வியாழன், 17 அக்டோபர், 2024

அற்புதமான பத்து உபதேசங்கள்

 ரபீஉல் ஆகிர்- 14 بسم الله الرحمن الرحيم  

அற்புதமான பத்து உபதேசங்கள்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

வலிகள்  கோமான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ் அவர்கள் 

எழுதிய நூலில் இருந்து அற்புதமான பத்து உபதேசங்கள்

1.தேவைக்குக் கூட சத்தியம் செய்ய வேண்டாம்.

١-"لا يحلف المتعلم بالله عز وجل صادقا ولا كاذبا" ، عامدا ولا ساهيا ؛ لأنه إذا احكم ذلك من نفسه ، دفعه ذلك إلى ترك الحلف بالكلية ، وبذلك يفتح الله له بابا من أنواره يدرك أثره في قلبه ، ويمنحه الرفعة والثبات والكرامة عند الخلق .

தேவைக்குக் கூட சத்தியம் செய்ய வேண்டாம். அவசியத்திற்கு சத்தியம் செய்வது நாளடைவில் அவசியமில்லாதவற்றுக்கும் சத்தியம் செய்யும் நிலை உருவாகும்

2.விளையாட்டாகக் கூட பொய் பேச வேண்டாம்

٢-"أن يجتنب المتعلم الكذب هازلا أو جادا" ؛ فإذا اعتاد ذلك شرح الله صدره ، وصفا علمه ، وصار حاله كله صدق و ظهر أثر ذلك عليه .

3.வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். 

٣-"أن يفي بما يعد ، وأن يعمل على ترك الوعد أصلا "؛ لأن ذلك أضمن له من الوقوع في الحلف والكذب ؛ فإذا فعل ذلك ، فتح له باب السخاء ، ودرجة الحياء ، وأعطي مودة في الصادقين .

முடிந்த வரை யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். வாக்குறுதி தராமலும் அந்தக் காரியத்தை நிறைவேற்றலாம். ஏனென்றால் ஒரு வாக்குறுதி கொடுத்து அதை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை வரும்போது தான் அது பொய் சொல்லும் சத்தியம் செய்தல் ஆகியவை ஏற்படும். இதில் பேணுதலைக் கடை பிடித்தால் தாராள மனமும், வெட்க உணர்வும், நல்லோர்களின் சகவாசமும் ஏற்படும்.

வாக்குறுதியை சரியாக நிறைவேற்றுபவர் வாக்குறுதி தந்தால் தவறில்லை

وَاذْكُرْ فِي الْكِتَابِ إِسْمَاعِيلَ إِنَّهُ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُولًا نَبِيًّا (54 مريم

أَنَّ إِسْمَاعِيل النَّبِيّ عَلَيْهِ السَّلَام وَعَدَ رَجُلًا مَكَانًا أَنْ يَأْتِيه فِيهِ فَجَاءَ وَنَسِيَ الرَّجُل فَظَلَّ بِهِ إِسْمَاعِيل وَبَاتَ حَتَّى جَاءَ الرَّجُل مِنْ الْغَد فَقَالَ مَا بَرِحْت مِنْ هَاهُنَا ؟ قَالَ لَا قَالَ إِنِّي نَسِيت قَالَ لَمْ أَكُنْ لِأَبْرَح حَتَّى تَأْتِينِي فَلِذَلِكَ " كَانَ صَادِق الْوَعْد " (تفسير ابن كثير

நபி இஸ்மாயீல் அலை ஒருவரை ஓரிடத்தில் சந்திப்பதற்கு வாக்குறுதி கொடுத்திருந்தார்கள். அவரும் அந்த இடத்திற்கு வருவதாக வாக்குறுதி அளித்தார். நபி இஸ்மாயீல் அலை சரியாக அந்த இடத்திற்கு வந்து விட்டார்கள். ஆனால் அவர் மறந்து விட்டார். நபி இஸ்மாயீல் அலை வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக அடுத்த நாள் வரை அங்கேயே இருந்தார்கள். தற்காலிக கூடாரம் அமைத்துக் கொண்டார்கள் என்றும் கூறப்படுகிறது. அடுத்த நாள் அவர் எதார்த்தமாக அங்கு வந்தார். நபி இஸ்மாயீல் அலை அங்கு இருப்பதைப் பார்த்த பின் தான் சொன்னது ஞாபகம் வந்தது. நீங்கள் இங்கேயே இருந்தீர்களா என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.                    

கொடுத்த வாக்கை எப்படியேனும் காப்பாற்ற நினைப்பவருக்கு அல்லாஹ்வும் உதவி செய்வான்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ ذَكَرَ رَجُلًا مِنْ بَنِي إِسْرَائِيلَ سَأَلَ بَعْضَ بَنِي إِسْرَائِيلَ أَنْ يُسْلِفَهُ أَلْفَ دِينَارٍ فَقَالَ ائْتِنِي بِالشُّهَدَاءِ أُشْهِدُهُمْ فَقَالَ كَفَى بِاللَّهِ شَهِيدًا قَالَ فَأْتِنِي بِالْكَفِيلِ قَالَ كَفَى بِاللَّهِ كَفِيلًا قَالَ صَدَقْتَ فَدَفَعَهَا إِلَيْهِ إِلَى أَجَلٍ مُسَمًّى فَخَرَجَ فِي الْبَحْرِ فَقَضَى حَاجَتَهُ ثُمَّ الْتَمَسَ مَرْكَبًا7 يَرْكَبُهَا يَقْدَمُ عَلَيْهِ لِلْأَجَلِ الَّذِي أَجَّلَهُ فَلَمْ يَجِدْ مَرْكَبًا فَأَخَذَ خَشَبَةً فَنَقَرَهَا8 فَأَدْخَلَ فِيهَا أَلْفَ دِينَارٍ وَصَحِيفَةً مِنْهُ إِلَى صَاحِبِهِ ثُمَّ زَجَّجَ9 مَوْضِعَهَا ثُمَّ أَتَى بِهَا إِلَى الْبَحْرِ فَقَالَ اللَّهُمَّ إِنَّكَ تَعْلَمُ أَنِّي كُنْتُ تَسَلَّفْتُ فُلَانًا أَلْفَ دِينَارٍ فَسَأَلَنِي كَفِيلَا فَقُلْتُ كَفَى بِاللَّهِ كَفِيلًا فَرَضِيَ بِكَ وَسَأَلَنِي شَهِيدًا فَقُلْتُ كَفَى بِاللَّهِ شَهِيدًا فَرَضِيَ بِكَ وَأَنِّي جَهَدْتُ أَنْ أَجِدَ مَرْكَبًا أَبْعَثُ إِلَيْهِ الَّذِي لَهُ فَلَمْ أَقْدِرْ وَإِنِّي أَسْتَوْدِعُكَهَا فَرَمَى بِهَا فِي الْبَحْرِ حَتَّى وَلَجَتْ فِيهِ ثُمَّ انْصَرَفَ وَهُوَ فِي ذَلِكَ يَلْتَمِسُ مَرْكَبًا10 يَخْرُجُ إِلَى بَلَدِهِ فَخَرَجَ الرَّجُلُ الَّذِي كَانَ أَسْلَفَهُ يَنْظُرُ لَعَلَّ مَرْكَبًا قَدْ جَاءَ بِمَالِهِ فَإِذَا بِالْخَشَبَةِ الَّتِي فِيهَا الْمَالُ11 فَأَخَذَهَا لِأَهْلِهِ حَطَبًا فَلَمَّا نَشَرَهَا وَجَدَ الْمَالَ وَالصَّحِيفَةَ ثُمَّ قَدِمَ الَّذِي كَانَ أَسْلَفَهُ فَأَتَى بِالْأَلْفِ دِينَارٍ فَقَالَ وَاللَّهِ مَا زِلْتُ جَاهِدًا فِي طَلَبِ مَرْكَبٍ لِآتِيَكَ بِمَالِكَ فَمَا وَجَدْتُ مَرْكَبًا قَبْلَ الَّذِي أَتَيْتُ فِيهِ قَالَ هَلْ كُنْتَ بَعَثْتَ إِلَيَّ بِشَيْءٍ قَالَ أُخْبِرُكَ أَنِّي لَمْ أَجِدْ مَرْكَبًا قَبْلَ الَّذِي جِئْتُ فِيهِ قَالَ فَإِنَّ اللَّهَ قَدْ أَدَّى عَنْكَ الَّذِي بَعَثْتَ فِي الْخَشَبَةِ فَانْصَرِفْ بِالْأَلْفِ الدِّينَارِ رَاشِدًا (بخاري) 2291

'இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் தமக்கு ஆயிரம் தங்கக்காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர் 'சாட்சிகளை எனக்குக் கொண்டு வா! அவர்களைச் சாட்சியாக வைத்துத் தருகிறேன்' என்றார். கடன் கேட்டவர் 'சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!' என்றார். 'அப்படியானால் ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டுவா!' என்று கடன் கேட்கப்பட்டவர் கூறினார். அதற்குக் கடன் கேட்டவர் 'பிணை நிற்க அல்லாஹ்வே போதுமானவன்' என்று கூறினார். கடன் கேட்கப்பட்டவர் 'நீர் கூறுவது உண்மையே!' என்று கூறி, குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பித் தர வேண்டும் என்று ஆயிரம் தங்கக் காசுகளை அவருக்குக் கொடுத்தார். கடன் வாங்கியவர் கடல் மார்க்கமாகப் புறப்பட்டு, தம் வேலைகளை முடித்துவிட்டு, குறிப்பிட்ட தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக வாகனத்தைத் தேடினார். எந்த வாகனமும அவருக்குக் கிடைக்கவில்லை. உடனே, ஒரு மரக்கட்டையை எடுத்து, அதைக் குடைந்து அதற்குள் ஆயிரம் தங்கக் காசுகளையும் கடன் கொடுத்தவருக்கு ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்து அடைத்தார். பிறகு கடலுக்கு வந்து, 'இறைவா! இன்னாரிடம் நான் ஆயிரம் தங்கக் காசுகளைக் கடனாகக் கேட்டேன்; அவர் பிணையாளி வேண்டுமென்றார்; நான் 'அல்லாஹ்வே பிணைநிற்கப் போதுமானவன்!' என்றேன்; அவர் உன்னைப் பிணையாளியாக ஏற்றார். என்னிடம் சாட்சியைக் கொண்டுவரும்படி கேட்டார்; 'சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!' என்று கூறினேன். அவர் உன்னை சாட்சியாக ஏற்றார்; அவருக்குரிய (பணத்)தை அவரிடம் கொடுத்து அனுப்பி விடுவதற்காக ஒரு வாகனத்திற்கு நான் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை என்பதையெல்லாம் நீ அறிவாய்! எனவே, இதை உரியவரிடம் சேர்க்கும் பொறுப்பை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன்!' என்று கூறி அதைக் கடலில் வீசினார். அது கடலுக்குள் சென்றதும் திரும்பிவிட்டார். அத்துடன் தம் ஊருக்குச் செல்வதற்காக வாகனத்தையும் அவர் தேடிக் கொண்டிருந்தார். அவருக்குக் கடன் கொடுத்த மனிதர், தம் செல்வத்துடன் ஏதேனும் வாகனம் வரக்கூடும் என நோட்டமிட்ட வண்ணம் புறப்பட்டார்.அப்போது,பணம் அடங்கிய அந்த மரக்கட்டையைக் கண்டார். தம் குடும்பத்திற்கு விறகாகப் பயன்படட்டும் என்பதற்காக அதை எடுத்தார். அதைப் பிளந்து பார்த்தபோது பணத்தையும் கடிதத்தையும் கண்டார். பிறகு, கடன் வாங்கியவர் ஆயிரம் தங்கக் காசுகளை எடுத்துக்கொண்டு இவரிடம் வந்து சேர்ந்தார். 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்முடைய பணத்தை உமக்குத் தருவதற்காக வாகனம் தேடும் முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தேன். இப்போதுதான் வாகனம் கிடைத்து வந்திருக்கிறேன்!' என்று கூறினார். அதற்கு கடன் கொடுத்தவர், 'எனக்கு எதையாவது அனுப்பி வைத்தீரா?' என்று கேட்டார். கடன் வாங்கியவர், 'வாகனம் கிடைக்காமல் இப்போதுதான் வந்திருக்கிறேன் என்று உமக்கு நான் தெரிவித்தேனே!' என்று கூறினார். கடன் கொடுத்தவர், 'நீர் மரத்தில் வைத்து அனுப்பியதை உம் சார்பாக அல்லாஹ் என்னிடம் சேர்ப்பித்துவிட்டான்; எனவே, ஆயிரம் தங்கக் காசுகளை எடுத்துக் கொண்டு (சரியான) வழியறிந்து செல்லும்!' என்று கூறினார்.                                                              

கடனில் சிக்கியவர் வாக்குறுதிக்கு மாறு செய்யும் சூழ்நிலை அதிகம் ஏற்படும்.

عَنْ عَائِشَةَ رض ... فَقَالَ لَهُ  قَائِلٌ مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ مِنَ الْمَغْرَمِ فَقَالَ رَسُولَ اللَّهِ  صلى الله عليه وسلم إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ حَدَّثَ فَكَذَبَ  وَوَعَدَ فَأَخْلَفَ(بخاري832

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்திக்கும்போது, 'இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்பத் தேடுவதற்குக் காரணம் என்ன?' என்று கேட்டதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள், 'மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்" புஹாரி,எண் 2397  

     4.எந்த முஸ்லிமையும் காஃபிர் என்று சொல்லக்கூடாது

أن لا يشهد على أحد من أهل القبلة بشرك" ، أو كفر ، أو نفاق ، فذلك أقرب للرحمة ، وأقرب لأخلاق السنة ، وأبعد من ادعاء العلم ، وأقرب إلى رضا الله ، وهو باب شريف يورث العبد رحمة الخلق أجمعين .

ஷிர்க் செய்யாத ஒருவரை முஷ்ரிக் என்று கூறுவது அவரைக் கொல்வதற்கு நிகரான பாவத்தை உண்டாக்கும்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا قَالَ الرَّجُلُ لِأَخِيهِ يَا كَافِرُ فَقَدْ بَاءَ بِهِ أَحَدُهُمَا (بخاري) عَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ حَلَفَ بِمِلَّةٍ غَيْرِ الْإِسْلَامِ كَاذِبًا فَهُوَ كَمَا قَالَ وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِشَيْءٍ عُذِّبَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ وَلَعْنُ الْمُؤْمِنِ كَقَتْلِهِ وَمَنْ رَمَى مُؤْمِنًا بِكُفْرٍ فَهُوَ كَقَتْلِهِ (بخاري)  


உன் பாவத்தை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான் என்று ஒரு முஸ்லிமை நோக்கி கூறியவரின் கதி....

عَنْ أَبي هُرَيْرَةَ رضي الله عنه سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كَانَ رَجُلَانِ فِي بَنِي إِسْرَائِيلَ مُتَوَاخِيَيْنِ فَكَانَ أَحَدُهُمَا يُذْنِبُ وَالْآخَرُ مُجْتَهِدٌ فِي الْعِبَادَةِ فَكَانَ لَا يَزَالُ الْمُجْتَهِدُ يَرَى الْآخَرَ عَلَى الذَّنْبِ فَيَقُولُ أَقْصِرْ فَوَجَدَهُ يَوْمًا عَلَى ذَنْبٍ فَقَالَ لَهُ أَقْصِرْ فَقَالَ خَلِّنِي وَرَبِّي أَبُعِثْتَ عَلَيَّ رَقِيبًا فَقَالَ وَاللَّهِ لَا يَغْفِرُ اللَّهُ لَكَ أَوْ لَا يُدْخِلُكَ اللَّهُ الْجَنَّةَ فَقَبَضَ أَرْوَاحَهُمَا فَاجْتَمَعَا عِنْدَ رَبِّ الْعَالَمِينَ فَقَالَ لِهَذَا الْمُجْتَهِدِ أَكُنْتَ بِي عَالِمًا أَوْ كُنْتَ عَلَى مَا فِي يَدِي قَادِرًا وَقَالَ لِلْمُذْنِبِ اذْهَبْ فَادْخُلْ الْجَنَّةَ بِرَحْمَتِي وَقَالَ لِلْآخَرِ اذْهَبُوا بِهِ إِلَى النَّارِ قَالَ أَبُو هُرَيْرَةَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَكَلَّمَ بِكَلِمَةٍ أَوْبَقَتْ دُنْيَاهُ وَآخِرَتَهُ (ابوداود) بَاب فِي النَّهْيِ عَنْ الْبَغْيِ-كِتَاب الْأَدَبِ

பனீ இஸ்ராயீல் சமூகத்தில் இரு சகோதரர்கள் இருந்தார்கள். ஒருவர் வணக்கசாலி. மற்றொருவர் பாவி. அவரை பாவம் செய்யும் நிலையில் இந்த வணக்கசாலி பார்க்கும்போதல்லாம் உன்பாவத்தைக் குறைத்துக் கொள் என புத்திமதி கூறுவார். ஒருமுறை ஒரு பாவத்தைச் செய்பவராக அவரைக்கண்டு மனம் பொறுக்க முடியாமல் உன்னை அல்லாஹ் மன்னிக்கவேமாட்டான் என சொல்லிவிட்டார். இதன்பின்பு அவ்விருவரும் இறந்த பின்பு அல்லாஹ்வின் முன்னிலையில் நிறுத்தப்பட்டனர். இந்த வணக்கசாலியிடம் அல்லாஹ் நான் மன்னிக்கவே மாட்டேன் என்று நீ எப்படி கூற முடியும் என எச்சரித்த பின்பு அந்தப் பாவியிடம் உன்னை நான் மன்னித்து விட்டேன். என் அருளால் நீ சுவனம் செல் என்பான். ஆனால் அந்த வணக்கசாலி அல்லாஹ்வின் சிறப்புத் தன்மையாகிய மன்னித்தல் என்ற சிஃபத்துக்கு களங்கம் ஏற்படுத்தியதால் அவரை நரகத்திற்குக் கொண்டு செல்லும்படி மலக்குகளிடம் கூறுவான். இதை அறிவிக்கும் அபூஹுரைரா ரழி அவர்கள் கூறும்போது இவரின் ஒரு வார்த்தை அவருடைய இம்மை மறுமை அனைத்தயும் வீணாக்கி விட்டது என்றார்கள். நூல் அபூதாவூத்   

5.6. யாரையும் எதையும் சபிக்கக் கூடாது. 

-٥"أن يجتنب لعن أي شيء من الخلق" ، وإيذاء ذرة فما فوقها ؛ فذلك من أخلاق الأبرار والصديقين ، لأن ثمرة ذلك حفظه من مصارع الهلاك ، والسلامة ، ويورث رحمة العباد ، مع ما يهبه الله من رفيع الدرجات .

-6-  أن يجتنب الدعاء على أحد" ، وإن ظلمه فلا يقطعه بلسانه ، ولا يقابله بقول أو فعل ؛ فإن فعل ذلك وجعله من جملة آدابه ارتفع في عين الله ، ونال محبة الخلق جميعا .

யாரையும் சபிக்கக்கூடாது என்ற உபதேசத்தில் இருந்து ஒரு படிப்பினையான சம்பவம்

அல்லாமா துல்பிகார் சாஹிப் ரஹ் அவர்கள் தங்களுடைய கிதாபில் ஒரு சம்பவத்தை எழுதுகிறார்கள், முற்காலத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை  இருந்தது அப்பெண் அக்குழந்தையை தூங்க வைக்க மிகவும் கஷ்டப்படுவாள் அவ்வளவு எளிதாக அவன் தூங்க மாட்டான் ஒரு தடவை அவளுக்கு அடுப்பில் அதிகமான வேலை இருந்த து. ஆனால் மகன் எந்த வேலையையும் செய்ய விடாமல் இடுப்பிலயே தூக்கி வைக்கும்படி அடம் பிடித்தான். அந்தப் பெண் எப்படியோ பிள்ளைக்குப் பால் கொடுத்து தூங்க வைத்து விடலாம் என்று வயிறு நிறையும் அளவுக்குப் பால் தந்தாள், அவனும் தூங்கும் நிலைக்கு வந்தவுடன் அவனைப் படுக்க வைத்து விட்டு மறுபடியும் வேலையில் ஈடுபட ஆரம்பிக்கும்போது மறுபடியும் அவன் விழித்துக் கொண்டான். அப்போது அப்பெண் சங்கடப்பட்டு ஒரு வார்த்தையைச் சொன்னாள் நீ தூங்கினாயே ஒரேயடியாக தூங்கி இருக்க வேண்டாமா அதாவது இறந்திருக்க வேண்டாமா என்று கருத்தில் அவ்வாறு  கூறி விட்டாள். அல்லாஹ் அதை அப்படியே அங்கீகரித்தான். ஆனால் உடனே எதுவும் நடைபெறவில்லை. அவள் தன் மகனை நன்கு வளர்த்தாள். படிக்க வைத்தாள். அவனும் எல்லா படிப்புகளையும் படித்து நன்கு முன்னேறி பல பட்டங்களைப் பெற்றான். சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்கினான். மற்றவர்கள் எல்லோரும்  இப்படித்தான் பிள்ளையை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்று ஊரே மெச்சும் அளவுக்கு அவன் உயர்ந்தான். கடைசியில் ஒரு பெரிய இடத்தில் அவனுக்குப் பெண் பேசி திருமணமும் நிச்சயமானது.  அப்போது தான் அந்த அசம்பாவிதம் நடந்தேறியது. திருமணத்திற்கு மூன்று நாட்கள் இருக்கும்போது அவன் வீட்டில் ஏதோ ஒன்றை எடுப்பதற்காக ஒரு  ஸ்டூலில் ஏறிய போது நிலை தடுமாறி கீழே விழ, சற்று நேரத்தில் அவன் மூச்சும் அடங்கியது. வாழைப்பழத்தை அது காயாக இருக்கும்போது அறுக்காமல் அது கனிந்த பின்பு அறுப்பது போல அல்லாஹ் இதை நிகழ்த்தினான். இச்சம்பவத்தால் அவனின் தாய் பைத்தியமாகி விட்டாள். சில நாட்களுக்குப் பிறகு அந்த ஊரின் இறைநேசர் ஒருவரின் கனவில் அந்த த் தாய்  தன் பிள்ளையை திட்டிய காட்சி கனவாக காட்டப்பட்டு இதனால் தான் அவன் இறந்தான் என்பதும் கூறப்பட்டது. தாயின் சாபம் என்பது பிள்ளை விஷயத்தில் உடனே பலிக்கும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.             

7.பாவமான விஷயங்களின் பக்கம் பார்க்க வேண்டாம்

أن يجتنب النظر إلى المعاصي وأن يكف جوارحه عنها، لأن ذلك مما يسرع في ترقية النفس إلى مقام أعلى، ويؤدي إلى سهولة استعمال الجوارح في الطاعة.

8.9.எந்த ஒன்றுக்கும் படைப்பினங்களின் பால் தேவையாக வேண்டாம். 

٨-"أن يجتنب الاعتماد على الخلق في حاجة صغرت أو كبرت" ؛ فإن ذلك تمام العزة للعابدين ، وشرف المتقين ، وبه يقوى على الأمر بالمعروف والنهي عن المنكر ، ويستغني بالله ، ويثق بعطائه ، ويكون الخلق عنده في الحق سواء ، وذلك أقرب إلى باب الإخلاص .

٩-"أن يقطع طمعه من الآدميين" ، فذاك الغنى الخالص ، والعز الأكبر ، والتوكل الصحيح ؛ فهو باب من أبواب الزهد ، وبه ينال الورع

10. பணிவை மேற்கொண்டால் தான் ஸாலிஹீன்களின் அந்தஸ்துக்கு உயர முடியும்

-"التواضع ، وبه تعلو المنزلة"  فهو خصلة أصل الاخلاق كلها ، وبه يدرك العبد منازل الصالحين الراضين عن الله في السراء والضراء  وهو كمال التقوى

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இஸ்லாமிய வெறுப்பை விதைக்கும் ஊடகங்கள்

 08-11-2024   بسم الله الرحمن الرحيم   இஸ்லாமிய வெறுப்பை  விதைக்கும் ஊடகங்கள்      https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில...