வியாழன், 24 அக்டோபர், 2024

பிறருக்கு இடையூறை ஏற்படுத்தும் பண்டிகைக் கொண்டாட்டங்களில் சில

 25-10-2024    ★    ரபீஉல் ஆகிர் 21    ★   ஹிஜ்ரி :1446    ★   بسم الله الرحمن الرحيم  

وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ (31)الاعراف

  உலகெங்கும் கொண்டாடப்படும் பண்டிகைகள் பலவிதம் – காலங்கள் நகரும்போது எதையெல்லாம் கொண்டாடுவது என்ற வரைமுறையே மக்களிடம் குறைந்து விட்டது. தக்காளிகளை டன் கணக்கில் வாங்கி ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து வீதியெங்கும் தக்காளி மயமாக கிடக்கும் தக்காளித் திருவிழா....கலர்ப்பொடிகளை ஒருவருக்கொருவர் தூவி அழகான முகத்தை அலங்கோலமாக ஆக்கும் ஹோலிப்பண்டிகை, உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் காளை மாடுகளுடன் மோதி பரிசு பெற நினைக்கும் ஜல்லிக்கட்டுத் திருவிழா, காசைக் கரியாக்கும்  (தீபாவளி) மதுவில் ஊறிக் கிடக்கும் புத்தாண்டுக் கொண்டாட்டம் இப்படி பலவிதம்

ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தில் வருடத்தில் இரு பெருநாட்கள் பண்டிகை நாட்களாக க் கொண்டாடப் படுகின்றன. அந்த இரு பண்டிகைகளின் நோக்கமே நம்மால் முடிந்த அளவு பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதை அடிப்படையாக க் கொண்ட பண்டிகைகளாகும். ஈதுல் ஃபித்ர் பெருநாள் என்பது தானியங்களை ஏழைகளுக்கு வழங்கும் பெருநாளாகவும் ஈதுல் அழ்ஹா என்பது குர்பானி  இறைச்சிகளை ஏழைகளுக்கு வழங்கும் பெருநாளாகவும் கொண்டாடப் படுகிறது. இதன் மூலம் அத்தகைய நாட்களில் நாமும் மகிழ்ச்சியாக இருந்து ஏழை மக்களையும் சந்தோஷப்படுத்த வேண்டும் என்பது இதன் நோக்கமாகும். 

ஆனால் தீபாவளி என்ற பண்டிகை இதற்கு முற்றிலும் மாற்றமான பண்டிகையாகும்.

முடிந்த வரை பிறருக்கு நன்மை செய்ய வேண்டுமே தவிர, நோவினை தரக்கூடாது என்பதே இஸ்லாத்தின் நோக்கம்.

நடுநிலை சிந்தனை,கொண்ட ஒரு மனிதன் எதை நல்லது என நினைக்கிறானோ அது இஸ்லாத்தில் வரவேற்கப்பட்டிருக்கும். அதே நேரத்தில் நடுநிலை சிந்தனை,கொண்ட ஒரு மனிதன் எதை கெட்டது என நினைக்கிறானோ அது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டிருக்கும். உதாரணமாக இறந்து விட்ட ஒரு மனிதனை எரிப்பது நல்லதா அல்லது புதைப்பது நல்லதா என்று வரும்போது இன்றைய அறிவியல் ஆய்வாளர்கள் முஸ்லிம்களைப் போன்று புதைப்பது தான் சுற்றுச் சூழலை பாதிக்காது.  எரிப்பதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் என்கின்றனர். அதுபோன்று பட்டாசு விஷயத்திலும் நடுநிலை சிந்தனை கொண்ட பலர் இதை எதிர்க்கின்றனர். 

நம்மால் முடிந்த வரை  பிறரை  சந்தோஷத்தப் படுத்த வேண்டுமே தவிர தன்னுடைய சந்தோஷத்திற்காக பிறரை சங்கடப்படுத்துவதை நம்முடைய மார்க்கம் தடுக்கிறது

عَن أَبِي مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ عَلَى كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ قَالُوا فَإِنْ لَمْ يَجِدْ قَالَ يَعْتَمِلُ بِيَدَيْهِ فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ قَالُوا فَإِنْ لَمْ يَفْعَلْ أَوْ يَسْتَطِعْ قَالَ يُعِينُ ذَا الْحَاجَةِ الْمَلْهُوفَ قَالَ فَإِنْ لَمْ يَسْتَطِعْ أَوْ لَمْ يَفْعَلْ قَالَ يَأْمُرُ بِالْخَيْرِ قَالُوا فَإِنْ لَمْ يَسْتَطِعْ أَوْ يَفْعَلْ قَالَ يُمْسِكُ عَنْ الشَّرِّ فَإِنَّهُ صَدَقَةٌ (مسلم) بَاب بَيَانِ أَنَّ اسْمَ الصَّدَقَةِ يَقَعُ عَلَى كُلِّ نَوْعٍ - كِتَاب الزَّكَاةِ

ஒவ்வொரு முஸ்லிமும் தர்மம் செய்ய  வேண்டும் என நபி ஸல் அவர்கள் கூறிய போது  அதற்கு இயலாதவர் என்ன செய்வார் என தோழர்கள் கேட்டதற்கு, தம்மால் இயன்ற வரை உழைத்து அதில் தனக்கும் பயன்படுத்தி பிறருக்கும் தர் ம ம் செய்வார் என நபி ஸல் கூறினார்கள். அதற்கும் இயலாதவர் என்ன செய்வார் என தோழர்கள் கேட்டதற்கு,  பொருளுதவி இல்லா விட்டாலும் துன்பத்தில் சிக்கியவருக்கு உடலால் ஒத்துழைப்புச் செய்வார் என்று கூறியவுடன் அதற்கும் இயலாதவர் என்ன செய்வார் என தோழர்கள் கேட்டதற்கு, நன்மையை ஏவுவார் என நபி ஸல் கூறியவுடன் அதற்கும் இயலாதவர் என்ன செய்வார் என தோழர்கள் கேட்டதற்கு, பிறருக்கு தீங்கு செய்யாமல் தடுத்துக் கொள்வதே ஒருவகை தர்மம் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.         

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو  رضى الله عنهما  عَنِ النَّبِىِّ  صلى الله عليه وسلم  قَالَ الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ (بخاري)  عن أبي هريرة قال : (قال رجل: يا رسول الله إن فلانة يذكر من كثرة صلاتها وصيامها وصدقتها غير أنها تؤذي جيرانها بلسانها. قال : هي في النار. قال : يا رسول الله فإن فلانة يذكر من قلة صيامها وصلاتها وصدقتها وأنها تصدق بالأثوار من الأقط ولا تؤذي جيرانها بلسانها. قال: هي في الجنة). أخرجه أحمد.

தன்னுடைய கரத்தாலும் நாவாலும் பிறருக்குத் தொந்தரவு தராமல் இருப்பவரே உண்மை முஸ்லிம். 

ஒரு பெண் அதிகம் நோன்பு வைக்கிறாள். அதிகம் தொழுகிறாள். அதிகம் தர்மமும் செய்கிறாள். ஆனால் தனது நாவால் அண்டை வீட்டாருக்குத் தீங்கு செய்கிறாள். அவளது நிலை என்ன என்று கேட்டதற்கு, அவள் நரகவாதி என நபி ஸல் பதில் கூறினார்கள் 

ஜனங்கள் நடந்து செல்லும் பாதையில் அவர்களுக்கு இடையூறு செய்வது மாபெரும் குற்றம் பட்டாசு வெடிப்பவர்கள் இந்தப் பாவத்தை பரவலாக செய்கிறார்கள்.

عن أبي سعيد الخدري قال: قال رسول الله صلى الله عليه وسلم : إياكم والجلوس في الطرقات فقالوا : يا رسول الله مالنا بد من مجالسنا نتحدث فيها فقال: فإذا أبيتم إلا المجلس فأعطوا الطريق حقه قالوا  وما حقه قال : غض البصر وكف الأذى ورد السلام والأمر بالمعروف والنهي عن المنكر. متفق عليه

பாதையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை நபி ஸல்  அவர்கள் கண்டித்த போது அல்லாஹ்வின் தூதரே அதற்கான நிர்பந்தம் ஏற்பட்டால் நாங்கள் என்ன செய்வது என தோழர்கள் கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் அதற்கான நிர்பந்தம் ஏற்பட்டால் பாதையின் உரிமைகளைப் பேணுங்கள் என்றார்கள். அது என்ன என்று நபித் தோழர்கள் கேட்டதற்கு, பாதையில் நடப்பவருக்குத்  தீங்கு செய்யாமல் இருப்பது, தவறான பார்வைகளை விட்டும் தற்காத்துக் கொள்வது, ஸலாமுக்கு பதில் சொல்வது, நன்மையை ஏவி, தீமையை விட்டும் தடுப்பது என நபி ஸல் அவர்கள் பதில் கூறினார்கள்.                                  

நாம் வாழுகின்ற காலம் வரை மற்றவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் நம்மால் பிரயோஜனம் ஏற்படும் வகையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது நபி ஸல் அவர்களின் நடைமுறையாகும்.

عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ الشَّجَرِ شَجَرَةً لَا يَسْقُطُ وَرَقُهَا وَإِنَّهَا مَثَلُ الْمُسْلِمِ فَحَدِّثُونِي مَا هِيَ فَوَقَعَ النَّاسُ فِي شَجَرِ الْبَوَادِي قَالَ عَبْدُ اللَّهِ وَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ فَاسْتَحْيَيْتُ ثُمَّ قَالُوا حَدِّثْنَا مَا هِيَ يَا رَسُولَ اللَّهِ قَالَ هِيَ النَّخْلَةُ (بخاري

நபி ஸல் ல ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருமுறை தன் தோழர்களிடம் பேசும்போது மரங்களில் ஒரு மரம் உள்ளது அதன் இலைகள் கீழே உதிராது.  அது முஃமினுக்கு ஒப்பானது. அது என்ன மரம் என்று எனக்குக் கூறுங்கள் என விடுகதை போன்று கேட்டார்கள். மக்கள் அப்போது காடுகளில் உள்ள மரங்களைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர். இப்னு உமர் ரழி அவர்கள் கூறினார்கள். என்னுடைய மனதில் அது பேரீத்த மரம் என்ற சிந்தனை தோன்றியது. இருந்தாலும் வயதில் மூத்தவர்கள் இருப்பதால் அதைக் கூற நான் தயங்கினேன். பிறகு நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே அது என்ன மரம் என்பதை நீங்களே கூறுங்கள் என்று வினவ, அதற்கு நபி ஸல் அவர்கள் அது பேரீத்த மரம் என்று பதில் கூறினார்கள்.                   

விளக்கம்- அது பேரீத்த மரத்தை முஃமினுக்கு ஒப்பிட்ட காரணம் பேரீத்த மரம் என்பது மற்ற மரங்களை விட பல்வேறு வகையில் சிறப்புத் தன்மை கொண்டதாகும். அதன் பழங்கள் காயாக இருக்கும்போதும் உண்ண முடியும். நன்கு பழுத்த பின்பும் பல நாட்கள் ஆனாலும் அதை உண்ண முடியும். மேலும் அதன் கொட்டைகள் கூட பல்வேறு  வகையில் பயன்படுகிறது. மேலும் அதன் மட்டைகள் கூட கூரைகளை அமைப்பதற்குப்  பயன்படுகின்றன. அதேபோல ஒரு முஃமினுடைய எந்த செயலும் வீணானதாக இருக்காது. தனது நேரத்தை அவர் வீணாக்க மாட்டார்.  ஏதேனும் ஒரு வகையில் மற்றவர்களுக்கு பலன் பெற்றுத் தரும் ஒரு  முஃமின் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்வார். 

பாதையில் உள்ள இடையூறுகளை நீக்குவது மாபெரும் நன்மைக்குரிய செயல்

قال رسول الله صلى الله عليه وسلم (بينما رجل يمشي بطريق وجد غصن شوك على الطريق فأخره فشكر الله له فغفر له) رواه مسلم.:

ஒருவர் நடந்து சென்று கொண்டிருக்கும்போது பாதையில் ஒரு முள்செடியைப் பார்த்தார். மக்களுக்கு இடையூறாக இருக்குமே என்று அதை அப்புறப்படுத்தினார். அதற்காக அல்லாஹ் அவருடைய அனைத்துப் பாவங்களையும் மன்னித்து நன்றி பாராட்டினான்.

 قال رسول الله صلى الله عليه وسلم: الايمان بضع وسبعون شعبة، افضلها قول: لا اله الا الله وادناها اماطة الاذى عن الطريق) رواه مسلم.

பாதையில் உள்ள இடையூறுகளை நீக்குவது நபி ஸல் அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படுகிறது.

عَنْ أَبِى ذَرٍّ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « عُرِضَتْ عَلَىَّ أَعْمَالُ أُمَّتِى حَسَنُهَا وَسَيِّئُهَا فَوَجَدْتُ فِى مَحَاسِنِ أَعْمَالِهَا الأَذَى يُمَاطُ عَنِ الطَّرِيقِ وَوَجَدْتُ فِى مَسَاوِى أَعْمَالِهَا النُّخَاعَةَ تَكُونُ فِى الْمَسْجِدِ لاَ تُدْفَنُ ». (مسلم

என் உம்மத்தின் நற்செயல்கள், தீய செயல்கள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன. அவற்றில் மிகச் சிறந்த நற்காரியமாக பாதையில் கிடக்கும் இடையூறுகளை அகற்றுவதை நான் பெற்றுக் கொண்டேன். அவற்றில் மிகக்கெட்ட காரியமாக நான் கண்டது மஸ்ஜிதை ஒருவர்  எச்சில் துப்பி அசிங்கப்படுத்தி விட்டு அதை புதைக்காமல் (சுத்தம் செய்யாமல்) விடுவதாகும்.

நன்மையான காரியமாக இருப்பினும் பிறருக்கு தொந்தரவு கொடுத்து நிறைவேற்றப்பட்டால் நன்மை இல்லை

عن سَلْمَانُ الْفَارِسِيُّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ وَتَطَهَّرَ بِمَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ ثُمَّ ادَّهَنَ أَوْ مَسَّ مِنْ طِيبٍ ثُمَّ رَاحَ فَلَمْ يُفَرِّقْ بَيْنَ اثْنَيْنِ فَصَلَّى مَا كُتِبَ لَهُ ثُمَّ إِذَا خَرَجَ الْإِمَامُ أَنْصَتَ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الْأُخْرَى (بخاري 

யார் ஜும்ஆ நாளில் குளித்து தம்மிடம் உள்ள நறுமணத்தைப் பூசி பின்பு மஸ்ஜிதுக்கு வந்து அங்கு அமர்ந்திருக்கும் இருவரைப் பிரிக்காத நிலையில் அதாவது அவ்விருவரையும் தாண்டிச் செல்லாத நிலையில் உபரியான தொழுகை தொழுது பிறகு இமாம் அறையில் இருந்து குத்பாவுக்காக வெளியேறிய பின் அமைதியாக அவரது உரையைக் கேட்பாரோ அவருடைய அடுத்த ஜும்ஆ வரையிலான பாவங்கள் மன்னிக்கப்படும்.                             

படிப்பினை- ஆனால் இருவரின் பிடரிகளைத் தாண்டிச் சென்றால் ஜும்ஆவின் நன்மை இல்லை

عن ابْن عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا  نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُقِيمَ الرَّجُلُ أَخَاهُ مِنْ مَقْعَدِهِ وَيَجْلِسَ فِيهِ قُلْتُ لِنَافِعٍ الْجُمُعَةَ قَالَ الْجُمُعَةَ وَغَيْرَهَا (بخاري

ஜும்ஆவிலோ மற்ற நாட்களிலோ ஒருவர் தான் அமருவதற்காக மற்றொருவரை எழுப்பி அந்த இடத்தில் அமர வேண்டாம்.

عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُقِمْ أَحَدُكُمْ أَخَاهُ مِنْ مَجْلِسِهِ ثُمَّ يَجْلِسُ فِيهِ  قَالَ وَكَانَ الرَّجُلُ يَقُومُ لِابْنِ عُمَرَ فَلَا يَجْلِسُ فِيهِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ (ترمذي

இப்னு உமர் ரழி அவர்கள் மஸ்ஜிதுக்கு வந்த போது அவர்களுக்காக ஒருவர் எழுந்து தம்முடைய இருப்பிடத்தை விட்டுக் கொடுத்தார். அந்த இடத்தில் இப்னு உமர் ரழி அமர மறுத்து விட்டார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ ، وَأَبِي سَعِيدٍ ، قَالاَ :سَمِعْنَا رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ وَاسْتَنَّ وَمَسَّ مِنَ الطِّيبِ إِنْ كَانَ عِنْدَهُ , وَلَبِسَ مِنْ أَحْسَنِ ثِيَابِهِ , ثُمَّ جَاءَ إِلَى الْمَسْجِدِ , وَلَمْ يَتَخَطَّ رِقَابَ النَّاسِ , ثُمَّ رَكَعَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَرْكَعَ , ثُمَّ أَنْصَتَ إِذَا خَرَجَ إِمَامُهُ حَتَّى يُصَلِّيَ كَانَتْ كَفَّارَةً لِمَا بَيْنَهَا وَبَيْنَ الْجُمُعَةِ الَّتِي كَانَتْ قَبْلَهَا (صحيح ابن حبان)

ஆயிஷா ரழி அவர்களிடம் அவர்களின் பணிப்பெண் வந்து அன்னையே! நான் என்னுடைய தவாஃபின் ஏழு சுற்றில் இரண்டு மூன்று தடவை ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டேன் என்று பெருமையுடன் வந்து கூறினார். உடனே ஆயிஷா ரழி அவர்கள் கோபத்துடன் ஆண்களின் கூட்ட நெரிசலுக்கு மத்தியில் அவர்களை இடித்துக் கொண்டு நீ இவ்வாறு செய்தாயல்லவா?  அல்லாஹ் உனக்கு நற்கூலி தராமல் போகட்டுமாக! கூட்ட நெரிசலாக இருந்தால் ஹஜருல் அஸ்வதை நோக்கி தக்பீர் மட்டும் சொல்லி அந்த இடத்தை விட்டும் நீ கடந்து போயிருக்க வேண்டாமா? என்றார்கள்- நூல் பைஹகீ                       

மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுப்பவன் மறுமையில் தான் செய்த நன்மைகளை இழப்பான்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ قَالُوا الْمُفْلِسُ فِينَا مَنْ لَا دِرْهَمَ لَهُ وَلَا مَتَاعَ فَقَالَ إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا وَقَذَفَ هَذَا وَأَكَلَ مَالَ هَذَا وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ وَهَذَا مِنْ حَسَنَاتِهِ فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ ثُمَّ طُرِحَ فِي النَّارِ (مسلم) بَاب تَحْرِيمِ الظُّلْمِ- كِتَاب الْبِرِّ وَالصِّلَةِ وَالْآدَابِ

பரிதாபமான ஏழை யார் தெரியுமா என்று நபி ஸல் அவர்கள் கேட்ட போது யாரிடம் பணம் காசுகள் பொருட்கள் எதுவும் இல்லையோ அவர் தான் என்று நாங்கள் கூறினோம் அதற்கு நபி ஸல் அவர்கள் என்னுடைய உம்மத்தில் பரிதாபமான ஏழை யாரென்றால் மறுமை நாளில் ஒருவர் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகிய அனைத்தையும் சரியாக நிறைவேற்றியவராக வருவார். ஆனால் அவர் இன்னாரைத் திட்டியிருப்பார். இன்னார் மீது அவதூறு சுமத்தியிருப்பார். இன்னாருடைய பொருளை அபகரித்திருப்பார். இன்னாரின் உயிரைப் பறித்திருப்பார். இன்னாரை அடித்திருப்பார். எனவே இவருடைய நன்மைகளைப் பிடுங்கி அவர்களுக்குக் கொடுக்கப்படும். இறுதியில் இவரின் நன்மைகள் தீர்ந்து விடும். இவரால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் மிச்சமிருப்பார்கள். தீர்ப்புகள் முடியும் முன்பே இவரின் நன்மைகள் தீர்ந்து விட்டதால் அவர்களின் பாவங்களை இவர் மீது சுமத்தப்பட்டு நரகில் வீசப்படுவார்.                                                            

பட்டாசு வெடிப்பதால் நாம் பல்வேறு பாவங்களைச் செய்கிறோம்.

ஒன்று நம்மை நாமேஅழித்துக் கொள்வது, மற்றொன்று, நாம் மற்றவர்களை அழிப்பது.இந்த இரண்டு பாவங்களும் ஒரு சேர பட்டாசில் அமைந்திருக்கின்றன. மேலும் நடைபாதையில் நடந்து செல்பவர்களுக்கு பெரும் இடையூறாக இது அமைந்துள்ளது.

وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا (29) النساء

உங்களையே கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாகஇருக்கிறான்.அல்குர்ஆன் 4:29

وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ (195) البقرة

உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மைசெய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். 

பட்டாசுக்காக செய்த செலவுகளும் வீண் விரயமாகும். அதைப் பற்றி மறுமையில் விசாரிக்கப்படும்

وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ (31)الاعراف

عَنِ ابْنِ مَسْعُودٍ رضي الله عنه عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم قَالَ لاَ تَزُولُ قَدَمَا ابْنِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عِنْدِ رَبِّهِ حَتَّى يُسْأَلَ عَنْ خَمْسٍ عَنْ عُمْرِهِ فِيمَا أَفْنَاهُ وَعَنْ شَبَابِهِ فِيمَا أَبْلاَهُ وَمَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ وَمَاذَا عَمِلَ فِيمَا عَلِمَ (ترمذي)

இந்தியாவில் பத்தில் ஒருவருக்கு காது கேட்பதில் மந்த நிலை நீடிப்பதற்கு பட்டாசு முக்கிய காரணம்

சப்தங்களை டெசிபல் என்ற அளவில் கணக்கிடுவார்கள் நாம் பேசும் சப்தங்கள் 30 டெசிபலுக்கு மேலே போகாது அதிக பட்சம் 60 டெசிபல் சப்த த்திற்கு மேல் கேட்டால் அது காதை பாதிக்கும். ஜவ்வு கிழிய வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுவார்கள். இதனால் வாகனங்களின் ஹாரன் கூட 80 டெசிபலுக்கும் மேலே இருக்க க் கடாது என போக்குவரத்து துறை சட்டம் இயற்றியுள்ளது ஆனால் பட்டாசுக்கு அதற்கும் மேலாக அதிக பட்சம் 125 டெசிபல் வரை  அரசாங்கம் அனுமதி தந்துள்ளது.125 டெசிபலுக்கு மேலே வெடிகளை வெடித்தால் அவர் 1986 ஆம் ஈண்டு சுற்றுப்புற சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் படி அவர் தண்டனைக்குரியவர் ஆவார். ஆனால் அதையும் மீறி 150 முதல் 200 டெசிபல் வரை பட்டாசுகள்  வரைமுறையை மீறி தயாரிக்கப் படுகின்றன. இதனால் சமீபத்திய ஆய்வில் இந்தியாவில் 10 ஒருவருக்கு காது சம்பந்தப்பட்ட கோளாறுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு பல காரணங்கள். அளவுக்கு மீறிய சப்தத்துடன் காதுகளில் வாக்மேன் மாட்டிக் கொண்டு இசை கேட்பது. வாகன இரைச்சல், திருவிழாக்களில் அதிக சப்தத்துடன்  ஒலி பரப்பப்படும் பாட்டுகள், அதிக சப்தத்துடன்  தியேட்டர் மற்றும் டிவி முன்பு அமருதல் மற்றும் பட்டாசு வெடி சப்தங்கள் ஆகியவை இதற்கான காரணங்களாகும்

சப்தம் மட்டுமன்றி பட்டாசுகள் ஏற்படுத்தும் புகையும் மனித உடலுக்கு ஆபத்து

பண்டிகை கொண்டாட்டம் தொடரத் தொடர, காற்று மேலும் மேலும் மாசுபட்டுக்கொண்டே இருக்கின்றது.அதிலும் ஈரப்பதமான குளிர் காற்றில் இந்த வெடி மருந்துப் புகை மண்டலம் ஒன்றாககலக்கையில்  மாசு படுவதன் அளவு அதிகரிப்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. எனவே இந்த சீசனில் நாம் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் ஆகி விடுகின்றது.

”ஒவ்வொரு தீபாவளியின் போதும் இளைப்பு மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டகுழந்தைகள் சிகிச்சைக்காக வருகின்றன. ஏற்கனவே வயது வந்த, நிரந்தரஆஸ்துமாக்காரர்களுக்கு இந்தக் கால கட்டத்தில் ஆஸ்துமா அதிகமாகி விடுகின்றது.அவர்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்இந்தக் கால கட்டத்தில் இத்தகையநோயாளிகள் 50 சதவிகிதம் அதிகரித்து விடுகின்றனர் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.”ஆஸ்துமா நோயுள்ளவர்கள் மட்டும் ஆபத்தில் மாட்டிக் கொள்வதில்லை! புள்ளிவிபரப்படி, ஆஸ்துமா இல்லாத பல பேருக்குப் புதிதாக ஆஸ்துமா ஏற்பட்டு ஆபத்தில்மாட்டிக் கொள்கின்றனர். இதனால் புதிய ஆஸ்துமாக் காரர்களின் எண்ணிக்கை இந்தப்பருவத்தில் கூடி விடுகின்றது” என்று மூச்சு ஆராய்ச்சி நிறுவனத்தில் மருத்துவர் ஆர்.நரசிம்மன் கூறுகின்றார்.இதற்குக் காரணம் இந்தப் பட்டாசுப் புகை மூச்சுக் குழாயின் மேல் சவ்வை சிதைத்துவிடுகிறது. இதனால் மனித உடலில் இயற்கையாக உள்ள எதிர்ப்பு சக்தி அழிந்து போய்,அவர் மூச்சு சம்பந்தமான வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி விடுகிறார்.இந்த வைரஸ்களில் ஒன்று பெரிய, சிறிய மூச்சுத் துவாரங்களை பாதிப்படையச் செய்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இஸ்லாமிய வெறுப்பை விதைக்கும் ஊடகங்கள்

 08-11-2024   بسم الله الرحمن الرحيم   இஸ்லாமிய வெறுப்பை  விதைக்கும் ஊடகங்கள்      https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில...