10-o1-2025
رجب – 9 بسم الله الرحمن الرحيم
ஹலால் உணவுகளுக்கு பஞ்சம் ?
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
قُلْ لَا أَجِدُ فِيمَا أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَى طَاعِمٍ يَطْعَمُهُ إِلَّا أَنْ يَكُونَ مَيْتَةً أَوْ دَمًا مَسْفُوحًا أَوْ لَحْمَ خِنْزِيرٍ فَإِنَّهُ رِجْسٌ (145) الانعام
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ يَأْكُلُونَ الرِّبَا فَمَنْ لَمْ يَأْكُلْهُ أَصَابَهُ مِنْ غُبَارِهِ (نسائ) بَاب اجْتِنَابِ الشُّبُهَاتِ فِي الْكَسْبِ-كِتَاب الْبُيُوعِ
மேற்காணும் நபிமொழியின் அடிப்படையில் தற்காலத்தில் ஹராமை விட்டும் விலக நினைத்தாலும் விலக முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. ஒருபுறம் இன்று முஸ்லிம்களில் பலர் வட்டிக்குக் கடன் வாங்கி வியாபாரம் செய்து வருகின்றனர். இதுவெல்லாம் இல்லாமல் வாழ முடியாது என்று வசனம் பேசுகின்றனர். மற்றொரு வகையில் உண்மையான முஸ்லிம் ஹராமை விட்டும் விலக நினைத்து முழுக்க முழுக்க ஹலால் உணவுகளை சாப்பிட நினைத்தாலும் நாம் வாங்கும் உணவுப் பொருட்களில் நாம் உண்ணும் உணவுகளில் எது ஹலால் எது ஹராம் என்று பிரித்து அறிய முடியாத அளவுக்கு இன்றைக்கு சூழ்நிலைகள் மாறி விட்டது. பெரிய உணவகங்களில் ஹலால் என்று விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தாலும் அந்த சான்றிதழ் அந்த உணவகங்களுக்கு முறையாக வழங்கப்பட்டது தானா என்ற சந்தேகம் நிலவுகிறது.பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் திண்பண்டங்கள் ஹராமான உயிரினங்களின் பாகங்கள் கலந்த நிலையில் விற்கப் படுகின்றன. அனைவரின் வீடுகளிலும் பயன்படுத்தப்படும் வெள்ளை சர்க்கரை உற்பத்தியில் அதை வெள்ளை நிறமாக ஆக்குவதற்காக மாட்டின் சில பாகங்கள் பயன்படுத்தப் படுவதாக கூறப்படுகிறது. அவை முறையாக அறுக்கப்பட்ட மாடுகள் தானா என்ற சந்தேகம் நிலவுகிறது. எனவே இது போன்ற விஷயங்களில் மிகவும் கவனம் தேவை. குறிப்பாக நம்முடைய பிள்ளைகள் உண்ணும் திண்பண்டங்கள் மூலமாக அவர்கள் வளர்ந்து வரும்போதே ஹராம் என்ற நஞ்சைக் கொடுத்துப் பழக்கும் விஷயத்தில் நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
யூதர்களின் சூழ்ச்சியால் பாக்கெட்டுகளில் விற்கப்படும் சில திண்பண்டங்களில் ஹராம் கலக்கப்படுகிறது.
யூதர்களின் தயாரிப்புகளான சில திண்பண்டங்களில் பன்றியின் கொழுப்புகளும் கலக்கப்படுகின்றன. எந்தெந்த உணவுகளில் அவ்வாறு கலக்கப்படுகின்றன என்பதைக் கண்டறிய முடியா விட்டாலும் எந்தப் பாக்கெட்டுகளில் சிவப்பு நிற அடையாளம் போடப் பட்டுள்ளதோ அதில் அசைவம் கலக்கப்பட்டுள்ளது என்பது உறுதியான விஷயமாகும். பச்சை நிற அடையாளம் இருந்தால் அது சைவம் என்பதற்கான அடையாளமாகும். எனவே சிவப்பு நிற அடையாளம் போடப் பட்டுள்ள அசைவத்தை தவிர்க்க வேண்டும்.
KFC, PIZZA HUT, OREO, ORAL-B, colgate ,citi bank , nike, pepsi, LEE, esso, dunhill, Motorola
ஆகிய நிறுவனங்கள் யூதர்களுடையதாகும்
ஈஸா அலைஹிஸ்ஸலாம் இறங்கி வந்தவுடன் முதல் வேலையாக உலகம் முழுவதும் உள்ள
பன்றிகளை ஏன் கொல்வார்கள் என்பதற்கான காரணம் இப்போது நமக்குப் புரியும்
காலங்கள் செல்லச் செல்ல பன்றியின் உலக மயமாக்கல் பெருகி விடும் என்பதால் தான் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் இறங்கி வந்தவுடன் முதல் வேலையாக உலகம் முழுவதும் உள்ள பன்றிகளைக் கொல்ல உத்தரவிடுவார்கள்.
عَنِ ابْنِ الْمُسَيَّبِ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ - رضى الله عنه - يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - « وَالَّذِى نَفْسِى بِيَدِهِ لَيُوشِكَنَّ أَنْ يَنْزِلَ فِيكُمُ ابْنُ مَرْيَمَ حَكَمًا مُقْسِطًا فَيَكْسِرَ الصَّلِيبَ ، وَيَقْتُلَ الْخِنْزِيرَ ، وَيَضَعَ الْجِزْيَةَ ، وَيَفِيضَ الْمَالُ حَتَّى لاَ يَقْبَلَهُ أَحَدٌ » (بخاري
எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அத்தகைய அல்லாஹ் மீது சத்தியமாக மிகச் சிறந்த நீதிமானாக ஆட்சி செய்யும் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறங்கும் காலம் நெருங்கி விட்டது. அவ்வாறு அவர்கள் இறங்கியுவுடன் சிலுவையை ஒழிப்பார்கள். பன்றிகளைக் கொல்வார்கள். (இறை மறுப்பாளர்கள் மீது) ஜிஸ்யாவை ஏற்படுத்துவார்கள். செல்வம் பெருகும். இறுதியில் (அதற்கான) ஜகாத்தை யாரிடம் கொடுத்தாலும் வாங்காத சூழ்நிலை ஏற்படும்
உணவுப் பொருட்களில் பெரும்பாலும் கலப்படங்கள் பெருகுவதற்கு உற்பத்திக் குறைவு முக்கியமான காரணம்.
மனிதர்களின் பாவங்கள் பெருகும் போது உற்பத்திப் பொருட்களில் அல்லாஹ் பரக்கத்தை குறைப்பான்.
عَنْ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.. وَإِنَّ الْعَبْدَ لَيُحْرَمُ الرِّزْقَ بِالذَّنْبِ يُصِيبُهُ (ابن ماجة
ஆட்சியாளர்கள் நல்லவர்களாக அமையாவிட்டாலும் உற்பத்திக் குறைவு ஏற்படும். பரக்கத் நீங்கும்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ أُمَرَاؤُكُمْ خِيَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ سُمَحَاءَكُمْ وَأُمُورُكُمْ شُورَى بَيْنَكُمْ فَظَهْرُ الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ بَطْنِهَا وَإِذَا كَانَ أُمَرَاؤُكُمْ شِرَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ بُخَلَاءَكُمْ وَأُمُورُكُمْ إِلَى نِسَائِكُمْ فَبَطْنُ الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ ظَهْرِهَا (ترمذي
எதுவரை உங்களில் தலைவர்கள் நல்லவர்களாகவும் உங்களில் செல்வந்தர்கள் தர்மம் செய்பவர்களாகவும் உங்களுடைய காரியங்கள் உங்களுக்கிடையில் கலந்து ஆலோசிக்கப்படுவைகளாகவும் இருக்குமோ அதுவரை இந்த பூமியின் மேற்பரப்பு இந்த பூமியின் கீழ்பரப்பை விடவும் நல்லதாக இருக்கும். இந்த பூமி செழிப்பாகவும் அமைதியாகவும் இருக்கும். எப்போது உங்களில் தலைவர்கள் தீயவர்களாகவும் உங்களில் செல்வந்தர்கள் கஞ்சத்தனம் செய்பவர்களாகவும் உங்களுடைய காரியங்கள் அனைத்தும் பெண்களிடம் ஒப்படைக்கப் படக்கூடியதாகவும் ஆகி விடுமோ அப்போது இந்த பூமியின் கீழ்பரப்பு இந்த பூமியின் மேற்பரப்பை விடவும் மேலானது. அதாவது இந்த பூமியில் பல விதமான சோதனைகள் தோன்றி மனிதர்களை நிம்மதியற்றவர்களாக ஆக்கி விடும். (இந்த பூமியின் செழிப்பு குறைந்து விடும்.)
அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு வாழும்போது உற்பத்திப்பொருட்களில் அல்லாஹ் பரக்கத் தருவான்
وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ (96)الاعراف -
{ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النّاسِ (41الروم) أي بان النَّقْصَ في الزروعِ والثمار بسبب المعاصي. وقال أبو العالية: من عصى الله في الأرض فقد أفسد في الأرض, لأن صلاح الأرض والسماء بالطاعة, ولهذا جاء في الحديث الذي رواه أبو داود "لَحَدٌّ يُقَامُ في الأرض أحبُّ إلى أهلها مِنْ أن يُمْطَروا أربعين صباحاً" والسبب في هذا أن الحدود إذا أُقِيمتْ اِنْكفَّ الناسُ أو أكثرُهم أو كثيرٌ منهم عن تعاطي المحرمات, وإذا تركت المعاصي كان سبباً في حصول البركات من السماء والأرض. ولهذا إذا نزل عيسى بن مريم عليه السلام في آخر الزمان يَحْكم بهذه الشريعة المطهرة في ذلك الوقت من قتل الخنزير وكسرِ الصَّليب7 ووضعِ الجزية, (وهو تركها), فلا يقبل إلا الإسلام أو السيف, فإذا أهلك الله في زمانه الدجال وأتباعه ويأجوج ومأجوج, قيل للأرض: أُخْرُجي بركتَكِ, فيأكل من الرُّمانة8 الفِئَامُ من الناس ويستظلون بقحفها ويكفي لبن اللقحة الجماعة من الناس وما ذاك إلا ببركة تنفيذ شريعة محمد صلى الله عليه وسلم فكلما أُقِيمَ العدلُ كَثُرَتِ البركات والخير. ولهذا ثبت في الصحيح أن الفاجر إذا مات تستريح منه العباد والبلاد والشجر والدواب.(تفسير ابن كثير)
பொருள்- 7,சிலுவை 8,மாதுளை அந்த மாதுளையின் தோலை மக்கள் மழைக்கு குடையாக பயன்படுத்தும் அளவுக்கு பெரிதாக இருக்கும்
ஒரு கெட்டவனுக்கு முறைப்படி தண்டனை வழங்கப்பட்டு அவன் செத்து விடுகிறான் என்றால் அதனால் ஏற்படும் பரக்கத், செழிப்பாகிறது நாற்பது நாட்கள் மழை பெய்வதால் ஏற்படும் செழிப்பை விட அதிகமாகும் என்று கூறினார்கள் அதாவது அந்த கெட்டவன் உயிரோடு நம்முடன் வாழ்ந்து கொண்டிருந்த வரை அவனுடைய பாவங்கள் அளவுக்கு இந்த பூமியில் செழிப்பு கொஞ்சம் குறைந்திருந்தது அவன் இறந்த பின்பு அந்த செழிப்பு மீண்டும் ஏற்படுகிறது இதனால் தான் ஒரு கெட்டவன் செத்துப் போனால் இந்த பூமியில் உள்ள மலைகள்,மரங்கள், செடிகள், கொடிகள் அனைத்தும் நிம்மதி அடைகின்றன. அது மட்டுமல்லாமல் இறை நல்லடியார்களும் நிம்மதி அடைகிறார்கள் ஆக எந்த அளவுக்கு இந்த பூமியில் கெட்டவர்கள் அதிகம் இருக்கிறார்களோ அந்த அளவுக்கு இந்த பூமி பாதிக்கப்படும் ஆனால் கடைசி காலத்தில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் இந்த பூமிக்கு வரும்போது கெட்டவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் நல்லவர்கள் மட்டுமே இருப்பார்கள் அப்போது இந்த பூமியைப் பார்த்து அல்லாஹ் சொல்லுவான் பூமியே நீ உன்னுடைய பரக்கத்தை முழுமையாக வெளிப்படுத்து என்று அல்லாஹ் கூறுவான் அப்போது இந்த பூமி மிகவும் செழிப்பாக இருக்கும். எந்த அளவுக்கென்றால் இந்த பூமியில் விளையும் ஒரு மாதுளம்பழத்தை ஒரு கூட்டமே உட்கார்ந்து சாப்பிடுவார்கள் சாப்பிட்ட பின் அதனுடைய தோலை மக்கள் மழைக்கு குடையாக பயன்படுத்துவார்கள் அந்த அளவுக்கு மாதுளம் பழம் பெரிதாக இருக்கும். ஒரே ஒரு மாட்டிலிருந்து கறக்கப்படும் பால் ஒரு மாபெரும் கூட்டத்தினருக்கே போதுமானதாக இருக்கும் இவ்வாறு எல்லாவற்றிலும் செழிப்பு வந்துவிடும். இது ஹலால் உணவுகளால் கிடைக்கும் பரக்கத்.
நல்லவர்கள் நிறைந்திருக்கும்போது பரக்கத் பெருகும், கலப்படம் இருக்காது என்பதற்கு மற்றொரு உதாரணம்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَقِيءُ الْأَرْضُ أَفْلَاذَ كَبِدِهَا أَمْثَالَ الْأُسْطُوَانِ مِنْ الذَّهَبِ وَالْفِضَّةِ قَالَ فَيَجِيءُ السَّارِقُ فَيَقُولُ فِي مِثْلِ هَذَا قُطِعَتْ يَدِي وَيَجِيءُ الْقَاتِلُ فَيَقُولُ فِي هَذَا قَتَلْتُ وَيَجِيءُ الْقَاطِعُ فَيَقُولُ فِي هَذَا قَطَعْتُ رَحِمِي ثُمَّ يَدَعُونَهُ فَلَا يَأْخُذُونَ مِنْهُ شَيْئًا (مسلم
கருத்து-கடைசி காலத்தில் இந்தபூமி தன் ஈரக்குலையை தங்கம் வெள்ளியால் ஆன தூண்களாக வெளியே தள்ளும். அதாவது இந்த பூமியின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் தங்க உலோகங்கள் தானாக மேலே வரும். எந்த தங்கம் இன்று பல மைல் தூரம் பூமியைத் தோண்டி வெட்டி எடுத்தாலும் சிறிதளவு மட்டுமே கிடைக்கிறதோ அத்தகயை தங்கம் வெள்ளி படிமங்கள் பெரும் பெரும் தூண்களாக ஆங்காங்கே பாறைகளைப் போன்று கிடக்கும். ஒரு காலத்தில் தங்கத்தை திருடி அதற்காக கை வெட்டப்பட்டு அப்போது திருந்தி வாழும் ஒரு மனிதர் இதற்காகவா என் கை வெட்டப்பட்டது என்று கூறுவார்.தங்கத்திற்காக கொலை செய்தவர் இதற்காகவா நான் கொலை செய்தேன் என்று கூறுவார். நகை (சம்பந்தமான தகராறு) காரணமாக உறவுகளைத் துண்டித்தவர் (உதாரணமாக நகை குறைவாக இருப்பதைச் சுட்டிக் காட்டி மருமகளைக் கொடுமைப் படுத்தும் மாமியார் அல்லது கணவர்) இதற்காகவா நான் உறவினர்களுடன் சண்டையிட்டேன் என்று கூறுவார். கடைசியில் யாரும் அதை எடுக்க மாட்டார்கள். அது அப்படியே அனாமத்தாக கிடக்கும். அந்த அளவுக்கு அல்லாஹ் பரகத்தைத் தருவான்.
நல்லோர்கள் வாழ்ந்த காலத்தில் ஒரு கோதுமை என்பது பேரீத்தங்கொட்டை அளவு இருந்தது
وقد ذكر الامام أحمد فى مسنده فى ضمن حديث قال وجدت في خزائن بعض بني أمية حنطة الحبة بقدر نواة التمرة وهي في صرة مكتوب عليها كان هذا ينبت في زمن من العدل وكثير من هذه الأفات أحدثها الله سبحانه وتعالى بما أحدث العباد من الذنوب (تفسير لابن القيم
இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹ் அவர்கள் தனது நூலில் எழுதியுள்ளார்கள். நான் பனூ உமய்யா குலத்தாரில் சிலர் பாதுகாத்து வைத்திருந்த பொக்கிஷங்களில் ஒரு கோதுமையை பார்த்தேன். அது ஒரு பையில் இருந்தது. பேரீத்தம்பழத்தின் கொட்டை அளவுக்கு பெரிதாக இருந்தது. அதிலே பின்வரும் வாசகம் எழுதப் பட்டிருந்தது. இந்தக் கோதுமை நீதமானவர்கள் நிறைந்த காலத்தில் விளைந்ததாகும்.
நல்லோர்கள் குறைந்து, பரக்கத்தும் குறைந்து ஹராம் அதிகரித்து விட்டால் துஆ ஏற்கப்படாது
ஹராம் என்பது நமக்கே தெரியாத நிலையில் அதை உண்டாலும் அதன் பிரதிபலிப்பு சிறிதளவேனும் இருக்கும்
ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப் ஒரு கொடுங்கோலர் என்பதை நாம் அறிவோம். அவர் கொல்லப்பட்ட நேரத்தில் யாருக்கும் தெரியாமல் அடக்கம் செய்தார்கள். காரணம் அவருடைய கப்ரு எங்கே என்று தெரிந்தால் மக்கள் தோண்டி எடுத்து அந்த உடலை சித்ரவதை செய்வார்கள் என்னும் அளவுக்கு அவருடைய ஆட்சியில் கொடுமைகள் அதிகம் இருந்தன. அவர் ஆட்சிக்கு வந்த புதிதில் ஒரு சிலர் ஹஜ்ஜாஜிடம் உங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சில நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் அவர்கள் கையேந்தி துஆ செய்தால் உங்களுடைய ஆட்சி உடனே அகற்றப்பட்டு விடும் என்றனர். உடனே ஹஜ்ஜாஜ் ஒருவேளை செய்தார். ஒரு மாபெரும் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அதில் அனைத்து மக்களும் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். முக்கியமாக எவர்களுடைய துஆக்கள் உடனே ஏற்கப்படும் என்று கூறப்பட்டதோ அவர்களும் அழைக்கப்பட்டனர். அனைவரும் விருந்து உண்டனர். விருந்து முடிந்தவுடன் ஹஜ்ஜாஜ் மக்களை நோக்கி இனிமேல் உங்களில் யாருடைய துஆவைப் பற்றியும் எனக்கு கவலையில்லை. ஏனெனில் நான் கொடுத்த உணவு ஹராமான உணவாகும். அது உங்களின் வயிற்றுக்குள் சென்று விட்டது எனவே எனக்கு எதிராக யார் துஆ செய்தாலும் அது ஏற்கப்படாது என்றார். தங்களை அறியாமல் வயிற்றுக்குள் சென்று விட்ட ஹராமான உணவுக்காக அல்லாஹ்விடம் தவ்பா செய்யாமல் அல்லாஹ் மன்னிப்பான் என்பது ஒருபுறம் இருந்தாலும் இங்கே ஹஜ்ஜாஜ் சொன்ன வார்த்தை கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
அன்று ஹஜ்ஜாஜ் செய்த வேலையை இன்றைய முஸ்லிம் உலகிற்கு எதிராக யூத பயங்கரவாதிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் விரும்பிச் சாப்பிடக் கூடிய உணவுப் பொருட்கள் பலவற்றில் பன்றியின் உதிரி பாகங்களை கலந்து விற்கப்படுகின்றன. இது போதாதா? நமது துஆக்களின் பவர் குறைவதற்கு...?
பன்றியை எவ்வளவு தான் ஆரோக்கியமான சூழலில் வளர்த்தினாலும் பன்றி பன்றி தான். அதன் இயற்கை குணம் மாறப் போவதில்லை. இன்று பெரும்பாலும் மக்களிடம் வெட்கம் எடுபட்டுப் போனதற்கு பன்றி இறைச்சியின் உலக மயமாக்கலும் ஒரு காரணம். ஹராமை ஹராம் என்று தெரியாமல் உண்ணும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளோம்.
தன் உணவு ஹராமானதா அல்லது ஹலாலானதா என்பதைப் பற்றி அறவே பொருட்படுத்தாத காலம் வரும் என்ற முன்னறிவிப்பு
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ لَا يُبَالِي الْمَرْءُ مَا أَخَذَ مِنْهُ أَمِنَ الْحَلَالِ أَمْ مِنْ الْحَرَامِ (بخاري) بَاب قَوْلِ اللَّهِ تَعَالَى {وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا} (كتاب التفاسير)
ஷரீஅத்தை பேணி வாழ முடியாத காலத்திலும் தன்னால் முடிந்த வரை பேணுதலாக வாழ்பவரின் சிறப்பு
عَنْ الْمُعَلَّى بْنِ زِيَادٍ رَدَّهُ إِلَى مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ رَدَّهُ إِلَى مَعْقِلِ بْنِ يَسَارٍ رَدَّهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْعِبَادَةُ فِي الْهَرْجِ كَهِجْرَةٍ إِلَيَّ (مسلم) بَاب فَضْلِ الْعِبَادَةِ فِي الْهَرْجِ- كِتَاب الْفِتَنِ وَأَشْرَاطِ السَّاعَةِ- المراد بالهرج هنا الفتنة واختلاط أمور الناس وسبب كثرة فضل العبادة فيه أن الناس يغفلون عنها ويشتغلون عنها (شرح النووي علي مسلم)
சோதனையான காலத்திலும் இபாதத் செய்வது (அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வாழ்வது) என்னுடன் ஹிஜ்ரத் செய்வதற்கு ஈடாகும்
ஹலால் உணவு நிறைவாக கிடைக்காத சூழ்நிலைகளில்
கிடைத்த வரை மட்டுமே ஹலால் உணவை உண்டு பசியுடன் காலம் கழித்த நம் முன்னோர்கள்
இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாக கேள்விப்பட்டு அவர்களின் முன்னால் மாணவரான அஹமத் இப்னு ஹன்பல் அவர்கள் தம் ஆசிரியரை பார்க்க தாம் வரவிருப்பதாக சொல்லியனுப்புகிறார்கள் அதைக் கேள்விப்பட்ட இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் மிகவும் மிகவும் மகிழ்ந்து தம்முடைய இந்நாள் மாணவர்களிடம் என்னுடைய மாணவர் வருகிறார் அவரை நீங்கள் நன்கு உபசரிக்க வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள்.
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் வந்தவுடன் ஆசிரியரை நலம் விசாரித்து விட்டு புறப்பட எண்ணிய போது ஷாஃபிஈ ரஹ் அவர்கள் இருங்கள் இங்கே தங்கி விட்டு நாளை செல்லுங்கள் அன்புடன் கூற, அதை ஏற்று இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் அங்கே தங்குகிறார்கள். அப்போது ஷாஃபிஈ ரஹ் அவர்கள் தம் மாணவர்களை அழைத்து அவரை நன்கு உபசரியுங்கள் மறக்காமல் அவர் தங்கும் அறையில் உளூச் செய்ய தண்ணீர் வைக்க வேண்டும் ஏனெனில் என் முன்னால் மாணவர் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் தவறாமல் தஹஜ்ஜத் தொழுகையை கடைபிடிப்பவர் என்று கூற, மாணவர்களும் அவ்விதமே செய்தார்கள். அதிகாலையில் மாணவர்கள் சென்று பார்த்த போது தண்ணீர் அப்படியே இருக்கிறது இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.இந்த விஷயம் மாணவர்களின் மனதில் ஒரு நெருடலை ஏற்படுத்த அதை ஆசிரியரிம் கூறினார்கள் அப்போது ஷாஃபிஈ ரஹ் அவர்கள் இதில் ஏதேனும் காரணம் இருக்கும் இந்த விஷயத்தை நீங்கள் விட்டு விடுங்கள் நான் அவரிடம் பேசிக் கொள்கிறேன் என்றார்கள் அதிகாலையில் சுப்ஹுக்கு வந்த போது அவர்களிடம் நைசாகப் பேசி நேற்று நீங்கள் தஹஜ்ஜுத் தொழுகையை தொழவில்லையா மாணவர்கள் வைத்த தண்ணீர் அப்படியே இருந்ததாக கூறினார்களே என அன்புடன் கேட்ட போது இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் சொன்ன பதில் - ஆசிரியர் அவர்களே கடந்த பல நாட்களாக ஹலாலான உணவு எனக்குக் குறைவாகவே கிடைத்த து. இந்த நிலையில் நேற்று இஷா முடிந்த பின் நீங்கள் வழங்கிய ஹலாலான உணவை திருப்தியாக சாப்பிட்ட பின் எனக்கு நல்ல சிந்தனைகளும், அதில் ஓர்மையும் ஏற்பட்டது நான் இஷாவிற்குச் செய்த உளூவுடன் இரவு முழுவதும் தூங்காமல் குர்ஆன், ஹதீஸை ஆய்வு செய்து பல சட்டங்களை எடுத்தேன். அப்படியே தஹஜ்ஜுத் நேரம் ஆகி விட்டது உளூவுடன் இருந்ததால் அப்படியே தஹஜ்ஜுத் தொழுது விட்டு சற்று நேரம் தூங்கி விட்டேன். அந்த நேரத்தில்தான் மாணவர்கள் வந்து பார்த்துள்ளார்கள் என்று கூறினார்கள்
கூடுமா கூடாதா என்ற சந்தேகத்திற்குரிய விஷயங்களை தவிர்த்துக் கொண்டால் தான் ஒருவர் இறையச்சமுடையவராக ஆக முடியும்
عَنْ عَطِيَّةَ السَّعْدِيِّ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَبْلُغُ الْعَبْدُ أَنْ يَكُونَ مِنْ الْمُتَّقِينَ حَتَّى يَدَعَ مَا لَا بَأْسَ بِهِ حَذَرًا لِمَا بِهِ الْبَأْسُ (ابن ماجة- بَاب الْوَرَعِ وَالتَّقْوَى-كتاب الزهد
சந்தேகத்திற்குரிய விஷயங்களை தவிர்த்துக் கொள்ளும் பேணுதல் குணம் ஒருவரிடம் இருந்தால் சிறந்த வணக்கசாலியாக மாறுவார்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا هُرَيْرَةَ كُنْ وَرِعًا تَكُنْ أَعْبَدَ النَّاسِ وَكُنْ قَنِعًا تَكُنْ أَشْكَرَ النَّاسِ وَأَحِبَّ لِلنَّاسِ مَا تُحِبُّ لِنَفْسِكَ تَكُنْ مُؤْمِنًا وَأَحْسِنْ جِوَارَ مَنْ جَاوَرَكَ تَكُنْ مُسْلِمًا وَأَقِلَّ الضَّحِكَ فَإِنَّ كَثْرَةَ الضَّحِكِ تُمِيتُ الْقَلْبَ(ابن ماجة- بَاب الْوَرَعِ وَالتَّقْوَى-كتاب الزهد
அபூஹுரைராவே நீர் பேணுதலாக நடந்து கொண்டால் மக்களில் சிறந்த வணக்கசாலியாக ஆக முடியும்.உள்ளதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்பவராக நடந்து கொண்டால் மக்களில் மிகச்சிறந்த நன்றியுள்ளவராக ஆக முடியும். உமக்கு எதை நீர் விரும்புவீரோ அதையே பிறர் விஷயத்திலும் நீர் விரும்பினால் நீர் உண்மை முஃமினாக இருக்க முடியும். உனது அண்டை வீட்டாரிடம் நீர் உபகாரமாக நடந்து கொண்டால் நீர் உண்மை முஸ்லிமாக இருக்க முடியும். சிரிப்பை குறைத்துக் கொள். ஏனெனில் அதிகம் சிரிப்பது உள்ளத்தை மவ்த்தாக்கி விடும்.
எந்த ஒரு பாக்கெட் உணவில் ஹராம் கலக்கப் பட்டுள்ளதாக
சந்தேகம் கொள்கிறோமோ அதையும் விட்டு ஒதுங்குவது நல்லதாகும்
عن النُّعْمَانَ بْنَ بَشِيرٍ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الْحَلَالُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ لَا يَعْلَمُهَا كَثِيرٌ مِنْ النَّاسِ فَمَنْ اتَّقَى الْمُشَبَّهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ كَرَاعٍ يَرْعَى حَوْلَ الْحِمَى يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ أَلَا وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى أَلَا إِنَّ حِمَى اللَّهِ فِي أَرْضِهِ مَحَارِمُهُ أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ أَلَا وَهِيَ الْقَلْبُ (بخاري)2051 قال ابنُ رجب في شرحِ حديث النعمان رضي الله عنه :يُستَدلُّ بهذا الحديثِ مَن يذهب إلى سدِّ الذرائع إلى المحرمات وتحريم الوسائل إليها؛ ويدلُّ على ذلك أيضا قواعد الشريعة تحريم قليل ما يُسكر كثيره، وتحريم الخلوة بالأجنبية، وتحريم الصلاة بعد الصبح وبعد العصر؛ سَدّاً لذريعةِ الصلاةِ عند طلوعِ الشمسِ وعند غروبها, ومنع الصائم من المباشرة إذا كانت تحرك شهوته, ومَنعَ كثيرٌ من العلماءِ مُباشَرةَ الحائضِ فيما بين سُرتها ورُكبتها إلا من وراء حائل كما كان النبي صلى الله عليه وسلم يأمر امرأته إذا كانت حائضا أن تتزر فيباشرها من فوق الإزار (موسوعة البحوث والمقالات العلمية)
விளக்கம்- மார்க்கத்தின் சட்டங்களை நாம் இரண்டு விதமாகப் பிரிக்கலாம். 1. தெளிவாக ஹலால் என்று கூறப்பட்டவை 2. ஹராம் தெளிவாக ஹராம் என்று கூறப்பட்டவை 3. மேற்கூறப்பட்ட இரண்டுக்கும் மத்தியில் உள்ளவை.
இவற்றில் மூன்றாவதாக கூறப்பட்ட விஷயங்கள் தான் இன்று நம்முடைய ஈமானுக்கு சோதனையாக விஷயங்களாகும். அவை கூடுமா கூடாதா என்பது சந்தேகத்திற்கு இடமுள்ளதாக இருக்கும். அதன் உண்மை நிலையை பலர் அறிய மாட்டார்கள். யார் பேணுதல் அடிப்படையில் அவற்றையும் விட்டு விடுகிறார்களோ அவர் தனது மார்க்கத்தையும் மானத்தையும் பாதுகாத்துக் கொண்டார். யார் சந்தேகமானவற்றில் விழுந்து விடுவாரோ அவருக்கு உதாரணம் வேலியைச் சுற்றி ஆடுகளை மேய விடும் ஆட்டு இடையனைப் போன்றாகும். தனக்கு அனுமதிக்கப்படாத வேலிக்கு அருகாமையில் தனது ஆடுகளை அவர் மேய விடும்போது அந்த ஆடுகள் வேலிக்குள்ளேயும் மேய்வதற்கு நீண்ட நேரம் ஆகாது. அதுபோல சந்தேகமானவற்றில் இவர் ஈடுபடும் போது அதற்கு நெருக்கமாக உள்ள ஹராமிலும் அவர் ஈடுபட வாய்ப்பு ஏற்பட்டு விடலாம்.
தனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஆட்டிறைச்சி அதன் உரிமையாளரின் முறையான அனுமதி இல்லாமல் அறுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தால் அதை சாப்பிடுவதைத் தவிர்த்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
عَنْ رَجُلٍ مِنْ الْأَنْصَارِ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَنَازَةٍ فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى الْقَبْرِ يُوصِي الْحَافِرَ أَوْسِعْ مِنْ قِبَلِ رِجْلَيْهِ أَوْسِعْ مِنْ قِبَلِ رَأْسِهِ فَلَمَّا رَجَعَ اسْتَقْبَلَهُ دَاعِي امْرَأَةٍ فَجَاءَ وَجِيءَ بِالطَّعَامِ فَوَضَعَ يَدَهُ ثُمَّ وَضَعَ الْقَوْمُ فَأَكَلُوا فَنَظَرَ آبَاؤُنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلُوكُ لُقْمَةً فِي فَمِهِ ثُمَّ قَالَ أَجِدُ لَحْمَ شَاةٍ أُخِذَتْ بِغَيْرِ إِذْنِ أَهْلِهَا فَأَرْسَلَتْ الْمَرْأَةُ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَرْسَلْتُ إِلَى الْبَقِيعِ يَشْتَرِي لِي شَاةً فَلَمْ أَجِدْ فَأَرْسَلْتُ إِلَى جَارٍ لِي قَدْ اشْتَرَى شَاةً أَنْ أَرْسِلْ إِلَيَّ بِهَا بِثَمَنِهَا فَلَمْ يُوجَدْ فَأَرْسَلْتُ إِلَى امْرَأَتِهِ فَأَرْسَلَتْ إِلَيَّ بِهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَطْعِمِيهِ الْأُسَارَى (ابوداود) باب فِى اجْتِنَابِ الشُّبُهَاتِ.
பொருள்- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டோம். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ரு தோண்டுபவரிடம் மய்யித்தின் தலை வைக்கும் பகுதியையும், கால் வைக்கும் பகுதியையும் பெரிதாக தோண்டுங்கள் என அறிவரை கூறக் கண்டேன். அங்கிருந்து திரும்பியவுடன் ஒரு பெண்ணின் சார்பாக விருந்துக்கு அழைக்கப்பட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அங்கு வந்தார்கள். பின்பு உணவு கொண்டு வரப்பட்டது. அதில் கை வைத்து அவர்கள் சாப்பிட ஆரம்பித்தவுடன் மற்றவர்களும் சாப்பிட ஆரம்பித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் வாயில் ஒரு கவளத்தை மட்டுமே விழுங்கியதை எங்களின் தந்தைமார்கள் கண்டார்கள். பின்பு எங்களிடம் உரிமையாளரின் அனுமதி இல்லாமல் அறுக்கப்பட்ட ஆட்டிறைச்சியாக இதை நான் காண்கிறேன் என்றார்கள். பின்பு விருந்து கொடுத்த பெண்ணிடம் விளக்கம் கேட்டு அனுப்ப அப்பெண் யாரஸூலல்லாஹ் எனக்கு ஒரு ஆடு வேண்டும் என பகீஉக்கு ஆள் அனுப்பினேன். அங்கு கிடைக்கவில்லை. பிறகு என் அண்டை வீட்டாரிடம் சென்று எனக்காக ஆடு வாங்கி வரும்படி ஆள் அனுப்பினேன். அவரும் இல்லை. பின்பு அவருடைய மனைவியிடம் கேட்டு அனுப்ப அவர் இந்த ஆட்டைக் கொடுத்தனுப்பினார் என்று கூற பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த இறைச்சியை தான் சாப்பிடாமல் காஃபிர்களான கைதிகளுக்கு இதை கொடுத்து விடுங்கள் என்று கூறினார்கள்.
ஜகாத்துடைய பேரீத்தம்பழமாக இருக்கக் கூடுமோ என்ற சந்தேகத்தில் அதை சாப்பிடுவதை தவிர்த்த நபி ஸல் அவர்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنِّي لَأَنْقَلِبُ إِلَى أَهْلِي فَأَجِدُ التَّمْرَةَ سَاقِطَةً عَلَى فِرَاشِي فَأَرْفَعُهَا لِآكُلَهَا ثُمَّ أَخْشَى أَنْ تَكُونَ صَدَقَةً فَأُلْقِيهَا (بخاري)2055قَالَ الْمُهَلَّب : لَعَلَّهُ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْسِم الصَّدَقَة ثُمَّ يَرْجِع إِلَى أَهْله فَيَعْلَق بِثَوْبِهِ مِنْ تَمْرِ الصَّدَقَة شَيْء فَيَقَع فِي فِرَاشه
நபி ஸல் அவர்கள் கூறினார்கள். நான் என்னுடைய வீட்டுக்குச் சென்ற போது ஒரு பேரீத்தம்பழம் எனது படுக்கை விரிப்பில் விழுந்து கிடப்பதைக் கண்டேன். அதை உண்ணுவதற்காக என் வாயருகே உயர்த்திய போது அது ஜகாத்துடைய பேரீத்தம்பழமாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. எனவே அதை கீழே போட்டு விட்டேன்.
ஷுப்ஹாத் உடைய விஷயங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் மற்றொரு சம்பவம்
عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ امْرَأَةً سَوْدَاءَ جَاءَتْ فَزَعَمَتْ أَنَّهَا أَرْضَعَتْهُمَا فَذَكَرَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَعْرَضَ عَنْهُ وَتَبَسَّمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَيْفَ وَقَدْ قِيلَ وَقَدْ كَانَتْ تَحْتَهُ ابْنَةُ أَبِي إِهَابٍ التَّمِيمِيِّ (بخاري)2052 بَاب تَفْسِيرِ الْمُشَبَّهَاتِ
விளக்கம்-நபித் தோழர் உக்பா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும், அவரின் மனைவி உம்மு யஹ்யா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கும் அவ்விருவரும் குழந்தைகளாக இருந்த போது தாய்ப்பால் ஊட்டியதாக ஒரு பெண் வந்து கூறுகிறார். இது உண்மையானால் பால்குடி சகோதரத்துவ அடிப்படையில் இருவரும் கணவன், மனைவியாக நீடிக்க முடியாது.அப்பெண்ணின் வாக்கு மூலத்தை உக்பா ரழி நம்பவில்லை. அதை உறுதி செய்வதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை. இந்நிலையில் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த நபித்தோழரிடம் “இவ்வாறு கூறப்பட்ட பின் எப்படி அவளுடன் நீர் சேர்ந்து வாழ முடியும் என்று கூறி அந்த மனைவியை விட்டு விலகி விடுமாறு அறிவுறுத்தினார்கள்
குறிப்பு- “ஷுப்ஹாத்” துக்குரிய விஷயங்கள் இன்று நம் சமுதாயத்தில் எவ்வளவோ உள்ளன. அவைகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதுபோன்று சில விஷயங்களில் உலமாக்களின் ஃபத்வாக்கள் மாறி மாறி இருக்கலாம். அப்படிப்பட்ட விஷயங்களிலும் பேணுதல் அவசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக