சேமித்து வைத்த அந்த தானியங்களை நாட்டு மக்கள் அனைவருக்கும் நிவாரண உதவியாக வழங்கினார்கள். அந்தப் பணிகளில் முழுமையாக அவர்கள் ஈடு பட்டதால் தான் குடும்பம் ஒன்று சேர்ந்த பிறகு தந்தையைச் சந்திப்பதற்கும் கூட வர முடியவில்லை.
சிரமத்தில் சிக்கியவருக்கு உதவுவது ஹஜ்ஜுடைய நன்மையைப் பெற்றுத் தரும்
عَنْ عَبْدِ اللَّهِ بن عُمَرَ قَالا : مَنْ مَشَى فِي حَاجَةِ أَخِيهِ الْمُسْلِمِ أَظَلَّهُ اللَّهُ تَعَالَى بِخَمْسَةٍ وَسَبْعِينَ أَلْفَ مَلَكٍ يَدْعُونَ لَهُ ، وَلَمْ يَزَلْ يَخُوضُ فِي الرَّحْمَةِ حَتَّى يَفْرُغَ ، فَإِذَا فَرَغَ كَتَبَ اللَّهُ لَهُ حَجَّةً وَعُمْرَةً ، وَمَنْ عَادَ مَرِيضًا أَظَلَّهُ اللَّهُ بِخَمْسَةٍ وَسَبْعِينَ أَلْفَ مَلَكٍ ، لا يَرْفَعُ قَدَمًا إِلا كُتِبَتْ لَهُ حَسَنَةٌ ، وَلا يَضَعُ قَدَمًا إِلا حُطَّتْ عَنْهُ سَيِّئَةٌ ، وَرُفِعَ بِهَا دَرَجَةً حَتَّى يَقْعُدَ فِي مَقْعَدِهِ ، فَإِذَا قَعَدَ غَمَرَتْهُ الرَّحْمَةُ ، فَلا يَزَالُ كَذَلِكَ إِذَا أَقْبَلَ حَتَّى يَنْتَهِيَ إِلَى مَنْزِلِهِ . لا يُرْوَى هَذَا الْحَدِيثُ عَنِ ابْنِ عُمَرَ إِلا بِهَذَا الإِسْنَادِ رواه الطبراني في المعجم الكبير
யார் முஸ்லிமான தனது சகோதரரின் தேவையை நிறைவேற்றி வைப்பதற்காகச் செல்கிறாரோ அவருக்காக 75 ஆயிரம் மலக்குகள் தம் இறக்கைகளை விரித்த படி துஆ செய்கிறார்கள். அவரது தேவையையும் நிறைவேற்றி வைத்து விட்டால் அவருக்கு ஒரு ஹஜ் மற்றும் உம்ராவின் நன்மை கிடைக்கும். அவர் திரும்பி வரும் வரை அல்லாஹ்வின் ரஹ்மத்தில் மூழ்கியவராக இருப்பார். யார் முஸ்லிமான நோய்வாய்ப்பட்ட தனது சகோதரரை நலம் விசாரிப்பதற்காகச் செல்கிறாரோ அவருக்காக 75 ஆயிரம் மலக்குகள் தம் இறக்கைகளை விரித்த படி துஆ செய்கிறார்கள். அவர் அந்த நோயாளியிடம் அமரும் வரை இச்சிறப்பு இருக்கும். அவர் அந்த நோயாளியிடம் சென்று நலம் விசாரிக்க அமர்ந்து விட்டால் அல்லாஹ்வின் ரஹ்மத் அவரைச் சூழ்ந்து கொள்ளும். மேலும் அவர் அங்கிருந்து திரும்பி தன் வீட்டுக்கு வரும் வரை அவரது ஒவ்வொரு எட்டுக்கும் நன்மை எழுதப்பட்டு, பாவம் மன்னிக்கப்பட்டு அந்தஸ்து உயர்த்தப்படுகிறது.
عن علي بن حسين ، قال : خرج الحسن يطوف بالكعبة ، فقام إليه رجل فقال : يا أبا محمد ، اذهب معي في حاجة إلى فلان ، فترك الطواف وذهب معه ، فلما ذهب قام إليه رجل حاسد للرجل الذي ذهب معه ، فقال : يا أبا محمد ، تركْتَ الطواف وذهبتَ معه ؟ قال : فقال له الحسن : وكيف لا أذهب معه ؟ ورسول الله صلى الله عليه وسلم قال : من ذهب في حاجة لأخيه المسلم فقضيت حاجته كتبت له حجة وعمرة ، وإن لم يقض كتبت له عمرة فقد اكتسبت حجة وعمرة ورجعت إلى طوافي (بيهقي في شعب الايمان
ஹஸன் ரழி தவாஃப் செய்து கொண்டிருக்கும்போது ஒரு நண்பர் வந்து அபூ முஹம்மத் அவர்களே வாருங்கள். நாம் இருவரும் இணைந்து ஒரு மனிதரின் முக்கியமான அவசியத்தேவையை நிறைவேற்ற வேண்டியுள்ளது என்று கூறியவுடன் ஹஸன் ரழி அவர்கள் உடனே தவாஃபை விட்டு விட்டு அவருடன் சென்று விட்டார்கள். அப்போது அந்த நண்பருக்கு வேண்டாத மற்றொருவர் இதைக் கவனித்து விட்டு ஹஸன் ரழி அவர்களிடம் வந்து அவர் அழைத்தவுடன் நீங்கள் தவாஃபை பாதியில் விட்டு விட்டுச் சென்று விட்டீர்களே இது நியாயமா என்று பொறாமையுடன் கூறினார். அப்போது ஹஸன் ரழி அவர்கள் நான் எப்படி அவருடன் செல்லாமல் இருக்க முடியும் நபி ஸல்ல ல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள் யார் முஸ்லிமான தனது சகோதரரின் தேவையை நிறைவேற்றி வைப்பதற்காகச் சென்று அவரது நிறைவேற்றியும் வைத்து விட்டால் அவருக்கு ஒரு ஹஜ் மற்றும் உம்ராவின் நன்மை கிடைக்கும். அதே நேரத்தில் அவரது தேவையை நிறைவேற்றி வைப்பதற்காக இவர் புறப்பட்டுச் சென்றும் அதற்கான வாய்ப்பு இவருக்குக் கிடைக்கா விட்டால் புறப்பட்டுச் சென்றதற்காக ஒரு உம்ராவின் நற்கூலி வழங்கப்படுகிறது என நபி ஸல்ல ல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியிருக்கும்போது நான் எப்படி அவருடன் செல்லாமல் இருக்க முடியும். இப்போது நான் ஹஜ், உம்ராவின் நன்மையையும் அடைந்து கொண்டேன். என்னுடைய தவாஃபை விட்டதில் இருந்து திரும்ப ஆரம்பித்து அதன் நன்மையையும் பெற்றுக் கொண்டேன் என்று பதில் கூறினார்கள்.
சின்னச் சின்ன உதவிகள் கூட சமயத்திற்குத் தகுந்தாற்போல் செய்யப் படும்போது அதிகமான நன்மைகளைப் பெற்றுத் தரும்
வாழ்க்கையில் நாம் பிறருக்குச் செய்யும் உதவி, உபகாரம், ஒத்துழைப்பு ஆகியவற்றை இரண்டு விதமாக பிரிக்கலாம். சில உதவிகளை நாம் செய்ய வேண்டும் என்று நாடி அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகளை நாம் தேடிச் செல்வோம். சில நேரங்களில் நாம் சாதாரணமாக இருக்கும்போது பிறருக்கு உதவி செய்யும் சூழ்நிலைகளை தானாக அமையும். அவைகளை நாம் தட்டிக் கழிக்கக் கூடாது அவைகளை சந்தர்ப்பமாக கருதி அந்த உதவிகளைச் செய்ய வேண்டும். உதாரணமாக டிக்கெட் முன்பதிவு செய்யுமிடத்தில் ஒருவர் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யத் தெரியாமல் தடுமாறுகிறார் அவருக்கு அதை பூர்த்தி செய்து தருவது. ஒருவர் பேனாவை மறந்து வைத்து விட்டு வந்து நம்மிடம் பேனாவைக் கேட்பார். அவருக்கு சிறிது நேரம் பேனா கொடுத்து உதவுவது மேலும் வண்டியில் இருந்து இறங்க சிரமப் படுபவரை இறக்கி விடுவது. பைக்கில் போகும்போது ஏதாவது ஒரு பொருளைத் தவற விட்டுச் செல்பவருக்கு அதை எடுத்துக் கொடுப்பது இது மாதிரி எதார்த்தமான முறையில் உதவி செய்யும் வாய்ப்புகள் தானாக வந்து அமையும் போது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சில வகையான சின்னச் சின்ன உதவிகளுக்கு அல்லாஹ் தரும் பெரிய பெரிய நன்மைகள்
عَنْ عَائِشَةَ رضي الله عنها أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ مَا الشَّيْءُ الَّذِي لَا يَحِلُّ مَنْعُهُ قَالَ الْمَاءُ وَالْمِلْحُ وَالنَّارُ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا الْمَاءُ قَدْ عَرَفْنَاهُ فَمَا بَالُ الْمِلْحِ وَالنَّارِ قَالَ يَا حُمَيْرَاءُ مَنْ أَعْطَى نَارًا فَكَأَنَّمَا تَصَدَّقَ بِجَمِيعِ مَا أَنْضَجَتْ تِلْكَ النَّارُ وَمَنْ أَعْطَى مِلْحًا فَكَأَنَّمَا تَصَدَّقَ بِجَمِيعِ مَا طَيَّبَ ذَلِكَ الْمِلْحُ وَمَنْ سَقَى مُسْلِمًا شَرْبَةً مِنْ مَاءٍ حَيْثُ يُوجَدُ الْمَاءُ فَكَأَنَّمَا أَعْتَقَ رَقَبَةً وَمَنْ سَقَى مُسْلِمًا شَرْبَةً مِنْ مَاءٍ حَيْثُ لَا يُوجَدُ الْمَاءُ فَكَأَنَّمَا أَحْيَاهَا (ابن ماجة)ضعيف- بَاب الْمُسْلِمُونَ شُرَكَاءُ فِي ثَلَاثٍ – كِتَاب الْأَحْكَامِ
அன்னை ஆயிஷா ரழி அவர்கள் கூறுவதாவது நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டேன். நம்மிடமுள்ள சில அற்பமான (விலை மலிவான) பொருட்களில் சிலவற்றை யாரேனும் தாம் சிறிது பயன்படுத்திக் கொள்ள கேட்கும்போது எந்தெந்தப் பொருட்களை நாம் தராமல் மறுக்கக் கூடாது என்று ஏதேனும் சட்டம் உள்ளதா என்று கேட்டேன் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தண்ணீர், உப்பு, நெருப்பு என பதிலளித்தார்கள். உடனே நான் தண்ணீர் தர மறுக்கக்கூடாது என்பது எனக்கும் புரிகிறது. பிறரை தாகத்தோடு விட்டு விடுவது தவறு. ஆனால் நெருப்பையும், உப்பையும் பிறருக்குத் தருவதற்கு ஏன் மறுக்கக்கூடாது என்ற காரணம் எனக்குப் புரியவில்லையே என்றேன் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்ற வைப்பதற்காக ஒரு நெருப்புக் கங்கை ஒருவர் தந்தால் அந்த நெருப்பின் மூலம் என்னென்ன சமைக்கப்படுகிறதோ அவைகள் அனைத்தையும் தானமாக தந்தவரைப் போலாவார். அதேபோல அதேபோல் உப்பை ஒருவர் சிறிதளவு தானமாக கொடுத்தாலும் அந்த உப்பு எந்த உணவுக்கெல்லாம் சுவையைக் கூட்டியதோ அவைகள் அனைத்தையும் தானமாக தந்தவரைப் போலாவார். எவர் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத நேரத்தில் ஒரு முஸ்லிமுக்கு ஒரு மிடறு தண்ணீர் தருவாரோ அவர் ஒரு அடிமையை உரிமையை விட்டவரைப் போலாவார். எவர் தண்ணீர் தட்டுப்பாடுள்ள நேரத்தில் ஒரு முஸ்லிமுக்கு ஒரு மிடறு தண்ணீர் தருவாரோ அவர் அந்த முஸ்லிமுக்கு உயிர் கொடுத்தவரைப் போலாவார்.
அற்பமான உதவிகளைக் கூட தானும் செய்யாமல் பிறரையும் தடுப்பவனைப் பற்றிய கண்டனம்
أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ - فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ - وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ (3) فَوَيْلٌ لِلْمُصَلِّينَ (4) الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ (5) الَّذِينَ هُمْ يُرَاءُونَ (6) وَيَمْنَعُونَ الْمَاعُونَ (7) عَنْ أَبِي الْعُبَيْدَيْنِ أَنَّهُ سَأَلَ اِبْن مَسْعُود عَنْ الْمَاعُون فَقَالَ هُوَ مَا يَتَعَاطَاهُ النَّاس بَيْنهمْ مِنْ الْفَأْس وَالْقِدْر وَالدَّلْو وَأَشْبَاه ذَلِكَ (تفسير ابن كثير)
பிறருக்கு உதவும் எண்ணம் நீங்கி, மனிதனை மனிதனாகவே கருதாத காலம் தற்போது நிலவுகிறது.
மனிதர்களை நேசிக்க வேண்டும் பொருட்களை பயன்படுத்த வேண்டும் ஆனால் இன்று அப்படியே தலைகீழாக மாறி பொருட்களை நேசிக்கிறார்கள். மனிதர்களை பயன்படுத்துகிறார்கள். தன் சொத்துக்களை பாதுகாப்பதற்காக மனிதர்களை மாடுகள் போல கருதி வேலை வாங்குபவர்கள் பலர் உண்டு. சில நேரங்களில் பெற்ற பிள்ளைகளின் மீதான நேசத்தை விட பொருட்களின் மீதான நேசம் தான் அதிகமாக இருக்கிறது வெளிநாட்டில் ஒரு பெண் தனது குழந்தையை தானே கொன்று விட்டாள் அதற்குக் காரணம் அந்தக் குழந்தை இவளுடைய T.V. யை கீழே தள்ளி உடைத்து விட்டது என்பதற்காக... அந்தப் பொருளின் மீதான நேசம் பிள்ளை மீது இல்லை.
நகைச்சுவையாக கூறுவார்கள்- ஒருவர் தன் மகனிடம் பக்கத்து வீட்ல போய் ஆணி அடிக்க சுத்தியல் வாங்கிட்டு வாடா! என்று சொல்லியனுப்ப.. அவன் போய் கொஞ்ச நேரத்துல திரும்பி வந்து அப்பா பக்கத்து வீட்ல சுத்தியல் இல்லைன்னு சொல்லிட்டாங்கப்பா.. என்றான். உடனே தந்தை “ சரி பரவாயில்லை.. எதுக்கும் இன்னொரு பக்கத்து வீட்லயும் கேட்டுட்டு வா.. என்று அனுப்ப அங்கேயும் இல்லைன்னு மகன் திரும்பி வர.. அப்போது தான் தந்தை சொன்னாராம் சரி பரவாயில்ல... என்ன பன்றது... நம்ம சுத்தியலையே எடு!
படிப்பினை- அடுத்தவனின் பொருள் தேய்ந்தாலும் நம்முடைய பொருள் தேய்ந்து விடக் கூடாது என்று கருதும் அளவுக்கு மனிதர்களின் உள்ளத்தில் பொருட்களின் மீதான மோகம் பெருகி விட்டது.
மழை பற்றிய செய்திகளில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
மழை எப்போது பெய்யும் என அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும் என குர்ஆன் கூறியிருக்கும்போது வானிலை ஆய்வு மையம் எவ்வாறு முன் கூட்டியே கூறுகின்றனர் என்ற சந்தேகம் பலருக்கு எழலாம்
إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ (34) لقمان
வானிலை ஆய்வாளர்கள் முன்கூட்டியே அறிவிப்பது எதைப் போல என்றால் பள்ளிக்கூடத்தில் ஆசிரியருக்காக மாணவர்கள் காத்திருக்கும்போது கேட் வாசலில் ஆசிரியரின் வாகனம் வருவதைக் கண்டதும் இப்போது ஆசிரியர் வகுப்பறைக்கு வந்து விடுவார் என்று கூறுவதைப் போலாகும். அதாவது புயல் கடலில் மையம் கொண்டிருப்பதைப் பார்த்து இத்தனை நாட்கள் மழை நீடிக்கும் என்று அறிவிப்பார்களே தவிர, கடலில் அதைப் பார்க்காத வரை இவர்களால் அறிவிக்க முடியாது.
மழை, புயல், இடி, மின்னல் ஆகியவை அல்லாஹ்வின் படைகள். அவற்றை நாம் திட்டக் கூடாது.
عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نُصِرْتُ بِالصَّبَا وَأُهْلِكَتْ عَادٌ بِالدَّبُورِ (بخاري) باب غَزْوَةُ الْخَنْدَقِ وَهْىَ الأَحْزَابُ -كتاب المغازي
விளக்கம்- சுமார் பத்தாயிரம் பேர் மக்காவிலுருந்து திரண்டு வருவதைக் கேள்விப்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்குள் அவர்களை வர விடாமல் தடுக்க அகழ் தோண்டினார்கள். காஃபிர்களின் படை அகழிக்கு அந்தப்பக்கம் இருந்து கொண்டு கற்களையும் அம்புகளையும் வீசி தாக்க்குதல் நடத்தினார்கள் பதிலுக்கு முஸ்லிம்களும் அதேபோல் தாக்கினார்கள் இந்தச் சண்டை சுமார் 15 நாட்கள் நீடித்தது. அதன் பின்பு அல்லாஹ் எதிரிகளின் பகுதியில் மட்டும் சூறாவளி காற்றை அல்லாஹ் அனுப்பினான் அது அவர்களின் கூடாரங்கள் நாசமாக்கியது அவர்கள் மூட்டியிருந்த அடுப்புகளையெல்லாம் அணைத்து விட்டது இறுதியில் அவர்கள் வேறு வழியில்லாமல் அங்கிருந்து விரண்டோடினார்கள்.
தபூர் என்ற புயல் காற்றின் மூலம் ஆது கூட்டம் அழிக்கப்பட்ட விதம்
عن ابن عباس رضي الله عنه في قوله تعالى : فَلَمَّا رَأَوْهُ عَارِضًا مُسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ(الاحقاف24 قالوا :غيم فيه مطر قال : بل هو ما استعجلتم به ريح فيها عذاب أليم وأول ما عرفوا أنه عذاب رأوا ما كان خارجا من رجالهم ومواشيهم يطير من السماء إلى الأرض مثل الريش دخلوا بيوتهم ، وأغلقوا أبوابهم فجاءت الريح ففتحت أبوابهم ومالت عليهم بالرمل ، فكانوا تحت الرمل سبع ليال وثمانية أيام حسوما لهم أنين ثم أمر الريح فكشفت عنهم الرمل وأمر بها فطرحتهم في البحر فهو قوله تعالى : فأصبحوا لا يرى إلا مساكنهم (رواه ابن ابي الدنيا)
ஆது கூட்டத்தினர் ஆகாயத்தில் பார்த்த போது ஏதோ மழை மேகம் என்று எண்ணி மகிழ்ந்தார்கள். ஆனால் கீழே இறங்க இறங்க அது கடும் புயலாக மாறியது. அந்தப் புயலின் வேகத்தால் மனிதர்களும், கால்நடைகளும் வானத்தில் காகிதம் போல பறப்பதைப் பார்த்து மற்றவர்கள் தங்களின் வீடுகளுக்குள் புகுந்து கதவுகளைத் தாழிட்டனர். ஆனால் அந்தப் புயல் வீசிய வேகத்தில் கதவுகள் தானாக திறந்தவுடன் வெளியே உள்ள மண்ணையெல்லாம் கொண்டு வந்து உள்ளே போட்டது. வீடு முழுவதும் மண்ணால் நிரம்ப அதற்கடியில் அவர்கள் சிக்கிய படி முனகிய படி உயிருக்குப் போராடினார்கள். ஆனால் அவர்களின் உயிரையும் அல்லாஹ் போக்கவில்லை. எட்டு நாட்கள் கடந்து மீண்டும் புயல் வீட்டுக்குள் இருந்த மண்ணையெல்லாம் வெளியே கொண்டு வந்து போட்டு அவர்களையும் வெளியே கொண்டு வந்தது. வானத்தில் காகிதம் போல பறந்தார்கள். கடைசியில் தங்களை பலசாலிகள் என பெருமையடித்த அவர்கள் அனைவரும் கடலில் தூக்கி வீசப்பட்டார்கள்
நபிகளாரின் காலத்தில் ஒரே ஒரு கெட்ட மனிதனின் அழிவுக்காகவும் புயல் வீசியுள்ளது
عَنْ جَابِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِمَ مِنْ سَفَرٍ فَلَمَّا كَانَ قُرْبَ الْمَدِينَةِ هَاجَتْ رِيحٌ شَدِيدَةٌ تَكَادُ أَنْ تَدْفِنَ الرَّاكِبَ فَزَعَمَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بُعِثَتْ هَذِهِ الرِّيحُ لِمَوْتِ مُنَافِقٍ فَلَمَّا قَدِمَ الْمَدِينَةَ فَإِذَا مُنَافِقٌ عَظِيمٌ مِنْ الْمُنَافِقِينَ قَدْ مَاتَ (مسلم) قيل هو رفاعة بن دريد والسفر غزوة تبوك
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பிரயாணத்தில் இருந்து திரும்பும்போது கடும் புயல் வீசியது. வாகன ஓட்டியைக் கீழே தள்ளும் அளவுக்க்கு அதன் கடுமை இருந்தது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்தப் புயல் ஒரு முனாஃபிக்குடைய மவ்த்திற்காக அவனது இறப்பின் அடையாளமாக அனுப்புப் பட்டுள்ளது என்றார்கள். அவ்வாறே மதீனாவை அடைந்த போது ரிஃபாஆ என்ற முனாஃபிக் இறந்திருந்தான்.
மழை பாதிப்புகளில் இருந்து மீள இன்னும் அதிகமான முன்னெச்சரிக்கைகள் நமக்குத் தேவை
நாட்டின் விடுதலைக்கு முன் தமிழக நிலப்பரப்பில் மட்டும் 50,000 நீர் நிலைகள் இருந்தன. இன்றைக்கு பாதிக்கும் குறைவாக 20,000 நீர்நிலைகள் மட்டுமே உள்ளன. இதற்குக் காரணம் ஆக்கிரமிப்புகள்தான். நாட்டில் மக்கள் தொகை அதிகரிக்கும்போது நீர் நிலைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். ஆனால் அதற்கு மாற்றமாக நீர்நிலைகளின் எண்ணிக்கை குறைந்து வருவது தான் பிரச்சினைக்குக் காரணம். நீர் நிலைகள் இருக்க வேண்டிய இடத்தில் குடியிருப்புகள் உள்ளன. மழை வெள்ளத்தால் வீட்டுக்குள் நீர் புகுந்து விட்டது என்று சொல்வது தவறு. மழைநீர் அது வர வேண்டிய இடத்தைத் தேடியே வந்துள்ளது. நாம் தான் அதனுடைய இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டோம்.
2015 பெருவெள்ளத்துக்குப் பிறகு அரசுக்கு அறிக்கை அளித்த அதிகாரிகள் குழு,‘சென்னை நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததும், மழைநீர் வடிகால்கள் சரியாகச் செயல்படாததும்தான் எந்த மழை பெய்தாலும் சென்னை வெள்ளக் காடாக மாறுவதற்குக் காரணம். என்று சுட்டிக் காட்டியிருந்த தை நினைவில் கொள்ள வேண்டும்.
மக்களுக்கான நீர் நிலைகளை அதிகப்படுத்துவதில் நம்முடைய முன்னோர்கள் சிறந்த முன்மாதிரியாக இருந்துள்ளார்கள்.
قال رسول الله صلى الله عيه وسلم من يشتري بئر رومة فيجعلها للمسلمين يضرب بدلوه فى دلائهم وله بها مشرب فى الجنة فساومه فيها عثمان فأبى أن يبيعها كلها فاشترى نصفها باثنى عشر ألف درهم وجعل ذلك للمسلمين وجعل له يوما ولليهودى يوما فإذا كان يوم عثمان استقى المسلمون ما يكفيهم يومين فلما رأى اليهودى ذلك قال لعثمان أفسدت على ركيتى فاشترى النصف الآخر بثمانية آلاف (سيرة الحلبية
மதீனாவில் மிகவும் சுவையான கிணறாக இது இருந்தது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒருமுறை யார் இதை அந்த யூதனிடமிருந்து வாங்கி மக்களுக்கு வக்ஃப் செய்வார்களோ அவருக்கு சுவனத்தில் அதுபோன்றக நீர் நிலை உண்டு என்றவுடன் உஸ்மான் ரழி போட்டி போட்டுக் கொண்டு அதை வாங்க யூதனிடம் சென்ற போது அதை அவன் விட்டுக் கொடுக்க மறுத்தான் எப்படியோ சம்மதிக்க வைத்து 12 ஆயிரம் திர்ஹம் தந்து ஒருநாள் விட்டு ஒருநாள் என்ற அடிப்படையில் அந்தக் கிணற்றின் உரிமையை பெற்றார்கள். தனக்கான அந்த நாளில் அனைத்து மக்களுக்கு தண்ணீரை இலவசமாக சப்ளை செய்தார்கள். ஆனால் அந்த யூதன் காசுக்கு மட்டுமே விற்றான். நாளடைவில் அவனிடம் காசு கொடுத்து யாரும் வாங்காத ஒரு நிலை ஏற்பட்டது. ஏனெனில் உஸ்மான் ரழி தனக்கான அந்த நாளில் அனைத்து மக்களுக்கும் தண்ணீரை இலவசமாக சப்ளை செய்ததால் அவனிடம் யாரும் வாங்கவில்லை. கடைசியில் வேறு வழியில்லாமல் அவன் மீதி உரிமையையும் விட்டுத் தந்தான். மொத்தம் 20 ஆயிரம் திர்ஹம் தந்து விலைக்கு வாங்கி மக்களின் தண்ணீர் கஷ்டத்தைப் போக்கினார்கள்.- சீரத்துல் ஹலபிய்யா
மக்களுக்காக நீர் ஆதாரத்தை உருவாக்குவதில் முஸ்லிம் முன்னோடிகளின் பங்கு
பக்தாத் பேரரசர் கலீபா ஹாருன் ரஷீதின் மனைவி ஜுபைதா அம்மையார் மக்காவில் ஏற்பட்ட தண்ணீர்க் கஷ்டத்தைப் போக்கக் கால்வாய் ஒன்றை பத்துமைல் நீளத்திற்கு உருவாக்கினார். நஹ்ர் ஜுபைதா என்ற பெயரில் இன்றும் உள்ளது.
அல்லாஹ்வின் படைகளான மழை, புயல், பூகம்பம் போன்றவற்றால் நல்லவர்கள் இறந்தாலும் அல்லாஹ் அதற்குத் தகுந்த அந்தஸ்தை மறுமையில் தருவான்
عَائِشَة رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْزُو جَيْشٌ الْكَعْبَةَ فَإِذَا كَانُوا بِبَيْدَاءَ مِنْ الْأَرْضِ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ وَفِيهِمْ أَسْوَاقُهُمْ وَمَنْ لَيْسَ مِنْهُمْ قَالَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ ثُمَّ يُبْعَثُونَ عَلَى نِيَّاتِهِمْ رواه البخاري
விளக்கம்- கடைசி காலத்தில் ஒரு கூட்டம் கஃபதுல்லாஹ்வை இடிப்பதற்காகப் புறப்பட்டு வரும். அவர்கள் வரும் வழியிலேயே பூகம்பம் ஏற்பட்டு அவர்களுடன் சேர்ந்து அந்த இடத்தில் உள்ள அனைவரும் அழிக்கப்படுவர் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற, அதைக் கேட்ட ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அல்லாஹ்வின் தூதரே தீயவர்கள் அழிக்கப்படுவது நியாயம். ஆனால் பூகம்பம் ஏற்பட்ட பகுதியில் கடைகள் வைத்திருக்கும் நல்லவர்களும் சேர்ந்து ஏன் அழிக்கப்பட வேண்டும் என்று காரணம் கேட்க, அதற்கு நபி ஸல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ் அவர்களை மறுமையில் எழுப்பும்போது அவர்களின் நிய்யத்துகளுக்குத் தக்கவாறு நற்கூலி வழங்குவான் என்று கூறினார்கள்.
மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காத மழை பெய்வதற்காக துஆ
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ رَبُّكُمْ عَزَّ وَجَلَّ لَوْ أَنَّ عِبَادِي أَطَاعُونِي لَأَسْقَيْتُهُمْ الْمَطَرَ بِاللَّيْلِ وَأَطْلَعْتُ عَلَيْهِمْ الشَّمْسَ بِالنَّهَارِ وَلَمَا أَسْمَعْتُهُمْ صَوْتَ الرَّعْدِ (احمد)
அல்லாஹ் கூறுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். என்னுடைய அடியார்கள் எனக்குக் கட்டுப்பட்டு நடந்தால் நான் (யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில்) பகலில் சூரிய வெளிச்சத்தை ஏற்படுத்தி இரவில் மட்டும் மழை பொழியச் செய்வேன். (இரவில் பெய்யும் மழையால்) இடி சப்தத்தைக் கூட அவர்களுக்குக் கேட்க வைக்க மாட்டேன்..
-عَنْ جَابِرِ رضي الله عنه قَالَ أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَوَاكِي فَقَالَ اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا مَرِيئًا مَرِيعًا نَافِعًا غَيْرَ ضَارٍّ عَاجِلًا غَيْرَ آجِلٍ قَالَ فَأَطْبَقَتْ عَلَيْهِمْ السَّمَاءُ (ابوداود) باب رَفْعِ الْيَدَيْنِ فِى الاِسْتِسْقَاءِ- كتاب الإستسقاء
அறவே மழை பெய்யாமல் இருப்பதால் ஏற்படும் பஞ்சத்தை விட, அளவுக்கதிகமான மழையால் ஏற்படும் பஞ்சம் மோசமானது
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَتْ السَّنَةُ بِأَنْ لَا تُمْطَرُوا وَلَكِنْ السَّنَةُ أَنْ تُمْطَرُوا وَتُمْطَرُوا وَلَا تُنْبِتُ الْأَرْضُ شَيْئًا (مسلم) بَاب فِي سُكْنَى الْمَدِينَةِ- كِتَاب الْفِتَنِ وَأَشْرَاطِ السَّاعَةِ
ஒரு நொடி கூட இடைவெளி இல்லாமல் உலகில் எங்காவது ஒரு பகுதியில் மழை பெய்து கொண்டே இருக்கும்
عَنِ الْمُطَّلِبِ بْنِ حَنْطَبٍ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ مَا مِنْ سَاعَةٍ مِنْ لَيْلٍ وَلا نَهَارٍ إِلا وَالسَّمَاءُ تُمْطِرُ فِيهَا يُصَرِّفُهُ اللَّهُ حَيْثُ يَشَاءُ(كنز العمال
வருடம் தோறும் பெய்யும் மழை ஒருபோதும் குறையாது. எனினும் அல்லாஹ் நாடிய இடங்களுக்கு அது மாறும்
عَنِ ابْنِ عَبَّاس رضي الله عنه أَنَّهُ قَالَ:مَا مِنْ عَامٍ بِأَكْثَرَ مَطَرًا مِنْ عَامٍ وَلَكِنَّ اللَّهَ يُصَرِّفُهُ بَيْنَ عِبَادِهِ وَقَرَأَ:وَلَقَدْ صَرَّفْنَاهُ بَيْنَهُمْ(الفرقان50-
عن الحكم بن عتيبة في قوله(وَمَا نُنزلُهُ إِلا بِقَدَرٍ مَعْلُومٍ(الحجر21) قال:ما من عام بأكثر مطرا من عام ولا أقل ولكنه يمطر قوم ويُحرم آخرون وربما كان في البحر(تفسير ابن ابي حاتم)
عن أبي هريرة رضي الله عنه قال :ما نزلت قطرة إلا بميزان إلا زمان نوح عليه السلام (رواه ابن ابي الدنيا
கருத்து: நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் ஏற்பட்ட மழை மட்டும் தான் அளவுக்கு அதிகமான வகையில் இருந்தது. அதற்குப் பிறகு அல்லாஹ் இன்று வரை ஒவ்வொரு வருடமும் பெய்யும் மழையை ஒரே அளவாகவே வைத்துள்ளான். மேற்காணும் வசனமும் அதையே சுட்டிக் காட்டுகிறது. எனினும் சில ஊர்களிள் அளவுக்கு அதிகமாக மழை பெய்வதற்குக் காரணம் அல்லாஹ் வேறு ஊரில் பெய்ய வேண்டிய மழையை நிறுத்தி மற்ற ஊரில் பெய்ய வைப்பான். ஆக ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் பெய்யும் மழையை மொத்தமாக கணக்கிட்டால் அது ஒரே அளவாகவே இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக