رجب – 16 بسم الله الرحمن الرحيم
அழிவு நாளின் அடையாளங்கள்
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம்
இறுதி நாளின் கடைசி பத்து அடையாளங்களை தற்போது ஞாபகப் படுத்துவது அவசியமாகி விட்டது. ஏனெனில் இந்த அடையாளங்கள் நிகழ்வதற்கு இன்னும் காலங்கள் இருந்தாலும் அவற்றை ஞாபகப் படுத்துகின்ற சில நிகழ்வுகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ போன்று இறுதி நாளின் அடையாளமாக யமன் நாட்டில் துவங்கும் தீ யாராலும் அணைக்க முடியாமல் உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி மக்களை ஷாம் தேசத்தை நோக்கி விரட்டும். அதை நினைவு படுத்தும் வகையில் தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத் தீ அமைந்துள்ளது அதுபோன்று போகிப் பண்டிகை என்ற பெயரில் வருடம் தோறும் மக்களால் ஏற்படுத்தப்படும் புகைமூட்டம் கியாமத்தின் அடையாளமான மாபெரும் புகை மூட்டத்தை ஞாபகப்படுத்துகிறது. எனவே அவற்றை நினைவு கூருவதுடன் தவ்பாவுக்கான வாய்ப்புகளை அல்லாஹ் ஏற்படுத்தி வைத்திருக்கும்போதே தவ்பா செய்ய வேண்டும் என்பதை ஞாபகப்படுத்தும் விதமாக அமைந்துள்ள மற்றொரு அடையாளத்தையும் (சூரியன் மேற்கில் உதயமாகுதல்) நினைவில் நிறுத்துவது அவசியமாகும்.
கியாமத் நாளின் பெரிய அடையாளங்கள் மொத்தம் பத்து.
عَنْ حُذَيْفَةَ رضي الله عنه اطَّلَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْنَا وَنَحْنُ نَتَذَاكَرُ فَقَالَ مَا تَذَاكَرُونَ قَالُوا نَذْكُرُ السَّاعَةَ قَالَ إِنَّهَا لَنْ تَقُومَ حَتَّى تَرَوْنَ قَبْلَهَا عَشْرَ آيَاتٍ فَذَكَرَ الدُّخَانَ وَالدَّجَّالَ وَالدَّابَّةَ وَطُلُوعَ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا وَنُزُولَ عِيسَى ابْنِ مَرْيَمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيَأَجُوجَ وَمَأْجُوجَ وَثَلَاثَةَ خُسُوفٍ خَسْفٌ بِالْمَشْرِقِ وَخَسْفٌ بِالْمَغْرِبِ وَخَسْفٌ بِجَزِيرَةِ الْعَرَبِ وَآخِرُ ذَلِكَ نَارٌ تَخْرُجُ مِنْ الْيَمَنِ تَطْرُدُ النَّاسَ إِلَى مَحْشَرِهِمْ (مسلم)5558 كِتَاب الْفِتَنِ (تطرد الناس (إلى المحشر) وهو الشام (فيض القدير)
விளக்கம்- பத்து அடையாளங்கள் நிகழாமல் கியாமத் ஏற்படாது 1. தஜ்ஜால் வெளிப்படுவது. 2. ஈஸா அலைஹிஸ்ஸலாம் வருவது 3. யஃஜூஜ் மஃஜூஜ் வெளிப்படுவது 4.5.6. மாபெரும் மூன்று பூகம்பங்கள் இது வரலாறு காணாத அளவுக்கு இருக்கும். மேற்குலகில் ஒரு பூகம்பம் இன்னொன்று உலகில் மத்தியப் பகுதியில் இன்னொன்று இந்தியா போன்ற தென் பகுதியில்.. 7. மாபெரும் புகை மூட்டம் இது முஃமினுக்கு தலைவலி போன்று தான் இருக்கும். ஆனால் காஃபிர்களுக்கு கடும் மூச்சுத் திணறல் ஏற்படும். 8. தாப்பதுல் அர்ழ் எனும் அதிசய பிராணி மினா அருகில் இருந்து வெளிப்படுவது 9. சூரியன் மேற்கில் உதயமாகுவது 10. யமனில் துவங்கும் மாபெரும் நெருப்பு உலக மக்களை ஷாம் தேசத்தில் கொண்டு வந்து சேர்க்கும். அதாவது தற்போது அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ போன்று யமனில் துவங்கி உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி மக்களை ஷாம் தேசத்தை நோக்கி விரட்டும் மற்றொரு அறிவிப்பில் மஹ்ஷரை நோக்கி அந்த நெருப்பு விரட்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது அகில உலகையும் அல்லாஹ் அழிக்கும் முன்பு அல்லாஹ் உலகின் பல பகுதிகளிலும் பரவும் நெருப்பு மூலம் அப்போதிருக்கும் அனைத்து மக்களும் ஷாமில் ஒன்று திரட்டப் படுவார்கள். பின்பு அனைத்தும் அழிக்கப்படும். பின்பு அனைத்தையும் அல்லாஹ் மீண்டும் உண்டாக்கும்போது மக்கள் அழிக்கப்படும்போது இருந்த அந்த ஷாம் பகுதி தான் மஹ்ஷர் மைதானமாக மீண்டும் உருவாக்கப்படும். பாலஸ்தீனம், சிரியா உள்ளிட்ட இன்றைய 16 நாடுகள் இணைந்தது தான் அன்றைய ஷாம் எனப்படும்.
கியாமத் நாளின் கடைசி அடையாளங்கள் அதிகமாக ஷாம் தேசத்தில் நிகழும்
عن سالم بن عبد الله عن أبيه قال : قال رسول الله صلى الله عليه و سلم : ( سنخرج عليكم نار في آخر الزمان من حضر موت تحشر الناس ) قال : قلنا : بما تأمرنا يا رسول الله ؟ قال : ( عليكم بالشام ) (ابن حبان
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”கியாமத் நாளின் சமீபத்தில் ஹழ்ரமவ்த் என்ற ஊரிலிருந்து ஒரு நெருப்பு மக்களை விரட்டும் என நபி {ஸல்} அவர்கள் கூறியபோது, ”அப்போது எங்கு அடைக்கலம் தேட வேண்டும்? என நாங்கள் கேட்டோம். அதற்கு, நபி {ஸல்} அவர்கள் நீங்கள் சிரியாவில் தங்குங்கள்!” என்று பதில் கூறினார்கள்.
கடைசி காலத்தில் முஸ்லிம்கள் தஞ்சமடையும் இடமாக ஷாம் தேசம் இருக்கும்.
عن عبد الله بن حوالة قال: قال رسول الله صلى الله عليه وسلم: "إنكم ستجندون أجنادا جندا بالشام، وجندا بالعراق، وجندا باليمن"، قال: قلت: يا رسول الله خِرْ لي؟ قال: "عليك بالشام فمن أبي فليلحق بيمنه وليسق من غدره، فان الله تكفل لي بالشام وأهله" (صحيح ابن حبان
அப்துல்லாஹ் இப்னு ஹவாலா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”சிரியா படை, ஈராக் படை, யமன் படை என நீங்கள் பல ராணுவப் படைகளை பார்ப்பீர்கள்” என நபி {ஸல்} அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே! நான் பங்கு பெற்று போர் செய்வதற்கு இம்மூன்றில் எந்தப் படையை தேர்வு செய்ய வேண்டும்? என கேட்டேன். அதற்கு நபி {ஸல்} அவர்கள் சிரியாவின் படைகளைத் தேர்ந்தெடுங்கள்! சிரியாவின் படைகளைத் தேர்ந்தெடுங்கள்! ஏனெனில், அது அல்லாஹ் அவன் படைத்த பூமியில் தேர்வு செய்த பூமியாகும்!” அல்லாஹ் சிரியாவையும், அங்கு வாழும் மக்களையும் எனக்காக பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளான்! கூறினார்கள்.
தஜ்ஜால் வருகை போன்ற குழப்பங்கள் நிகழும்போது சிரியா தான் முஃமின்களின் ஈமானுக்கு பாதுகாப்பான பூமியாக இருக்கும்.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ سَتَكُونُ هِجْرَةٌ بَعْدَ هِجْرَةٍ فَخِيَارُ أَهْلِ الأَرْضِ أَلْزَمُهُمْ مهَاجرَ إِبْرَاهِيمَ وَيَبْقَى فِى الأَرْضِ شِرَارُ أَهْلِهَا تَلْفِظُهُمْ أَرَضُوهُمْ6 تَقْذَرُهُمْ نَفْسُ اللَّهِ وَتَحْشُرُهُمُ النَّارُ مَعَ الْقِرَدَةِ وَالْخَنَازِيرِ (ابوداود) ضعيف- باب فِى سُكْنَى الشَّامِ-كتاب الجهاد- معنى الهجرة الثانية الهجرة إلى الشام والمراد بمهاجر إبراهيم الشام فإن إبراهيم لما خرج من العراق مضى إلى الشام (تقذرهم نفس الله) أي: أن الله تعالى يكرههم (مرقاة-عمدة القاري)
தஜ்ஜால் வெளியாகுவது பற்றிய செய்திகள்.
தஜ்ஜால் இப்போதும் இருக்கிறான். அல்லாஹ் நாடும்போது வெளிப்படுவான்
عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « يَأْتِى الْمَسِيحُ مِنْ قِبَلِ الْمَشْرِقِ هِمَّتُهُ الْمَدِينَةُ حَتَّى يَنْزِلَ دُبُرَ أُحُدٍ ثُمَّ تَصْرِفُ الْمَلاَئِكَةُ وَجْهَهُ قِبَلَ الشَّامِ وَهُنَالِكَ يَهْلِكُ ». (مسلم) ففي الشام يقتل الدجال وهو الذي يسفك فيه دمه
”கிழக்கு பக்கத்திலிருந்து தஜ்ஜால் வருவான்.அவன் மதீனாவை நாடி வரும்போது மலக்குகள் அவனை தடுத்து நிறுத்தி சிரியாவின் பக்கம் அனுப்பி வைப்பார்கள்.அந்த பூமியில் தான் அவன் அழிந்து நாசமாகுவான்”
தஜ்ஜால் வரும் முன்பு ஏற்படும் பட்டினியின் போது முஃமின்களுக்கு தஸ்பீஹ் தான் உணவு
عَنْ أَبِى أُمَامَةَ الْبَاهِلِىِّ قَالَ خَطَبَنَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَكَانَ أَكْثَرُ خُطْبَتِهِ حَدِيثًا حَدَّثَنَاهُ عَنِ الدَّجَّالِ وَحَذَّرَنَاهُ فَكَانَ مِنْ قَوْلِهِ أَنْ قَالَ « إِنَّهُ لَمْ تَكُنْ فِتْنَةٌ فِى الأَرْضِ مُنْذُ ذَرَأَ اللَّهُ ذُرِّيَّةَ آدَمَ أَعْظَمَ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ وَإِنَّ اللَّهَ لَمْ يَبْعَثْ نَبِيًّا إِلاَّ حَذَّرَ أُمَّتَهُ الدَّجَّالَ...... وَإِنَّ قَبْلَ خُرُوجِ الدَّجَّالِ ثَلاَثَ سَنَوَاتٍ شِدَادٍ يُصِيبُ النَّاسَ فِيهَا جُوعٌ شَدِيدٌ يَأْمُرُ اللَّهُ السَّمَاءَ فِى السَّنَةِ الأُولَى أَنْ تَحْبِسَ ثُلُثَ مَطَرِهَا وَيَأْمُرُ الأَرْضَ فَتَحْبِسُ ثُلُثَ نَبَاتِهَا ثُمَّ يَأْمُرُ السَّمَاءَ فِى السَّنَةِ الثَّانِيَةِ فَتَحْبِسُ ثُلُثَىْ مَطَرِهَا وَيَأْمُرُ الأَرْضَ فَتَحْبِسُ ثُلُثَىْ نَبَاتِهَا ثُمَّ يَأْمُرُ اللَّهُ السَّمَاءَ فِى السَّنَةِ الثَّالِثَةِ فَتَحْبِسُ مَطَرَهَا كُلَّهُ فَلاَ تَقْطُرُ قَطْرَةٌ وَيَأْمُرُ الأَرْضَ فَتَحْبِسُ نَبَاتَهَا كُلَّهُ فَلاَ تُنْبِتُ خَضْرَاءَ فَلاَ تَبْقَى ذَاتُ ظِلْفٍ إِلاَّ هَلَكَتْ إِلاَّ مَا شَاءَ اللَّهُ ». قِيلَ فَمَا يُعِيشُ النَّاسَ فِى ذَلِكَ الزَّمَانِ قَالَ « التَّهْلِيلُ وَالتَّكْبِيرُ وَالتَّسْبِيحُ وَالتَّحْمِيدُ وَيُجْرَى ذَلِكَ عَلَيْهِمْ مَجْرَى الطَّعَامِ ». قَالَ أَبُو عَبْدِ اللَّهِ سَمِعْتُ أَبَا الْحَسَنِ الطَّنَافِسِىَّ يَقُولُ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ الْمُحَارِبِىَّ يَقُولُ يَنْبَغِى أَنْ يُدْفَعَ هَذَا الْحَدِيثُ إِلَى الْمُؤَدِّبِ حَتَّى يُعَلِّمَهُ الصِّبْيَانَ فِى الْكُتَّابِ. (ابن ماجة)
அபூ உமாமா ரழி அவர்கள் அறிவித்துள்ளார்கள். நபி ஸல் அவர்கள் ஒருமுறை தஜ்ஜாலின் சோதனையைப் பற்றி எங்களுக்கு உபதேசம் செய்தார்கள். அப்போது கூறினார்கள். மனிதன் படைக்கப்பட்டது முதல் கடைசி வரை ஏற்படும் சோதனைகளில் தஜ்ஜாலை விட மிகப் பெரும் சோதனை எதுவும் இல்லை. இதனால் தான் எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தம் சமூக மக்களுக்கு எச்சரிக்கை செய்யாமல் இருந்ததில்லை.
தஜ்ஜால் வருவதற்கு முன்பு மூன்று வருடங்கள் மிகவும் சிரமமாக வருடங்களாக இருக்கும். இந்த மூன்று வருடங்களில் முதல் வருடம் அல்லாஹ் வானத்திற்கு உத்தரவிட்டு பெய்ய வேண்டிய மழையில் மூன்றில் ஒரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான். அதேபோல் பூமிக்கு உத்தரவிட்டு அது விளைவிக்க வேண்டிய விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான். இரண்டாம் வருடம் அல்லாஹ் வானத்திற்கு உத்தரவிட்டு பெய்ய வேண்டிய மழையில் மூன்றில் இரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான். அதேபோல் பூமிக்கு உத்தரவிட்டு அது விளைவிக்க வேண்டிய விளைச்சலில் மூன்றில் இரு பங்கை நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான்.
மூன்றாம் வருடம் அல்லாஹ் வானத்திற்கு உத்தரவிட்டு பெய்ய வேண்டிய மழையை முற்றிலுமாக நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான். அதேபோல் பூமிக்கு உத்தரவிட்டு அது விளைவிக்க வேண்டிய விளைச்சலை முற்றிலுமாக நிறுத்திக் கொள்ள உத்தரவிடுவான். புற்பூண்டுகள் விளையாது. கால்நடைகள் இறந்து விடும். என்றெல்லாம் நபி ஸல் அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே அந்த நேரத்தில் உணவுக்கு என்ன வழி என்று தோழர்கள் கேட்க, அதற்கு நபி ஸல் தஹ்லீல் அதாவது லாயிலாஹ இல்ல ல்லாஹ், அல்லாஹு அக்பர், தஸ்பீஹ், தஹ்மீத் ஆகியவை தான் உணவாக இருக்கும் என்றார்கள். (அதாவது முஃமின்கள் உணவு கிடைக்காத சூழலில் இவற்றை ஓதுவார்கள். அவ்வாறு ஓதுவதால் அவர்களின் பசி அடங்கும்.)
தஜ்ஜால் இருக்கும் போதும் முஃமின்களுக்கு தஸ்பீஹ் தான் உணவு
عن ابن عمر رضي الله عنهما : أن رسول الله صلى الله عليه وسلم سئل عن طعام المؤمنين في زمن الدجال ؟ قال : طعام الملائكة قالوا : و ما طعام الملائكة ؟ قال : طعامهم منطقهم بالتسبيح و التقديس فمن كان منطقة يومئذ التسبيح و التقديس أذهب الله عنه الجوع فلم يخش جوعا (حاكم
தஜ்ஜால் வெளிப்படும் நேரத்தில் முஃமின்களின் சொத்துக்கள் அவனால் அழிக்கப்படும்போது முஃமின்களின் உணவுக்கு என்ன வழி என்று நபித்தோழர்கள் கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் மலக்குகளின் உணவு தான் முஃமின்களின் உணவு என நபி ஸல் கூறினார்கள். மலக்குகளின் உணவு எது என நபித்தோழர்கள் கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் தஸ்பீஹ் தான் அவர்களின் உணவாகும். யார் தஜ்ஜால் வெளிப்படும் நேரத்தில் உணவுக்கு வழியில்லாத போது இந்த தஸ்பீஹை ஓதுவாரோ அவரின் பசி அதனால் நீக்கப்படும். அவர் பசியை அஞ்ச வேண்டியதில்லை என்றார்கள்.
நபி ஈஸா அலை வருவதற்கு முன் இமாம் மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்திலேயே இந்த பூமி செழிப்பாக இருக்கும்.
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، قَالَ: ذَكَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَلاءً يُصِيبُ هَذِهِ الأُمَّةَ حَتَّى لا يَجِدُ الرَّجُلُ مَلْجَأً يَلْجَأُ إِلَيْهِ مِنَ الظُّلْمِ فَيَبْعَثُ اللَّهُ رَجُلا مِنْ عِتْرَتِي أَهْلِ بَيْتِي ، فَيَمْلأُ بِهِ الأَرْضَ قِسْطًا وَعَدْلا كَمَا مُلِئَتْ جَوْرًا وَظُلْمًا يَرْضَى عَنْهُ سَاكِنُ السَّمَاءِ وَسَاكِنُ الأَرْضِ لا تَدَعُ السَّمَاءُ مِنْ قَطْرِهَا شَيْئًا إِلا صَبَّتْهُ مِدْرَارًا وَلا تَدَعُ الأَرْضُ مِنْ نَبَاتِهَا شَيْئًا إِلا أَخْرَجَتْهُ حَتَّى يَتَمَنَّى الأَحْيَاءُ الأَمْوَاتَ يَعِيشُ فِي ذَلِكَ سَبْعَ سِنِينَ أَوْ ثَمَانِ سِنِينَ أَوْ تِسْعَ سِنِينَ(شرح السنة وعَنْه قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : يَخْرُجُ فِي آخِرِ الزَّمَانِ خَلِيفَةٌ يُعْطِي الْمَالِ بِغَيْرِ عَدَدٍ
கருத்து- முஸ்லிம்களுக்கு எதிராக உலகெங்கும் நடைபெறும் அநியாயம் காரணமாக அவர்கள் தஞ்சம் அடைய எங்கும் இடம் இல்லாத சூழ்நிலையில் இமாம் மஹ்தீ அலை அவர்களை அல்லாஹ் என்னுடைய குடும்பத்தில் பிறக்கச் செய்து அல்லாஹ் அவர்களை ஆட்சியாளராக ஆக்குவான். அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் எந்த அளவுக்கு அநியாயம் நிரம்பி வழிந்ததோ அந்த அளவுக்கு நீதத்தால் பூமியை நிரப்புவார்கள். அவர்களை விண்ணில் உள்ள மலக்குகளும் மண்ணில் உள்ள மனிதர்கள் பொருந்திக் கொள்வார்ரகள். வானம் சரியான முறையில் மழையை இறக்கும். பூமி அதன் செழிப்புகளை சரியான முறையில் தந்து கொண்டிருக்கும். உயிருடன் இருப்பவர்கள் தங்களில் இறந்தவர்கள் குறித்து இன்ன மனிதர்களுக்குஅல்லாஹ் இன்னும் ஆயுளை அதிகமாக்கி இவருடைய காலத்தில் வாழ வைத்திருக்கலாமே என்று எண்ணுவார்கள்.மற்றொரு அறிவிப்பில் அவர்கள் கணக்குப்பார்க்காமல் மக்களுக்கு வாரி வழங்குவார்கள். என்றும் கூறப்பட்ட்டுள்ளது.
நபி ஈஸா அலை எங்கே எப்படி எந்த நேரம் இறங்குவார்கள் என தெளிவான முறையில் விபரிக்கப்பட்டுள்ளது
عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « الأَنْبِيَاءُ إِخْوَةٌ لِعَلاَّتٍ دِينُهُمْ وَاحِدٌ وَأُمَّهَاتُهُمْ شَتَّى وَأَنَا أَوْلَى النَّاسِ بِعِيسَى ابْنِ مَرْيَمَ لأَنَّهُ لَمْ يَكُنْ بَيْنِى وَبَيْنَهُ نَبِىٌّ وَإِنَّهُ نَازِلٌ فَإِذَا رَأَيْتُمُوهُ فَاعْرِفُوهُ فَإِنَّهُ رَجُلٌ مَرْبُوعٌ إِلَى الْحُمْرَةِ وَالْبَيَاضِ سَبْطٌ كَأَنَّ رَأْسَهُ يَقْطُرُ وَإِنْ لَمْ يُصِبْهُ بَلَلٌ بَيْنَ مُمَصَّرَتَيْنِ فَيَكْسِرُ الصَّلِيبَ وَيَقْتُلُ الْخِنْزِيرَ وَيَضَعُ الْجِزْيَةَ وَيُعَطِّلُ الْمِلَلَ حَتَّى يُهْلِكَ اللَّهُ فِى زَمَانِهِ الْمِلَلَ كُلَّهَا غَيْرَ الإِسْلاَمِ ...(احمد وفي رواية لمسلم فَبَيْنَمَا هُوَ كَذَلِكَ إِذْ بَعَثَ اللَّهُ الْمَسِيحَ ابْنَ مَرْيَمَ فَيَنْزِلُ عِنْدَ الْمَنَارَةِ الْبَيْضَاءِ شَرْقِىَّ دِمَشْقَ بَيْنَ مَهْرُودَتَيْنِ وَاضِعًا كَفَّيْهِ عَلَى أَجْنِحَةِ مَلَكَيْنِ إِذَا طَأْطَأَ رَأَسَهُ قَطَرَ وَإِذَا رَفَعَهُ تَحَدَّرَ مِنْهُ جُمَانٌ كَاللُّؤْلُؤِ فَلاَ يَحِلُّ لِكَافِرٍ يَجِدُ رِيحَ نَفَسِهِ إِلاَّ مَاتَ وَنَفَسُهُ يَنْتَهِى حَيْثُ يَنْتَهِى طَرْفُهُ ( مسلم)
நபிமார்கள் அனைவரும் ஒரே தந்தையின் மூலம் பல தாய்மார்களுக்குப் பிறந்த சகோதரர்களைப் போன்றாவார்கள். (அதிலும் குறிப்பாக) ஈஸா அலை அவர்களுடன் எனக்கு நெருக்கம் அதிகம். எனக்கும் ஈஸா அலை அவர்களுக்குமிடையில் வேறு நபி வரவில்லை. நிச்சயமாக ஈஸா அலை கடைசி காலத்தில் வருவார்கள். அவர்கள் இறங்கி வரும்போது அவர்களை நீங்கள் அடையாளம் கண்டு கொள்ளுங்கள். அவர்கள் நடுத்தர உயரம் கொண்ட மாநிறமான மனிதராக படிந்த தலைமுடி கொண்டவர்களாக இருப்பார்கள். (முடிகள் கீழ்நோக்கி தொங்கும் விதமாக தலை முடி இருக்கும்.) இலேசான மஞ்சள் நிறம் கொண்ட இரண்டு ஆடைகளுடன் இரண்டு மலக்குகளின் இறக்கைகளின் மீது கை வைத்தவர்களாக டமாஸ்கஸ் நகரத்துடைய மஸ்ஜிதின் கிழக்குப் பகுதி மினாரா மீது இறங்குவார்கள். அவர்கள் தலையைத் தூக்கினாலும் தாழ்த்தினாலும் முத்துக்களைப் போன்று தண்ணீர் சொட்டுகள் அவர்களின் தலையில் இருந்து சொட்டும். அவர்களின் மூச்சுக் காற்று பட்டாலே காஃபிர் இறந்து விடுவான். அவர்களின் மூச்சுக் காற்று கண்ணுக்கு எட்டிய தூரம் வரை படும்.
ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறங்கி வருவது ஃபஜ்ரு தொழுகையின் நேரமாக இருக்கும்.
அப்போது இமாம் மஹ்தீ அலை அவர்களும் இருப்பார்கள். ஈஸா அலை அவர்களைத் தொழ வைக்கச் சொல்லி இமாம் மஹ்தீ அலை கூறும்போது அதை அவர்கள் மறுத்து வேண்டாம் இந்த உம்மத்தில் ஒருவர் தொழ வைக்க நான் பின்னால் நின்று தொழுகிறேன் என்பார்கள் அதன்படி இமாம் மஹ்தீ அலை தொழ வைப்பார்கள். ஈஸா அலை பின்னால் நின்று தொழுவார்கள். أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ أَنْتُمْ إِذَا نَزَلَ ابْنُ مَرْيَمَ فِيكُمْ وَإِمَامُكُمْ مِنْكُمْ (بخاري
عن جَابِر رض قال سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي يُقَاتِلُونَ عَلَى الْحَقِّ ظَاهِرِينَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ قَالَ فَيَنْزِلُ عِيسَى ابْنُ مَرْيَمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَقُولُ أَمِيرُهُمْ تَعَالَ صَلِّ لَنَا فَيَقُولُ لَا إِنَّ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ أُمَرَاءُ تَكْرِمَةَ اللَّهِ هَذِهِ الْأُمَّةَ (مسلم
فيقول أميرهم أي المهدي - فيقول لا أي لا أصير إماما لكم لئلا يتوهم بإمامتي لكم نسخ دينكم (مرقاة
ஈஸா அலை காலத்தில் மஸ்ஜித்கள் நிரம்பி வழியும். உலகின் அத்தனை சொத்து சுகங்களையும் விட சஜ்தாவை அதிகம் விரும்புபவர்களாக மக்கள் ஆகி விடுவார்கள்
( حَتَّى تَكُون السَّجْدَة الْوَاحِدَة خَيْرًا مِنْ الدُّنْيَا وَمَا فِيهَا ) فَمَعْنَاهُ وَاَللَّه أَعْلَم أَنَّ النَّاس تَكْثُر رَغْبَتهمْ فِي الصَّلَاة وَسَائِر الطَّاعَات لِقِصَرِ آمَالهمْ بِقُرْبِ الْقِيَامَة ، وَقِلَّة رَغْبَتهمْ فِي الدُّنْيَا لِعَدَمِ الْحَاجَة إِلَيْهَا . وَهَذَا هُوَ الظَّاهِر مِنْ مَعْنَى الْحَدِيث (شرح النووي
ஒருமுறை இஸ்ரேலியப் பெண் அமைச்சரிடம் பத்திரிக்கை நிருபர் ஒருவர் பேட்டி எடுத்தார். யூதர்களாகிய உங்களை கடைசி காலத்தில் முஸ்லிம்கள் கொல்லுவார்கள். அப்போது மரம், மலைக்குப் பின்னால் நீங்கள் ஒதுங்கிக் கொள்வீர்கள். ஆனால் அந்த மரமும், மலையும் உங்களுக்கு எதிராக உங்களைக் காட்டிக் கொடுக்கும் என்று முஸ்லிம்கள் கூறுகிறார்களே.. அது உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டபோது அந்த அமைச்சர் “இது எங்களுக்கு நன்றாகத் தெரியும். இது எப்போது நடக்கும் என்பதும் தெரியும்.முஸ்லிம்கள் அனைவரும் ஜும்ஆ தொழுகைக்கு ஒன்று கூடுவது போல் ஒவ்வொரு நேரத் தொழுகைக்கும் ஒன்று கூடுவார்கள். அப்போது இது நடக்கும். அதை எதிர் கொள்ள நாங்கள் தயார் என்று பேசியுள்ளார். முஸ்லிம்களிடம் இறையச்சம் வந்து விட்டால் அல்லாஹ் எல்லாவற்றையும் நம் வசமாக்கித் தருவான்
யஃஜூஜ் மஃஜூஜ் பற்றிய செய்திகள்
حَتَّى إِذَا فُتِحَتْ يَأْجُوجُ وَمَأْجُوجُ وَهُمْ مِنْ كُلِّ حَدَبٍ يَنْسِلُونَ (96) الانبياء
கஹ்ஃப் ஸூராவில் துல்கர்னைன் அலை பற்றிக் குறிப்பிடும் போது இந்த யஃஜூஜ், மஃஜூஜ் என்ற இனம் பற்றிக் கூறப்பட்டுள்ளது உலகை ஆண்ட துல்கர்னைன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சூரியன் மறையாத இடங்களுக்கெல்லாம் பிரயாணம் செய்தபோது ஒரு சமூகத்தினரை சந்தித்தார்கள். அவர்களின் கோரிக்கைப்படி யஃஜூஜ் மஃஜூஜ் செய்யும் அநியாய அட்டூழியங்களிலிருந்து காக்க இரு மலைகளிடையே ஒரு பெரும் இரும்புச் சுவரை எழுப்பினார்கள். இன்றுவரை அந்த தடுப்புச்சுவர் மறைத்து வைக்கப் பட்டுள்ளது. கடைசி காலத்தில் ஈஸா அலை வந்த பின்பு இந்தக் கூட்டம் பெரிய அளவில் வெளியாகுவார்கள். தஜ்ஜாலைக் கொன்ற ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களால்கூட இக் கூட்டத்தை எதுவும் செய்ய முடியாது. நிறைய அட்டூழியம் செய்வார்கள். இறுதியில் அல்லாஹ் அவர்களில் ஒவ்வொருவரின் உடம்பிலும் ஒரு புழுவை சாட்டுவான். ஒரே நேரத்தில் அவர்கள் அனைவரும் இறந்து போவார்கள். அவர்களின் பிணங்களால் பூமி நிறைந்திருக்கும்போது அல்லாஹ் எண்ணற்ற பறவைகளை அனுப்புவான். அவை அப் பிணங்களை கடலில் கொண்டு சென்று வீசும். பின்பு மழை பெய்யும். பூமி சுத்தமாகும்.
தவ்பாவின் எல்லை (சூரியன் மேற்கில் உதயமாகுதல்)
இது இறுதி அடையாளம் என்றாலும் ஆரம்பத்தில் கூறுவது நல்லது.அடியானின் தவ்பா உண்மையாக இருக்கும் பட்சத்தில் அல்லாஹ் எப்போதும் ஏற்றுக் கொள்வான். ஆனால் அதற்கும் ஒரு எல்லைகள் உண்டு. அந்த எல்லைகள் 2 வகை. 1.ஒட்டு மொத்த மனிதர்களையும் கவனித்து 2.தனி மனிதனைக் கவனித்து.. முதலாவது வகை ஒட்டு மொத்த மனிதர்களுக்கானது. அதாவது கடைசி காலத்தில் சூரியன் மேற்கில் உதயமான பின்பு யாருடைய தவ்பாவும் ஏற்கப்படாது. இரண்டாவது வகை ஒரு மனிதனுக்கு மரண நேரம் நெருங்கும்போது நரகத்தை கண்கூடாக பார்த்த பின்பு அவனது தவ்பா ஏற்கப்படாது. இது ஒவ்வொரு தனி மனிதனுக்கானது.
وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّى إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الْآنَ (18) النساء
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رض عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَيَقْبَلُ تَوْبَةَ الْعَبْدِ مَا لَمْ يُغَرْغِرْ (مسلم)
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَابَ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا تَابَ اللَّهُ عَلَيْهِ (مسلم
‘தாப்பதுல் அர்ள்’ எனும் அதிசயப் பிராணி தோன்றுவது
وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ (82) النمل
தாப்பதுல் அர்ழ் குர்ஆனில் சுலைமான் அலை அவர்களின் சம்பவத்தில் கரையான் என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தப் படுகிறது
فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض } الأرضة { تأكل منسأته } عصاه }سبأ 12 - 14 /
சூரியன் மேற்கில் உதயமாகுவதும் இந்த மிருகம் தோன்றுவதும் அடுத்தடுத்து நடைபெறும்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « أَوَّلُ الآيَاتِ خُرُوجًا طُلُوعُ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا وَخُرُوجُ الدَّابَّةِ عَلَى النَّاسِ ضُحًى ». قَالَ عَبْدُ اللَّهِ فَأَيَّتُهُمَا مَا خَرَجَتْ قَبْلَ الأُخْرَى فَالأُخْرَى مِنْهَا قَرِيبٌ (ابن ماجة
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை நான் மனனமிட்டேன். இன்னும் நான் அதனை மறக்கவில்லை. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு சொல்வதை நான் கேட்டேன். ‘அடையாளங்களில் முதலாவது வெளியாவது சூரியன் மேற்கில் உதிப்பதும், முற்பகல் நேரத்தில் அம்மிருகம் தோன்றி மக்களிடம் வருவதும் தான். இவற்றில் எது முதலில் தோன்றுகிறதோ அடுத்தது அதனையடுத்து கிட்டடியிலேயே தோன்றி விடும்.’ (ஆதார நூல் : ஸஹீஹ் முஸ்லிம்)
தாப்பதுல் அர்ழ் வெளியானவுடன் அது ஒவ்வொருவரின் நெற்றியிலும் அடையாளமிடும்
عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « تَخْرُجُ الدَّابَّةُ وَمَعَهَا خَاتَمُ سُلَيْمَانَ بْنِ دَاوُدَ وَعَصَا مُوسَى بْنِ عِمْرَانَ عَلَيْهِمَا السَّلاَمُ فَتَجْلُو وَجْهَ الْمُؤْمِنِ بِالْعَصَا وَ تَخْطِمُ أَنْفَ الْكَافِرِ بِالْخَاتَمِ حَتَّى أَنَّ أَهْلَ الْحِوَاءِ لَيَجْتَمِعُونَ فَيَقُولُ هَذَا يَا مُؤْمِنُ وَيَقُولُ هَذَا يَا كَافِرُ ».(ابن ماجة) معانى بعض الكلمات : تجلو : تنوِّر - الحواء : البيوت المجتمعة من الناس على ماء - تخطم : تسم
‘தாப்பதுல் அர்ள் என்ற அதிசய மிருகம் தோன்றும்போது அதனிடம் நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் பயன்படுத்திய மோதிரமும் மூஸா அலைஹிஸ்ஸலாம் பயன்படுத்திய கைத்தடியும் இருக்கும். அது முஃமினின் நெற்றியில் இவர் முஃமின் என கைத்தடி மூலமாக அடையாளமிட்டு நெற்றியைப் பிரகாசிக்கச் செய்யும் . காஃபிரின் நெற்றியில் இவர் காஃபிர் என மோதிரம் மூலமாக அடையாளமிடும். எந்த அளவுக்கென்றால் ஒரு தண்ணீர் பிடிக்கும் இடத்தில் அவரவர் நெற்றியில் உள்ள அடையாளத்தைப் பார்த்து ஓ காஃபிரே! ஓ முஃமினே! என ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்வர்.
அல்லாஹ் பற்றிய, மறுமை நாள் பற்றிய உண்மைகள் குர்ஆன் மூலமாகவும் பல்வேறு ஆதாரங்கள் சொல்லி விளக்கப் பட்டுள்ளது. எனினும் மக்களில் பலர் அதனை ஏற்கவில்லை. அறிவைப் பயன்படுத்தி சத்தியத்தைப் புரிந்து கொள்ள முடியாத மனிதனுக்கு மறுமை நாள் நெருங்கும்போது இப்படியொரு மிருகத்தை அனுப்பி முஃமினுக்கும் காஃபிருக்கும் மத்தியில் அல்லாஹ் பிரித்து விடுவான். இவர் நரகவாதி இவர் சுவன வாதி என நெற்றியிலே எழுதி ஒட்டியது போன்று அது இருக்கும். சாதாரணமாக மக்களின் பேச்சு வழக்கில் நான் அப்படிப் பட்டவன் என என் நெற்றியிலா எழுதி ஒட்டப் பட்டுள்ளது என்று கேட்கும் வழமை உண்டு.
தாப்பதுல் அர்ழ் எங்கிருந்து வெளியாகும்
عن عَبْد اللَّهِ بْنُ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ ذَهَبَ بِى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِلَى مَوْضِعٍ بِالْبَادِيَةِ قَرِيبٍ مِنْ مَكَّةَ فَإِذَا أَرْضٌ يَابِسَةٌ حَوْلَهَا رَمْلٌ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « تَخْرُجُ الدَّابَّةُ مِنْ هَذَا الْمَوْضِعِ ». فَإِذَا فِتْرٌ فِى شِبْرٍ. قَالَ ابْنُ بُرَيْدَةَ فَحَجَجْتُ بَعْدَ ذَلِكَ بِسِنِينَ فَأَرَانَا عَصًا لَهُ فَإِذَا هُوَ بِعَصَاىَ هَذِهِ كَذَا وَكَذَا. (ابن ماجة
புரைதா ரழி அவர்கள் கூறினார்கள் என்னை நபி ஸல் அவர்கள் மக்காவுக்கு அருகே உள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள் அந்த இடம் முற்றிலும் காய்ந்து கிடந்தது. அதைச் சுற்றி மணல் இருந்த து அங்கு வைத்து நபி ஸல் அவர்கள் இங்கிருந்து தான் தாப்பதுல் அர்ழ் வெளியாகும் என்றார்கள் அப்போது அங்கே ஒரு கைத்தடி இருந்த து. என புரைதா ரழி கூறினார்கள் பிற்காலத்தில் புரைதா ரழி தன்னுடைய மகனுடன் ஹஜ்ஜுக்குச் சென்ற போதும் அந்த கைத்தடியைக் காட்டினார்கள்
سُئِلَ عَبْد اللَّه بْن عَمْرو عَنْ الدَّابَّة فَقَالَ الدَّابَّة تَخْرُج مِنْ تَحْت صَخْرَة بِجِيَادٍ وَاَللَّه لَوْ كُنْت مَعَهُمْ أَوْ لَوْ شِئْت بِعَصَايَ الصَّخْرَة الَّتِي تَخْرُج الدَّابَّة مِنْ تَحْتهَا قِيلَ فَتَصْنَع مَاذَا يَا عَبْد اللَّه بْن عَمْرو فَقَالَ تَسْتَقْبِل الْمَشْرِق فَتَصْرُخ صَرْخَة تَنْفُذهُ ثُمَّ تَسْتَقْبِل الشَّام فَتَصْرُخ صَرْخَة تَنْفُذهُ ثُمَّ تَسْتَقْبِل الْمَغْرِب فَتَصْرُخ صَرْخَة تَنْفُذهُ ثُمَّ تَسْتَقْبِل الْيَمَن فَتَصْرُخ صَرْخَة تَنْفُذهُ ثُمَّ تَرُوح مِنْ مَكَّة فَتُصْبِح بِعُسْفَانَ قِيلَ ثُمَّ مَاذَا قَالَ ثُمَّ لَا أَعْلَم (تفسير ابن كثير
சுருக்கம்- அது வெளியானவுடன் கிழக்கு நோக்கி ஒரு சப்தமிடும். ஷாமை நோக்கி ஒரு சப்தமிடும். மேற்கு நோக்கி ஒரு சப்தமிடும். யமன் நோக்கி ஒரு சப்தமிடும். மக்கா நோக்கி ஒரு சப்தமிடும்.
மக்களெல்லாம் மினாவில் இருக்கும்போது இரவு நேரத்தில் வெளியாகும் என்ற நபிமொழி
عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : تَخْرُجُ الدَّابَّةُ لَيْلَةَ جَمْعٍ وَالنَّاسُ يَسِيرُونَ إِلَى مِنًى فَتَحْمِلُهُمْ بَيْنَ عَجُزِهَا وَذَنَبِهَا فَلاَ يَبْقَى مُنَافِقٌ إِلاَّ خَطَمَتْهُ ، قَالَ : وَتَمْسَحُ الْمُؤْمِنَ ، قَالَ : فَيُصْبِحُونَ وَهُمْ أَشَرُّ مِنَ الدَّجَّالِ. (مصنف ابن شبية
புகை மூட்டம் பற்றி...
قَالَ حُذَيْفَة رَضِيَ اللَّه عَنْهُ يَا رَسُول اللَّه وَمَا الدُّخَان ؟ فَتَلَا رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ هَذِهِ الْآيَة " فَارْتَقِبْ يَوْم تَأْتِي السَّمَاء بِدُخَانٍ مُبِين يَغْشَى النَّاس هَذَا عَذَاب أَلِيم " - يَمْلَأ مَا بَيْن الْمَشْرِق وَالْمَغْرِب يَمْكُث أَرْبَعِينَ يَوْمًا وَلَيْلَة وَأَمَّا الْمُؤْمِن فَيُصِيبهُ مِنْهُ كَهَيْئَةِ الزُّكْمَة وَأَمَّا الْكَافِر فَيَكُون بِمَنْزِلَةِ السَّكْرَان يَخْرُج مِنْ مَنْخِرَيْهِ وَأُذُنَيْهِ وَدُبُره" (تفسير ابن كثير
விளக்கம்- உலகம் முழுக்க ஏற்படும் மிகப் பெரிய புகை மண்டலம். இது முஃமினுக்கும் காஃபிருக்கும் வெவ்வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்தும். முஃமின் இலேசான தலைவலி போன்ற நிலை மட்டுமே ஏற்படும். ஆனால் காஃபிருக்கு மூச்சு விட முடியாத அளவுக்கு மயக்க நிலையில் கொண்டு போய் விட்டு விடும். இந்த பூமியின் மத்தியப் பகுதியான அரபுலகிலும் அமெரிக்காவை உள்ளடக்கிய மேற்குலகிலும் இந்தியாவை உள்ளடக்கிய கிழக்குப் பகுதியிலும் வரலாறு காணாத மூன்று பூகம்பங்கள் ஏற்படும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக